ஏழு சபை காலங்களின் வியாக்கியானம் AN EXPOSITION OF THE SEVEN CHURCH AGES வில்லியம் மரியன் பிரன்ஹாம் தமிழாக்கம் S.C.ஜேக்கப் முதலாம் அத்தியாயம் இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துதல் THE REVELATION OF JESUS CHRIST வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரம்: 1. சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். 2. இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக் குறித்தும், தான் கண்டயாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். 3. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. 4. யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், 5. உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற் பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ஏழு சபை காலங்களின் வியாக்கியானம் 6. நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக, ஆமென். 7. இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். 8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். 9. உங்கள் சகோதரனும், இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன் பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவ வசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன். 10. கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன். அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். 11. அது: நான் அல்பாவும் ஒமேகாவும், முந்தினவரும் பிந்தின வருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துதல் 12. அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், 13. அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷக்குமாரனுக் கொப்பானவரையும் கண்டேன். 14. அவருடைய சிரசும் மயிரும் வெண் பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது. 15. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. 16. தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. 17. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்போது அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; 18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக் கிறேன். 19. நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக் குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது; ஏழு சபை காலங்களின் வியாக்கியானம் 20. என் வலது கரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம். முதலாம் அத்தியாயத்தின் முகவுரை வெளி. 1:1-3: “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக் குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.’’ இந்தப் புத்தகத்தை எழுதியவன் திவ்ய வாசகனாகிய யோவான்; ஆனால் அவன் இந்தப் புத்தகத்தின் ஆக்கியோனல்ல. தன்னுடைய கடைசிக் காலங்களை இவன் எபேசு பட்டினத்தில் கழித்தானென்று சரித்திரக்காரர் எல்லாரும் ஒத்துக் கொள்ளுகின்றனர். இந்தப் புத்தகத்தை எழுதும்போது, அவன் பத்மு தீவில் வாழ்ந்தான். இது பிற்காலத்திய சபையின் காலங்களில் இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்திக் காண்பிக்கும் ஒரு புத்தமாகத் திகழ்கிறதேயன்றி, யோவானின் ஜீவிய சரித்திரத்தைக் கொண்ட ஒரு புத்தகமல்ல இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துதல் இது. மூன்றாம் வசனத்தில் கூறிய பிரகாரம் இது தீர்க்கதரிசன வசனங்களைக் கொண்ட ஒரு புத்தகம். இப்புத்தகம் பரிசுத்த யோவானுடைய வெளிப்படுத்துதலின் புத்தகம் என்று அநேகரால் அழைக்கப்படுகிறது. அது சரியல்ல. எல்லாக் காலங்களிலுள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்வதற்கென்று இது யோவானுக்கு இயேசு கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு விசேஷமாயிக்கிறது. இயேசு கிறிஸ்துவே நேர்முகமாக எழுத்தாளனுக்குத் தோன்றி அவர் கூறிய வண்ணம் எழுதப்பட்ட வேதத்திலுள்ள புத்தகம் இது ஒன்றே யாகும். இது வேதாகமத்தின் கடைசி புத்தகமாயிருந்த போதிலும், சுவிசேஷ யுகங்களின் (DISPENSATIONS OF THE GOSPEL) தொடக்கத்தையும் முடிவையும் இது விவரிக்கிறது. ‘அபோகலிப்ஸ்’ என்னும் கிரேக்க பதம் வெளிப்படுத்துதலைக் குறிக்கும். அந்தப் பதத்தின் சரியான அர்த்தம், திரை நீக்கப்படுதல் என்பதே. ஒரு சிற்பாசாரி தான் பொறித்த ஒரு சிலையை முதலில் ஒரு திரையைக் கொண்டு மறைத்து, பின்பு மற்றவர் காணத்தக்க வண்ணம் அந்தத் திரையை நீக்குவான். அதுபோன்று இதுவரை மறைவில் வைக்கப்பட்டிருந்த அநேக காரியங்கள் இப்பொழுது திரை நீக்கப்பட்டு, இப்புத்தகத்தின் மூலம் வெளிப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதோடு இது நின்றுவிடாமல் தொடர்ந்து வரும் சபைகளின் காலங்களில் காணப்படும் அவருடைய கிரியைகளையும் இப்புத்தகம் வெளிப்படுத்துகிறது. ஒரு உண்மையான விசுவாசிக்குப் பரிசுத்த ஆவியானவரின் மூலம் அளிக்கப்படும் வெளிப்படுத்துதல் இன்றியமையாதது. வெளிப்படுத்துதலின் முக்கியத்துவத்தை நாம் ஒருவாறு அறிந்திருப்பினும், நாம் அறிவதைக் காட்டிலும் அது அதிக முக்கியம் வாய்ந்தது. ‘வெளிப்படுத்துதல்’ என்று நான் கூறும்போது ‘வெளிப்படுத்தின விசேஷத்தை’ மாத்திரம் குறிப்பிடாமல் எல்லா ஏழு சபை காலங்களின் வியாக்கியானம் வெளிப்படுத்தல்களைக் குறித்துப் பொதுவாகக் கூறுகிறேன். சபைக்கு வெளிப்படுத்துதல் மிகவும் அவசியம். மத்தேயு 16ம் அதிகாரத்தில் இயேசு சீஷர்களை நோக்கி, “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்” (13ம் வசனம்) என்று கேட்டது நினைவிருக்கலாம். அதற்கு அவர்கள் “சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா. அல்லது தீர்க்கத்தரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்’ என்றனர். அப்பொழுது அவர் மறுபடியும் “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்” என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். இயேசு அவனை நோக்கி “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை; என்றார். சபையானது பேதுருவின் மேல் கட்டப்பட்டதென்று ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தார் கூறுகின்றனர். அவ்வாறாயின் அது மாம்சப்பிரகாரமான ஒரு செய்கையாகும். இயேசு கிறிஸ்துவை மறுதலித்த, அவரைச் சபித்துத் தன்னுடைய வழிகளில் நிலையற்றவனாயிருந்த ஒரு மனிதனின் மேல் கர்த்தர் எவ்வாறு தம்முடைய சபையைக் கட்ட முடியும்? பாவத்தில் பிறந்த எந்த மனிதனின் மேலும் கர்த்தர் தம்முடைய சபையைக் கட்டுவதில்லை. பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் கூறும் வண்ணம் இயேசு கிறிஸ்துவின் மேலும் சபை கட்டப்படவில்லை. அதுவோ வெளிப்படுத்துதலின்மேல் கட்டப்பட்டது. மேற்கூறிய வசனத்தை இவ்விதமாய்ப் படியுங்கள். “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப் இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துதல் படுத்தினார். இந்த (வெளிப்படுத்துதலாகிய) கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்.” ஆம், கர்த்தர் இவ்வாறு கூறினார் (THUS SAITH THE LORD) என்ற வெளிப்படுத்தலின்மேல் தான் சபை கட்டப்பட்டிருக்கிறது. கர்த்தருக்கு உகந்த பலியை ஆபேல் எவ்வாறு செலுத்தினான்? இரத்தம் சிந்துதலினாலுண்டாகும்பலியே கர்த்தருக்கு உகந்தபலி என்பது அவனுக்கு விசுவாசத்தின் மூலமாய் வெளிப்படுத்தப்பட்டது. கர்த்தருக்கு பலியைச் செலுத்த வேண்டும் என்ற கட்டளையைக் காயீன் பெற்றிருந்தபோதும், அவனுக்கு வெளிப்படுத்தல் இல்லாமையின் காரணமாகக் கர்த்தருக்கு உகந்த பலியைச் செலுத்த முடியாமற் போய்விட்டது. அப்படியெனில் வெளிப்படுத்தலானது இவ்விருவரினும் வித்தியாசத் தையுண்டுபண்ணி, ஆபேலுக்கு நித்திய ஜீவனையளித்தது. போதகரும், வேதாகமப் பள்ளிக்கூடங்களும் சொல்வன்மையோடு எவைகளைப் போதித்தாலும், இயேசுவைக் கிறிஸ்துவென்றும், அவருடைய இரத்தமே பாவங்களற நம்மைச் சுத்திகரிக்கிறதென்றும், அவரே நமது இரட்சகரென்றும் கர்த்தர் நமக்கு ஆவிக்குரிய பிரகாரமாய் வெளிப்படுத்தினாலன்றி நமக்கு நித்திய ஜீவனில்லை. ‘வெளிப்படுத்தின விசேஷம்’ இயேசு கிறிஸ்துவையும், ஏழு சபையின் காலங்களில் காணப்படும் அவருடைய கிரியைகளையும் வெளிப்படுத்தும் ஓர் புத்தகம் என்று நான் முன்னமே கூறியுள்ளேன். இப்புத்தகத்தில் எழுதப்பட்ட சத்தியங்களின் ரகசியங்களை சீஷர்களே அறியாதிருந்ததால் இதனை ‘வெளிப்படுத்துதல்’ என்று கூறுகிறேன். ஒருமுறை சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து, “ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்: “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையையும் வேளைகளை ஏழு சபை காலங்களின் வியாக்கியானம் யும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல” என்றார் (அப். 1:6-7). இயேசு பூலோகத்திலே ஒரு இராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்று அவர்கள் இன்னும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் ஸ்தாபிக்கப்போவது ஆவிக்குரிய ராஜ்யமே, இந்த ராஜ்யத்தில் இயேசுவுக்குரிய ஸ்தானத்தைப் பிதா அவருக்கே வெளிப்படுத்தாமலிருந்தபடியால் அவர் அதைக் குறித்து சீஷர்களுக்கு அப்பொழுது கூறமுடியாமற்போயிற்று. ஆனால் அவருடைய மரணத்திற்கும் உயிர்தெழுதலுக்கும் பின்னர், அவருடைய மத்தியஸ்த ஊழியத்தின் ஒரு குறித்த காலத்தில் அவர் யோவானுக்குத் தம்மை வெளிப்படுத்தி, அவருடைய மகிமையும் பிரசன்னமும் சபைகளுக்குச் செய்யப்போவதைக் காண்பித்தார். இயேசு தம்மை வெளிப்படுத்தும்போது அதனுடனே சாத்தானுடைய முடிவு என்னவென்பதையும் அவனும் அவனைச் சார்ந்த பொல்லாதவர்களும் எவ்வாறு அக்கினிக் கடலிலே தள்ளப்படுவார்களென்பதையும் வெளிப்படுத் தினபடியால் சாத்தான் அவனுடைய முடிவு அடங்கிய வெளிப்படுத்தின விசேஷத்தை வெறுக்கிறான். சாத்தான் வேதாகமத்தில் அடங்கியுள்ள இரண்டு புத்தகங்களை அதிகமாக வெறுக்கிறான். பரந்த மனப்பான்மை கொண்ட வேத சாஸ்திரிகள் (THEOLOGIANS) விஞ்ஞானிகள் என்று கூறி கொள்பவர் (PSEUDO - SCIENTISTS) மூலம், அவனுடைய தோற்றம் பொல்லாங்கான வழிகள், அவனுடைய அழிவு, இவைகளடங்கிய ஆதியாகமம், வெளிப்படுத்தின விசேஷம் என்னும் இவ்விரண்டு புத்தகங்களை அவன் எப்பொழுதும் எதிர்க்கிறான். அவனுடைய தன்மையும், பொல்லாங்கான கிரியைகளும் வெளிப்படையானது. அவனுக்குப்பிரியமில்லை. எனினும் மேற்கூறிய இவ்விரண்டு புத்தகங்களின் மூலம் அவைகள் வெளியாக்கப் படுகின்றன. இயேசு சாத்தானைக் குறித்து “அவனுக்கு என்னிடத்திலும் எனக்கு அவனிடத்திலும் பங்கில்லை” என்று கூறினார். அது முற்றிலும் இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துதல் தவறு என்று நிரூபிப்பதற்கென சாத்தான் விழைகிறான். அவ்வாறு செய்ய இயலாததால், மக்கள் வார்த்தையில் கொண்டுள்ள நம்பிக்கையைக் குலைக்க தன்னாலானவரை முற்படுகிறான். சபையோ சாத்தானை விசுவாசிக்காமல், ஆவியின் மூலம் தேவனுடைய வசனத்தின் அர்த்தம் வெளிப்படுவதில் முற்றிலும் சார்ந்திருக்குமாயின், பாதாளத்தின் வாசல் அதை ஒருபோதும் மேற்கொள்ளுவதில்லை. என்னுடைய ஊழியத்தில் நேரிடும் சில சம்பவங்களை உங்கள் முன்னிலையில் வைக்க விரும்புகிறேன். எனக்குள்ளவரம் கரத்தரால் அருளப்பட்டது என்பதை நீங்களெல்லாரும் அறிவீர்கள். வியாதிகளையும், மனித இருதயத்தின் எண்ணங்களையும், கர்த்தர் மாத்திரம் அறியக்கூடிய மறைவான சில காரியங்களையும் ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்துதலே எனக்குரிய வரமாகும். இதன்மூலம் அவன் பிரசன்னம் வெளிப்படப்போகிறது என்று சாத்தான் அறியும்போது, பாவத்தாலும் வியாதியாலும் அவன் ஆட்கொண்டிருக்கும் மக்களின் முகநாடி பயங்கரமாக வேறுபடுகிறது. தேவ ஆவியானவர் அவனுடைய கிரியைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் சமயம் வந்துவிட்டது என்று அறியும்போது அவன் அதிகமாகப் பயப்படுகிறான். இக்காரணங்களைக் கொண்டு, இந்தக் கூட்டங்களை அவன் வெறுக்கிறான். மக்கள் தங்கள் பெயர்களால் அழைக்கப் பட்டு, அவர்களுடைய வியாதிகள் ஆவியானவரால் வெளிப்படுத்தப்படும்பொழுது, சாத்தானுக்கு வெறுப் புண்டாகிறது. இத்தகைய சம்பவங்கள் மனோதத் துவத்தினாலோ அல்ல மாந்திரீகத்தினாலோ (WITCHCRAFT) ஏற்படுவதில்லை. இவைகளைப் பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்துகிறார் என்பதை நானறிவேன். மாம்ச சிந்தனையுடையவர்களோ, இவைகள் வேறு காரணங்களால் உண்டாகின்றன என்று கூறுவர். ‘வெளிப்படுத்தின விசேஷத்தை’ சாத்தான் வெறுப்பதற்கு வேறொரு காரணமுமுண்டு. இயேசு கிறிஸ்து நேற்றும். இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறாரென்பதைச் சாத்தான் நன்கு அறிவான். பெரும்பாலான வேத சாஸ்திரிகளைக் காட்டிலும் இச் சத்தியத்தைச் சாத்தான் அதிகமாக உணர்ந்திருக்கிறான். கர்த்தர் மாறாததுபோல அவருடைய வழிகளும் மாறாதவைகள் என்பதையும் அவன் அறிவான். மாற்கு 16ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட கிரியைகளைத் தேவனுடைய வல்லமையினால் பெற்றிருந்த ஆதிப் பெந்தேகோஸ்தே சபைதான் உண்மையான சபையென்றும், இயேசு கிறிஸ்துவும் அதைத் தம்முடைய சொந்த சபையாக உரிமையோடு பாவிக்கிறார் என்பதையும் சாத்தான் திண்ணமாக அறிவான். அப்படியெனில் தேவனுடைய வல்லமையைப் பெற்றிராத மற்றெல்லாச் சபைகளும் கள்ளச் சபைகளாயிருக்க வேண்டும். கிறிஸ்து அப்போஸ்தலத் திருச்சபையில் பிரசன்னமாயிருந்தது போல், அதைத் தொடர்ந்த ஒவ்வொரு உண்மையான சபையிலும் பிரசன்னராயிருக்கிறார். அந்திக்கிறிஸ்துவின் ஆவி, சபைகளில் நுழைந்து, அவைகளைக் கெடுத்து, வெதுவெதுப்பாக்கி, வல்லமையின்றி செய்துவிடும் என்று ‘வெளிப்படுத்தின விசேஷம்’ அறிவிக்கிறது. சாத்தானின் கிரியைகள் வெளியரங்கமாகி, சாத்தான் அக்கினிக் கடலில் தள்ளப்படும்வரை அந்த ஆவி கர்த்தருடைய பிள்ளைகளை நிர்மூலமாகக்கவும், தேவனுடைய வார்த்தையை மக்கள் அசட்டை செய்யத் தூண்டவும் முற்படுகிறது. உண்மையான சபையின் அம்சங்களையும், நோக்கங்களையும், மகத்தான கிரியைகளையும் குறித்த உண்மையான வெளிப்படுத்துதல் மக்களுக்குக் கிடைத்து விட்டால் அந்தச் சபை தகர்க்கப்பட முடியாத ஒரு சேனையாகிவிடும் என்பதை சாத்தான் அறிவான். கிறிஸ்தவ சபைக்குள்ளே கிரியை செய்யும் இரண்டு ஆவிகளின் தன்மைகளைக் குறித்த உண்மையான வெளிப்படுத்துதலை மக்கள் பெற்று, கர்த்தருடைய ஆவியினாலே இவைகளைப் பகுத்தறிந்து அந்திக்கிறிஸ்துவின் ஆவிக்கு எதிர்த்து நிற்பார்களாயின், சாத்தான் வனாந்தரத்தில் இயேசுவின் முன்னிலையில் முறியடிக்கப்பட்டு வல்லமையற்றவனானதுபோல், சபையின் முன்னிலையிலும் வல்லமையற்று விளங்குவான். சாத்தான் வெறுக்கும் வெளிப்படுத்துதலை நாம் வாஞ்சிக்கிறோம். நம் ஜீவியத்தில் உண்மையான வெளிப்படுத்துதல் உண்டாயிருப்பின், பாதாளத்தின் வாசல்கள் நம்மை மேற்கொள்ளவொட்டாமல், நாம் அதை மேற்கொள்வோம். ‘வெளிப்படுத்தின விசேஷம்’, இயேசு கிறிஸ்துவையும் பின் வரும் சபைகளின் காலங்களில் காணப்படும் அவருடைய கிரியைகளையும் வெளிப்படுத்துகிறது என்று நான் இச் செய்தியின் ஆரம்பத்தில் கூறினேன். அன்றியும், பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே வெளிப்படுத்துலை நமக்குக் கொடுக்க முடியுமென்றும் குறிப்பிட்டேன். இவ்விரண்டையும் ஒன்றுபடுத்தி நாம் சிந்திப்போமாயின், ‘வெளிப்படுத்தின விசேஷத்தில்’ அடங்கியுள்ள சத்தியங்களை மானிட அறிவும் ஆராய்ச்சியும் கொண்டு அறிய முடியாதென்றும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்றும் நன்கு புலனாகிறது. அப்படியெனில் ஒருதனிப்பட்ட சாராருக்கு மாத்திரமே இப்புத்தகம் வெளிப்படுத்தித் தரப்படும். அதன் அர்த்தத்தை அறியவேண்டுமாயின் அதற்குத் தீர்க்க தரிசனவரமும், தேவன் விளம்பியதைக் கேட்கும் வரமும் அவசியம். ஒரு வேத மாணாக்கன் வசனத்தோடு வசனத்தை ஒப்பிட்டு வேத வியாக்கியானங்கள் செய்வது போன்று நாம் செய்து இப்புத்தகத்தில் கொண்டுள்ளவைகளின் அர்த்தத்தை அறிய இயலாது. எந்த ஒரு பரம ரகசியத்தையும் ஆவியானவர் தாமே தெளிவாகப் போதிக்க வேண்டும். ஆவியானவருக்கு முழுவதுமாக சமர்ப்பித்து அவர் சொல்வதைக் கேட்டு உணர்ந்து கொள்ளுதல் நமக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. நான் முன் கூறியபடி, ‘வெளிப்படுத்தின விசேஷம்’ வேதத்தில் முடிவாக (CONSUMMATION) இருக்கிறது. வேதத்திலுள்ள புத்தகங்களை அடுக்கும்பொழுதும், இது சரியான முறையில் கடைசியில் வைக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய வெளிப்படுத்துதல் பிசாசின்மேல் அதிகாரத்தைக் கொடுப்பதால், இதைக் கேட்பவனோ, வாசிப்பவனோ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான் என்று எழுதப்பட்டிருக்கிறது. தேவனுடைய பரிபூரண வெளிப்படுத்துதலிருந்து கூட்டவோ குறைக்கவோ செய்து விரோதியை மேற்கொள்ள முடியாததால், இவ்வாறு செய்பவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதப்பட்டிருக்கிறது. வசனத்தின் வெளிப்படுத்துதலிலுள்ள வல்லமை வேறெதிலும் காணப்படாது. இந்த புத்தகத்தில் அதிக கவனம் செலுத்துகிறவர்களுக்கு (அதாவது இதை வாசிக் கிறவர்களுக்கும் கேட்கிறவர்களுக்கும்) மூன்றாவது வசனத்தின் பிரகாரம் விசேஷ ஆசீர்வாதம் அளிக்கப் படுகிறது. பழைய ஏற்பாட்டின் காலத்தில், கர்த்தருடைய வசனத்தை ஆசாரியர்கள் காலையில் வாசிக்க, சபையோர் அவ்வசனங்களை வாசிக்கக் கேட்பார்கள். அக்காலத்தில் அநேகர் படிக்க அறியாதவர்களாயிருந்தபடியால் இம்முறை அனுசரிக்கப் பட்டது. வசனத்தை வாசித்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் கர்த்தருடைய ஆசீர்வாதம் உண்டாயிருந்தது. இப்பழக்கத்தையொட்டித்தான் ‘இத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும்... பாக்கியவான்கள்’ என்று எழுதப்பட் டிருக்க வேண்டும். “காலம் சமீபமாயிருக்கிறது.” இது அறிவிக்கப்படுவதற்கு முன்பு காலம் சமீபமாயிருக்கவில்லை. இந்த மகத்தான வெளிப்பாட்டை தேவன் முன்னரே நன்கு அறிந்திருந் தாலும், அவருடைய ஞானமும் திட்டமும், அதை இதுவரை அறிவிக்கவில்லை. இதன்மூலம் நாம் ஒரு முக்கியமான கொள்கையை அறியலாம். அதாவது, ஒவ்வொரு காலத்திற்குரிய கர்த்தரின் வெளிப்பாடு, அந்தந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமயத்திலும் உண்டாகும். இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரத்தை நாம் பார்க்கும்போது, கர்த்தரின் வெளிப்பாடு அவர்களுடைய சரித்திரத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திலும், இன்னும் குறிப்பாக, இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடத்தில் அழுது முறையிட்டபோதும் மோசேக்கு உண்டானது. இயேசு கிறிஸ்துவும் தேவத்துவத்தை முழுவதுமாக வெளிப்படுத்தக் காலம் நிறைவேறினபோது தோன்றினார். லவோதிக்கேயா சபையின் காலமாகிய இந்தக் காலத்திலும் கர்த்தருடைய வெளிப்பாடு அதற்குரிய நேரத்தில் கொடுக்கப்படும். அது ஒருபோதும் தவறாது. அல்லது குறித்த காலத்திற்கு முன்பாகவும் கொடுக்கப்படமாட்டாது. நாம் இப்பொழுது கடைசி காலங்களிலிருக் கிறபடியால் இதை நன்றாக மனதில் கொள்ள வேண்டும். வாழ்த்துதல் வெளி 1 : 4-6, “யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தம் இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும், வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” ‘ஆசியா’ என்னும் பதம் சரியாக ‘ஆசியா மைனரைக்’ குறிக்கும். இது ஏறக்குறைய அமெரிக்காவிலுள்ள இந்தியானாவின் (INDIANA) விஸ்தீரணம் வாய்ந்தது. தங்களுடைய விசேஷத் தன்மைகளுக்கென்று இங்குள்ள ஏழு சபைகள் பொறுக்கியெடுக்கப்பட்டு இவைகளின் தன்மைகள் நூற்றாண்டுகள் கழித்துப் படிப்படியாய்த் தோன்றிய ஏழு சபையின் காலங்களில் காணப்பட்டன. சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளும், முறையே ஏழு தூதர்களுக்குள்ளிருந்து அவரவர் வாழ்ந்த காலங்களில் ஊழியத்தை அளித்தன. ‘இருக்கிறவர்’, ‘இருந்தவர்’, ‘வருகிறவர்’, ‘உண்மையுள்ள சாட்சி’, ‘மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவர்’, ‘பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி’, ‘அல்பாவும் ஒமெகாவும்’. சர்வ வல்லவர்’, என்னும் பட்டப் பெயர்கள், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவின ஒருவரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விவரிக்கின்றன. யோவானுக்குள்ளிருந்த தேவ ஆவியானவர் தேவன் ஒருவரே என்றும் அவரே எல்லாவற்றிற்கும் மேலான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும் வெளிப்படுத்த மேற்கூறிய பட்டப் பெயர்களைக் கொடுக்கிறார். ஒரு தேவனுக்குப் பதிலாக மூன்று தேவர்கள் உண்டு என்று அநேகர் இக்காலத்தில் தப்பான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர். இயேசு யோவானுக்களித்த வெளிப்படுத்துதல் இத்தவறைச் சரிப்படுத்துகிறது. மூன்று கடவுள்கள் இல்லை; ஆனால் ஒரே கடவுள் மூன்று பதவிகளைக் கொண்டவராயிருக்கிறார். ஒரே தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூன்று பட்டங்களைக் கொண்டிருக்கிறார். ஆதித் திருச்சபைக்கு இந்த மகத்தான வெளிப்பாடு உண்டாயிருந்தது. இந்தக் கடைசிக் காலத்தில் அது நமக்கு மீண்டும் கொடுக்கப்பட்டு, சரியான தண்ணீர் ஞானஸ்நானத்தின் உண்மையும் வெளிப்படுத்தப்படுகிறது. நவீன வேத சாஸ்திரிகள் நான் கூறுவதை ஆமோதிக்க மாட்டார்கள். ஏனெனில் ஒரு கிறிஸ்துவப் பத்திரிகையிலே பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது. “திரித்துவத்தைக் குறித்த போதகம் பழைய ஏற்பாட்டின் சாராம்சமும் புதிய ஏற்பாட்டின் சாராம்சமுமாகத் திகழ்கின்றது. ஒரு தேவனைவிட அதிகமான தெய்வங்கள் உண்டு என்னும் தத்துவத்தை இவ்விரு ஏற்பாடுகளும் ஆதரிக்கவில்லை. இருப்பினும் பிதா கடவுளென்றும், குமாரன் கடவுளென்றும், பரிசுத்தஆவி கடவுளென்றும், இம்மூன்றும் ஒரே ஆளின் அம்சங்களல்லவென்றும், மூன்று பேர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தப்பட்டவர்களாயிருக் கின்றனரென்றும் புதிய ஏற்பாடு தெளிவாக விளக்குகிறது. ஒரே தேவனும் மூன்று பேர்களுமாகிய மகத்தான போதனை நமக்குண்டு’. மேலும், “வேதத்தில் கூறப்பட்டவண்ணம் தேவன் மூன்று ஆட்களைக் கொண்டவராயிருக்கிறாரேயன்றி அவர் ஒரே ஆளல்ல. இதுதான் திரித்துவத்தின் பெரிய ரகசியம்’ என்று கூறப்படுகிறது. திரித்துவக்காரர் கூறுவது போன்று இது ஒரு பெரிய ரகசியம்தான். மூன்று பேர் எவ்வாறு ஒரே கடவுளில் இருக்கமுடியும்? இப்போதனையை ஆதரிக்கும் வேதப்புத்தகம் எதுவுமில்லை புத்திக் கூர்மையற்ற யோசனையின் விளைவாக இது உண்டானது. எல்லா வகையிலும் ஒத்த மூன்று வித்தியாசப்பட்ட ஆட்கள் என்று கூறும்போது அது மூன்று கடவுள்களைத்தான் குறிக்கின்றது. அங்ஙனம் இல்லாவிடின் மொழியானதுதான் சாதாரணமாக விவரிக்கும் அர்த்தத்தை முழுவதுமாக இழந்து விட்டிருக்க வேண்டும். “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர் நான் அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமுமாயிருகிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்” என்னும் வசனத்தை நாம் மறுபடியும் சிந்திப்போம். இது மனிதனையோ அல்லது தீர்க்கதரிசியையோ குறிக்காமல் தேவனைக் குறிக்கிறது. மேலும் இவ்வசனம் மூன்று கடவுள்களை வெளிப்படுத்தாமல் சர்வவல்லமையுள்ள ஒரே தேவனை வெளிப்படுத்துகிறது. சபையின் துவக்கக் காலத்திலிருந்த மக்கள் மூன்று கடவுள்கள் இருப்பதாக விசுவாசிக்கவில்லை. அப்போஸ்தலர்களிடையே இத்தகைய நம்பிக்கை எதுவும் இருந்ததுமில்லை. அப்போஸ்தலரின் காலங்களுக்குப் பிறகு இத்தத்துவம் ஒரு பிரச்சனையாகி (ISSUE) நிசாயாவின் ஆலோசனை சபையில் (NICENE COUNCIL) ரோமன் மார்க்கத்தின் கொள்கையாக (CARDINAL DOCTRINE) ஆக்கப்பட்டது. தேவத்துவத்தைக் குறித்தப் போதகம் நிசாயாவில் பிளவுண்டாக்கி அதன் விளைவாக முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைப் பின் பற்றும் இருசாரார் தோன்றினர். ஒருசாரார் அநேக கடவுள்களுண்டு என்னும் தத்துவத்தைப் பின்பற்றி, மூன்று கடவுள்களுண்டு (POLYTHEISM) என்று சாதித்தனர். மற்றைய வகுப்பாரோ, ஒரே தேவன் உண்டு என்று நம்பினர் (UNITARIANISM). இன்றுவரை இவ்விரு திறத்தாரும் கிறிஸ்தவர்களிடையே காணப் படுகின்றனர். ஆனால் ஆவியானவரோ யோவானின் மூலம் ‘நானே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நான் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறேன். என்னைத் தவிர வேறே தேவனில்லை” என்று சபைகளுக்கு வெளிப்படுத்துகிறார்; இந்த வெளிப்படுத்து தலின்மேல் தம்முடைய முத்திரையைப் போட்டிருக்கிறார் இயேசுவுக்குப் பிதா யார்? அவள் (மரியாள்) பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று வேதம் கூறுகிறது தேவன் தம்முடைய பிதா என்று இயேசு தாமே கூறினார். அப்படியெனில் நாம் சாதாரணமாக உபயோகிக்கும் பதங்களான தேவனாகிய பிதா, தேவனாகிய பரிசுத்த ஆவி இவையிரண்டும் பிதாவும் பரிசுத்த ஆவியும் ஒருவரே என்று காணப்படுகின்றன. அவ்வாறு இல்லாவிடில், இயேசு கிறிஸ்துவுக்கு இரண்டு தகப்பன்மார் இருக்கவேண்டும். இயேசுவும், “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக் கிறோம்”(இரண்டல்ல) என்று கூறுகிறார். அப்படியெனில் தேவன் ஒருவரே. மேற்கூறியது சரித்திரப் பிரகாரமாகவும், வேதப் பிரகாரமாகவும் உண்மையாக இருப்பதால் இந்த மூன்று கடவுளின் தத்துவம் எங்கிருந்து வந்தது என்று மக்கள் அதிசயப்படுகின்றனர். கி.பி, 325ம் ஆண்டில் நடைபெற்ற நிசாயாவின் ஆலோசனை சங்சுத்தில் இது ஆதாரப் போதனையாக (FOUNDATONAL DOCTRINE) ஏற்படுத்தப்பட்டது. வேதத்தில் காணப்படாத ‘திரித்துவம்’ என்னும் போதனை ரோமாபுரியிலுண்டாயிருந்த அநேக அஞ்ஞான தெய்வங்களை ஆதாரமாகக்கொண்டு உண்டாக்கப்பட்டது. ரோமர்கள் இத்தெய்வங்களிடம் தங்கள் விண்ணப்பங்களை ஏறெடுத்தனர். அதுவுமன்றி, தங்கள் மூதாதையர் மத்தியஸ்த ஸ்தானத்தில் வகிப்பதாக எண்ணி அவர்களிடத்திலும் வேண்டுதல் செய்தனர். பின்பு பழைய அஞ்ஞான தெய்வங்களுக்குப் புதிய நாமங்கள் கொடுக்கப்பட்டு, வேதப்பிரகாரமாக இருக்கவேண்டுமென்று கருதி அவர்கள் பரிசுத்தவான்களென்ற பெயரில் அழைக்கப்பட்டனர் ஜுபிடர் (JUPITER), வீனஸ் (VENUS), மார்ஸ் (MARS), என்னும் தெய்வங்களுக்குப் பதிலாக பவுல், பேதுரு, பாத்திமா, கிறிஸ்டபர் போன்றவர்கள் தொழப்பட்டனர். ரோமாபுரியின் அஞ்ஞான மார்க்கம் ஒரு கடவுளைக் கொண்டு நடத்தப்பட முடியாததால் அவரை மூன்று கூறுகளாக்கி, மூதாதையரை மத்தியஸ்தர்களாகத் தொழுதது போன்று பரிசுத்தவான்களை மத்தியஸ்தர்களாகத் தொழ ஆரம்பித்தனர். அது முதற்கொண்டு ஒரே கடவுளுக்கு மூன்று பதவிகள் அல்லது மூன்று தோற்றங்கள் (MANIFESTATIONS) உண்டு என்பதை மக்கள் உணரக்கூடாமற் போயிற்று, வேதப்பிரகாரம் தேவன் ஒருவரே என்பதை அவர் அறிவர். ஆனால் அவரை ஒரு திராட்சக் குலைக்குச் சமமாகக் கருதும் ஒரு விசித்திரக் கொள்கையை உண்டாக்கினர். அதாவது மூன்று ஆட்கள் தெய்வீகத் தன்மையைச் சரிசமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர் என நம்பினர். ஆனால் இயேசுவை, இருக்கிறவரும் “இருந்தவரும்” வருகிறவரும் என்று வெளிப்படுத்தின விசேஷம் அழைக்கிறது அவர் அல்பாவும் ஒமெகாவும்’ என்று கூறும்போது, அவரே எல்லாமென்றும் சர்வ வல்லவர் என்றும் அர்த்தம். அவரே சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, காலை விடிவெள்ளி, நீதியின் கிளை, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, அவரே தேவன், சர்வவல்லமையுள்ள தேவன் ஒரே தேவன். அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவ தூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்தில் விகவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப் பட்டார் என்று வேதம் கூறுகிறது. (1தீமோ 3: 16), முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆளைக்குறித்து இவ்வசனம் எதுவும் கூறவில்லை. தேவன் மாம்சத்தில் தோன்றினார் என்று மாத்திரம் கூறுகிறது. ஆம் ஒரே தேவன் மாம்சத்தில் வந்ததன் காரணமாக அவர் வேறொரு தேவனாகி விடவில்லை. அவர் அதே தேவனாயிருந்தார். தேவன் ஒருவரே என்று அப்போஸ்தலர் காலங்களில் வெளிப்பட்டது; இப்பொழுதும் அது நமக்கு வெளிப்படுகிறது. ஆதியிலே கர்த்தர் எவ்வாறிருந்தார் என்று வேதத்தில் நாம் ஆராய்வோம். மகத்தான யெகோவா. அக்கினி ஸ்தம்பத்தில் இஸ்ரவேல் ஐனங்களுக்குத் தோன்றினார். உடன்படிக்கையின் தூதனாக அவர் அக்கினி ஸ்தம்பத்தில் வாசம் செய்து இஸ்ரவேலரை தினமும் வழிநடத்தினார். தேவாலயத்தில் மேகஸ்தம்பத்தில் காட்சி அளித்தார். பின்னர் ஒருநாள் கன்னிகையின் வயிற்றில் தனக்கென்று ஆயத்தப்படுத்தப்பட்ட சரீரத்தில் தோன்றினார். இஸ்ரவேல் மக்களின் கூடாரங்களுக்குமேல் வாசம் செய்த கர்த்தர் இப்பொழுது மாம்சமாகிய கூடாரத்தில் மனிதர்களுக் கிடையில் வாசம் செய்தார். ஆனால் அவர் அதே தேவன்தான். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்தார் என்று வேதம் நமக்குப் போதிக்கிறது. வெளிப்புறத்துக் காணும் சரீரம்தான் இயேசு. தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது. இதைக்காட்டிலும் தெளிவானது எதுவுமில்லை. தேவத்துவம் சரீரப்பிரகாரமாக வாசம் செய்வது ஒரு பரமரகசியம்தான் (MYSTERY), ஆனால் இது முற்றிலும் உண்மை. முன்பு தேவன் மூன்று ஆட்களாக இல்லையென்றால் இப்பொழுதும் மூன்று ஆட்களாக இருக்க முடியாது. தேவன் ஒருவரே. இந்த தேவன் மானிடனானார். “நான் பிதாவிலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறு படியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன்” என்று இயேசு கூறினார் (யோவான் 16:28). அவர் கூறியது உண்மையாக நடந்தேறியது. அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதலின்மூலம் அவர் இந்த உலகத்திலிருந்து மறைந்தார். பிறகு பவுல் தமஸ்குவுக்குப் போகிற வழியில் அவரைச் சந்தித்தபொழுது, அவர் பவுலை நோக்கி, “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று கேட்க, பவுல் பிரதியுத்தரமாக “ஆண்டவரே, நீர் யார்? என்றான். அதற்கு அவர் நானே, இயேசு” என்றார். அச்சமயம் அவர் அக்கினி ஸ்தம்பமாக, அதாவது பவுலின் கண்களைக் குருடாக்கும் வெளிச்சமாக இருந்தார். அவர் கூறியவண்ணம் பிதாவினிடத்திற்கு மறுபடியும் சென்றார். மாம்சமாகிய கூடாரத்தில் வாசம் செய்யும் முன்பு எந்நிலையிலிருந்தாரோ அதே நிலைக்குத் திரும்பிச் சென்றார் “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்”. (யோவான் 1:18). இப்பொழுது இயேசு பிதாவின் மடியில் (மடிக்குள்) (IN THE BOSOM) இருப்பதாக யோவான் விளம்புகிறர். “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்று வேதம் கூறுகிறது. (லூக்கா 2:11). அவர் கிறிஸ்துவாகப் பிறந்து, எட்டு நாளைக்குப் பிறகு விருத்தசேதனம் செய்யப்பட்ட பின்பு, தேவதூதன் கட்டளையிட்ட வண்ணமாக ‘இயேசு’ என்று பெயரிடப்பட்டார். என்னை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். நான் பிரன்ஹாமாகப் பிறந்தேன். பிறந்த பிறகு எனக்கு ‘வில்லியம்’ என்ற பெயர் கொடுக்கப்பட்டது அதேவிதமாக அவர் கிறிஸ்துவாயிருந் தார். ஆனால் மனிதரிடையில் வாசம் செய்தபோது ‘இயேசு’ என்று அழைக்கப்பட்டார். மனிதர் காணும் வெளிப்புறமான கூடாரம் ‘இயேசு’ என்று அழைக்கப்பட்டது. அவரே மகிமையின் தேவனும், மாமிசத்தில் வெளிப்பட்ட சர்வல்லமை உள்ளவராக இருக்கிறர். அவரே பிதாவாகிய தேவன், குமாரன், பரிசுத்த ஆவி எல்லாமானவர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவை வெறும் பட்டங்களே (TITLES); அவை பெயர்களல்ல “கர்த்தராகிய இயேசுகிறிஸ்து’ என்பது நாமமா யிருப்பதால், அந்த நாமத்திலே நாம் ஞானஸ்நானம் கொடுக்கிறோம் மேற்கூறிய பட்டங்களுக்குரிய நாமம் அதுவே. உதாரணமாக, ஒரு புதிதாய்ப் பிறந்த ஆண் குழந்தைக்குப் பெயரிடுவதாக வைத்துக் கொள்வோம். அவன் குழந்தையாய் பிறந்தான்; அவனுடைய பதவி மகன் என்பதே. அவனுக்கு ஜான் ஹென்றி ப்ரவுன் (JOHN HENRY BROWN) என்று பெயரிடும்போது அது அவனுடைய நாமமாகிறது, நாம் ‘இயேசுவின் நாமத்தில்’ மாத்திரம் ஞானஸ்நானம் கொடுக்கக்கூடாது; ஏனெனில் நம்முடைய இரட்சகராகிய இயேசுவுக்கு முன்பும் அதன் பின்னரும் ஆயிரக்கணக்கான இயேசுக்கள் இவ்வுலகில் வாழ்ந்திருக் கின்றனர். அவர்களில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே கிறிஸ்துவாகப் பிறந்திருக்கிறார். ஆகையால் ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்’ நாமத்தில் மாத்திரம் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். இயேசுகிறிஸ்து, தேவனுடைய நித்திய குமாரன் என்று மக்கள் கூறுகின்றனர். எந்தக் குமாரனாவது நித்தியமாக இருக்கிறார் என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? நித்தியமான யாவற்றிற்கும் தொடக்கம் இருந்ததில்லை, இவர் மாம்சத்தில் வெளிப்பட்ட நித்திய தேவனே (யெகோவா) யன்றி நித்திய குமாரனல்ல. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்தவார்த்தை தேவனாயிருந்தது” (யோவான்1:1) என்றும், “அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்” (யோவான் 1: 14) என்றும் யோவான் எழுதின சவிசேஷம் உரைக்கிறது. அவர் பிதாவின் நித்திய வார்த்தைக்கு உண்மையும் விசுவாசமுள்ள சாட்சியாக இருந்தார். பிதா தாம் கூறக் கட்டளையிட்ட யாவையும் எடுத்துரைத்த தீர்க்கதரிசியாக விளங்கினார் . “என் பிதா என்னில் இருக்கிறார்’’ என்று அவர் கூறினார். ஆம் “இயேசுவாகிய கூடாரம்” என் பிதா என்னில் இருக்கிறார் என்று கூறினார். கர்த்தருக்கு “நம்முடைய நீதி”, “நம்முடைய சமாதானம்”, “எப்பொழுதும் பிரசன்னர்”, “பிதா”, “குமாரன்”, “பரிசுத்த ஆவி” என்று அநேக பட்டப் பெயர்களுண்டு. ஆனால் அவருக்கு ‘இயேசு’ என்ற ஒரே மனித நாமம்தான் உண்டு. தேவனுக்கு எவ்வாறு முன்று பதவிகள் அல்லது மூன்றுவிதமான தோற்றங்கள் (MANIFESTATION) இருக்க முடியும் என்று ஆலோசித்துக் குழப்பமடையாதீர்கள். இவ்வுலகத் திலிருக்கும் போது அவர் தீர்க்கதரிசியாக இருந்தார். பரலோகத்தில் அவர் ஆசாரியராயிருக்கிறார். மறுபடியும் இவ்வுலகத்திற்கு வரும்போது ராஜாதிராஜாவாக வருவார். ‘இருந்தவர்’ என்பது தீர்க்கதரிசியாகிய இயேசுவையும், ‘இருக்கிறவர்’ என்பது நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபித்து நமக்காகப் பரிந்து பேசும் ஆசாரியரான இயேசுவையும் `வருகிறவர்’ என்பது வரப்போகும் ராஜாவாகிய இயேசுவையும் குறிக்கின்றன. இவ்வுலகத்திலே அவர் வார்த்தையாக (தீர்க்கதரிசியாக) இருந்தார். மோசே அவரைக் குறித்து, “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப் பண்ணுவார். அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாத வனெவனோ அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப் படுவான்” என்றான். (அப். 3:28:23) இயேசுவைக் குறித்த இந்த சத்தியங்களைக் கவனியுங்கள் பூலோகத்தில் தீர்க்கதரிசி, ஆட்டுக்குட்டி, குமாரன் என்னும் இம்மூன்று உத்தியோகங்களையும் அவர் வகித்தார். ஆனால் இவைகள் அவரை மூன்று ஆட்களாக ஆக்கிவிடவில்லை. இவை மூன்றும் ஒரே ஆளாகிய இயேசுவின் உத்தியோகங்களாகும். தேவத்துவத்தில் ஒன்றைவிட அதிகமான ஆட்களுண்டு என்று நிரூபிப்பதற்கென திரித்துவக்காரர் பின்வரும் வேத வாக்கியங்களை அடிக்கடி எடுத்துக் கூறுவதுண்டு. “அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும். மூப்பர்களுக்கும் மத்தியில் நிற்கக் கண்டேன்! அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்த வருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும்தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான் களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங் களையும் பிடித்துக் கொண்டு ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாக விழுந்து...” வெளி (5 : 6-8). இவ்வசனங்களைத் தனியாக (அதாவது மற்றைய வசனங்களோடு ஒப்பிடாமல்) படித்தால் திரித்துவப்போதனையை இது நிரூபிப்பது போல்தான் காணப்படும். ஆனால் இவ்வசனங்களுடன் பின்வரும் வசனங்களையும் படிக்கவும். “உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார். வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக் கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது; அது பார்வைக்கு மரகதம் போல் தோன்றிற்று... மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, இருபத்து நான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து, கர்த்தாவே, தேவரீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக் கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்” (வெளி 4:2-3, 9-11). இரண்டாம் வசனத்தில், ஒருவர் (‘இருவர்’ ‘மூவர்’ அல்ல) சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் (‘வீற்றிருந்தவர்கள்’ அல்ல) பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்” என்று கூறுகிறது. மறுபடியும் பத்தாம் வசனம். “இருபத்து நான்கு மூப்பர்கள் வீற்றிருந்தவருக்கு (‘வீற்றிருந் தவர்களுக்கு அல்ல) முன்பாக வணக்கமாய் விழுந்தார்கள் என்று குறிக்கிறது. பதினோராம் வசனத்தில், “தேவரீர் (‘தேவரீர்கள் ’ அல்ல) பாத்திரராயிருக்கிறீர்” என்று எழுதப்பட்டிருக்கிறது. அதே வசனம் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்த வரைச் ‘சிருஷ்டித்தவர்’ என்று அழைக்கிறது. இயேசுதான் அந்த சிருஷ்டிகர்த்தர் (யோவான் 1:3). பழைய ஏற்பாட்டின் ஆவியாகிய தேவன் (யெகோவா) அவரே (ஆதி 1:1). இதோடு தொடர்ந்து பின்வரும வசனங்களைப் படியுங்கள். “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும் படிக்கு அருள் செய்வேன்” (வெளி 3:21). “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஒடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல் சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (எபி. 12:2). ‘வெளிப்படுத்தின விசேஷத்தை’ எழுதிய இயேசு. அவர் தாமே பிதாவோடு சிங்காசனத்தில் உட்கார்ந்திருப் பதாகக் கூறுகிறார். ஆனால் பவுலுக்குள்ளிருந்த தீர்க்கதரிசன ஆவி (அதாவது கிறிஸ்துவின் ஆவி), அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருப்பதாகக் கூறுகிறது. முதலில் யோவான் ஒருவரை மாத்திரம் சிங்காசனத்தில் கண்டான் (வெளி 4 : 2, 3). அதன்பிறகு தொடர்ச்சியாய் சம்பவங்கள் நடைபெற்று, வெளி. 5: 6-8ல் ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய (அதாவது வெளி 4:2-3. 9-10ல் கூறப்பட்டவர்) வலது கரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதுதான் ஒரே தேவனின் பரம ரகசியம். ஆதியிலே தேவன் ஒருவராயிருந்தார். அவரிலிருந்து இயேசு புறப்பட்டு. மாம்சத்தில் தோன்றி, மரித்து, உயிரோடெழுந்து ‘பிதாவின் மடிக்கு’த் திரும்பினார். “பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்’ என்று யோவான் உரைக்கிறார். (யோவான் 1:18). தேவன் (மேசியா) தன்னுடைய மணவாட்டியை அழைத்துக் கொண்டு போய், பின்னர் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தம்மை வெளிப்படுத்துங் காலம் வந்துவிட்டது. ஆகையால் அவர் மறுபடியும் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு, மாமிசத்தில் காணப்பட்டு, “தாவீதின் குமாரனாகவும். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தாவாகவும், புறஜாதி மணவாட்டியின் மணாளனாகவும்” மனிதரோடு தொடர்பு கொள்ளுகிறார். அவ்வாறு புறப்பட்டு வந்த காட்சியைத்தான் யோவான் கண்டான் (வெளி 5:6-8). இதனால் இரண்டு கடவுள் உண்டு என்று நினைத்து விடக் கூடாது. ஒரே தேவன் தம்முடைய மகத்தான பதவிகளையும் பட்டங்களையும் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார். ஜனங்கள் இயேசுவைத் தீர்க்கத்தரிசியென்று அறிந்திருந் தார்கள். மேசியாவின் அடையாளம் தீர்க்கத்தரிசியிடம் காணப்படும் என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். “பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு; நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கத்தரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். அதற்கு நாத்தான்வேல்; நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு; வந்து பார் என்றான். இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக் குறித்து; இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். அதற்கு நாத்தான்வேல்; ரபி, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். பின்னும் அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும் தேவ தூதர்கள் மனுஷகுமாரனிடத் திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இது முதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (யோவான் 1:44-51). இயேசு இவ்விதமாக மக்களின் இருதயங்களிலுள்ள சிந்தனைகளை அறிந்ததால், அவரே அபிஷேகம் பெற்ற தேவனுடைய வார்த்தையாகிய மேசியா என்பதைத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கண்டு கொள்ள முடிந்தது. “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் சுருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபி.4:12) கிணற்றடியிலிருந்த சமாரியா ஸ்திரீயின் சிந்தனைகளை இயேசு அறிந்தபோது, அது மேசியாவின் தன்மை என்பதை அவள் உணர்ந்து, மெய்யாகவே அவர் தீர்க்கதரிசியென்று அவரைப் புகழ்ந்தாள். “அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந் தார்கள். அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங் கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில் தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும் தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானல், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். அதற்கு அந்த ஸ்திரீ ஆண்டவரே, மொண்டுக் கொள்ள உம்மிடத்தில் பாத்திரம் இல்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத் தண்ணீர் உண்டாகும். இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருக ஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிற வனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி; ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுக் கொள்ள வராமலிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். இயேசு அவளை நோக்கி; நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா என்றார். அதற்கு அந்த ஸ்திரீ; எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல; இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி; ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டு வந்தார்கள். நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்களே என்றாள். அதற்கு இயேசு; ஸ்திரியே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல. எங்கும் பிதாவைத் தொழுது கொள்ளுங்காலம் வருகிறது. நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுது கொள்ளுகிறோம். ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங்காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள். இப்படிப்பட்டவர்களாயிருக் கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும் என்றார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி கிறிஸ்து என்னப்பட்ட மேசியா வருகிறார் என்று அறிவேன். அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். இதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்” (யோவான் 4:7-26). `அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும், ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்’ (வெளி 15:3) ஆம், நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக தம்முடைய இரத்தத்தைக் கிருபாசனத்தின்மேல் பிடித்துக்கொண்டிருக்கிற பிரதான ஆசாரியனாகிய ஆட்டுக்குட்டியானவரே சர்வல்லமையுள்ள தேவன். இதுதான் அவருடைய தற்போதைய ஊழியம், இப்பொழுது நம்முடைய பாவங்களுக்காகத் தம்முடைய இரத்தம் சிந்துதலின்மூலம் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு நாளில் அந்த ஆட்டுக்குட்டியானவர் யூதா கோத்திரத்தின் சிங்கமாக மாறுவார். அவர் வல்லமையோடும் மகிமையோடும் புறப்பட்டு இந்த உலகத்தை ஆளுவதற்கென அதிகாரம் பெறுவார். ஆம், அவரே இவ்வுலகத்தின் எதிர்கால ராஜா. அங்ஙனம் கூறுவதால் அவர் இப்பொழுது ராஜாவாயில்லை என்ற அர்த்தங்கொள்ளாதீர்கள். அவர் இப்பொழுது பரிசுத்தவான்களுக்கெல்லாம் ராஜாவாயிருக் கிறார். ஆவிக்குரிய ராஜ்யத்தை இப்பொழுது அரசாளுகிறார். நாம் உலகத்துக்குரியவர்களல்லாதது போன்று அவருடைய ராஜ்யமும் இவ்வுலகத்துக்குரியதல்ல. நம்முடைய குடியிருப்பு பரலோகத்திலிருப்பதனால் நாம் இவ்வுலகத்தாரினின்று மாறுபட்டவர்களாகக் காணப்பட்டு, இயேசு அரசாளும் மறுபிறப்பின் ராஜ்யத்தின் தன்மையைப் பிரதிபலிக்கிறோம். இதன் காரணமாக, நம்முடைய பெண்கள் ஆண்களின் உடைகளை அணியாமலும், மயிரைக் கத்தரியாமலும், வாசனைப் பொருள்களை (COSMETICS) உபயோகிக்காமலும், இன்னும் இவ்வுலகம் அதிகமாக விரும்பும் அநேக செய்கைகளில் ஈடுபடாமலும் இருக்கின்றனர். நம்முடைய ஆண்கள் குடிக்காமல், புகைபிடிக்காமல், மற்றுமுள்ள பாவங்களைச் செய்யாமல் இருக்கின்றனர். நமக்குள் வாசமாயிருக்கும் கிறிஸ்துவின் ஆவியினுடைய வல்லமையைக் கொண்டு பாவத்தின்மேல் நாம் வெற்றி சிறக்கிறோம். இவ்வுலகத்திலுள்ள எல்லா ராஜ்யங்களும் நிச்சயமாய் அழிவடையும்; ஆனால் நம்முடைய ராஜ்யமோ என்றென்றைக்கும் நிலைநிற்கும். உண்மையான ஒரே தேவனையும் அவருடைய உத்தியோகங்களையும் பற்றி இதுவரை நாம் சிந்தித்து வேதத்தின் வாயிலாக அவருடைய மகிமையைக் கண்டுகொண்டிருந்தோம். உலகப் பிரகாரமான ஞானத்தைக்கொண்டு அவரை ஒருக்காலும் அறியமுடியாது. பரிசுத்த ஆவியானவர் அவரை வெளிப்படுத்தும் போது ஆவிக்குரிய பிரகாரமாய் மாத்திரம் நாம் அவரை அறிய முடியும். மாம்சத்தில் இயேசுவென்று அழைக்கப்பட்ட தேவன் அக்கினி ஸ்தம்பத்திற்குத் திரும்பிச் சென்றார். ஆவியாக மறுபடியும் வந்து மக்களிடையே வாசம் செய்வதாக வாக்களித்தார். அவ்வாறே பெந்தெகோஸ்தே நாளில் அக்கினி ஸ்தம்பம் தாழ இறங்கி அக்கினி நாவுகளாகப் பிரிந்து ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. தேவன் கூறியவாறு அவர் தம்மைச் சபைக்குப் பிரித்துக்கொடுத்து அங்குள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் தம்முடைய ஒரு பாகத்தை அளித்தார். `நான் பிதாவை வேண்டிக்கொள்வேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது. அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைத்திருக் கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.. என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்;நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி, ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகிற காரணமென்ன என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம்’ என்றார் (யோவான்14:16-23). சீஷர்களோடும் சீஷர்களுக்குள்ளும் வாசம் பண்ணும் தேற்றரவாளனை அனுப்ப அவர் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வார் என்றும், அவரே சீஷர்களிடத்தில் மறுபடியும் வருவாரென்றும் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியெனில் இது கிறிஸ்துவையே குறிக்கிறது. 23-ம் வசனம் `நாங்கள் வந்து வாசம் பண்ணுவோம்’ என்று கூறுகிறது. அதாவது பிதாவாகவும் குமாரனாகவும் வெளிப்பட்ட அதே தேவ ஆவியானவர் இப்பொழுது அநேகருக்குள் வாசம் பண்ணுவார். தேவன் ஒருவரே; அவர் ஆவியாயிருக்கிறார். நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியாகிய இயேசு பரிசுத்த மனிதனாக இருப்பதால், போப், அத்தியட்சகர் அல்லது போதகர் பரிசுத்த மனிதன் என்று யாரும் கூற இயலாது. குருமார்களே (HEIRARCHY) ஊழியத்துக் குரியவர்களென்றும் சபையிலுள்ள ஏனையோர் (LAITY) ஊழியம் செய்யத் தகுதியற்றவர்கள் என்று கூறுவதற்கு யாதொரு உரிமையுமில்லை. ஒவ்வொருவனுக்கும் பரிசுத்த ஆவியின் மூலமாக ஒரு ஊழியம் அளிக்கப்படுகிறது. `நான் என்பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்’ (யோவான் 14:20) என்னும் கிறிஸ்துவின் வாக்கியம் நிறைவேறப் பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் பிரிந்து அங்கு கூடியிருந்தவர்கள்மேல் அமர்ந்தார். இதன் மூலம் எல்லாருக்கும் ஒரு ஊழியம் அளிக்கப்படுகிறது. `இருக்கிறேன்’ என்னும் சர்வவல்லமையுள்ள தேவன் தம்முடைய உண்மையான சபையை ஆவியால் நிரப்புவதற்கென வந்தார். எங்கு வேண்டுமானாலும் அசைவாடுவதற்கும் எவர்மேல் தங்குவதற்கும் அவருக்கு உரிமையுண்டு. நம்மிடையில் பிரத்தியேகப் `பரிசுத்த மனிதர்களை’ ஏற்படுத்திக் கொள்வது தவறான செய்கையாகும். பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தால் தேவனுடைய உண்மையான சபை முழுவதும் பரிசுத்தமாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் மாத்திரம் பரிசுத்தமாயிருக்கிறார். அவரையன்றி மக்கள் பரிசுத்தரல்ல. இயேசுகிறிஸ்துவே தேவன் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் வெளிப்பாடு. பழைய ஏற்பாட்டின் யெகோவா புதிய ஏற்பாட்டின் இயேசுவாக இருக்கிறார். எவ்வாறு முயன்றாலும் மூன்று கடவுள்களுண்டு என்பதை நிரூபிக்க இயலாது. தேவன் ஒருவரே என்னும் சத்தியத்தைப் பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்து தலினால் மாத்திரம் அறிய முடியும். அல்லாமலும், பழைய ஏற்பாட்டின் யெகோவாதான் புதிய ஏற்பாட்டின் இயேசு என்பதையும் வெளிப்படுத்துதலின் மூலமே அறிந்துகொள்ள முடியும். சாத்தான் சபைகளில் நுழைந்து இச்சத்தியத்தை அறியாதவண்ணம் மக்களின் கண்களைக் குருடாக்கிப் போட்டான். அவ்வாறு செய்த மாத்திரத்தில் ரோமன் கத்தோலிக்க சபையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்தானம் கொடுப்பதை நிறுத்திவிட்டது. பரிசுத்த தேவ வாக்கியங்களின் அர்த்தம் மாற்றப்படும் இந்நாட்களில் வாழும் நமக்குத் தேவத்துவத்தைக் குறித்த சத்தியம் பரிசுத்த ஆவியானவரின் மூலமே வெளிப்படும். ஜெயங்கொள்ளும் சபை வெளிப்படுத்துதலின் மேல் கட்டப்பட்டிருப்பதால், எல்லா சத்தியத்தையும் தேவன் நமக்கு வெளிப்படுத்துவார் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து வெளிப்படுத்துதல் நமக்கு அவசியமேயில்லை. ஏனெனில் வேத வசனம் இதைப் பற்றித் திட்டவட்டமாகக் கூறுகிறது. தேவனுடைய நேர்முகமான கட்டளையாகிய `பிதா, குமாரன், பரிசுத்த ஆவி’யின் நாமத்திலுள்ள ஞானஸ்நானத்தை அப்போஸ்தலர்கள் தள்ளிப்போட்டு, அது உண்மையென்று அறிந்தும் அவர்கள் கீழ்ப்படியாமலிருந் திருக்க ஏதுவுண்டு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லவே அல்ல. `பிதா, குமாரன், பரிசுத்த ஆவி’யின் நாமம் `கர்த்தராகிய இயேசு கிறிஸ்து’ என்று அவர்கள் அறிந்திருந் தபடியால், அந்நாமத்தில் அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். வேறு எம்முறையிலும் அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்ததாக வேதத்தில் சான்று இல்லை. `அப்போஸ்தலருடைய நடபடிகள்’ உண்மையான சபையின் செயல்களைக் கொண்ட ஒரு புத்தகம் என்று பகுத்தறிவு நமக்குப் போதிக்கும், அப்படியிருக்க, அப்போஸ்தலர்கள் அவ்வித ஞானஸ்நானம் கொடுத்திருப்பார்களாயின் நாமும் அதே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். அப்போஸ்தலர் காலத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறாத எவனும் அந்நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருந்தது. `அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல்மேடான தேசங்கள் வழியாய்ப்போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு. நீங்கள் விசுவாசிகளான போது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்; பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன், அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள், யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல், யோவான் தனக்குப் பின்வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான் அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்’. (அப் 19: 1-6). எபேசுவில் வாழ்ந்த இந்த நல்ல மனிதர்கள் மேசியாவின் வருகையைக் குறித்து யோவான் பிரசங்கித்ததைக் கேட்டு, பாவத்தினின்று மனந்திரும்புதலுக் கேற்ற ஞானஸ்நானத்தைப் பெற்ற, இயேசுவை விசுவாசிப் பதற்கென அவருடைய வருகையை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் அவர் வந்தபோது, அவரைக் காணத்தவறிவிட்டனர். இப்பொழுது அவர்கள் இயேசுவைப் பின்நோக்கி, பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியைப் பெறும் சமயம் வந்துவிட்டது. அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுப் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தவுடனே, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார். நீங்களும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவீர்களானால், பரிசுத்த ஆவியால் தேவன் உங்களை நிரப்புவார் என்று வேத வசனம் கூறுகிறது. எபேசியர் பரிசுத்த ஆவியைப் பெற்றதன்மூலம், நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்’ (அப் 2:38) என்னும் வேத வாக்கியம் நிறைவேறிற்று. பவுலும், பேதுருவும் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் ஒரே ஞானஸ்நானத்தைக் குறித்துப் பேசுகின்றனர். இதைக் கடைசி வரை மாற்றமுடியாது. பெந்தேகோஸ்தே நாள் தொடங்கி, தெரிந்து கொள்ளப்பட்ட கடைசி நபர் ஞானஸ்நானம் பெறும் காலம் வரைக்கும் அது அவ்வாறே இருக்கும். `நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன்’ (கலா 1:8). ஒருத்துவத்தில் (ONENESS) நம்பிக்கையுள்ள உங்களில் சிலர் தவறான முறையில் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள். தண்ணீர் முழுக்கினால் இரட்சிப்புண்டு என்றெண்ணி மறுபிறப்பிற்கேற்ற (REGENERATION) ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள். மறுபிறப்பு பரிசுத்த ஆவியின் கிரியையேயன்றி, அது தண்ணீர் முழுக்கினால் ஏற்படுவதல்ல. `நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கட்டளையிட்டவன், தண்ணீர் முழுக்கு மனிதனைப் புதுப்பிக்கிறது என்று கூறவில்லை. அது `தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின்’ அடையாளமாயிருக்கிறது என்று கூறுகிறான். `அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்சஅழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடய உயர்த்தெழுதலினால் இரட்சிக் கிறது’ (1 பேதுரு 3:21). இதை நான் முற்றிலும் நம்புகிறேன். சரித்திரமானது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானம் அல்லாது வேறு முறையான ஞானஸ்நானத்தை ருசுப்படுத்துகிறது என்று உங்களில் யாராவது தவறான எண்ணங் கொண்டிருந்தால், நீங்களே சரித்திரங்களைப் படித்து அக்காலங்களில் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானத்தைக் குறித்து அறிய விரும்புகிறேன். கி.பி. 100-ம் ஆண்டில் ரோமாபுரியில் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானம் `டைம்’ (TIME) என்னும் பத்திரிகையின் டிசம்பர் 5, 1955-ம் வெளியீட்டில் குறிக்கப்பட்டிருந்தது. அதில் மார்க்ஸ் வாஸ்கர (MARCUS VASCA) என்பவர் பூப்ளியஸ் டெளியஸ் (PUBLIUS DECIUS) என்பவருக்குக் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்ததாக எழுதப்பட்டிருந்தது. பூப்ளியஸ், `என்னுடைய இரட்சிப்பு பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையிலறையுண்ட இயேசுகிறிஸ்துவினிடத்திலிருந்து வருகிறது என்று நான் பூரணமாய் விசுவாசிக்கிறேன், அவரோடு நித்தியஜீவன் பெறுவதற்கென, நான் அவரோடுகூட மரித்தேன்’ என்றுகூற, மார்கஸ் `நான் கர்த்தாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கிறேன்’ என்று கூறி பூப்ளியஸைத் தண்ணீரில் முழுக்கினதாகச் சரித்திரம் கூறுகிறது. சத்தியத்தைச் சபையானது நிசாயாவில் இழக்கும் வரை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அப்பொழுது இழந்த சத்தியத்தைச் சபையானது இந்நூற்றாண்டு தொடக்கத்தில், பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதலினால் மீண்டும் பெற்றது. பரிசுத்த ஆவி வெளிப்படுத்தச் சித்தங் கொண்ட எதையும் சாத்தான் ஒருக்காலும் மறைக்க முடியாது. மூன்று கடவுள்கள் இருப்பார்களாயின், பிதாவுக்கென்றும், குமாரனுக்கென்றும், பரிசுத்த ஆவிக்கென்றும் ஞானஸ்நானங்கொடுக்கலாம். ஆனால், ஒரே தேவன் உண்டு என்றும், கர்த்தராகிய இயேகிறிஸ்து என்பதே அவருடைய நாமமென்றும் யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டபடியால், ஒரே தேவனுடய நாமத்திலே நாம் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். ஆகையால்தான் பேதுரு பெந்தேகோஸ்தே நாளில் இவ்வாறு ஞானஸ்தானம் கொடுத்தான். `நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாக அறியக்கடவார்கள்’ (அப் 2:36) என்ற வெளிப்படுத்தலுக்கு அவன் கீழ்ப்படிய வேண்டியதாயிருந்தது. அப்படியெனில் தேவன் `கர்த்தராகிய இயேசு கிறிஸ்து’ என்னும் நாமம் கொண்டவர். இயேசுவே ஆண்டவரும் கிறிஸ்துவுமானால், அவரே மாம்சத்தில் வெளிப்பட்ட ஒரே தேவனான `பிதா, குமாரன், பரிசுத்த ஆவி’ இது. திரித்துவக் கொள்கையின்படி ஒரே தேவனில் மூன்று ஆட்களுண்டு என்ற அர்த்தங் கொண்டதல்ல. ஒரே தேவன், ஒரே ஆள், மூன்று முக்கியமான உத்தியோகங்களை வகித்து அதற்குரிய மூன்று பட்டப் பெயர்களைப் பெற்றிருக்கிறார் என்பதுதான் அதன் அர்த்தம். இந்த இயேசுவே ஆண்டவரும் (பிதாவும்) கிறிஸ்துவு மாயிருக்கிறார் (பரிசுத்த ஆவி). ஆம், இயேசுவே ஒரே தேவனாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. பிலிப்பு ஒருநாள் இயேசுவினிடத்தில் வந்து `பிதாவை எங்களுக்குக் காண்பியும். அது எங்களுக்குப் போதும்’ என்றான். அதற்கு இயேசு, `பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடயே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்’ என்றார் (யோவான் 14: 8-9), இதை ஒருமுறை நான் செய்தியில் கூறினபோது, ஒரு ஸ்திரி எழுந்து `சகோதரன் பிரன்ஹாமே, நீங்களும் மனைவியும் ஒன்றாயிருப்பது போலப் பிதாவும் இயேசுவும் ஒன்றாயிருக்கிறார்கள்’ என்றாள். அதற்கு நான் `அவ்வாறில்லை. என்னைக் காணும்போது என்னுடைய மனைவியை நீங்கள் காணமுடியாது. ஆனால் ஒருத்துவம் (ONENESS) வித்தியாசப்பட்டது. ஏனெனில் இயேசுவைக் காணும்போதே பிதாவைக் காண்பதாக அவர் கூறுகிறார்’ என்று பதிலுறைத்தேன். சிறிது நாட்களுக்கு முன்பு, ஒரு யூத ரபியோடு நான் சம்பாஷித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் என்னை நோக்கி `புறஜாதிகளாகிய நீங்கள் கர்த்தரை மூன்றாக துண்டித்து இவ்விதமான கர்த்தரை ஏற்றுக்கொள் என்று ஒரு யூதனோடு கூறினால் அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான். எங்களுக்குக் கர்த்தத்துவத்தைப் பற்றி உங்களைக்காட்டிலும் அதிகம் தெரியும்’ என்றார். அதற்கு நான் புறஜாதியார் அவ்வாறு செய்வதில்லையென்று கூறித் `தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் `ஆம்’ என்று உரைக்க, நான் மறுபடியும் `ஏசாயா 9:6ஐ விசுவாசிக்கிறீர்களா’ என்று வினவினேன். அதற்கு அவர் அது மேசியாவைக் குறிக்கிறது என்று விசுவாசிப்பதாகவும், வரப்போகும் மேசியா தேவனாகத்தான் இருக்க முடியும் என்பதாகவும் கூறினார். ஆம், ஒரு யூதனிடம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூவர் இருக்கின்றனர் என்று கூறுவோமானால், அத்தகைய கொள்கை நிசாயாவின் ஆலோசனை மகாநாட்டில் தோன்றினது என்பதை அவன் அறிந்திருக்கிறபடியால் நம்மை அஞ்ஞானியென்று இகழுவான். தேவன் மாறாதவராயிருக்கிறார் என்று நாம் எண்ணுகிறபடியே, ஒரு யூதனும் விசுவாசிக்கிறான். ஆனால் சபையோ மாறக்கூடாத தேவனை ஒன்றிலிருந்து மூன்றாக மாற்றிப்போட்டது. தேவத்துவத்தைக் குறித்த வெளிச்சம் இந்த சாயங்கால நேரத்தில் உண்டாகிறது. யூதர்கள் பாலஸ்தீனாவுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கும் காலத்தில் இந்த சத்தியம் வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது. தேவனும் கிறிஸ்துவும் ஒன்றே. இயேசுவே ஆண்டவரும் கிறிஸ்துவுமாயிருக்கிறார். இயேசுவும் தம்மை `ஆமென்’ இருக்கிறவரும். இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வல்லமையுள்ள கர்த்தர்’ என்று யோவானுக்கு வெளிப்படுத்தினார். இதைக் குறித்த வெளிப்படுத்துதல் உனக்கு இல்லையெனில், அதற்காகக் கர்த்தரைத் தேடுவாயாக, வெளிப்படுத்துதல் கர்த்தரிடத் திலிருந்து வரவேண்டுமேயன்றி, மனிதஞானத் தின்மூலம் கிடைக்காது. அநேக வேத வாக்கியங்களை மனப்பாடம் செய்தாலும் அது கிட்டாது. `பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவரும் சொல்லக் கூடாது’ (1 கொரி 12:3) என்று வேதம் எடுத்துரைக்கிறது. நீங்கள் முதலில் பரிசுத்த ஆவியைப் பெறவேண்டும், அதன்பின்னர்தான் இயேசுவே கிறிஸ்து என்னும் வெளிப்பாடு உங்களுக்குக் கிடைக்கும். `தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக் குரியவைகளை அறியமாட்டான்’ (1 கொரி. 2:11) தேவனுடைய ஆவி இவைகளை யாருக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ, அவனையன்றி ஒருவனும் இவைகளை அறியமாட்டான். இவ்வுலகத்தில் எல்லாவற்றைக் காட்டிலும் தேவனுடைய வெளிப் பாட்டிற்காக அவரிடத்தில் மன்றாடுவது மிகவும் அவசியமாயிருக்கிறது. நாம் வேதத்தையும் அதிலுள்ள சத்தியங்களையும் ஏற்றுக்கொண்டாலும் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்படுத்துதல் இல்லாதபடியால் அநேகருக்கு இச்சத்தியங்கள் உண்மையாகவே தோன்றவில்லை. வசனம் ஆவியினால் உயிர்ப்பிக் கப்படாததே இதன் காரணம் உதாரணமாக, `நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாகிறோம்’ என்று வேதம் கூறுகிறது (2 கொரி 5:21). மேலும் அவ்வசனம் இயேசு நமக்காகப் பாவமானார் என்றும் குறிப்பிடுகிறது. பாவமுள்ளவரானார் என்று அது கூறாமல், நாம் அவரோடு ஐக்கியங்கொள்வதன் மூலம் தேவனுடைய நீதியாக ஆவதற்கு அவர் நமக்காகப் பாவமானார் எனக் கூறுகிறது. அவர் நமக்குப் பதிலாகப் பாவமானார் என்னும் சத்தியத்தை நாம் ஏற்றுக்கொள்ளவோமென்றால், அவரோடு ஐக்கியப் பட்டதன் மூலம் நாம் தேவனுடைய நீதியாகவே ஆகிவிட்டோம் என்னும் சத்தியத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேதம் இச்சத்தியத்தை உரைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இச்சத்தியத்தைக் குறித்த வெளிப்பாடு அநேகருக்கில்லாதபடியினால் அது உண்மையாகத் (தத்ரூபமாகத்) தோன்றுவதில்லை. பெரும்பாலருக்கு இது வேதத்திலுள்ள ஒரு நல்ல வாக்கியமாக மாத்திரம் திகழ்கிறது. ஆனால் வெளிப்படுத்துதல் அதை உயிர்பிக்கும் போது அது நமக்கு உண்மையாகவே இருக்கிறது. உங்களை ஆச்சரியப்படுத்தும் மற்றும் உங்களுக்கு உதவுகின்ற சில காரியத்தை நான் இங்கே கூறட்டும். புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழியே என்பது வேத மாணாக்கர் அறிவர். தேவன் உலகத்திற்கு கிரேக்கரின் மூலம் பொதுவான மொழியையும் (UNIVERSAL LANGUAGE). யூதர்களின் மூலம் உண்மையான மார்க்கத்தையும் இயேசுவின் மூலம் தேவனைப் பற்றிய அறிவையும், ரோமர்களின் மூலம் ஸ்திரப்பட்ட சாம்ராஜ்யத்தையும், பிரமாணத்தையும், நெடுஞ்சாலைகளையும் அளித்தார் என்று பிரபல வேதமாணாக்கர் கூறியிருக்கின்றனர். உண்மையான மார்க்கத்தைக் குறித்து மற்றவர்களுக்குப் போதிக்க ஒரு நல்ல மொழியையும், அந்த மார்க்கத்தைப் பரப்புவதற்குச் சாதகமாக ஒரு அரசாங்கத்தையும் நெடுஞ்சாலைகளையும் கர்த்தர் கொடுத்தார். வேதத்தின் காலத்திலிருந்த கிரேக்க மொழி பழுதற்று இருந்தபடியால், கிரேக்க இலக்கணம் படித்து பாண்டியத்யம் பெற்ற ஒரு நிபுணன் புதிய ஏற்பாடு போதிப்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்று தற்போதைய கிரேக்க நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியெனில் ஒரு ஸ்தாபனத்திலுள்ள கிரேக்க நிபுணன் மற்றொரு ஸ்தாபனத்திலுள்ள கிரேக்க நிபுணனோடு புதிய ஏற்பாட்டிலுள்ள ஒரு வாக்கின் அர்த்தத்தின்பேரில் வாக்குவாதம் நடத்த வேண்டுவதென்ன? இதன் காரணமாக கிரேக்க இலக்கணமும் மாறுபட்ட அர்த்தம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்று எண்ணவேண்டியதாய் இருக்கிறது. பெர்கமு சபையின் காலத்தின் நிசாயா ஆலோசனை சங்கம் நடந்தேறுவதற்கு முன்பு ஏரியஸ் (ARIUS) அத்தனேஷியஸ் (ATHANASISU) என்னும் இரு கிரேக்க நிபுணர்கள் ஒரு கிரேக்கப் பதத்தின் அர்த்தத்தைக் குறித்துக் தர்க்கித்ததன் காரணமாக உலகத்திலுள்ள கிரேக்க நிபுணரெல்லாம் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முறையே இவ்விரு நிபுணர்களை ஆதரிக்கத் தொடங்கினர். கிரேக்க மொழி தேவனால் அங்கீகாரம் பெற்றுப் பழுதற்றிருப்பின், பின்னை ஏன் அந்த மொழியைக் குறித்து இவ்வளவு தர்க்கம் உண்டாக வேண்டும்? “CHRIST’S PARALYSED CHURCH X-RAYED” என்ற புத்தகத்தில் டாக்டர் மார்க்கராஸன் (DR. MECROSSAN) என்பவர், ஒருவன் மறுபடியும் பிறந்த பிறகு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுவதாக வேதம் போதிக்கிறது என்றும், ஆங்கிலத்தில் “PROPHECY” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கப் பதம் உண்மையாகவே `போதகம்’ என்னும் அர்த்தங் கொண்டிருக்கிறபடியால், ஸ்திரீகள் தடையின்றி பிரசங்கம் செய்யலாம் என்றும், இவையிரண்டும் பிழையற்ற கிரேக்க இலக்கணத்தை ஆதாரமாகக் கொண்டு நிரூபிக்கப்படுகிறது என்றும் வாதிக்கிறார் என்றாலும் மற்ற கிரேக்க நிபுணர்கள் இவர் கூறுவதை ஏற்றுக் கொள்வதில்லை. புதிய ஏற்பாட்டின் மூலமொழி அராமிய மொழி என்றும் இயேசுவின் காலத்தில் இது வழங்குமொழியாயிருந்தது என்றும் சில வேத ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். டாக்டர் லாம்ஸா (DR. LAMSA) என்பவர் கிரேக்க மொழியில் புதிய ஏற்பாடு எழுதப்படவில்லை என்று சாதிக்க, இதைப் பிரசித்திபெற்ற சரித்திரக்காரராகிய டாய்ன்பீ (TOYNBEE) என்பவர் ஆதரிக்கிறார். அதே சமயத்தில் டாக்டர் ஷோன்ஃபீல்டு (SCHONFIELD) என்னும் பிரசித்தி வாய்ந்த வேத ஆராச்சியாளர் புதிய ஏற்பாடு அக்காலத்து கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்பதற்குச் சான்றுகள் காண்பிக்கிறார். ஜேம்ஸ் அரசனின் வேதத்தையும் டாக்டர் லாம்ஸா எழுதிய வேதத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால், போதகத்திலோ உள்ளடக்கத்திலோ வேற்றுமையை நாம் காணுவதில்லை. ஏற்கெனவே கிடைக்கப் பெற்ற பிரதிகள் உண்மையானவைகளே என்று நிரூபிப்பதற்கென அதேபோன்ற பிரதிகளை தேவன் நமக்கு அளிக்கிறார் என்று தான் நாம் முடிவு செய்ய வேண்டும். பிரதிகளின் மொழிபெயர்ப்பாளர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டாலும் இவைகளிலடங்கியிருக்கும் சத்தியங்கள் மாறுதல்களைக் கொண்டதாக நமக்குக் காணப்படவில்லை. வேதத்தில் எழுதப்பட்ட சத்தியங்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ள, அது எழுதப்பட்ட மொழியில் பாண்டித்யம் பெற்றவர்கள் நமக்கு அவசியமில்லை. அதற்குப் பதிலாக வெளிப்படுத்தலே நமக்கு அவசியம். உங்களுடைய சிந்தை பாரம்பரியத்தால் மறைக்கப்பட்டு நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ளாமலிருந்தால், இன்னும் ஒரு உதாரணத்தை வேதத்திலிருந்து காண்பிக்க விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த வேதபாரகரும் பரிசேயரும் வேதம் எழுதப்பட்ட மொழியில் பாண்டித்யம் பெற்று, இலக்கணத்தில் விகுதிகளையும், பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட வார்த்தைகளின் அர்த்தங்களையும் நன்கு அறிந்திருந்தனர். இருப்பினும், தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் குமாரனில் நிறைவேறியது என்னும் தேவனுடைய வெளிப்படுத்தலை அவர்கள் அறியவில்லை. ஆதியாகமம் தொடங்கி மல்கியா முடிய காணப்படும் பழைய ஏற்பாட்டின் புத்தகங்களில் இயேசு கிறிஸ்துவைக் குறித்த வாக்குத்தத்தங்கள் எவ்வளவோ அடங்கியிருக்கின்றன. சில முழு அதிகாரங்கள் இயேசுவையும் அவருடைய ஊழியத்தையும் மாத்திரம் விவரிக்கின்றன. ஆயினும், ஆவியினால் உணர்த்தப்பட்ட சிலரைத் தவிர, மற்றெல்லாரும் இயேசுகிறிஸ்து யார் என்பதைக் கண்டுகொள்ள முடியவில்லை. பழைய கைப்பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்வதன் மூலம் வேதத்தின் உண்மையான அர்த்தம் புலப்படாது, தேவனிடத்திலிருந்து வரும் வெளிப்படுத்தலே அதன் அர்த்தத்தை நமக்கு உணர்த்தும். `அவைகளை நாங்கள் மனுஷ ஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப் படுத்திக் காண்பிக்கிறோம்’ என்று பவுல் கூறுகிறார் (1 கொரி. 2:13). தேவன் தம்முடைய வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்து, அவர் வாக்குத்தத்தம் செய்ததை நடைமுறையில் நிறைவேற்றிக் காண்பிப்பதே (VINDICATE) உண்மையான வெளிப்பாடாகும். இப்பொழுது இருக்கும் வேதவசனத்தின் பிழையின்மையைக் (ACCURACY) குறித்து நான் சந்தேகப்படுகிறேன் என்று யாரும் தவறாக எண்ணவேண்டாம். வேதாகமம் பிழையில்லாமல் இருக்கிறது. இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திலிருந்த போது பழைய ஏற்பாடு முற்றிலும் உண்மையென்று நிரூபித்தார். பழைய ஏற்பாட்டின் புத்தகங்கள் தொகுக்கப்பட்ட படியால் இவைகளும் முற்றிலும் உண்மையாகவே இருக்க வேண்டும். இன்றைக்கு தேவனின் பிழையற்ற வேதாகமம் நமக்குண்டு. அதிலிருந்து எதையும் கூட்டவோ குறைக்கவோ யாரும் துணிச்சல் கொள்ளக்கூடாது. ஆனால் வேதவாக்கியங்களை அளித்த பரிசுத்த ஆவியே அவைகளை நமக்குப் போதிக்க வேண்டுவது அவசியம். நமக்குப் புதிய வேதாகமமோ, புதிய மொழிபெயர்ப்போ அவசியமில்லை. பரிசுத்த ஆவியே தம்முடைய வார்த்தைகளின் அர்த்தத்தை நமக்கு வெளிப்படுத்திக் கொடுக்க வேண்டும். தேவன் தாமே நம்முடைய ஆவியின் மூலமாக ஜீவனைக் கொடுக்கும் வெளிப்பாடுகளைத் தொடர்ச்சியாக நமக்கு அருளுவாராக, சபை மாத்திரம் இப்போதைக்குரிய வெளிப்படுத்தலைப் பெற்று ஜீவனுள்ள வார்த்தையைக் கடைபிடித்தால், நாம் அநேகப் பெரிய கிரியைகளைச் செய்து பரலோகத்தி லிருக்கிற பிதாவை மகிமைப்படுத்த முடியும். பாவத்தினின்று விடுதலையாக்கப்படுதல் வெளி 1:6. `நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி....’ `கழுவி’ என்னும் பதம் `விடுதலையாக்கி’ என்னும் பொருள்படும். `தம்முடைய (சொந்த) இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மை விடுதலையாக்கி.....’ ஆம், தம்முடைய சொந்த இரத்தம் நம்மை விடுதலையாக்கிற்று. அது மனித இரத்தமல்ல, அது தேவனுடைய இரத்தம். பேதுரு இந்த இரத்தத்தைக் `கிறிஸ்துவின் இரத்தம்’ என்றும் `இயேசுவின் இரத்தம்’ என்றும் அழைக்கிறார். மூன்று ஆட்களல்ல, ஒரே ஆள், தேவன் ஒருவரே என்னும் வெளிப்பாடு மறுபடியும் இவ்வசனத்தின் மூலம் கிடைக்கிறது. சர்வவல்லமையுள்ள யெகோவாவாகிய தேவன் தாழ இறங்கிக் கன்னிகையின் வயிற்றில் தமக்கென்று ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ணி அதில் வாசம் செய்து, நம்முடைய பாவத்தினின்று நாம் விடுதலையாகி அவருடைய சந்நிதானத்திலே மிகுந்த சந்தோஷத்தோடு குற்றமற்றவர்களாய் நிற்கும்படிக்கு தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தினார். இதற்கு எடுத்துக்காட்டாகப் பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். ஏதேன் தோட்டத்தில் தம்முடைய குமாரனாகிய ஆதாம் பாவத்தில் விழுந்தான் என்ற செய்தி மகிமைக்கு எட்டியபோது, தேவன் ஒரு தேவதூதனையோ, குமாரனையோ அல்லது நம்மைப்போல் ஒருவரையோ அனுப்பினாரா? இல்லவே இல்லை. அவர்தாமே இழந்துபோன தம்முடைய குமாரனை மீட்கும் பொருட்டு வந்தார். தேவன் தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தை யாரிடத்திலும் ஒப்படைக்கவில்லை. அவரே மாம்சத்தில் வந்து நமது மத்தியிலே வாசம் பண்ணி நம்மை அவருக்கென்று மீட்டுக் கொண்டார். நாம் `தேவனுடைய இரத்தத்தினால் மீட்கப்பட்டோம். பாவத்தைப் போக்குவதற்காக நித்திய பிதா அழிந்துபோகும் சரீரத்தில் வாசம் பண்ணினார். அவருடைய இரத்தத்தைச் சிந்தி அதனோடு திரையின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கென அவர் ஆட்டுக் குட்டியானார். தேவனுடைய இரத்தம் குற்றமற்றதாயிருக்கிறபடியால், அது சிந்தப்பட்டதன் மூலம், பாவத்தின் கட்டுகளினின்றும் வல்லமையினின்றும் நமக்குப் பூரண விடுதலை கிடைக்கிறது. ஆகையால் இனி நம்மை யாரும் குற்றப்படுத்த முடியாது. `தேவன் தெரிந்து கொண்டவர்கள் மேல் குற்றஞ் சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்....’ (ரோமர் 8:33-34). ஆம், அவருடைய மரணம் நமக்கு இரத்தத்தைக் கொடுத்தது. அந்த இரத்தம் நம்மைப் பாவத்தினின்று விடுதலையாக் கினபடியால் நாம் குற்றமற்றவர்களாயிருக்கிறோம். மனிதனின் வார்த்தைகளுக்குக் செவிகொடுக்காதீர்கள். தேவனுடைய வார்த்தையை மாத்திரம் சிந்தனை செய்யுங்கள். நீங்கள் இரத்தத்தினால் விடுதலையாக்கப் பட்டிருக்கிறீர்கள். பாரம்பரியத்தினாலும், பிரமாணங்களினாலும், ஸ்தாபனங் களினாலும் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் இருங்கள். வார்த்தையின் வல்லமையைப் புறக்கணித்து, இயேசு இரட்சித்து, சுகமாக்கி, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரப்புகிறார் என்னும் சத்தியத்தை மறுதலிப்பவர்களுக்குச் செவி சாய்த்துச் சோரம் போகாதீர்கள்! நீங்கள் அவருடைய சொந்த இரத்தத்தினால் விடுதலையாக்கப்பட்டு அவரில் சுயாதீனமாயிருக்கிறீர்கள். நீங்கள் இன்னமும் பிரமாணங்களிலும் ஸ்தாபனங்களிலும் நம்பிக்கை வைத்திருந்தால், வசனத்தின் பேரிலுள்ள விசுவாசத்தை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்பது தெளிவாகிறது. ராஜாக்களும் ஆசாரியர்களும் வெளி 1:6. `... தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக, ஆமென்’. `நம்மை..... ஆக்கினார்’ சில சத்தியங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாயிருக்கிறது. அவைகளில் இது ஒன்றாகும். அவர் நம்மை ஆக்கினார். நம்முடைய இரட்சிப்பு கர்த்தருடைய கிருபையால் உண்டாகிறது. அவர் நம்மை ஒரு நோக்கத்தோடு மீட்டார். ஒரு நோக்கத்தோடு நம்மைக் கிரயத்திற்கு வாங்கினார். இப்பொழுது நாம் ஆவிக்குரிய ராஜாக்கள். அவர் சிங்காசனத்தில் வீற்றிருந்து அரசாட்சி செய்யும் காலத்தில் நாமும் அவரோடு கூட இவ்வுலகத்தை அரசாளுவோம். ஆனால் இப்போது ஆவிக்குரிய ராஜாக்களாக ஆவிக்குரிய ராஜ்யத்தை அரசாட்சி செய்கிறோம். `அல்லாமலும் ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன் மூலமாய் மரணம் ஆண்டு கொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே’ (ரோமர் 5:17). `இருளின் அந்தகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தின வருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்’ (கொலோ 1:13). இப்பொழுதே நாம் கிறிஸ்துவோடு அரசாண்டு, பாவம், உலகம், மாம்சம், பிசாசு இவைகளின் மேல் அதிகாரம் செலுத்துகிறோம். கிறிஸ்து நமக்குள் வாசம் பண்ணி தம்முடைய சித்தத்தின்படி எல்லாவற்றையும் செய்கிறபடியால், நாம் அவரையே வெளிப்படுத்தி அவருடைய துதியையும் மகிமையையும் உலகத்திற்குக் காண்பிக்கிறோம். ஆம், இப்பொழுதே இயேசுகிறிஸ்துவோடு உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறோம் (எபே 2:7). நம்மை ஆசாரியர்களுமாக்கினார்’. பரிசுத்தமாக்கப்பட்ட உதடுகளின் மூலம் பரிசுத்த ஸ்தோத்திர பலியை ஏறெடுப்பதாலும், நம்முடைய ஜீவியத்தைச் சுகந்த வாசனையான பலியான அவருக்குச் செலுத்துவதாலும், ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொண்டு, மற்றவர்களின் இரட்சிப்புக் கென்று நாம் பரிந்து பேசி விண்ணப்பம் செய்வதாலும், அவருக்கு ஆசாரியர் களாகிறோம். அதனால்தான் இவ்வுலகத்தின் போக்கிலே நாம் கவனம் செலுத்துவதில்லை. நற்கிரியைகளைச் செய்ய வைராக்கியமுள்ள கூட்டத்தாராய் நாம் இருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் புதிதாகச் சிருஷ்டிக்கப்பட்டு நம்முடைய பிதாவாகிய தேவனுக்குப் புத்திரரா யிருக்கிறோம். வரப்போகும் தேவன் வெளி 1:7. `இதோ மேகங்களுடனே வருகிறார். கண்கள் யாவும் அவரைக் காணும். அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்’. `அவர் வருகிறார்’. இயேசு வருகிறார். தேவன் வருகிறார். தீர்க்கதரிசி வருகிறார். ஆசாரியரும் ராஜாவும் வருகிறார். எல்லாவற்றிற்கும் எல்லா மாயிருப்பவர் வருகிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும். அவர் வருகிறார். மறுரூப மலையின்மேல் தேவனுடைய வல்லமையால் சூழப்பட்டு அவர் வஸ்திரம் உறைந்த மழையிலும் வெண்மையான அதே நிலையில் மகிமையின் மேகங்களோடு வருகிறார். கண்கள் யாவும் அவரைக் காணும். அப்படியெனில் இது இரகசிய வருகையைக் (RAPTURE) குறிப்பதல்ல. இரகசிய வருகையைப் பரிசுத்தவான்கள் மாத்திரம் அறிவர். இது தமக்கு உரிமையான உலக அரசாட்சியை அவர் கைப்பற்ற வரும் தருணமாகும். அப்பொழுது தங்களுடைய பிரமாணங்களாலும் ஸ்தாபனங்களின் போதனைகளாலும் அவரைக் குத்தினவர்கள் அவரை நோக்கிப் புலம்புவர். எல்லா ஜனங்களும் வார்த்தையாகிய இயேசுவைக் காணும்போது பயத்தினால் ஒலமிடுவார்கள். இந்தச் சம்பவத்தைப் பற்றி சகரியா 2500 வருடங்களுக்குமுன் தீர்க்கதரிசனம் உரைத்தார். இன்னும் சிறிது காலத்திற்குள் அது நிறைவேறும். `அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன். நான் தாவீது குடும்பத்தாரின் மேலும் எருசலேமின் குடிகளின் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து ....’ (சகரியா 12:9-10). புறஜாதியாரின் காலம் முடிந்தவுடனே சுவிசேஷம் யூதர்களிடத்தில் திரும்பிச் செல்லும் இக்காலத்தில் சுவிசேஷம் யூதர்களிடத்தில் செல்ல ஆயத்தமாயிருக்கிறது. நம்முடைய காலத்தில் நடக்கபோகும் ஒரு மகத்தான சம்பவத்தை நான் கூற விரும்புகிறேன். இதைக் குறித்து `வெளிப்படுத்தின விசேஷம்’ 11-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தீர்க்கதரிசிகளான மோசேயும் எலியாவும், இரண்டு சாட்சிகளாக யூதர்களுக்குச்சுவிசேஷத்தைக் கொண்டு செல்வர். இது நிறைவேறுவதற்கென எல்லாம் ஒழுங்காயிருக்கின்றது. யூதர்கள் புறஜாதிகளுக்குச் செய்தியைக் கொண்டு சென்றதுபோல இப்பொழுது புறஜாதிகள் இச்செய்தியை யூதர்களுக்குக் கொண்டுசெல்வர். அதன் பின்பு எடுத்துக்கொள்ளப்படுதல் (RAPTURE) உண்டாகும். வெளிப்படுத்தின விசேஷத்திலும் சகரியா தீர்க்கதரிசனப் புத்தகத்திலும் கூறப்பட்ட இச்சம்பவங்கள் உபத்திரவ காலத்திற்குப் (TRIBULATION) பிறகு சம்பவிக்கும். சபையின் முதற்பேறானவர்கள் உபத்திரவ காலங்களில் பங்கு கொள்வதில்லையென்று வேதம் போதிக்கிறது. அச்சமயத்தில் தேவன், புறஜாதிகளின் மேல் பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றின அதே ஆவியை, இஸ்ரவேல் குடும்பத்தாரின் மேல் ஊற்றுவார். `அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறது போல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறது போல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். அந்நாளிலே மெகிதோன் பட்டணத்து பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரியதாயிருக்கும். தேசம் புலம்பிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்...’ (சகரியா 12:10-12). இயேசுகிறிஸ்து மகிமையின் மேகங்களோடு வரும்போது ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியாகப் புலம்பும். அவரைக் குத்தின யூதர்கள் அவரை நோக்கிப் பார்ப்பார்கள். அவர்கள் `என் கைகளில் இருக்கிற வடுக்கள் ஏது’ என்று கேட்டால் அவர், `என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள்’ என்பார் (சகரியா 13:6). அவரை மேசியாவாகப் புறக்கணித்த யூதர்களும், அவரை இக்காலத்து இரட்சகராகப் புறக்கணித்து எடுத்துக் கொள்ளப்படுதலில் விடப்பட்ட புறஜாதிகளுக்கும் அது துக்கத்தின் காலமாயிருக்கும். அங்கு அழுகையும் ஓலமும் உண்டாயிருக்கும். உறங்கின கன்னிகைகள் ஓலமிடுவார்கள். தங்களுடைய தேகங்களாகிய விளக்குகளின் பரிசுத்த ஆவியாகிய எண்ணெயைப் பெற்றுக்கொள்ள மறுத்தவர்களை இக்கன்னிகைகள் குறிக்கின்றனர் `கன்னிகை’ என்னும் பதம் நன்னடத்தையுடைய பெண்ணைக் குறிக்கும். ஆகையால் இவர்களெல்லாம் நல்ல மக்கள்தான். ஆனால் அவர்களுக்குப் பரிசுத்த ஆவி இல்லாததால் அழுகையும் பற்கடிப்புமுள்ள ஸ்தலத்தில் தள்ளப்படுவர். மேற்கூறியவைகளெல்லாவற்றிற்கும் ஆதியாகமத்திலி ருந்து உதாரணம் காட்டலாம். யோசேப்பு எகிப்தில் தன்னுடைய சதோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகிறான். அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக் கொண்டிருக்கக் கூடாமல், என்னைவிட்டு வெளியே யாவரும் போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுததுகையில் ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து, நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்க முற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக் கூடாமல் இருந்தார்கள். அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி. என்கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப் போனார்கள்; அப்பொழுது அவன், நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப் போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம். ஜீவரட்சணை செய்யும் படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்’ (ஆதி 45:1-7). இச்சம்பவத்தைச் சகரியா 12ம் அதிகாரத்திலுள்ள சம்பவத்தோடு அழகாக ஒப்பிடலாமல்லவா? யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்தி அவர்களுடைய செயல்களை மன்னித்தது போலவே இயேசுவும் தம்முடைய சகோதரருக்குத் தம்மை வெளிப்படுத்தி அவர்களுடைய பாவங்களை மன்னிப்பார். யோசேப்பின் சகோதரர் அவனைக் கண்டு பயந்ததுபோல, இஸ்ரவேலரும் இயேசுவைக் கண்டு பயத்தால் புலம்புவார்கள். யோசேப்பு வாலிபனாயிருந்தபோது, அவனுடைய சகோதரர் அவனை வெறுத்தனர். அவன் தரிசனங்களையும், சொப்பனங்களையும் கண்டு அவைகளின் அர்த்தத்தை விவரித்ததைக் கண்டு அவனை அவர்கள் விரோதித்தனர். அவனுக்குள்ளிருந்தவரத்தை மாத்திரமே யோசேப்பு வெளிப்படுத்தினான். அல்லாமல், அவனுடைய சகோதரர் அவனைப் பகைப்பதற்கு வேறொரு காரணமுமில்லை. ஆனால் யோசேப்போ தன் பிதாவால் சிநேகிக்கப்பட்டான். அவனுடைய பிதா ஒரு தீர்க்க தரிசியாயிருந்தபடியால், நடந்த எல்லாவற்றையும் அவன் புரிந்துகொண்டான். இச்சம்பவம் இயேசு கிறிஸ்துவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. தேவனாகிய பிதா, குமாரனில் அன்பு கூர்ந்தார். இயேசு பிணியாளிகளைக் சொஸ்தப்படுத்தி, அநேக அதிசயங்களைச் செய்து, வரப்போகும் காரியங்களை முன்னறிவித்து, தரிசனங்களைக் கண்டு அவைகளின் அர்த்தத்தையும் தெரியப்படுத்தினதினால் அவருடைய சகோதரராகிய பரிசேயரும் வேத பாரகரும் அவரை வெறுத்தனர். அல்லாமல், அவரைப் பகைப்பதற்கு அவர்களுக்கு வேறொரு காரணம் எதுவும் உண்டாகவில்லை. யோசேப்பின் சகோதரரைப் போன்று இவர்களும் இயேசுவைக் காரணமின்றி வெறுத்தனர். யோசேப்பின் சகோதரர்கள் அவனைக் குழியில் தள்ளி, அவனுடைய தகப்பனாகிய யாக்கோபு கொடுத்தப் பலவர்ண அங்கியை இரத்தத்தில் தோய்த்து, அவன் துஷ்ட மிருகங்களால் பீறுண்டு போயிருக்கலாம் என்று யாக்கோபை நினைக்கச் செய்தனர். ஆனால் உண்மையிலே அவர்கள் யோசேப்பை அடிமை வியாபாரிகளுக்கு விற்றுப் போட்டனர். அவர்களும் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டு சென்றபோது, பார்வோனுடைய பிரதானி அவனை விலைக்கு வாங்கினான். பிரதானியின் மனைவி, யோசேப்பு தன்னோடு சயனிக்க மறுத்ததால், அவன் பேரில் கள்ளக் குற்றஞ்சாட்டி அவனை நியாயமின்றி சிறையிலடைத்தாள். ஆனால் கொஞ்சகாலம் கழித்து, அவனுடைய தீர்க்கதரிசன வரத்தைக் குறித்துப் பார்வோன் கேள்விப்பட்டான். அவனுடைய சொப்பனங்களை யோசேப்பு விளக்கி அர்த்தம் கூறினபடியால், தன்னுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் கௌரவத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தான். அதன் காரணமாக பார்வோனைக் காண விருப்பமுள்ளவர் முதலில் யோசேப்பைக் கண்டு அவன் மூலமாய்தான் பார்வோனைக் காணமுடியும். யோசேப்புக்கு எகிப்திலிருந்த ஜீவியம் இயேசு கிறிஸ்துவுக்குப்பூரண முன்னடையாளமாயிருக்கிறது. பிரதானியின் வீட்டில் அவன் அநியாயமாய் குற்றஞ் சாட்டப்பட்டு, காரணமின்றி சிறைப்படுத்தப்பட்டான். இயேசுகிறிஸ்துவும் அநியாயமாய் குற்றஞ்சாட்டப்பட்டு, சிலுவையின் மரணத்தினால் தண்டிக்கப்பட்டார். சிறையில் அவனோடு வாசம் செய்த சுயம்பாகி, பானப்பாத்திரக்காரன் இவர்களின் சொப்பனங்களின் அர்த்தத்தை யோசேப்பு தெரிவித்தான். அவன் கூறியவாறே சுயம்பாகி தூக்கிலிடப் பட்டு, பானப்பாத்திரக்காரன் காக்கப்பட்டான். கிறிஸ்துவும் தேவனாலும், மனுஷனாலும் புறக்கணிக்கப் பட்டு சிலுவையிலறையப்பட்ட போது, அவருடைய இருபக்கங்களிலும் இரு கள்ளர்கள் அறையப்பட்டனர். அவர்களில் ஒருவன் நித்திய ஜீவனைப் பெற்றான். மற்றவனோ ஆவிக்குரிய பிரகாரமாய் மரித்துப்போனான். இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டபின், பரலோகத்திற்கு உயர்த்தப்பட்டு, யெகோவாவின் மகத்தான ஆவியின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அதன் காரணமாக இயேசுகிறிஸ்துவின் மூலமேயன்றி யாரும் தேவனிடத்தில் வர இயலாது. தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே. தேவனிடத்தில் சேருவதற்கு அவர் மாத்திரமே நமக்கு அவசியம். மரியாளோ, மற்ற பரிசுத்தவான்களோ நமக்கு அவசியமில்லை. யோசேப்பு எகிப்தில் செய்த அனைத்தும் அனுக்கிரகமாயிருந்தது. பிரதானியினிடத்தில் அவன் செய்த பணிவிடை ஆசீர்வதிக்கப்பட்டது. அவனைக்கொண்டு சிறையும் ஆசீர்வதிக்கப்பட்டது. அதேபோன்று இயேசு மறுபடியும் வரும்போது பாலைவனம் ரோஜாப் புஷ்பங்களைப் போல் மலரும், அவரே `செழிப்பின் குமாரன்’ (SON OF PROSPERITY). யோசேப்பின் காலத்திலுண்டாயிருந்த செழிப்பைப் போன்று வேறெந்த காலத்திலும் உண்டாயிருந்ததில்லை. ஆம், உலகம் இதுவரை கண்டிராத ஒரு செழிப்பான காலம் வரப்போகிறது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சொந்த அத்திமரத்தின் கீழ் உட்கார்ந்த வண்ணமாய், அவருடைய சமூகத்தில் நித்தியகாலமாய் சஞ்சரித்து மகிழ்வோம். `அவருடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும், அவருடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு’ (சங். 16:11) கர்த்தருக்கு ஸ்தோத்திரம். யோசேப்பு எங்கு போனாலும், அவனுடைய வருகையை அறிவிக்க எக்காளம் ஊதுவர். அப்பொழுது ஜனங்கள் `யோசேப்புக்கு முன்பாக முழங்கால்களை முடக்குங்கள்’ என்று சத்தமிடுவார்கள். எக்காளம் ஊதின சத்தத்தைக் கேட்டவுடனே, ஜனங்கள் தாங்கள் செய்த எந்த வேலையையும் உடனே விட்டுவிட்டு அவர்களுடைய முழங்கால்களை யோசேப்புக்கு முன் முடக்குவார்கள். அதுபோன்று, வரப்போகும் ஒரு நாளில், கர்த்தரின் எக்காளச் சத்தம் தொனிக்கும்போது, எல்லாம் அமைதியாக நிற்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். காலையும் நித்திய பிரகாசத்துடன் உதிக்கும். `ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி இயேசுவின் நாமத்தில் வானோர், பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்’ (பிலி. 2:9-11) என்று கூறியவண்ணமாக முழங்கால் யாவும் கிறிஸ்துவுக்கு முன்பாக முடங்கும். யோசேப்பின் சம்பவத்திலிருந்து வேறொரு மகிமையான வெளிப்படுத்துதல் நமக்குக் கிடைக்கிறது. எகிப்திலே யோசேப்பு புறஜாதி பெண்ணை மணந்து, அவள் மூலம் எப்பிராயீம், மனாசே என்னும் இரு குமாரர் அவனுக்குப் பிறந்தனர். இவ்விருவரையும் ஆசீர்வதிக் கும்படி யோசேப்பு தன் தகப்பனிடத்தில் கூறினான். ஆசீர்வாத்திற்கென்று முதற்பிறந்த மனாசேயை யாக்கோபின் வலது கரத்திற்கு நேராகவும், எப்பிராயீமை அவன் இடது கரத்திற்கு நேராகவும் யோசேப்பு நிறுத்தினான். ஆனால் யாக்கோபோ, மனமறிய தன் வலது கையை இளைவனான எப்பிராயீமின் தலைமேலும், இடது கையை மூத்தவனான மனாசேயின் மேலும் வைத்தான். அப்பொழுது யோசேப்பு, `என் தகப்பனே, அப்படியல்ல, மூத்தவனின் தலையில் வலது கையை வைக்க வேண்டும்.’ என்றான். அதற்கு யாக்கோபு `கர்த்தரே இவ்விதமாய் என் கைகளை மாற்றினார்’ என்றான். இயேசுகிறிஸ்துவின் சிலுவையின் மூலம் (யாக்கோபு ஆசீர்வதிக்கையில் அவன் கைகள் குறுக்காக வைக்கப்பட்டு சிலுவையின் அடையாளம் உண்டானது) இளையவனான புறஜாதியாருக்கு அளிக்கப்பட்டது. ஆம், ஆசீர்வாதம் சிலுவையின் மூலம் தான் கிடைக்கும். `மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப் பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தை நாம் விசுவாசித்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று’ (கலா 3:13-14). ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் சிலுவையின் மூலம் புறஜாதிகளுக்கு உண்டாயிற்று. யூதர்கள் சிலுவையைப் புறக்கணித்ததால், இயேசு தமக்கென்று புறஜாதியான மனையாட்டியைத் தெரிந்து கொண்டார். முதலில் யோசேப்பின் சகோதரர் எல்லாரும் எகிப்துக்கு வரவில்லை. எல்லாரும் வரும்படி யோசேப்பு வற்புறுத்தினான். கடைசியில் இளைய சகோதரனான பென்யமீனும் கொண்டு வரப்பட்டான். தன்னுடைய சொந்தச் சகோதரனான பென்யமினைக் கண்டபோது யோசேப்பின் இருதயத்தில் அனல் மூண்டது. எல்லாச் சகோதரருக்கு முன்பாகவும் யோசேப்பு தன்னை வெளிப்படுத்தினான். இவ்வளவு காலம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு இப்பொழுது பாலஸ்தீனாவுக்குத் திரும்பிச் சென்ற இஸ்ரவேலரை நம்முடைய யோசேப்பாகிய இயேசு காணும்போது, அவருடைய இருதயத்தில் அனல் மூளும். உலகத்தின் எல்லாப் பாகங்களிலும் சிதறிக் கிடந்து இப்பொழுது இரட்சிப்படைவதற்கென பாலஸ்தீனாவுக்குத் திரும்பிச் சென்ற 1,44,000 இஸ்ரவேலருக்கு இச்சிறு பென்யமீன் அடையாளமாயிருக்கிறான். இவர்களெல்லாரும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருப் பார்கள். அவரைச் சரியாக அறிந்து கொள்வதே நித்திய ஜீவன் `இவரே நம்முடைய தேவன். இவருக்காகக் காத்திருந்தோம்’ (ஏசாயா 25:9) என்று அவர்கள் கூறுவார்கள். அதன் பிறகு தாங்கள் குத்தின அவரை நோக்கிப் பார்த்து `உம்முடைய கைகளிலிருக்கிற வடுக்கள் எவ்விதம் உண்டாயின’ (சகரியா 13:6) என்று கேட்டுப் புலம்புவார்கள். ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியே துக்கத்தின் மிகுதியால் புலம்பும். இயேசுகிறிஸ்து தம்முடைய சகோதரருக்கு அவரை வெளிப்படுத்தும்போது, புறஜாதியின் சபை எங்கேயிருக்கும்? யோசேப்பு தன்னை சகோதரருக்கு வெளிப்படுத்தும் முன்பு `யாவரையும் என்னை விட்டு வெளியே போகப் பண்ணுங்கள்’ (ஆதி 45.1) என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் யோசேப்பின் புறஜாதியான மனைவியும், இரண்டு குமாரரும் யோசேப்பின் அரண்மனைக்குச் சென்று அங்கு மறைக்கப்பட்டிருந்தனர். ஆம், அதேபோன்று புறஜாதியான மனையாட்டி சபையும் இரகசிய வருகையில் (RAPTURE) அரண்மனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். உபத்திரவ காலத்திற்கு முன்பு மனையாட்டி பூலோகத்திலிருந்து எடுக்கப்பட்டு ஆகாயத்தில் அவருடைய மணவாளனைச் சந்திப்பாள். கர்த்தருடைய உக்கிரக் கோபம் மூன்றரை வருஷகாலம் இப்பூமியில் ஊற்றப்படும்போது, அவள் ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்தில் பங்கு கொண்டிருப்பாள். அதன் பின்புஇயேசுகிறிஸ்து, மனையாட்டியைத் `தன்னுடைய பிதாவின் வீட்டில்’ விட்டுவிட்டு, அவருடைய சகோதரருக்குத் தம்மை அறிமுகப்படுத்தத் திரும்பி வருவார். அதே சமயத்தில்யூதர்கள் ரோமாபுரியோடு செய்துகொண்ட அந்திக்கிறிஸ்துவின் உடன்படிக்கை முறிவடையும். அப்பொழுது ரோமாபுரியும் அவளைச் சார்ந்தவர்களும் தேவனுக்குப் பயந்து அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும் யூதரெல்லாரையும் அழிக்கத் தங்கள் சேனைகளை அனுப்புவர். பட்டினத்தை அழிக்கச் சேனைகள் புறப்படும் போது, மனுஷகுமாரனின் வருகையின் அடையாளம் வானத்தில் காணப்படும். அவர் தம்முடைய வல்லமையான சேனைகளோடு புறப்பட்டு வந்து இப்பூலோகத்தை அழித்துக் கொண்டிருந்தவர்களை அழித்துப் போடுவார். விரோதி முறியடிக்கப்பட்ட பின்பு, இயேசு கிறிஸ்து தம்மை 1,44,000 இஸ்ரவேலருக்கு வெளிப்படுத்துவார். அவருடைய இரட்சிப்பின் மகத்தான கிரியைகளை அவர்கள் கண்டதனால், அவருடைய வல்லமையை நன்கு உணர்வார்கள். அவருடைய காயங்களைக் கண்டு, அதுவரை அவரைப் புறக்கணித்ததன் காரணமாக, பயத்தோடும் நடுக்கத்தோடும் அவரைக் கண்டு புலம்புவார்கள். இவ்வாறே யோசேப்பின் சகோதரரும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றெண்ணி, யோசேப்புக்கு முன்பாகப் பயந்து நின்றார்கள்.யோசேப்பு அவர்களை நோக்கி `நீங்கள் பயப்படவேண்டாம். ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்’ என்றான். அதுபோன்று இயேசுவும் இஸ்ரவேலருக்குச் சமாதானம் கூறி அவர்களில் அன்பு கூறுவார். யூதர்கள் இயேசுகிறிஸ்துவைப் புறக்கணித்ததன் காரணமென்ன? கர்த்தரே இதற்குக் காரணமாயிருந்தார். புறஜாதியான மனையாட்டியைத் தெரிந்துகொள்ளுவதற்கு இது ஒரு வழியே உண்டாயிருந்தது. புறஜாதி சபையின் ஜீவனைப் பாதுகாப்பதற்கென அவர் சிலுவையில் மரித்தார். மேற்கூறிய 1,44,000 இஸ்ரவேலரும் மனையாட் டிகளல்ல. இவர்கள் கற்புள்ளவர்களென்றும், ஆட்டுக் குட்டியானவர் எங்கு சென்றாலும் அவரைப் பின்பற்றுகிறவர்களென்றும் வெளி 14:4 கூறுகிறது ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாத இவர்கள் அண்ணகர்கள் (மத் 19:2). அண்ணகர்கள் மணவறையைக் காப்பவர்கள்; இவர்கள் வேலையாட்கள். சிங்காசனத்தில் உட்காராமல் இவர்கள் சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள் என்பதைக் கவனிக்கவும். ஆகையால் இவர்கள் மணவாட்டியல்ல. ஆயினும் மகிமையான ஆயிரம் வருஷ அரசாட்சியில் இவர்கள் பங்கு கொள்வார்கள். இஸ்ரவேலில் மீதியானவர்கள் அன்பினால் தேவனோடு இணைக்கப்பட்டு; விரோதிகள் அழிக்கப்பட்ட பிறகு, தேவன் தம்முடைய மணவாட்டியோடும் ஊழியக்காரரோடும் பூமியில் ஆயிரம் வருஷகாலம் உல்லாசமாகக் கழிப்பதற்காக, அவருடைய பரிசுத்த பர்வதமாகிய புதிய ஏதேன் தோட்டத்தை ஆயத்தப் படுத்துவார். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் ஆயிரம் வருஷங்களைக் கழிக்காததனால், பிந்தின ஆதாமாகிய இயேசுவும் அவருடைய ஏவாளாகிய உண்மையான திருச்சபையும் ஆயிரம் வருஷ காலம் புதிய ஏதேன் தோட்டத்தில் சஞ்சரித்து தேவனுடைய எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவர். வேதத்தில் ஆதியில் கூறப்பட்ட சம்பவங்கள் எங்ஙனம் மறுபடியும் சம்பவிக்கிறதென்று பாருங்கள். யோசேப்பையும் அவனுடைய சகோதரரையும் குறித்த சம்பவம் மறுபடியும் நிகழ்ந்தேறும் சமயம் வந்துவிட்டது. ஏனெனில் இயேசு சீக்கிரம் வரப்போகிறார். யோசேப்பின் சம்பவத்தின் மூலம் இந்தக் கடைசி காலங்களில் நடந்தேறும் ஒரு காரியத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். பென்யமீன் இல்லாதபோது, யோசேப்பு எபிரேயமொழியை நன்கு அறிந்திருந்தும், தன் சகோதரருடன் ஒரு மொழிப் பெயர்ப்பாளரின் உதவியைக் கொண்டு அந்நிய பாஷையில் பேசினான். புறஜாதிகளின் முதலாவது காலமாகிய பாபிலோனியரின் காலத்தில் மனுஷக் கைவிரல்கள் சுவற்றிலே அந்நிய பாஷையில் எழுதி அக்காலத்தின் முடிவை அறிவித்தன. அந்நிய பாஷைகள் பேசுவது அதிகமாயிருக்கும் இந்தக் காலமும், புறஜாதியாரின் காலமும் முடிவடைந்து தேவன் இஸ்ரவேலரிடத்தில் திரும்பிச் செல்கிறார் என்பதை அறிவிக்கிறது. அவர் சீக்கிரமாய் வருகிறார். அல்பாவும் ஓமெகாவும், தீர்க்கதரிசியும், ஆசாரியரும், ராஜாவும், எல்லாவற்றிற்கு எல்லாமாயிருப்பவரும், சேனைகளின் தேவனாகிய கர்த்தரும் சீக்கிரமாய் வருகிறார். உண்மையுள்ள ஒரே தேவனாகிய இயேசு கிறிஸ்துவே, அவ்வாறே சீக்கிரம் வாரும்! இரண்டாம் அத்தியாயம்: பத்மு தீவில் தரிசனம் THE PATMOS VISION வெளிப்படுத்தன விசேசம் 1: 9- 20 பத்மு தீவில் யோவான் வெளி 1:9. `உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன் பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான், தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும் பத்மு என்னும் தீவிலே இருந்தேன்’. யோவான் நாடு கடத்தப்பட்டு பத்மு தீவில் வாழ்ந்தபோது, அநேக தரிசனங்களின் முகாந்தரமாய் இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்பாட்டைப் பெற்றான். பத்மு தீவு என்னப்பட்டது ஏஜியன் கடற்கரையிலிருந்து (AEGEAN SEA) 30 மைல் அப்பாலுள்ளது. கற்பாறை நிறைந்ததும், விஷஜந்துக்களால் பீடிக்கப்பட்ட இத்தீவை ரோமன் சாம்ராஜ்யம் வியாபாரத்திற்கென்று உபயோகிக்காமல், மரணத்துக் கேதுவான குற்றஞ் செய்தவர்களையும், அரசியலில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் சிறைப்படுத்தி வந்தது. யோவான் ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது உபத்திரவத்திற்கு உடன் பங்காளனான சகோதரன் என்று அவனை அழைத்துக் கொள்கிறான். இதை எழுதும் சமயத்தில் ஆதித் திருச்சபையின் கிறிஸ்தவர்கள் சொல்லொணாதத் துன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். மக்கள் கிறிஸ்துவ மார்க்கத்திற்கு விரோதமாய் எழும்பி, அம்மார்க்கத்தை இகழ்ந்து, அதில் பற்றுக்கொண்டவர்கள் அனைவரையும் சிறையிலடைத்து, பின்னர் கொலை செய்தனர். அவர்களைப் போன்று யோவானும் தேவவசனத்தினிமித்தமும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும் சிறைப்படுத்தப்பட்டான். அவன் சிறையிலிருந்தபோது அதிகாரிகள் அவனை எண்ணெயில் முழுக்கி இருபத்துநான்கு மணி நேரம் எண்ணெயைக் கொதிக்க வைத்தனர். என்றாலும் யோவான் மரிக்கவில்லை. இதன் காரணமாய் கோபங்கொண்ட அதிகாரிகள் வேறு எவ்வகையிலும் யோவானைக் கொல்ல இயலாது என்று அறிந்து, அவன் மந்திரவாதி (WITCH) என்னும் குற்றத்தைச் சாட்டி, பத்மு தீவில் சிறைப்படுத்தினர். தேவன் அவனோடு கூட இருந்து, எபேசுபட்டினத்திற்குத் திரும்ப கிருபை செய்தார். அவன் மரணபரியந்தம் சபையின் மேய்ப்பனாக (PASTOR) இங்கு பணியாற்றினான். யோவானுக்கு இரண்டு வருஷ காலமாய் (கி.பி. 95-96) தரிசனங்கள் கிடைத்தன. வேதத்தில் கூறின எல்லாத் தரிசனங்களைக் காட்டிலும் இவன் கண்டவைகள் பிரசித்தி பெற்றவை. வெளிப்படுத்தின விசேஷம்’ முழுவதும் அடையாளங்களைக் கொண்டு (SYMBOLS) விவரிக்கப் பட்டிருப்பதால், இவைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாத அநேகர் இப்புத்தகத்தைக் குறைகூறுகின்றனர். அதுவுமின்றி இவைகளின் அர்த்தத்தைக் குறித்து வேறுபாடான எண்ணங் கொண்டவர் ஒருவரோடொருவர் தர்க்கிக்க முற்படுகின்றனர். எவ்வாறாயினும், இப்புத்தகம் தேவனுடைய அங்கீகாரம் பெற்று முத்திரையடிக்கப் பட்டிருக்கிறதனால், அது உண்மையுள்ளதும் விலையேறப் பெற்ற புத்தகம் என்று நாம் அறிகிறோம். இதை வாசிப்பவர்களும், கேட்பவர்களும் பாக்கியவான்கள். அவர்கள் அதிக பலனை அடைவார்கள். கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளாதல் வெளி 1:10. `கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளச் சத்தம் போன்ற பெரியதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்’ `நான் ஆவிக்குள்ளானேன்’ என்னும் வாக்கியம் கிறிஸ்தவ ஜீவியத்தின் முழுமையையும் எடுத்துக் காட்டுகிறது. நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ வேண்டுமாயின் அவருடைய ஆவிக்குள்ளாக வேண்டும். யோவான் தன்னுடைய ஆவிக்குள்ளாக இருப்பதாக இங்கு குறிக்கவில்லை. அவ்வாறாயின், அவன் தரிசனங்களைக் கண்டிருக்க முடியாது. அவன் கர்த்தருடைய ஆவிக்குள்ளாக இருந்தபடியால், தரிசனங்களைக் காணமுடிந்தது. ஆம், நம்மோடும் தேவ ஆவியானவர் தங்கியிருக்க வேண்டும். இல்லையெனில், நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வீணாகும். `நான் ஆவியோடு பாடுவேன், நான் ஆவியில் ஜெபம் செய்வேன், நான் ஆவியில் ஜீவிப்பேன்’ என்பதாய் பவுல் கூறுகிறான். என்னிடத்தில் நன்மை வரவேண்டுமாயின், அது ஆவியினாலே எனக்கு வெளிப்படுத்தப்பட்டு, தேவனுடைய வசனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு, அது கொடுக்கும் பலனால் (RESULTS) அது நன்மையென்று அறியப்படவேண்டும். இயேசு கிறிஸ்துவினிட மிருந்து இம்மகத்தான வெளிப்பாடுகளை நேரடியாகப் பெற யோவான் நிச்சயமாய் ஆவிக்குள்ளாக வேண்டியிருந்ததுபோல நாமும் அவர் கொடுத்த வெளிப்பாடுகளின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அவருடைய வார்த்தையின் பிரகாரம் ஜீவிக்க வேண்டுமாயின், யோவானுக்குள்ளிருந்த ஆவியே நமக்குள்ளும் இருக்க வேண்டும். ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். `நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்’ (அப் 2:38) என்ற வேத வாக்கியத்தை அநேகர் படித்திருக்கின்றனர். படித்துவிட்டு அதன் அர்த்தத்தை உணராமல் துரிதமாய் அடுத்த வசனத்திற்குச் சென்று விடுகின்றனர். ஆனால் ஆவிக்குள்ளாகி, இந்த வாக்கியத்தைப் படிப்பார்களாயின், பரிசுத்த ஆவியைப் பெறவேண்டுமெனில், மனந்திரும்பிக் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்றும், அவ்வாறு செய்யும்போது தேவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பித் தம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார் என்றும் மக்கள் அறிவர். அவர்கள் ஆவிக்குள்ளானால் வசனம் கூறுவது சரிவர நிறைவேறும் அவருடைய ஆவியின்மூலம் வெளிப்படுத்துதல் கிடைக்கத் தேவனிடத்தில் வேண்டுதல் செய்யுங்கள். வெளிப்படுத்தலுக்கென்று தேவனிடத்தில் மன்றாடுவதே நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தின் முதல் படியாகும். வசனத்தின் வெளிப்படுத்துதல் நமக்கு அவசியம் என்பதை வலியுறுத்த வேறொரு உதாரணம் கூற விரும்புகிறேன். நாம் வியாதியினின்று சுகமாக வேண்டுமென்று வைத்துக் கொள்ளுவோம். சுகமடைய தேவ வசனம் கூறும் முறையென்ன? இதைக் குறித்த வேத வாக்கியத்தை ஆயிரம்முறை படித்திருக்கிறோம். படிக்கும்போது ஆவிக்குள் இல்லாததனால், அதன் அர்த்தம் நமக்குப் புலப்படுவதில்லை. அவ்வாக்கியத்தின் உண்மையான அர்த்தத்தை அறிய நாம் தேவனிடத்தில் வேண்டுதல் செய்ததுமில்லை. அவ்வாறு செய்திருப் போமாயின், அதன் அர்த்தத்தை அறிந்து அதற்கேற்ப மூப்பர்களை வரவழைத்து, அவர்களிடத்தில் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவர்களும் எண்ணெய் பூசி ஜெபம் செய்ய, நாம் சுகமடைந்திருப்போம். உடனே சுகம் கிடைக்காவிட்டாலும், சுகமாகுதல் தொடங்கிவிட்டது என்பதை அவருடைய ஆவியில் அறிவோம். தேவன் நிச்சயமாகத் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார். தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேற வேண்டுமாயின், நாம் ஆவிக்குள்ளாக வேண்டியது அவசியமாயிருக்கிறது. ஆவிக்குள்ளாகி அப்போஸ்தல ருடைய நடபடிகளின் புத்தகத்தைப் படியுங்கள், அப்பொழுது தேவன் உங்களுக்குச் செய்யும் காரியங்களை கவனியுங்கள். இவ்வுலகத்திலுள்ளவர்கள் உலகத்திலுள்ளவைகளின் ஆவியை எவ்வாறு பெற்றிருக்கின்றனர் என்று கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் விளையாட்டுப் பந்தயங்களிலும் நடனங்களிலும் பங்கு பெறும்போது, சிரத்தையில்லாமல், ஜீவனற்றவர்களைப் போலிருப்பதை நீங்கள் காணமுடியாது. அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, அதிகக் கவனம் செலுத்தி, அவைகளோடு ஒரு பாகமாக ஆகிவிடுகிறார்கள். தேவனுடைய வசனத்தில் கவனம் செலுத்தி அதோடு ஒரு பாகமாகும் கிறிஸ்தவர்களை இவர்கள் வெறுத்து மதவைராக்கியம் கொண்ட பயித்தியக்காரர் (FANATICS) என்றெல்லாம் கேலி செய்கின்றனர்; அவர்கள் மேலுள்ள வெறுப்பைக் காண்பிக்க எவைகளைச் செய்யவும் தயங்கமாட்டார்கள். இத்தகைய சுபாவம் பிசாசினால் கொடுக்கப்பட்டது என்பதை நாம் உணர்ந்தவர்களாய், இந்நிந்தைகளை அலட்சியப்படுத் தாமல், உண்மையான ஆவிக்குரிய ஆராதனையில் ஈடுபடுவோமாக. நம்முடைய ஆவி பரிசுத்தமாயும், உண்மையாயும், தெளிவுள்ளதாயும், எப்பொழுதும் தேவனில் களிகூறுகிறதாயும் இருக்கிறது. உலகத்திலுள்ளவர்கள் இவ்வுலகத்தின் உல்லாசங்களில் களிகூறுவது போல் கிறிஸ்தவர்களும் கர்த்தருக்குள் அதிமாகச் சந்தோஷப்பட்டுக் களிகூறவேண்டும். கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர்களல்லாதவரும் மானிடரே, இருவருக்கும் உணர்ச்சிகள் உண்டு. ஆனால் அவையிரண்டும் வித்தியாசப்பட்டது. கிறிஸ்தவர்களின் இருதயமும் உணர்ச்சியும் மகிமையின் கர்த்தரிலும் அவருடைய அன்பிலும் சார்ந்திருக்கிறது. உலகத்துக்குரியவர்களோ மாம்சத்தின் கிரியைகளினால் சந்தோஷத்தை அடைகின்றனர். யோவன் கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானான் என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வசனத்தின் உண்மையான அர்த்தத்தை மக்கள் சரிவர அறிந்து கொள்ளாததால், அவர்களிடையே இது வித்தியாச பேதத்தை உண்டு பண்ணுகிறது. சிலர் சனிக்கிழமையைக் கர்த்தருடைய நாளான ஓய்வுநாள் என்று கருதுகின்றனர். மற்றும் சிலர் வாரத்தின் முதலாம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாளாக ஆசரிக்கின்றனர். யோவான் ஆவிக்குள்ளாகி தரிசனங்களைக் கண்ட இரண்டு வருஷக் காலத்தைக் `கர்த்தருடைய நாள்’ என்றும் அவன் குறிக்கும்போது இவ்விரு தினங்களும் முறையே எவ்வாறு கர்த்தருடைய நாளாக இருக்கமுடியும்? உண்மையாகச் சம்பவித்தது என்னவெனில், யோவான் ஆவிக்குள்ளாகி இனி வரப்போகும் கர்த்தருடைய நாளுக்குக் கொண்டு செல்லப்பட்டான். பிற்காலத்தில் வரப்போகும் ஒரு காலத்தைக் கர்த்தருடைய நாளென்று வேதம் குறிக்கிறது. அந்தக் காலத்தில் நிகழப்போகும் சம்பவங்களை யோவான் இப்பொழுது காண்கிறான். ஓய்வு நாளென்பது (SABBATH) தற்போது எதைக் குறிக்கிறது என்று சற்றுநேரம் சிந்திப்போம். புதிய ஏற்பாட்டின்படி, ஓய்வு நாளென்பது ஒரு நாளை ஆசரிப்பதைக் குறிப்பதல்ல என்று நாமறிவோம். சனிக்கிழமையையோ அல்லது வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையையோ ஓய்வு நாளாக ஆசரிக்க நாம் கட்டளை பெறவில்லை. ஓய்வு நாளின் உண்மையான அர்த்தம் `இளைப்பாறுதல்’ என்பதே. `யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால் (ஓய்வு நாள்) பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக் கமாட்டாரே. ஆகையால் தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் (ஓய்வுநாள் ஆசரிப்பது) இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில் அவருடைய இளைப் பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன்கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்’ (எபி 4: 8-10). `தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்தார்’ என்னும் இவ்வசனத்தின் கடைசிபாகம் மிகவும் முக்கியமானதாயிருக்கிறது. தேவன் உலகத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்து ஏழாம் நாளில் தம்முடைய கிரியைகளை முடித்து ஒய்ந்திருந்ததை நினைவுறுத்த, ஏழாம் நாளை ஓய்வுநாளாய் ஆசரிக்க இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டிருந்தார். ஒரே ஸ்தலத்தில் தங்கியவருக்கு ஓய்வு நாள் ஆசரிப்பின் கட்டளைகொடுக்கப்பட்ட போது, ஒரு பிரத்தியேக நாளை ஓய்வுநாளாக ஆசரிக்க அவர்களால் முடிந்தது. ஆனால் இன்றைக்கு உலகத்தின் எல்லாக் கண்டங்களிலுமுள்ள கிறிஸ்தவர்கள் ஒரே நாளை ஓய்வுநாளாக ஆசரிக்க இயலாது. ஏனெனில் உலகத்தின் ஒரு பகுதி இருட்டாயிருக்கும்போது மற்றைய பகுதி வெளிச் சமாயிருக்கும் என்பது எல்லாரும் அறிந்ததே. இதன் காரணமாக ஒவ்வொரு கண்டத்திலும் நாட்கள் வித்தியாசப்படும். ஓய்வுநாளின் உண்மையான அர்த்தமாகிய இளைப்பாறுதலைக் குறித்து வேதம் என்ன உரைக்கிறது என்று பார்ப்போம். `அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன்’ (எபி 4.10) என்னும் வாக்கு இளைப்பாறுதலில் பிரவேசிப்பதை மாத்திரமல்ல, அதில் எப்பொழுதும் தங்கியிருப்பதையும் குறிக்கிறது. அப்படியெனில் இது ஒரு நித்திய இளைப்பாறுதல் என்றும் அதற்கு ஏழாம் நாளாகிய ஓய்வுநாள் ஒரு அடையாளமாயிருந்ததென்பதையும் நாம் அறிய வேண்டும். `ஏழு’ என்னும் எண் பூரணத்தைக் குறிக்கும். எட்டாம் நாள் வாரச்சக்கரத்தில் `முதல்’ நாளாகி, இது இவ்வாறே முடிவு பெறாமல் நாட்கள் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டேயிருக்கும். அப்படியெனில், `எட்டு’ நித்தியத்திற்கு ஓர் அறிகுறி. இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் வாரத்தின் முதலாம் நாளில் உண்டாகி நமக்கு நித்திய ஜீவனையும் நித்திய இளைப்பாறுதலையும் அளித்தது. ஆகையால்தான் வாரத்தின் ஒருநாளை ஓய்வுநாள் ஆசரிப்புக்கென்று தேவன் நமக்குத் தரவில்லை. நாம் நம்முடைய இளைப்பாறுதலில் பிரவேசித்து அதில் தங்கியிருக்கிறோம். நாம் அனுபவிக்கும் இந்த உண்மையான இளைப்பாறுதல் இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்படாமல், நாம் பெற்ற இளைப்பாறுதலின் அறிகுறியாக ஓய்வுநாளின் ஆசரிப்பு கொடுக்கப்பட்டது. உண்மையான இளைப்பாறுதலைப் பெற்றபிறகு அதற்கு எடுத்துக்காட்டாக இருந்த ஓய்வு நாளை நாம் ஏன் ஆசரிக்க வேண்டும்? இயேசு கிறிஸ்துவின் கீழ்கண்ட அழைப்பிற்கு இணங்குவதன் மூலமே நித்திய இளைப்பாறுதலை நாம் பெற முடியும். `வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்... என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக் களுக்கு இளைப்பாறுதல் (ஒரு நாளை ஆசரிப்பதல்ல, ஆனால் நித்திய ஜீவன், இளைப்பாறுதல்) கிடைக்கும்’ (மத் 11: 28-29). நீங்கள் எவ்வளவு காலமாக பாவமாகிய பாரத்தைச் சுமந்து தவித்தாலும், அது பத்து வருஷமோ அல்லது ஐம்பது வருஷமாயிருந்தாலும் சரி, களைப்புற்று சோர்ந்துபோன உங்கள் ஜீவியத்தோடு இயேசுவினிடத்தில் வாருங்கள். அப்பொழுது அவர் உண்மையான ஓய்வு நாளாகிய இளைப்பாறுதலை உங்களுக்கு அளிப்பார். இயேசு கொடுக்கும் இளைப்பாறுதல் எவ்வகைப்பட்டது? `போஜன பீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால் மறந்தவர்களுக்கும், முலை மறக்கப் பண்ணப்பட்டவர்களுக்குமே. கற்பனையின் மேல் கற்பனையும் கற்பனையின் மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோட பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப் பண்ணத்தக்க இளைப்பாறுதல் (ஓய்வு நாளை ஆசரித்தல்); இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்’ (ஏசாயா 28: 8-12). சுமார் 700 வருடங்கள் கழித்துப் பெந்தேகோஸ்தே நாளில் கூடியிருந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு அந்நிய பாஷைகளைப் பேசினபோது ஏசாயாவினால் உரைக்கப்பட்ட தீர்க்க தரிசனம் நிறைவேறியது. பரிசுத்த ஆவியைப் பெறுதலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட உண்மையான ஓய்வு நாளாகும் (இளைப்பாறுதல்). பரிசுத்த ஆவியினால் அவர்கள் நிரப்பப்பட்டபோது, உலகப்பிரகாரமான கிரியைகளினின்றும், பொல்லாங்கான செய்கைகளினின்றும் ஓய்வடைந்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய ஜீவியத்தை ஆட்கொண்டார். அவர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தனர். அங்கு தான் உங்கள் இளைப்பாறுதலும் உள்ளது. அதுதான் உங்கள் ஓய்வுநாள். அது ஒரு நாளாகவோ வருஷமாகவோ இல்லாமல் நித்திய காலமாய், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு அதனாலுண்டாகும் ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது நாம் நம்முடைய கிரியைகளைவிட்டு ஓய்ந்து, தேவன் தம்முடைய சித்தத்தின்படி நம்மில் கிரியை செய்வதே உண்மையான ஓய்வுநாளாகும். வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் கூடும் போது, நாம் தவறான நாளில் கூடுகிறோம் என்றுரைக்கும் சனிக்கிழமை ஆசரிப்பாளருக்கு இரண்டாம் நூற்றாண்டில் ஜஸ்டின் (JUSTIN) என்பவர் எழுதியதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். `பட்டினங்களிலும் கிராமங்களிலும் உள்ளவர் ஞாயிற்றுக்கிழமை யன்று ஆராதனைக்குக் கூடுவர். அப்பொழுது சிறிதுநேரம் அப்போஸ்தலர்கள் எழுதிய நிருபங்களிலிருந்து ஒருசில பாகங்கள் வாசிக்கப்படும். அதன்பின்பு கூட்டத்தின் தலைமை தாங்குபவர் (PRESIDENT) நிருபங்களில் கூறியவற்றைக் கடைபிடிக்க வேண்டுமென்று ஆலோசனை கூறுவார். சொற்பொழிவு முடிந்ததும் எல்லாரும் எழுந்திருந்து பொதுவாக ஜெபம் செய்வோம். ஜெபத்திற்கப்புறம், அப்பமும் திராட்சரசமும் எங்கள் முன்னிலையில் வைக்கப்பட்டு ஸ்தோத்திரஜெபம் ஏறெடுக்கப்பட, சபையோர் `ஆமென்’ என்று சொல்லுவார்கள். ஸ்தோத்திர ஜெபம் முடிந்தவுடன் அப்பமும் திராட்சரசமும் அவர்களிடையே பரிமாற்றப்பட்டு, பின்பு அவை வராதவர் வீட்டில் மூப்பர்களால் கொண்டு செல்லப்பட்டு பரிமாறப்படும். செல்வந்தரும், காணிக்கைக் கொடுக்க விரும்புவோரும் ஏவப்பட்டபடி காணிக்கை செலுத்துவர். இவை தலைவரிடத்தில் சேர்க்கப்பட்டு, பின்பு அனாதைகளுக்கும், விதவைகளுக்கும், கைதிகளுக்கும் தரித்திரரான அன்னியர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும்’. அப்படியெனில், ஆதிச்சபையானது யூதரின் முறைமைப்படி வாரத்தின் கடைசி நாளில் கூடிற்று என்று கூறுபவர் சபையின் சரித்திரத்தைக் குறித்த அறியாமையை வெளிப்படுத் துகின்றனர். ஜனங்கள் இயேசுவினிடத்தில் வந்து இளைப்பாறுதல் பெறவேண்டுமென நான் ஆசிக்கிறேன். அநேகருடைய இருதயங்களில், இளைப்பாறுதல் பெறவேண்டும் என்னும் வாஞ்சையுண்டு. ஆனால் பெரும்பாலோர் அதைப் பெறும் முறையை அறியாதிருக்கின்றனர். இளைப்பாறுதல் வேண்டுமென்று இருதயத்தில் எழும்பும் உணர்ச்சியை அடக்குவதற்கென அநேகர் மார்க்கப்போதனையின் பிரகாரம் சில நாட்களை ஆசரிக்கின்றனர். அல்லது ஸ்தாபனங்களின் கொள்கைகளையும் பிரமாணங்களையும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். இவையாவும் இளைப்பாறுதல் கொடுக்க இயலாதென்று கண்டு அநேகர் மதுபானம் அருந்தி, புகைபிடித்து, சிற்றின்பங்களில் ஈடுபட்டு, உலகத்தின் உல்லாசங்களில் திருப்திகாண விழைகின்றனர். உலகச் சிற்றின்பங்களில் ஒருக்காலும் இளைப்பாறுதலைப் பெற முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு இயேசுவே தேவை. பரலோகத்தின் பரிகாரமான ஆவிக்குரிய இளைப்பாறுதல் அவர்களுக்கு மிகவும் அவசியம். பெரும்பாலோர் ஞாயிற்றுக்கிழமையன்று ஆலயத் திற்குச் செல்கின்றனர். அங்கேயும் தேவனைச் சரியானபடி வழிபடும் முறைமை அவர்கள் கண்டறிவதில்லை. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளவேண்டும் என்று இயேசுதாமே கூறுகிறார். (யோவான் 4:24). தேவனைக் குறித்து மிகவும் சொற்பமாக அறிந்து, கிறிஸ்துமஸ் பண்டிகையன்று கிறிஸ்துமஸ் தாத்தா சாண்டா கிளாஸையும் (SANTA CLAUS), ஈஸ்டர்பண்டிகையன்று முயல்களையும் நிறுத்தும் சபையில் உண்மையான வழிபாட்டை நாம் எதிர்பார்க்கக்கூடுமா? இல்லவே இல்லை. இத்தகைய வழக்கங்களை அவர்களை அஞ்ஞானிகளிடமிருந்து சேர்த்துக் கொண்டனர். ஆனால், ஒருவன் தேவனிடத்தில் திரும்பிப் பரிசுத்த ஆவியைப் பெறும்போது இவையெல்லாவற்றையும் விட்டோய்ந்து தன்னுடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் பெறுவான். அப்பொழுதுதான் அவன் உண்மையான ஜீவியத்தைப் பின்பற்றி, தேவனிடத்தில் அன்புகூர்ந்து, அவரைத் தொழுதுகொள்வான். கர்த்தருடைய நாள் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை அல்ல என்று நாம் அறிவோம். அப்படியெனில் `கர்த்தருடைய நாள்’ என்பது என்ன? தற்போதைய காலம் கர்த்தருடைய நாளாயிராமல் மனிதனின் நாளாயிருந்தது. மனிதனின் கிரியைகளையும், மனிதனின் சபையையும், மனித எண்ணங்களின்படியுள்ள வழிபாட்டையும் கொண்டதா யிருக்கிறது. ஆனால் கர்த்தருடைய நாள் இனிமேல் தான் வரப்போகிறது. இயேசுகிறிஸ்து தம்மை வெளிப்படுத்தும் சமயத்தில் யோவான் ஆவிக்குள்ளாகி வரப்போகும் அந்த மகத்தான நாளைக் காணக்கொண்டு செல்லப்பட்டான். மனிதனின் நாள் முடிவடைந்த பிறகு கர்த்தருடைய நாள் வரும். அப்பொழுது இவ்வுலகத்தின் ராஜ்யங்களெல்லாம் தேவனுடைய ராஜ்யங்களாக மாறும். உலகத்தின் மக்கள் அந்நாளில் நியாயந்தீர்க்கப்படுவர். அதன் பின்பு ஆயிரவருஷ அரசாட்சி (MILLENIUM) தொடங்கும். இப்போதைய உலகம் கிறிஸ்தவனுக்கு தன்னாலான தீங்கை விளைவிக்கிறது. அது அவனை எல்லா விதமான பொல்லாங்கான பெயர்களால் அழைத்து அவனைப் பரிகாசம் செய்கிறது. ஆனால், ஆட்டுக் குட்டியானவர் உக்கிரக் கோபத்தோடு நியாயந்தீர்க்கவரும் அந்த மகத்தான நாளிலே அவர்களெல்லாரும் அவரைக் கண்டு அலறுவார்கள். அந்த நாளில் நீதிமான்கள் தேவனோடு கூட்டப்பட்டு துன்மார்க்கர்கள் சாம்பலாய் எரிந்து போவார்கள். அந்தச் சாம்பலின் மேல் நீதிமான்கள் நடப்பர். `துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்க கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (மல்கியா 4:3). எக்காளம் போன்ற சத்தம் வெளி 1:10. “... எனக்குப் பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.” யோவான் ஆவிக்குள்ளானபோது, கர்த்தராகிய இயேசுவின் மகத்தான நாளையும் அவருடைய பரிசுத்த வல்லமையையும் கண்டான். வரப்போகும் காலங்களைக் குறித்துத் தேவன் அவனுக்குப் போதிக்கத்தொடங்கும் சமயம் வந்தபோது, அந்தச் சத்தத்தைக் கேட்டான். யோவான் எக்காள சத்தத்தைக் கேட்டேன் என்று கூறாமல் எக்காள சத்தம் போன்ற பெரிதான சத்தத்தைக் கேட்டதாகக் கூறுகிறான். எக்காளம் ஊதும்போது, அவசரமான செய்தியுண்டு என்று அர்த்தம். ராஜாவின் தூதன்ராஜாவினிடத்தி லிருந்து பிரஜைகளுக்கு அவசரச் செய்தி கொண்டு வரும்போது எக்காளம் ஊதப்படும். எக்காள சத்தத்தைக் கேட்ட ஜனங்களும் ராஜாவின் செய்தியைக் கேட்பதற்கென கூடுவர். பழைய ஏற்பாட்டின் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களும் எக்காள சத்தத்தின் மூலம் கூட்டப்பட்டனர். எக்காள சத்தம் அவசர செய்தியைக் கொண்டு வருவது போன்று; யோவான் கேட்ட சத்தமும் அவனுக்கு அவசர செய்தியைக் கொண்டு வருகிறது. அவ்வாறே இக்காலத்திலும் தேவனுடைய சத்தமாகிய `சுவிசேஷ எக்காளம்’ தீர்க்க தரிசன வசனங்களை முழங்கி, இப்பூமியில் சம்பவிக்கப் போகும் காரியங்களை நமக்கு அறிவித்து, அதற்கென்று நம்மை ஆயத்தப்படுத்துகிறது. எழுதுவதற்குக் கட்டளை வெளி 1 : 11 “அது : நான் அல்பாவும் ஒமெகாவும் முந்தின வரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா. சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்ணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது” ஆம், முந்தினவரும், பிந்தினவரும், அல்பாவும் ஒமெகாவும், எல்லாமுமான ஒரே உண்மையான தேவன் தம்முடைய வார்த்தையை முழங்குகிறார். உண்மையையும், சத்தியத்தையும் நாம் கேட்கப்போகிறோம். ஆவிக்குள்ளாகி அவருடைய பிரசன்னத்தில் இருந்து, அவர் கூறுவதைக்கேட்பதற்கு எவ்வளவு இனிதாயிருக்கிறது. `நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி ஏழு சபைகளுக்கும் அனுப்பு’. `ஆம், ஏதேன் தோட்டத்திலும் சீனாய் மலையிலும் அவருடைய வார்த்தையை முழங்கின சத்தம், மறுரூபமலையின் மகிமையில் முழங்கப்பட்டு, இப்பொழுது ஏழு சபைகளுக்கும் முழங்கி இயேசுகிறிஸ்துவைப் பூரணமாய் வெளிப்படுத்துகிறது. `யோவானே, நீ காண்கிற தரிசனங்களை எழுது. இனி வரப்போகும் காலங்களுக்கென்று இவைகளைப் புஸ்தகத்தில் எழுதிவை. இவைகள் நிச்சயமாக நிறைவேறப்போகும் உண்மையான தீர்க்க தரிசனங்களாயிருக்கின்றன. இவைகளை எழுதி அனுப்பி, எல்லாச் சபைகளுக்கும் தெரியப்படுத்து’. யோவான் அந்தச் சத்தத்தை அறிந்துகொண்டான். ஆம், நீங்களும் அவருக்குச் சொந்தமானவர்களானால் அவர் உங்களைக் கூப்பிடும்போது அவருடைய சத்தத்தை அறிவீர்கள். பொன் குத்துவிளக்குத் தண்டுகள் வெளி 1 : 12 `அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன். திரும்பினபோது, ஏழு குத்துவிளக்குகளையும் கண்டேன் சத்தமுண்டாக்கினவரைப் பார்க்கத் திரும்பினேன்’ என்று யோவான் கூறவில்லை. அவன் சத்தத்தைப் பார்க்கத் திரும்பினான். ஆம், சத்தமும் ஆளும் ஒருவரே தான். இயேசுவே வார்த்தை. `ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவரால்லாமல் உண்டாகவில்லை (யோவன் 1: 1- 3). நீங்கள் உண்மையாகவே வார்த்தையின் அர்த்தத்தைக் கண்டுகொண்டால், இயேசுவை நீங்கள் அவ்வார்த் தையின்மூலம் காண்பீர்கள். யோவான் திரும்பினபோது ஏழு பொன் குத்துவிளக்குகளைக் கண்டான். இவைகள் ஏழு சபைகளைக் குறிக்கின்றன என்று 20-ம் வசனம் கூறுகிறது. இவ்விளக்குகளைக் குறித்த விவரம் அறிய வேண்டுமென்றால் பின்வரும் வசனங்களைப் படியுங்கள். என்னோடு பேசின தூதன் திரும்பி வந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவது போல் என்னை எழுப்பி, நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான், இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதன் உச்சியில் அதன் கிண்ணமும், அதன் மேல் அதன் ஏழு அகல்களும், அதன் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப் போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. அதன் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடது புறமாக ஒன்றும், ஆகஇரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். நான் என்னோடு பேசின தூதனை நோக்கி; ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். என்னோடு பேசின தூதன் மறுமொழியாக; இவைகள் இன்னதென்று உளக்குத் தெரியாதா என்றார். ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். அப்பொழுது அவர், செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத் தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’ (சகரியா 4 : 1-6). இங்கே முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கு ஒன்றிருக்கிறது. இருபுறமும் அமைந்துள்ள ஒலிவமரங்களி லிருந்து அதிகமான எண்ணெய் கிடைப்பதால், அது பிரகாசமாக எரிகிறது. இவ்விரண்டு மரங்களும் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் குறிக்கின்றன. எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. பரிசுத்த ஆவி மாத்திரமே தேவனுடைய வெளிச்சத்தை மக்களுக்குக் கொடுக்க முடியும். சகரியாவோடு பேசின தூதன் `சபை, தன்னுடைய பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய ஆவியினாலேயே மாத்திரம் எல்லாவற்றையும் சாதிக்கமுடியும் என்பதே நீ கண்டதின் அர்த்தம்’ என்பதாய்க் கூறுகிறான். இந்தக் குத்துவிளக்கின் அமைப்பைச் சற்று கவனிப்போம். ஏழுகுழாய்களுக்கு மத்தியில் ஒரு கிண்ணமுண்டு. இந்தக் கிண்ணத்திலிருந்து தான் ஏழு குழாய்களும் புறப்பட்டுப் போகின்றன. கிண்ணம் ஒலிவஎண்ணெயால் நிரப்பப்பட்டு, ஏழு குழாய்களில் வைக்கப்பட்டிருக்கும் திரிகளின் வழியாய் பாய்ந் தோடுகிறது. கிண்ணத்தில் வைக்கப்பட்ட அதே எண்ணெய் எல்லாத் திரிகளின் வழியாய்ப் பாய்ந்து குழாய்களின் முனையிலிருக்கிற அகல்களை எரியச் செய்கிறது. ஆசாரியன் எண்ணெயைக் கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டேயிருப்பதால் குத்துவிளக்கு அணைவதேயில்லை. இக்குத்துவிளக்கு பிரத்தியேகமான முறையில் எரிக்கப்பட்டது. தேவனுடைய அக்கினியினாலே கொளுத்தப்பட்ட பரிசுத்த பீடத்தின் அக்கினியை ஆசாரியன் எடுத்து கிண்ணத்தின்மேல் உட்கார்ந்திருக்கும் அகலை முதலில் கொளுத்துவான். முதல் அகலிலிருந்து நெருப்பைக் கொண்டு இரண்டாவது அகலைக் கொளுத்துவான். மூன்றாவது அகலை இரண்டாம் அகலிலிருக்கும் நெருப்பைக் கொண்டு கொளுத்தி இவ்வாறே ஏழு அகல்களையும் கொளுத்துவான். இங்ஙனம் பரிசுத்த பீடத்தின் அக்கினி ஒரு அகலிலிருந்து அடுத்த அகலில் மாற்றப்பட்ட சம்பவம் ஏழு சபைகளின் காலத்தில் காணப்பட்ட பரிசுத்த ஆவிக்கு ஒரு அருமையான முன்னடையாளமாயிருக்கிறது. கிருபாசனத்தில் வீற்றிருந்த இயேசுவினிடமிருந்து பரிசுத்த ஆவி பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவியை ஏழு சபையின் காலங்களில் உண்டாயிருந்த அவருடைய உண்மையான சபையானது தரித்து இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரென்றும், அவருடைய வழிகளிலும் தன்மைகளிலும் மாறாத தேவன் என்பதை உலகத்திற்குப் பரிபூரணமாய் எடுத்துக் காண்பிக்கிறது. `நானே திராட்சைச் செடி, நீங்கள் கொடிகள்’ என்று இயேசு கூறுகிறார். (யோவன் 15:5) ஜீவனையுடைய மூல வித்திலிருந்து மூல வேர்களுண்டாகி அவைகளினின்று தோன்றும் மூலத் திராட்சைச் செடியாக இயேசு இருக்கிறார். திராட்சைச்செடிகனி கொடுப்பதில்லை; அதன் கிளைகளே கனி கொடுக்கும். ஒரு ஆரஞ்சு மரத்தில் திராட்சை கிளை, எலுமிச்சம் கிளை போன்ற கிளைகளை ஒட்டுப்போட்டால், அவைகளெல்லாம் ஆரஞ்சு மரத்தின் சத்தைக்கொண்டு வளரும். ஆயினும் இவைகள் ஆரஞ்சுப் பழத்தைக் கொடுக்க மாட்டா. திராட்சைக் கிளைகள் திராட்சைப் பழத்தையும் எலுமிச்சங் கிளைகள் எலுமிச்சம் பழத்தையும் மாத்திரமே கொடுக்கும். ஆரஞ்சு மரத்திலிருந்து ஒரு கிளை வளருமென்றால், அம்மரத்திலிருக்கிற சத்தும் கிளையிலுள்ள சத்தும் ஒன்றாயிருப்பதால், அது ஆரஞ்சுப் பழங்களைக் கொடுக்கும் ஒட்டுப்போட்ட கிளைகளுக்குரிய சத்துக்கள், வித்தியாசமான வித்துக்களிலிருந்தும், வேர்களிலிருந்தும், மரங்களிலிருந்தும், உண்டாயிருப்பதால் அவைகளுக்குரிய வித்தின் கனிகளைக் கொடுக்கும். இன்றைய சபையும் அதுபோன்று இருக்கிறது. திராட்சைச் செடியானது முறிக்கப்பட்டு அதில் வேறு கிளைகள் ஒட்டுப்போடப்பட்டன. இவ்வாறு பாப்டிஸ்ட் கிளைகளும் (BAPTIST), பிரஸ்பி டேரியன் கிளைகளும் (PRESBYTARIAN), மெதோடிஸ்ட் கிளைகளும் (METHODIST), பெந்தேகோஸ்தே கிளைகளும் (PENTECOSTAL) ஒட்டுப் போடப்பட்டு முறையே ஸ்தாபனங்களின் வித்துக் களுக்குரிய பாப்டிஸ்ட் கனிகள், பிரஸ்பிடேரியன் கனிகள், மெதோடிஸ்ட் கனிகள், பெந்தேகோஸ்தே கனிகள் இவைகளைக் கொடுக்கின்றன. திராட்சைச் செடியிலிருந்து ஒரு கிளை வளர்ந்தால் அது திராட்சைப் பழங்களைக் கொடுக்கும். பெந்தேகோஸ்தே காலத்தில் திராட்சைச் செடியிலிருந்து தோன்றிய கிளை, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாகிய திராட்சைச் செடியின் சத்தைப்பெற்று, அன்னிய பாஷை பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, அற்புதங்களையும், அடையாளங் களையும் நடப்பித்து, இவ்விதமாய் திராட்சைப் பழங்களைக் கொடுத்தது. அப்படியெனில் இயேசு கிறிஸ்துவாகிய செடியிலிருந்து தோன்றும் ஒவ்வொரு கிளையாகிய உண்மையான சபையும் பெந்தேகோஸ்தே சபையின் அனுபவத்தைப் பெற்றிருக்கவேண்டும். ஒட்டுப்போட்ட கிளைகளாகிய ஸ்தாபனங்கள் கிறிஸ்துவாகிய திராட்சைச் செடியிலிருந்து தோன்றாதபடியால் அவரின் ஜீவனையும் அவர் கொடுக்கும் கனியையும் அறியாமலிருக்கின்றனர். `மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நான் என் பிதாவினிடத்திற்கும் போகிறபடியால் என்னை விசுவாசிக் கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வான்’ என்று இயேசு கூறினார். (யோவான் 14: 12) ஆம், மனிதனால் உண்டாக்கப்பட்டு அவனால் நடத்தப்படும் ஸ்தாபனங்கள் தேவனால் பிறந்திருக்கமுடியாது. ஏனெனில் உண்மையான சபைக்கு ஆவியானவர் மாத்திரமே ஜீவனைக் கொடுக்கக் கூடுமேயன்றி மனிதன் அதற்கு ஜீவனைக் கொடுக்க முடியாது. கிண்ணத்திலுள்ள எண்ணெயில் முழுக்கப்பட்ட திரிகள், எண்ணெயைப் பெற்று அதன்மூலமாய் ஏழு அகல்கள் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் அளிக்கின்றன என்று நாம் பார்த்தோம். ஒவ்வொரு சபையின் தூதனுக்கும் இக்குத்துவிளக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. அவனுடைய ஜீவியம் பரிசுத்த ஆவியினால் அனல் மூட்டப்படுகிறது. அவனுடைய திரி (அதாவது ஜீவன்) கிறிஸ்துவுக்குள் முழுகியிருக்கிறது. அந்தத் திரியின் மூலமாய் கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்று, சபைக்கு அவன் வெளிச்சத்தைக் கொடுக்கிறான். ஒவ்வொரு அகலும், அதற்கு முன்னிருந்த அகலிலிருந்த நெருப்பினால் ஏற்றப்படுவதுபோல, ஒவ்வொரு தூதனும் அவனுக்கு முன்னிருந்த தூதனிலுள்ள வெளிச்சத்தையே சபைக்குக் கொடுக்கிறான். இவ்வாறு முதல் சபையின் காலத்தின் தூதனிலிருந்து கடைசிச் சபையின் காலத்தின் (இக்காலத்தின்) தூதன்வரை எல்லாரும் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கும் ஜீவனின் மூலமாய் ஒரே ஜீவனையும் ஒரே வெளிச்சத்தையும் சபைகளுக்கு வெளிப்படுத்தினர். சபையின் தூதர்கள் மாத்திரமல்ல, விசுவாசிகளும் இந்த எண்ணெயில் மூழ்க்கப்பட்டு, அதனின்று ஜீவனைப் பெறுகின்றனர். இவ்வுலகத்திற்கு அவர்கள் மரித்து, அவர்களுடைய ஜீவனும் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே முத்திரை போடப்பட்டிருக்கின்றனர், `அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்த திருங்கள்’ (எபே 4: 30) யாரும் அவர்களை அவருடைய கைகளினின்று பறித்துக் கொள்ளமுடியாது. அவர்களுடைய பரிசுத்த ஜீவியத்தை யாரும் குலைத்துப்போடவும் முடியாது. மக்கள் காணும் அவர்கள் ஜீவியம் எரிந்து, பிரகாசித்து பரிசுத்த ஆவியின் தன்மைகளை வெளிப்படுத்துகிறது. காணக்கூடாத அவர்களின் உள்ளான ஜீவியமோ தேவனுக்குள் மறைக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தையினால் போஷிக்கப்படுகிறது. சாத்தானுக்கு அவர்களைத் தொட அதிகாரமில்லை. மரணம் அதன் கூறையும் பாதாளம் அதன் வெற்றியையும் இழந்து விட்டதால், மரணமும் கூட அவர்களைப் பாதிப்பதில்லை. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும், இயேசு கிறிஸ்து மூலமாயும் அவர்களை வெற்றி சிறக்கப் பண்ணின தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென். இயேசுகிறிஸ்துவின் ஏழுவிதமான மகிமை வெளி 1 : 14 - 16 `அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது. அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப்போலிருந்தது. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது. அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சல் போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது. அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது’. தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடித்த காரணத்தினால் நாடு கடத்தப்பட்ட யோவானுக்கு இயேசு கிறிஸ்துவின் தோற்றம் எவ்வளவு ஆனந்தத்தையும் உணர்ச்சியையும் அளித்திருக்கும் வார்த்தையின் காரணமாய் கடத்தப்பட்ட யோவானுக்கு முன்னால் ஜீவிக்கிற வார்த்தை தாமே நிற்கிறார். அவரைக் குறித்த ஒவ்வொரு வர்ணனைக்கும் ஓர் அர்த்தமுண்டு. அருமையான இவ்வெளிப்பாட்டைப் பற்றி சற்று சிந்திப்போம். 1. அவருடைய சிரசும் மயிரும் உறைந்த மழையைப் போலிருந்தது. யோவான் முதலில் அவருடைய மயிரின் வெண்மையைக் காண்கிறான். அவருடைய சிரசின் மயிர் உறைந்த மழையைப்போல வெண்மையாயிருந்தது. வயது சென்றவர்களின் தலையில் காணப்படும் நரைமுடியைப் போன்றதல்ல இது. நித்தியமாய் ஜீவிக்கிறவருக்கு வயதென்பதே இல்லை. தேவனுடைய பார்வையில் அநேக ஆயிரம் வருஷம் ஒரு நாளைப்போன்றது. ஆகையால் இவ்வெண்மயிர், அனுபவத்தையும், அறிவின் முதிர்வையும் (MATURITY), ஞானத்தையும் குறிக்கிறதேயன்றி வயதைக் குறிப்பதல்ல. கர்த்தருடைய பார்வையில் ஞானம் முக்கியத்துவம் பெற்றது. மக்களை நியாயந்தீர்க்க வேண்டுமெனில் ஞானம் அவசியமே. இஸ்ரவேல் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கென சாலமோன் ஞானத்திற்காக தேவனிடத்தில் மன்றாடினான். ஆம், உலகம் பூராவையும் நியாயந்தீர்க்க ஞானத்தினால் முடிசூட்டப்பட்டவராக இயேசு வருகிறார். இதைத்தான் யோவான்கண்ட வெண் மயிர் குறிக்கிறது. இதைத் தானியேல் தீர்க்கதரிசனப் புத்தகத்தில் பாருங்கள். `நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப் பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினி ஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினிநதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள் நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலை செய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட் டது. மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும் அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடு இருக்கும்படி கட்டளையிடப்பட்டது. இராத் தரிசனங்களிலே நான் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ மனுஷ குமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார். அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.’ (தானி 7: 9 - 14) தானியேல் அதே வெள்ளை மயிரோடு புத்தகங்களைத் திறந்து, அவைகளினுள்ளவைகளின்படி நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாக வானத்து மேகங்களோடு அவர் வருவதைக் கண்டான். யோவானும் இதே காட்சியைக் கண்டான். மார்பருகே பொற்கச்சை அணிந்து, பரிசுத்தமும் ஞானமுமுள்ளவராய், உலகத்தை நீதியாய் நியாயத் தீர்க்கப்போகும் நியாயாதிபதியை ஒரே விதமாக இவ்விருவரும் கண்டார்கள். பழைய காலங்களில், நியாயம் வழங்கும் அதிகாரத்தைப் பெற்றதன் அறிகுறியாக தலைமுதல் கால்வரை மறைக்கும் அங்கியையும், வெள்ளைக் குல்லாவையும் (WIG) நியாயாதிபதி உடுத்த, நியாய சபையைக் கூட்டும் வழக்கமுண்டாயிருந்தது. இந்த வழக்கத்தை உலக மக்கள் அறிந்தபடியால், இயேசுவின் இவ்வாறான தோற்றம் எதைக் குறிக்கும் என்பதை அவர்களும் அறிவர். 2. அவர் கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது ஒரு சமயம் துயரத்தினாலும் அனுதாபத்தினாலும் கண்ணீரால் மங்கியிருந்த அதே கண்கள், லாசருவின் கல்லறையில் துக்கம் மேலிட்டு கண்ணீர் சொரிந்த அதே கண்கள், தம்மைச் சிலுவையிலறைந்த கொலை பாதகரின் பொல்லாங்கையுக் காணாமல், துயரத்தோடு `பிதாவே இவர்களுக்கு மன்னியும்’ என்று கூறி அழுத அதே கண்கள், தம்மைப் புறக்கணித்தவர்களை நியாயத் தீர்க்கும் பொருட்டு வரப்போகும் நியாயாதிபதியின் அக்கினிஜுவாலை பொருந்திய கண்களாய்க் காட்சியளிக்கின்றன, என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் மனுஷ குமாரனாய் இவ்வுலகத்திலிருந்தபோது, அநேக முறை கண்ணீர் சிந்தி, எல்லா மனித உணர்ச்சிகளைக் காட்டிலும் இவ்வுணர்ச்சியை அதிகமாகக் கொண்டவராயிருந்தார். ஆனால் இம்மனித உணர்ச்சியாகிய திரைக்குப்பின், தெய்வத்தன்மை அவரில் மறைக்கப்பட் டிருந்தது. அழுத இதே கண்கள் தரிசனங்களைக் கண்டன; இதே கண்கள் மக்களின் இருதயங்களின் ஆழத்தை ஆராய்ந்து, அவைகளின் சிந்தனைகளையும் வழிகளையும் அறிந்தன. இயேசுகிறிஸ்துவின் மாம்ச கண்கள் மூலம் தேவனுடைய கண்கள் ஜுவாலித்து, இயேசுவை யாரென்று அறிந்துகொள்ளாதவர்களைப் பார்த்து `நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று கூறினார். (யோவன் 8:24) மேலும், `என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாகிக்க வேண்டியதில்லை. (என் பிதாவின் கிரியைகளை) செய்தேனேயானால் நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும் ... அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்’ என்றார் (யோவன் 10:37-38) ஜனங்கள் தேவனுடைய வார்த்தையின் பேரில் விசுவாசம் வைக்காமல், வெளிப்படுத்தலையும் அசட்டைச் செய்தபடியால், எரேமியாவைப் போன்று புலம்பும் தீர்க்க தரிசியாக அவர் இருந்தார். நியாயாதிபதியின் அக்கினி ஜுவாலை பொருந்திய கண்கள் இப்பொழுதும் உலகமெங்கும் சுற்றித் திரிந்து மனிதரின் ஜீவியத்தின் தன்மைகளைக் காண்கின்றன. அவர் அறியாதது ஒன்றுமில்லை. நம்முடைய இருதயங்களின் விருப்பங்களையும் எண்ணங்களையும் அவர் அறிவார். அவருக்கு வெளியாக்கப்படாத மறைபொருள் எதுவுமில்லை. இந்த நொடிப்பொழுதில் நம்மிலுள்ள எண்ணங்களையும் அவர் அறிவார் என்பதை நீங்கள் அறியவேண்டும். ஆம், ஜுவாலிக்கும் கண்களைக் கொண்டவராய், நியாயந் தீர்ப்பதற்கென நியாயாதிபதி அங்கே நிற்கிறார். கிருபையின் காலம் வேகம் முடிவடையும் சமயமுள்ளபொழுதே, காலதாமதம் செய்யாமல், மக்கள் மனந்திரும்பி அவருடைய முகத்தை நீதியோடு தேடி, உலகம் அக்கினியால் அழிக்கப்படுமுன்பே அவரில் தஞ்சமடைய நான் ஆசிக்கிறேன். 3. வெண்கலப் பாதங்கள் அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது’. வெண்கலம் உறுதிக்குப் பெயர் போனது. அதனோடு வேறெந்த உலோகத்தைச் சேர்த்தாலும் அதனை இன்னும் அதிகம் உறுதிபடுத்த முடியாது. இவருடைய பாதங்களை விவரிக்கும் வெண்கலமோ, உலைகளத்தில் காய்ச்சப்பட்டு பரிசோதிக்கப்பட்டதால், சாதாரண வெண்கலத்தைவிட உறுதிகொண்டது. வெண்கலம், தேவனுடைய நியாயதீர்ப்புக்கு எடுத்துக் காட்டாயிருக்கிறது. `சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷ குமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்பட வேண்டும். தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப் படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாய் இராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட் டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்கு காரணமாயிருக்கிறது’ (யோவன் 3:14-19) `அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி; நீ ஒரு கொள்ளிவாய் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை. கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப் பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்பொழுது மோசே ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கி வைத்தான். சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான்’. (எண் 21:8-9) இஸ்ரவேல் ஜனங்கள் பாவஞ் செய்தனர். அவர்கள் செய்த பாவம் நியாயந் தீர்க்கப்பட வேண்டியதாயிருந்தது. ஆகையால், வெண்கலச் சர்ப்பத்தை உண்டுபண்ணி ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைக்க தேவன் மோசேக்குக் கட்டளையிட்டார். அதை நோக்கிப் பார்த்த எவனும் பாவத்துக்குரிய தண்டனையினின்று விடுதலையடைந்தான். கம்பத்தில் தூக்கப்பட்டிருந்த வெண்கல சர்ப்பம், ஏதேன் தோட்டத்தில் சர்ப்பமானது ஏவாளை வஞ்சித்து அதன்மூலம் உலகத்தில் பிரவேசித்த பாவத்திற்கு ஒரு அறிகுறியாகும். வெண்கலம் நியாயத் தீர்ப்புக்கு அடையாளமாயிருக்கிறது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் வெண்கலத்தால் உண்டாக்கப்பட்ட பலிபீடத்தின்மேல் செலுத்தப்பட்ட பலியின்மூலம் பாவத்திற்குரிய தண்டனை நீக்கப்பட்டது. எலியாவின் காலத்தில் தேவன் இஸ்ரவேலை நியாயந்தீர்த்தபோது, எலியா மழை பெய்யாமலிருக்க கட்டளையிட்டான். அப்பொழுது சிவந்த வானம் வெண்கலம்போல் மாறிற்று, வெண்கலத்தால் உண்டாக்கப்பட்ட சர்ப்பம், பாவம் ஏற்கெனவே தேவனால் நியாயந் தீர்க்கப்பட்டதென்பதைக் குறிக்கிறது. கம்பத்தில் தூக்கப்பட்ட வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்து அதன் அர்த்தத்தை உணர்ந்த எவனும் சுகமாக்கப்பட்டான். இது இஸ்ரவேலரின் இரட்சிப்புக்கென தேவனுடைய கிரியையாயிருந்தது. கம்பத்தில் தூக்கப்பட்ட சர்ப்பம் இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் நிறைவேற்ற வந்ததன் முன்னடையாளமாக இருக்கிறது. பாவத்தின் கிரியைகளுக்குத் தேவன் அளித்த நியாயத் தீர்ப்பைத் தம்மேல் ஏற்றுக்கொள்ள இயேசு இவ்வுலகத்தில் மானிடனாய் தோன்றினார். உலகத் தோற்றத்திற்கு முன்பே ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டார் என்பதைக் காண்பிக்க பீடத்தின் அஸ்திபாரம் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. இவ்வுலகத்தில் பாவிகள் தோன்றுவதற்கு முன்னமே அவர் பாவத்திற்கென்று நியாயத் தீர்ப்படைந்தார். இரட்சிப்பு கர்த்தரால் மாத்திரமே வரக்கூடுமானதால், அவர் ஒருவராய் தேவனுடைய கோபாக்கினையின் உக்கிரமான ஆலையை மிதித்தார். அதனால் அவருடைய வஸ்திரம் தம்முடைய சொந்த இரத்தத்தினால் சிவப்பாக மாறினது. தேவனுடைய கோபாக்கினையையும்..... நியாயத் தீர்ப்பையும் அவர் நமக்கென்று சுமக்கவேண்டியதாயிருந்தது. நீதியுள்ள அவர், நீதியில்லாதவர்களுக்காகப் பாடுபட்டார். `எங்களை உம்முடைய சொந்த இரத்தத்தினால் மீட்டுக் கொண்டதினால், தேவ ஆட்டுக்குட்டியானவரே, நீர் பாத்திரராயிருக்கிறீர்’. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிர மங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால்நாம் குணமாகிறோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் பாடுபட்டதுபோல், எந்த மனிதனும் பாடுபட்டதில்லை சிலுவையிலறையப்படுவதற்கு முன்பே, அவருடையவேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையில் விழுந்தது’ (லூக்கா 22:44) அதற்குப் பின் நேர்ந்த சிலுவையின் கஸ்தியிலோ இரத்தக்குழாய்களிலிருந்து அவருடைய இரத்தம் பீறிட்டு வந்தது. ஒரு நாளன்று நமக்காகச் சிலுவையிலறையப்பட்ட பாதங்கள். பிரகாசமான வெண்கலப் பாதங்களாக பூமியின் மேல் நிற்கும். அப்பொழுது இந்த பூமியின் நியாயாதிபதியாய் நீதியோடும், பரிபூரணத்தோடும் அவர் மானிடரை நியாயந்தீர்ப்பார். யாரும் அந்நியாயத்தீர்ப்பைத் தவிர்க்கமுடியாது. அநியாயஞ் செய்கிறவன் இன்னும் அறியாயஞ் செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். மாறாத தேவன் அப்பொழுதும் மாறமாட்டார்; ஏனெனில் அவர் மாறினதேயில்லை; இனியும் மாறப்போவதில்லை. அந்த வெண்கலப்பாதங்கள் விரோதிகளை நசுக்கிப்போடும். அந்திக்கிறிஸ்துவையும், மிருகத்தையும், அதன் சொரூபத்தையும், அவருடைய பார்வையில் அசுத்தமாய்க் காணப்படும் அனைத்தையும் அந்த வெண்கலப் பாதங்கள் அழித்துப் போடும். அவருடைய நாமத்தை மாத்திரம் தரித்துக்கொண்டு அதன்மகிமையைக் குலைத்த எல்லாச் சபைகளையும் அவர் அழித்துப் போடுவார். பொல்லாங்கானவர்களும், நாத்திகர்களும் (ATHEISTS), தேவன் ஜீவிக்கிறார் என்று சான்று எதுவுமில்லை என்று கூறுகிறவர்களும் (AGNOSTICS) நவீன வேதப்புரட்டர்களும் (MODERNISTS) அப்பொழுது அழிவர். மரணமும், நரகமும் பாதாளமும் அழியும். அவர் வரும் போது புத்தகங்கள் திறக்கப்படும். அச்சமயம் வெதுவெதுப்பான சபையும், ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளும் நியாயந்தீர்க்கப்படுவர். அவர் செம்மறியாடுகளை வெள்ளாடுகளினின்று பிரித்து நியாயந்தீர்ப்பார். அவர் வரும்போது அவருக்கே உரிமையான ராஜ்யத்தைக் கைப்பற்றுவார். அவரோடுகூட ஆயிரமாயிரம் பேர் கொண்ட அவருடைய மணவாட்டியாகிய சபையும் அவருக்கு ஊழியஞ் செய்யும்படி கூடவருவார்கள். காலதாமதமாவதற்கு முன்பு இப்பொழுதே மனந்திரும்புங்கள். ஆவிக்குரிய மரணத்தினின்று எழுப்பி, தேவனைத் தேடி, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுங்கள்; இல்லையேல் நித்திய ஜீவனை இழந்துபோவீர்கள். சமயமுள்ள போதே இதைச் செய்யுங்கள். 4. அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சல் போலிருந்தது பெருவெள்ளத்தின் தண்ணீர் ஜனங்களைக் குறிக்கிறது. `... தண்ணீர்களைக்கண்டாயே. அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்’ (வெளி 17:15) அப்படியெனில் அவருடைய சத்தம் திரளான ஜனங்கள் பேசுவதன் சத்தம் போலிருந்தது. இது நியாயத்தீர்ப்பில் நேரப்போவதைக் காண்பிக்கிறது. இத்தனைக் காலங்களாக திரளான சாட்சிகள் பரிசுத்த ஆவியின் மூலம் இயேசுவைக் குறித்து சாட்சி கொடுத்து அவருடைய சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்தனர். இவர்களில் ஒவ்வொரு வரும் நியாயத்தீர்ப்பன்று எழும்பி சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாத ஒவ்வொரு பாவியையும் குற்றப்படுத்துவர். சபைகளின் ஏழு தூதர்களின் சத்தமும் அன்று தெளிவாகக் கேட்கப்படும். ஏனெனில் அவரவர் காலங்களில் எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ளாத மக்களை அவர்கள் குற்றப்படுத்துவர். இயேசுகிறிஸ்துவின் இரட்சிப்பின் தன்மையைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானத்தைக் குறித்தும், பரிசுத்த வல்லமையினால் நிரப்பப்படுவதைக் குறித்தும் பிரசங்கித்து, தங்கள் ஜீவனையும் பொருட்படுத்தாமல் வார்த்தையில் உறுதியாய் நின்ற கணக்கில்லா சாட்சிகளின் சத்தம், பரிசுத்த ஆவியின் மூலமாய் காலா காலங்களில் உண்டாயிருந்த இயேசுகிறிஸ்துவின் சத்தமேயாகும். நியாயத்தீர்ப்பின் நாளிலே இது பெருவெள்ளத்து இறைச்சல் போல்தொனிக்கும். `நான் இவர்களுக்காக வேண்டிக் கொள்கிறதுமல்லாமல் இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக் கொள்கிறேன்’ யோவான் 17:20 என்று இயேசு கூறுகிறார். நீர் வீழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தப்பக் கூடாமல், மரிக்கும் தருவாயிலிருக்கும் ஒருவனைக் குறித்து எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? நீர்வீழ்ச்சி மலையிலிருந்து தாழ விழும்போது அதோடு விழுந்து மாண்டுபோவான் என்பதை அவன் அறிவான். அச்சமயத்தில் நீர்வீழ்ச்சியின் சத்தம் அவனுக்கு எவ்வாறிருந்திருக்கும்? அதேபோன்று நியாயத்தீர்ப்பின் நாளில் வரப்போகும் ஆக்கினையைக் குறித்து எச்சரித்த திரளான சாட்சிகளின் பெருத்த சத்தம் உன்னைக் குற்றப்படுத்தும் போது, உனக்கெப்படியிருக்கும்? இந்த நேரத்திலேயே இதைக் குறித்துச் சிந்தனை செய். இப்பொழுதே உன்னுடைய எண்ணங்களெல்லாம் பரலோகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அங்கே உன்னுடைய எண்ணங்கள் உன்னுடைய வார்த்தையைக் காட்டிலும் சத்தமாய் பேசுகின்றன. வசனத்தைக் கேட்டு நித்திய ஜீவனுக்கென்று அதைப் பற்றிக்கொள்ள இது உனக்குக் கடைசி அழைப்பாயிருக்கலாம். இப்பொழுது அதை ஏற்றுக்கொள்ளாமலிருந்தால், நியாயத்தீர்ப்பின் நாளில் பெருவெள்ளத்து இரைச்சலின் சத்தத்தைக் கேட்கும்போது காலதாமதமாகியிருக்கும். தண்ணீர் எப்பொழுதும் இரையாமல், இனிமையாகவும் சத்தமுண்டாக்கும். ஓடைகளிலும், ஆறுகளிலும் தண்ணீர் அலைகளாகச் செல்லும்போது அதன் சத்தம் கேட்பதற்கு இனிமையாயிருந்து மனதிற்குச் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் அளிக்கும். அதேபோன்று அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு மீட்கப்பட்டவர்களிடம் தேவன் இனிமையாய்ப் பேசி, சமாதானத்தையும் இளைப் பாறுதலையும் கொடுப்பார். அவருடைய அன்பு, பாதுகாப்பு, வழிநடத்தல் இவைகளின் சத்தத்தை நாம் கேட்பதனால் அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும். ஒரு நாளில் அதே இனிமையான குரல், இரத்தத்தினால் மீட்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, வார்த்தையின்படி நடக்கும் நம்மை, அவரோடு பங்குகொள்ள வரவேற்கும். நித்திய ஜீவனில் நம்பிக்கை கொண்ட திரளான பேர் நம்மைச்சூழ நின்று இனிமையான குரல்களில் நம்மை வரவேற்பர். அதைவிட வேறு பாக்கியம் நமக்கில்லை. அவருடைய சத்தத்தைக் கேட்டு, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாமல் அவரை ராஜாவாக ஏற்றுக்கொள்ள உங்களை நான் வேண்டிக்கொள்ளுகிறேன். நன்றாக ஆலோசியுங்கள். தண்ணீர் நோவாவின் காலத்தில் உலகத்தையழித்தது. அதே தண்ணீர்தான் நோவாவைக் காப்பாற்றி இந்த பூமியையும் அவனுக்கென்று மீட்டுக்கொடுத்தது. மனந்திருப்புதலுக்கும் ஜீவனுக்கும் உங்களை அழைக்கும் தேவனுடைய ஊழியக்காரன் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அதன் மூலம் தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள். 5. வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்கள் `தம்முடைய வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்’. இவ்வேழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களென்று இருபதாம் வசனம் விளக்குகிறது. `அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்’. தேவன் நமக்கு வசனங்களின் அர்த்தத்தை வெளிப்படுத்திக் கொடுப்பதால் நாம் ஒரு போதும் தவறுவதில்லை என்பதை நீங்கள் முதலில் அறியவேண்டும். இந்த ஏழு நட்சத்திரங்களும் தொடர்ச்சியாக வந்த ஏழு சபைகளின் காலங்களிலுள்ள ஏழு தூதர்கள். அவர்களின் பெயர்கள் இங்கு குறிக்கப்படவில்லை. ஒவ்வொரு சபைக்கும் ஒரு தூதன் கொடுக்கப்பட்டு, மொத்தம் ஏழு தூதர்கள் இருக்கின்றனர். எபேசு சபையின் காலம் தொடங்கி லவோதிக்கேயா சபையின் காலம்வரை உண்டாயிருந்த சபைகளுக்கென்று நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தூதனும் அந்த சபையின் காலத்திற்குரிய தேவனுடைய வார்த்தையை மக்களுக்கு அறிவிக்கத்தவறியதில்லை. இத்தூதர்கள் மூல ஒளியாக (ORIGINAL LIGHT) இயேசுவின் நாமத்தின் மகிமைக்கென வைராக்கியமும் உண்மையுமாக ஜீவித்தனர். ஒவ்வொரு காலமும் தேவனைவிட்டு வழுவினபோது, அக்காலத்தின் தூதன் மக்களை மறுபடியும் சத்தியத்திற்குக் கொண்டு வந்தான். இத்தூதர்கள் தேவனிடத்திலிருந்து வல்லமையை நேரடியாகப் பெற்றிருந்ததால், எந்நிலைமையையும் சமாளிக்க அவர்களால் முடிந்தது. அவர்கள் தேவனுடைய பொறுப்பிலும் பாதுகாப் பிலுமிருந்தனர். யாரும் அவருடைய கைகளினின்று அவர்களைப் பறித்துக்கொள்ள முடியவில்லை. வியாதியோ, உபத்திரவமோ, நிர்வாணமோ, பஞ்சமோ, பட்டயமோ, மரணமோ இவை யாவும் தேவனுடைய அன்பை விட்டு அவர்களைப் பிரிக்க முடியவில்லை. அவர்கள் உண்மையாக தங்களை அவருக்கென்று அர்ப்பணித்து அவருடைய சர்வவல்லமையினால் காக்கப்பட்டனர். அவர்களுக் குண்டான உபத்திரவத்தைக்குறித்து அவர்கள் சிறிதேனும் கவலை கொள்ளவில்லை. கஷ்டமும் நிந்தையும் வந்தபோதிலும், அவருடைய நாமத்திற்காகப் பாடுபட தகுதியுள்ளவரென்று எண்ணப்பட்டதால், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தினர். தேவன் அளித்த இரட்சிப்புக்காக நன்றியுள்ளவர்களாய் அவருடைய ஜீவஒளியில் எரிந்து பிரகாசித்து அவருடைய அன்பு, பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் இவைகளை உலகத்திற்குப் பிரதிபலித்துக் காண்பித்தனர். தேவனும் அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் அவர்களைத் தாங்கினார். அவர்கள் ஸ்தாபனங்களால் இகழப்பட்டாலும், தேவனுடைய வார்த்தைக்கு உறுதியாய் நின்றனர். சபையின் பிரமாணத்திற்கு (CREED) உறுதியாயிருப்பது கடினமான செய்கையல்ல. சாத்தானே சபை பிரமாணங்களை உண்டாக்கியதால், மக்கள் எளிதாகப் பிரமாணத்தை விசுவாசித்து அதில் பற்றுக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் தேவனுடைய வசனத்திற்கு உண்மையாய் நின்று அப்போஸ்தலர் காலங்களில் அளிக்கப்பட்ட தேவ வார்த்தையை மறுபடியும் ஏற்றுக்கொண்டு அதில் நிலைத்திருப்பது மிகவும் கடினமான செயலாகும். ரோமன் கத்தோலிக்க சபை அநேக வருஷங்களாகத் தான் கடைபிடித்தவைகளை உண்மையென்று விசுவாசித்து, ஒருபோதும் மாறாமல் வளர்ந்துகொண்டே போவதால் அது தான் உண்மையான சபையாக இருக்க வேண்டும் என்று ஒருவர் என்னிடத்தில் கூறினார். அது முற்றிலும் தவறு. அரசாங்க அங்கீகாரம் பெற்று, வேதத்தில் காணப்படாததும், அதனால் உண்டாக்கப்பட்டதுமான பிரமாணங்களைக்கைக் கொண்டு, பிசாசு எதிர்க்கக்கூடிய தேவ வல்லமை பொருந்திய ஊழியம் எதுவுமின்றி ரோமன் கத்தோலிக்க சபை கண்டிப்பாய் நீடித்து நிலைக்கும். இதை ஆதாரமாகக் கொண்டு அது உண்மையுள்ள சபையென்று சொல்லிவிட முடியாது. ஆனால் வாளால் அறுப்புண்டு, சிங்கங்களின் வாய்களில் போடப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, எவ்விடங்களிலும் துரத்தப்பட்டு, அப்பொழுதும் தேவ வார்த்தைக்கு உண்மையாக ஜீவித்த சிறு குழுவை நாம் நினைக்கும்போது, அது தேவனால் நடத்தப்பட்ட சபையாகத்தான் இருக்க முடியும். அவர்கள் இத்தனை துன்பங்களின் மத்தியிலும் விசுவாசப் போராட்டத்தில் நிலைநின்று வைராக்கியமான ஜீவியத்தைக் கடைபிடித்தது ஒரு அதிசயமே. ஏழு சபைகளின் தூதர்களை மாத்திரம் கர்த்தர் தமது வலது கரத்தில் ஏந்திக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு உண்மையான விசுவாசியும் கர்த்தருடைய கரங்களில் அடங்கியிருந்து, அவருடைய அன்பையும் வல்லமையையும் பெற்று, தேவன் விசுவாசிகளோடு சம்பந்தங்கொள்வதனால் கிடைக்கப்பெறும் எல்லா நன்மைகளையும் பெறுகிறான். கர்த்தர் ஒவ்வொரு தூதனுக்கும் நன்மைகளும் ஆசீர்வாதங்களும் அளித்து, அவனைத் தம்முடைய மகிமைக்கென்று உபயோகித்தது போன்று அவருடைய சரீரத்தின் எல்லா அங்கத்தினர்களான விசுவாசிகளுக்கும் அவர் நற்பண்பையும் பாதுகாப்பையும் அளிப்பார். 6. இருபுறமும் கருக்குள்ள பட்டயம் `அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது’ வேதத்தின் வாயிலாகப் பார்க்கும்போது, இருபுறமும் கருக்குள்ள பட்டயம் தேவனுடைய வார்த்தையைக் குறிக்கிறது. `தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.’ (எபி 4:12) `பின்பு பரலோகம் திறந்திருக்கக் கண்டேன். இதோ ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது, அதின் மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுள்ளவ ரென்னப்பட்டவர். அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன. அவருடைய சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது; இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது. இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதிராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின் மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது.’ (வெளி 19:11-16) ஆம், அவர் வரும்போது, அந்த வார்த்தை எல்லா தேசங்களுக்கும், மனிதர்களுக்கும் விரோதமாக வரும். யாரும் அதை எதிர்த்து நிற்கமுடியாது. இயேசு நாத்தான்வேலின் கபடற்ற இருதயத்தை அறிந்தது போன்று, ஒவ்வொரு இருதயத்திலும் மறைந்து கிடந்த சிந்தனைகளை அந்த வார்த்தை வெளிப்படுத்தும் இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக் குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். அதற்கு நாத்தான்வேல்; நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைநோக்கி; பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். (யோவான் 1:47-48) தேவனுடைய சித்தத்தைச் செய்தவனையும் செய்யாதவனையும் அவருடைய வார்த்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு மனிதனின் அந்தரங்க கிரியைகளையும், அக்கிரியைகளைச் செய்ததன் காரணங்களையும் அது அம்பலமாக்கும். ஆம் வார்த்தை `மக்களை இருபிரிவாகப் பிரிக்கும். ரோமருக்கு எழுதிய நிரூபம் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும் அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத் தீர்ப்புக்கு தப்பித்துக் கொள்ளலாமென்று நினைக்கிறாயோ’ (ரோமர் 2: 3) என்று கூறுகிறது. தேவன் மனிதரை எவ்வாறு நியாயந்தீர்ப்பாரென்று அதே அதிகாரத்தில் 5 முதல் 17 வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. மனக்கடினமுள்ள இருதயமுள்ளவர்கள் நியாயந்தீர்க்கப்படுவர்; அவர்களுடைய கிரியைகளும் நோக்கங்களும் நியாயந்தீர்க்கப்படும். தேவனிடத்தில் பட்சபாதமில்லை. எல்லோரும் வார்த்தையின்படி நியாயந்தீர்க்கப்படுவார்கள், யாரும் அதினின்று தப்பித்துக் கொள்வதில்லை. வார்த்தையைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படியாதவர்கள், அவர்கள் கேட்ட வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்க்கப்படுவர். வார்த்தையை விசுவாசிக்கிறேன் என்று சொல்லியும் அதன்படி நடக்காதவர்களும் நியாயந் தீர்க்கப்படுவர். ஒவ்வொரு அந்தரங்க ரகசியமும் அக்காலத்தில் வெளியாகும். இக்காலத்திலும் கர்த்தர் மனிதரின் இருதயங்களிலுள்ள ரகசியங்களை வெளிப்படுத்துகிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? வார்த்தை யேயன்றி, இருதயத் திலுள்ள ரகசியங்களை வேறு யார் வெளிப்படுத்தக்கூடும்? `தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக் களையும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவாக்குத்துகிற தாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிற தாயும் இருக்கிறது’ (எபி 4:12) வார்த்தை வல்லமையுள்ளதாயிருப்பதால், அது அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுகிறது. வார்த்தையாகிய இயேசுவில் இருந்த அதே ஆவி இக்கடைசிகாலங்களின் சபையில் காணப்பட்டு, மக்களை நியாயந்தீர்ப்பினின்று விடுவிக்கக் கடைசியடையாளமாகக் கொடுக்கப் பட்டிருக் கிறது. மக்களின் இருதயங்களிலுள்ள எண்ணங்களை அறிவதே இக்கடைசி காலத்தின் அடையாளம். இவ்வடையாளத்தைக் கண்டும் விசுவாசமற்று, வார்த் தையாகிய இயேசுவைப் புறக்கணிக்கிறவர்கள், இப்பொழுதே நியாயத் தீர்ப்புக்குட்படுகின்றனர். `மறுத்தலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற் கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்’ (எபி 6:6) வார்த்தையானது வல்லமையோடும், அதிகாரத்தோடும் வந்ததாகப் பவுல் கூறுகிறான். பிரசங்கிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை, வல்லமையாய்க் கிரியை செய்து, பிரகாசமான, கருக்குள்ள பட்டயம் போன்று மக்களின் மனச்சாட்சியில் ஊடுருவிப்பாய்ந்து, ரணசிகிச்சை வைத்தியனின் (SURGEON) கூர்மையான கத்தியைப்போல், எல்லாப் பாவமான வியாதிகளையும் முறித்து பாவத்திற்கு அடிமையானவர்களை விடுதலையாக்கிற்று. ஆதிகாலத்து விசுவாசிகள் எங்கு சென்றாலும் சுவிசேஷத்தைப் (வார்த்தையை) பிரசங்கித்தனர். தேவன் அற்புத அடையாளங்களினால் அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார். அவர்கள் பிணியாளிகளைச் சொஸ்தப்படுத்தி, பிசாசுகளைத் துரத்தி, அன்னிய பாஷையில் பேசினார்கள். வார்த்தையானது அதன் வல்லமையினால் நடைமுறையில் இவைகளனைத்தையும் சாதித்தது. கிறிஸ்தவ விசுவாசிகளின் வாய்களினின்று புறப்பட்ட தேவனுடைய வார்த்தையானது அதன் பலனை அடையாமற் போனதில்லை. இந்தக் கடைசி காலத்திலும் உண்மையான வார்த்தையை ஏற்றுக்கொண்டிருக்கும் மணவாட்டியினிடத்தில் இவ்வார்த்தை அதிக வல்லமையுள்ளதாய்க் காணப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட சிறுமந்தையே, வார்த்தைக்கு உறுதியாய் நில். உன்னுடைய இருதயத்தையும் வாயையும் வார்த்தையினால் நிரப்பு. ஒரு நாளில் தேவன் அவருடைய ராஜ்யத்தை உனக்குக் கொடுப்பார். 7. சூரியனைப் போன்ற முகம் `அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது’. ஆம் மறுரூப மலையிலும் அவருடைய முகம்சூரியனைப் போல் பிரகாசித்தது. `ஆறு நாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின் மேல் போய் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர்முகம் சூரியனைப் போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி; ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன். இவருக்குச் செவி கொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. சீஷர்கள் அதைக்கேட்டு முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத்தொட்டு, எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார். அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இயேசுவைத் தவிர வேறொருவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி, மனுஷ குமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி, அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும் எலியாவந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர்யோவான் ஸ்நானனைக் குறித்துத்தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்’. (மத் 17: 1-13). இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, இயேசு, `இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்றார். அதே போன்று இம்மூன்று சீஷர்களும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் மகிமையைக் கண்டனர். அவர் மலையின்மேல் மறுரூபமானபோது, அவருடைய வஸ்திரம் வெளிச்சத்தைப்போல் வெண்மையானதையும் அவருடைய முகம் உச்சநிலையிலுள்ள சூரியனைப் போல் பிரகாசத்தையும் அவர்கள் கண்டனர். அவருடைய இருபுறத்திலும் முறையே மோசேயும் எலியாவும் நின்றனர். அவருடைய இரண்டாம் வருகையும் அவ்விதமாகவே இருக்கும். எலியா நிச்சயமாக முதலில் வந்து பிள்ளைகளின் (மணவாட்டியின்) இருதயத்தை, பிதாக்கள் கைக்கொண்டதும், வார்த்தையையே உறுதியாய்ப் பற்றினதுமான அப்போஸ்தலரின் போதனைகளுக்குத் திருப்புவான். `இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமானநாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளை களிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவன் பிதாக்களிடத் திற்கும் திருப்புவான்’ (மல்கியா 4: 5-6). இப்பொழுது இஸ்ரவேல் ஒரு நாடாகிவிட்டது. அதற்கென்று ஒரு சைனியமும் (இராணுவமும்) கப்பற்படையும், தபால் நிலையங்களும், தேசக்கொடியும், இன்னும் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதவைகளைத்தும் இருக்கின்றன. ஆனாலும் `..... ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ....’ (ஏசாயா 66:8) என்னும் அவளைக் குறித்த வேதவாக்கியம் இன்னும் நிறைவேறவில்லை. அது நிறைவேறும்காலம் கூடிய சீக்கிரம் வரப்போகிறது. அத்திமரத்தில் துளிர்கள் தோன்றிவிட்டன. இஸ்ரவேலர் மேசியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் சம்பவம் கூடிய சீக்கிரத்தில் நிகழ்ந்தேறும், அவளுக்குரிய வெளிச்சமும் ஜீவனும் இன்னும் சிறிது காலத்திற்குள் அவளுக்கு வெளிப்பட்டு, அவள் ஆவிக்குரிய பிரகாரம் மறுபடியும் பிறப்பாள். இவைகளனைத்தையும் நோக்கும்போது, கர்த்தருடைய மகிமையின் வருகை அதிசீக்கிரத்தில் உண்டாகுமென்பதை நாம் அறியவேண்டும். மருரூப மலையில் கண்ட எலியாவும் மோசேயும் முறையே புறஜாதிகளின் இரட்சிப்பிற்கும், இஸ்ரவேலின் இரட்சிப்பிற்கும் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். `நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்க சூரியனும், சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு’ (வெளி 21:23) என்று வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது. இந்த நகரம்தான் புதிய எருசலேம் அந்நகரத்தில் ஆட்டுக்குட்டியானவர் தங்கி, தம்முடைய மகிமையின் பிரசன்னத்தால் அதைப் பிரகாசிக்கச்செய்வார். அவரே சூரியனும் வெளிச்சமுமாயிருப்பதால், அங்கு சூரியன் உதித்து, பிரகாசிக்க வேண்டிய அவசியமில்லை. அந்நகரத்திற்குள் வருபவரெல்லாம் அவரின் வெளிச்சத்தில் நடப்பார்கள். நம்மை அந்நகரத்தில் சேர்க்கும் நாள் வெகுசீக்கிரம் வரும் என்று அறிந்து சந்தோஷப்படுகிறாயா? அந்த நாளை யோவான் கண்டான். அவ்வாறே, கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும். `இதோ சூரியனைப் போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமம் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’. (மல்கியா 4: 1-3) சூரியன் விசுவாசிகளின்மேல் முழு வெளிச்சத்தோடும் பிரகாசிக்கும் என்று இவ்வசனத்தின்மூலமாய் அறியலாம். ஆம், ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலும் தேவகுமாரன் முழு வல்லமையோடும் பிரகாசிப்பார். நமக்கென்று பாடுபட்டு மரித்த அவர் அதோ அங்கே நியாயாதிபதியாக நிற்கிறார். தேவனுடைய நியாயத் தீர்ப்பின் கோபாக்கினையை அவர் தாமே சுமந்தார். தேவனுடைய உக்கிரமான கோபத்தின் ஆலையைத் தனியாக மிதித்தார். நான் முன்கூறியவண்ணம், அவருடைய சத்தம் பாவிக்கு நீர்வீழ்ச்சியின் இரைச்சலைப்போலவும், கடலலைகள் பாறையின்மேல் வேகமாக மோதும் போது உண்டாகும் சத்தத்தைப்போலிருக்கும். ஆனால் பரிசுத்தவானுக்கோ அது ஓடைகளின் இனிமையான ஒசைபோலிருந்து, அவன் கிறிஸ்துவுக்குள் இளைப்பாறித் திருப்தியடைவான். நீதியின் சூரியனாகிய அவர் நம்மேல் பிரகாசித்து, `பயப்படாதே, நான் இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர். என்னைத் தவிர வேறொருவருமில்லை. நான் அல்பாவும் ஓமேகாவும் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாயிருக்கிறேன்’ என்று கூறி, அவருடைய அன்பின் கதிர்களால் நம்மை அனல் மூட்டுகிறார். அவரே பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம், பதினாயிரம்பேரில் சிறந்தவர். ஆம். கர்த்தருடைய நாள் வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறது. அந்தநாளில் நீதியின் சூரியன் அவர் நாமத்திற்குப் பயந்திருக்கிறவர்கள்மேல் உதிக்கும். ஜெயக்கிறிஸ்து வெளி 1: 17-18) `நான் அவரைக் கண்டபோது செத்தவனைப் போல அவருடைய பாதத்தின் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி; பயப்படாதே, நான்முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன், மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவரா யிருக்கிறேன்’. மாம்சத்தில் தோன்றிய எவனும் அத்தரிசனத்தின் முழு மகிமையையும் கண்களால் காணமுடியாது. யோவான் அவரைக் கண்டபோது, பெலன் முழுதும் குன்றிப்போய், செத்தவனைப்போல் அவருடைய பாதத்தில் விழுந்தான். அப்பொழுது அவருடைய கரம், அன்பின் மிகுதியால் அவனைத் தொட்டு, அவருடைய ஆசீர்வதிக்கும் சத்தமும் அவனை நோக்கி, `பயப்படாதே, நான்முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். மரித்தேன். ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்’ என்றது. நாம் ஏன் பயப்படவேண்டும்? சிலுவையில் மரித்து, பாதாளத்தில் இறங்கியதன்மூலம் இயேசு நியாயத் தீர்ப்படைந்தார்; பாவக் காயங்களை முழுவதுமாக ஏற்றார். ஆகையால் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. நமக்காய்ப் பரிந்து பேசின நியாயவாதியே (ATTORNEY) இப்பொழுது நமது நியாயாதிபதியாயிருந்து நம்மேலிருந்த குற்றச்சாட்டுகளையெல்லாம் நீக்கிவிட்டார். ஆகையால் நமக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. பின்னை ஏன் சபை பயப்படவேண்டும்? அவர் செய்த எந்த வாக்குத்தத்தத் தையாகிலும் இதுவரை நிறைவேற்றத் தவறியிருக்கிறாரா? அப்படியெனில், தண்டனைக்கோ மரணத்திற்கோ சபை ஏன் பயப்பட வேண்டும்? இவைகளெல்லாம் மேற்கொள்ளப் பட்டுவிட்டன. காணக்கூடியதும் காணக்கூடாததுமான உலகங்களை வென்ற மகத்தான வீரர் இங்கிருக்கிறார். முப்பத்துமூன்று வயதில் உலகம் முழுவதையும் வென்று படையெடுக்க வேறு நாடுகளில்லாமையால், பாவமான ஜீவியத்தில் ஈடுபட்டு மரித்த மகா அலெக்ஸ்Hண்டரைப் போன்று அவர் பாவத்தினால் தோற்கடிக்கப்பட்டவரல்ல. ஐரோப்பா முழுவதையும்வென்று, கடைசியில் வாடர்லு (WATERLOO) யுத்தத்தில் முறியடிக்கப்பட்டு, எல்பாவிற்கு நாடு கடத்தப்பட்ட நெப்போலியனைப்போன்று அவர் மனிதரால் தோற்கடிக்கப்பட்டவரல்ல. எதுவுமே இயேசுவை மேற்கொள்ள முடியாது. தாழ்விடங்களில் இறங்கின அவர் இப்பொழுது உன்னதங்களுக்கு ஏறி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைப் பெற்றிருக்கிறார். ஆம், அவர் மரணத்தையும் பாதாளத்தையும் மேற்கொண்டு அதன் திறவுகோலை யுடையவராயிருக்கிறார். அவர் கட்டவிழிப்பது எதுவோ அது கட்டவிழ்க்கப் பட்டிருக்கும். அவர் கடடுவது எதுவோ அது கட்டப்பட்டிருக்கும்.அதை யாரும் மாற்றமுடியாது. அவருக்கு முன்பு வெற்றி சிறந்தவர் யாருமில்லை. அவரைத் தவிர வெற்றிசிறப்பவர் வேறு யாருமில்லை, அவரே ரட்சகர், மீட்பர், அவர் ஒருவரே தேவன், `கர்ததராகிய இயேசு கிறிஸ்து’ என்பது அவருடைய நாமம். `யோவானே பயப்படாதே. சிறுமந்தையே, பயப்படாதே எனக்குள்ளதெல்லாம் நீ சுதந்தரிப்பாய், நான் உன் நடுவில் நிற்கும் போது, என் வல்லமையையும் பலனையும் உனக்கே அளிக்கிறேன். நான் பயத்தையும் தோல்வியையும் கொடுக்க வராமல், அன்பையும், தைரியத்தையும், திறமையையும் கொடுப்பதற்கே வந்திருக்கிறேன். எனக்குக் கொடுக்கப்பட்ட சகல அதிகாரத்தையும் உனக்கே அளிக்கிறேன். நீ கூறும் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றுவேன். நான் உன்னோடு செய்த உடன்படிக்கை அதுவே. அது ஒருபோதும் தவறுவதில்லை’ என்று அவர் கூறுகிறார். ஏழு நட்சத்திரங்களும் ஏழு குத்துவிளக்குகளும் வெளி 1:20: `என் வலது கரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம், நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்’. இவ்விரண்டு இரகசியங்களின் உண்மையை நாம் முன்னரே அறிந்தோம். ஆனால் இவ்வேழு தூதர்களின் பெயர்களை நான் இதுவரை தெரியப்படுத்த வில்லை. கர்த்தருடைய உதவியைக் கொண்டு இந்த ரகசியமும் நமக்கு வெளியரங்கமாகும். வேதத்தில் சொல்லப்பட்ட ஏழு சபைகளின் காலங்களை நாமறிவோம். ஒவ்வொரு சபையின் காலத்தையும் நாம் தொடர்ச்சியாகச் சிந்தித்து, முடிவாக நாம் ஜீவிக்கும் கடைசி சபையின் காலத்தை ஆராய்வோம். இவ்வத்தியாயம் முடியுமுன்பு, கடைசி முறையாக, தம்முடைய வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டு பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் நிற்கும் அந்தக் காட்சியையும் பாருங்கள். ஆ! சர்வவல்லமை பொருந்திய தேவனாக அவர் நிற்கும் காட்சி பிரமிக்கத்தக்கதாய் இருக்கிறதல்லவா? அவரே நியாயாதிபதி, ஆசாரியன், ராஜா, கழுகு, ஆட்டுக்குட்டி, சிங்கம், அல்பா, ஓமெகா, ஆதியும் அந்தமுமானவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இருந்தவர். இருக்கிறவர், வருகிறவர், சர்வவல்லவர், எல்லாவற்றிற்கும் எல்லாமானவர், விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமானவர். அவருடைய பலியின் மூலம், நமக்கு இரட்சிப்பை சம்பாதித்துக் கொடுத்த ஆட்டுக்குட்டியானவர் பாத்திரராயிருக்கிறார். சகல வல்லமையோடும் மகத்துவத்தோடும், சகல அதிகாரங்களையும் பெற்றவராக இப்பொழுது நியாயாதிபதியாக இருக்கிறார். ஆம், அக்குத்துவிளக்குகளின் மத்தியில் தமது கரத்தில் நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டு அவர் நிற்கிறார். இரவில் குத்துவிளக்குகள் வெளிச்சத்திற்கு உபயோகப்படும். குத்துவிளக்குகளின் காட்சி அது இரவு நேரம் என்பதை அறிவுறுத்துகிறது. அவர் கரத்திலுள்ள நட்சத்திரங்களும் இரவு நேரத்தில் சூரிய ஒளியைப் பிரதிபலித்துப் பிரகாசிக்கின்றன. ஆம், சபையானது இருளில் விசுவாசத்தைக் கைக்கொண்டு நடக்கிறது. அவளுடைய மணவாளன் இப்பூலோகத்திலிருந்து எடுக்கப்பட்டாலும், பரிசுத்த ஆவி சபைகளின் மூலம் பிரகாசித்து, பாவம் நிறைந்த இவ்வுலகத்திற்கு வெளிச்சம் கொடுக்கிறது. நட்சத்திரங்களும் அவருடைய வெளிச்சத்தைப் பிரதிபலித்துக் காண்பிக்கின்றன. ஆவியில் தணிந்து இருளாயிருக்கும் இந்நேரத்தில் அவருடைய வெளிச்சம் மாத்திரமே பிரகாசிக்கிறது. மத்தியில் காணப்படும் இயேசுவிடத்திலிருந்து சபையானது வெளிச்சத்தையும் உஷ்ணத்தையும் பெற்று, அவர் செய்த கிரியைகளைத் தானும் செய்ய அதிகாரம் பெறுகிறது. யோவானுக்குக் கிடைத்த காட்சி நமக்கும் கிடைக்கட்டும், அந்நாளில் நாம் அவர்முன் நிற்பதற்கு எவ்வளவு பரிசுத்தமாய் இருக்கவேண்டும். உங்களுடைய ஜீவியத்தை இதுவரை தேவனுக்குக் கொடுக்க வில்லையெனில் இந்நேரமே உங்கள் இருதயத்தைக் கர்த்தரிடத்தில் திருப்பி, நீங்கள் இருக்கும் ஸ்தலத்திலே முழங்காற் படியிட்டு, உங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்புக் கோரி, உங்களுடைய ஜீவியத்தை அவருக்குச் சமர்ப்பியுங்கள். பின்னர் ஏழு சபைகளின் காலத்தைக் குறித்து அறிய நாமெல்லாரும் முற்படுவோம். அபாத்திரரான அவருடைய ஊழியக்காரனாகிய எனக்குத் தேவன் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்த நான் வேண்டிக்கொள்கிறேன். *** மூன்றாம் அத்தியாயம்: எபேசு சபையின் காலம் THE EPHESIAN CHURCH AGE சபையின் காலங்களின் முகவுரை சபையின் காலங்களுக்குரிய செய்தியை நீங்கள் நன்கு அறியவேண்டுமென, தூதர்களின் பெயர்களையும், ஒவ்வொரு சபையின் கால நீடிப்பையும், இன்னும் சபைகளுக்கடுத்த வேறு முக்கியமான காரியங்களையும் நான் எவ்வாறு நிர்ணயித்தேன் என்பதனை விளக்க விரும்புகிறேன். சபையின் காலங்களைப் பற்றிய ஆராய்ச்சி, நான் இதுவரை ஆராய்ந்த சத்தியங்கள் எல்லாவற்றிலும் மிகவும் கடினமாக இருந்ததால், காலங்களின் சத்தியத்தைப் பரிசுத்த ஆவி எனக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று, அநேக நாட்களாய் அவருடைய நடத்துதலுக்காக அவருடைய சமூகத்தில் காத்திருந்தேன். இதன் பின்னர், சபையின் காலங்களோடு சம்பந்தப்பட்ட வேத வசனங்களையும், பட்சபாதமின்றி எழுதப்பட்ட சபையின் சரித்திரங்களையும் படிக்கலானேன். கர்த்தர் என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவி கொடுத்து, நான் இவைகளைப் படிக்கும்போதே, அநேக நூற்றாண்டுகளாக சபைகளில் நடந்த சம்பவங்களையும், இக்கடைசி காலங்களில் நடக்கவிருப்பவைகளையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தினார். ஒவ்வொரு காலத்துக்குரிய தூதனை நியமிக்க நான் ஆதாரமாகக் கொண்ட கொள்கை வேத சம்பந்தப்பட்டது. தேவன் ஒரு போதும் மாறார் என்றும், அவருடைய வழிகளும் மாறாதவைகள் என்பதும் நாமறிந்ததே. `இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்’ (எபி 13:8) என்று வேதம் உரைக்கிறது. அன்றியும், தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன். அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமூகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படி செய்துவருகிறார். முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்’ (பிரசங்கி 3:14-15) என்று சாலொமோன் ஞானி கூறுகிறான். அப்படியெனில், என்றென்றும் மாறாத தேவன் முதலில் எதைச் செய்தாரோ அதையே கடைசிக் காலம் வரைக்கும் ஒரு மாற்றமுமின்றி செய்துகொண்டே வருவார். இந்தச் சத்தியம் சபையின் காலங்களுக்கு அழகாக பொருந்தும். தேவன் முதலாவது சபையின் காலத்தில் தூதனை நியமித்து, அந்த ஊழியத்தின்மூலம் தேவனுடைய தன்மையை வெளிப்படுத்தின தூதன், மற்றெல்லாச் சபையின் காலங்களிலுள்ள தூதர்களுக்கு முன்மாதிரியாயிருப்பான். அதாவது, இத்தூதர்களின் ஊழியங்களின் முகாந்திரமாய், தேவனுடைய தன்மைகளனைத்தும் வெளிப்படும். ஆம், முதலாம் சபையின் காலத்தில் தேவன் செய்ததையே, கடைசி காலம் வரைக்கும் செய்ய விரும்புவார். பரிசுத்த ஆவியினால் எழுதப்பட்ட வேத வசனங்களின் மூலம், முதலாவது சபை ஸ்தாபிக்கப்பட்ட விதத்தையும், தேவன் இச்சபையின் மூலம் தம்மை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதையும் நான் நன்கு அறிவோம். தேவ வார்த்தையைக் கொண்ட வேத வசனங்கள் ஒருபோதும் மாறாதவை; ஏனெனில் வார்த்தையே தேவன், `ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது’ (யோவான் 1: 1) ஏவாளைப் போன்று வார்த்தையில் ஒன்றை மாற்றினாலும், அது நமக்குப் பாவத்தையும் மரணத்தையும் வருவிக்கும். `ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசனப் புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப் போடுவார். (வெளி 22: 18-19) அப்படியெனில், பெந்தேகோஸ்தே காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சபையே நமக்கு ஒரு நியமனமாகும் (STANDARD). இதுவே உண்மையான சபைக்கு ஒரு எடுத்துக்காட்டு. வேத பண்டிதர்கள் யாது கூறினாலும், அதைத் குறித்து குழப்பமடைய வேண்டாம். தேவன் தம்முடைய திட்டத்தை ஒரு போதும் மாற்றவில்லை. பெந்தேகோஸ்தே காலத்தில் தேவன் செய்த கிரியைகளையே கடைசிச் சபையின் காலம் முடியும்வரை செய்வார் என்பது உறுதி. அப்போஸ்தலரின் காலம் முடிவடைந்து விட்டதென்று இக்காலத்து வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது முற்றிலும் தவறாகும். இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகிய பன்னிருவரை மாத்திரம் இவர்கள் அப்போஸ்தலர்களாகக் கருதுகின்றனர். `அப்போஸ்தலன்’ என்றால் `அனுப்பப்பட் டவன்’ என்று அர்த்தம். இந்தக்காலத்திலும் அநேகர் சுவிசேஷம் பரவுவதற்கென அனுப்பப்படுகின்றனர். இவர்கள் அப்போஸ்தலர்கள்’ என்று அழைக்கப்படாமல் `சுவிசேஷகர்’ (MISSIONARIES) என்று அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு மக்களால் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும்வரை, அப்போஸ்தலரின் காலம் முடிவு பெறவில்லை. மேலும், வேதாகமம் முழுவதும் எழுதப்பட்டுவிட்டதால் பரிசுத்த ஆவியின் வல்லமை வெளிப்படும் காலம் முடிந்துவிட்டதென இவர்கள் தவறான அபிப்பிராயம் கொள்கின்றனர். இதற்கு வேதத்தில் ஒரு ஆதாரமும் கிடையாது. அதற்கு மாறாக, பரிசுத்த ஆவியின் வல்லமை வெளிப்படும் காலம் முடிவடையவில்லை என்பதற்கு வேத வாக்கியங்களின் மூலம் அநேக சான்றுகளுண்டு. `பேதுரு அவர்களை நோக்கி, நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது (அதாவது அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் மூலம் பெற்றிருந்த வல்லமையைக் குறித்த வாக்குத்தத்தம்) உங்களுக்கும் (யூதர்களுக்கும்), உங்கள் பிள்ளைகளுக்கும் (யூதர்களுக்கும்), நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் (அதாவது யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும்) உண்டாயிருக்கிறது). (அப்2:38-39). தேவன் மக்களை வரவழைப்பதை நிறுத்தும்வரை, பெந்தேகோஸ்தேயின் செய்தியும் வல்லமையும் ஒருக்காலும் ஒழியாது. பெந்தேகோஸ்தே காலத்தில் சபைக்கு அளிக்கப்பட்ட வல்லமை, சபையைவிட்டு எடுபடமுடியாத உரிமையாயிற்று, இந்த சபை தேவனுடைய சுத்த வார்த்தையைப் பின்பற்றினது; பரிசுத்த ஆவியின் வல்லமையைக் கொண்டு அற்புதங்களையும் அடையாளங்களையும் நிகழ்த்தியது. `ஆகையால் நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய் கவனிக்க வேண்டும். ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்த செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும் தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து கொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வோம்’ (எபி 2: 1-4) ஆம். ஆதித்திருச்சபை மனிதரால் ஸ்தாபிக்கப்பட்டு நடத்தப்பட்டதல்ல. பரிசுத்த ஆவியானவரே அச்சபையை வழிநடத்தி வந்தார். அது குறைந்த மக்களைக் கொண்டதாயிருந்தது. அது வெறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, மரணத்திற்கேதுவாக துன்புறுத்தப் பட்டாலும் தேவ வார்த்தையில் உறுதியாய் நின்று, கர்த்தருக்கு உண்மையாய் ஜீவித்தது. தேவனும் அவருடைய வழிகளும் ஒருபோதும் மாறுவதில்லை என்று நான் கூறினேன். ஆனால் சபைகளும் அவைகளின் தூதர்களும் மாறக்கூடாது என்று நான் சொல்லவில்லை. சபையானது தேவனல்ல. ஆகையால் சபை மாறுவதற்கு ஏதுவுண்டு. தேவன் தம்முடைய வழிகளில் மாறாதவராயிருக்கிறபடியால், ஆதிச்சபையில் அவர் செய்த கிரியைகளை மாதிரியாகக் கொண்டு உண்மையான சபையை நிர்ணயிக்க முடியும் என்றுதான் கூறினேன். போலிச் சபைகளிலோ தேவனின் கிரியைகளை நாம் காண்பதில்லை. ஒவ்வொரு காலத்திலுண்டாகும், உண்மையான சபை, பெந்தெகோஸ்தே காலத்தின் மூல சபையைப் போன்று இருக்க முயற்சிக்கும். அதேவிதமாக, இந்தக் காலத்தின் உண்மையான திருச்சபையும் ஆதித் திருச்சபையோடு ஒத்ததாயிருக்கும். சபைகளின் தூதர்களும், பவுல்பெற்ற தேவனுடைய ஆவியை அவர்களும் பெற்றவர்களாய், பவுலைப் போன்று மனிதரின் கட்டுகளுக்கடங்காமல், தேவனுக்குத் தங்களைப் பூரணமாக ஒப்புவித்து, தேவனுடைய வசனத்தை மாத்திரம் பிரசங்கித்து, பரிசுத்த ஆவியின் தன்மையை வெளிப்படுத்த முற்படுவர். மேற்கூறியவைகளை ஆதாரமாகக் கொண்டு, நான் வெளிப்படுத்தின விசேஷத்தையும், சபைகளின் சரித்திரத்தையும் படித்து பரிசுத்த ஆவியின் உதவியினால் சபைகளின் காலங்களையும், அக்காலத்தின் தூதர்களையும், பெந்தேகோஸ்தே காலம்முதற்கொண்டு காலம் முடியும்வரை, தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்ற சபைகளின் தூதர்கள் செய்த ஊழியத்தையும் என்னால் வகையறுக்க முடிந்தது. பெந்தேகாஸ்தே காலங்களின் சபைகளில் நிகழ்ந்த கிரியைகளே உண்மையான சபையில் காணப்படும் செயல்கள் என்பதை நாம் புரிந்துகொண்டால், காலங்கள்தோறும் சபைகள் எவ்வாறு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றத் தவறின என்பதை இவைகளை ஆதாரமாகக் கொண்டு நிச்சயிக்கலாம். ஆதிச் சபையில் பக்கவழியாய் நுழைந்த தவறுகள் (இவைகள் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும், வெளிப்படுத்தின விசேஷத்திலும், நிருபங்களிலும் சொல்லப்பட்டிருக் கின்றன). காலங்கள்தோறும் அதிகப்பட்டு, பகிரங்கமாகி, கடைசிக் காலமாகிய லவோதிக்கேயா சபையின் காலத்தில் சத்தியத்தை முழுவதும் மறைத்து அந்தகாரப்படுத்தும். தவறுகள் நிறைந்த இந்தக் காலங்களில் தேவன், தமக்குச் சொந்தமானவர்கள் வஞ்சிக்கப்பட அனுமதிப்பாரா என்ற கேள்வி நம்முடைய எண்ணங்களில் எழுகிறது. தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட முடியாது என்று வேதம் திண்ணமாய்க் கூறுகிறது. ஏனெனில் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்’ (மத் 24 : 24 கூடுமானால், என்ற வாக்கு, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப் படுவதில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.) மேற்கூறிய வசனத்தின் மூலம், ஒரு உண்மையான சபையும், கள்ளத் தீர்க்கதரிசிகளைக் கொண்ட ஒரு கள்ளச் சபையும் உண்டு என்று நாமறிகிறோம். கள்ளச்சபை எப்பொழுதுமே உண்மையான சபையின் ஸ்தானத்தை அபகரிக்க முயற்சித்து, அதுவே உண்மையான சபையென நிரூபிக்கவும், அதை அழிக்கவும் முயலும். ஆதிச் சபையின் காலங்களில் இங்ஙனம் நிகழ்ந்ததென்று அப்போஸ்தலருடைய நடபடிகளின் மூலமாகவும் நிருபங்களின் மூலமாகவும் அறியலாம். ஆதிச் சபையின் காலங்களில் மாத்திரமல்ல, ஏழுசபைகளின் காலங்களிலும் இவை தொடர்ந்து சம்பவித்தன. நல்லதும் பொல்லாததும் ஒருங்கே பழைய ஏற்பாட்டின் காலங்களிலும் உண்டாயிருந்தன என்று நான் நிரூபிக்க விரும்புகிறேன். ஏதேன் தோட்டத்தில் இரண்டு மரங்கள் உண்டாயிருந்தன. அவைகளிலொன்று நல்லது; மற்றது கெட்ட மரம். ஒருமரம் ஜீவனைக் கொடுத்தது; மற்றொரு மரம் மரணத்தைப் பிறப்பித்தது. இருவர் கர்த்தருக்குப் பலி செலுத்தினர். `சில நாள் சென்ற பின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையான வைகளிலும் சிலவற்றைக் கொண்டு வந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார். காயீனையும் அவன் காணிக் கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை.’ (ஆதி 4: 3-5) காயீன் பொல்லாங்கனால் உண்டாயிருந்து (1 யோவான் 3: 12) அவனுடைய தகப்பனைப்போல் பொல்லாங்கனாயிருந் தான். ஆபேல் தேவனுக்கு முன்பாக செம்மையானவனா யிருந்தான். ஈசாக்குக்கும் ரெபேக்காளுக்கும் இரட்டைக் குழந்தைகள் (ஏசா, யாக்கோபு) பிறந்தனர். யாக்கோபு தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன்; ஏசாவோ கைவிடப்பட்டவன். இவர்களெல்லாரும் (பொல்லாங்கனும், நீதிமானும்) கர்த்தரை வழிபட்டனர். ஆனாலும் பொல்லாங்கன் நீதிமானைப் பகைத்துத் துன்புறுத்தி, சில சமயங்களில் கொலையும் செய்தான். நல்ல மரமும் கெட்ட மரமும் ஒன்றாக நடப்பட்டன. நல்லவனும் பொல்லாதவனும் ஒன்றாகவே வளர்ந்தனர். இருவரும் தேவனோடு உரிமை பாராட்டி அவரைத் தொழுது கொண்டனர். மேற்கூறிய சம்பவங்கள் இயேசு கிறிஸ்து கூறின, உவமையை ஞாபகப்படுத்துகிறது. பரலோக ராஜ்யம் நல்ல விதை விதைத்த மனுஷனுக் கொப்பாயிருக்கிறது. நிலத்தில் நல்ல விதைகள் விதைக்கப்பட்ட பின்பு, பொல்லாதவன் அவைகளின் மத்தியில் களை களை நட்டான். வித்தியாசமான விதைகளிலிருந்து தோன்றிய இருவகை பயிர்கள் (அதாவது மக்கள்) ஒன்றாகவே வளருகின்றன. அவைகள் ஒன்றாகவே நிலத்தின் உரத்தினால் போஷிக்கப்பட்டு, அந்த சூரிய வெளிச்சத்தையும், மழையையும், மற்ற அனுகூலங்களையும் பகிர்ந்து, ஒன்றாகவே அறுவடை செய்யப்படுகின்றன. சபையின் காலங்களையும் முத்திரைகளின் ரகசியங்களையும் படிக்கும்போது இந்த சத்தியத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கடைசி காலத்தில், களைகளெல்லாம் சுட்டெரிக்கப்படுவதற்கென ஒன்றாய்க் கட்டப்படுகின்றன வென்றும், கோதுமை மணிகள் கர்த்தரால் களஞ்சியங்களில் சேர்க்கப்படு மென்பதையும் மறவாதீர்கள். நல்லதும் பொல்லாங்கானதும் ஒன்றாயிருக்கிறது போலவே, கர்த்தர் கிரியைசெய்யும் எழுப்புதல்களில் சாத்தானும்கிரியை செய்கிறான். வேல்ஸ் தேசத்தில் நேர்ந்த மகத்தான எழுப்புதலில் (WELSH REVIVAL), சாத்தானின் வல்லமை அதிகரித்து, மக்களின் கவனத்தைத் தேவனிடத்தினின்று திருப்புவதற்கென, அவன் அநேகரைப் பைத்தியமாக்கினான். வெஸ்லியின் காலத்திலும், தேவனுடைய வல்லமையைக் குலைக்கவேண்டி, மக்கள் சாத்தானின் வல்லமையினால் விசித்திரமான காரியங்களைச் செய்வார்களாம். லூதரும், அசுத்த ஆவி பிடித்த அநேகரின் மத்தியில் சுய நினைவு பெற்றிருந்ததே அவருடைய ஊழியத்தில் நேர்ந்த ஒரு பெரிய அதிசயம் என்று கூறப்படுகிறது. இந்தக் கடைசிக் காலத்தின் ஊழியத்தையும், பொல்லாத ஆவிகள் எதிர்ப்பதை நீங்களறிவீர்கள். நல்லவரும் பொல்லாதவரும் ஒருங்கே ஜீவித்து, அவர்களுக்குள் கிரியை செய்யும் ஆவிகளின் தன்மைகளைப் புலப்படுத்துகின்றனர். `பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதனால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்; மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து அவர்களை (அந்திக் கிறிஸ்துவின் ஆவியை) ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் (தேவனுடைய ஆவி) பெரியவர்.’ (1 யோவான் 4: 1 - 4). `பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகக் கண்டது. ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக்காமவிகாரத் திற்கேதுவாகப்புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய மெய்த்தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் (பரிசுத்தவான்களல்லாதவர்கள்) பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள் (இவர்கள் வாசலின் வழியாய் பிரவேசிக்காததால் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக் கிறார்கள்) அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. இவர்கள் உங்கள், அன்பின்விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூடவிருந்துண்டு...’ (யூதா 3, 4, 12). உண்மையான சபையும் கள்ளச் சபையும் ஒன்றுக்கொன்று இணைந்து, ஒன்றாக நடப்பட்டாலும், அவைகள் வித்தியாசமான வித்துக்களினின்று தோன்றின என்பது இவ்வேத வாக்கியங்களின் மூலம் விளங்குகிறது. யோவான் எழுதும் ஏழு சபைகளும் ஆசியா மைனரில் உள்ளன. அவைகளெல்லாம் புறஜாதிகளின் சபைகளாகும். பெரும்பாலும் யூதரைக் கொண்ட எருசலேமிலுள்ள சபைக்கு அவன் எழுதவில்லை. இதன் காரணமென்னவெனில், தேவன் யூதரைவிட்டுப் புறஜாதிகளிடத்தில் திரும்பி, சபைகளின் காலங்களில் புறஜாதிகளோடு சம்பந்தங் கொண்டு, அவர்களினின்று தமக்கென்று புறஜாதியாகிய மணவாட்டியைத் தெரிந்துகொண்டார். அப்படியெனில், `சபையின் காலங்களின்’ முடிவில் `புறஜாதியாரின் நிறைவு’ உண்டாகும். `அடுத்த ஓய்வு நாளிலே கொஞ்சங் குறையப் பட்டணத்தாரனை வரும் தேவ வசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள். யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து பவுலினால் சொல்லப்பட் டவைகளுக்கு எதிரிடையாய் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள். அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவ வசனத்தைச் சொல்லவேண்டியதாய் இருந்தது; நீங்களோ, அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்து கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறாதியாரிடத்தில் போகிறோம். நீர் பூமியின் கடைசி பரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள். புறஜாதியார் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத் தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.’ (அப் 13:44-48 `இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன், தேவன் தாம் முன்னறிந்து கொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக் குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி; கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப் போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம் பண்ணின போது, அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்காற் படியிடாத ஏழாயிரம் பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே. அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது. அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது. அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே. அப்படியானால் என்ன? இஸ்ரவேல் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப் பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள். மற்றவர்கள் இன்றையத் தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள். கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும் கேளாதிருக்கிற காதுகளையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக் கிறபடியாயிற்று.’ (ரோமர் 11:1-8) `மேலும் சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன். அதென்ன வெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். இந்தப் பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு விலக்குவார் என்றும் நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது. சுவிசேஷத்தைக் குறித்து அவர்கள் உங்கள் நிமித்தம் பகைஞராயிருக் கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக் குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்பு கூறப்பட்டவராயிருக்கிறார்கள். தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே’. (ரோமர் 11:25-29) ஆசியா மைனரின் ஏழு பட்டினங்களில் ஸ்தாபிக்கப்பட்ட ஏழு சபைகளில் காணப்பட்ட விசேஷ குணாதிசயங்கள், முதலாம் நூற்றாண்டுத் தொடங்கித் தற்போதைய காலம்வரை தொடர்ச்சியாக இருந்த சபைகளின் குணாதிசயங்களை முன்கூட்டி அறிவித்தன. எபேசு சபைக்குரிய தூது வெளி:2:1-7. `எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்; ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது: உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும் நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக் கிறதையும் என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிராயசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்தக் கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில் உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கி விடுவேன். நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய். இது உன்னிடத்திலுண்டு. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளு கிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன் என்றெழுது’. எபேசு சபையின் தூதன் பவுல் அப்போஸ்தலன் எபேசு சபைக்குத் தூதனாயிருந்தான். புறஜாதிகளின் காலத்தின் முதல் சபைக்கு அவன் தூதனாக நியமிக்கப்பட்டான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. புறஜாதிகளுக்கு முதன்முதல் சுவிசேஷத்தைக் கொண்டுசெல்லும் அதிகாரம் பேதுருவுக்குக் கொடுக்கப்பட்டாலும், அவர்களுடைய அப்போஸ்தலனும் தீர்க்கதரிசியுமாயிருக்கும் சிலாக்கியம் பவுலுக்கு அருளப்பட்டது. புறஜாதிகளுக்குரிய சத்தியத்தைத் தேவனே அவனுக்கு வெளிப்படுத்தினதன் மூலம் புறஜாதிகளின் அப்போஸ்தலனாகும் தகுதியை அவன் பெற்றான். எருசலேமிலுள்ள மற்ற அப்போஸ்தலரும் இதை ஆமோதித்தனர். `நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. மனுஷனால் கற்றதுமில்லை, இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். நான் யூத மார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப் பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்தி வைராக்கியமுள்ளவனாகயிருந்தேன். அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும் எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும் அரபி தேசத்திற்குப் புறப்பட்டுப் போய் மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பி வந்தேன். மூன்று வருஷம் சென்ற பின்பு பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன். கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை. (கலா. 1:12-19), `நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக் கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன்,’ (கலா. 2:2), `அல்லாமலும் எண்ணிக் கையுள்ளவர்களாயிருந் தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர் களாயிருந் தாலும் எனக்குக் கவலையில்லை, தேவன் மனுஷரிடத்தில் பட்சாபாதமுள்ளவரல்லவே. அதுவுமல்லாமல், விருத் தசேதன முள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத் தினபடியால், விருத்த சேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்கு கையளிக் கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள் கண்டு எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும் தாங்கள் விருத்தசேதன முள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கைகொடுத்து தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்கு மாத்திரம் சொன்னார்கள்.’ (கலா 2: 6-10). புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே....... என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்’. (ரோமர் 11:13-14) முதலாம் நூற்றாண்டின் மத்தியில் பவுல் எபேசு சபையை ஸ்தாபித்தான். எபேசு சபையின் காலம் சுமார் கி.பி. 53-ல் தொடங்கியிருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது. பவுல் ஊழியம் செய்தமுறை மற்றைய சபையின் தூதர்களும், தேவனின் உண்மையான ஊழியக்காரர்களும், தாங்கள் ஊழியத்தில் எதிர்நோக்கியிருக்கும் உச்சநிலைக்கு எடுத்துக்காட்டாயிருந்தது. பவுல் தீர்க்கதரிசன ஊழியத்தின் உச்சநிலையை யாருமே அடையவில்லை என்றுதான் நாம் கூறவேண்டும். பவுலின் ஊழியத்தின் மூன்று முக்கியமான தன்மைகள் காணப்பட்டன. முதலாவது, பவுல் தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலும் உண்மையுள்ள வனாயிருந்தான். எக்காரணத்தைக் கொண்டும், சத்தியத்தைவிட்டு அவன் வழுவவில்லை. `நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்ட வனாயிருக்கக்கடவன். முன்சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத் தையல்லாமல், வேறொருசுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட் டவனாயிருக்கக்கடவன்’ (கலா 1: 18-19). `மேலும் பேதுரு அந்தியோகியாவுக்கு’ வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடு எதிர்த்தேன். இப்படி அவர்கள் சுவிசேத்தின் சத்தியத்திற்கேற்றபடி நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால், யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம் பண்ணலாம்?’ (கலா 2 : 11, 14) தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்னு அவன் ஒத்துக்கொள்ளக் கடவன்’ (1 கொரி 14: 36-37) மேற்கூறிய வசனங்கள், பவுல் சத்தியத்தை உண்மையாகக் கடைபிடித்தான் என்று காண்பிக்கின்றன. பவுல் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்தவனல்ல. இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணின மோசேயைக் கர்த்தரின் ஆவி வழிநடத்தினது போல, பவுலையும் அந்த ஆவி வழிநடத்திற்று. எருசலேமின் சபைகளுக்குப் பவுலின் மேல் யாதொரு அதிகாரமும் உண்டாயிருந்ததில்லை. தேவனே அநேக நாடுகளுக்குச் சுவிசேஷத்தைக் கூற அவனை வழிநடத்தினார். பவுல் மனிதருக்குக் கீழ்ப்படியாமல், தேவனுக்கு மாத்திரம் கீழ்ப்படிந்தான். `மனுஷராலுமல்ல, மனுஷர் மூலமாயுமல்ல, இயேசு கிறிஸ்துவினாலும் அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்’ (கலா 1:1). ஆனாலும் என்னுடனே கூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்ததேசனம் பண்ணிக் கொள்ளும்படிக்குக் கட்டாயம் பண்ணப்படவில்லை. கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவு பார்த்து நம்மை நியாயப் பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும் பொருட்டாகப் பக்க வழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று. சுவிசேஷத்தின் சத்தியம் உங்களில் நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை’. கலா 2:3-5). இரண்டாவதாக, பவுலின் ஊழியம் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நடத்தப்பட்டு, தேவ வசனத்தின் சத்தியங்களை உறுதிப்படுத்தியது. `சகோதரரே’ நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல. தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ள தாயிராமல் ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட தாயிருந்தது.’ (1 கொரி 2: 1-5) `லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் சப்பாணியாயிருந்து, ஒரு போதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து பவுல் பேசுகிறதைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப் பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்’ (அப் 14: 8-10) `அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்துகீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான். உடனே பவுல் இறங்கிப்போய், அவன் மேல் விழுந்து அவனை அணைத்துக் கொண்டு, கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான், பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டு வந்து மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.’ (அப் 20: 9-12) `தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர் கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது, அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான். புபிலியினுடைய தகப்பன் ஜுரத்தினாலும், இரத்த பேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான், பவுல் அவனிடத்தில் போய் ஜெபம் பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். இது நடந்த பின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து குணமாக்கப்பட்டார்கள்’ (அப் 28: 7-9). `அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும் உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே’ (2 கொரி 12:2). மூன்றாவதாக, அவனுடைய ஊழியம் தேவனால் அளிக்கப்பட்டதால், அவ்வூழியத்தின் மூலம் அநேக ஆத்துமாக்களைப்பெற்றான். `மேன்மை பாராட்டி, புத்தியீனனானேன், நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும் மகாபிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக் கொள்ளப்படவேண்டிய தாயிருக்கிறதே’. (2 கொரி 12:11). `நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயி ராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன், கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையா யிருக்கிறீர்களே’. (1 கொரி 9:2). `நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால் உங்களுக்காகத் தேவ வைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன்’. (2 கொரி 11:2). கணக்கற்ற புறஜாதிகளைக் கர்த்தரிடத்தில் கொண்டு வரப் பவுல் காரணமாயிருந்தான். அவர்கள் நீதியின் கனிகளைக் கொடுத்து, மணவாட்டியின் சபையின் ஒரு பாகமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தமாகும் வரைக்கும், அவர்களை வார்த்தையால் போஷித்துப் பாதுகாத்தான். இயேசுகிறிஸ்து யோவானுக்குத் தம்மை வெளிப்படுத் தும் முன்பு, பவுல் இரத்த சாட்சியாக மரித்தான் என்று பாரம்பரியம் கூறுகிறது. தன்னுடைய ஜீவிய காலத்தில் பவுல் நடத்தி வந்த ஊழியத்தை, யோவான் பவுலின் மரணத்திற்கு பின்பு தொடர்ந்து நடத்தி வந்தான். இந்த வெளிப்படுத்தல் யோவானுக்கு அளிக்கப்படும் முன்பு பவுல் இறந்து விட்டதால், அவன் எபேசு சபையின் தூதனாக இருக்க முடியாது என்று கூறுவது தவறாகும். ஒவ்வொரு சபைக்குரிய தூதனும் எப்பொழுது தோன்றி மறைந்தாலும் அந்தச் சபையின் காலத்தில் வார்த்தையை ஆதாரமாகக் கொண்ட ஊழியத்தின் மூலம் தேவனுடைய தன்மையை வெளிப்படுத்துகிறான். எபேசு சபையின் காலத்தில் பவுல் அவ்வாறு செய்தான். எபேசு பட்டினம் எபேசு பட்டினம் ஆசியாவிலுள்ள மூன்று பெரிய பட்டினங்களில் ஒன்றாகும். எருசலேமுக்கும் அந்தியோகியாவுக்கும் அடுத்தபடியாக இது கிறிஸ்துவ மார்க்கத்தைத் தழுவினது. செல்வத்தில் சிறந்து விளங்கிய இப்பட்டினத்தை ரோமர்கள் அரசாண்டனர். கிரேக்க மொழி இப்பட்டினத்தில் வழங்கு மொழியாயிருந்தது. யோவன், மரியாள், அந்திரேயா, பிலிப்பு இவர்களனைவரும் இப்பட்டினத்தில் அடக்கம் பண்ணப்பட்டதாகச் சரித்திரக்காரர் நம்புகின்றனர். உண்மையான கிறிஸ்தவ மார்க்கத்தை இப்பட்டினத்தில் ஸ்தாபித்த பவுல், மூன்று வருஷகாலம் மாத்திரம் அச்சபையின் மேய்ப்பனாயிருந்தான். அவன் அங்கு இல்லாதபோது, ஊக்கமான ஜெபத்தினால் அதைத் தாங்கினான். தீமோத்தேயு இச்சபையின் முதல் கண்காணியானவன். `நம்முடைய இரட்சராயிருக்கிற தேவனும் நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைப்படியே, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல் விசுவாசத்தில் உத்தமகுமாரனாயிருக்கிற தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்காத படிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும், முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாத படிக்கும் நீ சிலருக்குக் கட்டளையிடும் பொருட்டாக நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக’. (தீமோ 1: 1-4). `எபேசு’ என்னும் பெயர் விசித்திரமான இரு அர்த்தங்கள் கொண்டது. அவை `குறிக்கோள்’ (AIMED AT), `குறைவுபடுதல்’ (RELAXED) என்பதே. தொடக்கத்தில் இச்சபையானது பரிசுத்த ஆவியின் பூரணத்தைப் பெற்று, `தேவனுடைய ஆழத்தை’ அறிந்து தேவனுடைய உன்னத அழைப்பின் ஜீவியத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்று முற்பட்டபோதிலும், பின்னர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் கொண்டிருந்த வைராக்கியம் குறைந்ததாய் கடைசியில் `சாத்தானின் ஆழத்தில்’ முழ்கினது. இவ்வாறு ஆதியில் கொண்டிருந்த அன்பை இச்சபை களைந்து கொஞ்சம் கொஞ்சமாக தேவனை விட்டுப் பின்வாங்கியது, எபேசு சபையின் சாத்தான் விதைத்த விதை, சபையின் காலங்களில் மரமாக வளர ஆரம்பித்து, கடைசி காலத்தில் எல்லாப் பொல்லாத பறவைகளின் உறைவிடமாயிற்று. எபேசு சபையில் காணப்பட்ட தவறு, மனித ஞானத்திற்குச் சிறியதாகத் தோன்றினபோதிலும், சாத்தான் அவளை இதன் மூலம் வஞ்சித்தான். (ஏவாளின் சிறிய தவறும், சாத்தான் அவனை வஞ்சிக்கக் காரணமாயிருந்தது). கொஞ்சக் காலம் எபேசு சபை தேவனிடத்தில் மிகவும் வைராக்கியம் கொண்டு, பின்னர் அவரை விட்டு சிறிது வழுவிப்போனது, இது நினையாத நேரத்தில் சாத்தான் அழிவின் வித்தை அதில் விதைத்தான். எபேசு பட்டினத்தில் தழுவப்பட்ட அஞ்ஞான மார்க்கம் முதலாவது சபையில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு எடுத்துக்காட்டாயிருந்தது. பின்வரும் காலங்களின் சபைகளில் களங்கம் ஏற்படக்காரணமாயிருந்தது. அநேக வருஷக் காலங்களாகக் கட்டப்பட்ட மகத்தான கோயிலில், கம்பீரமற்ற தியானாளின் உருவம் வைக்கப்பட்டிருந்தது. தியானாளின் மற்ற ஆலயங்களில் வைக்கப்பட்ட உருவங்களைக் காட்டிலும் இது வித்தியாசமாயிருந்தது. ஒரு மரத்துண்டில் அவளுடைய சாயல் உருவமற்றதாய் வெட்டப்பட்டு, அவளுடைய இரண்டு கரங்களைக் குறிக்கும் இரண்டு இரும்புக் கம்பிகள் அதில் தூக்கப்பட்டிருந்தன. முதலாவது சபையின் காலத்தில் தோன்றின அந்திக்கிறிஸ்துவின் ஆவியை இவ்வுருவம் சித்திரிக்கிறது. எபேசு மக்களிடையில் அந்திக்கிறிஸ்துவின் ஆவி அவிழ்க்கப்பட்டது. எனினும், தியானாளின் சாயல் உருவமற்றதாயிருந்தது போன்று, மக்களை பயமுறுத்தும் அளவில் அந்திக்கிறிஸ்துவின் ஆவியின் தன்மை உருவாகவில்லை. தியானாளின் இரண்டு இரும்புக் கைகளும், அந்திக்கிறிஸ்துவின் ஆவி மெதுவாக சபைகளுக்குள் பரவி, தேவனுடைய நோக்கத்தைப் பலத்த கரங்கொண்டு நசுக்க எண்ணங் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவுறக் காண்பிக்கிறது. சபையில் அந்திக்கிறிஸ்துவின் ஆவி இரகசியமாய் நுழைந்ததை முதலில் யாரும் அறியவில்லை. ஆனால் ஒரு நாளில் அவளின் கிரியைகள் போதனைகளாகி, அப்போதனைகளைச் சாம்ராஜ்யத்தின் சட்டமாக அந்த இரும்புக் கரங்கள் மாற்றும்போது, அவன் செயல்கள் பகிரங்கமாகும். தியானாளுக்கு ஏற்படுத்தப்பட்ட ஆராதனை ஒழுங்குகளும் சில காரியங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன. இவளுக்குப் பூசாரியாயிருந் தவர்கள் எல்லோரும் அண்ணகர்கள் (EUNUCHS). தேவனுடைய வசனத்தைப் புறக்கணித்து, தேவனை நாங்கள் வார்த்தையின் மூலம் அறியாமல் வேறு வகையில் அறிந்திருக்கிறோம் என்று எபேசு சபையில் கூறினவர்கள். வசனத்தின் சாரமற்ற அண்ணகர்களாகவே கருதப்பட வேண்டும். மேலும், தியானாளின் மார்க்க ஆசாரங்கள் அனைத்தும் கன்னிப் பூசாரிகளால் (VIRGIN PRIESTSSES) நடத்தப்பட்டன. ஒருநாளில், பரிசுத்த ஆவியானவர் வகித்த ஸ்தானத்தை ஆசாரங்களும், வழிபாடுகளின் முறைமையும் வகிக்குமென்று, பரிசுத்த ஆவியின் அடையாளங்கள் தேவனுடைய ஆலயங்களில் (அதாவது மனிதரில்) காணப்படுவதில்லையென்றும் இது குறிக்கிறது. இப்பூசாரிகளின் தலைவன் அரசாங்க அதிகாரத்தையும், மக்களின் செல்வாக்கையும் பெற்றிருந்தான். அதேபோன்று கூடிய சீக்கிரத்தில் சபையும் பரிசுத்த ஆவியின் நடத்துதலை நிராகரித்து மனிதனின் தலைமையையேற்று, மனிதனின் திட்டங்களின்படி சபையை நடத்துமென்று இது தெளிவுபடுத்துகிற பூசாரிகளின் ஆதிக்கத்தின் கீழிருந்த அநேக அடிமைகள் தியானாளை வழிபட நிர்பந்திக்கப்பட்டனர். சபையின் குருமார்களும், அரசியல் தந்திரத்தினாலும் அரசாங்க உதவியினாலும், தேவனுடைய வார்த்தையையும், பரிசுத்த ஆவியையும் புறக்கணித்து, அதற்குப் பதிலாக பிரமாணங்களையும், கொள்கைகளையும் சபையில் புகுத்தி, சபையின் மக்களை இவைகளுக்கு அடிமைப்படுத்துவர். இக்குருமார்களின் தலைவரும், நியாயமற்ற முறையில் சம்பாதித்தபணங்கொண்டு, மாம்சத்துக்குரிய இச்சைகளில் ஈடுபட்டனர். ஏழை மனிதர்களும் அவர்களின் பணிவிடைக் காரராய், கர்த்தரைச் சேவிக்காமல் அவர்களையே சேவித்தனர். இயேசுவும், அவருடைய தூதனும், சபைகளும் வெளி. 2- 1 `.... ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன்குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது’, `இந்த இயேசுவே ஆண்டவரும் கிறிஸ்துவுமாயிருக்கிறார்’என்று பேதுரு இவரைத் தான் குறிப்பிடுகிறான். சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய தேவன் அதோ நிற்கிறார். அவரைத் தவிர வேறொருவரில்லை. அந்த ரட்சகர் (`...இரட்சிப்பு கர்த்தருடையது, யோனா 2:9) ஏழு சபைகளின் காலங்கள் முழுவதிலும் சபைகளின் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கிறார். முதலாம் சபையின் காலத்திலிருந்தது போலவே, கடைசிச் சபையின் காலத்திலுமிருக்கிறார். ஒவ்வொரு விசுவாசிக்கும், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாக இருக்கிறார். அவர் ஆதியில் செய்ததையே இப்பொழுதும் செய்து, இனியும் செய்துகொண்டே இருப்பார். இயேசு தனிமையாகச் சபைகளின் மத்தியில் உலாவிக்கொண்டிருக்கிறார். அவருடன் வேறு யாருமில்லை, யாரும் இருக்கவும் முடியாது. ஏனெனில் அவர் மாத்திரமே தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தி, சபையைச் சம்பாதித்து அதைச் சொந்தமாக்கிக் கொண்டார். அவரே சபையின் ஆண்டவரும் எஜமானனுமாயிருக்கிறார். சபையும் அவருக்கு எல்லா மகிமையையும் அளிக்கிறது. அந்த மகிமையை அவர் யாரோடும் பகிர்ந்து கொள்வதில்லை. அவருடன் ஒரு போப்போ அல்லது ஒரு பிரதம அத்யட்க்ஷகரோ (ARCHBISHOP) இல்லை. அவருடைய பூலோக சரீரத்திற்குத் தாயான மரியாளும் அவருடனில்லை. அவரே பிதாவாயிருக்கிறபடியால், அவர் பிதாவிடம் பேசுகிறதில்லை. அவர் பரிசுத்த ஆவிக்கும் கட்டளையிடுகிறதில்லை. அவரே தேவன், நித்திய ஆவி, அவருடைய ஜீவன் சபைகளுக்குள் பாய்ந்து இரத்தம்போல் துடித்து அவைகளுக்கு ஜீவனையளிக்கிறது. அவரையன்றி ஜீவனில்லை. இரட்சிப்பு கர்த்தருடையது. நன்றாக காய்ந்த உலைக்களத்தின் உக்கிரக் கோபாக்கினையை அவர் மிதித்தபோது, அவருடன் யாரும் இருந்ததில்லை. வேறொருவரல்ல. அவரே சிலுவையில் தொங்கி தம்முடைய இரத்தத்தைச் சிந்தினார். விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவரும் அவரே. நம்முடைய அல்பாவும் ஒமெகாவும் அவரே. நாம் அவருக்கென்றே நியமிக்கப்பட்டிருக்கிறோம் ,வேறொரு வருக்கல்ல. நாம் சபைக்குரியவர்களல்ல, நாம் அவருக்கே உரியவர்கள். அவருடைய வார்த்தையே நமக்கு நியாயப் பிரமாணம். சபையின் பிரமாணங்களும், கொள்கைகளும், சட்டத்திட்டங்களும் நம்மை எவ்விதத்திலும் பாதிக்காது. ஆம், இயேசு மாத்திரமே தனியாக சபைகளின் மத்தியில் உலாவிக்கொண்டு அவருடைய சித்தத்தின்படி செய்கிறார். இதை ஒருபோதும் மறவாதீர்கள். உங்களுக்கும் தேவனுக்கும் பரஸ்பர சம்பந்தமுண்டு. அந்தத் தேவன் இயேசுவே. ஏழு நட்சத்திரங்களைத் தமது வலது கையில் கொண்டவராக அங்கே நிற்கிறார். வலது கரம் தேவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் குறிக்கிறது. `அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை, நீர் அவர்கள் மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலது கரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.’ (சங் 44:3). வலது கரத்தின் வல்லமையில் ஏழு நட்சத்திரங்கள் உள்ளன. இந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு தூதர்களாம் (வெளி 1:20). ஒவ்வொரு காலத்தின் தூதனையும் தேவனுடைய வல்லமையும், ஆதிக்கமும் தாங்குகிறது என்பதை இது குறிக்கிறது. தூதர்களெல்லோரும் பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பெற்று தேவ வார்த்தையோடு புறப்பட்டுச் செல்லுகின்றனர். அவர்கள் தேவனின் ஒளியைப் பிரதிபலிக்கிறபடியால் அவர்கள் நட்சத்திரங்களாகக் காட்சியளிக்கின்றனர். நட்சத்திரங்களைப் போலவே அவர்களுக்குச் சுய ஒளி, இல்லை. மனிதர்கள் அவர்கள் வெளிச்சத்தில் நடக்கத்தக்கதாக அவர்கள் அக்கினி ஜுவாலையை மூட்டுவதில்லை. (ஏசாயா 50:11). எல்லாரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்களானபடியால் (ரோமர் 3:29), பாவம் நிறைந்த இந்த உலகத்தின் அந்தகாரத்தில் அவர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். இந்த ஏழு தூதர்களும் மக்களுக்குத் தேவனை அறிமுகப்படுத்துகின்றனர். அவர்களை ஏற்றுக்கொள்கிறவன் அவர்களை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் (யோவான் 13:20.) அவருடைய அதிகாரத்தைக்கொண்டு அவர்கள் எல்லாவற்றையும் செய்கின்றனர். கர்த்தரும் தேவத்துவத்தின் சகல வல்லமையோடும் அவர்களைத் தாங்குகிறார். `அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் (அதாவது காலங்கள் முடியும்வரை) சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்’. (மத் 28:18-20) இந்தக் கட்டளையை அவர்கள் பெற்று, பரிசுத்த ஆவியிலும் விசுவாசத்திலும் நிறைந்து, தேவனுடைய அக்கினியினால் அனல் மூட்டப்பட்டு, சத்திய வசனத்தைக் கடைபிடிக்கின்றனர். தேவனும் அவர்களைத் தாங்குவதற்கென சபையின் மத்தியில் நிற்கிறார். சுவிசேஷம் பரவுவதற்கென அப்போஸ்தலர்கள் அனுப்பப்பட்ட முதலாம் காலத்தில் நான் ஜீவித்திருந்தால் நலமாயிருக்கும் என ஒரு விசுவாசியும் தன் இருதயத்தில் விசனப்பட அவசியமில்லை. நாம் பின்நோக்கிப் பாராமல் மேல் நோக்கிப் பார்ப்போமாக. இப்பொழுதும் ஏழு சபைகளின் மத்தியில் அவர் உலாவுவதைப் பாருங்கள். நேற்றும், இன்றும் என்றும் மாறாதவரையும், தன் வழிகளிலும் செய்கைகளிலும் மாறாதவரையும் நோக்கிப் பாருங்கள். இரண்டு பேராவது மூன்று பேராவது அவர் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவிலே வாசமாயிருந்து, ஜீவனைக்கொடுத்து அதைப்பாதுகாத்து, எல்லா நற்கிரியைகளையும் அவர் அளிக்கிறார். `ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவர்’. இவ்வாக்கியத்தை ஆராய்ந்து பார்த்தால், கிறிஸ்துவே நமது ஜீவன்’ என்னும் சத்தியத்தை இது உறுதிப்படுத்துகிறது. கிறிஸ்துதான் சபையின் ஜீவன். அதைத் தவிர வேறு ஜீவன் அவளுக்கில்லை. அவரில்லாமல், சபையானது ஒரு மார்க்க சங்கமாகவோ (RELIGIOUS SOCIETY) அல்லது அர்த்தமற்ற கூட்டமாகவோ மாறிவிடும். ஒரு சவத்திற்கு ஆபரணங்களையணிவித்து, ஆடையினால் அலங்காரப்படுத்தினாலும் அது சவமாகவே இருக்கும். அதுபோன்று ஜீவனைக் கொடுக்கும் கிறிஸ்துவற்ற ஒரு சபை பிணமாகக் கருதப்படவேண்டும். ஆனால் இயேசு சபையின் மத்தியில் உலாவி, அவளை ஊக்குவிக்கும்போது, அவள் எல்லாரும் அதிசயப் படத்தக்கதாக, அவரின் சரீரமாயும், எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பும் அவருடைய பூரணத்தைப் பெற்றவளாயும் இருப்பாள். இந்தக் காலத்தில், கடைசி சபையின் பொன் குத்துவிளக்கினருகே அவர் உலாவிக் கொண்டிருக்கிறார். முதலாம் சபையின் காலத்தில் உலாவும்போது காணப்பட்ட விதமாகவே, கடைசி சபையின் காலத்தில் உலாவும்போதும் காணப்படுகிறார். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். `ஏழு பொன் குத்துவிளக்குகள்’ யாத்திராகமப் புத்தகத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது `பசும் பொன்னினால் ஒரு குத்துவிளக்கை உண்டாக்குவாயாக. அது பொன்னினால் அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட வேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட வேண்டும்’. (யாத் 25:31) இயேசு கிறிதுவின் உண்மையான சபையாகிய மணவாட்டி பசும் பொன்னுக்கு ஒப்பிடப்படுகிறாள். அவருடைய நீதியையும் தன்மையையும் அவள் முழுவதுமாக பெற்று, அவரை உலகத்திற்குப் பிரதிபலித்துக் காண்பிக்கிறாள். அவள் உள்ளும் புறமும் மகிமையடைந்து தவறில்லாதவளாக இருக்கிறாள். ஆதி முதல் அந்தம்வரை, தேவனுடைய பரிபூரண கிரியைகளை நிறைவேற்றுகிறாள். தேவனுடைய நித்திய ஞானமும், நோக்கமும் அவளில் பூரணமாய் அமைந்து அவள்மூலம் இவைகள் உலகத்திற்கு வெளிப்படுகின்றன. இதன் இரகசியத்தை யாரும் அறிந்துகொள்ள முடியாது. என்றாலும் தேவன் இவைகளைக் கூறுவதால், அவைகளை நாம் விசுவாசத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் குத்துவிளக்கு பசும் பொன்னினால் அடிப்பு வேலையாய் செய்யப்பட்டிருந்தது என்பதைக் கவனிக்கவும். பரிசுத்த ஆவியானவர் போதித்தபடி, அதில் காணப்படும் சித்திர வேலைகளனைத்தும் செய்யப்பட்டன. இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபையைப்போன்று (இயேசு கிறிஸ்துவும் உட்பட). வேறெந்த ஜனமாவது அவ்வாறு அடிக்கப்பட்டு சுத்திகரிப்பை அடைந்திருக் கின்றனரா? இல்லை. கிறிஸ்து விட்டுப்போன கஸ்திகளை மணவாட்டி இப்பொழுது அனுபவிக்கிறாள். அவளுக்குச் சொந்தமானவைகள் அனைத்தும் நஷ்டமாயின. அவளுடைய ஜீவன் எப்பொழுதும் ஆபத்தான நிலையிலுள்ளது. அடிக்கப்படும்படிக்குக் கொண்டுபோகப் படும் ஆட்டைப்போல் அவள் இருக்கிறாள். நாள் முழுவதும் அவள் கொல்லப்படுகிறாள். அதிகம் கஷ்டப்பட்டாலும், அவள் பழிவாங்காமலும், மற்றவரைக் கஷ்டத்திற்குள்ளாக்காமலும் இருக்கிறாள். இயேசுவின் அழகிய மணவாட்டி சுவிசேஷத்திற்குப் பாத்திரமாக நடந்துகொள்கிறாள். பித்தளை அடிக்கப்பட்டால் உடைந்துபோம். ஆனால் பொன்னோ அதிக அடியையும் சுமக்கும். அதுபோன்று, தேவனுடைய பொன்னாகிய மணவாட்டியும் அவருக்கென்று கஷ்டங்கள் அனுபவித்து, கஷ்டத்தின் சுமையினால் உடைந்துபோகாமல், மெருகேற்றப்பட்டு அழகுற்றவளாக விளங்குகிறாள். கிறிஸ்து தமக்குச் சொந்தமானவர்களைப் புகழுகிறார் வெளி 2:23: `உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும், நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக் கிறேன். தேவன் தம்முடைய பிள்ளைகளை எவ்வளவு அருமையாகப் புகழுகிறார் என்பதைக் கவனியுங்கள். அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தையும், நடத்தையையும் கணக்கெடுக்கிறார். அவர்களிடையே பலவீனங்கள் உண்டு என்பதை அறிந்திருந்தாலும், அதன் காரணமாக அவர்களைத் தூஷிக்கவில்லை. சரியான காரியங்களைச் செய்யும்போது அவர்களை ஊக்குவித்து, தவறான காரியங்களில் ஈடுபடும்போது அவர்களைக் கண்டிக்கிறார். நம் ஒவ்வொரு வரையும் இவ்வாறே கர்த்தர் நடத்திக்கொண்டு வருகிறார். பரிசுத்தவானே, அதைரியப்படாதே. உன் அன்பின் ஊழியங்களைக் கர்த்தர் மறப்பவரல்ல. அவருடைய நாமத்தில் ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தாலும்கூட, அதற்குரிய பலனை நீ அடையாமற் போவதில்லை. `உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும் அறிந்திருக்கிறேன்’ சபைகளின் நடுவில் அவர் உலாவும் போது, அவருடைய ஜனங்களின் கஷ்டங்களை அறிந்து, அவர்கள்மேல் கவலை கொள்ளுகிறார். எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்த அவருடைய மக்களின் கூக்குரலுக்குச் செவிகொடுத்த தேவன், என்றும் மாறாதவராய், சபையின் மத்தியில் உலாவும்போது, நொறுக்கப்படுகிறவர்களின் கூக்குரலுக்குச் செவி கொடுக்கிறார். `பிரயாசம்’ (LABOUR) என்னும் பதம் நொறுக்கப்படுவதனால் உண்டாகும் களைப்பைக் குறிக்கிறது. தேவனுடைய மக்கள் அவருக்கு அன்பின் ஊழியத்தைச் செய்வது மாத்திரமல்ல அவருக்கென்று சந்தோஷத்தோடு துன்பமனுபவிக்கின்றனர். நுகத்தை அவர்கள் பொறுமையோடு சுமக்கின்றனர். முதல் சபையின் காலத்தின் மக்கள் அதிகம் துன்புறுத்தப்பட்டனர். சுவிசேஷத்தைப் பிரசங்கித்து சத்தியத்தைப் பரப்ப இவர்கள் அரும்பாடுபட்டனர். தேவனுக்குத் தொண்டு செய்வதைத் தங்களுடைய உயர்ந்த அழைப்பாக இவர்கள் கருதினர். ஜீவியத்தின் நம்பிக்கை முற்றிலும் அற்றுப்போனாலும், அவர்கள் பொறுமையாயிருந்து இவ்வுலகத்தில் அவருக்கென நஷ்டமென்று விட்ட யாவற்றிற்கும் மறுமையில் நித்திய பலனை அளிப்பதாக வாக்குத்தத்தம் செய்த கர்த்தரின் கரங்களில் சகலத்தையும் சமர்ப்பித்தனர். தேவனுடைய பிள்ளைகள் முன்பும் துன்புறுத்தப் பட்டனர், எப்பொழுதும் துன்புறுத்தப்படுவர் என்பதை வேதாகமத்தின் மூலம் விளக்க வாஞ்சிக்கிறேன். ஆதியாகமத்தின் காலத்தில் காணப்படும் துன்பப்படுத்துதல் வெளிப்படுத்தின விசேஷம்வரை தொடர்ந்து நீடிக்கிறது. ஆபேல் தேவனைப் பிரியப்படுத்தினதன் காரணமாக, காயின் அவனைத் துன்புறுத்திக் கொன்றான். மாம்சத்தின்படி ஆபிரகாமின் குமாரனான இஸ்மவேல், வாக்குத்தத்தின்படி அவனுடைய குமாரனான ஈசாக்கோடு போராடினான். ஏசா, யாக்கோபை வெறுத்தான். தேவன் துணைநின்றிராவிடில், அவன் யாக்கோபைக் கொன்றிருப்பான். புதிய ஏற்பாட்டின் காலத்தில் யூதாஸ் இயேசுவை மறுத்தலித்தான். முதலாம் நூற்றாண்டின் மதத்தலைவர்கள் ஆதிவிசுவாசிகளை அழிக்க முயன்றனர். பிசாசினால் ஆளப்படும் இவ்வுலகத்தின் பிள்ளைகள் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படும் தேவனுடைய பிள்ளைகளை எப்பொழுதும் வெறுக் கின்றனர். ஒரு கிறிஸ்தவன் உலகத்தில் நீதிமானாய் நடந்து, நன்மை செய்பவனாய் இருப்பினும் கிறிஸ்துவே அவன் இரட்சகர் என்று அறிக்கையிட்டு, பரிசுத்த ஆவியின் வரங்கள் சபைகளில் காணப்படவேண்டும் என்று கருதினால், அவன் உடனே ஜனங்களால் புறக்கணிக்கப்படுவான். இவ்வுலகத்தின் ஆவி தேவனுடைய ஆவியை முற்றிலும் வெறுக்கிறது, ஆயினும் தேவனுடைய ஆவியை அது மேற்கொள்ள முடியாததால் சத்திய ஆவியைப் பெற்ற மக்களை நிர்மூலமாக்க முற்படுகிறது. கிறிஸ்துவ ஜீவியத்தில் துன்பமும், சோதனையும் தினசரி வாழ்க்கையில் சாதாரணமாகக் காணப்படும். இவை நேரிடும்போது, தேவன் கிரியை செய்ய, அவைகளை அவர்கரங்களில் ஒப்புவிக்க வேண்டும். `நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக் கிறதையும், (அறிந்திருக்கிறேன்)’ தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்தமாயிருக்க வேண்டும் என்று எபேசியர்கள் அறிந்திருந்தனர். தங்கள் சரீரம் பாவத்தினால் கறைபடாமலிருக்க அவர்கள் எல்லா முயற்சியும் எடுத்துக்கொண்டதாக இவ்வசனம் நமக்குப் போதிக்கிறது. உண்மையான வழிபாடு அப்பொழுதே ஒருவாறு குன்றிப்போய், பாவம் சபைக்குள் பிரவேசித்தது. ஆனால் விசுவாசிகளோ இதற்குக் காரணமாயிருந்த பொல்லாதவர்களைச் சபையினின்று தள்ளி, பவுலின் வார்த்தைக்குக் கீழ்படிந்தனர். அவர்கள் உலகத்தினின்று பிரித்தெடுக்கப்பட்டபடியால், உலகத்தின் பாவங்கள் சபைக்குள் பிரவேசிப்பதை அவர்கள் சகிக்கக் கூடாமலிருந்தனர். பரிசுத்தம் பெயரளவில் இராமல், அது அவர்களின் ஜீவியத்தில் காணப்பட்டது’. அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும் (அறிந்திருக்கிறேன்)’ அப்போஸ்தலரென்று தங்களைக் கூறிக்கொள்பவர்களைச் சோதிக்க இவர்களுக்கு என்ன அதிகாரமிருக்கிறது என்று நாம் கேட்கலாம். எவைகளை ஆதாரமாகக் கொண்டு இவர்கள் சோதிக்கப்பட்டனர்? `நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத் தையல்லாமல், நாங்களாவது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்க கடவன்’ (கலா - 1:8) அப்படியெனில் அப்போஸ்தலனாகும் தகுதியைப் பெற்றவன் தேவனுடைய வார்த்தையை அவரிடமிருந்து நேரடியாகப் பெற்று, மக்களுக்கு எடுத்துரைப்பான். இந்த வார்த்தைகள் ஒரு அணுவளவாகிலும் மாறக் கூடாது. பவுலோடு தேவன் பேசினார். அதற்காகத்தான் அவன் `நானும் தேவனுடைய வார்த்தையைச் சிறிதளவு மாற்றி, வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், நான் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன்’ என்று கூறினான். தேவன் முதன்முறையாக அளித்த சுவிசேஷத்தின் வெளிப்பாடு சரியானது என்று பவுல் உணர்ந்திருந்தான் மாறாத சிந்தையுடைய தேவன் இதைத் தவிர வேறொரு வித்தியாசமான வெளிப்பாட்டை அளிக்கவே முடியாது. ஆனால் தேவன் முதலில் கொடுத்த வெளிப்பாட்டின் மறைபொருளை சமயந்தோறும் விளக்கிக் கொண்டே வரலாம். உதாரணமாக, ஏதேன் தோட்டத்தில் ஸ்திரீக்கு ஒரு வித்து கொடுப்பதாக தேவன் வாக்குத் தத்தம் பண்ணினார். பின்னர் அந்த வித்து ஆபிரகாமின் மூலம் வரும் என்று கூறினார். சிறிது காலம் கழித்து, தாவீதின் சந்ததியில் அந்த வித்து தோன்றும் என்றுரைத்தார். மக்கள் வெளிப்பாட்டை ஏற்று அதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று, அந்த வெளிப்பாட்டின் ரகசியங்களை விளக்கினார். தேவன் கூறியவாறே அந்த வித்து தோன்றிற்று. அவருடைய வார்த்தை ஒருபோதும் மாறாது. எபேசு சபையின் கள்ள அப்போஸ்தலர்கள் தங்களுடைய சொந்த வார்த்தையைப் பிரசங்கித்தனர். பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்தை எபேசியர் நன்கு அறிந்திருந்தனர். பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்ததனால், பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருந்தனர். அவர்கள் கள்ள அப்போஸ்தலர்களை நோக்கி, `பவுல் பிரசங்கித்ததை நீங்கள் பிரசங்கிக்காததால், நீங்களெல்லோரும் கள்ள அப்போஸ்தலர்கள்’ என்று கூறினார். ஆம், பவுல் பிரசங்கித்ததே தேவனுடைய வார்த்தை. அந்த வார்த்தைக்கு நீங்கள் திரும்புங்கள். வார்த்தையே அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும் சோதிக்கிறது. இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில், ஒரு தீர்க்கதரிசி தோன்றுவார், அவர் தேவனால் அனுப்பப்பட்டவரா இல்லையா என்பதை வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு நீங்கள் அறியலாம். அவர் பவுலுக்கு அளிக்கப்பட்ட வார்த்தையில் நிலைநின்று, அதனின்று அணுவளவும் மாறுவதில்லை. கடைசிக் காலத்தில் அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பி, அவர்கள் கூறுவதை விசுவாசிக்காவிடில் அழிந்து போவீர்கள் என்று கூறுவர். ஆனால் கடைசி காலத்தின் தீர்க்கதரிசி வரும்போது தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புங்கள், இல்லையேல் அழிந்து போவீர்கள்’ என்று முழங்கி, அவருடைய வார்த்தையைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். வார்த்தையின் மேல் ஸ்தாபிக்கப்படட அவர் அஸ்திபாரம் என்றென்றும் நிலைநிற்கும். இந்தக் கள்ள அப்போஸ்தலர்களைக் `கொடிதான ஓநாய்கள்’ என்று பவுல் குறிப்பிடுகிறார். `தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும்நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவிக்கிறபடியினாலே எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறரேனென்பதற்கு உங்களை இன்றைய தினம் சாட்சிகளாக வைக்கிறேன். ஆகையால் உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையும் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பும் மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப் பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால் நான் மூன்று வருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டு வந்ததைநினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக் கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். (அப் 20:26-32) கள்ள அப்போஸ்தலர்களை யோவானும் அறிந்திருந் தான். `பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதனால்....’ (1 யோவான் 4:1) அந்திக்கிறிஸ்துவின் ஆவி முதல் சபையின் காலத்தில் சபையில் நுழைந்து தேவனுடைய வசனத்தை அவமாக்கத் தொடங்கியது. சபையின் மக்கள் தங்கள் சொந்த பிரமாணங்களையும் தத்துவங்களையும் கைக்கொண்டு வார்த்தையைப் புறக்கணித்தனர். வார்த்தைக்கு விரோதமான செயல், கிறிஸ்துவுக்கு விரோதமான (அதாவது அந்திக்கிறிஸ்துவின்) செயலாகும். ஏனெனில் கிறிஸ்துவே வார்த்தை (யோவான் 1:1) வார்த்தையும் பரிசுத்த ஆவியும் ஒருவரே. அப்படியெனில் அந்திக்கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவிக்கு விரோதமாயிருப்பதால், வார்த்தையைப் புறக்கணிக்கிறது. ஆம், நீங்களும் வார்த்தைக்கு விரோதமாக ஜீவித்தால், அந்திக்கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டவர்களாயிருப்பீர்கள். வார்த்தையைப் புறக்கணித் தல் முதல் சபையின் காலத்தில் தொடங்கி நாளடைவில் வளர்ந்து கடைசி காலத்தில் முழுவதுமாய் பெலன் கொண்டது. எபேசு சபையின் காலத்தில் சிறியதாகத் தொடங்கிய இச்செய்கை, ஒவ்வொரு காலத்திலும் படிப்படியாக வளர்ந்து, கடைசி சபையின் காலத்தில் அந்திக்கிறிஸ்துவின் மார்க்கம் முழுவதுமாக ஆட்கொண்டு, கள்ளச் சபையிலுள்ள கள்ள அப்போஸ்தலர்கள் என்றென்றும் மாறாத வசனத்தை மாற்றிப் போடுவர். அந்திக்கிறிஸ்துவின் ஆவி வசனத்தின் அர்த்தத்தை முழுவதுமாக மாற்றிப் போட்டு, சத்தியத்தை அறவே புறக்கணிக்கும் என்று எண்ணவேண்டாம். அது, வசனத்தின் அர்த்தத்தோடு கொஞ்சம் சேர்க்கவோ குறைக்கவோ மாத்திரம் செய்து அதன் உண்மையான அர்த்தத்தை மாற்றிப்போடும். `இந்த புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது, ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன் மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களி லிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவபுஸ்தகத் திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும் அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப் போடுவார்’ (வெளி 22 18-19) ஏதேன் தோட்டத்தில் சாத்தான் இந்தத் தந்திரத்தைக் கைக்கொண்டான். தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கூறிய வார்த்தையில் ஒன்றை மாத்திரம் சேர்த்தான். அதன் விளைவாக மரணமும் அழிவும் உண்டானது. எபேசு சபையிலும், ஒரு வார்த்தையைக் கூட்டி அல்லது குறைப்பதன் மூலம், அந்திக்கிறிஸ்துவின் ஆவி வளரத் தொடங்கினது. நாம் முன்கூறியவண்ணம் இரண்டு குழந்தைகள் ஒரே கர்ப்பத்தில் வளருகின்றன. இரண்டு விருட்சங்கள் ஒரே பூமியில் அடுத்தடுத்து வளர்ந்து, ஒரே சாரத்தைப் பகிர்ந்து, அதே மழையையும் சூரிய வெளிச்சத்தையும் அனுபவிக் கின்றன. ஆனால் அவைகளிரண்டும் வித்தியாசமான வித்துக்களினின்று தோன்றினவை. ஒரு விருட்சம் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாய் நிலைநின்று, அதைச் சிநேகித்து, அதற்குக் கீழ்ப்படிகின்றது. மற்றைய விருட்சம் தேவனுடையவார்த்தைக்கு விரோதமான வித்திலிருந்து முளைத்து, வார்த்தையை ஆங்காங்கே மாற்றிவிடுகிறது. காயீன் தேவனுக்குப் பலியைச் செலுத்தி அதன் மூலம் அவருடைய கட்டளையைக் கைக்கொண்டாலும், கடைசியில் ஆபேலைக் கொன்றதால் அதை மீறினது போல், கள்ளச் சபையும் ஜீவிக்கிற உண்மையான வார்த்தைக்குப் பதிலாகத் தன்னுடைய சொந்தப் பிரமாணங்களையும், கொள்கைகளையும் புகுத்தி அவருடைய கட்டளையை மீறுகிறது. ஆனாலும், பயப்படாதே சிறுமந்தையே வார்த்தையில் உறுதியாய் நில், வார்த்தையின் மூலம் பிசாசை மேற்கொள், ஏவாள் அவ்வாறு செய்யத் தவறினதால் சாத்தானால் மேற்கொள்ளப்பட்டாள். சபையும் வார்த்தையை நழுவ விடும்போது சாத்தானின் அந்தகாரமான ஆழத்தில் மூழ்கிவிடுகிறது. நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக் கிறதையும் என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். இரண்டாம் வசனமும் இவ்வசனமும் ஏறக்குறைய ஒரே அர்த்தத்தைக் கொடுக்கின்றன. இரண்டாம் வசனம். எபேசு சபையிலுள்ளவர்கள் பவுலினால் ஒப்புவிக்கப்பட்ட தேவ வசனத்தைக் காத்துக்கொள்ளச் செய்த கிரியைகளையும், எடுத்தப் பிரயாசத்தையும், கைக்கொண்ட பொறுமையையும் விளக்குகிறது. அதன் காரணமாக வார்த்தைக்கு எதிராயிருந்தவர்களை அந்தச் சபை அகற்றிப் போட்டது, ஆனால் மேற்குறிக்கப்பட்ட வசனம், இயேசுவின் நாமத்தினிமித்தம் இச்சபையார் அனுபவித்தத் துன்பங்களையும், சோதனைகளையும், இவைகளில் அவர்கள் காண்பித்த பொறுமையையும் எடுத்துக்காட் டுகிறது. எபேசு சபையார் அடைந்த துன்பங்களைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டுவதில்லை. இக்காலத்திலும், தேவனுடைய வார்த்தையைக் கடைசியிலும், இயேசுவின் நாமத்தின்மேல் கொண்டுள்ள நம்பிக்கையும் நமக்கு அநேக விரோதிகளைச் சம்பாதிக்கின்றன. அடையாளங்களிலும், அற்புதங்களிலும் சுகமாக்குதலிலும் வெளிப்பட்ட மகத்தான வார்த்தை, உண்மையான விசுவாசிகளுக்கு விரோதமாய் பரிசேயர் எழும்பக் காரணமாயிருந்தது. யூதர்களால் வெறுக்கப்பட்டு இகழப்பட்ட அந்த நாமம், இன்றைக்கு நாகரீகமுள்ளவர்களால் அவமதிக்கப்பட்டு, மரித்து உயிரோடு எழுந்து, பரலோகத்தில் வீற்றிருக்கும் மனிதனில் விசுவாசம் கொள்வது மூடத்தனம் என்று கருதப்படுகிறது. மார்க்க பேதத்தினால், யூதர்கள் இயேசுவை சபித்து, அவர் கள்ளமேசியா என்று கூறினர். இன்றைக்கும் அநேகர், இயேசுவின் நாமத்தை இகழ்ந்து, அவர் தேவனல்ல என்று வாதிக்கின்றனர். எபேசு சபையின் காலத்தில் இயேசுவின் நாமம் புறக்கணிக்கப்பட்டு, காலங்கள்தோறும் இது வளர்ந்து, கடைசிகாலங்களில் அந்நாமம் அதிகமாய் அவமதிக்கப் படும், எபேசுவின் உண்மையான சபை இந்நாமத்தின் மகிமையை மறுக்கவில்லை. சபையில் நுழைந்தகள்ள அப்போஸ்தலர்கள் விசுவாசிகளைக் கெடுத்து இவ்வாறு செய்யத் தூண்டினர். எபேசுவின் விசுவாசிகள் அந்த நாமத்தை அறிந்து, அதில் அன்பு கொண்டனர். எபேசு சபையின் தொடக்கத்தை நினைவு கூறுங்கள். மேசியாவின் வரவை எதிர் நோக்கியிருந்த ஒரு சில எபேசியர்கள், மேசியாவிற்கு முன்னோடியானவன் என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒரு தீர்க்கதரிசி (யோவான்ஸ்நானன்) பாலஸ்தீனாவின் பாலைவனத்தில் மக்களுக்குப் பாவமன்னிப்புக்கேற்ற ஞானஸ்நானம் கொடுக்கிறான் என்று கேள்விப்பட்டு, அங்குசென்று, அந்த ஞானஸ்நானத்தைப் பெற்றனர். பின்னர் பவுல், அந்தத் தீர்க்கதரிசி மரித்துப் போனாரென்றும், இயேசுகிறிஸ்துவும் இவ்வுலகத்தில் வந்து, பாவத்திற்காக தம்முடைய ஜீவனைப் பலியாகச் செலுத்தினாரென்றும், இப்பொழுது மேசியாவாகிய இயேசுவில் விசுவாசம் கொண்டவர்களைப் பரிசுத்த ஆவி நிரப்புமென்றும் அவர்களுக்கு எடுத்துரைத்தான். இதைக் கேட்டவுடனே, அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றனர். பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர். வசனத்திற்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றும், அவரின் (கர்த்தராகிய இயேசுவின்) நாமத்தில் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்றும் அவ்வாறு செய்தால் பரிசுத்த ஆவியைப் பெறலாமென்றும் எபேசியர் அனுபவத்தின்மூலம் நன்கு அறிந்திருந்தனர். அத்தகைய ஜனங்களைச் சத்தியத்தினின்று மாற்றுதல் அரிது. (அப் 19: 1-7) இயேசுகிறிஸ்துவின் நாமத்திலுள்ள வல்லமையையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். பவுலின் சரீரத்திலிருந்து கச்சைகள் இயேசுவின் நாமத்தில் அனுப்பப்பட்டால் அவை மக்களின் பிணிகளைப் போக்கி, பிசாசினின்று விடுவிக்கும் என்பதைக் கண்டறிந்தனர். இந் நாமத்தின் வல்லமையைக் கண்கூடாகக்கண்ட எபேசுவிலுள்ள சில யூத மந்திரவாதிகள் அதைக்கொண்டு பிசாசை ஓட்ட முயற்சித்தனர். `பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின, பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத்துணிந்து,பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி, இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன். நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள் மேல் பாய்ந்து, பலாத்காரம் பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிர்வாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். இது எபேசுவிலே குடியிருந்த யூதர், கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. (அப் 19:11-17). இயேசுகிறிஸ்துவின் நாமத்தைத் தரிப்பதன்மூலம் உண்டாகும் சன்மார்க்க ஜீவியத்தை எபேசுவிலுள்ள கிறிஸ்தவர்கள் கைக்கொண்டிருந்தனர். கிறிஸ்து தேவனுடைய ஆவியாய் அவர்களுக்குள் வாசம் பண்ணினார். ஆம், கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்திருக்கும் கிறிஸ்தவனே, பரிசுத்தமான ஜீவியத்தைக் கடைப்பிடி. அந்த நாமத்தை வீணாகத் தரிக்காதே. `என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப் பட்டதையும் அறிந்திருக்கிறேன்’ எபேசுவிலுள்ள கிறிஸ்தவர்கள் கர்த்தருக்கென்று ஊழியஞ் செய்தார்களேயன்றி, பவுலுக்கோ அல்லது ஸ்தாபனத்தின் வளர்ச்சிக்கோ உழைக்கவில்லை. அவர்கள் ஒரு ஸ்தாபனத்தின் அடிமைகளாகி, ஞாயிற்றுக் கிழமைதோறும் ஆலயத்திற்குச் சென்று, இயேசுவின் நாமத்தைக் குறித்துச் சிந்தித்து மற்ற ஆறு நாட்களிலும் அதை மறந்துவிடவில்லை. வாயினால் மாத்திரம் அந்த நாமத்தை உச்சரித்து அதோடு நின்றுவிடவில்லை. அவர்கள் ஜீவனையே அந்நாமத்திற்கு அர்ப்பணித்தனர். எதைச் செய்தாலும் அவர்கள் அந்நாமத்திலே செய்தனர். அதற்கு அவதூறு உண்டாக்கும் செய்கைகளில் அவர்கள் ஈடுபடவில்லை. இக்கிறிஸ்துவர்கள் பரலோகத்தில் குடியிருப்பைப் பெற்று, கர்த்தரின் தன்மைகளைப் பெற்றிருந்தனர். இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்கு இழுக்கு உண்டாக்க முயன்ற கள்ளச் சபையினர், பட்சிக்கிற ஓநாய்கள் இருளில் பதுங்கியிருந்து, சமயம் வாய்க்கும்போது உண்மையான சபையின் மேல் பாய்ந்து அதைக் கிழித்துப்போடக் காத்திருந்தனர். ஆனால் பரிசுத்தவான்களோ, எல்லா உபத்திரவங்களின் மத்தியில், வார்த்தையிலும் அவருடைய நாமத்திலும் நிலை நின்றனர் தேவனின் குறைகூறுதல் வெளி. 2:4 `ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு’. ஆவியானவர் இதை எபேசு சபையின் பரிசுத்தவான்களுக்கு மாத்திரம் உரைக்காமல், 120 வருட காலங்களாக நீடித்திருந்த எபேசு சபைக்குப் பொதுவாகக் கூறினார். இந்தச் சபையின் காலத்திற்குள் அநேக தலைமுறைகள் தோன்றி மறைந்தன, இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரத்தில், முதல் முறையில் காணப்பட்ட தேவ வைராக்கியம் அடுத்தத் தலைமுறைகளில் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் போய்விட்டபோது, தேவன் மறுபடியும் அனல்மூட்டி அவர்களை ஊக்குவித்தார். இந்தச் சம்பவங்கள் இஸ்ரவேலரின் சரித்திரத்தில் சக்கரம்போல் மாறி மாறி நடந்து கொண்டேயிருந்தன. அதேபோன்று முதல் சபையின் காலத்தில் காணப்பட்ட உண்மையான விசுவாசிகள் நாளடைவில் குறைந்து கொண்டே வந்து பின்வரும் சபைகளின் காலங்களில் ஸ்தாபனங்களை உண்டுபண்ணிக் கொண்டு, பாப்டிஸ்டுகள், மெதோடிஸ்டுகள் என்று தங்களை அழைத்துக்கொண்டனர். இவர்களெல்லாரும் தேவசித்தத்தினால் பிறவாமல், மனிதனுடைய சித்தத்தினால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபனங்களின் அங்கத்தின ராயிருப்பதால், அவர்களைக் கிறிஸ்தவர்களென்று நாம் அழைக்க இயலாது. இந்தக் கடைசிகாலத்திலும், இவர்களெல்லாரும் மனித சித்தத்தின்படி ஒன்று கூடுகின்றனர். அவர்களில் சிலர் தேவனுடைய பார்வையில் நீதிமான்களாயிருந்தாலும், பொதுவாகச் சபைகளில் ஆவியின் அனல் தணிந்துவிட்டது. இரட்சிப்பு என்பது ஒரு குடும்ப விவகாரமல்ல. என்னுடைய மூதாதையர் இரட்சிக்கப்பட்டிருந்தால், அந்த இரட்சிப்பை நான் வாரிசாகப் பெறமுடியாது. தேவனுக்குப்பேரக் குழந்தைகள் கிடையாது என்று ஒருவர் நன்றாகச் சொன்னார். ஒவ்வொரு தலைமுறையிலும், தேவவார்த்தையை அங்கீகரித்து அதை ஏற்றுக் கொள்ளுகிறவர்களே இரட்சிக்கப்படக் கூடும். எபேசு சபையின் காலத்தில், முதல் தலைமுறையில் விசுவாசிகளினிடையே காணப்பட்ட தேவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம், வார்த்தையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம், ஆவியில் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும் என்னும் வாஞ்சை இவையனைத்தும் நாளடைவில் தணிந்து, பின்வரும் தலைமுறைகளில் ஜீவனற்ற சபையாக மாறினது. பிற்காலத்து எபேசியர் தேவனுடைய சித்தத்திற்குத் தங்களை ஒப்புவிக்காமல், உலக மக்கள் அவர்களைக் குறித்து மேன்மையாக எண்ணவேண்டுமென்று கருதி, உலகத்தின் போக்கில் சென்று, இதனால் தேவன் அவர்களைப் பற்றி என்ன நினைத்தாலும் கவலையில்லை என்ற ரீதியில் வாழ்ந்தனர். இஸ்ரவேல் ஜனங்களும் இவ்வாறே உலகத்தோடிசைந்து, தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டு அதன் மூலம் தேவனைப் புறக்கணித்தனர். சபையின் சரித்திரமும் அவ்வகைப்பட்டது. சபையானது தேவன்பேரில் சாராமல் உலகத்தோடு சார்ந்திருக்குமாயின், சபை மக்களின் நடத்தை, தன்மை, உடுத்தும்விதம் இவையனைத்தும் வித்தியாசப்படும். `எபேசு’ என்னும் பதம் `குறைவுபடுதல்’ என்னும் அர்த்தத்தைக் கொண்டது. அவ்வாறே, எபேசு சபை தேவன்பேரில் கொண்டிருந்த பற்று குறைவுபடத் தொடங்கிற்று. இந்தக் கடைசி காலத்திலும் தேவனைப்பற்றும் வைராக்கியமும், அன்பு தணிந்து போகுதலும் மாறி மாறி வருகின்றன. ஆவியின்மூலம் தேவனுடைய அசைவு இக்காலத்தில் உண்டான போது ஆண்களும், பெண்களும் நாணயமாக உடை உடுத்தி, ஆலயங்களுக்குச் சென்று, இரவு முழுவதும் ஜெபித்து சந்தை வெளிகளில் பிரசங்கித்து, பரிசுத்த ஆவியின் அடையாளங்களைப் பெற்று அவைகளினி மித்தம் வெட்கப்படாதிருந்தனர். ஜீவனற்ற சபைகளை அவர்கள் விட்டுவந்து வீடுகளிலும் பழைய கட்டிடங்களிலும் தேவனை ஆராதித்தனர். சிறிது காலத்திற்குள், பணம் சேர்ந்தவுடனே அவர்கள் அழகான ஆலயங்களைக் கட்டி, பாடகக் குழுக்களை (CHOIR) அமைத்து, அவர்கள் தேவனுக்குத் துதியைப் பாட்டுகளின்மூலம் ஏறெடுப்பதற்குப் பதிலாக இக்குழுக்களைப் பாடச் செய்தனர். இக்குழுவிலுள்ள அனைவரும் நீண்ட அங்கிகள் தரித்தனர். பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தை இவர்கள் உண்டாக்கி, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நிராகரித்து, மனிதனின் ஞானத்தைக் கொண்டு இவைகளை நடத்த ஆரம்பித்தனர், படிக்கத்தகாத புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தனர். கூடிய சீக்கிரத்தில் வெள்ளாடுகள் (கள்ள அப்போஸ்தலர்கள்) இச்சபையைக் கைப்பற்றின. ஆசாரங்களை அவர்கள் பின்பற்றி ஜீவனற்றவர்களாயினர். ஆதியில் கொண்ட அக்கினி அணைந்து போய், இப்பொழுது சாம்பலின் கருமை மாத்திரமே அச்சபையில் காணப்படுகிறது. யோவான் அப்போஸ்தலன் தேவனிடத்தில் அதிகமாக அன்பு கூர்ந்தவன். அன்பின் தன்மையை உணர்ந்திருந்த அவன், எபேசு சபை ஆதியில் தேவனிடத்தில் கொண்ட அன்பை விட்டபோது, அந்நிலையை உடனே அறிந்திருக்க வேண்டும். `நாம் தேவனுடைய கற்பனைகளைக் (வார்த்தையை கைக்கொள்வதே அவரிடத்தில் அன்பு கூருவதாம்’ (1 யோவான் 5:3) என அவன் கூறுகிறான். வார்த்தையில் ஒரு சிறு மாற்றம் உண்டாக்குதல், தேவனைவிட்டு, ஒரு படி அகலுவதற்குச் சமானம். நாங்கள் தேவனை நேசித்து, ஆலயங்களுக்குப் போய், உரக்கச் சத்தமிட்டு, சந்தோஷத்தினால் பொங்கிப்பாடி, உணர்ச்சி வசப்படுகிறோம் என்று ஜனங்கள் கூறுகின்றனர். இவைகளைனைத்தும் இருப்பினும், அவர்கள் வார்த்தையின்படி ஜீவிக்கின்றனரா என்று கவனியுங்கள். அவர்கள் அவ்வாறு ஜீவிக்காவிடில், நாங்கள் தேவனிடத்தில் அன்பு கூறுகிறோம் என்று வெளிப்படையாகக் கூறிக்கொண்டாலும், அவர்கள் உண்மையாகத் தேவனைச் சிநேகிக்கிறவர்களல்ல. இத்தகைய செயல்களை யோவான் எபேசு சபையில் கண்டிருக்கக்கூடும், அச்சபையின் மக்களில் சிலர் தேவனிடத்தில் அன்புகூறுவதாகச் சொல்லியும், அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமற் போயினர். ஒரு சிலர் சபையில் கள்ளத்தனமாய் நுழைந்து, யாரும் அறியாவண்ணம் சமார்த்தியமாய் வார்த்தையை ஆங்காங்கே மாற்றிப் போட்டனர். ஒவ்வொரு காலத்திலும் வசனத்தை ஆதாரமாகக் கொண்ட கர்த்தரின் எழுப்புதல் அற்புதமாக நிகழ்ந்தேறுகிறது. அப்பொழுது பரிசுத்த ஆவியின் அடையாளங்களும் அற்புதங்களும் மக்களிடையே காணப்படும். எழுப்புதலின் மூலம் பெற்ற சத்தியத்தைப் பாதுகாக்கவும், எழுப்புதலும் தொடர்ந்து நடக்கவும் மக்கள் வாஞ்சிக்கின்றனர். அப்பொழுது அந்திக் கிறிஸ்துவின் ஆவி இவர்களின் இருதயங்களில் புகுந்து, சத்தியத்தைப் பாதுகாப்பதற்கென ஸ்தாபனங்கள் அவசியமென்றும், மக்கள் விசுவாசிப்பதை ஸ்தாபனத்தின் பிரமாணங்களாக மாற்றி சபையின் புத்தகங்களில் (CHURCH MANUAL) எழுத வேண்டுமென்றும் கூறுகிறது. ஜனங்களும் அவ்வாறே ஸ்தாபனங்களை உண்டாக்கி, வார்த்தையோடு தங்கள் மனதில் தோன்றியவைகளையும் கூட்டி, பிரமாணங்களை உண்டாக்கிவிடுகின்றனர். ஏவாள் ஒரு தவறான வார்த்தையை ஏற்றுக்கொண்டதன் மூலம் மரணம் பிரவேசித்ததுபோன்று. இந்த ஸ்தாபனங்களும், பிரமாணங்களை உண்டாக்கியதன்மூலம் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை மாற்றியதால், ஆவிக்குரிய பிரகாரமாய் மரித்தன. ஆம், தேவனுடைய வார்த்தையே ஜீவனையளிக்கிறது. வார்த்தைக்குத் தேவன் கொடுக்கும் அர்த்தம்தான் முக்கியமேயன்றி, மனிதன் அதற்குக் கொடுக்கும் அர்த்தம் முக்கியமல்ல. தேவனுடைய எச்சரிக்கை வெளி: 2:5. `ஆகையால் நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில் உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்’. பழைய நிலைமையை நினைவுகூறத் தேவன் அவர்களுக்கு ஆலோசனைகூறி, அந்நிலைக்குத் திரும்பவேண்டுமென்று அவர்களை எச்சரிக்கிறார். பெந்தேகோஸ்தேயின் மகிமையையும் அற்புதத்தையும் அவர்கள் மறந்துபோயினர். ஒரு காலத்தில், `கிறிஸ்து எனக்கு ஜீவன்’ என்று அவர்கள் கூறினர். அனனியாவுக்கும் சப்பிராளுக்கும் நேர்ந்ததையும், அலங்கார வாசலில் நிகழ்ந்த அற்புதத்தையும் அவர்கள் மறந்தனர். தேவனைவிட்டு வழுவி அவருடைய நாமத்தைக் கறைபடுத்துவது உசித்தமல்ல. அவருடைய நாமத்தைக் கூறுபவர்கள் பாவத்தைவிட்டு விலகி தங்களுடைய பாண்டங்களைத் தேவனுக்கென்று பரிசுத்தமாய் வைக்கவேண்டும். நீயும் அவ்வாறு இருதயத்திலும், சிந்தனையிலும், ஜீவியத்திலும். வழுவிப்போயிருந்தால், சத்தியத்திற்குத் திரும்பிச்செல். மனந்திரும்புவதன்மூலம் ஒருவன் பழைய நிலைமைக்குத் திரும்ப முடியும். தேவனிடத்தில் வருவதற்கு ஒரு பாவிக்கே மனந்திரும்புதல் அவசியமென்றால் சத்தியத்தை விட்டு வழுவிப்போன ஒருவனுக்கு அது மிகவும் அவசியம். ஆம், வழுவிப்போனவனே, மனந்திரும்பு! மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடு. உண்மையான மனந்திரும்புதலை உன் ஜீவியத்தில் நிரூபித்துக் காண்பி. `நீ மனந்திரும்பாதபட்சத்தில் உன் விளக்குத் தண்டை உன்னிடத்தினின்று நீக்கிவிடுவேன்’ என்று தேவன் எபேசு சபைக்குக் கூறுகிறார். சத்தியத்திலிருந்து வழுவிப்போன சபை உலகத்திற்கு வெளிச்சத்தைக் கொடுக்கமுடியாது. சபையே அதன்மூலம் அந்தகாரப்பட்டது. அப்பொழுது தேவன் உண்மையுள்ள அவருடைய தூதனையும் விசுவாசமுள்ள மேய்ப் பர்களையும் அச்சபையினின்று விலக்கி, அதைத் தனியே விட்டுவிடுவார். இவர்களற்ற சபையும் வாயளவில் கிறிஸ்துவ மார்க்கத்தைக் குறித்துப் பேசும். ஆனால் செய்கையிலோ அம்மார்க்கத்தின் தன்மைகளைக் காணமுடியாது. வழுவிப்போனவர்களே! சீக்கிரத்தில் மனந்திரும்புங்கள்! தாமதிக்காதீர்கள். எபேசு சபை மனந்திரும்ப தாமதித்ததால், அவளுடைய ஆயுசு நாட்கள் குறுகின.அவள் அதிக காலம் நீடிக்கவில்லை. தேவனின் மகிமை அவளிடமிருந்து வேகமாக குறைந்தது. கூடிய சீக்கிரத்தில் எபேசு பட்டினமே பாழடைந்தது. அப்பட்டினத்தின் மகத்தான ஆலயம் நொறுங்கியது. அது சகதி நிலமாகி (MARSH) நீர்க்கோழிகளின் உறைவிடமாயிற்று. அதன் ஜனத்தொகை முழுவதும்போய், ஒருசில அவிசுவாசிகள் மாத்திரம் பாழடைந்த கிராமமொன்றில் தங்கியிருந்தனர். ஒரு கிறிஸ்தவன்கூட அங்கு வாழவில்லை. ஆம், விளக்குத் தண்டு அதன் ஸ்தானத்தினின்று எடுக்கப்பட்டது. எபேசு சபை மனந்திரும்பியிருந்தால், இவையனைத்தும் அவளுக்கு நேரிடவாய்ப்பில்லை. அவ்வாறேநாமும் மனந்திரும்பினால், அழிவினிற்று தப்பித்துக்கொள்வோம். நாம் உடனே மனந்திரும்பவேண்டும். நாம் உண்மையாகவே மனஸ்தாபப்பட்டு தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தால், அவர் நம்மைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வருவார். நாம் இழந்த மகிமையை மீண்டும் பெறுவோம். நிக்கொலாய் மதத்தின் வித்து வெளி. 2:6. `நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. நிக்கொலாய் மதஸ்தரைக் குறித்துக் கருத்து வேற்றுமையுண்டு. அந்தியோகியா பட்டினத்தில் நிக்கோலாஸ் (NCHOLAS) என்பவர் ஒருவர் இருந்தாரென்றும், அவர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி, எருசலேமின் ஏழு மூப்பர்களில் (DEACONS) ஒருவராக நியமிக்கப்பட்டார் என்றும் ஒருசாரார் கூறுகின்றனர். அவரும் அவரைச் சார்ந்தவர்களும் அஞ்ஞானப் பண்டிகைகளைக் கொண்டாடி, மாம்ச இச்சைகளின் கிரியைகளில் ஈடுபட்டனர். அநேக அனுபவங்களின்மூலம் மாம்சப் பிரகாரமான கிரியைகளில் திறமைபெற முடியும் என்று அவர்கள் எண்ணங்கொண்டனர். பழைய ஏற்பாட்டின் பிலேயாமைப் போன்று இவர்கள் மக்களைத் தவறான வழியில் நடத்திப் பின்னர் அவர்களை ஆட்கொண்டனர். எபேசுவிலிருந்து துரத்தப்பட்டு பெர்கமுவில் இவர்கள் குடிகொண்டனர் என்று பாரம்பரியம் கூறுகிறது. மேறுகூறிய கருத்து உண்மையாயிருக்க வழியில்லை. அது ஒரு கட்டுக்கதையாகத் தான் இருக்க வேண்டும். எபேசு சபையிலுள்ளவர்கள் பொல்லாதவைகளைச் சகிக்கக் கூடாமலிருந்தனர் என்று வேதம் உரைக்கிறது. (வெளி 2:2) அப்படியெனில் அவர்கள் பொல்லாத கிரியைகளைக் கொண்ட இந்த நிக்கொலாய் மதஸ்தரைச் சபையினின்று புறம்பாக்கியிருக்க வேண்டும். இவர்களின் கிரியைகளை எபேசு சபை வெறுத்ததாக வசனத்தின் மூலம் நாமறிகிறோம். ஆனபடியால், நிக்கொலாய் மதஸ்தர் எபேசு சபைக்குள்ளிருந்து தங்களுடைய கிரியைகளைச் செய்திருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கு வழியுண்டு. எபேசு சபையின் உண்மையான விசுவாசிகள் இவர்களின் கிரியைகளை வெறுத்தாலும், அவைகளைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை. இவ்வாறு எபேசு சபையிலே விதைக்கப்பட்ட நிக்கொலாய் மதஸ்தரின் வித்து நாளடைவில் வளர்ந்து போதனையாக மாறி, கடைசியில் அக்கினிக் கடலில் தள்ளப்படும். `நிக்கொலாய்’ என்னும் கிரேக்க பதம், `சபையின் மக்களை ஆட்கொள்ளுதல்’ என்னும் அர்த்தம் பெறும். ஆதிச்சபையிலே, யாரோ ஒருவர் சபையின் ஆதிக்கத்தைக் கைப்பற்றித் தன் கிரியைகளின் மூலம் மக்களை ஆட்கொண்டிருக்க வேண்டும். இவரைச் சார்ந்த எல்லோரும் நிக்கொலாய் மதஸ்தர்களாயினர். இக்காலத்தைப் போலவே அக்காலத்தில் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலும் விரோதமான வழிகளைப் பின்பற்றினர். எபேசு சபையின் உண்மையான விசுவாசிகள் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றி ஜீவனைப் பெற்றிருந்தனர். ஆனால் விசுவாசத்தினின்று வழுவினவர் களோ தேவனுக்கு விரோதமான கிரியைகளின் மூலம் ஜீவனற்ற மார்க்கத்தைக் கடைபிடித்தனர். ஜீவவிருட்சமும், நன்மைதீமைஅறியத்தக்க விருட்சமும் ஏதேன் தோட்டத்தின் மத்தியில் நாட்டப்பட்டிருந்தன. இவைகளின் கிளைகள் சந்தேகமின்றி அவ்விடத்தில் ஒன்றுக்கொன்று பிணைந்திருக்க வேண்டும். அவ்வாறே ஆவிக்குரிய வழிபடுதலும், செத்தமார்க்கமும் எக்காலத்திலும் காணப்படுகின்றன. எபேசுசபையில் விசுவாசிகளும், அவிசுவாசிகளும் ஒருங்கே காணப்பட்டனர். ஒரு சாரார் கர்த்தருக்கு உண்மையாயிருந்தனர். இவர்கள் கோதுமை மணிகளையும் போன்று அடுத்தடுத்து வளர்ந்தனர்.தேவன் ஒவ்வொரு சாராரோடும் ஒவ்வொரு சாராரைக் குறித்தும் பேசுகிறார். அவர்களிருவரையும் சபையென்று அழைக் கிறார். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ இவைகளில் உண்மையான ஆவியைக் கொண்ட சபையைக் கண்டுகொள்வர். அவர்கள் ஒருக்காலும் வஞ்சிக்கப் படுவதில்லை. `ஏனெனில், கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்’ (மத் 24:24) ஆதிச்சபையிலே, பெந்தேகோஸ்தே காலத்திற்குச் சற்று பின்பு கள்ளச் சபையும், உண்மையுள்ள சபையும் ஒன்றுக்கொன்று பிணைந்து நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் சபையினிடையே தோன்றின. கள்ளச்சபையிலுள்ள அந்திக் கிறிஸ்துவின் ஆவி, தேவனால் நிர்மூலமாக்கப்படும்வரை, உண்மையுள்ள சபையோடு போராடிக் கொண்டேயிருக்கும். எபேசு சபை ஆதியில் தேவனுடைய வார்த்தையில் கொண்டிருந்த அன்பைவிட்டு, பெந்தேகோஸ்தேயின் காலத்தில் அடைந்த நிலைமையினின்று வழுவி, பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலையும் ஆளுகையையும் புறக்கணித்தது. மோசே இஸ்ரவேல் ஜனங்களையும் எகிப்தினின்று வெளியே நடத்திக் கொண்டு வந்த பின்பு சம்பவித்ததும் இதுவே. கர்த்தர் இஸ்ரவேலரை மேகஸ்தம்பத்திலும் அக்கினிஸ்தம்பத்திலும் வழிநடத்தினது மாத்திரமின்றி, அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்பி, அவர்கள் மூலம் தீர்க்கதரிசனங்களை உரைத்தும், அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்தும், அவர்களை வழிநடத் தினார். இஸ்ரவேலரின் முழு பாளையமே, பரிசுத்த ஆவியின் அசைவினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. அப்படியிருந்தும், அவர்கள் தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்து, தங்களுக்கென்று நியமங்களையும், பிரமாணங்களையும் உண்டாக்கிக் கொள்ள முனைந்தனர். பின்னர் அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டுமெனக் கோரி, உலகத்தின் போக்கில் சென்று சத்தியத்தை முழுவதும் புறக்கணித்துக் கடைசியில் ஒன்றுமில்லாமல் போயினர். அவ்வாறே முதல் சபையின் காலம் நன்றாகத் தொடங்கி, நாளடைவில் மோசமாகி, பரிசுத்த ஆவியைப் பூரணமாக நிராகரித்து அதன் காரணமாகக் கள்ளச்சபைகள் தோன்றின. கடைசிக் காலத்தில் கள்ளச் சபையின் மக்களைக் கர்த்தர் நிர்மூலமாக்குவார். ஆதிசபையில் நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளாகத் தொடங்கியவைகள் பின்னர் போதனைகளாக மாறிச் சபையில் ஆதிக்கம் கொண்டு, தேவனைப் புறக்கணித்தன. சிறிதாக ஆரம்பிக்கப்பட்டபோது, சபைக்கு நன்மை பயக்கும் கிரியைகளாக இவைகள் கருதப்பட்டன. நாளடைவில் மலைப் பாம்பைப் போன்று அவை சபையை நெறித்து, பரிசுத்தத் தன்மையனைத்தையும் சபையினின்று அகற்றின. ஆம், கள்ளச் சபை தந்திரமுள்ளது. சபையை முழுவதும் ஆட்கொள்ளும் வரை, அது ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரிக்கும். சபையானது கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மூலம் பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்ட வேண்டும். இவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, ஆவியின் வரங்களைப்பெற்று, வார்த் தையின்மூலம் சபையை ஒழுங்குபடுத்தி, அதை நடத்தும்போது பரிசுத்த ஆவியானவரே அந்த சபையை நடத்துகிறார். ஏனெனில் வார்த்தையும் ஆவியும் ஒன்றே. `தேவ வசனத்தை உங்களுக்குப் போதித்துஉங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்’ (எபி 13:7) எபேசு சபையின் காலத்தில், கள்ளச் சபை ஆதிக்கத்தைக் கைப்பற்றி, சபையானது மனிதனால் ஆளப்பட வேண்டும் என்று போதித்து, ஆவியின் வல்லமையைப் பெற்றதாக நினைத்து தேவனுக்கும் மக்களுக்குமிடையில் ஒரு பரிசுத்த ஆசாரியத்ததுவத்தை (HOLYPRIESTHOOD) உண்டாக்கிக் கொண்டு, ஆரோனின் முறைக்குத் திரும்பிச் சென்றது இயேசு கிறிஸ்துவின் மத்தியஸ்த உத்தியோகத்தை அவர்கள்புறக்கணித்து இந்த ஆசாரியர்களே மத்தியஸ்தரென்று மக்களை விசுவாசிக்கச் செய்ததால், அவர்கள் அந்திக் கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றிருந்தனர். எபேசு சபையின் உண்மையான விசுவாசிகளும் காலங்கள் தோறும் உண்டாயிருந்த உண்மையான விசுவாசிகளும் இந்த ஆசாரியத்துவத்தை வெறுத்தனர் என்றாலும் இவ்வழக்கம் எல்லாக் காலங்களிலும் கடைபிடிக்கப்பட்டு இந்தக் கடைசி காலத்தில் மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் விளைவால் அநேக ஸ்தாபனங்கள் உண்டாகி, மக்களைப் பாகுபடுத்தின. தேவனுடைய மக்கள் எப்பொழுதும் ஒன்றாயிருக்க வேண்டும். ஒரே ஆவியினாலே அவர்களெல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவனை வழிபட வேண்டும். ஆனால் மனிதரோ தங்களுக்கென மதிப்பைத் தேடிக்கொண்டு, சபையை ஆளுகை செய்து, அத்தியட்சகர் (BISHOP) என்னும் பட்டம் பெற்று, பின்பு இதைக் காட்டிலும் உயர்ந்த பதவியை அடைந்து, பிரதம அத்தியட்சகர் (ARCHBISHOP) என்னும் பட்டப்பெயரால் அறியப்பட்டு, தேவனுடைய வார்த்தையைத் தள்ளிப்போட்டு, தங்களுடைய சொந்த போதனைகளை சபையின் மக்களுக்குப் போதித்ததன் விளைவாக ஏற்பட்ட தெய்வவழிபாடு, பெந்தேகோஸ்தே காலத்திலுண்டாயிருந்ததைவிட முற்றிலும் வேறுபட்ட தாயிருந்தது. நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளின் விளைவாக, சபையின் ஆதிக்கம் தலைமுறை தலைமுறையாக அத்தியட்சகர்களால் ஏற்கப்பட்டு வருகின்றன. (APOSTOLIC SUCCESSION). அப்போஸ்தலனாகிய பேதுரு தொடங்கி இவர்கள் வழிவழியாக வந்தவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். அதுவுமின்றி சபையின் அங்கத்தினர்களாவதன் மூலம் இரட்சிப்பின் கிருபை அளிக்கப்படும் என்னும் தவறான போதனையையும் இவர்கள் மக்களிடையே பரப்பினர். தேவனுடைய வார்த்தை முக்கியத்துவத்தை இழந்து, சபையின் பிரமாணங்கள் வார்த்தை வகித்த ஸ்தானத்தைக் கைப்பற்றின. அந்திக்கிறிஸ்துவின் ஆவி சபையில் வல்லமை பெற்று விளங்கினது. பெந்தேகோஸ்தே நாளில் கூடியிருந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, ஆவியானவர் அவர்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளில் பேசினர் என்று வேதம் கூறுகிறது (அப் 2:4) பரிசுத்த ஆவியை நாம் பெறுவோமெனில், ஆவியின் வரங்கள் நம்மிடத்தில் காணப்படும். ஆனால் இன்று நிக்கொலாய் மதம் (ரோமன் கத்தோலிக்க மார்க்கம்) இந்தச் சத்தியத்தை உதறித்தள்ளி, சபையின் அங்கத்தினரில் ஒருவன் (WAFER) புசித்து, குருவானவர் (PRIEST) சிறிது திராட்சரசம் குடித்தால் அந்த அங்கத்தினன் பரிசுத்த ஆவியைப் பெறுவானெனக் கூறுகிறது. தேவனுடைய வார்த்தையைச் சபையின் அங்கத்தினர்கள் புரிந்துகொள்ள இயலாததால், குருமார்கள் அதன் அர்த்தத்தை விளக்கிக் கொடுக்க வேண்டுமென்றும், வேதாகமம் இனியும் முடிவுபெறாததால் காலங்களை அனுசரித்து அது மாறவேண்டுமென்றும், அது எவ்வாறு மாறினதென்று இவர்கள் மாத்திரம் சபைக்கு அறிவிக்க முடியுமென்றும் அவர்கள் கூறுகின்றனர். எந்த ஸ்தாபனத்திலும் சத்தியத்திற்கு முரண்பட்ட தத்துவங்களைக் கண்டால், `தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன்’ (ரோமர் 3:4) என்னும் வேதவாக்கியத்தை நினைவு கூறுங்கள். வானமும் பூமியும் ஒழிந்துபோம். ஆனால் தேவனுடைய ஒரு வார்த்தையும் ஒழிந்து போவதில்லை. கிறிஸ்துவின் பிரதிநிதிகள் (VICARS OF CHRIST) என்று தங்களைக் கூறிக்கொள்ளும் கள்ளக் கிறிஸ்துக்களினால் சபைகள் இன்று நடத்தப்பட்டு வருகின்றன. ஞானஸ்நானத்தைக் குறித்த சத்தியத்தையும் ஸ்தாபனங்கள் மாற்றிப் போட்டன. இயேசு வாழ்ந்த காலத்திலும் பெந்தேகோஸ்தே காலத்திற்குப் பிறகும், மக்கள் தண்ணீரில் முழுக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றனர். அறிவாளிகள் இதை மறுத்து, ஆதிகாலத்தில் ஆங்காங்கே மக்களை முழுக்க இயலாத சிறிய குளங்கள் காணப்பட்டதால், தண்ணீர் தெளித்து அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்திருக்க வேண்டும் என்று வாதித்து, தெளித்தலின் முறையைக் கடைபிடித்து ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். அவர்கள் தெளிப்பு ஞானஸ்நானம் கொடுக்கும்போது, மூன்று கடவுள்கள் உண்டு என்றும் அவர்களின் நாமங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற எண்ணங்கொண்டு இவைகளின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். உண்மையாகவே இவைகள் தேவனின் பட்டப்பெயர்களேயன்றி நாமங்களல்ல. அத்தகைய ஸ்தாபனங்களிலுள்ள எவனாகிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீர் முழுக்குவதே உண்மையான ஞானஸ்நானம் என்று போதித்தால், அவன் சபைக்கு வெளியே தள்ளப்படுவான். தேவனால் நடத்தப்படும் எந்த மனிதனும் ஸ்தாபனங்களிலிருக்க இயலாது. பவுல் அப்போஸ்தலன் ஒரு தீர்க்கதரிசியென்றும் அவன் பரிசுத்த ஆவியால் போதிக்கப்பட்டான் என்றும் நாமறிவோம். பவுல் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான் என்ற வேத சான்றுகளுண்டு. அவன் பிரசங்கித்த சுவிசேஷத்தையன்றி வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவன் சபிக்கப்பட்டவன். அப்படியெனில், இந்த ஞானஸ்நானத்தைக் கடைபிடிக்காத எந்த ஸ்தாபனமும் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படாமல், நிக்கொலாய் மதஸ்தரின் ஆளுகைக்குட்பட்டிருக்கிறது என்று அறியலாம். `எல்லோருடைய இரத்தப் பழிக்கும் நீங்கிநான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன். ஆகையால், உங்களைக்குறித்தும் தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப் பார்களென்று அறிந்திருக்கிறேன். (அப் 20: 27-30). தந்திரமான ஆசாரியத்துவம் சபைகளைக் கைப்பற்றித் தவறான போதனைகளைக் கைக்கொண்டு, பரிசுத்த ஆவியின் வல்லமையிழந்த தெய்வ வழிபாட்டை மக்களிடையே புகுத்தும் என்பதைப் பவுல் அறிந்திருந்தான். இக்காலத்திலும், பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டோம் என்று கூறிக்கொள்ளும் மக்களிடையே, ஆவியின் வழிநடத்துதல் காணப்படவில்லை. அச்சபையின் மக்கள், மனிதர் போதிப்பதைக் கேட்டு அதை கிரகிக்கின்றனர். சபையின் மக்கள் ஆவிக்குரிய வழிபாட்டில் பங்கு கொள்ள அனுமதியின்றி அடிமைகளாகவே ஜீவிக்கின்றனர். பவுலின் சுவிசேஷத்தின்படி, இது உண்மையான வழிபாடு அல்ல. மக்கள் ஒன்றுகூடினபோது எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டு ஆவிக்குரிய வழிபாட்டில் பங்கு கொண்டனர் என்று அவன் கூறினான். ஒவ்வொரு முறையும் தேவன் தம்முடைய ஆவியின் எழுப்புதலால் மக்களை அடிமைத் தனத்தினின்று விடுதலையாக்குகிறார். விடுதலையான மக்கள் சிறிதுகாலம் கழித்து, தங்களை மறுபடியும் கட்டுப்படுத்திக் கொண்டு, அதே அடிமைத்தனத்தை மீண்டும் அடைகின்றனர். லூத்தரும் அவரைச் சார்ந்தவர்களும் கத்தோலிக்க மார்க்கத்தை விட்டு வெளிவந்து, சிறிதுகாலம் சுதந்திரமுள்ளவர்களாய் வாழ்ந்து, தேவனை வழிபட்டனர். லூத்தரின் மரணத்திற்குப் பின்பு, அவரைச் சேர்ந்தவர்கள் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, வார்த்தையைக் குறித்தத் தங்களுடைய சொந்த அபிப்பிராயத்தைப் பிரமாணங்களாக மாற்றி, அதற்கு மாறான எண்ணங்கொண்டவர்களைச் சபையினினின்று வெளியாக்கினர். இவ்வாறு செய்ததன் மூலம் ஒரு சில மாறுதல்கள் கொண்ட கத்தோலிக்க மார்க்கத்தையே அவர்கள் பின்பற்றினதாக நாம் கருத வேண்டும். இன்றைக்குள்ள லூதரன்கள் முழுவதுமாகக் கத்தோலிக்க மார்க்கத்தின் ஆசாரங்களைப் பின்பற்றுகின்றனர். வெளிப்படுத்தின விசேஷத்தில் (12-ம் அதிகாரம்) குறிக்கப்பட்ட வேசிக்கு பெண் மக்களுண்டு. இவர்களெல்லாம் தாயைப் போன்று, தேவனுடைய வார்த்தையை அகற்றிப் போட்டு, பரிசுத்த ஆவியின் கிரியைகளை மறுதலித்து, சபையின் மக்களின் மேல் அதிகாரம் செலுத்தி, சாத்தானால் உண்டாக்கப்பட்ட ஜீவனற்ற தெய்வ வழிபாட்டைச் சபையிலுள்ளவர் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தினர். நம்முடைய ஆவிக்குரிய நிலை முழுவதும் அழிந்தது. இப்பொழுது அந்தகாரம் பொருந்தியவனாந்தரத்தில் நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். பெந்தேகோஸ்தே காலத்திலிருந்த வழிபாட்டை நாம் இன்று காண்பதில்லை. தேவவார்த்தை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட `தலைமுறை அப்போஸ்தலத்துவம்’ (APOSTOLIC SUCCESSION) இன்றுதழைத் தோங்குகிறது. தேவ வசனம் இதை ஆமோதிக்கவில்லை. தேவனே சபையை நடத்துபவர்களை நியமிக்க வேண்டுமேயேன்றி மனிதன் அவர்களை நியமிக்க உரிமைபெறவில்லை. பேதுரு ரோமாபுரியில் வாழவில்லை என்று சரித்திரம் நிரூபித்தாலும், அவர் அங்கு வாழ்ந்ததாக அவர்கள் பொய் சொல்லுகின்றனர். மக்கள் சரித்திரத்தைப் படித்தும் பொய்யை விசுவாசிக்கின்றனர். `கிறிஸ்துவின் பிரதிநிதி’ (VICAR OF CHRIST)யைக் குறித்து வேதம் கூறுகிறதா? அல்லவே அல்ல. என்றாலும் மக்கள் இவ்வழக்கத்தை ஆதரிக்கின்றனர். ஏற்கெனவே அளிக்கப்பட்ட வெளிப்பாட்டுக்கு முரண்பாடான வெளிப்பாட்டைத் தேவன் அங்கீகரிக்கிறார் என்று வேதம் எங்காவது கூறுகிறதா? என்றாலும் மனிதரால் அளிக்கப்பட்ட வெளிப்பாட்டை சபையின் மக்கள் ஏற்றுக்கொள்ளுகின்றனர். மரித்த பிறகு ஆத்துமாக்கள் தங்கும் ஸ்தலம் (PURGATORY) ஒன்றை வேதம் குறிக்கிறதா? இந்த ஆத்துமாக்கள் பிரார்த்தனையின் மூலம் பாவம் நீங்கி இரட்சிக்கப்படக்கூடும் என்று வேதம் உரைக்கிறதா? காணிக்கை கொடுப்பதால் நரகத்தைத் தவிர்க்க முடியுமா? ஒருக்காலும் முடியாது. இவைகளனைத்தும் தவறான அபிப்பிராயங்கள் என்று வேத வசனங்கள் எடுத்துரைக்கின்றன. ஆயினும், கத்தோலிக்க மார்க்கம், நியமப் புத்தகங்களில் இவைகளை எழுதி, பயமுறுத்தி, மக்களைப் பின்பற்றச் செய்கின்றது. மனிதன் பாவத்தை மன்னிக்க மனிதனுக்கு உரிமை ஏது? அவன் தேவனல்லவே. இவர்களை விவரிக்க `பட்சிக்கிற ஓநாய்கள்’ என்னும் வாக்கின் உக்கிரம் போதாது. நிக்கொலாய் மதம் தான் ஸ்தாபனங்களின் கொள்கைகளின் வித்து. இதன் மூலம் மனிதன் மனிதனை ஆள முற்பட்டான். தேவனிடத்தில் திரும்புங்கள். தாமதமாகு முன்பே மனந்திரும்புங்கள். நியாயத்தீர்ப்பை தேவனுடைய விரல்கள் சுவரில் எழுதுகின்றன. எருசலேம் தேவாலயத்தின் பாத்திரங்கள் பெல்ஷாத்சார் ராஜாவினால் பரிசுத்தம் குலைக்கப்பட்டபோது, தேவனுடைய கோபக்கினை அவனைக் கொன்று போட்டது போன்று, தேவவாக்கியங்களின் பரிசுத்தம் குலைத்தவர்களை ஆவியானவர் சீக்கிரம் நியாயத் தீர்ப்பார். இன்றே மனந்திரும்பு, வேத வசனத்தை ஏற்றுக்கொள், நீ ஏன் மரிக்க வேண்டும்? ஆவியானவரின் சத்தம் வெளி: 2:7. `ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன், ஜெயங் கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்’. `ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்’. ஆயிரக்கணக்கானவர் இவைகளைப் படித்திருப்பர், அல்லது படிக்கக் கேட்டிருப்பர். எத்தனைபேர் அவைகளை ஏற்றுக்கொண்டார்களென்பதை நாம் அறியோம். சத்தியத்தை அறிய வேண்டுமென்ற வாஞ்சை கொண்டு வசனத்தைக் கேட்பவனுக்குப் பரிசுத்த ஆவியானவர் அதன் அர்த்தத்தை விளக்கிக் கொடுப்பார். வார்த்தையின் அர்த்தத்தை வெளிப்படுத்துவது பரிசுத்த ஆவியானவரே. நாம் சத்தியத்தை எவ்வளவாய்ப் போதித்தாலும், ஒருவன் அதைக் கேட்கத் தன் செவியைத் திறந்து, அவன் இருதயத்தில் அதை ஏற்றுக்கொள்ளாவிடில், அவனுக்கு அதன் அர்த்தம் வெளிப்படாது. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறார் என்று இந்த வாக்கியம் பன்மையில் கூறப்பட்டிருக்கிறது. வேதாகமத்தின் முதலாம் புத்தகமாகிய ஆதியாகமத்தில் சொல்லப்பட்டவை, வேதாகமத்திலடங்கிய மற்ற வார்த்தைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தில் முடிவடைகிறது போன்று, முதலாம் சபையாகிய எபேசு சபைக்கு ஆவியானவர் கொடுக்கும் சத்தியம் (அப்போஸ்தலருடைய நடபடிகளில் குறிக்கப்பட்டிருக்கும் சத்தியம்) லவோதிக்கேயா சபையின் காலம் முடியும் வரையுள்ள காலத்திற்கு அளிக்கப்பட்ட சத்தியமாகும். ஒவ்வொரு சபையின் காலமும் மிகுந்த கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில் முதல் சபையில் நடப்பட்ட நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள், காலங்கள் தோறும் வளர்ந்து, லவோதிக்கேயா சபையின் காலத்தில் பெரிய மரமாகும். ஒவ்வொரு காலத்திற்குரிய உண்மையான விசுவாசிகளையும் ஆவியானவர் எச்சரிக்கிறார். கேட்கிறதற் குக் காதுள்ளவன் மாத்திரமே கேட்பான். வாக்குத்தத்தம் வெளி 2:7. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்’ ஆம். யுத்தம் ஓய்ந்து கடைசி எக்காளம் தொனித்த பிறகு, நம்முடைய ஆயுதங்களை நாம் கீழே வைத்துவிட்டு, தேவனுடைய பரதீசில் இளைப்பாறி, ஜீவவிருட்சத்தில் எப்பொழுதும் பங்கு கொள்வோம். `ஜீவவிருட்சம்’ என்னும் வாக்கு ஆதியாகமத்தில் மூன்று முறையும் வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று முறையும் உபயோகப்படுத்தப்பட்டு எல்லா இடங்களிலும் ஒரே அர்த்தத்தையே வெளிப்படுத்துகிறது. `ஜீவவிருட்சம்’ என்பது எதைக் குறிக்கிறது? பிலேயாம் இஸ்ரவேல் ஐனங்களைக் `கர்த்தர் நாட்டின சந்தன மரங்கள்’ (எண்.24:6) என்று வர்ணித்தான். வேதத்தில் விருட்சங்கள் ஆட்களையே குறிக்கின்றன. முதலாம் சங்கீதத்தில், கர்த்தருக்குப் பிரியமானவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பிடப்படுகிறான். அப்படியெனில் ஜீவிவிருட்சம், ஜீவனைக் கொடுக்கும் இயேசு கிறிஸ்துவையே குறிக்க வேண்டும். ஏதேன் தோட்டத்தின் மத்தியில் ஜீவவிருட்சமும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் நடப்பட்டிருந்தன. ஜீவவிருட்சத்தினால் மனிதன் வாழ வேண்டுமென்றும், மற்றைய விருட்சத்தில் பங்கு கொள்ளும் நாளில் அவன் சாகவேண்டும் என்னும் கட்டளை அங்கு பிறந்தது. மனிதன் கட்டளையை மீறினபோது, மரணம் பாவத்தின் மூலம் பிரவேசித்து, தேவனிடத்திலிருந்து அவனைப் பிரித்தது. ஏதேன் தோட்டத்தில் காணப்பட்ட ஜீவவிருட்சம் இயேசுவே. இயேசு தன்னை நித்திய ஜீவனின் மூலாதாரமாகக் (SOURCE) கருதினார். `நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்’. (யோவான் 6:51). `ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன்’. (யோவான் 8:58) `நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்’. (யோவான் 4 : 14) அவரே ஜீவ அப்பம், ஜீவ ஊற்று, நித்தியமானவர், ஜீவ விருட்சம். ஏதேன் தோட்டத்தின் மத்தியில் இருந்தது போன்று, தேவனுடைய பரதீசின் மத்தியிலும் அவர் இருப்பார். ஏதேன் தோட்டத்தின் மத்தியிலிருந்த இவை மரங்களே என்று சிலர் வாதிப்பதுண்டு. ஆனால் பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள், இவை மரங்களைக் குறிப்பிடுவதில்லை என்று அறிவார்கள். `கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது’ (லூக்கா 3:9) என்று யோவான் ஸ்நானன் வனாந்தரத்தில் பிரசங்கித்த போது, அவன் இயற்கையில் காணப்படும் மரங்களைக் குறிக்காமல், மக்களையே குறிப்பிட்டான். `தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்’. (யோவான் 5:11) என்று யோவான் கூறுகிறான். `உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை’ (யோவான் 5:40) என்று இயேசு யூதர்களிடம் கூறுகிறார். `குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்’ (யோவான் 5:12). வேதத்தில் எழுதப்பட்டவைகள் ஒருக்காலும் மாறுவதில்லை. அவைகளோடு நாம் ஒன்றையும் கூட்டவோ அல்லது குறைக்கவோ கூடாது. குமாரனில் ஜீவன் உண்டு என்பதை வேதம் வெளிப்படையாக அறிவிக்கிறது. அப்படியெனில் ஏதேன் தோட்டத்தில் காணப்பட்ட ஜீவவிருட்சம் இயேசு கிறிஸ்துவாக இருக்க வேண்டும்’. `ஜீவவிருட்சம்’ ஒரு ஆளைக் குறிப்பிட்டால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் ஒரு ஆளைக் குறிப்பிட வேண்டும். அது தான் சாத்தான், அவ்வாறாயின், நீதிமானாகிய இயேசுவும் பொல்லாங்கானவனாகிய சாத்தானும் ஏதேன் தோட்டத்தின் மத்தியில் அடுத்தடுத்து நின்றனர். `நீ (சாத்தான்) தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்’. (எசே 28:13). `சர்ப்பத்தின் வித்து’ பற்றிய சரியான வெளிப்பாட்டை நாம் இங்குதான் பெறுகிறோம். ஏதேன் தோட்டத்தில் உண்மையாக என்ன சம்பவித்தது என்று நாம் சிந்திப்போம் சர்ப்பம் ஏவாளை வஞ்சித்ததாக வேதம் கூறுகிறது. ஏவாள் சர்ப்பத்தினால் கற்பழிக்கப்பட்டாள், `தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது’. (ஆதி 3:1) என்று ஆதியாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த மிருகத்தின் (சர்ப்பத்தின்) சுபாவம் மனிதனுடைய சுபாவத்திற்கு ஒத்ததாயிருந்தது. மனிதனைப் போல் நன்கு ஆலோசிக்கவும், பேசவும் அதனால் முடிந்தது. மனிதக் குரங்குக்கும் (CHIMPANZEE) மனிதனுக்கும் இடையேயுள்ள உருவத்தைப் பெற்று, நிமிர்ந்து நடக்கும் மிருகமாக அது இருந்தது. மனிதனுடைய உருவமைப்போடு ஒற்றுமை அதிகமிருந்ததால், அதன் வித்து ஸ்திரீயின்வித்தோடு கலக்கவும் அதனால் ஸ்திரீ கர்ப்பிணியாகவும் சாத்தியமாயிருந்தது. இவ்வாறு ஏவாள் கற்பழிக்கப்பட்டபோது, தேவன் சர்ப்பத்தைச் சபித்தார். சர்ப்பத்தின் தேகத்திலுள்ள ஒவ்வொரு எலும்பையும் அவர் மாற்றினதால், அது பாம்பைப்போல ஊர்ந்து போகவேண்டியதாயிற்று. மனிதன் ஞானமுள்ளவனானதால், மிருகத்திற்கும் மனிதனுக்குமுள்ள தொடர்பைக் கண்டுபிடிக்க அவனால் முடிந்தது. குரங்கிலிருந்து மனிதன் உண்டானான் என்னும் தத்துவத்தை (THEORY OF EVOLUTION) நிரூபிக்க அவன் முயல்கிறான். ஆனால் மனிதனுக்கும் குரங்குக்கும் இடையேயுள்ள இணைப்பை (MISSION LINK) அவன் ஒரு போதும் கண்டுபிடிக்க இயலாதபடி தேவன் செய்துவிட்டார். குரங்கிலிருந்து மனிதன் உண்டாகவில்லை. ஆனால் மிருகம் மனிதனோடு கலந்தது. ஏதேன் தோட்டத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் இத்தனைக் காலமாக மறைவாயிருந்து, இப்பொழுது அதுநமக்கு வெளிப்படுகிறது. இதன்மூலம் ஏவாள் ஜீவனைப் புறக்கணித்து மரணத்தை ஏற்றாள். ஏதோன் தோட்டத்தில் தேவன் சர்ப்பத்தினிடத்தில் கூறியதைக் கவனியுங்கள். `உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்’. (ஆதி 5:15) இவ்வாக்கின் மூலம் ஸ்தீரிக்கு வித்துண்டு என்று நாமறிவோமானால், சர்ப்பத்திற்கும் வித்துண்டு என்பதை நாம் ஆமோதிக்க வேண்டும். ஸ்திரியின் வித்து, மனிதப் புணர்ச்சியின்றி தோன்றிய ஆண் குழந்தையாயிருப்பின், சர்ப்பத்தின் வித்தும் மனிதனின் சம்பந்தமின்றி தோன்றிய ஒரு ஆண் குழந்தையாயிருக்க வேண்டும். ஸ்திரியின் வித்து, ஆண் பெண் தொடர்பின்றி பரிசுத்த ஆவியினால் உண்டாக்கப்பட்ட கிறிஸ்து என்று யாவருமே அறிந்த ஓர் உண்மை. ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்குவார் என்று தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தைக் கிறிஸ்து, சிலுவையின் மரணத்தினால் சாத்தானைத் தோற்கடித்து, நிறைவேற்றினார். சிலுவையில் சாத்தானின் தலை நசுக்கப்பட்டது, சாத்தானும் இயேசுவின் குதிங்காலை நசுக்கினான். ஸ்திரீயின் வித்து, மனிதனின் தொடர்பின்றி, எவ்வாறு மனித ரூபத்தில் தோன்றியது என்பதை வேதம் விவரிக்கிறது. `ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான், அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து, கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி, மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார். உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார், கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார், அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி, இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக, பரிசுத்த ஆவி உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும்’ (லூக்கா 1:26-35) இதே வசனங்கள் சர்ப்பத்தின் வித்து எவ்வாறு இவ்வுலகத்தில் தோன்றியது என்னும் வெளிப்பாட்டையும் கொடுக்கின்றன. `ஸ்திரியின் வித்து’ என்பது தேவன் தமக்கு மனித ரூபத்தை உண்டாக்கிக் கொண்டதைக் குறிக்கிறதென்று மேற்கூறிய வசனங்கள் மூலம் அறியலாம். அவ்விதமாகவே `சர்ப்பத்தின் வித்து’ சாத்தான் மானிடவர்க்கத்தில் நுழைந்த விதத்தைக் குறிக்கிறது. சாத்தான் கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்ட ஆவியாயிருப்பதால், தேவனைப்போன்று தனக்கென ஒரு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டு மனிதரிடையே வெளிப்பட முடியாது. ஆகையால் மானிட வர்க்கத்தோடு அவன் தொடர்பு கொள்ள வேண்டுமாயின், எவ்வகையிலாகிலும் தன்னுடைய வித்தை மனிதரில் நுழைக்க வேண்டும். இவ்வாறு அவன் செய்து வெற்றி பெற்ற சம்பவத்தைத் தான் ஆதியாகமம் எடுத்துரைக்கிறது. சாத்தானைச் `சர்ப்பம்’ என்று வேதம் அழைக்கிறது. சர்ப்பத்தின் வித்து’ மானிட வர்க்கத்தில் நுழைந்ததெனில், சாத்தானின் வித்து மனிதரில் நுழைந்ததென அர்த்தம். ஆதாம் ஏவாளை அறியும்முன்பு, சர்ப்பம் அவளை அறிந்தது. அதன் மூலம் தோன்றியவனே காயீன். காயீன் `பொல்லாங்கானவனால் உண்டானான் என்று யோவான் கூறுகிறான். (1 யோவான் 3:12) காயீன், ஆதாமின் குமாரனா யிருந்தால், ஆதாம் பொல்லாங்கானவனாயிருக்க வேண்டும். அப்படியெனில் வேதம் அவனை எங்ஙனம் `தேவனால் உண்டானவன்’ (லூக்கா 3:58) என்று கூற முடியும்? வேத வாக்கியங்களை அருளிய பரிசுத்த ஆவியானவர் இவ்வாறு முரண்பாடான சத்தியங்களை ஒருக்காலும் கொடுக்கமாட்டார். ஆகையால் காயீன் பொல்லாங்கான சாத்தானின் மூலம் இவ்வுலகத்தில் தோன்றினான். தன் தகப்பனின் சுபாவத்தைப் பெற்று அவன் கொலையாளியானான், சாத்தான் தேவனை எதிர்த்ததைக் காட்டிலும், அவனுடைய குமாரனாகிய காயீன், மனித சுபாவமற்று, தேவனோடு அதிகமாக எதிர்த்துப் போராடினான். `காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. கர்த்தர் காயீனை நோக்கி, உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார். அதற்கு அவன் நான் அறியேன், என் சகோதரனுக்கு நான் காவலாளியோ’ என்றான். அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி, எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்க முடியாது. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்துதுரத்திவிடுகிறீர், நான் உமது சமூகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன், என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக்கொன்று போடுவானே என்றான்’ (ஆதி 4:5, 9, 13, 14). காயீன், ஆபேல், சேத் இவர்கள் பிறந்தவிதம் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. `ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான், அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்’ (ஆதி 4:1-2). `பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான், அவள் ஒரு குமாரனைப் பெற்று... அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்’ (ஆதி 4:25) ஆதாமின் இரு புணர்ச்சிகளின் காரணமாய் மூன்று குமாரர்கள் பிறக்கின்றனர். தேவனின் சத்தியமான வார்த்தைகளே வேதத்தில் அடங்கியிருப்பதால், மேற்கூறியது தவறாக எழுதப்பட்டிருக்கிறது என்று கூறமுடியாது. இதன் அர்த்தத்தை ஆவியானவர் பின்னர் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவ்விதமாகவே குறிக்கப்பட்டிருக்கிறது. ஆதாமின் இருசெய்கைகளினால் மூன்று குமாரர்கள் பிறந்ததால், ஒருவன் ஆதாமின் குமாரனல்ல. உண்மை என்னவெனில், சர்ப்பத்தின் குமாரனும் (காயீன்), ஆதாமின் குமாரனும் (ஆபேல்) இரட்டைக் குழந்தைகளாக ஏவாளின் கர்ப்பத்தில் வளர்ந்தனர். ஆபேல் உண்டாவதற்கு சிறிது காலம் முன்பு காயீன் ஏவாளின் கர்ப்பத்தில் உண்டானான். இது சாத்தியமல்ல என்று எண்ணுபவர்கள், மருத்துவக் குறிப்புகளைப் (MEDICAL REPORTS) படிக்க வேண்டும். சமீபத்தில் நார்வே (NORWAY) தேசத்திலிருந்த ஒரு ஸ்தீரி, இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தாள், அவைகளில் ஒன்று கறுப்பு நிறமாகவும், மற்றொன்று சிவப்பாகவும் இருந்தன. அவளுடைய நடத்தையைச் சந்தேகித்த கணவன் அவளை விவாகரத்து செய்தான். அவளுக்கு ஒரு நீக்ரோ காதலனிருந்ததாக அவள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டாள். ஒரு கர்ப்பம் உண்டான மூன்று வாரங்கள் கழித்து மற்றொரு கர்ப்பம் அவளுக்கு உண்டாயிற்று என மருத்துவர் கூறினர். 1963-ம் வருஷத்தில் டெக்ஸாஸ் (TEXAS) பட்டினத்திலுள்ள போமாண்ட் (BEAUMONT) என்னும் ஸ்தலத்தில் தங்கியிருந்த ஒரு பெண் இரண்டு வித்தியாசமான சமயங்களில் கர்ப்பமுற்றாள். முதல் பிரசவத்தில், மற்றொரு குழந்தை கர்ப்பத்திலுள்ளவாறே மரித்தாள். சர்ப்பத்தின் வித்து ஏன் இம்முறையில் தோன்றவேண்டும்? மனிதன் தேவனுக்கென்று சிருஷ்டிக்கப்பட்டவன். அவன் தேவனுடைய (பரிசுத்த ஆவியின்) இளைப்பாறுதலின் ஸ்தலமாக, அதாவது ஆலயமாக, இருக்கிறான். `இவன் (தாவீது தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைக் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம் பண்ணினான். சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது, எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள், நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது? இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல் நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்’ (அப் 7 : 46-51). கர்த்தர் மனிதனுக்குள் தங்குவது போன்று, சாத்தானும் தங்க ஆசைகொண்டான். ஆனால் இவ்வாறு தங்குவதற்குக் கர்த்தருக்கு மாத்திரமே உரிமை இருந்தது. கர்த்தர் தமது சிருஷ்டிப்பின் வல்லமையினால் மரியாளின் கர்ப்பத்தில் சரீரத்தை உண்டாக்கிக்கொண்டு மானிடரிடையே வாசம் செய்தார். சாத்தானுக்கு ஏவாளின் கர்ப்பத்தில் சரீரத்தை உண்டாக்கிக்கொள்ள வல்லமையில்லை. ஆயினும் மானிட வர்க்கத்தோடு சம்பந்தங்கொள்ள ஆர்வம் கொண்டவனாய் கதரேனருடைய நாட்டில் பன்றிகளுக்குள்ளே புகுந்தது போன்று (லூக்கா 8:33), ஏதேன் தோட்டத்திலுள்ள நிமிர்ந்து நின்ற சர்ப்பத்திற்குள் அவன் புகுந்து, ஏவாளைக் கற்பழித்து, அவள் மூலம் காயீனைப் பெற்றான். காயீன் சாத்தானின் ஆவிக்குரிய தன்மைகளையும் மிருகத்தின் மாம்ச இச்சைகளையும் ஒருங்கே கொண்டவனாயிருந்தான். ஒரு மிருகத்தின் கருவை எடுத்து மனிதனுள் புகுத்தினால், அதன் தைராய்டு அணுக்கள் (THY ROID CELLS) மனிதனின் தைராய்டுக்குள்ளும், அதன் பிருக்கங்களின் அணுக்கள் (KIDNEY CELLS) மனிதனின் பிருக்கங்களுக்குள்ளும் செல்கின்றன என்று விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது. காணக்கூடாத ஒரு சக்தி இவைகளைச் சரியான இடங்களில் சேர்க்கின்றது. இக்காலத்தில் மனிதனும் மிருகமும் புணர்ந்து சந்ததியுண்டாக்க முடியாவிட்டாலும், மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையே காணப்படும் இத்தகைய ரசாயனத் தொடர்பு (CHEMICAL AFFINITY) ஏதேன் தோட்டத்தில் ஏவாளுக்கும் சர்ப்பத்திற்குமுண்டான புணர்ச்சியை நிரூபிக்கிறது. மேற்கூறிய எல்லாவற்றையும் ஒன்றுபடுத்தி மறுபடியும் கூற நான் விரும்புகிறேன். ஏதேன் தோட்டத்தில் இரண்டு விருட்சங்கள் உண்டாயிருந்தன. இயேசுவே ஜீவ விருட்சம் மற்றைய விருட்சம் சாத்தான் என்பதை அவன் கொடுத்த கனிகளின் மூலம் அறியலாம். இவ்விரண்டு விருட்சங்களும் மனிதனுடைய ஜீவியத்தோடு சம்பந்தப்பட்டவை யென்றும் தேவனுடைய மேலான திட்டமும் (SOVAREIGN PLAN) நோக்கமும் நிறைவேற இவையிரண்டும் காரணமாயிருந்தன என்றும் நாமறிய வேண்டும். இச்சத்தியத்தை நாம் ஏற்றுக்கொள்ளாவிடில் தேவனின் சகலத்தையும் அறியும் தன்மையை (OMNISCIENCE) நாம் சந்தேகிக்கிறவர்களாயிருப்போம். தேவன் தம்முடைய நித்தியஜீவனை மனிதனுக்குப் பகிர்ந்து கொடுக்க உலகத்தோற்றத்திற்கு முன்பே சித்தங்கொண்டார் என்று தேவனுடைய வார்த்தை உரைக்கிறது. `தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களு மாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத் தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப் பண்ணினார். காலங்கள் நிறைவேறும் போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத் திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். மேலும் கிறிஸ்துவின் மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன் குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்’ (எபே 1: 4-12) `உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட் டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்’ (வெளி 13:8) தேவன் மாம்சத்தில் வெளிப்பட்ட தன் மூலமேயன்றி, வேறு எந்த வகையிலும் மனிதன் அவருடைய நித்திய ஜீவனைப் பகிர்ந்து கொள்ளமுடியாது. இது தேவனின் நித்திய நோக்கத்தின் ஒரு பாகமும், முன் குறிக்கப்பட்டதும், (PREDESTINATED) அவருடைய இரட்சிப்பின் மகிமைக்குப் புகழ்ச்சியுமாயிருந்தது. இதுவே அவருடைய மீட்பின் திட்டம். இதுவே அவருடைய இரட்சிப்பின் திட்டம். தேவன், தம்முடைய இரட்சிப்பின் தன்மையை வெளிப்படுத்துவதற்கென்று, இரட்சிப்பு அவசியமான ஒரு மனிதனை முன்குறிக்க வேண்டியதாயிருந்தது. இரட்சிப்பை அடைவதன் மூலம், மனிதன் விவேகத்தைப் பெற்று, அவன் சிருஷ்டிக்கப்பட்ட நோக்கத்தையும் அறிந்து கொள்வான். ஆயிரக்கணக்கான வேதவாக்கியங் களும், முக்கியமாக `சகலமும் அவராலும் அவருக்காகவும் இருக்கிறது, அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக ஆமென்’ (ரோமர் 11:36) என்னும் வசனமும், அதை உறுதிப்படுத்துகின்றன. மனிதன் நேரடியாக ஏதேன் தோட்டத்தின் மத்தியிலிருந்த ஜீவவிருட்சத்தில் பங்கு கொள்ளுதல் அரிது, நித்திய ஜீவவிருட்சம் முதலில் மானிடனாக வேண்டும். தேவன் மனிதனை பாவத்தினின்று இரட்சிக்க வேண்டுமெனில், அதற்குப் பாவத்தில் விழுந்த மனிதன் அவசியம், சாத்தான் மாத்திரம் மாசிச இச்சைகள் கொண்டு மனிதனைப் பாவத்தில் வீழ்த்த முடியும். பாவத்தில் விழுந்த மனிதரை இரட்சிக்க கிறிஸ்து மாமிசத்தில் தோன்றிய வண்ணம், சாத்தான் மாமிசத்தில் தோன்ற வேண்டும். ஆனால் கிறிஸ்துவைப் போல் அவனுக்கென்று சரீரத்தைச் சிருஷ்டித்துக் கொள்ள அவனால் முடியாது. ஆகையால் பெரும்பாலும் மனித உருவமைப்பைப் பெற்ற சர்ப்பத்தின் மூலம், அவன் தன்னுடைய வித்தை மானிட வம்சத்தில் புகுத்தினான். (இயேசுவும் பரிசுத்த ஆவியாக மக்களுக்குள் நுழைந்திருக்கிறார். இவர்கள் உயிர்த்தெழுதலின் மகிமையில் சரீரங்களைப் பெறுவர்). ஏதேன் தோட்டத்தில் தேவன் இவ்விதமாகத்தான் முன் குறித்த திட்டத்தை நிறைவேற்றினார். தேவனுடைய நோக்கம் நிறைவேற சாத்தான் அனைத்தையும் செய்த பிறகு, தோட்டத்திலுள்ள ஜீவவிருட்சத்தை மனிதன் அடைய முடியாமற் போயிற்று. மனிதன் நித்திய ஜீவனையடைய கர்த்தரின் பார்வையில் அது ஏற்ற சமயமல்ல. மிருகம் மனிதனைப் பாவத்தில் ஆழ்த்தியதன் காரணத்தால் ஒரு மிருகத்தின் இரத்தம் சிந்தப்படுவதன் மூலம், தேவன் மறுபடியும் மனிதனோடு தொடர்பு கொண்டார். ஒரு நாளில் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு, சிலுவையின் மரணபரியந்தம் அவரைத் தாழ்த்தினார். அதனால் மானிடர் அழிவினின்று மீட்கப்பட்டு, அவருடைய நித்திய ஜீவனில் பங்கு கொண்டனர். இவ்விளக்கம் சர்ப்பத்தின் வித்தின் இரகசியத்தை உங்களுக்கு அறிவித்து ஏவாள் பழத்தைப் புசிக்கவில்லை என்பதைப் போதிக்கும். `ஏவாள் பாவத்தில் விழுந்தால், ஆதாமைத் தேவன் ஏன் குற்றப்படுத்த வேண்டும்?’ என்று அநேகர் என்னிடத்தில் கேட்கின்றனர். தேவனுடைய பிரமாணங்களும், சட்டதிட்டங்களும் (வார்த்தை) ஒருக்காலும் மாறாதவைகள். இவைகள் உலகங்கள் உண்டாவதற்கு முன்பே நியமிக்கப்பட்டு, அநேக காலங் கழித்து மோசேக்குக் கொடுக்கப்பட்டு, வேதாகமத்தில் இடம் பெற்றன. ஆதாமும், இப்பிரமாணங்களுக்குட்பட்டவனாயிருந்தான். ஒரு ஸ்திரீ புருஷனைவிட்டுப் பிரிந்து, வேறொருவனோடு வாழத்தலைப்பட்டால், அவள் விபசாரி என்றும், புருஷன் அவளை மறுபடியும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றும் வேதம் போதிக்கிறது. ஏவாளை ஏற்றுக்கொண்டால் தேவனுடைய கற்பனையை மீறுவான் என்று அறிந்தும், ஆதாம் அவளைச் சேர்த்துக் கொண்டான். ஏவாள், ஆதாமின் ஒரு பாகமாயிருந்ததால், அவள் செய்த பாவத்தை இதன் மூலம் அவனே ஏற்றுக்கொண்டான். ஆதாம் ஏவாளோடு சேர்ந்ததன் காரணமாக, அவள் கர்ப்பந்தரித்தாள். ஏவாளின் மேலுள்ள அன்பினிமித்தம், ஆதாம் மானிட வர்க்கம் முழுவதையும் பாவத்திற்கு அடிமையாக்கினான். ஏவாள் ஆதாமுக்கு ஆபேல், சேத் என்னும் இரு குமாரர்களைப் பெற்றாள். இவர்கள் பாவத்தினால் கறைபடுத்தப்பட்ட மானிடவர்க்கத்தின் முன்னோர்களாவர். ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாம் தலைமுறை என்று யூதா கூறுகிறான். (யூதா 14ம் வசனம்). ஆதியாகமம் (5ம் அதிகாரம்) ஆதாமின் வம்ச வரலாற்றையும் பின்வருமாறு குறிக்கிறது. 1. ஆதாம், 2. சேத், 3. ஏனோஸ், 4. கேனான், 5. மகலாலெயல், 6, யாரேத், 7. ஏனோக்கு, காயின் வம்ச வரலாற்றில் இடம் பெறவில்லை. ஆதாமின் சந்ததி சேத்தின் வழியாக வருகிறது. காயீன் ஆதாமின் குமாரனாயிருந்தால் காயீனின் வழியாகச் சந்ததி உண்டாக வேண்டும். மேலும், `ஆதாம் நூற்று முப்பது வயதான போது தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே, ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்’ (ஆதி 5:3) என்று வேதம் உரைக்கிறது. காயீன் ஆதாமின் சாயலாக இருந்தான் என்று வேதாகமத்தில் எங்கும் கூறப்படவில்லை. ஆதாமின் குமாரனாயிருந்தால், அவன் சாயலிலே காயீன் உண்டாயிருக்க வேண்டும். அதுவுமின்றி, லூக்காவில் காணும் வம்ச வரலாற்றிலும், காயீனின் பெயர் குறிக்கப்படவில்லை. `ஏனோஸ் சேத்தின் குமாரன், சேத் ஆதாமின் குமாரன், ஆதாம் தேவனால் உண்டானவன்’ (லூக்கா 3.38) என்று எழுதப்பட்டிருக்கிறது. காயீனின் சந்ததி கர்த்தருக்கு விரோதமானவர்களென் றும், சேதத்தின் சந்ததி தேவனுக்குப் பயந்தவர்களென்றும் வேதமாணாக்கர் அறிந்திருப்பினும், இவர்கள் ஏன் முரண்பட்ட தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டுமென்று அவர்கள் இதுவரை ஆலோசிக்கவில்லை. ஒவ்வொரு தலைமுறையும் தேவனைவிட்டுப் பின்வாங்குகிறபடியால், காயீன் ஆதாமின் குமாரனாயிருப் பின், அவன் அதிக தேவபக்தியுள்ளவனாயிருந்து, பின்னர் தோன்றிய ஆபேலும், சேத்தும் அவனைக்காட்டிலும் குறைந்த பக்தியுள்ளவர்களாயிருந்திருக்க வேண்டும். ஆனால் காயீனோ மனிதர் எல்லாரிலும் பொல்லாங்கானவனென்றும், தேவனையும் அவருடைய கட்டளைகளையும் எதிர்த்தானென்றும் வேதத்தின் மூலம் நாமறிகிறோம். வேதாகமம் அவசியமில்லாமல் வார்த்தைகளை உபயோகிப்பதில்லை. ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்தையும் அபிஷேகம் பெற்றவர்கள் அறிவர். `ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான். ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்’ (ஆதி 3.20) என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆதாம் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தகப்பன் என்று வேதம் எங்கும் கூறவில்லை. மனிதர்கள் சுயஉணர்வின்றி (UNCONSCIOUSLY) பாம்புகளால் வசீகரிக்கப்படுகின்றனரென்றும், இது மாம்ச இச்சையோடு சம்பந்தப்பட்டது (SEXUAL) என்றும் மனோதத்துவ நிபுணர்கள் (PSYCHIATRISTS) 1963ஆம் வருஷம் மார்ச் மாதம் 2-ம் தேதி வெளியிடப்பட்ட `லைப்’ (LIFE) என்னும் பத்திரிகையில் எழுதியிருக்கினறனர். நாகரீக மற்ற ஜாதிகள் (TRIBES) இன்றைக்கும் பாம்பை மாம்ச புணர்ச்சியோடு (SEX) சம்பந்தப்படுத்தி அதைத் தொழுதுகொள்ளு கின்றனர் என்று கூறப்படுகிறது. படிப்பறியாத இவர்கள் ஏதேனில் நடந்த சம்பவத்தை எவ்வாறு அறிவர்? நோவாவின் காலத்து வெள்ளத்தைப் பற்றிய வரலாறு உலகம் பூராவும் அறியப்படுவது போன்று, மானிட வர்க்கம் பாவத்தில் விழுந்த சத்தியமும் எங்கும் அறியப்படுகின்றது. சர்ப்பத்தைக் குறித்து ஏவாள் கவனமாயிருக்க வேண்டும். இல்லாவிடில் அது கற்பழிக்கும் என்று தேவன் ஆதியில் கூறினாரா என்று நீங்கள் கேட்கலாம். இனி நடக்கப்போவதைக் தேவன் முன்கூட்டி அறிவிக்க அவசியமில்லை. அறிவில் பங்குகொள்ள வேண்டாம், ஜீவனில் பங்கு கொள்ளுங்கள் என்று தேவன் கூறினார். தேவனுடைய வார்த்தையே ஜீவன். தேவனுடைய வார்த்தையல்லாத யாவும் மரணமே, ஏவாள் ஒரு வார்த்தையை மாத்திரம் மாற்ற அனுமதித்ததால் சாத்தான் அவளை மேற்கொள்ள முடிந்தது. நியாயப் பிரமாணத்தில் ஒன்றை மீறினவன் நியாயப் பிரமாணம் முழுவதும் மீறினவனாக எண்ணப்படுகிறான். நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் மரணத்தைப் பிறப்பித்தது. காயீன் தன் சகோதரனான ஆபேலைக் கொன்றான். அன்று முதல் பொல்லாங்கானவர்கள் நீதிமான்களைத் துன்புறுத்தவும் கொல்லவும் தொடங்கினர். தீர்க்கதரிசிகளினால் கூறப்பட்ட `மீட்பின் காலம்’ (RESTORATION PERIOD)வரை இது நீடிக்கும். நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் ஞானவான்களையும், பிரசித்தி பெற்ற மனிதர்களையும் உலகத்திற்கு அளித்தது அவர்கள் வழிகளெல்லாம் மரண வழிகள். தேவனுடைய மக்கள் சாதாரணமானவர்கள், அவர்கள் ஆவிக்குரிய வித்து உள்ளவர்களாய் தேவன் பேரில் சார்ந்திருந்து, எளிமையான ஜீவியும் செய்து, செல்வத்தைக் காட்டிலும் சத்தியத்தை விரும்புவர். சர்ப்பத்தின் வித்து, பிரமாண்டமான வாணிபமும், அதிசயமான கண்டுபிடிப்பும் (INVENTION) உண்டாகக் காரணமாயிருந்தது. ஆனால் இவைகளோடு மரணமும் சம்பவித்தது. கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்களும், அணுகுண்டுகளும் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றன, சமாதான காலங்களில், அவர்களால் உண்டாக்கப்பட்ட மோட்டார் வண்டிகள் அதைக்காட்டிலும் அதிகமானவர்களைக் கொன்று போட்டன, மரணமும் அழிவும் அவர்கள் கிரியைகளின் பலனாகும். ஆனாலும் சர்ப்பத்தின் சந்ததி பக்தியுள்ளவர்களாய்க் காணப்படுவர். காயீனும் பிசாசும் தேவனை விசுவாசித்தது போன்று அவர்களும் தேவன்பேரில் விசுவாசமுள்ளவர் களாயிருப்பர். அவர்கள் ஆலயங்களுக்குச் சென்று, கோதுமைக்கதிர் களைகளோடு ஒன்றாய் வளருவது போன்று, நீதிமான்களோடு சம்பந்தப்பட்டு, நிக்கொலாய் மதத்தை உண்டாக்குவர். காயீன் ஆபேலைக் கொன்றதுபோல், இவர்களும் தேவனுடைய வித்தை நிர்மூலமாக்குவதற்கென்று நஞ்சை அவர்களிடையே பரப்புவர். தேவன் அவருக்குச் சொந்தமான யாரையும் இழந்துபோவதில்லை. மரணபரியந்தம் அவர்களைக் காத்து, கடைசி நாளில் அவர்களை எழுப்புவதாக அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். முடிவுரை `........ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்’. பாவத்தில் விழுந்ததின் காரணமாக ஆதாமுக்குக் கிடைக்கப் பெறாத ஏதோன் தோட்டத்தின் ஜீவவிருட்சம் இப்பொழுது ஜெயங்கொள்ளுகிறவனுக்கு அளிக்கப் படுகிறது. ஜீவ விருட்சத்தைக் காவல் செய்த கேரூபினின் சுடரொளி பட்டயம் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் கறைபட்ட பிறகு உறையில் போடப்பட்டது. ஆதாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் அளிக்கப்படாத விருட்சம் இப்பொழுது ஜெயங்கொள்ளுகிறவனுக்குக் கொடுக்கப்படும் காரணத்தைச் சற்று சிந்திப்போம். மனிதன் தேவனுடைய வார்த்தைகளை அவன் ஜீவியத்தில் வெளிப்படுத் வேண்டுமென்று தேவனுடைய சித்தமாயிருக்கிறது. ஆதாம் ஒவ்வொரு வார்த்தையின்படியும் ஜீவிக்க வேண்டுமென்று தேவன் கட்டளையிட்டபோது, அவன் அவ்வாறு செய்யத் தவறினான். வரப்போகும் மகத்தான தீர்க்கதரிசிக்கு அடையாளமாயிருந்த மோசேயும் தன்னுடைய கோபத்தின் காரணத்தால் தேவனுடைய வார்த்தைக்குத் கீழ்ப்படியத் தவறினான். கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவனான தாவீது ராஜா சோதிக்கப்பட்ட போது, விபசாரம் செய்து, அதன் மூலம் தேவனுடைய வார்த்தையின்படி ஜீவிக்கத் தவறினான். காலம் நிறைவேறினபோது, இயேசு தோன்றினார். தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பாரா என்று அறிவதற்கென, அவர் சோதிக்கப்பட்டார். அந்தச் சோதனையில் அவர் வெற்றிபெற்று, சாத்தானை மடங்கடித்தார். தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாய் ஜீவித்து எல்லாவற்றையும் மேற்கொண்டார். தேவத்துவத்தின் பரிபூரணமாகத் திகழ்ந்த இவர், தேவனுடைய குற்றமில்லாத ஆட்டுக்குட்டியாய், குற்றமற்ற பலியாகச் செலுத்தப்பட சிலுவையின் மரணத்தற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார். ஜீவ விருட்சத்தின் கனியை நாம் புசித்து, கிரயமில்லாமல் அருளப்பட்ட அந்த நித்திய ஜீவனின் மூலம் ஜெயங்கொண்டு, தேவனுடைய வார்த்தையை நம்முடைய ஜீவியத்தில் வெளிப்படுத்த, அவர் சிலுவையின் `மரத்தில் மரணத்துக்கேதுவான காயமடைந்தார். அவரால் முற்றிலும் ஜெயங்கொண்ட தேவபுத்திரருக்குத் தேவனுடைய பரதீசும், இயேசு கிறிஸ்துவோடு எப்போதும் ஐக்கியங்கொள்ளும் சிலாக்கியமும் கிடைக்கும். அவரைவிட்டு இவர்கள் இனி ஒருபோதும் பிரிவதில்லை. அவர் எங்கு சென்றாலும், அவருடைய மணவாட்டியும்கூடச் செல்வாள். அவருக்குள்ள தனைத்தையும் அவளோடு அவர் பங்கிட்டுக் கொள்வார். இதுவரை மறைந்து கிடந் தவைகளெல்லாம் அவளுக்கு வெளியரங்கமாக்கப்படும். அவரிருக்கிற வண்ணமாகவே நாம் இருப்போம். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியின் வசனத்தினாலும் ஜெயங்கொண்டவர் களுக்கு இவையெல்லாம் உரிமைகளாக அளிக்கப்படுகின்றன. கோணலான பாதைகள் செவ்வையாகி, நாம் அவரோடு நித்திய காலமாய் வாழும் நாளைக் காண நாம் எவ்வளவு ஆசிக்கிறோம். அந்த நாள் சீக்கிரம் வரட்டும், நாமும் தேவனுடைய வசனத்துக்குக் கீழ்ப்படிய துரிதப்பட்டு, அவருடைய மகிமையைப் பகிர்ந்துகொள்ளத் தகுதியாகக் காணப்படுவோமாக. `ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்’. முதலாம் சபை ஆவியானவர் சொன்னதைக் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக அது மனிதன் கூறினவைகளைக் கேட்டு ஏற்றுக்கொண்டது. கடைசிக் காலமாகிய இக்காலத்திலே, உண்மையான மணவாட்டி எழும்பி, ஆவியின் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த அந்தகாரத்தின் நாளில் சுத்த வசனத்தின்மூலம் வெளிச்சம் மறுபடியும் பிரகாசித்து நாமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எதிர்கொண்டழைக்கத் தக்கதாக, பெந்தேகோஸ்தேயின் வல்லமையை மீண்டும் பெறுவோம். நான்காம் அத்தியாயம்: சிமிர்னா சபையின் காலம் THE SMYRNAEAN CHURCH AGE வெளி 2 : 8 - 11 சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்; முந்தினவரும், பிந்தினவரும், மரித்திருந்தும் பிழைத்த வருமானவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன். நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்து நாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு; அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது. முகவுரை தேவன் தம்முடைய சர்வ அதிகார (SOVEREIGN) சித்தத்தின்படி, இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரம் காணாமற்போகாமல் பாதுகாத்து, அவற்றை வேதாகமத்தில் குறிப்பிட்டு, இன்று புதைப்பொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கற்ற காகிதச் சுருள்கள் (SCROLLS) மூலமாகவும், மண்பாண்டங்கள் போன்ற புராதன சாதனங்களின் மூலமாகவும் அது உண்மையென்று நிரூபித்தவாறு, புதிய ஏற்பாட்டின் சபையின் சரித்திரத்தையும் கவனமாகப் பாதுகாத்து, அதைக் குறித்தத் தீர்க்கதரிசன வசனங்கள் நிறைவேறி வருகின்றன என்பதை நிரூபிக்கிறார். சபையின் சரித்திரத்தை நாம் ஆராய்ந்தால், தேவனுடைய வெளிப்படுத்தலினால் பவுல் பிரசங்கித்த அதே சுவிசேஷத்தைச் சபையின் காலங்கள் தோறும் பிரசங்கித்தவர்களை நாம் கண்டுபிடிக்க முடியும். இப்படிப்பட்டவர்களை அந்தந்த காலத்துச் சபையின் தூதர்களாக நாம் நிர்ணயிக்கலாம். சபையின் காலங்களையும், ஒவ்வொரு காலத்தில் நேரவிருப்பவைகளையும் கர்த்தர் தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தின விசேஷத்தில் முன்னறிவித்தார். சபையின் சரித்திரமும் இத்தீர்க்கதரிசனங் களோடு அருமையாய் ஒத்துப்போகிறது. சபை சரித்திர ஆராய்ச்சியின் மூலம் நான் நிர்ணயித்த தூதர்களின் பெயர்கள் சரியென தேவ ஆவியானவர் ஆமோதித்தார். தூதன் மேற்கூறிய விதிகளை அனுசரித்து, இரினேயஸ் (IRENAEOUS) என்பவரை இச்சபையின் தூதனாக நான் நியமிக்கிறேன். இச்சபையின் காலத்தில், திவ்ய வாசகனாகிய யோவானின் சீடர், பாலிகார்ப் (POLYCARP) என்பவர் வாழ்ந்தார். விசுவாசத்தில் வல்லவரும், பரிசுத்தவானுமாகிய இவர், புனிதமான ஜீவியத்தைக் கடைப்பிடித்து, கிறிஸ்தவனுக்குரிய அம்சங்களனைத்தும் பெற்றிருந்தார். முடிவில் இவர் இரத்த சாட்சியாய் மரித்தார். அவரைப் பிடிக்க அதிகாரிகள் வகைதேடினபோது, அவருடைய சிநேகிதர்களில் ஒருவர் அவரை ஒளித்துவைக்க முன்வந்தார். அவரை ஆபத்துக்குட்படுத்த மனமில்லாமல், பாலிகார்ப் அதை மறுத்துவிட்டார். அவர் வயது சென்றவராயிருந்தபடியால், தம்மைப் பிடிக்க வந்தவர்களிடமிருந்துதப்பி ஓடவும் அவரால் முடியவில்லை. அவரைத் தீக்கிரையாக்கக் கொண்டு போகுமுன்பு, அவருடைய விரோதிகளுக்காகவும், நாட்டின் அதிகாரிகளுக்காகவும் இரண்டு மணி நேரம் ஜெபிக்க அவர் அனுமதிக்கப்பட்டார். கர்த்தராகிய இயேசுவை மறுதலிக்க அதிகாரிகள் எவ்வளவோ வற்புறுத்திய போதிலும், மேலான உயிர்த்தெழுதலையடைய எண்ணங்கொண்டவராய், அவ்வாறு செய்யாமல் கர்த்தருக்கென்று உறுதியாய் நின்றார். அவருடைய வேண்டுகோளின்படி, கழுமரத்தில் (STAKE) கட்டப்படாமல் அவர் நிறுத்தப்பட்டுத் தீக்கொளுத்தப் பட்டார். அப்பொழுது தீ அவருடைய தேகத்தைத் தொடாமல் விலகினது. பிறகு அவர் பட்டயத்தால் உருவக் குத்தப்பட்டபோது, தண்ணீர் அவருடைய விலாவினின்று பாய்ந்து தீயையணைத்தது, அவருடைய ஆவி புறாவின் ரூபம் கொண்டு மார்பிலிருந்துவிடுதலையாகிப் போனதை அங்கு கூடியிருந்தவர்கள் கண்டனர். பாலிகார்ப் பரிசுத்தவானாய் வாழ்ந்தபோதிலும், நிக்கொலாய் மார்க்கத்தை எதிர்க்காமல், ஸ்தாபனங்களோடு தொடர்பு கொண்டிருந்தார். ஸ்தானபங்களின் மூலம் தேவனுடைய ஊழியம் நன்கு நடைபெறும் என்ற எண்ணம் பிசாசின் தந்திரத்தினால் உண்டானது என்பதை அவர் உணரவில்லை. இரினேயஸ் என்பவர் பாலிகார்ப்பின் சீடராயிருந்து, கிறிஸ்தவ அனுபவங்களனைத்தையும் அவரிடமிருந்து படித்தார். ஸ்தாபனங்களை முற்றிலும் இவர் எதிர்த்து, தம்முடைய ஜீவியத்தில் பரிசுத்த ஆவியின் அடையாளங்களையும் அற்புதங்களையும் பெற்று, வேத வசனங்களைத் தெளிவாகப் போதித்தார். பிரான்ஸில் அவர் நிறுவின சபைகளில் ஆவியின், வரங்களனைத்தும் காணப்பட்டு, மக்கள் அன்னிய பாஷை பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தி, மரித்தோரை உயிர்ப்பித்தனர். போதகர்களும் மூப்பர்களும் ஆசாரியத்துவத்தைக் (PRIESTHOOD) கடைபிடிப்பதை அவர் விரோதித்து, பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அதற்கேற்ப ஆவியின் வரங்களைக் கொண்ட ஐக்கியப்பட்ட சபையை ஆதரித்தார். சத்தியத்தில் அவர் உறுதியாய் நின்றதால் தேவன் அவரை மேன்மைப்படுத்தி, பரிசுத் தவான்களிடையில் தம்முடைய வல்லமை விளங்கச் செய்தார். இரினேயஸ் தேவத்துவத்தைக் குறித்து நன்றாக அறிந்தவர். `வல்லமையின் தேவன், கர்த்தர், எல்லாருக்கும் பிதாவானவர், சர்வ வல்லமையுள்ள தேவன், உன்னதமானவர், சிருஷ்டி கர்த்தர், உண்டாக்கினவர். போன்றவைகள் வித்தியாசமான ஆட்களின் பட்டப் பெயர்களல்லாமல், ஒருவரின் பட்டபெயர்களாகும்’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். சாரோனின் ரோஜா, பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம், பதினாயிரம் பேரில் சிறந்தவர் என்பவைகள் மேற்கூறியவைகளைப் போன்ற பட்டப்பெயர்கள் என்றும், ஒரே தேவன் உண்டு, அவர் பெயர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும் அவர் உணர்ந்திருந்தார். சிமிர்னா சிமிர்னாபட்டினம், சிமிர்னாகுடாவின் முகத்துவாரத்தில், எபேசு பட்டினத்தின் சிறிது வடக்கில் அமைந்திருந்தது. அங்கிருந்த இயற்கை துறைமுகத்தின் காரணமாக அது வாணிபத்தில் செழித்தோங்கி, ஏற்றுமதியில் பிரசித்தி பெற்றிருந்தது. அல்லாமலும் தத்துவம், விஞ்ஞானம், மருத்துவ கலைகளில் அது பெயர்பெற்று விளங்கினது. அங்கு வாழ்ந்த யூதர்கள், ரோமர்களைக் காட்டிலும் அதிகமாக கிறிஸ்தவ மார்க்கத்தை விரோதித்தனர். இவர்கள், ஓய்வுநாள் ஆசரிப்பை மீறுவதையும் பொருட்படுத்தாமல், பாலி கார்பைத் தீ மூட்டிக் கொல்வதற்கென, அந்நாளில் விறகு சுமந்தார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. சிமிர்னா (SMYRNA) என்னும் பதம் `வெள்ளைப்போளம்’ (MYRRH) என்னும் வாக்கிலிருந்து தழுவப்பட்டு, `கசப்பு’ என்னும் அர்த்தம் பெறும். மரித்தவர்களின் சடலங்களைச் சுகந்தமிட (EMBALM) வெள்ளைப்போளம் அக்காலங்களில் உபயோகிக்கப்பட்டது. `சிமிர்னா’ என்னும் பெயர் இருவகை அர்த்தங்கொண்டது. முதலாவதாக, சபையிலுள்ள விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்குமிடையே ஏற்பட்ட பிளவின் காரணமாகத் தோன்றின கசப்பை இது குறிக்கிறது. இரண்டாவதாக, பெந்தேகோஸ்தே காலத்தில் அளிக்கப்பட்ட சத்தியத்தை விசுவாசிகள் விட்டு சிறிது வழுவி, பரிசுத்த ஆவியின்வழி நடத்துதலைப் புறக்கணித்து, ஸ்தாபனங்களை வளர்த்தி, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பிரமாணங்களையும், கொள்கைகளையும், ஆசாரங்களையும் புகுத்தி, ஆவிக்குரிய மரணமடைந்தததையும் இது குறிக்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் உலகத்தோடு சம்பந்தப்பட்டு, விவாகத்தின் மூலம் மற்றைய ஜாதிகளோடு சம்பந்தங் கலந்த பிறகு, ஒரு நாள் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டு போகப்பட்டனர், அவ்விடத்தில் அஞ்ஞான வழிபாடுகளை அவர்கள் கற்று, சிறையிருப்பலிருந்து திரும்பியபோது, ரபிகளையும், பரிசேயர்களையும் ஏற்படுத்தி, ஆலயங்களைக் (SYNAGOGUES) கட்டி யூத பிரமாணங்களைத் (TALMUD) தங்களுக்கென்று உண்டாக்கிக்கொண்டனர். இயேசு இவ்வுலகத்தில் வந்தபோது, அவர்கள் முற்றிலுமாய் சடங்காச்சாரங்களைக் கடைபிடித்து மோசமான நிலையிலிருக்கக் கண்டு, மாம்சத்தின் பிரகாரம் அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாராயிருந்த போதிலும், அவர்கள் தங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்களென்று அவர்களைக் கடிந்து கொண்டார். சிமிர்னா சபையின் மக்களில் பெரும்பாலார் இதே நிலையில் இருந்தனர். ஆனால் இஸ்ரவேலருக்குள் ஒரு சிறு கூட்டம் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, அதற்குக் கீழ்ப்படிந்தது போன்று சிமிர்னா சபையில் ஒரு சிலர் தேவவசனத்தை உண்மையாக ஏற்றுக் கொண்டு கிறிஸ்துவின் மணவாட்டியாயிருந்தனர். கர்த்தர் தமக்குக் சொந்தமானவர்களை அழைக்க வரும்வரை, ஒவ்வொரு சபையின் காலத்திலும் இவ்வாறு அவருடைய மணவாட்டியாகிய ஒரு சிறு கூட்டம் காணப்படும். சிமிர்னா பட்டினத்தில் சியஸ் (ZEUS) என்னும் அஞ்ஞான தேவனுக்கும், சிபெல் (CYBELE) என்னும் தேவிக்கும் ஒவ்வோர் ஆலயம் கட்டப்பட்டு, இவைகள் பொன்வீதி (GOLDEN STREET) என்னும் அழகான வீதியால் இணைக்கப் பட்டிருந்தன. முதலாம் சபையின் காலத்தில் தொடங்கப்பட்ட அஞ்ஞான வழிபாடு இக்காலத்தில் வளர்ச்சியடைந்தது என்பதை இது தெளிவாக்குகிறது. தேவனும் தேவியும் வணங்கப்படும் இவ்வழக்கம் பின் காலத்தில் ரோமன் சபையில் புகுத்தப்பட்டு, மரியாள் தேவனுடைய தாய் (MOTHER OF GOD) என்னும் ஸ்தானத்தை ஏற்று, அநேக பட்டங்கள் அவளுக்கு அளிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்துவோடு சேர்ந்து வணங்கப்படும் கௌரவத்தைப் பெற்றாள். அஞ்ஞான ஆலயங்களை இணைத்த பொன்வீதி, பிற்காலத்தில் நிக்கொலாய் மதஸ்தர் பணத்திற்கும், ஆதிக்கத்திற்கும் பேராசை கொண்டு, சபையை அரசாங்கத்தோடு இணைத்துவிடுவர் என்பதைச் சித்தரிக்கிறது. எபேசு காலத்தின் சபையில் விதைக்கப்பட்ட அஞ்ஞான வழிபாடு, சிமிர்னா சபையின் காலத்தில் மழையும், சூரிய வெளிச்சமும், உரமும் கொண்டு, பெர்கமு சபையின் காலத்தில் மரமாய் வளர்ந்து, விக்கிரகாராதனையை முற்றிலும், சபையில் புகுத்தினது, ஆவிக்குரிய விபசாரத்தில் ஈடுபட்ட சபை, அதினின்று மீள வழி காணாமற் போயிற்று. விக்கிரகாராதனையில் ஈடுபட் டவரனைவரும் ஆவிக்குரிய மரணம் எய்தினர். வாழ்த்து வெளி 2:8. `... முந்தினவரும், பிந்தினவரும், மரித்திருந்தும் பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது’. மேற்கூறியது ஒரு மனிதனின் வார்த்தையாக இருக்க முடியாது. ஏனெனில், மனிதன் முதலில் பிறந்து (பிழைத்து) கடைசியில் மரிக்கிறான். ஆனால் தேவனாகிய இயேசு கிறிஸ்து முதலில் மரித்து இப்பொழுது பிழைத்தவராயிருக்கிறார். ஆதி மனிதனாகிய ஆதாம் ஜீவனைப் பெற்று, தன்னுடைய பாவத்தினிமித்தம் அதையிழந்து மரணமடைந்தான். ஆனால் இயேசு என்னும் மனிதன் மரணத்தை ஏற்று அதை ஜீவனாக மாற்றினார். பாவமறியாத நிலைமையை ஆதாம் பாவமாக மாற்றினான். இயேசு பாவத்தைச் சுமந்து, அதை நீதியாக மாற்றினார். ஆதாம் பரதீசை பாழும் வனாந்தர வெளியாக மாற்றினான். இயேசு பாழடைந்த உலகத்தை, ஏதேனாக மாற்றிப்போட வரப்போகிறார். ஆதாம் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியத்தைக் கெடுத்து, ஆவிக்குரிய அந்தக் காரத்தையடைந்து, அதன் மூலம் மானிடவர்க்கம் பாவம், மரணம், கஷ்டம் இவைகளை அனுபவிக்க காரணமாயிருந்தான், இயேசு மானிட வர்க்கத்தின் நிந்தையையும் மரணத்தையும் ஏற்று, நீதியான ஜீவியத்தை மக்களுக்கு அளித்தார். அதுவரை ஆண்ட மரணத்திற்கேதுவான பாவம் கிறிஸ்துவின்மூலம் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நீதியில் அரசாண்டு நித்திய ஜீவனைப் பெற ஏதுவாயிற்று. இந்த இயேசு, அவர் மீட்ட சபையின் மத்தியில் உலாவிக்கொண்டிருக்கிறார். பவுலைப் போன்ற அநேக கொலைகாரரும், சிலுவையில் அறையப்பட்ட கள்ளனைப் போன்ற அநேக கள்ளரும், பாவிகளும் மரணத்தினின்று மீட்கப்பட்டு இயேசு கிறிஸ்துவுக்குள் உயிர்ப்பிக்கப்பட்டனர். முதலாம் சபைக்குரிய வாழ்த்துதலையும், இச்சபைக்குள்ள வாழ்த்துதலையும் இணைத்துப் படியுங்கள். ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவரும், முந்தினவரும், பிந்தினவரும், மரித்திருந்தும் பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது’. இவையனைத்தும் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கின்றன. அவர் சபைகளின் மத்தியில் உலாவி, அவைகளைத் தமக்குரியதாகப் பாவிக்கிறார் என்பதை நாமறிய வேண்டும். பழத்தின் வித்து, அதற்கு மத்தியில் உள்ளது போன்று, ராஜரீக வித்தாகிய (ROYAL SEED) இயேசு கிறிஸ்து, சபைகளின் மத்தியில் இருக்கிறார். வித்துக்குமாத்திரம் ஜீவன் உண்டு; அவ்வாறே இயேசு கிறிஸ்து ஜீவனின் ஆதிகாரணமாயிருந்து, சபைகளுக்கு ஜீவனையளிக்கிறார். அவர் சபைகளின் மத்தியில் உலாவி, அவைகளைச் சலிக்காமல் பாதுகாக்கிறார் என்பதை நமக்குத் தெரிவிக்கிறார். அவர் தலைமை மேய்ப்பனாக அவைகளைக் காக்கிறார். தேவன் தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தி, சபைகளைக் கிரயத்துக்குக் கொண்டு, அவைகளைச் சொந்தமாக்கிக் கொண்டார். ஆம், தேவனே சபையின் உரிமையாளர். அவர் முந்தினவரும், பிந்தினவருமாய் நிந்தியமுள்ளவராயிருக்கிறார். அவர் மரித்திருந்தும் பிழைத்திருக்கிறார். சபைகளைக் கிரயத்துக்குக் கொண்டு, தனி உரிமையாளனாகி, அவைகளை ஆளுகை செய்கிறார். அவர் சபைகளின் மத்தியிலிருப்பதால், சபைகள் தேவனுடைய ஆலயமாகின்றன. இந்த ஆலயத்தில் அவர் ஆராதிக்கப்படுகிறார். அவருடைய உரிமையை யாரேனும் பறித்துக் கொண்டால், அவர் எரிச்சலடைகிறார். ஒவ்வொரு சபையின் காலத்திலும் அவரே தேவன் என்பதை அறிவித்து, அவ்வாறு அறியாதவர்களை எச்சரித்து, அறிந்தவர்களை ஆறுதல்படுத்தினார். அவரே சர்வ வல்லமை பொருந்திய ஒரே தேவன், அவருக்குச் செவி கொடுங்கள். இக்காலத்தின் நிலை வெளி 2:9. `உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும், யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன். இச்சபையின் காலம் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவத்தின் காலமாயிருந்தது. எபேசு காலத்தில் காணப்பட்ட உபத்திரவம் இக்காலத்தில் அதிகப்படும் என்பது தீர்க்கதரிசனமாய் இங்கு உரைக்கப்படுகிறது. உலகத்தின் எப்பாகத்திலுமுள்ள கிறிஸ்தவர்கள் சபைகளின் காலங்களில் துன்புறுவர் என்று பவுலின் பின்கண்ட வசனங்களின் மூலம் தெளிவாகிறது. `முந்தின நாட்களை நினைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே. நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள், நாங்கள் கட்டப்பட்டிருக் கையில் நீங்கள் என்னைக் குறித்தும் பரிதபித்ததுமின்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்திரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாகக் கொள்ளையிடக் கொடுத்தீர்கள். ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதா யிருக்கிறது. வருகிறவர் இன்னுங் கொஞ்ச காலத்தில் வருவார். தாமதம் பண்ணார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்’. (எபி 10:32-38). சர்வ வல்லமையுள்ள தேவன், சபையின் மத்தியில் உலாவிக்கொண்டு, மேய்ப்பனைப் போல் தம்முடைய ஆடுகளைப் பாதுகாத்தாலும் `நான் உன் உபத்திரவத்தை அறிந்திருக்கிறேன்’ என்று மாத்திரம் கூறி அவைகளை நீக்க முன்வரவில்லை. அநேக மக்களுக்கு இது இடறலாயிருக் கிறது, தேவன் நம்மில் உண்மையான அன்பு கூருவாரானால், அவருடைய பிள்ளைகள் துன்புறுவதைக் கண்டு அதற்கேற்ற பரிகாரம் செய்யாமல் இருப்பதேன் என்று இஸ்ரவேல் ஜனங்கள் ஆதங்கப்பட்டனர். `மல்கியாவைக் கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம். நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள். எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார். ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன், ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலு சர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்’. (மல் 1:1-3). இஸ்ரவேலர் தேவனுடைய அன்பை அறிய முடியவில்லை. தேவன் அவர்களிடத்தில் அன்பு கூர்ந்தால், அவர்கள் துன்பம் எதுவுமின்றி, குழந்தைகளைப் போல் பராமரிக்கப் படவேண்டும் என்ற எண்ணங் கொண்டிருந்தனர். ஆனால் தேவனோ அவருடைய அன்பு `தெரிந்து கொள்ளப் படுதலின்’ (ELECTIVE) அன்பு என்று கூறுகிறார். என்ன நேரிட்டாலும், அவர்கள் இரட்சிப்புக்கென்று தெரிந்து கொள்ளப்பட்டதன் மூலம், அவருடைய அன்பு விளங்கினது. நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப் பட்டுகிறதினாலும் சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப் படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்து கொண்டார்’. (2 தெச. 2:13). பவுலை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தது, போன்று நம்மையும் ஒருக்கால் அவர் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கலாம்; அல்லது யோபைக் கஷ்டத்திற்குள்ளாக்கியது போன்று நம்மையும் அவர் கஷ்டத்திற்குள்ளாக்கலாம். இது அவருடைய தனியுரிமை (PREROGATIVE). அவர் சர்வ அதிகாரமும் பெற்றவர் (SOVEREIGN). ஆனால் இவைகளைனைத்திலும் அவருக்கு ஒரு நோக்கமுண்டு. அவ்வாறில்லையேல், அவர் நமக்குச் சமாதானத்தைக் கொடாதவராய் ஏமாற்றத்தைக் கொடுப் பவராயிருப்பார். கொஞ்சக் காலம் பாடனுபவிக்கிற நாம் சீர்ப்பட்டு, ஸ்திரப்பட்டு நிலைநிற்க வேண்டும் என்று அவர் எண்ணங் கொள்ளுகிறார். யோபு கூறியவண்ணம், துன்பங்களைச் சகிக்க நமக்கு பெலனைக் கொடுப்பார். அவர் தாமே பாடுபட்டார் என்பதை மறக்க வேண்டாம்; அவர் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு பூரணரானர். `அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரான பின்பு தமக்குக் கீழ்ப்படிகிறயாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்’ (எபி - 5:8-9). இயேசு கிறிஸ்துவின் தன்மைகள் பாடுகளினால் பூரணமடைந்தன என்று அறிகிறோம். அவருடைய சபையும் தேவன் பேரில் வைத்திருக்கும் விசுவாசத்தின் மூலமாய், அவருக்கென்று பாடுபட்டு பரிபூரணப்பட்ட அவர் பாடுகளைப் பின்வைத்துப் போனாரென்று பவுல் கூறுகிறான். சபைகள் பூரணப்பட, பாடுகள் அவசியம், `என் சகோதரரே, நீங்கள் பல விதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாய் எண்ணுங்கள்.... நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாய் இராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது’ (யாக் 1:2-4), இதற்காகவே அவர் நம்முடைய பாடுகளைப் பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாதவராய் இருக்கிறார். `நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே. கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப் படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். (ரோமர் 8:17-18). நாம் அவரோடுகூட பாடுபடவில்லையெனில், அவரோடு கூட ஆளுகை செய்ய முடியாது, பாடுகளின் மூலமாக நாம் நற்குணங்களையடைந்து, வெற்றி சிறக்கிறோம். அல்லாமல், நற்குணங்கள் நமக்கு ஈவாக அளிக்கப்படுவதில்லை, ஆளுகை செய்யும் எந்த மனிதனுக்கும் நற்பண்பு அவசியம்; அதுவன்றி, மனிதனின் ஆட்சி சாத்தானின் கிரியைகளைக் கொண்டதாயிருக்கும். இயேசுகிறிஸ்து ஜெயங் கொண்டு பிதாவின் சிங்காசத்தில் அவரோடுகூட உட்கார்ந்ததுபோல், நாமும் ஜெயங்கொண்டு மாத்திரம் அவரோடு கூட உட்கார முடியும். நாம் அனுபவிக்கும் தற்காலிகமான பாடுகள், அவர் வரும்போது நம்மிடத்தில் வெளிப்படும் மகத்தான மகிமையோடு ஒப்பிடத் தகுதியற்றவை. உபத்திரவத்தின் மூலம் அவருடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கச் சித்தம் கொண்டவர்களுக்கு மேலான பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. `உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாதிருங்கள்’ (1 பேது 4:12) என்று பேதுரு கூறுகிறான். பாடுகளின் மூலம் நாம் கிறிஸ்துவின் தன்மையையடைய வேண்டும் என்று தேவன் சித்தங் கொண்டதில் அதிசயிக்க வேண்டாம். அவருடைய புத்திரரான நாமெல்லாரும் சோதிக்கப்பட்டு சிட்சிக்கப்படுகிறோம். உபத்திரவப்பட்டு சோதிக்கப்படாத சபை தேவனாலுண்டானதல்ல. `கர்த்தர் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறது போல உங்களுக்குச் சொல்லுகிற புத்திமதியை மறந்தீர்கள். நீங்கள் சிட்சையைக் சகிக்கிறவர்களாயிருந்தால், தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால், நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்கள்’. (எபி 12:6-8). சிமிர்னா சபைக்குண்டான உபத்திரவம் ஒவ்வொரு காலத்திலுள்ள சபைக்கும் உண்டாக வேண்டும். எந்த உண்மையான விசுவாசியும் உபத்திரவத்திலிருந்து தப்பவில்லை. இது தேவனாண்டாயிருந்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. உபத்திரவம் நமக்கு இன்றியமையாதது. நாம் கிறிஸ்துவைப் போல் பாடுபட வேண்டும் என்னும் சத்தியத்தைக் கர்த்தர் நமக்குப் போதித்தல் அவசியம், `அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது’ (1 கொரி 13:4) `என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய் சொல்வார்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள், சந்தோஷப்பட்டு களிகூறுங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத் தினார்களே’ (மத் 5:11-12) என்று இயேசு கூறினார். நம்முடைய ஜீவியத்தில் ஏற்படும் உபத்திரவங்கள் தேவன் நம்மை நிராகரிப்பதன் அடையாளங்களல்ல. அவ்விதமாக, நம்முடைய கஷ்டமற்ற ஜீவியம், தேவன் நம்முடைய செய்கைகளை ஆமோதித்து நம்மில் அன்பு கூறுகிறார் என்பதன் அறிகுறியுமல்ல. தேவன் தாம் தெரிந்து கொண்டவர்கள் மேல் உலகத்தோற்றத்திற்கு முன்பு தொடங்கி அன்பாயிருக்கிறார். அவர் நம்மில் அன்பு கூறுகிறார் என்பதை நாம் எவ்வாறு அறிவோம்? அவர் நம்மில் அன்பு கூறுவதாக உரைத்ததன் மூலம் அவர் நம்மைச் சிநேகிக்கிறார் என்பதை அறிகிறோம். அதுமாத்திரமல்ல, நம்மை அவரிடத்தில் இழுத்துக்கொண்டு, அவருடைய ஆவியை நமக்குக் கொடுத்து, நம்மைப் புத்திரராக்கிக் கொண்டதன் காரணமாக அவருடைய அன்பு வெளிப்பட்டது. அவர் கூறிய வார்த்தைகளில் நாம் விசுவாசம் வைத்து, அவருடைய மிகுந்த ஞானத்தினால் அவர் அனுமதித்து நம்முடைய உபத்திரவங்களின் மத்தியில் சந்தோஷமாயிருப்பதனால், அவர் மேல்வைத்த அன்பை நாம் விளங்கப் பண்ணுகிறோம். `நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும் அறிந்திருக்கிறேன்’. அவர் நம்முடைய சபையின் மத்தியில் உலாவி ஒரு தகப்பன் குடும்பத்தைக் கவனிப்பதுபோன்று, சபைகளை நோக்குகிறார், அவரே சபைக்குத் தலைவன்; அவரே சபையின் தேவைகளைச் சந்தித்து, அதைப் பாதுகாக்கிறவர்; இருப்பினும், சபையின் தரித்திரத்தைக் குறித்து ஒன்றும் செய்யாதவராய் இருக்கிறார். சத்தியம் சரியான முறையில் போதிக்கப்படாத அநேக விசுவாசிகளுக்கு அது இடறலாயிருக்கிறது. அவருக்குச் சொந்தமானவர்கள் கஷ்டப்படுவதை அவர் எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கிறார்? அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர் உடனே அளிக்க வேண்டாமா? என்று அவர்கள் எண்ணுகிறார்கள். தேவனுடைய அன்பையும், ஞானத்தையும், உத்தமத்தையும் நாம் முற்றிலும் விசுவாசிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. அவர், `நாளைக்கு என்னத்தை உண்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப் படாதிருங்கள். உங்கள் தேவைகளையெல்லாம் உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார், லீலிப் புஷ்பங்களை உடுத்தி, ஆகாயத்துப் பறவைகளைப் போஷிக்கிறவர். உங்களுக்கு அதைக் காட்டிலும் விசேஷித்தவைகளைச் செய்வார், உலக காரியங்கள் உங்கள் ஜீவியத்தின் அடிப்படையான தேவைகளல்ல, முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; பின்பு உலகப்பிரகாரமான அவசியங்களெல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும்’ என்று ஒரு முறை மக்களைக் கடிந்து கொண்டார். தேவனுடைய பிள்ளைகள் மாம்ச சிந்தையுடையவர்களல்ல; அவர்கள் கிறிஸ்துவின் சிந்தையுடையவர்கள். அவர்கள் பூலோகத்தின் பொக்கிஷங்களைத் தேடாமல், பரலோகத்தி லுள்ளவைகளை நாடுகின்றனர், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் செல்வந்தர் அல்ல என்பது யாவருமறிந்த உண்மை; அவர்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் காலத்திலும், பவுலின் காலத்திலும் கிறிஸ்தவர்கள் ஏழைகளாயிருந்தனர்; ஆகையால் இக்காலத்து உண்மையான கிறிஸ்தவர்களும் ஏழைகளாயிருக்க வேண்டும். ஆனால் லவோதிக்கேயா சபை (கடைசி காலம்) ஐசுவரியமுள்ளதாயிருக்கிறது; இக்காலத்தில் ஆவிக்குரிய வளர்ச்சி, பெற்ற செல்வத்தின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. உண்மையாகவே, லவோதிக்கேயா சபை உலகப்பிரகாரமான ஐசுவரியம் நிறைந்து, ஆவியில் வறுமையடைந்திருக்கிறது, `தரித்திரரே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குரியது. தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்பும் அல்ல’, அந்த ராஜ்யம் நமக்குள் இருக்கிறது. உலகம் கொடுக்கும் ஐசுவரியத்தைப் பெற்றவன் உண்மையான ஐசுவரியவானல்ல. தேவனால் நிரப்பப்பட்டிருக்கிறவனே உண்மையான ஐசுவரியவான். ஆவியானவர் சபையைப் பார்த்து, `உன்னுடைய தரித்திரத்தை நான் காண்கிறேன், உன்னுடைய தேவைகள் எனக்குத் தெரியும். உண்டாயிருந்ததும் உன்னிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. நித்திய ஜீவனுக்கென்று இவைகளனைத்தையும் நீ சந்தோஷமாய் கொடுத்தாய், நீ பரிகசிக்கப்பட்டு, இகழப்படுகிறாய்; இவ்வுலகத்தில் சாருவதற்கு உன்னிடத்தில் ஐசுவரியமில்லை என்றாலும், நீ ஐசுவரியவானாயிருக்கிறாய். உன்னுடைய பாதுகாப்பு அவருடைய பொறுப்பு, அவரே உனக்குக் கேடகமாயும், பெலனாயும் இருக்கிறார். உன்னுடைய ராஜ்யம் இனிமேல் வரப்போகிறது. அது நித்தியமாயிருக்கிறது, ஆம். உன்னுடைய சோதனைகளையும் துன்பங்களையும் அறிந்திருக்கிறேன், கஷ்டங்களின் மத்தியில் ஜீவிப்பது மிகவும் கடினமென்று எனக்குத் தெரியும், இவைகளை நான் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, நான் மறுபடியும் வந்து உன்னை எனக்கு உரிமையாக்கி, உனக்குப் பலனளிப்பேன்’ என்று கூறுகிறார். நான் கூறுவதை ஐசுவரியவான்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம், ஐசுவரியத்திற்கு விரோதமாக நான் இவைகளைக் கூறினேனேயன்றி, ஐசுவரியவான்களுக்கு விரோதமாகக் கூறவில்லை. கர்த்தர் எத்தனையோ ஐசுவரியவான்களை இரட்சித்திருக்கிறார். ஆனால் ஐசுவரியம் அது உள்ளவருக்கும் இல்லாதவருக்கும் கண்ணியாக அமைவதுண்டு. முதலாம் சபையின் காலத்தில், ஐசுவரியவான்களுக்கு விசேஷ சலுகை அளிக்கப்பட் டபோது, யாக்கோபு, கர்த்தராகிய `இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப் ப;டசபாதத்துடன் பற்றிக் கொள்ளாதிருப்பீர்களாக’ (யாக் 2:1) என்று அறைகூவினான். அச்சபையின் எளியவர்கள், தங்களுடைய தேவைகளுக்குத் தேவனை விசுவாசிப்பதற்குப் பதிலாக, ஐசுவரியவான்களிடம் உதவியை எதிர்பார்த்தனர். யாக்கோபு அவ்வாறு செய்ய வேண்டாமென்று அவர்களை எச்சரித்தான். இக்காலத்திலும் ஐசுவரியம் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. இன்றைய சபைக்கு, இதுவரையிருந்த சபைகளைக் காட்டிலும் அதிக ஐசுவரியமுண்டு. ஆயினும், ஆவிக்குரிய பிரகாரம் அவர்கள் அதிகம் சாதிக்கவில்லை. தேவன் தம்முடைய ஆவியினால் கிரியை செய்கிறாரேயன்றி, ஐசுவரியத்தினால் மாத்திரம் கிரியை செய்வதில்லை. சத்தியத்தை முற்றிலும் ஏற்றுக்கொண்ட ஒரு மனிதனின் ஜீவியத்தின் மூலம் ஆவியானவர் அசைவாடுகிறார். சாத்தானின் கூட்டம் வெளி 2:9 `தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தை அறிந்திருக்கிறேன். இந்த வசனம், ஆயிரம் வருஷம் கழித்து உண்டான வேறொரு சபைக்கு மறுபடியும் கூறப்படுகிறதால், அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. யூதர் என்ற பதம் யூதா நாட்டில் பிறந்தவரனைவரையும் குறிக்கும். ஆனால் இச்சபையில் யூதரென்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் யூதா நாட்டிலும் பிறக்கவில்லை. அல்லது யூத மார்க்கத்தையும் பின்பற்றவில்லை. இவர்கள் சபைக்குள், அஞ்ஞான வழிபாட்டில் ஈடுபட்டு, `சாத்தானின் கூட்டமாக’ திகழ்ந்தவர். அப்படியெனில் தேவன் இவர்களை ஒன்றுகூட்டவில்லையென்று அறியலாம். தேவன் தாம் தெரிந்துகொண்டவர்களை உண்மையான சபையாகக் கூட்டிச் சேர்க்கிறார். `உம்முடைய பிரகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர்தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்’ (சங் 65:4). தேவனால் கூட்டப்படாத கள்ளச்சபை ஒன்றுண்டு என்று வேதம் நமக்குப் போதிக்கிறது. `இதோ உனக்கு விரோதமாய்க் கூட்டங் கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல (ஏசா 54:15). இந்தக் கூட்டம் உண்மையான சபைக்கு விரோதமாயிருப்பதால், தேவன் ஒரு நாள் அதை அழித்துப் போடுவார். இவர்கள் சபைக்குள் கலந்து, தங்களை ஏன் யூதரென்று கூறிக் கொள்ளவேண்டும்? இவர்கள் பொய்யை விரும்பி, உண்மையைப் போன்று பொய்யுரைத்து, அது உண்மை என்று சாதிக்கும் திறம்படைத்தவர். ஆதிச்சபை பெரும்பாலும் அல்லது முழுவதும் யூதர்களைக் கொண்டதாயிருந்தது. கிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலரும் யூதர்கள்; அவர்களுக்குப் பின் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர் யூதராகவோ அல்லது யூதர்களாக மாற்றப்பட்டவராக (PROSELYTES) இருந்தனர். அப்படியெனில் சிமிர்னா சபையிலுள்ள சிலர் யூதரென்று பொய் சொன்னால், அவர்களின் கிரியைகள் தேவனுடைய சத்தியத்தின்படி அமைந்து, ஆதித்திருச்சபையின் கிரியைகளின் வழிவந்தவை என்று மக்கள் விசுவாசிப்பர் என்று அவர்கள் நினைத்தனர். இதே பொய்யின் ஆவிதான், தற்காலத்தில் சபையிலும் காணப்படுகின்றது. ஒருசாரார் அவர்களே உண்மையான சபையென்று கூறிக்கொண்டு, இரட்சிப்பு இந்தச் சபையில்தான் காணப்படுமென்றும், பேதுரு அவர்களின் முதல் போப்பாக ரோமாபுரியில் வாழ்ந்தாரென்றும், இவர்களும் பேதுருவிடமிருந்து பரலோக ராஜ்யத்தின் திறவுகோலைப் பெற்றனர் என்றும் பொய்சொல்லுகின்றனர். பேதுரு ரோமாபுரியில் வாழ்ந்தாரென்று சரித்திரப் பிரகாரமான ஆதாரம் எதுவுமில்லை. அதிகம் படித்தவர்களும் கூட இப்பொய்களை விசுவாசிக்கின்றனர். இச்சபையின் பிதாவாகிய சாத்தான், பொய்களின் தகப்பனாயிருப்பதால், அந்த சாத்தானின் கூட்டத்திலுள்ளவர்கள் பொய் கூறுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. சிமிர்னா சபையின் காலத்திலிருந்த சாத்தானின் கூட்டத்தார் சபையைத் தூஷித்தனர். பொல்லாங்கனால் உண்டான காயீன் ஆபேலைக் கொன்றது போலவும், யூத மார்க்கத்தைச் சேர்ந்த, பிசாசினால் உண்டானவர்கள் ஆதிக்காலத்துக் கிறிஸ்தவர்களை அழிக்க முயன்றது போலவும், இந்த சாத்தானின் கூட்டத்தார், இரண்டாம் சபையின் காலத்திலுள்ள கிறிஸ்தவர்களை நிர்மூலமாக்க அதிகம் முயன்றனர். அந்திக் கிறிஸ்துவின் ஆவி காலங்கள் தோறும் வளர்ந்து கொண்டே வந்தது. ஆதிக்காலத்தில் மறைவாகவும், மெதுவாகவும் சபைகளில் நுழைந்த நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் இரண்டாம் சபையின் காலத்தில் பகிரங்கமாக நிலைநிறுத்தப்பட்டு அதன் விளைவாக ஏற்பட்ட சாத்தானின் கூட்டத்தார் உண்மையான சபையை விரோதித்தனர். ரோமாபுரியில் உண்டான ஆதிச் சபை, தேவனுடைய சத்தியத்தைப் பொய்யாக மாற்றி; அஞ்ஞான மார்க்கத்தைக் கிறிஸ்தவ பெயர்களோடும், அர்த்தத்தோடும் சபையில் புகுத்தியது. இரண்டாம் சபையின் காலத்தில், அது முற்றிலும் அஞ்ஞான வழிபாடுகளில் ஈடுபட்டதைக் கண்ட பாலிகார்ப், தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாது, 1500 மைல் பிரயாணம் செய்து, சத்தியத்திற்குத் திரும்ப அவர்களிடம் மன்றாடினார். ஆயினும், அவர்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பவில்லை. `குருக்களாட்சி’ (HIERARCHY) யையும், ஸ்தாபனத்தையும் அவர்கள் ஏற்படுத்தி, வசனத்தினின்று விலகினர். இதுதான் நிக்கொலாய் மதத்தின் போதனைகளின் வித்தைக் கொண்டதும், தூஷணம் நிறைந்ததுமான சாத்தானின் கூட்டம். சிறிது காலத்தில் இது சாத்தானின் மார்க்கத்தின் முக்கிய இருப்பிடமாகத் திகழும். இந்த மார்க்கத்திலுள்ளவர்கள் `சாத்தானின் கூட்டம்’ (வெளி 2:9) என்று அழைக்கப்படுகிறார்கள். சாத்தானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுவதில்லை. அந்திக்கிறிஸ்துவின் ஆவி புதிதாக சபையின் காலங்களில் உண்டானதல்ல. அதன் கிரியைகள் தொன்றுதொட்டு தேவனுக்கு விரோதமாகக் காணப்பட்டு, கடைசியில் அது சபைகளையும் ஆட்கொண்டது. பழைய ஏற்பாட்டின் காலத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டு வெளி வந்தவுடன் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டு, ஆவியின் வரங்களான தீர்க்கதரிசனம், பாஷைபேசுதல், தேவஞானம், அறிவு, சுகமாக்குதல் இவையனைத்தையும் பெற்று, அற்புதங்களையும் அடையாளங்களையும் அவர்களிடையே கொண்டவரா யிருந்தனர். தேவனே அவர்கள் வழிகாட்டியும், ராஜாவுமாயிருந்து, ஒரு குடும்பத்தைப் போல் அவர்களைப் பராமரித்து, போஷித்து, அவர்களுடைய யுத்தங்களை நடப்பித்து, அவர்களுடைய கஷ்டங்களையும் தொல்லைகளையும் போக்கினார். இஸ்ரவேலருக்கு மாத்திரம் அவர் உண்மையாகத் தேவனாயிருந்தார். ஒரு நாள் இஸ்ரவேலர், தங்களைச் சூழவிருந்த பெலிஸ்தியர்களும் மற்ற ஜாதிகளும் ராஜாக்களால் ஆளப்படுகிறதைக் கண்டு, அவர்களுக்கும் மனித வழிகாட்டியான ஒரு ராஜா வேண்டுமென்று முறையிட்டனர். தேவன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் மானிடரூபத்தில் தலைவனாக வரவேண்டும் என்று எண்ணங்கொண்டிருந்தார். இந்தத் திட்டத்தை அறிந்த சாத்தான், அது நிறைவேறுவதற்கு முன்பு, மக்களுடைய இருதயங்களை ஏவி, அவனுடைய திட்டத்தை உருவாக்கினான். இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு ராஜா வேண்டுமென்று சாமுவேலிடம் முறையிட்டபோது, அவனுடைய இருதயம் வெடித்துவிடும்போல் தோன்றியது. கர்த்தர் இவ்வளவு காலம், இந்தத் தீர்க்கதரிசியின் மூலமாய் அவர்களால் வழிநடத்தி வந்தார்; இவ்வாறு முறையிட்டதன் மூலம் சாமுவேல் அவர்களால் தான் தள்ளப்பட்டதாக எண்ணினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிச் சேர்த்து, இம்மட்டும் குழந்தைகளைப் போல் பராமரித்து, ஆசீர்வதித்து வந்த தேவனைவிட்டுப் பின்வாங்க வேண்டாமென்று அவர்களிடம் மன்றாடினான், ஆயினும், அவர்கள் பிடிவாதமாயிருந்தனர். அவர்கள் சாமுவேலை நோக்கி, `உம்முடைய வழிநடத்துதலில் நீர் தவறவில்லை. பண விவகாரத்திலும் நீர் நேர்மையாக நடந்து வந்தீர். தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்ற உம்மாலான வரை பிரயாசப்பட்டீர். தேவனுடைய அதிசயங்களையும், ஞானத்தையும் பாதுகாப்பையும் நாங்கள் விசுவாசித்து, அவைகளுக்கு நன்றியாயிருக்கிறோம். அவைகளில்லாமல் நாங்கள் இருக்கவும் கூடாது. யுத்தத்தில் எங்களை நடத்த ஒரு ராஜா மாத்திரம் எங்களுக்குத் தேவை. யுத்தத்திற்குப் போகும்போது, ஆசாரியர்கள் முன்சென்று, யூதா அவர்களைப் பின்தொடர, நாங்கள் எக்காளமூதி ஆடிப்பாடுவோம். அவைகளில் ஒன்றையும் நாங்கள் நிறுத்தப் போவதில்லை. ஆயினும், எங்களை நடத்த எங்களில் ஒருவன் ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்று கூறினர். கர்த்தர் சாமுவேலை நோக்கி, `அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு என்னைத் தான் தள்ளினார்கள்’ (1 சாமு 8:7) என்றார். இஸ்ரவேல் ஜனங்கள் உலகத்தாரினின்று வித்தியாசப்பட்டிருக்க வேண்டும் என்று தேவன் சித்தங்கொண்டிருந்தார். அவர்களைப் போலாக வேண்டும் என்பதனால் தேவனையே புறக்கணித்தனர் என்று சிறிதேனும் அவர்கள் உணரவில்லை. தேவனுடைய பிள்ளைகள் உலகத்தாரல்லாதவர்களாதலால் உலக வழிகளில் செல்லாமல், உலகம் அவர்களுக்குச் சிலுவையிலறை யுண்டிருக்க, அவர்களும் உலகத்துக்குச் சிலுவையில் அறையுண்டிருக்க வேண்டும். `ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் போய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்’. (2 கொரி 6:17-18). இஸ்ரவேலர் பெற்றிருந்த தேவனின் பிரசன்னம், அவர்களை மற்ற ஜாதிகளினின்று வித்தியாசப்படுத்தியது. அவரையன்றி அவர்கள் மற்றவர்களைப் போல் சாதாரணமானவர்கள். சிம்சோனின் மயிர் கத்தரிக்கப்பட்ட போது, அவன் பலமிழந்து சாதாரணமனிதனானான். அவ்வாறு, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் புறக்கணித்த சபையும் தேவனுடைய நாமம் பெயரளவில் காணப்படும் உலகமாக மாறும். யாக்கோபும், ஏசாவும் ஒரே வயிற்றில் தோன்றியது போன்று, சபையும் உலகமும் ஒன்றாயிருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியின் பிரசன்னம் இவ்விரண்டையும் வித்தியாசப்படுத்தும். கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்ளுகிறவனிடத்தில், கிறிஸ்துவின் ஆவி இல்லாவிடில், அவன் உண்மையான கிறிஸ்தவனல்ல. கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவனல்ல’ (ரோமர் 8:9) எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவனும் பரிசுத்த ஆவியைப் பெறாவிடில், அழிந்து போவான். முதற்சபையின் மக்கள் தங்கள் ஞானத்தைக்கொண்டு தேவனுடைய திட்டத்தைச் சீர்திருத்த முயன்றனர். அவ்வாறு நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் சபையில் தோன்றத் தொடங்கின. இவைகளைப் பின்பற்றும் ஒரு கூட்டம் அங்கு ஏற்பட்டு, தேவனுடைய வார்த்தையின்படி அமைந்த திட்டத்திலிருந்து அவர்கள் விலக ஆரம்பித்தனர். கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்கியது. நியாயப் பிரமாணத்தில் ஒன்றை மீறினாலும், நியாயப் பிரமாணம் முழுவதும் மீறின பாவத்திற்குட்படுகிறான். ஏவாள் ஒரு வார்த்தையை மாற்றினதன் மூலம், பாவம் பிரவேசித்தது. சாத்தானைக் கொண்ட இக்கூட்டம், தன்னை உண்மையுள்ள சபையென்று கூறிக்கொண்டு, உண்மையான விசுவாசிகளை எதிர்க்கவும், வெறுக்கவும் தொடங்கிற்று. ஸ்தாபனம் எவ்வாறு பகையை வளர்க்கிறதென்று கவனிக்கவும், அது ஐக்கியத்தைக் குலைத்து, கசப்பை உண்டாக்குகிறது. `சிமிர்னா’ என்னும் பதம் `கசப்பு’ என்னும் பொருள்படும். கசப்பான வேர் அநேகரை அசுத்தப்படுத்தும். சிமிர்னா சபை, ஆதிசபையின் சத்தியத்தைவிட்டு அதிகமாக விலகி, ஏவாளைப் போன்று கலப்படைந்தது. ஏவாள் சர்ப்பத்தின் வித்தைத் தன்னுடைய வித்தோடு கலக்க அனுமதித்தபோது, முழுவதும் மனிதனல்லாத காயீன் தோன்றினான். அவன் பொல்லாங்கனால் உண்டாயிருந்து, ஆபேல், சேத் என்பவர்களைக் காட்டிலும் வித்தியாசமாயிருந்தான். அவன் தேவனைப் பகைத்து, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், தன்னை உயர்த்தி, நீதிமானாகிய ஆபேலைக் கொன்றான். சபையும் அவ்வாறே ஆதியில் கொண்ட சத்தியத்தைவிட்டு விலகி கலப்பாயிற்று. மக்கள் `பாப்டிஸ்டுகள்’, `மெத்தோடிஸ்டுகள்’ என்று ஸ்தாபனங்களின் பெயர்களில் தங்களை அழைத்துக்கொள்கின்றனர். தொடக்கத்தில் ஸ்தாபனங்கள் எதுவும் உண்டாயிருக்கவில்லை, தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக பிரமாணங்களும், சபை விதிகளும் படித்த மக்களின் ஊகமும் (GUESS) இன்றைய ஸ்தாபனங்களில் காணப்படுகின்றன. வெளிப்படுத்தல் நிராகரிக்கப்பட்டு, வேதம் மனித ஞானம் கொண்டு போதிக்கப் படுகிறது. மனித ஆலோசனைகள் விசுவாசத்தைக் குலைத்துப் போட்டன. பரிசுத்த ஆவியில் துதித்தல் மாறிப்போய், அதற்குப் பதிலாக மனிதத் திட்டங்கள் காணப்படுகின்றன. தொடக்கத்தில் இவ்வாறு இல்லவே இல்லை. உண்மையான சபை கலப்படைந்த சபையாக மாறிவிட்டது. கலப்படைந்த சபையின் உண்மையான கிறிஸ்தவர்களைத் தோன்றச் செய்யும் ஜீவன் அல்லது வித்து இல்லாததனால் அது உண்மையான கிறிஸ்தவர்களைப் பிறப்பிக்காது. இனம் இனத்தைப் பிறப்பிக்கும். பாப்டிஸ்டுகள் பாப்டிஸ்டுகளைப் பிறப்பிப்பதனால், புதிதாய்த் தோன்றியவர்களும் பாப்டிஸ்டு கொள்கைகளைப் பின்பற்றுவர். மெதோடிஸ்டுகளும், மெதோடிஸ்டு கொள்கைகளைப் பின்பற்றும் மெதோடிஸ்டுகளைப் பிறப்பிக்கின்றனர். யாரும் தேவனுடைய வல்லமையினால் அறியப்படுவதில்லை. ஏனெனில் தேவனுடைய வல்லமை ஸ்தாபனங்களில் காணப்படுவதில்லை. தேவனை வழிபடும் முறையினாலும், பிரமாணங்களினாலும் கொள்கைகளினாலும் அவர்கள் அறியப்படுகின்றனர். கோவேறு கழுதை உலகத்திலே பிரசித்திபெற்ற கலப்பு மிருகம். கழுதையும் குதிரையும் சேருவதால் இது பிறக்கிறது. ஒரு கோவேறு கழுதைக்கு வேறொரு கோவேறு கழுதையைப் பிறப்பிக்கும் ஜீவன் (வித்து) இல்லை. ஆயினும் சுமை சுமைப்பதில், அது குதிரையையும் கழுதையையும் மிஞ்சிவிடும். அது பிடிவாதமான சுபாவம் படைத்தது. அதை ஒருக்காலும் நம்பமுடியாது. கலப்புள்ள மார்க்கத்தை இம் மிருகம் தெளிவாகச் சித்தரிக்கிறது, சத்தியமும் அந்தகாரமும் சேர்ந்து கலப்பு மார்க்கமுண்டாகிறது. குதிரை உண்மையான விசுவாசியையும் கழுதை துன்மார்க்கனையும் குறிக்கின்றன. இவ்விருவரையும், கலந்தால், வல்லமையற்ற ஆசாரங்கள் கொண்ட மார்க்கம் உண்டாகும். அதற்கு ஜீவனுள்ள வித்து இல்லை. அது மரித்துப்போனது. சத்தியத்தை குறித்து அது பேசும்; ஆனால் சத்தியத்தை தோன்றச்செய்ய அதனால் இயலாது. தேவன் அதன் மத்தியில் இல்லையென்றாலும், மக்களைக் கூட்டி தேவனைக் குறித்துப் பிரசங்கித்து, அதே சமயத்தில் அவருடைய வல்லமையைப் புறக்கணிக்கிறது. அது தேவனின் நாமத்தையே மறுதலிக்கும். அதற்கு யாதொரு விமோசனமில்லை, ஸ்தாபிக்கப்பட்ட எந்த மார்க்கத்திலும் எழுப்புதலுண்டானதில்லை. ஸ்தாபித்தவுடனே, அது மரிக்கிறது. `கழுதையின் தலையீற்றெல்லாம் ஒரு ஆட்டுக் குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால் அதன் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக் கொள்வாயாக’ (யாத் 13:13) என்று கர்த்தர் மோசேயோடு கூறினார். கழுதை மீட்கப்படும், அது போன்று இயேசு கிறிஸ்துவின் பலியின் மூலம், பயங்கரமான பாவி எவனும் மீட்கப்படுவான்; கிறிஸ்துவைப் புறக்கணிப்பதன் மூலம், அவன் புறக்கணிக்கப்படுவான். ஆனால் கோவேறு கழுதையை யாரும் மீட்பதில்லை. அதை மீட்பதற்கென யாதொரு இரத்தமுமில்லை. ஏனெனில் கோவேறு கழுதை சபையில் அடைக்கலம் புகுகிறது. கழுதையோ இரத்தத்தின்கீழ் அடைக்கலம் புகுகிறது. கோவேறு கழுதைக்கு உயிர்ப்பிக்கத்தக்க வித்து இல்லை. ஆனால் கழுதைக்கோ வித்துண்டு. இரட்சிக்கப்படாத ஒரு வியாபாரி, ஒரு பத்திரிகையில், தற்கால சபைகளின் நிலையைக் கண்டு வியப்படைவதாக எழுதியிருந்தார். தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட வேத பள்ளிக்கூடங்கள், அதை அழித்துப்போடுகின்றன என்று வியப்பு தெரிவித்தார். தேவனற்ற ஒருவன் அல்லது கம்யூனிஸ்டு இவ்வாறு செய்தால் அதைத் குறித்து அதிசயப்படுவதற்கில்லை. சபையே தேவனுடைய வார்த்தையை நிர்மூலமாக்கும் போது, திட்டமிட்டுச் செய்யும் கொலை (PREMEDITATED MURDER) என்றுதான் நாம் அதைக் கருதவேண்டும் என்பதாய் அவர் கூறினார். இதுதான் கலப்பு மார்க்கத்தன் விளைவு. சபை வார்த்தையைவிட்டு தூரம் செல்லும் போது, பொய்யையும் விசுவாசிக்கும். காயீன் பிறந்தபோது, `கர்த்தரிடத்தில் ஒரு மனுஷனைப் பெற்றேன்’ என்று ஏவாள் கூறினாள். அவரிடமிருந்து அவனைப் பெற்றதாகவே அவள் கருதினாள், தேவனுடைய வசனத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாகச் சாத்தானின் வார்த்தையை ஏற்றுக்கொள்ள அவள் வஞ்சிக்கப்பட்டாள். அன்று முதல் அவள் கூறிய யாவும் சரியென்று எண்ணினாள். ஆனால் தேவன் அண்ட சராசரங்களுக்கு நியமங்களை வகுத்திருக்கிறார். அதன்படி நல்ல வித்து நல்ல கனியைத்தான் கொடுக்க முடியும்; கெட்டவித்து கெட்ட கனியை மாத்திரம் கொடுக்கும். வித்தியாசமான இவ்விரு வித்துக்களும், ஒரே பூமியின் உரத்தையும், ஒரே மழையையும், சூரிய வெளிச்சத்தையும் பெற்றாலும், அவைகளுடைய இனத்தைத் தான் பிறப்பிக்கும். காயீனின் சந்ததிக்கும், சேத்தின் சந்ததிக்குமுள்ள வித்தியாசம், மூல வித்துகளில் அமைந்திருந்தன. ஏவாள் ஞானம் படைத்தவளாயிருந்தாள். அவள் சாத்தானிடமிருந்து மனுஷனைப் பெற்றதாகக் கூறவில்லை. அவ்வாறாயின் சாத்தான் தேவனுக்குச் சமமாவான், தேவன் மாத்திரம் மரியாளின் கர்ப்பத்தில் முட்டைகள் (EGGS) தோன்றச் செய்தார், சாத்தான் அவ்வாறு செய்ய இயலாதென்பதை ஏவாள் நன்கறிந்திருந்தாள். சாத்தான் சிருஷ்டியைத் தாறுமாறாக்க முடியும் (PERVERT). ஆகையால் தவறான வித்தைத் கொண்டு அவன் ஏவாளை வஞ்சித்தான். சர்ப்பத்தின் வித்து காயீனைத் தோன்றச் செய்தது. ஆதாமின் வித்து ஆபேலையும் சேத்தையும் தோற்றுவித்தது. இவ்விரு வித்துக்களும் ஒரே முறையில் வளர்ந்தாலும் அவைகளினின்று தோன்றியவர்கள் வித்தியாசப்பட்ட வர்களாயிருந்தனர். காயீன் தேவனால் அளிக்கப்பட்டவன் என்று ஏவாள் விசுவாசித்தாள். பிசாசின் பொய்யைத் தேவனுடைய சத்தியமாக அவள் ஏற்றுக்கொண்டாள், இன்றைக்கு இதே நிலை சபைகளில் காணப்படுகின்றன. `சத்தியத்தின் ஊற்றுகள்’ என்று சபைகள் தங்களை அழைத்துக்கொண்டு, சத்தியமற்றதாக இருக்கின்றன, சபைகளின் பிள்ளைகள் தங்களிடத்தில் சத்தியமுண்டு என்று ஆணையிட்டு, இத்தவறை நிலைநிறுத்தக் கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள்’. நான் இவைகளை மிகைப்படுத்துகிறேன் (EXAGGERATION) என்று நீங்கள் எண்ணினால் 2 தீமேத்தேயு 3ம் அதிகாரத்தையும், பின்வரும் வசனங்களையும் வாசிக்கவும்; `நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந் தீர்க்கப் போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்து கட்டளையிடுகிறதாவது; சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு புத்திசொல்லு, ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக் கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு. தீங்கனுபவி, சுவிசேஷக னுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று’. (2 தீமோ 4: 1-5). சபையானது, ஆதாம் ஏவாளைப் போன்று, ஆதியில் கொடுக்கப்பட்ட சத்தியத்தை விட்டு விலகியபோது, மரணம் பிரவேசித்தது. ஆகையால் அவளிடத்தில் வல்லமை காணப்படவிலை. ஆசாரங்களையும் வழிபாட்டின் முறையையும் பின்பற்றி, பரிசுத்த ஆவியையும் அவருடைய வார்த்தையையும் புறக்கணித்து, குருக்களாட்சியைக் கைக்கொண்ட அந்த நிமிடமே, மரணம் சபைக்குள் பிரவேசித்து,அது வியாதிப்படத் தொடங்கியது. வியாதிப்பட்டவுடனே, வல்லமையற்ற மக்களைக் கொண்ட குழுவாக அது மாறி, தேவனுடைய வார்த்தைகளைக் குறித்துத் தர்க்கிக்க ஆரம்பித்தது, ஆவியின் மூலம் அது ஒன்றையும் சாதிக்காமல், வார்த்தையிலுள்ள விசுவாசத்தை இழந்து, திட்டங்களின் மேல் நம்பிக்கை கொண்டது. திட்டத்தை விதைத்தவர்கள் திட்டத்தையே அறுத்தார்கள். தாறுமாறானவைகளை (PREVERSION) அவர்கள் விதைத்துத் தாறுமாறான பிள்ளைகளைப் (PREVERTED CHILDREN) பெற்றார்கள். தேவனுடைய காரியங்களில் வீணாகத் தலையிட்டால் மோசம் நேரிடும். இயற்கைக்கு மாறான சிலவற்றை மனிதன் செய்து, அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறான். உதாரணமாகக் கோழிக் குஞ்சுகளை வளர்க்கும் முறையைக் கவனிப்போம். அதிக முட்டையிட அவைகளில் மருந் துகளைப் புகுத்துவதால், முட்டையிடும் இயந்திரங்களாக அவைகள் மாறிவிட்டன. ஆனால் இதன் மூலம், இறைச்சி புசிக்கத் தகுதியற்ற விதமாய் மிருதுவாகிவிட்டது. நாம் சாப்பிடும் (மாட்டு) இறைச்சியிலும் மருந்து ஏற்றப் படுவதால், அது மனித தேக அமைப்பையே பாதிக்கிறது, இதன் காரணமாக, பெண்களின் இடைகள் குறுகித் தோள்கள் விசாலமாகின்றன. ஆண்களுக்கு இது நேர்மாறாக நடக்கிறது. இயற்கைக்கு மாறாகச் செய்யும் பரிசோதனைகளே பயங்கர விளைவுகளைக் கொடுக்கு மாயின், சத்தியத்தைப் பொய்யாக மாற்றுவதனாலுண்டாகும் பலன் என்னவாயிருக்கும்? கிறிஸ்துவுக்கு விரோதமான, தேவனற்ற தாறுமாறான மார்க்கங்கள், இதன் காரணமாக உண்டாகும்; இவைகள் ஆதித் திருச்சபையைப் போல் தோற்றத்தில் காணப்பட்டாலும், அது சாதித்த காரியங்களைச் சாதிக்க முடியாமலும் இருக்கும். இச்சபைகளுக்குத் தேவன் அக்கினிக்கடலை ஆயத்தம் செய்திருக்கிறார். சிமிர்னா சபையின் காலம் மெதுவாக மரிக்க ஆரம்பித்தது, அதன் பின்பு, அது பழையநிலைமைக்குத் திரும்பவில்லை. எந்தக்காலமும் திரும்ப வருவதில்லை. இழந்து போன எழுப்புதல்கள் மீண்டும் வருவதில்லை. தலைமுறை தோறும், தேவனுடைய ஜீவன் தானாகத் தொடர்ந்து அளிக்கப்படுவதில்லை. மறுபிறப்பின் மூலமே ஒரு சபை இதைப் பெறமுடியும். இந்தக் கடைசி காலம் பெந்தேகோஸ்தே எழுப்புதலைக் கொண்டு தொடங்கியது. பெந்தேகோஸ்தேகாரர் ஸ்தாபனங்களை ஏற்படுத்தி, ஒவ்வொரு சபையின் காலத்தில் நடந்தது போன்று, தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாகத் தங்களுடைய சொந்த எண்ணங்களை ஸ்தாபனங்களுக்குள் புகுத்தினர். ஸ்தாபனத்தின் நியமங்களை ஒரு அங்கத்தினனும் மீறமுடியாது. அவ்வாறு செய்பவன் தேவனுடைய நாமத்தில் தூஷிக்கப்பட்டு சபையினின்று தள்ளப்படுவான். ஆதித் திருச்சபையில் உண்டாயிருந்த பெந்தேகோஸ்தரைப் போன்று இவர்கள் இல்லாமல், வழிபாட்டின் முறைகளையும், பிரமாணங்களையும் முன்னிருந்த சபைகளின் காலங்களிலுள்ள முற்பிதாக்களைப் போல் ஆசரிக்கத் தொடங்கினர், இவர்கள் ஆதிப் பெந்தேகோஸ்தே வல்லமையைக் குறித்துப் பேசி, அதை நடைமுறையில் பெறாதவர்களாயிருக்கின்றனர். அவர்கள் பெற்ற அசைவின் மகத்துவத்தைக் குறித்துப் பெருமையாகப் பேசலாம், `இந்த அசைவை மனிதன் தொடங்கவில்லை, அது தானாகவே உண்டானது. பெந்தேகோஸ்தே காலத்தில் ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவி இக்காலத்தில் உலகத்தின் எல்லாப் பாகங்களிலும் ஊற்றப்பட்டது. இது மனிதனால் உண்டாகாமல் தேவனால் உண்டானது’ என்று அவர்கள் கூறலாம், அப்படியெனில் தேவனால் உண்டான அசைவு இப்பொழுது ஏன் மனிதனால் நடத்தப்பட வேண்டும்? தேவன் அந்த அசைவைத் தொடங்கியிருப்பாரானால், பின்னை ஏன் அதைக் கடைசிவரை காத்து முடிக்கவில்லை? தேவன் பிரமாணங்களும், கொள்கைகளும் கொண்ட கைப்புத்தகத்தை (HAND BOOK) எழுதவில்லையெனில், அவ்வாறு செய்ய இவர்களுக்கு என்ன உரிமையுண்டு? தேவன் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், இன்னும் மற்ற அநேகஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களின் மேலும்கூட தம்முடைய ஆவியை ஊற்றினார். ஆனால் இந்த ஸ்தாபனங்களெல்லாம் வித்தியாசமான போதனைகளையும், பிரமாணங்களையும் கைக்கொண்டதன் பலனாக, இவைகளனைத்தையும் அவர் ஒரு புறம் தள்ளிவிட்டு, அவரவர் காலத்தில் உண்டாக்கிக் கொண்ட கோட்பாடுகளை (THEORIES) அறவே அழித்து, ஆவிக்குரிய வரங்களை உண்மையான சபைக்குத் திரும்பவும் அளித்து, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரென்பதை நிரூபித்தார். ஸ்தாபனங்கள் தேவனுடைய சித்தத்தில் இல்லை என்னும் பாடத்தை இதன் மூலமாவது பெந்தேகோஸ்தேகாரர்கள் படித்தார்களா? இல்லவே இல்லை, அவர்களும் மற்றவர் போலவே ஸ்தாபனங்களை உண்டாக்கி, அவர்களுடைய சொந்த புத்தகங்களையும், சட்டங்களையும், சபை பிரமாணங்களையும், ஐக்கியக் குறிப்புப் புத்தகத்தையும் (FELLOWSHIP BOOK) எழுதி, எல்லாச் சத்தியத்தையும் அவர்கள் பெற்ற, இரட்சிப்பின் வழியையறிந்து, அதை மற்றவருக்குப் போதிப்பதற்கென தேவனால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணங்கொண்டனர். அவர்கள் விட்டு வெளிவந்த குழுக்களைப் போலவே தங்களைக் கலப்பாக்கிக் கொண்டனர். அவர்கள் மணவாட்டியாக இருக்கவேண்டுமெனில், தங்கள் பெந்தேகோஸ்தே முற்பிதாக்களைப் போன்று பூரணமாக ஸ்தாபனங்களை விட்டு வெளிவர வேண்டும். இக்காலத்து பெந்தேகோஸ்தேகாரர் மற்றக் குழுக்களைப் போல் ஆகிவிட்டனர். அவர்களிலுண்டாயிருந்த எழுப்புதல் முடிவடைந்தது, உயிருள்ளவரென்று பெயர் பெற்றும் அவர்கள் செத்தவர்களாயிருக்கின்றனர். பரிசுத்த ஆவியைக் குறித்து சதா பேசிக்கொண்டு, அதே சமயத்தில் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டனர். அன்னிய பாஷை பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளம் என்று கூறுகின்றனர். பிசாசும் அன்னிய பாஷை பேசும் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். பாபேலில் உண்டாயிருந்த குழப்பம் அவர்கள் மத்தியில் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. அதைப் பரிசுத்த ஆவியின் கிரியையென்று அவர்கள் கூறுகின்றனர், தேவன் மனிதனுக்கு உத்தர விடுவதற்குப் பதிலாக மனிதன் தேவனுக்கு உத்தரவிடுவதை நாம் மறுபடியும் காண்கிறோம். நான் கூறுவது உங்களில் அநேகரைக் கோபமூட்டும் இருக்கட்டும். பெந்தேகோஸ்தேகாரர் என்றும், முழு சுவிசேஷகர் (FULL GOSPEL) என்றும் கூறிக்கொள்பவர்கள் தங்கள் முற்பிதாக்களான பெந்தேகோஸ்தேகாரரைப் போன்றவர் என்பதை நிரூபிக்கட்டும். பெத்தேகோஸ்தே காலத்தில் அக்கினி மேகத்தில் வந்து, நாவுகளாகப் பிரிந்து, அங்கு கூடியிருந்தவர்கள் மேல் அமர்ந்தது. அந்த அக்கினி நாவுகள் இப்பொழுது எங்கே? மேலும் பெந்தேகோஸ்தே நாளில் பேசப்பட்ட பாஷைகளின் அர்த்தத்தை ஜனங்கள் புரிந்து கொள்ள முடிந்தது. இக்காலத்தில் பேசப்படும் பாஷையின் அர்த்தத்தை மற்றவர்கள் அறியமுடிகிறதா? அக்காலத்து விசுவாசிகள் ஐக்கியப்பட்டு ஒரே குடும்பமாயிருந்தனர். இக்காலத்துப் பெந்தேகோஸ்தரோ பயங்கரமாகப் பிரிந்திருக்கின்றனர். மனிதன் எவனும் தானாக ஆதித்திருச்சபையில் சேரத் துணிச்சல் கொண்டதில்லை. இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார். ஆனால் இன்றைய பெந்தேகோஸ்தே சபைகளில் அநேக வெள்ளாடுகள் காணப்படுகின்றன. வேதத்தின் முழுச் சத்தியத்தை ஏற்றுக்கொண்டதாக ஒரு சாரார் (FULL GOSPEL) கூறிக் கொண்டாலும், செய்முறையில் அதை நிரூபிக்க அவர்களால் முடியவில்லை. மற்றச் சபைகளைப் போன்று இந்தச் சபைகளும் வல்லமையற்று விளங்குகின்றன. வேதத்தில் கூறப்பட்ட ஆதிப் பெந்தேகோஸ்தே திருச்சபையோடு இவைகளை ஒப்பிடவே முடியாது. இவர்கள் தேவனிடத்தில் திரும்ப இதுதான் சமயம். உயிருள்ளவரென்று பெயர்பெற்றும் அவர்கள் செத்தவர்களாயிருக்கிறார்கள். அன்னிய பாஷை பேசுதல் எழுப்புதலின் அடையாளமல்ல; அது மரணத்திற்கு அடையாளமாயிருக்கிறது. ஆதித் திருச்சபையில் பேசப்பட்ட அன்னிய பாஷைகள், சடங்காச்சாரங்கள் கொண்ட யூதமார்க்கம் முற்றுபெற்று ஒரு புது சகாப்தம் தொடங்கிவிட்டது என்பதை அறிவித்தன. இக்காலத்து அன்னிய பாஷைகள் புறஜாதியாரின் சபையின் காலம் முடிவடைந்து சுவிசேஷம் யூதர்களுக்குக் கொண்டு செல்லப்படுவதை அறிவிக்கின்றன. ஆனால், மக்களோ, அன்னிய பாஷைகள் மகத்தான ஆவிக்குரிய அசைவைப் பறைசாற்றுகின்றன என்று கூறித் தங்களை ஏமாற்றிக் கொள்கின்றனர். உண்மையாக, அன்னிய பாஷைகள் மனிதனின் எண்ணங்களுக்கும், திட்டங்களுக்கும், ராஜ்யங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. தேவனுடைய மக்களே, விழித்தெழும்புவீர். இது உண்மையென்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நான் கூறப்போவதைக் கவனமாய் கேளுங்கள். உலகம் முழுவதும் காணப்படும் பெந்தேகோஸ்தே ஸ்தாபனங்களில், வியாபாரிகளின் (BUSINESSMEN) குழுக்கள் ஏற்படுத்தப் படுகின்றன. தேவனுடைய அழைப்பின்றி இவர்கள் பிரசங்கம் செய்யத் தொடங்கி, மனிதரைப் பிடிப்பவர்களென்றும், தேவனுடைய அசைவை ஸ்தாபித்தவர்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்கின்றனர். அன்றியும், தேவன் சபைக்கு அளித்த வரங்களைக் கொண்ட ஊழியம் (எபே 4:10-13-ல் சொல்லப்பட்டவை) தோல்வியடைந்ததால், அவர்கள் ஊழியத்திற்கு முன்வந் ததாகவும் கூறுகின்றனர். மோசேயின் ஊழியத்தைக் கோரா தடுத்து நிறுத்த முற்பட்டதுபோன்று, இவர்களும் கடைசி கால ஊழியத்திற்குப் பங்கத்தை விளைவிக்கின்றனர். சத்தியத்தைப் போதிப்பதற்குப் பதிலாகத் தங்களுடைய அனுபவத்தைக் கண்மூடித்தமாகப் பிரசங்கிக்கின்றனர். தாமதமாவதற்கு முன்பு தேவன் அவர்களுடைய கண்களைத் திறக்கட்டும். பண அந்தஸ்தும் உத்தியோகத் திறமையும், சமுதாயத் தலைமையும் (SOCIAL LEADERSHIP), உலக ஞானமும் ஒருவனைத் தேவனுடைய ஊழியத்திற்குத் தகுதியாக் குவதில்லை. இதன் காரணமாக, தேவனுடைய வார்த்தையும் முக்கியத்துவம் அடைவதில்லை. பரிசுத்த ஆவியின் மூலமேயன்றி, மனிதனின் அந்தஸ்தின் மூலமாகவும், உலகக் காரியங்களின் மூலமாகவும் தேவனுடைய ஊழியத்தைச் செய்யத் தலைப்பட்டால், நாம் தேவனுக்கு ஒத்தாசை செய்பவர்களாய்க் காணப்படாமல், அவரை எதிர்ப் பவர்களாக இருப்போம். சபையின் மூப்பர்களுக்கு விரோதமாக நான் இவைகளைக் கூறுகிறேன் என்று எண்ணவேண்டாம். ஒரு சபையின் மூப்பன் ஏழையாகவோ, செல்வந்தனாகவோ இருக்கலாம். நற்கிரியைகளையும், மனமாற்றத்தையும் மற்றும் பல ஆவிக்குரிய தகுதிகளையும் கருதி, யாரை வேண்டுமானாலும் மூப்பனாக நியமிக்கலாம். ஆனால் சமுதாய ஸ்திதியும் (SOCIAL POSITION) செல்வமும் சபையின் மக்களைப் பாகுபடுத்தும்போது, அது தேவனால் உண்டாயிராமல் சாத்தானால் உண்டாகிறது. இது, உலகப் பிரகாரமான ஐசுவரியம் பெற்று, ஆவிக்குரிய வறுமையடைந்திருக்கும் லவோதிக்கேயா சபையின் காலத்தின் வேறொரு அடையாளமாகும். `உனக்கிருக்கிற தரித்திரத்தை அறிந்திருக்கிறேன்’. இச்சபையின் கிறிஸ்தவர்களின் வறுமையும், சாத்தானின் கூட்டமும், இவ்வசனத்தில் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஐசுவரியமும் ஆதிக்கமும், பொருந்திய ஸ்தாபனம் தேவனை சேவிக்கும் எளியவர்களை எப்பொழுதும் வெளியில் தள்ளும். பரிசுத்த ஆவி அவர்கள் இருதயங்களில் கிரியை செய்யும்போது, அவர்களும் செல்வம் படைத்த ஸ்தாபனங்களை விட்டுவந்து, வீடுகளிலும் பழைய கட்டிடங்களிலும் தேவனை வழிபடுவர், உலக மக்களின் கண்களில் தரித்திரராகக் காணப்பட்டபோதிலும், இவர்கள் ஆவிக்குரிய பிரகாரம் ஐசுவரியமுள்ளவராயிருந்தனர். `அவர்களுடைய தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்’ இந்தப் பொய்யர்கள் உண்மையான சபையை தூஷித்தனர். எப்பொழுதும் உண்மையான வித்து (உண்மையான சபை) தூஷிக்கப்படும். எருசலேமிலுள்ள யூதர்கள் ஆதித் திருச்சபையின் விசுவாசிகளைத் தூஷித்தனர். அஞ்ஞானப் புறஜாதிகளும் அவ்வாறே செய்தனர். நீரோவின் காலத்தில் நேர்ந்த ஒவ்வொரு ஆபத்துக்கும் (ரோமாபுரி தீக்கிரையாக்கப்பட்டது உள்பட) கிறிஸ்தவர்கள் குற்றஞ்சாட்டப் பட்டனர். கம்யூனிஸ்டு நாடுகளில், கிறிஸ்தவர்கள் சொற்பமாயிருப்பினும், அவர்கள் தாம் முதலில் கூண்டோடு அழிக்கப்படுவர். கிறிஸ்தவர்கள் விசுவாசமுள்ளவர்களாய் (LOYAL) எப்பொழுதும் நற்காரியங்களைச் செய்தாலும், அவர்கள் சாவுக்கேதுவாக துன்புறுத்தப்படுவர். அதற்குக் காரணம், கிறிஸ்தவர்கள் தேவனற்ற ஜனங்களுக்கு ஒரு பிரச்சனையாகவே அமைந்திருக்கின்றனர். இவர்கள் பொல்லாதவர்களுக்குத் தீங்கிழைக்காமல் அவர்களுக்கு நன்மையே செய்யக் கருதினாலும் அவர்களோடு எப்படியாயினும் சண்டையில் சிக்கிக் கொள்கின்றனர். யோவான் ஸ்நானன் ஏரோதுக்கோ அல்லது அவனுடைய மனைவிக்கோ தீங்கிழைக்க எண்ணங்கொள்ளாமல், தேவனுடைய கோபாக் கினையினின்று அவர்களைக் காக்கமுயன்றான். அவன் செய்கை தவறாக அர்த்தங்கொள்ளப்பட்டு, அதன் காரணமாக அவன் சிரச்சேதம் செய்யப்பட்டான். நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடும் தேவனின் பிள்ளைகள் நிந்தையடைந்து கொல்லப்பட்டனர். பொல்லாங்கனாகிய சாத்தானின் வல்லமை மனச்சாட்சி அறவேயற்ற மக்களில் கிரியை செய்ததன் காரணமாக நன்மை செய்தவர்கள் தீங்கிழைக்கப்பட்டனர். பத்து வருஷகால உபத்திரவம் வெளி 2:10. `நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாக. பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்து நாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரண பரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். `பயப்படாதே’ என்னும் வார்த்தையைக் கர்த்தர் ஒவ்வொரு முறை உபயோகிக்கும்போதும், சீக்கிரத்தில் வரப்போகும் ஆபத்தையும், உபத்திரவத்தையும், நஷ்டத்தையும் முன்னறிவிக்கிறார். `உபத்திரவம் வரப்போகிறது’ என்று அவர் வெளிப்படையாய்க் கூறினால், அவர்கள் பயமுறுவர். விளக்கை அணைக்கும் தாய் தன் குழந்தைகளிடம் மெதுவாக `விளக்கு அணையும்போது இருட்டாகும். நான் உங்களோடு இருக்கிறேன். பயப்படாதேயுங்கள்’ என்று கூறும் வண்ணம், அவர் உண்மையான சபையை நோக்கி `மனிதனுக்கு அல்லது அவனுடைய கொள்கைகளுக்கு பயப்படவேண்டாம். நான் உங்களோடு இருக்கிறேன். என் கிருபை உங்களுக்குப் போதும். நீங்கள் தண்ணீர்களைக் கடக்கும்போது அது உங்கள் மேல் புரளுவதில்லை. மரணத்திலும் நீங்கள் தோல்வியடைவதில்லை. நீங்கள் முற்றிலும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார். பவுல் அப்போஸ்தலன் மேற்கூறிய வார்த்தைகளின் உண்மையை அனுபவத்தின்மூலம் நன்கு அறிந்திருந்தான். அவன் கூறுவதாவது. `கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்பு கூறுகிறவராலே முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ் காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வெறெந்தச் சிருஷ்டியானாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்’ (ரோமர் 8:36-39). நாம் எதற்கும் பயப்படக்கூடாது. அவருடைய அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். `நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்’. அக்காலத்து யூதர்களும், அஞ்ஞான பூசாரிகளும் (PAGAN PRIESTS) கிறிஸ்தவர்களைச் சிறைப்படுத்தினர். கவர்னர்களும் ஜனங்களின் நன்மதிப்பைப் பெற எண்ணி, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களைச் சிங்கங்களுக்கும் முதலைகளுக்கும் இரையாகக் கொடுக்க, அதை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். சாத்தான் தேவனைப் பகைப்பதால், அவன் இம்மக்களைத் தூண்டிவிட்டு, தேவனுடைய பிள்ளைகளை நிர்மூலமாக்கினான். தேவன் அன்புகூறும் அனைத்தையும் சாத்தான் அழிக்கமுயல்வது திண்ணம். கிறிஸ்தவர்களை நியாய ஸ்தலத்தில் நிறுத்த சாத்தான் யூதர்களில் கிரியை செய்தபடியால் அவர்கள் சாத்தானின் மார்க்கத்தைப் பின்பற்றிச் சாத்தானின் கூட்டமாயினர். அவ்வாறே, இருண்ட காலங்களிலும் (DARK AGES) மற்றைய காலங்களிலும் கணக்கற்ற விசுவாசிகளைக் கொன்ற ரோமன் கத்தோலிக்க சபையும், பிசாசினால் உண்டாகி சாத்தானைச் சார்ந்திருக்கின்றனர். நான் கூறுவது உங்களுக்கு அதிர்ச்சியாயிருந்தால், வெளி 13-ல் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறக் காத்திருங்கள். அமெரிக்காவின் எதிர்காலமும் இந்த அதிகாரத்தில் அடங்கியிருக்கிறது. `பதின்மூன்று’ என்னும் எண் இந்நாட்டின் அடையாளமாயிருக்கிறது. பதின்மூன்று குடியேற்ற நாடுகளைக் கொண்டு இது தொடங்கினது, அதன் கொடியில் பதின்மூன்று நட்சத்திரங்களும் பதின்மூன்று வரிகளும் (STRIPES) காணப்படும். அவளுடைய முடிவும் பதின்மூன்றாம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இவ்வதிகாரத்தில் காணும் சொரூபம் அதற்கு முன்னிருந்த மிருகத்தின் அசுத்தமனைத்தையும் கொண்டதாயிருக்கும். நிசாயா ஆலோசனை சங்கத்தில் மிருகம் எழும்பியதுபோன்று, உலக சபைகளின் மாநாட்டிலிருந்து (WORLD COUNCIL OF CHURCHES) அந்த சொரூபம் சாத்தானின் வல்லமையைக் கொண்டு வெளியேறி, உண்மையான விசுவாசிகளின் மீது சாத்தானின் உக்கிரக் கோபத்தை ஊற்றும். நிசயாவின் காலத்தில் காணப்பட்ட தந்திரத்திற்கும், கொடூரத்திற்கும் இக்காலத்து உண்மையான சபை ஆளாகும். தேவனுக்குச் சொந்தமான இந்த எளியவர்களைத் தேவனுடைய நாமத்தின் பேரிலும் மார்க்கத்தின் பேரிலும் இவர்கள் ஏளனம் செய்து, நிர்மூலமாக்கட்டும். தேவனுடைய பிள்ளைகளென்று இத்தீயவர் பொய் சொல்லுகின்றனர். உண்மையாக அவர்கள் தங்கள் பிதாவாகிய பிசாசினாலுண்டானவர்கள். அவர்களுடைய கிரியைகள் இதை நிரூபிக்கின்றன. அவர்களுடைய ஸ்தாபனம் தேவனின் சிறுமந்தையை நிந்திக்கட்டும். அவர்களின் பகையும், கொலையும், நிக்கொலாய் மதஸ்தரின் அந்திக்கிறிஸ்துவின் சபையை அவர்கள் சார்ந்தவர்கள் என்பதை விளக்குகின்றன. `அவர்கள் காவலில் போடப்படுவார்கள். இயேசு கூறியவாறே அவர்கள் நியாயஸ்தலத்தில் அநியாயமாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு மார்க்கத்தின் பேரில் சிறையிலடைக் கப்பட்டனர். ஒரு நல்ல காரணத்திற்காக அவர்கள் சிறைபடுத்தப்பட்டதாக மக்கள் எண்ணினர். சாத்தான் இவைகளுக்கெல்லாம் காரணகர்த்தாவாயிருந்தான். அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் ஜெபமும் வேதவாசிப்பும் சுப்ரீம் கோர்ட் உத்திரவினால் தடைசெய்யப்பட்டதற்கும் அவனே காரணம். `பத்து நாள் உபத்திரவப்படுவீர்கள்’ சிமிர்னா சபையின் காலத்தை நிர்ணயிக்க இத்தீர்க்கதரிசனம் உபயோகப்படுகிறது. தயோக்ளீடியன் (DIOCLETIAN) என்னும் கொடிய சக்கரவர்த்தி, தேவனுடைய பரிசுத்தவான்களுக்கு விரோதமாய் எழும்பி கி.பி. 302 முதல் கி.பி. 312 முடிய பத்து வருஷகாலம் அவர்களைத் துன்புறுத்திக் கொலை செய்தான். (வெளி 2:10ன் பத்து நாள்). பரிசுத்தவான்கள் முழுவதும் அழியாதபடி தேவனுடைய கிருபை காத்தது. சபையின் சரித்திரத்தில் பரிசுத்தவான்களின் இரத்தம் அதிகமாகச் சிந்தப்பட்டது இக்காலத்திலாகும். `நீ மரணபரியந்தம் உண்மையாயிரு’ இரத்தத்தினால் அவர்கள் சாட்சியை முத்தரிக்க வேண்டுமென்று இயேசு கூறுகிறார். சபையின் காலங்களில் லட்சக்கணக்கானவர்கள் தாங்கள் அடைந்த விசுவாசத்தின் காரணமாய் மரித்தார்கள். அந்திப்பாவைப் போன்று, இவர்களும் தங்களுடைய ஜீவனை அற்பமாய் எண்ணினர். இரத்த சாட்சியாய் மரிக்க நமக்குத் தைரியமில்லை என்று நாம் எண்ணுகிறோம். கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் தினந்தோறும் வெற்றி சிறக்க உபயோகிக்கும் அதே விசுவாசம் போலிகார்ப் போன்ற இரத்த சாட்சிகளைத் தாங்கியது என்பதை நினைவு கூறுங்கள். உன்னத விசுவாசம் தகுந்த நேரத்தில் உன்னதக் கிருபையையளிக்கும். `அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்’ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஒரு கலசம் தண்ணீரும் அதன் பலனை அடையாமற் போகாதெனில், அவருடைய நாமத்திற்கென்று இரத்த சாட்சியாய் மரிக்கும் ஒருவன் அதிக பலனை அடையவேண்டும். `பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக் கொள்ளத் தக்கதாக ஓடுங்கள்’ (1 கொரி 9:24) என்று பவுல் கூறுகிறான். ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றவனுக்கு ஒலிவக் கிளைகளால் உண்டாக்கப்பட்ட மாலை பரிசாகக் கொடுக்கப்படும். ஆனால் இரத்த சாட்சிக்குக் கொடுக்கப்படும் பரிசு ஜீவக்கிரீடம் என்று இயேசு தாமே கூறுகிறார். ஒலிம்பிக் பரிசு போட்டியிட்டு வெற்றி பெற்றவனுக்குரியது. ஜீவகிரீடம் ஜீவனைக் கொடுத்தவர்களுக்குரியது இருபரிசுகளும் அழியக்கூடாதவைகள். ஆனாலும் உலகப்பந்தயத்தில் வெற்றி பெற்றவன் பரிசு பெற்ற சந்தோஷத்தை சீக்கிரத்தில் இழப்பான். ஆனால் கர்த்தருக்கென்று தினந்தோறும் போராடி, அல்லது அவருக்கென்று ஜீவனைக் கொடுத்தவர்களின் புகழ் என்றும் அழிவதில்லை. அவர்களுக்கென்று ஜீவகிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய நித்திய பரிசைப் பெறுவதற்கு நாம் சிறிது நேரத்தையே செலவழிக்கிறோம்; அதைக் குறித்தும் அற்பமாயெண்ணுகிறோம். சரீர உயிர்த்தெழுதலைக் குறித்தும் நித்திய ராஜ்யத்தைக் குறித்தும் நம்பிக்கை நமக்கு உண்டாயிருக்குமானால், விசுவாசமுள்ள பரிசுத்தவான்களுக்கு அளிக்கப்படும் அந்த நல்ல பொக்கிஷத்தை நாம் பரலோகத்தில் சேர்க்க வேண்டும். ஜெயங் கொள்ளுகிறவனுக்குக் கொடுக்கப்படும் வெகுமதி வெளி 2:11. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. ஆவியானவர் மறுபடியும் இதை எல்லாக் காலங்களிலுமுள்ள சபைகளுக்கும் அறிவிக்கிறார். காலங்கள் தோறும் ஜீவித்த நம்முடைய சகோதரரை இச்செய்தி ஆறுதல்படுத்தியது போன்று, நம்மையும் இன்றைக்கு ஆறுதல்படுத்த அது கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் மரணம் நம்மைச் சேதப்படுத்தாது என்று இயேசு கூறுகிறார். அக்கினிக்கடல் இரண்டாம் மரணமென்பதை நாமெல்லாரும் அறிவோம். `அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்’. (வெளி 20:14) பாதாளத்தில் (HELL) உள்ளவர்கள் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டனர். ஒரு அவிசுவாசி நித்திய நரகத்தில் தள்ளப்பட்டு நித்திய காலமாய் எரிவதில்லை என்பதை தேவனுடைய வசனத்தை ஆதாதரமாகக் கொண்டு நான் கூறமுடியும். இந்தப் போதனையைக் குறித்து அநேகர் குறை கூறலாம். முதலாவது பாதாளம் (HELL) அல்லது அக்கினிக் கடல் நித்தியமானதல்ல. `பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினி (EVERLASTING FIRE)’ (மத் 25:41) என்று இயேசு கூறுகிறார். ஆயத்தம் பண்ணப்பட்ட எதற்கும் தொடக்கம் உண்டாயிருக்கும். தொடக்கமுள்ள யாவும் நித்தியமாயிருப்பதில்லை. ஆங்கிலத்தில் ‘EVERLASTINS’ என்ற பதம் `காலாகாலங்கள்’ என்னும் அர்த்தங் கொடுக்குமேயன்றி, நித்தியத்தைக் குறிக்காது. ஏலியின் வீட்டிற்குத் தேவன் நீங்காத நியாயத் தீர்ப்பு செய்யப் போவதாகவும் அவருடைய ஆசாரியர்களாக, அவர்கள் `இனி’ (FOREVER) பலி செலுத்துவதில்லையென்றும் அவர் சாமுவேலுக்குக் கூறினார் (1 சாமு 3:13-14) சாலொமோன் ஏலியின் கடைசி சந்ததியாகிய அபியத்தாரை ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப் போட்டான் (1 ராஜா 2:27) தேவன் கூறிய பிறகு நான்கு தலைமுறைக்கப்பால் இது நடந்தது அப்படியெனில் ‘EVERLASTING’ என்னும் பதமும் ‘ETERNAL’ என்னும் பதமும் வித்தியாசமான அர்த்தங்களைக் கொண்டன. ‘EVARLASTING’ என்பது `அழியும் வரையுள்ள சமயத்தைக் குறிக்கிறது. `அவர்கள் நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்’ (2. தெச 1.10) என்று பவுல் கூறுகிறான். `அழிவு’ (DESTRUCTION) என்னும் அர்த்தத்தைக் கொண்ட கிரேக்க பதம் `முழு அழிவு’ (ANNIHILATOIN) என்பதைக் குறிக்கும். ஆனால் அழிக்கப்படுதல்’ (DESTROYING) என்னும் வாக்குதான். `சிறிது சிறிதாக அழிக்கப்படுதல்’ என்னும் அர்த்தம் பெறும், அப்படியெனில் `நித்திய அழிவு’ (EVARLASTING-DESTRUCTION) என்று பவுல் கூறுவது கடைசியில் நேரப்போகும் அழிவை எடுத்துக் காண்பிக்கிறது. `நித்தியம்’ (ETERNAL) என்னும் வாக்கை எப்பொழுது நாம் உபயோகிக்க வேண்டும் என்று நீங்கள் ஆலோசிக்கலாம். தேவனைக் குறிக்க இது உபயோகிக்கப்படும்போது, அவர் தொடக்கமும் முடிவுமில்லாதவர் என்பதை அறிவுறுத்துகிறது, அப்படியெனில் `நித்திய ஜீவன் என்பது தேவனுடைய ஜீவனாக இருக்க வேண்டும். `தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனையுடையவன் ஜீவனையுடையவன்’ (1 யோவான் 5:11) தேவனுடைய புத்திரர்கள் மாத்திரம் தொடக்கமும் முடிவுமில்லாததும், நித்தியமுமாயிருக்கிற `நித்திய ஜீவனைப்’ பெறுவர். அது தேவனுடைய ஆவியும் அவருடைய ஜீவனுமாயிருந்து, நமக்குள் இப்பொழுதே வாசம் செய்கிறது. பரிசுத்தவான் பரலோகத்தில் சந்தோஷமாயிருக்கும் காலத்தில், பாவி நரகத்தில் கஷ்டப்படுகிறான் என்றால், நாம் ஏற்கெனவே பெற்றிருக்கும் ஜீவனைப்போல் அந்தப் பாவியும் பெற்றிருக்க வேண்டும். `நித்திய ஜீவன்’ பரலோகத்தையும் `நித்திய ஆக்கினை’ நரகத்தையும் குறிக்கின்றன என்று வேத சாஸ்திரம் படித்தவர்கள் (THEOLOGIANS) எண்ணுகின்றனர். அவர்கள் கருதுவதுபோல் இவையிரண்டும் ஸ்தலங்களல்ல. நித்திய ஜீவன் என்பது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, அதை எவ்வாறு ஒரு ஸ்தலமாகக் கருதமுடியும் என்று வியப்படைகிறேன். ஒரே ஒரு நித்திய ஜீவனுண்டு. அது தேவனுடைய ஜீவன் நாம் தேவனைப் பெற்றிருந்தால், அவர்மூலமாய், நித்திய ஜீவன் நமக்குண்டு. `நித்தியம் என்பது தேவனுடைய காலவரையைக் (DURATION) குறிக்கும். வேறெதற்கும் அதை உபயோகப்படுத்த முடியாது. அவர் சதா காலங்களிலும் ஜீவிப்பதால், நாமும் அவரோடு ஜீவிப்போம். அக்கினிக் கடலுண்டாயிருப்பதைப் பற்றியும், அதில் தள்ளப்பட்டு நேரிடும் தண்டனையைப் பற்றியும் எனக்கு நம்பிக்கையில்லையென்று நீங்கள் எண்ணவேண்டாம். எனக்கு அவைகளில் விசுவாசமுண்டு. அது நித்தியமாயிருக்கும் என்று மாத்திரம் நான் விசுவாசிப்பதில்லை, எவ்வளவு காலம் அது நீடித்திருக்கும் என்பதை நானறியேன். ஆனால் முடிவில் அது நீக்கப்படும். பாவிகள் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் பங்கடைவார்கள் (வெளி 21:8) என்று வேதம் கூறுகிறது. `பங்கு’ (PART) என்பது `காலம்’ என அர்த்தம் பெறும். பொல்லாங்கு செய்தவர்கள் நரகத்தில் (பாதாளத்தில்) தள்ளப்பட்டு, நரகம் அக்கினிக் கடலில் தள்ளப்படும், இவர்கள் தேவனுடைய சமூகத்தினின்று பிரிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலம்வரை அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் பாடனுபவிப்பார்கள். நீதிமான்கள் தேவனால் மீட்கப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, ஜெயங்கொண்டு, தேவனுடைய மார்பில் சார்ந்திருந்து, அவரோடுகூட எப்பொழுதும் இருப்பார்கள். ஜெயங்கொள்ளுகிறவன் நித்திய ஜீவனில் பங்குகொள்ள இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனைக் கொள்ளைப் பொருளாகக் கொடுத்தார். முன்பு தூரமாயிருந்த நாம் இப்பொழுது அவருடைய இரத்தத் தினாலே சமீபமாயிருக்கிறோம். ஜெயங்கொள்ளுகிறவர்கள் ஆக்கினைத் தீர்ப்படை வதில்லை. அவர்கள் அக்கினிக் கடலில் பங்கடைவதுமில்லை, தேவன் தமக்குச் சொந்தமானவர்களில் யாரையும் இழந்துபோவதில்லை, இவர்களெல்லாரும் இயேசு கிறிஸ்துவோடு எப்பொழுதும் இருப்பார்கள். எனக்கு `ஜோசப்’ (JOSEPH) என்னும் மகனுண்டு. அவன் என்னுடைய ஒரு பாகமாயிருக்கிறான் என்று இரத்தப் பரிசோதனை நிரூபிக்கும். நாமும் தேவனுடைய பிள்ளைகளென்பதை இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சாட்சி கொடுக்கும். கொலராடோ பட்டினத்தில் (COLORADO) மாடுகள் அரசாங்க நிலங்களில் மேய்வதற்கு அனுமதிக்கப்படுமுன்பு, அவைகள் நல்ல ஜாதி மாடுகள் (PUREBREAD) என்னும் நற்சாட்சிப் பத்திரம் பெற வேண்டும். இப்பத்திரம் அவைகளின் காதுகளில் தொங்கவிடப்படும். நிலத்தின் மேற்பார்வையாளன் (RANGER) தொங்கும் பத்திரங்களைக் கண்டவுடனே, அம்மாடுகளுக்குள் நல்ல இரத்தம் பாய்கிறது என்று அறிந்துகொள்வான். அவ்வாறே நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டோம் என்பதைத் தேவனறிவார். கர்த்தர் தாழநோக்கி, `பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும். அது என்னைவிட்டுப் பிரிந்திருக்கிறது, அது என்னிடத்தில் சேரமுடியாது’ என்று கூறினார். எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களானார்கள் என்பதை நாமறிவோம். பாவத்தின் காரணமாய், நாம் தேவனுடைய சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டோம். தேவன் தம்முடைய மிகுந்த அன்பினால், பாவியின் ஜீவனுக்குப் பதிலாக மிருகத்தின் ஜீவனை ஏற்று, பாவத்திற்குப் பரிகாரத்தைத் தந்தார். பழைய ஏற்பாட்டின் காலத்தில், பாவஞ்செய்தவன் ஒரு ஆட்டுக்குட்டியை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவான். அவன் தன்னுடைய கையை ஆட்டுக் குட்டியின்மேல் வைக்கும்போது, ஆசாரியன் அதைக் கொல்லுவான். இரத்தம் நிலத்தில் சிந்தப்படுவதை அவன் கண்டு, ஆட்டுக்குட்டியின் பரிதாபக் குரலையும் அவன் கேட்டு, அதன் உடம்பு இரத்தஞ் சிந்துதலினால் விரைப்பதையும் உணருகிறான். பலிபீடத்தின்மேல் தெளிக்கப்பட்ட இரத்தத்தின் புகை தேவனுடைய சந்நிதிக்குச் செல்வதைக் கண்டு, ஆட்டுக்குட்டியின் ஜீவன் அவனுடைய ஜீவனுக்கு ஈடாகக் கொடுக்கப்பட்டதையறிகிறான், மிருகத்தின் ஜீவன் பாவஞ்செய்தவனின் மேல் திரும்பவந்து அவனைச் சுத்திகரிக்க முடியாது. ஆகையால் பாவத்தின் வாஞ்சை அவனைவிட்டுப் போவதில்லை. ஒவ்வொரு வருஷமும் பாவத்தின் பரிகாரத்திற்கென இப்பலியை அவன் செலுத்த வேண்டிய அவசியமாயிற்று. புதிய ஏற்பாட்டின் காலத்தில் தேவனுடைய குமாரன் இரத்தத்தைச் சிந்தி, தம்முடைய ஜீவனை அநேகருக்குக் கொள்ளை பொருளாகக் கொடுத்தார். விசுவாசம் கொண்டு, இந்த ஆட்டுக்குட்டியின் மேல் நம்முடைய கைகளை வைத்து, அவருடைய காயங்களையும், பிளந்த முதுகையும், முள்ளால் குத்தப்பட்ட நெற்றியையும் கண்டு, அவர் படும் கஸ்தியையும், `என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்னும்கதறுதலில் நிறைந்த வேதனையையும் நாம் உணருகிறோம். அப்பொழுது, இரத்த அணுக்கள் உடைந்ததனால் வெளியேறிய அவருடைய ஜீவன் பாவத்திற்கென்று மனஸ்தாபப்பட்டவனின் மேல் திரும்பவும் வருகிறது. பாவத்தின் வாஞ்சையற்றவனாய், மாம்சத்தின் இச்சைகளின்மேல் வெறுப்பு கொண்டவனாய் அவன் திரும்பிச் செல்லுகிறான். நமக்குள்ள ஜீவன், நம்முடைய தகப்பனிடத்திலிருந்து வந்து ஒரு சிறு அணு (CELL) வின் மூலம் உண்டாகிறது. பெண்களிடம் முட்டைகள் (EGGS) தோன்றுகின்றன, அணுவும் முட்டையும் ஒன்று சேருவதனால் குழந்தை உண்டாகிறது, குழந்தையின் இரத்தம் மனிதனிடத்திலிருந்து வருகிறது. நம்முடைய இரட்சிப்புக்கென்று மேற்கூறியது சம்பவித்தது. பரிசுத்த ஆவியானவர் மரியாளின்மேல் வந்தபோது, அவள் ஒரு குமாரனைப் பெற்று அதற்கு இயேசு என்று பெயரிட்டாள். அந்த மகத்தான சிருஷ்டிகர்த்தர் தாழ வந்து நம்முடைய பாவத்திற்கென்று பலியிடப்பட்டார். அவருடைய இரத்தம் தேவனுடைய இரத்தமாகும். தேவனுடைய இரத்தம் சிந்தப்பட்டு, அவருடைய ஆவி அவரை விட்டுப் பிரிந்தது. பின்னர் இதே ஜீவன் (ஆவி) மனந்திரும்பின பாவியின்மேலிறங்கி, அவனுக்குள் வாசம் செய்து, பாவத்தினின்று அவனை விடுதலையாக்கிற்று, அவன் வருடாவருடம் பலிசெலுத்தவேண்டிய அவசியமில்லை. ஒரே பலியின் மூலம், அவன் எப்பொழுதும் பாவத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, கிறிஸ்துவின், ஜீவனைப் பெற்று, பாவம், உலகம், மாம்சம் இவைகளை மேற்கொள்ளுகிறான். தேவன் நமக்குக் கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பைக் கொடுத்தார். பாவத்தால் நிறைந்த உலகத்தை அவர் நோக்கி, `நான் உனக்கு அடையாளத்தைக் கொடுக்கிறேன். ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அதுதான் உங்கள் அடையாளம்; அது காலாகாலங்களிலும் அடையாள மாயிருக்கும். அவளுக்குப் பிறக்கும் குழந்தை இம்மானுவேல் என்று பெயரிடப்படும். அதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம்’ என்று கூறுகிறார். தேவன் பரிசுத்த ஆவியின் மூலம் ஒரு இரத்த அணுவாக (BLOOD CELL) வந்து, தன்னுடைய மரணத்திற்கென்று கன்னிகையின் வயிற்றில் ஒரு கூடாரத்தை உண்டாக்கினார். அவர் ஸ்திரீயின் வித்தாக வந்து, நாம் இரட்சிக்கப் படுவதற்கென நொறுக்கப்பட்டார். பரிசுத்த ஆவியானவர் மரியாளை நிழலிட்ட போது, அவர் அவளுடைய கர்ப்பத்தில் ஒரு அணுவை (CELL) சிருஷ்டித்து, அது விருத்தியாகி நம்முடைய கர்த்தரின் சரீரமாயிற்று. அந்த அணு சிருஷ்டிக்கப்பட்டது. சிருஷ்டிக்கப்பட்ட தேவனின் தொடக்கம் இதுவே. பரிசுத்த சரீரம் பரிசுத்த இரத்தத்தினால் நிறைந்தது. அந்த கூடாரம் உலகத்தில் தோன்றியது. அவர் மனிதனாக வளர்ந்தார். யோவானால் அந்தப் பலி யோர்தான் நதியில் கழுவப்பட்டது. தேவனுக்கேற்ற பலியாய் அவர் தண்ணீரைவிட்டு வெளிவந்தபோது, தேவன் அவருக்குள் வாசம் செய்து, அவருடைய ஆவியினால் அவரை அளவின்றி நிரப்பினார். அவர் இரத்தம் சிந்தினபோது, தேவனின் குற்றமற்ற ஜீவன் வெளியேறி, கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு பாவியின் மேல் திரும்ப வந்தது. இது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது! யெகோவாதேவன் சாணத்தின் மேலும் வைக்கோலின் மேலும் அழுகிற குழந்தையாகப் பிறக்கிறார்; யெகோவா பையனாக வளர்ந்து விளையாடுகிறார்; யெகோவா தச்சு வேலை செய்கிறார்; யெகோவா மீன் பிடிப்பவர்களின் காலைக் கழுவுகிறார். இதுதான் காலாகாலங்களுக்குரிய அடையாளமேயன்றி ஆசாரியத்துவமும் (PRIESTHOOD, ஐசுவரியமும், ஆதிக்கமும் அடையாளங்களல்ல. யெகோவா முட்களால் கிழிக்கப்பட்டு, இரத்தம் நெற்றியில் வழிந்து, நியாயஸ்தலத்தில் நிற்கிறார். அவரை முகத்தில் துப்பிப் பரிகசிக்கின்றனர். யெகோவா நிந்திக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, நிர்வாணமாய் சிலுவையில் தொங்குகிறார்; அவர் சிலுவையிலிருந்து இறங்கி வரவேண்டுமென்று பரியாசக்காரர் கூக்குரலிடுகின்றனர். யெகோவா மரிக்கும் தருவாயிலிருக் கிறார். யெகோவா ஜெபித்தும் ஒன்றும் நேரவில்லை, கடைசியில் யெகோவா மரிக்கிறார். இது இப்போதுள்ள எல்லா மனிதருக்கும் அடையாளம். அவர் மரணத்திற்குப் பிறகு, பூமியை அந்தகாரம் சூழ்ந்தது. அவரைக் கல்லறையில் வைத்தார்கள். இரவும் பகலும் மூன்று நாட்கள் அவர் பாதாளத்திலிருந்தார். பின்பு ஒரு பூகம்பம் அந்தகாரத்தைப் பிளந்தது. யெகோவா கல்லறையைவிட்டு வெளியே வந்தார். யெகோவா உன்னதத்திற்கு ஏறினார். யெகோவா தம்முடைய சபையின் மத்தியில் தங்குவதற்குத் திரும்பவும் வந்தார், யெகோவா திரும்பவும் வந்து, சபையின் மத்தியில் உலாவி சபையின் மக்களுக்கு வல்லமையை அளித்தார். யெகோவா மக்களுக்குள் வாசம் பண்ண இரண்டாம் முறை வந்தார். யெகோவா மறுபடியும் பிணியாளிகளைச் சொஸ்தப்படுத்தி, மரித்தோரை உயிர்ப்பித்து, தம்முடைய ஆவியினால் அவரை வெளிப்படுத்தினார், யெகோவா, அன்னிய பாஷை பேசி, அதன் அர்த்தத்தை விவரிக்கிறவராய் திரும்பவும் வந்தார். யெகோவா மறுபடியும் வந்து, வேசிகளையும், குடிகாரர்களையும் பாவத்தினின்று விடுதலையாக்குகிறார், ஆம், யெகோவா மாம்சத்தில் (இயேசுவாக) வெளிப்பட்டு, இப்பொழுது மாம்சத்தின் மூலமாய் (பரிசுத்த ஆவியாக) வெளிப்படுகிறார். இயேசு வந்து, தம்முடைய இரத்தத்தைச் சிந்தி, பாவத்திற்கு அடிமையானவர்களை விடுதலையாக்கினார். அவர் வந்து, இழந்துபோன ஆடுகளை மீட்டுக்கொண்டார். அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்தார்; அவர்கள் ஒருக்காலும் அழிவதில்லை. அவர்களில் ஒருவரையும் அவர் இழந்து போகாமல், கடைசி நாட்களில் அவர்களை எழுப்புவார். இரண்டாம் மரணம் அவர்களைச் சேதப்படுத்தாது. அவர்கள் ஆட்டுக் குட்டிக்குச் சொந்தமானவர்களாய், எங்கு சென்றாலும் அவரைப் பின்தொடருவார்கள். ஒவ்வொரு காலத்திலும் பரிசுத்த ஆவியானவர் வெளி 2:11 `ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன். ஒவ்வொரு சபையின் காலத்திலும் இது கூறப்படுகிறது. ஆவியானவர் சபைகளுக்குக் கூறுவதை எல்லா மனிதரும் கேட்டு அறிந்துகொள்ளவே முடியாது. `அப்படியிருந்தும் தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம். இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி தேவன் தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண்காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக் கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரிய வைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிடத் திலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக் கிறோம். ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படு கிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது’. (1 கொரி 2:6-16) `அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது, காதாரக் கேட்டும் உணராதிருப்பீர்கள். கண்ணாரக் கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும்,இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாகக் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும் அவைகள் பாக்கியமுள்ளவைகள்’. (மத் 13:13-16) `இயேசு அவர்களை நோக்கி; தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை. அவரே என்னை அனுப்பினார்.என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என்உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும் போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்’. (யோவான் 8:42-44). தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவி கொடுக்கும் திறமையை தேவனே கொடுத்தாலன்றி, எந்த மனிதனும் அவனாகவே அவைகளுக்குச் செவி கொடுக்க முடியாது என்பதை மேற்கூறிய வசனங்களின் வாயிலாக அறியலாம். `இயேசு அவனை நோக்கி; யோனாவின் குமாரனாகிய சீமோனே நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்`. (மத் 16.17). இவ்வசனங்களை ஒன்று சேர்ந்து சிந்தித்தால். ஒவ்வொரு காலத்திலுண்டாகும் ஒரு பிரத்யேகமான கூட்டம் மாத்திரம் அக்காலத்துக்குரிய தேவனுடைய வெளிப்படுத்துதலைப் பெற்று, ஆவியானவர் கூறுவதைக் கேட்டறிந்து கொள்ள முடியும் என்பது புலனாகிறது. தேவனுக்குச் செவி கொடுக்காதவர்கள் தேவனாலுண்டானவர்களல்ல (யோவான் 8:42-44). அப்படியெனில், அவருக்குச் செவி கொடுக்கிறவர்கள் அவருடையவர்களாயிருக்கின்றனர். இவர்கள் தேவனால் பிறந்து, தேவனுடைய ஆவியைப் பெற்று, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்கள். 1 கொரி 2:6-16, இவர்களைத் தான் விவரிக்கிறது. `எல்லாரும் தேவனால் போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதப்பட்டிருக்கிறதே’ (யோவான் 6:45) என்று இயேசு கூறுகிறார். ஆனால் ஏசாயா தீர்க்கதரிசி, `உன்பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்’ (ஏசா 54:13) என்று உரைக்கிறான். `எல்லாரும் என்ற பதம் தேவனுடைய பிள்ளைகளைக் குறிக்கிறது. அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அவரால் போதிக்கப்படுவார்கள். அந்நிய பாஷை பேசுதல் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் அடையாளமல்ல என்பதை இதன் மூலம் நாமறியலாம். ஆவியானவர் எந்த ஒரு சபையின் காலத்திலும், `ஆவியானவர் சொல்லுகிறதை நாவுள்ளவன் சொல்லக்கடவன்’ என்று கூறினதேயில்லை. ஆவியானவர் சொல்லுகிறதைக் கேட்பதே ஆவியைப் பெற்றதன் அடையாளம். சத்திய ஆவி வரும்போது சத்தியத்தைப் போதிப்பாரென்று இயேசு கூறினார். `அவர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்’. (யோவான் 14:26). அவர் சொன்னது நிறைவேறியது, சுவிசேஷங்கள் பரிசுத்த ஆவியின் உதவியைக் கொண்டு எழுதப்பட்டன, இயேசு கூறின அதே வார்த்தைகளை ஆவியானவர் நினைப்பூட்டினார். ஆகையால்தான் சுவிசேஷங்கள் பிழையின்றி எழுதப் பட்டன. அது மாத்திரமின்றி, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு இன்னும் அதிகமான சத்தியங்களைப் போதித்தார். பவுலுக்கு அநேக சத்தியங்கள் அவரால் வெளிப்படுத்தப்பட்டன. `மேலும் சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷனுடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றது மில்லை, இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்’, (கலா 1:11-12). ஆம் அவன், பரிசுத்த ஆவியினால் போதிக்கப்பட்டான். இயேசு இவ்வுலகத்திலிருந்த போது, நிக்கோதேமு அவரைக் காணவந்தான். அவன் `ரபீ நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக் கிறோம்’ என்றுரைத்தான். அவர் நிக்கோதேமுக்குப் பதிலுரைத் ததை இவ்வாறு விவரணம் செய்யலாம். நான் ஒரு போதகன் அல்ல, `நான் பாவத்திற்கென்று பலிசெலுத்தப்படும் ஆட்டுக்குட்டி, நான் கொடுத்த ஜீவனின்மூலம் ஒருவன் மறுபிறப்படைவான். ஆனால் இனிவருபவர் போதகராயிருப்பார். அவர்தான் பரிசுத்த ஆவி’. இவ்வுலகத்தில் இயேசு ஆட்டுக் குட்டியாகவும் தீர்க்கதரிசி யாகவுமிருந்தார். அவருடைய ஆவி திரும்பவும் சபையில் வந்த போது அவர் போதகராகச் சகல சத்தியத்திலும் அதை வழி நடத்தினார். ஒவ்வொரு காலத்திலும் `ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்’ என்னும் சத்தியம் அளிக்கப்படுகிறது. ஆனால், பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றவனே அக்காலத்திற்குரிய வெளிப் பாட்டை அறிய முடியும். அந்நிய பாஷையில் பேசுவது மாத்திரமே ஒருவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றதன் அடையாளம் என்று பெந்தேகோஸ்தேகாரர்கள் கூறுவதன் மூலம் தேவனுடைய மனிதர்களான நாக்ஸ் (KNOX), மூடி (MOODY), டெய்லர் (TAYLOR), கோபோர்த் (GOFORTH) என்பவர்கள் பரிசுத்த ஆவி பெற்றதை அவர்கள் மறுதலிக்கின்றனர்; அல்லது அவர்கள் அந்தரங்கமாக அந்நியப் பாஷை பேசியிருக்க வேண்டுமென ஊகிக்கின்றனர். அது உண்மையல்ல. அந்நிய பாஷை ஆவியின் நிறைவின் அடையாளமல்ல. 1 கொரி. 12ம் அதிகாரம் கூறும் ஆவியின் ஒன்பது வரங்களில் இது ஒன்றாகும். அந்நிய பாஷையைப் பேசிக்கொண்டே பரிசுத்த ஆவியைப் பெற்றதாகவோ அல்லது அந்நிய பாஷையைப் பேசுவதன் மூலம் பரிசுத்த ஆவியைப் பெற்றதாகவோ வேதத்தில் சான்றில்லை. `அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்ட பிறகு, வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்’ என்றும், பிறகு தீர்க்கதரிசனம் உரைத்தார்களென்றும் வேதம் தெளிவாகக் கூறுகிறது. அந்நிய பாஷை பேசும் அனைவரும், உண்மையான ஆவிக்குரிய அந்நிய பாஷை பேசுகின்றனர் என்ற எண்ணம் மக்களிடையே பரவியிருக்கிறது. மந்திரவாதிகள் மண்டை ஒட்டிலிருக்கும் இரத்தத்தைக் குடித்து, அந்நிய பாஷை பேசி, அதன் அர்த்தத்தை விவரித்து, தீர்க்கதரிசனம் உரைப்பதை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் அந்நிய பாஷையிலும் எழுதுகின்றனர். அந்நிய பாஷை பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளமாயிருப்பின், ஒவ்வொரு அந்நிய பாஷையும் தேவனால் உண்டாயிருக்க வேண்டும். ஆனால், தவறான அந்நிய பாஷை சாத்தானிடத் திடமிருந்தும், உண்மையான அந்நிய பாஷையை தேவனிடத்திலிருந்தும் பெறுகிறோமென்று மக்கள் ஒப்புக் கொள்கின்றனர். அப்படியெனில், எது உண்மையான அந்நிய பாஷை என்பதை நாம் எங்ஙனம் அறிவோம்? பாஷையின் அர்த்தத்தை யார் புரிந்து கொள்கின்றனர்? தவறான அந்நிய பாஷையைப் கண்டுபிடிக்க யாரிடத்தில் பகுத்தறிவின் வரமுண்டு? பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறும்போது, அந்நிய பாஷை பேசவேண்டும் என்று வேதம் கூறவில்லை என்பதை பெந்தேகோஸ்தே வேத பண்டிதர்களும் ஒப்புக் கொள்கின்றனர். அப்போஸ்தலர் காலத்தில், மக்கள் ஐந்து முறை பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட போது, மூன்று முறை அந்நிய பாஷை பேசினர் என்று அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தில் குறித்திருக்கிறபடியால், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு அந்நிய பாஷை அடையாளமாயிருக்கிறது என்று அவர்கள் ஊகிக்கின்றனர். இரண்டுவிதமான அந்நிய பாஷைகளுண் டென்றும், அவைகளிலொன்று பரிசுத்த ஆவியைப் பெறும்போது பேசப்படு கிறதென்றும், மற்றது, விசுவாசிக்கும் போது அந்நிய பாஷையின் வரம் பெற்று அடிக்கடி பேசப்படுமென்றும், வேதத்தின் ஆதாரமின்றி இவர்கள் கூறுகின்றனர். அல்லாமலும், ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெற்றதின் அடையாளமாக ஒரு முறையாவது அந்நிய பாஷையில் பேசவேண்டுமென்றும், அதற்குப் பிறகு அவன் அவ்வாறு செய்ய அவசியமில்லையென்றும் எண்ணுகின்றனர், இதற்கும் வேதத்தில் சான்றில்லை. வேதத்தில் காணப்படாத எவையும் தேவன் கூறவில்லை. தேவனுடைய வார்த்தையோடு எதையாகிலும் கூட்டும் மனுஷனுக்கு ஐயோ! அந்நிய பாஷையைக் குறித்து வேதம் உரைக்கிறதை அவர்கள் முழுவதும் அசட்டை செய்கிறார்கள். மனுஷ பாஷையொன்றும், தூதர் பாஷையொன்றும் உண்டென்று 1 கொரி. 13ம் அதிகாரம் கூறுகிறது. மனுஷ பாஷை எல்லாரும் புரிந்துகொள்ளும் பாஷையாகும். தூதர் பாஷையை யாரும் புரிந்து கொள்ள முடியாது. தூதர் பாஷையைப் பேசி பரிசுத்த ஆவியைப் பெறுவதாக நவீன பெந்தேகோஸ்தேகாரர் கூறுகின்றனர், பரிசுத்த ஆவியைப் பெற்ற மக்கள், அவிசுவாசிகளும் புரிந்துகொள்ளும் பாஷையில் பேசினரென்று அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தில் (2ம் அதிகாரம்) எழுதப்பட்டிருக்கிறது. மக்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற பிறகு, அவரே போதகராக சகல சத்தியத்தையும் போதிப்பார் என்று தேவன் கூறுகிறார். இவர் உள்ளே வாசம் செய்யும் போதகர்; வெளிப்புறமாகக் காணும் போதகரல்ல. அவர் உள்ளே வாசம் செய்யாவிட்டால், சத்தியத்தை நாம் தினந்தோறும் கேட்டாலும் அதன் வெளிப்பாடுகளைப் பெறாததனால் நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பவுலின் காலத்திலும், சத்தியத்தை ஏற்றுக்கொள்வதே ஆவியானவர் உள்ளே வாசம் செய்ததன் அடையாளமாயிருந்தது. ஆவியைப் பெறாதவர்கள், மாம்ச சிந்தையுள்ளவர்களாக சத்தியத்தைக் கேட்டு, அதற்குத் தவறான அர்த்தம் கொடுத்து, பாவத்தில் பிரவேசித்தனர். பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இறங்கினபோதும், கொர்நேலியு வீட்டில் புறஜாதிகள் பரிசுத்த ஆவியைப் பெற்றபோதும், மக்கள் அந்நிய பாஷையில் பேசினதால், அதுவே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் அடையாளமென்று நினைக்க வழியுண்டு. ஆனால் இவ்விரு சமயங்களிலும், அவர்கள் பேசின அந்நிய பாஷைகளைக் கூடியிருந்த மக்கள் புரிந்து கொண்டனர். இது நவீன பெந்தேகோஸ்தே கூட்டங்களில் காணப்படும் பாபேலின் குழப்பத்தினின்று வித்தியாசப்பட்டது. அந்நிய பாஷைகளல்லாது, மற்றது ஆவிக்குரிய வரங்களைப் பெற்ற மக்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறவில்லையா? ஆவிக்குரிய வரங்கள் ஒன்பதிலும், அந்நிய பாஷை பேசுவது மிகவும் குறைந்த வரமாகும். இதைக் காட்டிலும் மேலான வரங்களைப் பெற்றவர்களை நாம் நன்றாக அறிந்திருப்பதால், பெந்தேகோஸ்தேகாரரின் போதனையை நாம் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். வேதம் கூறாத எதையும் கூறுவது தவறாகும். ஒவ்வொரு காலத்திலிருக்கும் உண்மையான சபைக்கு அந்தக் காலத்துக்குரிய சத்தியத்தைப் போதிப்பதே பரிசுத்த ஆவியானவரின் செயலாகும். சத்தியம் போதிக்கப்பட வேண்டுமாயின் பரிசுத்த ஆவியானவர் மனிதனுக்குள் வாசம் செய்ய வேண்டும். ஏழு சபையின் காலங்களில் நேர்ந்த சம்பவங்கள் இதை வெளிப்படுத்துகின்றன. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து வேதம் என்ன போதிக்கிறது என்பதை விவரிக்க விரும்புகிறேன், இது என்னுடைய சொந்த ஆலோசனையல்ல; தேவன் இதை வெளிப்படுத்துகிறார். நான் நடத்தும் கூட்டங்களில், செய்திக்குப் பிறகு, முன்வந்து பரிசுத்த ஆவியைப் பெற மக்களை நான் அழைப்பதுண்டு. முன்வந்தவர்கள் மறுபடியும் பிறந்தவர்களானதால், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுவதற்காகவே அவர்களை அழைக்கிறேன் என்று என்னுடைய பெந்தேகோஸ்தே நண்பர்கள் எண்ணி, அந்நிய பாஷை பேச அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர், இதன் காரணமாக மக்களிடையில் குழப்பம் நேரிடுகிறது. பாவமன்னிப்படையாதவன் பரிசுத்த ஆவியால் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட நான் அழைக்கிறேன். இதுதான் மறுபிறப்பின் அர்த்தம். பெந்தேகோஸ்தே காலத்தில் சபையுண்டான போது, இதுவே நேர்ந்தது, ஆவியினால் பிறப்பதே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறுவதாகும். இவையிரண்டும் ஒன்றே. பாப்டிஸ்டுகள் விசுவாசிக்கும் போதே பரிசுத்த ஆவியைப் பெறுவதாகக் கூறுவது சரியல்ல. விசுவாசித்த பிறகு ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெறுகிறான். `நீங்கள் விசுவாசிகளானபோது (ஆங்கிலத்தில் SINCE YE BELIEVED), பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள், பரிசுத்த ஆவி உண்டு என்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்; அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான், அதற்கு அவர்கள். யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல், யோவான் தனக்குப் பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான், அதைக்கேட்ட போது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். (அப் 19: 2.6). நாம் விசுவாசித்த பிறகு தான் பரிசுத்த ஆவியைப் பெறுகிறோம். பவுல் அப்போஸ்தலன் இதைக் குறித்து எபேசு சபைக்கு எழுதுகிறான். `நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு (ஆங்கிலத்தில் AFTER THAT YE HEARD THE WORD OF TRUTH) விசுவாசிகளான போது (ஆங்கிலத்தில் AFTER THAT YE BELIEVED) வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்’. (எபே 1.13), கிறிஸ்துவின் ஆவியைப் பெறும்போது, நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம், அவருடைய ஆவியைப் பெறும்போது, நாம் மறுபிறப்பு அடைகிறோம். அவருடைய ஆவியைப் பெற்று, நாம் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்படுகிறோம். விசுவாசித்த பிறகு ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெறுகிறான். இது எக்காலத்திலும் மாறுவதில்லை, பரிசுத்த ஆவியைப் பெறும் முறையைப் பெந்தேகோஸ்தே நாளில் பேதுரு அறிவித்தான். `நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக் கிறது’ (அப் 2.38). யோவேல் தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டபடியே, தேவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியை மாம்சமான யாவர் மேலும் ஊற்றினார். இதற்கு முன்பாக பரிசுத்த ஆவி இவ்விதம் ஊற்றப்படவில்லை, அன்று முதற்கொண்டு, மனந்திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும் ஒவ்வொருவனையும் பரிசுத்த ஆவியினால் நிரப்ப தேவன் கடமைப்பட்டிருக்கிறார். `நீங்கள் மறுபடியும் பிறந்து, பிறகு பரிசுத்த ஆவியினால் நிறையப்படவேண்டும்’ என்று பேதுருவோ, அல்லது மற்ற அப்போஸ்தலர்களோ கூறவில்லை. அடுத்த முறை பரிசுத்த ஆவி விழுந்தபோது சம்பவித்ததைக் கவனியுங்கள். `அப்பொழுது பிலிப் பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டினத்திற் குப்போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித் தான். பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப் பட்டுக் கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள். அநேகரிலிருந்த அசுத்த ஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களைவிட்டுப் புறப்பட்டது. அநேகத் திமிர்வாதக்காரரும் சம்பாணிகளும் குணமாக்கப் பட்டார்கள், அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று, சீமோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக் காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்னு சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களை பிரமிக்கப்பண்ணிக் கொண்டிருந்தான். தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி,சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவி கொடுத்து வந்தார்கள். அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களை பிரமிக்கப் பண்ணினதினால் அவனை மதித்து வந்தார்கள். தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக் குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரிகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப் பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும், பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான். சமாரியர் வசனத்தை ஏற்றுக் கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். இவர்கள் வந்தபோது அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருக் கிறவர்களாகக் கண்டு அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, அவர்கள் மேல் கைகளை வைத்தார்கள். அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்’ (அப் 8.5-17) 12-ம் வசனத்தின்படி, அவர்கள் வசனத்தை விசுவாசித்தார்கள். அதன் பின்பு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்றாலும், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை என்று 16-ம் வசனம் கூறுகிறது. விசுவாசித்து, சரியான முறையில் ஞானஸ்நானம் பெற்ற பிறகு தான் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். பரிசுத்த ஆவியைப் பெற பேதுரு கூறின முறையோடு இது ஒத்திருக்கிறது. `மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப் பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று’ (கலா 3:13-14) என்று பவுல் கூறுகிறான். `ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம்’ மறுபிறப்பைக் குறிக்கிறதென்றும், `ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தம்’ பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறிக்கிறதென்றும், இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டவை என்றும் கூறுதல் தவறாகும். இதைப் பின்வருமாறு அர்த்தங்கொள்ள வேண்டும். இயேசு சிலுவையில் மரித்து, அவருடைய மரணம் உயிர்த்தெழுதல் இவைகளின் மூலமாய், ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் புறஜாதிகளின் மேல் வந்தது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் புறஜாதிகளுக்குக் கிடைக்கும்படி இப்படியாயிற்று. `நீங்கள் மறுபடியும் பிறந்து, பிறகு பரிசுத்த ஆவியைப் பெறுங்கள்’ என்று பவுல் கூறியதாக வேதத்தில் எங்கும் காணப்படவில்லை. சில வசனங்களுக்குத் தவறான அர்த்தங் கொடுத்து, அவ்வாறு வேதத்திலிருப்பதாகச் சிலர் ஊகித்துள்ளனர். ஆனால் வேதம் ஒருக்காலும் அவ்விதம் கூறவில்லை. இயேசு கிறிஸ்துவும் இப்படி எங்கும் சொல்லவில்லை. கீழ்க்கண்ட வசனங்களை விவேகத்தோடு படியுங்கள். `பண்டிகையின் கடைசி நாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு; ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை’ (யோவான் 7:37-39) ஒவ்வாரு விசுவாசியும் தன் தாகத்தைக் தீர்க்க விசுவாசத்தோடு இயேசு வண்டை வரும்போது, ஜீவத் தண்ணீருள்ள நதிகள் அவனுடைய உள்ளத்திலிருந்து பாயுமென்று இவ்வசனம் திட்டவட்டமாய் கூறுகிறது. இதுவே பெந்தெகோஸ்தேயின் அனுபவமாயிருந்தது. இதை மனதில் வைத்துக் கொண்டு பின்வரும் வசனங்களைப் படியுங்கள். `நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குதா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊருகிற நீரூற்றாயிருக்கும் என்றார்’. (யோவான் 4:10-14). ஜீவத் தண்ணீரைக் குறித்து இவ்வசனங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இது `நதிகள்’ என்று அழைக்கப்படாமல் `நீரூற்று’ என்று அழைக்கப்படுகிறது. `நீரூற்று’ பரிசுத்த ஆவியினால் நித்ய ஜீவனைப் பெறுவதையும். `நதிகள்’ (அதிக சக்தி வாய்ந்ததால்). பரிசுத்த ஆவியினால் வல்லமையைப் பெறுவதையும் குறிக்கின்றன என்னும் தவறான அபிப்பிராயமுண்டு. இவையிரண்டும் ஒரே அனுபவம்தான். பரிசுத்த ஆவி வல்லமையையும் ஜீவனையும் கொடுக்கிறது. அது பெந்தேகோஸ்தே நாளில் இறங்கிவந்தது. நாம் வசனத்தின் உண்மையான அர்த்தத்தில் சாராமல், மனித அறிவின் விளக்கவுரையில் நம்பிக்கை கொண்டால், தவறு நிச்சயமாக ஏற்படும். நமக்கு வசனம் மாத்திரம் ஆதாரமாயிருக்க வேண்டும். நன்றாக கவனியுங்கள். பேதுரு, `நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப் புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்’ (அப் 2.38) என்றான். பவுல், `நீங்கள் விசுவாசிகளானபோது (பிறகு) பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா’ (அப் 19.2) என்று கேட்டான். மக்கள் பாவத்தினின்று மனந்திரும்பி, தண்ணீரில் ஞானஸ்நானம் பெறுகின்றனர். அவர்கள் தொடர்ந்து பரிசுத்த ஆவியைப் பெறுவதில்லை. பரிசுத்த ஆவியை முடிவில் பெற நாம் விசுவாசிக்கவேண்டும். அதைப் பெறுவதற்கு, இயேசுவை விசுவாசிப்பதும் முதல் படியாகும். ஆனால் மக்கள் அதோடு நின்றுவிடுகின்றனர்; அல்லது ஞானஸ்நானத்தோடு நின்று விடுகின்றனர்; அல்லது விசுவாசித்து அதோடு நின்று விடுகின்றனர். விசுவாசிக்கும் போது எவரும் பரிசுத்த ஆவி பெறுவதில்லை. விசுவாசித்த பிறகு மாத்திரமே பரிசுத்த ஆவியைப் பெறமுடியும். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியைப் பெற முடியாது. விசுவாசத்தில் தொடர்ந்து ஜீவித்து அதைப் பெறவேண்டும். பெந்தேகோஸ்தே அனுபவத்தை அநேகர் அடையாததனால், வல்லமையற்றவர்களாக விளங்குகின் றனர். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்தைவிட்டு வெளிவந்தும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரிக்காதது போன்று இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெறுவதனாலுண்டாகும் இளைப்பாறுதலில் பிரவேசிக் கவில்லை. சுமார் இருபது லட்சம் இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு வெளி வந்தனர். எல்லாரும் ஒன்றாகப் பிரயாணம் செய்து, தேவனுடைய அதிசயங்களைக் கண்டு, ஒரே மன்னாவைப் புசித்து, பிளந்த கன்மலையிலிருந்து தண்ணீரைப் பகர்ந்து பகலில் மேகஸ்தம்பத்தையும் இரவில் அக்கினிஸ்தம்பத்தையும் பின்தொடர்ந்தனர். ஆனால் இரண்டுபேர் மாத்திரம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தையடைந்தார்கள். இவ்விரண்டுபேர் மாத்திரம் உண்மையான விசுவாசிகள். மற்றவர்கள் அவிசுவாசத்தின் காரணத்தால் அந்த தேசத்தில் பிரவேசிக்க முடியவில்லை (எபி 3.19). பிரவேசிக்காதவர் அனைவரும் அவிசுவாசிகளே. இவ்விரு சாராருக்குமிடையே உண்டாயிருந்த வித்தியாசமென்ன? விசுவாசிகள் தேவனுடைய வாக்குத்தத்தத்தில் உறுதியாய் நின்றார்கள், வேவு பார்த்துவந்த பத்துபேரின் இருதயம் காதேஸ்பர்னெயாவில் சேர்ந்தபோது, யோசுவாவும் காலேபும் தளராமல் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, `நாங்கள் அந்த தேசத்தை நிச்சயமாய் சுதந்தரித்துக்கொள்வோம்’ என்று கூறினார்கள். `நான் அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாக கொடுத்தேன்’ என்று கர்த்தர் கூறியதை அவர்கள் முற்றிலும் நம்பினார்கள். தேவனுடைய வல்லமையையும், உத்தமத்தையும், விடுதலையளிக்கும் தன்மையையும் அவர்கள் கண்டும், அவிசுவாசங் கொண்டவர்களாகி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியவில்லை. இந்த இளைப்பாறுதல் பரிசுத்த ஆவியைப் பெறுவதனாலுண்டாகும் இளைப்பாறுதலுக்கு முன்னடையாளமா யிருக்கிறது. இந்தக் காலத்திலும் வெகுசிலர் மாத்திரம் விசுவாசத்தின் பாதையில் தொடர்ந்து பரிசுத்த ஆவியைப் பெறுகின்றனர். நான் இனிக் கூறப்போவது ஒருக்கால் உங்களை உணர்ச்சி வசப்படுத்தும். என்றாலும், நான் தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும், தேவன் என்னை அனுப்பின ஜனத்திற்கும் உத்திரவாதமுள்ளவனானபடியால், நான் கூறவேண்டு மென்று அவர் சொல்வதை, பயபக்தியோடு கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். `பிதாவானவர் எனக்குக் கொடுத்த யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்’. (யோவான் 6:37, 44) `அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார், அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினா லாவது பிறவாமல், தேவனால் பிறந்தவர்கள், `(யோவான் 1:12-13). `தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவர்களுக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார். (எபே 1.4-6). மனிதர் தங்கள் மணவாட்டியைத் தெரிந்துகொள்வது போன்று, இயேசு கிறிஸ்துவும் தம்முடைய மணவாட்டியைத் தெரிந்துகொள்ளுகிறாரென்று மேற்கூறிய வசனங்களின் மூலம் தெளிவாகிறது. மணவாளன் தான் ஒரு பெண்ணை விவாகத்திற்கென்று தெரிந்துகொள்கிறான். `நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவிலை. நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்’ (யோவான் 15.16) என்று மணவாளனாகிய இயேசு கூறுகிறார். மணவாட்டி, உலகத் தோற்றத்திற்கு முன்னமே தெரிந்து கொள்ளப்பட்டாள் என்று வேதம் உரைக்கிறது. மணவாட்டியின் தெரிந்து கொள்ளுதலைத் தேவன் தீர்மானித்தார் (எபே 1.10). `தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலை நிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு.... ’ (ரோமர் 9.11) என்று பவுல் கூறுகிறான். இதை வேறு எவ்விதத்திலும் அர்த்தங்கொள்ளமுடியாது. தேவன் தம்முடைய சித்தத்தின்படி மணவாட்டியைத் தேர்ந்தெடுக்கத் தமக்குள் தீர்மானித்திருந்தார். அவர் நித்தியமாயிருப்பதனால் உலகத்தோற்றத்திற்கு முன்பு அது தீர்மானிக்கப்பட்டது. உலகங்கள் உண்டாவதற்கு முன்பு, தேவன் தேவனாக ஆவதற்கு முன்பு (தேவன் என்பதற்கு `வழிபடுவர்’ என்று அர்த்தம்; அப்பொழுது அவரை வழிபட யாருமில்லை), அவர் நித்திய ஆவியாக இருந்தபோது, மணவாட்டி அவருடைய சிந்தையிலிருந்தாள், அவருடைய சிந்தையும் நித்தியமாயிருந்தது. `தேவனுடைய சிந்தனைகள் நித்தியமா?’ என்னும் கேள்விக்கு விடையளிப்பதன் மூலம் நாம் அநேக காரியங்களையறியலாம். தேவன் தம்முடைய தன்மைகளில் மாறாதவர். இதை நாம் ஏற்கெனவே நிரூபித்துவிட்டோம். அவருடைய திறமை முடிவற்றது, (INFINITE). ஆகையால் அவர் எல்லாமறிந்தவராயிருக்க வேண்டும் (OMNISCIENT). அப்படியெனில் அவர் இப்பொழுது ஒன்றையும் முதன் முறையாக அறிவதில்லை. அவர் எந்தக் காரியத்தைக் குறித்தும் புதிய சிந்தனையுடையவரல்ல. ஏனெனில் அவருடைய சிந்தனைகள் ஆதிமுதல் அந்தம் வரை மாறாதவைகளாயிருக்கின்றன. தேவனுடைய சிந்தனைகள் நித்தியமாயிருக்கின்றன அவைகள் கற்பனை யாயிராமல் உண்மையுள்ளவைகளாயிருக்கின்றன. மனித சிந்தனைகள் வித்தியாசப்பட்டவை, மனிதன் முதலில் ஒரு படத்தை (BLUE PRINT) வரைந்து அதை அனுசரித்து அவனுடைய சிந்தனைகளை உருவாக்குகிறான். தேவனுக்கு இது அவசியமில்லை. அவருடைய சிந்தனைகள் நித்தியமாயும் அவரின் ஒரு பாகமாயும் இருக்கின்றன. ஆதாமைக் குறித்து அவருடைய சிந்தனையுண்டாயிருந் தது. ஆனால் அது முதலில் உருவாக்கப்படவில்லை. `நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்ட போது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது. என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே, அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமதுபுஸ்தகத்தில் எழுதியிருந்தது’ (சங் 139:15-16) என்று தாவீது கூறினதன் மூலம் மேற்கூறியது ஒருவாறு விளங்கும். ஆதாம் பூமியிலுள்ள மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டு, அவனுடைய ஆத்துமா தேவனால் சிருஷ்டிக்கப்பட்டபோது, அவனைக்குறித்த தேவனுடைய நித்திய சிந்தனை வெளிப்படையாயிற்று. இவ்வாறு, மோசே, ஏரேமியா, யோவான் ஸ்நானன் முதலியவர்கள் தேவனுடைய சிந்தனையில் உண்டாயிருந்து காலாகாலங்களில் வெளிப்பட்டனர். அதன் பின்பு வார்த்தையாகிய இயேசு (JESUS THE LOGOS) தோன்றினார். தேவனுடைய பிழையற்ற சிந்தனை முழுவதும் உருவாக்கப்பட்டு, அவர் வார்த்தையாகத் தோன்றினார், அவர் சதாகாலங்களிலும் வார்த்தையாகவே இருக்கிறார். அவர் உலகத்தோற்றத்திற்கு முன் கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார்’ என்று பவுல் கூறுகிறார். நாம் அவருடைய சிந்தையில் அவரோடு கூட உலகத்தோற்றத்துக்கு முன்னமே இருந்தோம் என்பது அதன் அர்த்தமாகும். அப்படியெனில் தெரிந்து கொள்ளப்பட்டவர் அனைவருக்கும் நித்தியத் தன்மையுண்டு. இயற்கை பிறப்பும், தேர்தலின் மூலம் உண்டாகின்றது என்பதனை நீங்கள் அறிய வேண்டும். ஒரு பெண்ணின் அண்டகோசத்திலிருந்து (OVERIES) கணக்கற்ற முட்டைகள் தோன்றுகின்றன. குறிப்பிட்ட காலத்தில் ஏதோ ஒரு முட்டை மாத்திரம் தாழ இறங்குகிறது, மனித இந்திரியத்திலிருந்து (SPERM), ஏதோ ஒரு அங்குரம் (GERM) அந்த முட்டையோடு எப்படியோ சேர்ந்து விடுகிறது. மற்றைய அங்குரங்கள் முட்டையோடு சேர முடியுமென்றாலும், அவ்வாறு செய்யாமல் அழிந்து போகின்றன. தேவஞானம் இப்போக்கிற்கு காரண மாயிருந்து, உண்டான குழந்தை ஆண் அல்லது பெண்ணென்றும், இன்னும் அநேக அம்சங்களையும் நிர்ணயிக்கிறது, இதை மனதில் வைத்துக்கொண்டு இளைப்பாறுதலைப் பெற்ற யோசுவாவையும், காலேபையும் குறித்துச் சிந்தியுங்கள். `உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்’ (யோவான் 6.49) என்று இயேசு தம்மைச் சூழ்ந்திருப்பவர்களை நோக்கிக் கூறினார். இந்த முற்பிதாக்கள் மாம்சப்பிரகாரம் தெரிந்து கொள்ளப்பட்டு (மற்றைய அங்குரங்களைப் போன்று) மரித்தார்கள். யோசுவாவும், காலேபும் ஆவிக்குரிய பிரகாரம் தெரிந்து கொள்ளப்பட்டு இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தனர். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் (ஆவிக்குரிய பிரகாரம்) தேவனுடைய நித்திய சிந்தனையினின்று காலாகாலங்களில் உருவாக்கப்பட்டு, வேறுவித பெயரால் அழைக்கப் படுகின்றனர். `ஆதலால் சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும் படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப் பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்கு மாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர் களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும் படிக்கு அப்படி வருகிறது’. (ரோமர் 4.16). `அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே, அதெப் படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப் படுகிறார்கள். அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது; குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே, இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக் கையில், தேவனுடைய தெரிந்து கொள்ளு தலின்படியிருக் கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிற்கும்படிக்கு, மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ் செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது’. (ரோமர் 9: 7-13). `ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத் தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக் குறித்துச் சொல்லியிருக்கிறார். அந்தச் சந்ததி கிறிஸ்துவே, (கலா 3.16), `நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்’. (கலா 3.29). தேவன் தம்முடைய வாக்குத்தத்தை ஆபிரகாமின் எல்லாச் சந்ததியாருக்கும் கொடுத்திருக்கிறார் (ரோமர் 4.16) என்று பவுல் கூறுகிறான். `நம்மெல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாம்’ என்று அவன் கூறும் போது, அவனையும், மற்றெல்லா விசுவாசிகளையும் ஆபிரகாமின் சந்ததியில் சேர்க்கிறான். பின்னர் இதற்கு விளக்கம் கூறி, `சந்ததி’ என்று ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதால் அந்தச் சந்ததி இயேசு கிறிஸ்து வென்றும், அப்படியெனில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாரெல்லாரும் வாக்குத்தத்தத் தின்படி சுதந்தரராய் இருக்கின்றனர் எனக் கூறுகிறான். இதையே நாங்களும் உரைக்கிறோம், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், அவரால் முன்குறிக்கப்பட்டு, முன்னறியப்பட்டு, அவருடைய சிந்தையிலும், நினைவு களிலும் உண்டாயிருந்தனர். இன்னும் விளக்கமாக கூற வேண்டுமெனில், கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி, நித்தியகாலமாய் தேவனுடைய சிந்தையிலிருந்து, அவள் அங்கத்தினர்கள் குறிப்பிட்ட காலங்களில் மாம்சத்தில் வெளிப்பட்டனர். மணவாட்டியென்று இவர்கள் பெண்பாலில் அழைக்கப்படுவது மாத்திரமல்ல, இயேசு கிறிஸ்துவுக்குள் முன் குறிக்கப்பட்டு, நித்திய காலமாய் அவரோடுகூட இருந்து, அநேக அங்கத்தினர்களைக் கொண்ட சரீரமாக தேவனின் தன்மைகளை வெளிப்படுத்துகிறபடியால் அவர்கள் கிறிஸ்துவின் சரீரம் என்றும் அழைக்கப்படுகின்றனர், இதற்கு முன்பு, தேவன் ஒரே அங்கத்தினரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் தம்மை வெளிப்படுத்தினார். நித்திய சிந்தையாகிய (LOGOS) தேவன், குமாரனில் வெளிப்பட்டார். தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப் பிரகாரமாக இயேசு கிறிஸ்துவுக்குள் வாசமாயிருந்தது. இயேசுகிறிஸ்து மாம்சத்தில் தோன்றிய நித்தியபிதாவாக. குமாரன் என்னும் பதவியைப் பெற்றார். அவருடைய நினைவுகளிலிருந்த நாமெல்லாரும், நம்முடைய சமயம் வரும்போது, மாம்சத்தில் வெளிப்பட்டு, தேவனுடைய குமாரர் என்று அழைக்கப்படும் சிலாக்கியம் பெற்றோம். மறுபிறப்பின் மூலம் நாம் சந்ததியாகவில்லை. அவருடைய சந்ததியாய் நாம் இருந்ததால், மறுபிறப்பு அடைந்தோம். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே மறுபிறப்பு அடைய முடியும். நாம் வித்தாக (சந்ததியாக) இருப்பதன் காரணத்தால் உயிர்ப்பிக்கப்பட்டோம். வித்தல்லாதவர்களிடம் (சந்ததியா யில்லாதவர்கள்) உயிர்ப்பிக்கப்பட ஒன்றுமில்லை. `மீட்கப்படுதல்’ என்னும் வாக்கு திரும்பவும் வாங்கிக்கொள்ளுதல், என்னும் அர்த்தம் பெறும். தேவன், தம்முடைய மரணத்தின் மூலம், இரத்தத்தைச் சிந்தி, தமக்குச் சொந்தமான மணவாட்டியைத் திரும்பவும் வாங்கிகொண்டார். `என் ஆடுகள் என் சத்தத்துக்குச் (வார்த்தைக்கு) செவிகொடுக்கிறது; அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது’ (யோவான் 10:3-4). தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் எப்பொழுதும் ஆடுகளாகவே இருக்கின்றனர். பன்றியாகவோ, நாயாகவோ இருந்து ஆடுகளாக மாறவில்லை, ஒவ்வொரு இனமும் தன் இனத்தை மாத்திரம் பிறப்பிக்கும். நாம் தேவனுடைய சிந்தையிலிருந்து மாம்சத்தில் தோன்றினதால், ஒரு நாளில் அவர் சத்தத்தைக் (வார்த்தையை) கேட்கத் தான் வேண்டும். அந்த சத்தத்தின் மூலம், நம்முடைய பிதா நம்மை அழைக்கிறாரென்று அறிந்து, நாம் தேவனுடைய பிள்ளைகளென்று உணர்வோம். ஆம், நாமும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, `பிதாவே, என்னை இரட்சியும், நான் உம்மிடத்தில் வருகிறேன்’ என்று கெட்ட குமாரனைப் போல் கதறினோம். ஒரு தேவனுடைய குமாரன், அவன் குமாரனென்று அநேக நாட்களாய் அறியாமலேயே இருக்க முடியும். இதற்கு ஒரு உதாரணம்கூற விரும்புகிறேன். ஒரு நாள், ஒரு குடியானவன் கழுகுக் கூட்டிலிருந்து ஒரு முட்டையை எடுத்து, கோழி முட்டைகளோடு அவயம் வைத்தான். குறித்த காலத்தில் எல்லா முட்டைகளும் பொறித்தன. கோழிக் குஞ்சுகள் தாய்க்கோழியோடு சேர்ந்து கொக்கரித்து, குப்பைகளிலிருந்து தீனியைப் பொறுக்கின. கழுகுக் குஞ்சு இதைக் குறித்துக் குழப்பமுற்றது; என்றாலும் ஒருவாறு தீனியைப் பொறுக்கிற்று. ஒரு நாள் தாய் கழுகு ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்கும்போது, கழுகுக் குஞ்சை கண்டுவிட்டது. அது அதிவேகமாய் தாழவந்து, சத்தம்போட்டு, தன்னிடத்தில் பறந்துவர கழுகுக் குஞ்சை அழைத்தது. இதுவரை கழுகின் சத்தத்தைக் கேட்காத கழுகுக்குஞ்சு, முதன் முறையாக அதைக் கேட்டபோது, ஒருவித உணர்ச்சி அதற்குத் தோன்றி, தாய்க் கழுகிடம் பறந்துசெல்ல வாஞ்சை கொண்டது; என்றாலும் பறக்க முயற்சி செய்ய பயந்தது. மறுபடியும் தாய்க் கழுகு சத்தம் போட்டு அழைத்தது. அப்பொழுது கழுகுக் குஞ்சு சத்தம் போட்டு பயத்தைத் தெரிவித்தது. தாய்க் கழுகு தொடர்ந்து சத்தமிட, தாயின் சத்தத்தைக் கேட்டு கழுகுக் குஞ்சு ஆகாயத்தில் பறந்து சென்றது. கழுகுக் குஞ்சு எப்பொழுதுமே கழுகுக் குஞ்சாயிருந்தது. கோழிக் குஞ்சைப் போன்று சிறிதுகாலம் பாவனை செய்தாலும், அதற்குத் திருப்தியில்லை. தாய்க் கழுகின் சத்தம் கேட்டவுடனே, அதற்குரிய இடத்திற்குப் பறந்துசென்றது. அவ்வாறே, உண்மையான தேவகுமாரன், வார்த்தையின் மூலம் ஆவியானவரின் சத்தத்தைக் கேட்கும் போது, அவன் யாரென்பதை உணர்ந்து, மகத்தான தீர்க்கதரிசி கழுகினிடத்தில் பறந்து சென்று அவரோடு சதா காலங்களிலும் உன்னதங்களில் வீற்றிருப்பான். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்த முக்கியமான கட்டத்திற்கு நாம் வருவோம். `நாம் புத்திர சுவீகாரத்தையடையும் படி நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத் தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும் நியாயப் பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்து மூலமாய்த் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்’. (கலா 4:4-7). ஆம்,இயேசு கிறிஸ்து தோன்றி, சிலுவையில் மரித்து மரணத்தின்மூலம் அவருடைய புத்திரராகிய நம்மை மீட்டுக்கொண்டார். நம்மைப் புத்திரராக அவர் ஆக்கிக்கொள்ளவில்லை, ஏனெனில் நாம் தொடக்கத்திலிருந்தே புத்திரராயிருக் கிறோம். புத்திர ஸ்தானத்தை அவர் நமக்கு மீண்டும் அளித்தார். மாம்சத்திலிருந்த போது, நாம் அவருடைய புத்திரரென்று அறிந்து கொள்ளவில்லை. பிசாசினால் நாம் அடிமைப்படுத்தப்பட்டோம், என்றாலும் நாம் அவர் புத்திரர், `மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்’. பெந்தேகோஸ்தே நாளன்று அவருடைய புத்திரரின்மேல் பரிசுத்த ஆவி இறங்கினது. கொரிந்து பட்டினத்திலும் வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய புத்திரரின் மேல் பரிசுத்த ஆவி இறங்கினது. அப்படியெனில் பரிசுத்த ஆவி நம்மைக் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணுவதே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் அர்த்தம். இதுதான் மறுபிறப்பு. நாம் வசனத்தைக் கேட்டு, மனந்திரும்பி, தேவனைப் பற்றும் நல்மனச் சாட்சியின் உடன்படிக்கையைத் தண்ணீரில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று நிறைவேற்றிய பிறகு, பரிசுத்த ஆவி நம்மை நிரப்பி, மறுபிறப்பின் அனுபவத்தைக் கொடுக்கிறது. தேவன் ஒருவரே என்னும் சத்தியத்தை எல்லாரும் விசுவாசித்தால், நான் இதுவரை கூறியது சுலபமாக விளங்கும். தெய்வத்துவத்தில் மூன்று ஆட்களில்லை. தேவன் ஒருவரே. நாம் கிறிஸ்துவின் ஆவியினால் மறுபிறப்பு அடைந்து, பின்பு பரிசுத்த ஆவியினால் வல்லமையைப் பெறுகிறோம் என்று சிலர் நினைப்பது முற்றிலும் தவறாகும். அது உண்மையாயின், நம்முடைய இரட்சிப்பில் பிதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவரை அவமதிக்கிறவர்களாயிருப்போம். இரட்சிப்பு கர்த்தருடையது என்று வேதம் போதிக்கிறது. மூன்று கடவுள்கள் இருப்பார்களாயின், பிதாவுக்கும் அதில் பங்கிருக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவே தேவனென்றும் அவரே விசுவாசிக்குள் வாசம் செய்கிறாரென்றும் வேதம் தெளிவாகக் கூறுகிறது. பிதா வேறொரு தேற்றரவாளனை அனுப்புவாரென்று இயேசு கூறினார். (யோவான் 14.16). அவர் (இயேசு) அவர்களோடு வாசம்பண்ணி, பின்பு அவர்களுக்குள் இருப்பாரென்று 17-ம் வசனம் கூறுகிறது. 18-ம் வசனத்தில், அவரே அவர்களிடத்தில் வருவதாக உரைக்கிறார். பின்னர் சீஷர்களிடத்தில் (23-ம் வசனம்), `நாங்கள் (பிதாவும், குமாரனும்) அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம்’ என்று அவர் கூறுகிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி எல்லாரும் ஒரே நேரத்தில் வருகிறார்கள்; ஏனெனில் தேவன் ஒருவரே. இயேசு கூறியவாறே, பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவி இறங்கினது. ஆவி இருமுறை வந்து மக்களை அபிஷேகிப்பதில்லை. அநேகர் சத்தியத்தை அறியாதவர்களாய், பாவ மன்னிப்புக்கென்று இயேசுவை விசுவாசித்து அதோடு நின்றுவிடுகின்றனர். அவர்கள் தொடர்ந்து பரிசுத்த ஆவியைப் பெறுவதில்லை. ஆத்துமாக்கள் தொடக்கத்திலிருந்து ஜீவனோடிருக்கின்றன (PREEXISTENCE OF SOULS) என்னும் மார்மோனின் கொள்கையை நான் நம்புவதாக நீங்கள் எண்ண வேண்டாம். இதைக் குறித்தும், மறுஜென்மம் எடுப்பதைக் குறித்தும் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு மனிதன் நித்தியமாக முன்குறிக்கப்படவில்லை என்பதை கவனிக்கவும். ஒரு மனிதனின் தோற்றம் தேவனுடைய சிந்தையில் முன்குறிக்கப்படுகிறது. மனித ஞானம் கிரகித்துக்கொள்ள முடியாத முன் காலங்களில், நித்திய சிந்தையைக் கொண்ட நித்திய தேவன் `பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலிருக்கையில் யாக்கோபைச் சிநேகித்து ஏசாவை வெறுத்தேன்’ என்று தீர்மானித்தார். இது தேவனுடைய சிந்தனையேயன்றி வேறொன்றுமில்லை. அந்த சிந்தனை உருவாக்கப்பட சமயம் வந்தபோது, ஏசாவும், யாக்கோபும் தோன்றி, யாக்கோபு தேவனுடைய தீர்மானத்தின்படி மீட்கப்பட்டான். யாக்கோபு தேவனின் சந்ததியாயிருந் தபடியால், அவனுடைய புத்திர பாகத்தையும், அவன் தேவனோடு செய்த உடன்படிக்கையையும் கௌரவித்தான். நீங்களும் உண்மையான சந்ததியாயிருந்தால், தேவனுடைய வார்த்தையைக் கேட்பீர்கள்; அப்பொழுது ஆவியானவர் உங்களைக் கிறிஸ்துவின் சரீரத்துக்குள் ஞானஸ்நானம் பண்ணி, உங்களை நிரைத்து, வல்லமைப்படுத்துவார். உங்களுடைய காலத்துக்குரிய சத்தியத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட ராஜரீக சந்ததியாவார் (ROYAL SEED). ஆவியானவர் உரைத்ததைக் (வார்த்தையை) கேட்டு, யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றார். வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தவுடனே, பரிசுத்த ஆவி அவர்மேல் இறங்கி, பின்னர் `இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்’ என்னும் சத்தமுண்டாயிற்று. `இவர் என்னுடைய குமாரனாகிவிட்டார்’ என்று அந்தச் சத்தம் கூறவில்லை. இயேசு இதற்கு முன்பே குமாரனாயிருந்தார். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட் டபிறகு, வல்லமையான கிரியைகளைச் செய்து, அக்காலத்திற்குரிய வெளிப்பாட்டை தேவனிடத்திலிருந்து பெற்றார். பெந்தேகோஸ்தே காலத்திலும்,அதைத் தொடர்ந்த காலங்களிலும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒவ்வொரு விசுவாசியையும், ஆவியானவர் முன்னறிந்து அவனை நிரப்பி, வல்லமையைக் கொடுத்து, அவன் வாழும் காலத்துக்குரிய வெளிப்பாட்டையும் அளிக்கிறார். வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபைகளின் காலமும், புறஜாதியார் இரட்சிக்கப்பட தேவன் குறித்த காலமாகும். `புறஜாதியாரின் நிறைவு’ என்று இது வேதத்தில் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு காலத்திற்குரிய செய்தியும், அக்காலத்துக்கென்று நியமிக்கப்பட்ட தூதனுக்குக் கொடுக்கப்படுகிறது. அல்லாமலும், ஒவ்வொரு காலத்தின் செய்தியும்’ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்’ என்னும் கட்டளையினால் முடிவு பெறுகிறது. ஒவ்வொரு காலத்திற்கென்று நியமிக்கப்பட்ட தூதனும் அக்காலத்துச் சபையின் உண்மையான தூதனாவான். ஒரு காலத்திற்கு ஒரு தூதன் மாத்திரமே நியமிக்கப்படுகிறான் என்பதை கவனிக்கவும். அவன் தேவனிடத்திலிருந்து வெளிப்பாட்டைப் பெற்று உண்மையான சபையும், கள்ளச் சபையும் கொண்ட `சபைகளுக்கு’ அதை அறிவிக்கிறான். ஆவியானவர் தூதனின் மூலமாக அளிக்கும் செய்தியைக் கேட்கத் திறமை பெற்றவர்களே, அதை ஏற்றுக் கொள்கின்றனர். அவர்களில் ஒவ்வொருவனும், தூதன் தேவனிடத்திலிருந்து பெற்ற செய்தியைக் கேட்டு, அதை ஏற்றுக் கொள்கிறான். பவுலின் காலத்துக்குரிய செய்தி, பவுலுக்கு மாத்திரம் வெளிப்படுத்தப்பட்டது. அவன் புறஜாதிக்கென்று நியமிக்கப் பட்ட அப்போஸ்தலனும் தீர்க்கதரிசியுமென்று மற்றெல்லா அப்போஸ்தலரும் ஒப்புக்கொள்கின்றனர். அவன் ஆசியாவுக்குப் போக மனதாயிருந்த போது, அவன் மூலமாய் ஆவியானவர் கூறுவதை ஆசியாவிலுள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை தேவன் அறிந்து, அவன் அங்கு போகாமல் தடை செய்தார். அதே சமயத்தில், மக்கதோனியாவிலுள்ள தேவனுடைய பிள்ளைகள் ஆவியானவர் கூறுவதை ஏற்றுக் கொள்ளுவார்களென்பதை அறிந்து அங்கு போக ஆவியானவரால் ஏவப்பட்டான். ஒவ்வொரு சபையின் காலத்திலும் இதே சம்பவம் நிகழ்கிறது. ஒரு ஸ்தலத்தில் வாழும் தூதன், அக்காலத்துக்குரிய சத்தியத்தைப் பெறுகிறான். இச்சத்தியம் மற்றவர்களுக்குப் போதிக்கப்பட்டு, அவர்கள் மூலம் இது மற்றெல்லா இடங்களிலும் பரவுகிறது. சத்தியத்தைப் பரப்புகிறவர்கள் சில சமயம் தூதன் போதித்துக் கொடுத்ததை மாத்திரம் போதிக்காமல், சிலவற்றைச் கூட்டியும் குறைத்தும் போதிப்பதால், சத்தியம் கறைபட்டு, அதன் காரணமாக எழுப்புதல் உண்டாகிறதில்லை. பவுல்,தான் கூறியதை மாத்திரம் போதிக்க ஊழியர்களுக்குக் கட்டளையிடுகிறான். `ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக் கடவன். தேவ வசனம் உங்களிடத் திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்திற்கு மாத்திரமா வந்தது?’ (1 கொரி 14:36-37). ஆவியானவரின் சத்தத்தை மாத்திரம் நாம் கேட்கக் கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும். தேவனிடத்திலிருந்து பெற்ற வெளிப்பாட்டை பவுலும்கூட மாற்றக்கூடாது. தூதர்களின் மூலமாய் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, கேட்டவாறு சபைகளுக்கு எடுத்துரைப்பது மிகவும் அவசியமாயிருக்கிறது. நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால் ஆவியானவர் போதிப்பதை ஏற்றுக் கொள்வீர்கள். ஒவ்வொரு சபையின் தூதனும், அச்சபையின் காலத்துக்குரிய சத்தியத்தைப் போதிப்பான். அக்காலத்து ஜனங்கள் இதை ஏற்றுக் கொள்ளும்போது, அங்கு எழுப்புதல் உண்டாகிறது. ஒவ்வொரு காலத்திலும் ஆவியானவர், `நீங்கள் தேவனுடைய வசனத்தைப் புறக்கணித்தீர்கள், மனந்திரும்பி, சத்தியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கடிந்து கொள்கிறார். வசனத்தைப் புறக்கணித்தலே தேவனுடைய வருத்தத்தின் காரணமென்று ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடியவுள்ள வேதத்தின் புத்தகங்களனைத்தும் கூறுகின்றன, இழந்து போன அவருடைய ஆதரவைப் பெற ஒரே பரிகாரமுண்டு. நீங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எபேசு சபை தொடங்கி ஒவ்வொரு சபையின் காலத்தையும் நாம் ஆராயும்போது, இது உண்மையென விளங்கும், நாம் வாழும் இக்கடைசிக் காலத்தில் தேவனுடைய வார்த்தை முழுவதும் அந்தகாரப்பட்டு, மக்கள் நிலைதவறி, முடிவில் உபத்திரவக் காலத்தில் பங்குகொள்வர் என்பதை நாமறியலாம். நீங்கள் உண்மையாகப் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருந்தால், எல்லாவற்றைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தையை அதிகம் மதித்து, அவருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் நீங்கள் பிழைப்பீர்கள். ஐந்தாம் அத்தியாயம்: பெர்கமு சபையின் காலம் THE PERGAMEAN CHURCH AGE வெளி 2 : 12 - 17 பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்; இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது. உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாம லிருந்ததையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், சில காரியங்களைக் குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடு யுத்தம் பண்ணுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாதது மாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது பெர்கமு இப்பட்டினம் ஆதிக்காலத்தில் பெர்கமம் என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. மைஸியா (MYSIA) என்னும் மாவட்டத்தில் இது அமைந்திருந்தது. மூன்று நதிகளின் மூலம் நீர்ப்பாசன வசதியைக் கொண்டதாயிருந்தது. இவைகளி லொன்று சமுத்திரத்தில் முடிவடைந்ததால், அது போக்குவரத்துக்குச் சாதகமாயிருந்தது. இது ஆசியாவிலே மிகவும் பிரசித்திபெற்ற பட்டினமென்று சரித்திரக்காரர் கூறுகின்றனர். நாகரீகத்தில் இது தலைசிறந்து விளங்கி, அலெக்ஸாண்டரியா (ALEXANDRIA) பட்டினத்திற்கு அடுத்தபடியாக, மிகப் பெரிய நூலகத்தைக் (LIBRARY) கொண்டதாயிருந்தது. ஆயினும் இப்பட்டினத்தில் பாவம் அதிகமாகக் குடிகொண்டிருந்தது. ஒரு உயிருள்ள சர்ப்பத்திற்கு ஆலயம் கட்டப்பட்டு, ஏஸ்குலாபியஸ் (AEXCULAPIUS) என்னும் தெய்வமாக இப்பட்டினத்தவர் அதை வழிபட்டு வந்தனர். கண்ணைக் கவரும் தோப்புகளும், ரஸ்தாக்களும், பூங்காக்களும் நிறைந்த இப்பட்டினத்தில், தேவன் பேரில் பற்றுக்கொண்ட ஒரு சிறு குழு சாத்தானின் வழிபாடுகளில் ஈடுபடாமல் வாழ்ந்து வந்தது. காலம் பெர்கமு சபையின் காலம் கி.பி. 312 முதல் கி.பி. 606 முடிய சுமார் முன்னூறு வருஷ காலம் நீடித்தது. தூதன் ஒவ்வொரு காலத்திற்குரிய தூதனைக் தேர்ந்தெடுப் பதற்கென தேவன் அளித்த விதிகளை அனுசரித்து, பவுலின் ஊழியத்திற்கு ஒத்த ஊழியம் செய்த மார்டின் என்பவர் இக்காலத்துத் தூதனாக விளங்கினாரென்று சந்தேகம் எதுவுமின்றி தெரிவிக்கிறோம். இவர் கி.பி. 315-ல் ஹங்கரி நாட்டில் பிறந்தார்; இருப்பினும் அவருடைய ஜீவியகால ஊழியத்தைப் பிரான்ஸ்தேசத்தில் நடத்தி, கி.பி. 399-ல் மரணமடைந்தார். அயர்லாந்தில் வாழ்ந்த பாட்ரிக் என்னும் பரிசுத்தவானுக்கு இவர் மாமனாவார். மார்டின் போர்வீரனாக பணியாற்றும் போது, ஒரு அதிசய சம்பவம் அவரைக் கிறிஸ்தவனாக மாற்றியது. மார்டின் உத்தியோகம் செய்த பட்டினத்தில், ஒரு பிச்சைக்காரன் வியாதிப்பட்டு, அரை நிர்வாணமாக ரஸ்தாக்களில் படுத்திருந்து, குளிர் தாங்கமுடியாமல் வருந்தினதாகக் கூறப்படுகிறது. அவனின் பரிதாப நிலையைக் கண்ட மார்டின், தன்னுடைய மேலங்கியைக் கழற்றி, பட்டயத்தால் அதை இரண்டு துண்டுகளாக வெட்டி, ஒரு துண்டினால் அவனைச் சுற்றினார். அன்றிரவில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவருக்குத் தரிசனமானார். அவர் மார்டினின் பாதி அங்கி சுற்றப்பட்டவராகக் காட்சியளித்தார். அவர் மார்டினை நோக்கி, `நீ ஞானஸ்நானம் பெறாதவனாக இருந்தாலும் , என்னை உன் அங்கியைக் கொண்டு உடுத்தினாய்’ என்று கூறினார். அன்று முதல், மார்டின் தன்முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடத் தொடங்கினார். தேவனுடைய வல்லமையை வெளிப் படுத்தும் அதிசயங்களைக் கொண்டதாக அவருடைய ஜீவியம் மாறினது. இராணுவத்தைவிட்டு, சபையின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, மார்டின் விக்கிரகாராதனையை எதிர்த்து, தோப்பு விக்கிரகங்களை உடைத்து, பீடங்களைத் தகர்த்துப்போட்டார். அஞ்ஞானிகள் அவருடைய செயலைக் கண்டித்தபோது, பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு எலியா சவால் விடுத்தது போன்று மார்டின் இவர்களுக்கு சவால் விடுத்தார். ஒரு மரத்தின் கீழ்புறம் தன்னைக் கட்டி, மரத்தை முறிக்கவும், இயற்கைக்கு மாறாக மரம் வேறுபுறம் சாய்ந்து அதன் காரணமாக அவர் நொறுக்கப்படவில்லையெனில், தேவனே அதைச் செய்தார் என்று அஞ்ஞானிகள் விசுவாசிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். அவ்வாறே மலைச் சரிவிலுள்ள மரத்தில் அவர் கட்டப்பட்டு, மரம் முறிக்கப்பட்டது. இயற்கையின் விதிகளுக்கு மாறாகத் தேவன் வெட்டப்பட்ட மரத்தை வேறு புறம் திருப்பினதால், அநேக அஞ்ஞானிகள் அதனடியில் சிக்கிக் கொல்லப்பட் டனர். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலுள்ள விசுவாசத்தைக் கொண்டு குறைந்தது மூன்று முறையாவது மார்டின் மரித்தோரை உயிரோடெழுப்பினாரென்று சரித்திரக்காரர் கூறுகின்றனர். ஒரு முறை, எலிசாவைப் போன்று, மரித்த குழந்தையின்மேல் படுத்து அவர் விண்ணப்பம் செய்தபோது, அக்குழந்தை உயிரோடெழுந்தது. மற்றொருமுறை, உபத்திரவத்திற்கு ஆளான ஒரு மனிதனை விடுவிக்க, அவர் அழைக்கப்பட்டார். அவர் வந்து சேருவதற்கு முன்பு அந்த மனிதன் தூக்கிலிடப்பட்டு, அவனுடைய கண்கள் குழிகளிலிருந்து வெளிவந்தன. மார்டின் அவனைத் தூக்கிலிருந்து இறக்கி ஜெபம் செய்தவுடனே, அவன் உயிரோடெழுந்தான். மார்டின் தன்னுடைய விரோதிகளுக்குச் சிறிதேனும் அஞ்சவில்லை. அநேக பரிசுத்தவான்களைக் கொன்ற ஒரு கொடிய சக்கரவர்த்தியைக் காண அவர் மறுத்தார். அப்பொழுது சக்கரவர்த்தி மார்டினைக் காண மறுத்தார். அப்பொழுது சக்கரவர்த்தியின் சிநேகிதனும், ரோமாபுரியின் கண்காணிப்பாளனுமான டமஸஸ் (DAMASUS) என்பவரை அவர் கண்டார். ஆனால் டமஸஸ் இவ்விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டார். மார்டின் அரண்மனைக்குத் திரும்பியபோது, அதன் கதவுகள் பூட்டப்பட்டிருக்கக் கண்டார். அவர் உள்ளே பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை. துக்கமடைந்த மார்டின் முகங்குப்புற விழுந்து ஆண்டவரை நோக்கி மன்றாடினார். `எழுந்திரு’ என்னும் சத்தத்தைக் கேட்டு மார்டின் எழுந்தவுடனே, அரண்மனையின் கதவுகள் தானாகவே திறந்திருக்கக் கண்டார். அவர் ராஜசபைக்குச் சென்றபோது, கர்வம் பிடித்த அந்த சக்கரவர்த்தி அவரோடு பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான், மார்டின் திரும்பவும் ஜெபித்தார். திடீரென்று சிங்காசனம் தீப்பிடித்தது; சக்கரவர்த்தியும் வேகமாக சிங்காசனத்தைவிட்டு எழுந்தான். உண்மையாகவே தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நின்று, தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார். மார்டின் வைராக்கியத்தோடு தேவ ஊழியம் செய்வதைச் சாத்தான் வெறுத்தான். மார்டினைப் பகைத்தவர்கள், அவரைக் கொலை செய்வதற்கென ஆட்களை நியமித்தனர். இவர்கள் களவாக மார்டினின் வீட்டில் நுழைந்து அவரைக் கொல்ல முற்பட்டபோது, மார்டின் சடுதியாக எழுந்து நின்று தன் தொண்டையை அவர்களுக்குக் காண்பித்தார், தேவனுடைய வல்லமை அவர்களைத் தரையில் வீழ்த்தியது, தேவனுடைய பிரசன்னத்தால் பரிசுத்தமான சூழ்நிலையைக் கண்டு பயமுற்று, அவர்கள் நகர்ந்து வந்து, மன்னிப்புக் கோரினர். தேவன் வல்லமையாக உபயோகித்த அநேகர் பெருமையடைவதுண்டு. ஆனால் மார்டின் அவ்வாறில்லை. அவர் எப்பொழுதும் தாழ்மையான சிந்தையு டையவராயிருந்தார். ஓர் இரவு பிரசங்கம் ஆயத்தம் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு பிச்சைக்காரன் அவருடைய அறைக்குள் நுழைந்து, உடுத்திக்கொள்ள சில உடைகளைக் கேட்டான். அவனைச் சபையின் தலைமை கண்காணியிடத்திற்கு (HEAD DEACON) அவர் அனுப்பினார், இவரோ அவனை வெளியே போகும்படி கட்டளையிட்டார். இதையறிந்த மார்டின் அவனுக்குத் தன் அங்கியைக் கொடுத்து, அதைக் காட்டிலும் தரத்தில் குறைந்த அங்கியைத் தலைமை கண்காணியினிடத்தில் வாங்கினார். அன்றிரவு மார்டின் தேவவசனத்தைப் பிரசங்கித்தபோது, அவரைச் சுற்றிலும் ஒளி பிரகாசிப்பதைக் கூடியிருந்தவர்கள் கண்டனர். மார்டின் உண்மையாகவே அக்காலத்தின் தூதனாக விளங்கினார். தேவனைப் பிரியப்படுத்துவதையே தம்முடைய குறிக்கோளாகக் கொண்டு, அவர் பரிசுத்த ஜீவியத்தைக் கடைப்பிடித்தார். ஜெபத்தின்மூலம் பரிசுத்த ஆவியின் ஆலோசனையைப் பெறாமல், அவர் பிரசங்கித்ததேயில்லை. தேவனிடத்தில் அவர் ஆலோசனை பெறும்வரை, மக்கள் அநேகமுறை மணிக்கணக்காகக் காத்திருந்ததுண்டு. மார்டினின் வல்லமையான ஊழியத்தின் காரணமாக பரிசுத்தவான்களுக்கு நேர்ந்த துன்பம் குறைவுற்றது என்று அநேகர் எண்ணக்கூடும். அது உண்மையல்ல. சாத்தான் பொல்லாதவர்களின் மூலம் அவர்களை இன்னமும் நிர்மூலமாக்கிக் கொண்டிருந்தான். அவர்கள் கழு மரத்தில் எரிக்கப்பட்டனர்; மரத்தில் முகங்குப்புற ஆணியடிக்கப் பட்டு, நாய்களால் பீறப்பட்டுத்துன்புறுத்திக் கொல்லப் பட்டனர். கர்ப்பிணிகளின் வயிறுகள் கீறப்பட்டு, உள்ளிருந்த கருக்கள் பன்றிகளுக்கு எறியப்பட்டன. பெண்கள் நிமிர்ந்து நிற்க வற்புறுத்தப்பட்டு, அவர்களின் முலைகள் அறுக்கப்பட்டன. அப்பொழுது இரத்தம் சொட்டு சொட்டாக ஒழுகி, அவர்கள் கடைசியில் மரித்தனர். பெயர்க் கிறிஸ்தவர்களும் அஞ்ஞானிகளோடு சேர்ந்து, கிறிஸ்தவர்களை இவ்விதம் துன்புறுத்திக் தேவனுக்குத் தொண்டு செய்ததாக எண்ணியது மிகவும் வருத்தத்தக்கது. `அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களுக்கு புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்கும் காலம் வரும்’ (யோவான் 16.12). `அப்பொழுது உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுத்து, உங்களைக் கொலை செய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைப்படுவீர்கள்’. (மத் 24.9). மார்டின் மகத்தான ஊழியத்தைச் செய்து, தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நிலைநின்று, ஸ்தாபனங்களை எதிர்த்து மேலிடங்களிலுள்ள பாவத்தைக் கண்டித் துணர்த்தினார். வார்த்தையினாலும் செய்கையினாலும் அவர் சத்தியத்தைப் போதித்து, வெற்றியுள்ள கிறிஸ்தவ ஜீவியத்தை வாழ்ந்து காண்பித்தார். ஒரு சரித்திரக்காரர் மார்டினைப் பின்வருமாறு புகழுகிறார். அவர் உணர்ச்சி வசப்படாமல் எப்பொழுதும் ஒரே விதமாக காட்சியளித்தார். அவருடைய முகத்தில் திவ்விய சந்தோஷம் நிலவினது. இயேசு கிறிஸ்துவைக் குறித்து அவர் எப்பொழுதும் தியானித்து, தன் இருதயத்தில் மக்களுக்காக அனுதாபங் கொண்டவராயிருந்தார். அவர்மேல் வசைச் சொற்களைப் பொழிந்தவருக்காகவும் அவர் கண்ணீர்விட்டு ஜெபித்தார், நற்பண்புகளைப் பெற்றிருந்ததன் காரணமாக அநேகர் அவரைப் பகைத்தனர். சபையின் அத்தியட்சகர்கள் (BISHOPS) அவருக்குப் பரம விரோதிகளாயிருந்தனர்’. வாழ்த்துதல் வெளி 2:12 `இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது’, மூன்றாவது சபைக்குரிய செய்தி வெளிப்பட சமயம் வந்துவிட்டது. சபையின் மத்தியிலிருக்கும் கிறிஸ்து இச்சபையின் காலத்தவருக்கு `இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவராக’ ஆவியானவரின் எக்காள சத்தத்தின் மூலம் அறிமுகப்படுகிறார். சிவந்த அங்கியை உடுத்தி முள் கீரிடம் சூடப்பட்டு, அடிக்கப்பட்டு, நிந்திக்கப்பட்டு, `இதோ உங்கள் ராஜா’ என்று பிலாத்து ஜனங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தியபோது, அவருக்குண்டாயிருந்த தோற்றத்தைக் காட்டிலும், இப்போதைய தோற்றம் எவ்வளவு வித்தியாசப்பட்டது என்பதைச் சிந்தியுங்கள். `இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர்’ என்னும் வாக்கில் தேவத்துவத்தைக் குறித்த வெளிப்பாடு அடங்கியிருக்கிறது. எபேசு சபையின் காலத்தில், மாறாத தேவனாக அவர்தம்மை வெளிப்படுத்தினார் என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கும். சிமிர்னா சபையின் காலத்தில் அவர் ஒருவரே உண்மையுள்ள தேவனென்றும், அவரைத் தவிர வேறு யாருமில்லையென்றும் அறிவுறுத்தினார். பெர்கமு சபையின் காலத்தில், அவர் வார்த்தையாக வெளிப்படுகிறார். `தேவனுடைய’ வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும், ஊனையும், பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது’. (எபி 4.12). `தேவ வசனமாகிய ஆவியின் பட்டத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்’. (எபே 6.17). `இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரிந்திருந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே, புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது’, (வெளி 19.13, 15) ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் (வார்த்தை) ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாக வில்லை’. (யோவான் 1.1-3). `பரலோகத்திலே சாட்சியிடுகிறவர் மூவர்; பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே. இம் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் (1 யோவான் 5.7). வார்த்தையோடு இயேசுவுக்குள்ளிருக்கும் தொடர்பை இவ்வசனங்கள் வாயிலாக நாம் அறியலாம். அவரே வார்த்தை. `ஆதியில் வார்த்தை இருந்தது’ (யோவான் 1.1) என்று யோவான் கூறுகிறான். (LOGOS) என்னும் கிரேக்க பதம் `வார்த்தை’ என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இப்பதத்தை `சிந்தனை’ (THOUGHT) அல்லது `பேச்சு’ (SPEECH) என்று இரு வகையாக அர்த்தங்கொள்ளலாம். வார்த்தை சிந்தனையை வெளிப்படுத்தும். தேவனுடைய சிந்தனை இயேசு கிறிஸ்துவில் வெளிப்பட்டது என்று யோவான் கூறுகிறான், பவுல் இதைப் பின்வரும் வசனங்களின் மூலம் விளக்குகிறான். `பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும் வகை வகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்திரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும் தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்’, (எபி 1.1-3). தேவன் இயேசுகிறிஸ்து என்னும் மனிதனில் வெளிப்பட்டார். இயேசு தேவனுடைய சொரூபமாயிருந்தார். `அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார்’ (யோவான் 1.14) என்று வேதம் கூறுகிறது, தேவனுடைய தன்மை மாம்சத்தில் தோன்றி நமது மத்தியில் வாசம் செய்தது. எவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவரும், பரிசுத்தத்தின் காரணத்தால் யாரும் நெருங்கக் கூடாதவருமான ஆவியாகிய தேவன் இப்பொழுது மாம்ச கூடாரத்தில் மனிதரிடையில் வாசம் செய்து தேவனுடைய பரிபூரணத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். `தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்’. (யோவான் 1.18), அநேக முறை அக்கினி ஸ்தம்பத்தினாலும், மேக ஸ்தம்பத்தினாலும் தம்முடைய பிரசன்னத்தை வெளிப்படுத்தி, மக்களுடைய இருதயங்களை நடுங்கச் செய்தவரும், தம்முடைய இருதயத்தின் தன்மைகளை தீர்க்கதரிசிகளின் மூலம் உரைக்கப்பட்ட வார்த்தைகளினால் வெளிப்படுத்தினவருமான தேவன், இப்பொழுது இம்மானுவேலாகத் (தேவன் நம்மோடிருக்கிறார்) தம்மை வெளிப்படுத்தினார். ஆம், ஜீவிக்கிற வார்த்தையாகிய இயேசு, தேவனை வெளிப்படுத்தினார். அவர் தேவனை மானிடரிடத்தில் கொண்டு வந்தார். அவரே தேவன்; அவர் தேவனைத் தெளிவாக நமக்கு விளக்கினதால் யோவான் பின்வருமாறு கூறுகிறான். `ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்து சாட்சி கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது’. (1 யோவான் 1.1-3). தேவன் மாம்சத்தில் முழுவதுமாக வெளிப்பட்டார். `என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்’. (யோவான் 14.9) என்று இயேசு கூறினார். இயேசு தேவனுடைய தற்சொரூபமாயிருந்தாரென்று எபி. 1.1-3-ல் கூறியிருப்பதை நாம் சிந்தித்தோம். தேவன் மனிதனுக்குத் தம்மை வெளிப்படுத்தும் பொருட்டாக, மனித ரூபத்தில் வெளிப்பட்டார். `பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும், வகை வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்’ என்னும் வாக்கியத்தைக் கவனிப்போம். `மூலமாய்’ என்பது சரியான மொழிபெயர்ப்பல்ல; உள்ளில் என்பது சரியான திருப்பம். அப்படியெனில், `பூர்வ காலங்களில் தேவன் தீர்க்கதரிசிகளுக்குள் வார்த்தையின் மூலம் திருவுளம் பற்றினார்’. என்பது இவ்வாக்கியத்தில் சரியான அர்த்தம். `கர்த்தர் சீலோவாவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்’. (1 சாமு 3.21). `பரிசுத்த ஆவியும், வார்த்தையும் ஒன்றாயிருக்கிறார்கள்’ (1 யோவான் 5.7) என்பதை மேற்கூறிய வசனங்கள் தெளிவாகக் காண்பிக்கின்றன. இயேசு பிதாவை வெளிப்படுத்தினார். வார்த்தை பிதாவை வெளிப்படுத்தினது. இயேசு ஜீவிக்கிற வார்த்தையாக இருந்தார்; இன்றைக்கும் அவர் ஜீவிக்கிற வார்த்தையாக இருக்கிறார். இயேசு இவ்வுலகிலிருந்தபோது `நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார் (யோவான் 14.10) என்று கூறினார். பிதாவானர் ஆவியாக குமாரனுக்குள் வாசம் பண்ணி, வார்த்தையினாலும் கிரியையினாலும் தம்மை பூரணமாக வெளிப்படுத் தினாரென்று நாமறியலாம். நாங்கள் இவ்வளவு காலம் போதித்ததும் இதுவே. மணவாட்டி வார்த்தையைப் பூரணமாகக் கடைபிடித்தால் இயேசு செய்த கிரியைகளையே அவளும் செய்ய முடியும். வார்த்தையே தேவன். ஆவியே தேவன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கிறார்கள். ஒன்று மற்றொன்றில்லாமல் கிரியை செய்ய இயலாது. ஒருவன் உண்மையாகத் தேவனுடைய ஆவியைப் பெற்றிருந்தால், அவன் தேவனுடைய வார்த்தையையுடையவனாய் இருப்பான். தீர்க்கதரிசிகளுக்குள் தேவனுடைய ஆவி வாசமாயிருந்ததால், வார்த்தை, அவர்களுக்குண்டாயிற்று. இயேசுவுக்குப் பரிசுத்த ஆவி அளவில்லாமல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆகையால் வார்த்தை அவருக்கு உண்டாயிற்று. `இயேசுவானவர் செய்யுவும் உபதேசிக்கவும் தொடங்கினார்’ (அப்:1:1), `என் உபதேசம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பினவருடையதாய் இருக்கிறது’ (யோவான் 7.16). யோவான் ஸ்நானன் தீர்க்கதரிசியாகவும், அவன் காலத்துத் தூதனாகவும் விளங்கினான். தாயின் கர்ப்பத்திலிருக்கும் போதே அவன் பரிசுத்த ஆவியினால் நிரையப்பட்டான். அவன் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, தேவனுடைய வார்த்தை (இயேசு) அவனிடத்தில் வந்தது. ஆம், உண்மையாகப் பரிசுத்த ஆவியினால் நிரையப்பட்டவனிடத்தில் தேவனுடைய வார்த்தை எப்பொழுதும் வரும். இதுவே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றதன் அடையாளம். இயேசுவும் அவ்வாறு கூறினார். `நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது’ (யோவான் 14.16-17). சத்தியமாவது என்ன என்பதை நாமறிவோம். `உம்முடைய வசனமே சத்தியம்’. (யோவான் 17.17). `என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? (யோவான் 8.43). உலகம் அந்த சத்திய ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாதென்று இயேசு கூறுகிறார். அவருடைய வசனத்தையும் அது அறியாமலிப்பதாகக் கூறுகிறார். ஆம், வார்த்தையும் ஆவியும் ஒன்றாயிருப்பதால், ஆவியைப் பெறாதவன் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதில்லை. தீர்க்கதரிசிகளைப் போன்று, ஒருவன் ஆவியைப் பெற்றிருந்தால், அவனிடத்தில் தேவனுடைய வார்த்தை உண்டாயிருக்கும்; அவன் அதை ஏற்றுக் கொள்வான். `என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும், உங்களுக்கு நினைப்பூட்டுவார்’. (யோவான் 14.26). தேவனுடைய வார்த்தை பரிசுத்த ஆவியினால் அளிக்கப்படுகிறது என்பதை இவ்வசனம் விவரிக்கிறது. `சத்திய ஆவியாகிய அவர் (வார்த்தை) வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் (வசனமே சத்தியம்) உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் (தேவனுடைய வார்த்தை) யாவையுஞ் சொல்லி (வார்த்தை) வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார் (ஆவி தீர்க்கதரிசன வார்த்தையைக் கொண்டு வருகிறது) (யோவான் 16.13) அந்நிய பாஷை பேசுதல், பாஷையின் அர்த்தத்தை விவரித்தல், தீர்க்கதரிசனம் உரைத்தல், கூச்சலிட்டு நடனமாடுதல் முதலியன பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் அடையாளமென்று இயேசு எங்கும் குறிப்பிடவில்லை. நாம் சத்தியத்தில் நிலைத்திருப்பதே உண்மையான அடையாளம் என்று அவர் கூறுகிறார். பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றால் உங்களுடைய காலத்துக்குரிய சத்தியத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். `ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக் கடவன் (1 கொரி 14.37) என்று பவுல் உரைக்கிறான். தேவனுடைய தீர்க்கதரிசி சபையைச் சீர்த்திருத்துவதற்கென தன் காலத்தில் போதிக்கும் சத்தியத்தை நாம் ஏற்றுக்கொண்டு அதைப் பின்பற்றுவதின் மூலம் பரிசுத்த ஆவி நமக்குள் வாசமாயிருக்கிறதை நாம் நிரூபிக்கலாம். வேறொரு வெளிப்படுத்தலைப் பெற்றதாகக் கூறிக்கொண்டவர் களை `தேவவசனம் உங்களிடத் திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது?’ (1 கொரி 14.36) என்று பவுல் கடித்துகொள்கிறான். பரிசுத்த ஆவியைப் பெற்றவன் சத்தியத்தை (வார்த்தையை) ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படிவான். `ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக’ (வெளி 22.17) ஆம், ஆவி பேசும் வார்த்தையையே மணவாட்டியும் பேசுகிறாள். அதன் மூலம் அவள் பரிசுத்த ஆவியைப் பெற்றவள் என்பதை நிரூபிக்கிறாள். ஒவ்வொரு சபையின் காலத்திலும், `ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்’ என்று கூறப்படுகிறது. ஆவியானவர் வார்த்தையைக் கொடுக்கிறார். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தால், உண்மையான கிறிஸ்தவர்களாக, உங்கள் காலத்துக்குரிய தேவ வார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொள்வீர்கள். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு காலத்துக்குரிய சத்தியத்தை அளிக்கிறார். ஒவ்வொரு காலத்திலிருக்கும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொள்வார்கள். `தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராத படியினால் செவி கொடாமலிருக்கிறீர்கள். (யோவான் 8.47) இயேசுவின் காலத்திலிருந்தவர்கள் வார்த்தையாகிய இயேசுவையும் அவர் கூறிய வார்த்தைகளையும் நிராகரித்தனர். தேவனால் உண்டானவர்களோ தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டனர். `உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் (பரிசுத்த ஆவியால்) போதிக்கப்பட்டிருப்பார்கள் (ஏசா 54.13). இயேசுவும் யோவான் 6.45ல் இதையே கூறுகிறார். வார்த்தையோடு ஒன்றுபடுவதே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நிரூபிக்கிறது. அந்நிய பாஷை பேசுதல் பாஷையின் அர்த்தத்தை விவரித்தல், போன்ற வரங்கள் ஆவியின் அனுக்கிரகம் (MANIFESTATION) என்று வேதம் கூறுகிறது. `ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது’ (1 கொரி 12.7). பவுல் தொடர்ந்து ஆவியின் வரங்களை விவரிக்கிறார். ஆவியின் அனுக்கிரகம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் அடையாளமன்று என எவ்வாறு கூறமுடியும்? ஒருவன் பரிசுத்த ஆவியினால் நிறையாமல் ஆவிக்குரிய வரங்களை எங்ஙனம் பெற்றிருக்கக்கூடும்! என்று ஒரு வேளை நீங்கள் என்னைக் கேட்கலாம். நான் தேவனுடைய உண்மையுள்ள ஊழியக்காரனாயிருப்பதால், அவருடைய ஆலோசனைகளை மறைத்து வைக்காமல் அவைகளை எடுத்துரைக்க கடமைப்பட்டிருக்கிறேன். பிலேயாமைக் குறித்துச் சற்று சிந்திப்போம். அவன் பக்தியாய் தேவனை வழிபட்டு வந்தான். பலிசெலுத்தும் முறையனைத்தையும் நன்றாக அவன் அறிந்திருந்தான். என்றாலும் அவன் தெரிந்துகொள்ளப்படாத தீர்க்கதரிசியா யிருந்ததால், அநீதத்தின் கூலியை அவன் விரும்பியது மாத்திரமல்ல, தேவனுடைய மக்களை விக்கிரகாராதனையிலும், விபசாரத்திலும் வழிநடத்தினான். தேவனுடைய ஆவியைக் கொண்டு அவன் பிழையற்ற தீர்க்கதரிசனம் உரைத்ததை யார் மறுக்கக்கூடும், அதே போன்று, பிரதான ஆசாரியனாகிய காய்பா, நம்முடைய ஆண்டவர் இன்னவிதமான மரணத்தையடையப் போகிறாரென்பதைத் தீர்க்கதரிசனமாக உரைத்தான். சிமியோன் அல்லது அன்னாளைப் போன்று, அவன் ஆவியைப் பெற்று, அவரால் வழிநடத்தப்பட்டதாகச் சான்று எதுவுமில்லை. அப்படியாயின், ஆவியின் வரங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் அடையாளமாக எவ்வாறு இருக்கமுடியும்? உண்மையாகப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவன், தேவனுடைய வார்த்தையை அவன் ஜீவியத்தில் கைக்கொள்வான். இதுவே உண்மையான அடையாளம். தேவன் எனக்கு அருளிய வெளிப்பாட்டின் மூலம் இச்சத்தியத்தை நான் எவ்வாறு அறிந்து கொண்டேன் என்று விவரிக்க விரும்புகிறேன். நான் ஒரு தீர்க்கதரிசியென உங்களில் அநேகர் நம்புகின்றனர். தேவன் எனக்குக் கொடுத்த தரிசனங்களில் இதுவரை ஒன்றும் தவறியதில்லை. அநேக வருஷங்களுக்கு முன்பு பெந்தேகோஸ்தேகாரரின் காம்ப் கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். அக்கூட்டத்தில் அந்நிய பாஷைபேசுதலும், பாஷைக்கு அர்த்தம் விவரித்தலும், தீர்க்கதரிசனம் உரைத்தலும் நடைபெற்றன. அங்கு வந்திருந்த இரு போதகர்கள் எல்லாரைக் காட்டிலும் அதிகமாக அந்நிய பாஷை பேசுவதைக் கண்டு, ஆவியின் வரங்களைக் குறித்து, அதிகமறிய விருப்ப முற்றவனாய் அவர்களோடு உரையாடத் தொடங்கினேன். எனக்குள்ளிருந்த ஆவியின் வரத்தின் மூலம் அவர்களில் ஒருவரின் ஆவியைப் பகுத்தறிந்து, அவர் உண்மையான கிறிஸ்தவன் என்பதை அறிந்து கொண்டேன். மற்றவர் தன்மையில் வித்தியாசமுள்ளவராகக் காணப்பட்டார். அவரோடு நான் உரையாடும்போது அவரைக் குறித்த ஓர் தரிசனத்தில், அவர் விபசாரத்தில் ஈடுபட்டு, அதன் மூலம் அவருக்கு இரு குழந்தைகள் உண்டாயிருக்கக் கண்டேன். இது உண்மையாகவே எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. உண்மையான கிறிஸ்தவன், மாய்மாலக்காரன் இவ்விருவரும் ஆவிக்குரிய வரங்களை வெளிப்படுத்தினர். குழப்பமுற்றவனாய், நான் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்தேன். வேதத்தில் எந்த பாகத்தைப் படிக்கவேண்டுமென அறியாதவனாய் தற்செயலாக வேதத்தைத் திறந்தபோது, மத்தேயு சுவிசேஷத்திலுள்ள ஒருபாகம் காணப்பட்டது. அதைச் சிறிது நேரம் படித்துவிட்டு, வேதத்தைக் கீழே வைத்தேன். சில நிமிடத்திற்குள் காற்று அறைக்குள் வீசி, வேதத்திலுள்ள பக்கங்களைத் திருப்பி, எபிரேயர் நிரூபம் ஆறாம் அதிகாரத்தில் நிறுத்தியது. அந்த அதிகாரத்தைப் படித்த போது, கீழ்காணும் வசனங்கள் என் சிந்தனையைக் கவர்ந்தது. `ஏனெனில் ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற் கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர் களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு. பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவை களுமான காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிற தென்று நம்பியிருக்கிறோம்’ (எபி 6.4-9). நான் வேதத்தை மூடி, தரையில் வைத்துவிட்டு, சற்று நேரம் தியானிக்கத் தொடங்கினேன். தேவன் என்னுடைய ஜெபத்திற்கு யாதொரு பதிலும் அளிக்கவில்லை. மறுபடியும் நான் சிந்தனையின்றி வேதத்தைத் திறந்தேன். அப்பொழுது காற்று மீண்டும் அறைக்குள் அடித்து, வேதத்தை எபிரேயர் ஆறாம் அதிகாரத்திற்குத் திருப்பியது. அந்த வசனங்களை நான் திரும்பத் திரும்ப படிக்கும் போது, தேவ ஆவியானவர் என் அறைக்குள் வந்தார். அச்சமயம், நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன். வெண்வஸ்திரம் தரித்த ஒரு மனிதன், காலையில், நன்றாய் உழுத நிலத்தில் விதைகளை விதைத்தான். நடு ராத்திரியில், கறுப்பு வஸ்திரந்தரித்த ஒருவன் கள்ளத்தனமாக வேறு சில விதைகளை அந்த நிலத்தில் விதைத்தான். சிறிது நாட்கள் கழித்து, கதிர்கள் முளைக்கத் தொடங்கின. அதோடு களைகளும் வளர்ந்தன, இவ்விரண்டும் ஒன்றாக வளர்ந்து, நிலத்தின் உரத்தைச் சமமாகப் பகிர்ந்துகொண்டன. அதுமட்டுமின்றி, அவை ஒரே சூரிய வெளிச்சத்தையும், மழையையும் அனுபவித்தன, மழையில்லாத காலத்தில், இரண்டும், மழைக்காகத் தேவனை நோக்கி விண்ணப்பித்தன; மழை பெய்தபோது, இரண்டும் ஒன்று சேர்ந்து `அல்லேலுயா’ என்று கூறி தேவனுக்கு நன்றி செலுத்தின. இத்தரிசனத்தின்மூலம், பெந்தேகோஸ்தே காம்ப் கூட்டத்தில் நடந்தவைகளின் அர்த்தத்தை நான் அறிந்து கொண்டேன், விதை விதைக்கிறவன் உவமையின் கருத்தும், எபிரேயர் ஆறாம் அதிகாரத்தில் அடங்கியுள்ள வசனங்களின் அர்த்தமும், ஆவியின் வரங்களைக் குறித்த உண்மையும் எனக்குப் புலனாயிற்று. வெண்வஸ்திரந் தரித்தவர் தேவன்; கறுப்பு வஸ்திரம் தரித்தவன் பிசாசு; விதைகள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும், தெரிந்து கொள்ளப் படாதவர்களையும் குறிக்கின்றன, இருவரும் ஒன்றாகப் பூமியின் உரத்தையும் தண்ணீரையும், சூரிய வெளிச்சத்தையும் பகிர்ந்தனர். இருவரும் ஜெபித்தனர்; இருவரும் தேவனிடத்தினின்று ஒத்தாசை பெற்றனர். `அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார்’ (மத் 5.45). இருவரும் ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய வரங்களையும் பெற்றிருந்தாலும், அவர்களிடையே ஒரு பெரிய வித்தியாசம் காணப்பட்டது. அதாவது வித்தியாசமான வித்துக்களிலிருந்து அவர்கள் தோன்றியவர்களாயிருந்தனர். `பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே, பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப் பானேயல்லாமல், என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை, அந்நாளில் அநேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்’ (மத் 7.21-23) என்று இயேசு கூறுகிறார். பரிசுத்த ஆவியினாலே அவர்கள் வல்லமையுள்ள கிரியைகளைச் செய்தார்க ளென்பதை இயேசு மறுக்கவில்லை. அவர்களை ஒருக்காலும் அறியவில்லை என்று மாத்திரம் கூறுகிறார். இவர்கள் சத்தியத்தை அறிந்து பின்வாங்கிப் போனவர்களல்ல; இவர்கள் பொல்லாங்கரும், மனந்திரும்பாதவரும், தேவனால் புறக்கணிக்கப் பட்டவர்களுமான சாத்தானின் சந்ததியாவர். ஆவியின் வரங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் அடையாளங்கள் என்று கூறுவது தவறாகும். அவைகள் பரிசுத்த ஆவியின் வல்லமையான கிரியைகளுக்கு அடையாளங்களாயிருக்கின்றனவென்று நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் இவைகளைப் பெற்றதன்மூலம், ஒரு தனிப்பட்ட நபர் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றாரென்று யாரும் கூற இயலாது. அன்று போலவே, இன்றும் அவனவனுடைய காலத்திற்குரிய சத்திய வசனத்தை ஏற்றுக்கொள்வதே ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளமாயிருக்கிறது, இயேசுகிறிஸ்து வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்று, கிரியைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஜனங்கள் வார்த்தையை ஏற்றுக் கொண்டால், நற்கிரியைகள் தானாகவே தொடரும் என்பதை அவர் அறிந்திருந்தார். பத்மு தீவின் தரிசனத்திற்குப் பின்பு இருநூறு வருடங்கழித்து தோன்றும் பெர்கமு சபையின் காலத்து மக்கள் தேவவார்த்தையை விட்டு அதிகமாய் வழுவி, இருண்ட காலங்களில் பங்கு கொள்வர் என்பதை இயேசு அறிந்திருந்தார், வார்த்தையை அனுசரிக்காததன் காரணமாக, ஆதி மனிதன் தேவனைவிட்டு அகன்றான் என்பது அவருக்குத் தெரியும், ஆம், நீங்களும் வார்த்தையை விட்டால், நீங்கள் தேவனை விட்டீர்கள். ஆகையால் பெர்கமு சபையின் காலத்திலும் மற்றெல்லா சபைகளின் காலத்திலும் அவரை வார்த்தையாக அவர் வெளிப் படுத்துகிறார். `நானே வார்த்தை, தேவன் உங்கள் மத்தியில் இருக்க விரும்பினால், வார்த்தையை ஏற்றுக்கொள்ளுங்கள், உலகத்திலுள்ள எதுவும் வார்த்தையை விட்டு உங்களைப் பிரிக்காதிருக்கக்கடவது. நானே வார்த்தை என்பது ஞாபகமிருக்கட்டும்’ என்று அவர் கூறுகிறார். நாம் ஜெபம் செய்யும்போது, இயேசுவின் நாமத்தில் விண்ணப்பங்களை ஏறெடுக்கிறோம்; அவ்வாறு செய்யாவிடில் நமக்குப் பதில் கிடைக்காது. `நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிக் கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்’ (1 யோவான் 5.14-15) என்று வேதம் கூறுகிறது, அப்படியெனில், தேவனுடைய சித்தமென்பது என்ன? என்று நாம் கேட்கிறோம். அவருடைய சித்தத்தையறிய ஒரே வழி உண்டு, தேவனுடைய வார்த்தையின் மூலமே நாம் அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள முடியும். `ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? (புலம் 3.37). ஆம், தேவன் கூறாத (வார்த்தை) எதுவும் சம்பவிப்பதில்லை. தேவனுடைய வார்த்தைக்குட்படாத எதையும் நாம் பெற்றுக்கொள்ள முடியாது. அவருடைய நாமத்தினாலேயன்றி வேறு எவ்வகையிலும், நாம் விண்ணப் பங்களை ஏறெடுக்க முடியாது. இயேசு (அவருடைய நாமம்) தான் வார்த்தை (அவருடைய சித்தம்) தேவனையும் அவருடைய வார்த்தையையும் பிரிக்கமுடியாது. அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். அச்சிட்ட தாள்களில் (வேதாகமத்தில்) அவர் வைத்துப்போன அவருடைய வார்த்தையை விசுவாசத்தினால் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் ஏற்றுக் கொள்வதன் மூலம், தேவனுடைய ஒரு பாகத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம். `என்னுடைய வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது’ (யோவான் 6, 63) என்று இயேசு கூறினார். இயேசுவே ஜீவனாயிருக்கிறார். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்’ (யோவான் 14.16). `கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல (ரோமர் 8.9). வார்த்தை ஆவியாயும் ஜீவனுமாயும் இருக்கிறது. இயேசு ஆவியாயும் ஜீவனுமாயும் இருக்கிறார். அப்படியெனில் இயேசுவே வார்த்தை. பரிசுத்த ஆவியினால் நிறைந்த மனிதன் விசுவாசத்தினால் வார்த்தையைத் தன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதைப் பிரசங்கித்தால், தேவனே வார்த்தையைப் பிரசங்கிப்பதாக அர்த்தம். மலைகளும் அவன் வார்த்தையில் பெயரவேண்டும். சாத்தான் அந்த மனிதனுக்கு முன்பாக நிற்க முடியாது. மூன்றாம் சபையின் மக்கள் ஜீவிக்கிற வார்த்தையைக் குறித்த வெளிப்பாட்டை ஏற்றுக் கொண்டிருப்பார்களாயின், தேவனுடைய வல்லமை இருளின் காலங்களில் அவர்களை விட்டுப்போக வழியில்லை. இன்றைய சபையும், தான் விட்ட வார்த்தையை மறுபடியும் விசுவாசத்தின் மூலம் ஏற்றுக்கொண்டால், தேவனுடைய மகிமையும், அவரின் மகத்தான கிரியைகளும் அவர்களின் மத்தியில் திரும்பவும் காணப்படும் என்பதற்குச் சிறிதேனும் ஐயமில்லை. ஒரு இரவு, நான் கர்த்தருடைய சமூகத்தில் காத்துக்கொண்டிருந்த போது, ஆவியானவர், வார்த்தையையும், மணவாட்டியையும் குறித்த செய்தியை இக்காலத்துச் சபைக்குக் கொடுத்தார். அது பின்வருமாறு. `பிரதியுற்பத்தி விதியை (LAW OF REPRODUCTION) அனுசரித்து, இனம் இனத்தைப் பிறப்பிக்கிறது’ அப்பொழுது தேவன் பூமியானது புல்லையும் விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியேயாயிற்று. (ஆதி 1.1:1) விதையிலிருந்த சத்து செடியில் பாய்ந்து பின்னர் கனியில் காணப்படுகிறது. இந்த விதி, இன்றைய சபைக்குப் பொருந்தும், எந்த ஒருசபையும், அது தோன்றிய மூலவித்தின் தன்மையைப் பெற்றிருக்கும். இந்த கடைசி காலங்களில் உண்மையான மணவாட்டியைக் கொண்ட சபை (கிறிஸ்துவின் வித்து) தலைமையாயிருந்து, தேவனை நெருங்கும் நெருங்குத் தோறும் அதிகமான வல்லமையைப் பெறும். மணவாட்டி சபையிலுள்ளவர்கள் தேவனுடைய சாயலைப் பெற்று, அவரைப்போல் இருப்பார்கள். இயேசு கிறிஸ்துவும் மணவாட்டியும் ஒன்றாயிருப்பார்கள். ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையைத் தங்கள் ஜீவியத்தின்மூலம் அவர்கள் வெளிப்படுத்துவார்கள். ஸ்தாபனங்கள் தவறான வித்திலிருந்து தோன்றியதால் இந்நிலையையடைய முடியாது. கொள்கைகளையும் தங்களுக்கென உண்டாக்கிக்கொள்ளும். இதனால் ஸ்தாபனங்கள் கலப்புத் தன்மைகளை அடைகின்றன. முதலாம் குமாரனான ஆதாம் தேவனுடைய வித்திலிருந்து தோன்றியவன். அவன் தன்னைப் பிரதியுற்பத்தி செய்துகொள்ள, ஒரு மணவாட்டி அளிக்கப்பட்டாள். ஆனால் அவள் கலப்பின் காரணமாகப் பாவத்தில் விழுந்து அவனையும் பாவத்தில் வீழ்த்தினாள். இரண்டாவது குமாரனான இயேசுவும் தேவனுடைய வித்திலிருந்து தோன்றியவர், ஆதாமுக்கு ஒரு மணவாட்டி கொடுக்கப்பட்டது போன்று, அவருக்கும் ஒரு மணவாட்டி கொடுக்கப்பட்டாள். தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு ஜீவிப்பாளா அல்லது வார்த்தையைச் சந்தேகித்து அதன் காரணமாக மரிப்பாளா என்று அறிய, அவள் ஆதாமின் மணவாட்டியைப்போல் சோதிக்கப் பட்டாள். அவளும் சந்தேகித்து வார்த்தையைப் புறக்கணித்ததால், மரணம் அவளை ஆட்கொண்டது. வார்த்தையை ஏற்றுக்கொண்ட ஒரு சிறு கூட்டத்தைத் தேவன் இயேசுவுக்கு மணவாட்டியாக அளிப்பார். இக்கூட்டம் மனிதனால் உண்டாக்கப்பட்ட பிரமாணங்களையும், கொள்கைகளையும் கைக் கொள்ளாததனால், அது கன்னிகையாகக் கருதப்படுகிறது. தேவன் தாம் மணவாட்டிக்கு வாக்குத்தத்தம் செய்தவைகளை, மணவாட்டியின் அங்கத்தினர்கள் மூலம் நிறைவேற்றுவார். தேவன் கன்னிமரியாளுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருந்தார். அவர் மாம்சத்தில் தோன்றியதன் மூலம் அந்த வாக்குத்தத்தத்தை அவர் நிறைவேற்றினார். தேவதூதன் தேவனுடைய வார்த்தையை மரியாளுக்குச் செய்தியாகக் கொண்டு வந்தான். அவள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டதால், அவரைக் குறித்து உரைக்கப்பட்ட தீர்க்கத்தரிசனங்கள் அனைத்தையும் அவர் நிறைவேற்ற முடிந்தது. கற்புள்ள மணவாட்டியின் அங்கத்தினர்கள் அவரில் அன்பு கூறுவர். அவர் மணவாட்டி சபையின் தலைவராக இருந்து, எல்லா அதிகாரத்தையும் பெற்றிருக்கிறபடியால், இவர்களெல்லாரும் அவருடைய தன்மைகளைப் பெற்றிருப்பார்கள். சரீரத்தின் அவயவங்கள் தலைக்குக் கட்டுப்பட்டிருக்கும் வண்ணம், அவர்கள் தலையாகிய இயேசுவுக்குக் கட்டுப்பட்டிருப்பார்கள். பிதாவுக்கும் குமாரனுக்குமுள்ள ஒற்றுமையைக் கவனியுங்கள். பிதாவானவர் செய்யக் காண்கிறதை மாத்திரம் குமாரன் செய்கிறார். (யோவான் 5.19) இந்த ஒற்றுமை இப்பொழுது மணவாளனுக்கும் மணவாட்டிக் குமிடையே காணப்பட வேண்டும். ஜீவனுள்ள அவருடைய வார்த்தைகளை அவர் அவளுக்குக் கொடுக்கிறார். அவள் அதை உடனடியாக சந்தேகப்படாமல் ஏற்றுக்கொள்கிறாள். ஆகையால் யாதொன்றும் (மரணம் உட்பட) அவளைச் சேதப்படுத்துவதில்லை. விதைக்கப்பட்ட விதையைத் தண்ணீர் முளைப்பிக்கும். மரியாளுக்குள் வார்த்தை (இயேசு) இருந்தது போன்று, மணவாட்டிக்குள் வார்த்தை இருக்கும். அவருடைய சிந்தையை அவள் உடையவளாயிருப்பதால், அவள் செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புவதை அவள் அறிந்திருக்கிறாள். அவர் நாமத்தினாலே, வார்த்தையின் மூலம் அவள் கட்டளை கொடுக்கும்போது விதை தண்ணீர் பாய்ச்சப்பட்டு வளர்ந்து பலன் கொடுப்பது போன்று, வார்த்தை ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டு, பலனைக் கொடுக்கிறது. மணவாட்டியிலுள்ளவர்கள் அவருடைய சித்தத்தை மாத்திரம் செய்வர். அதற்கு மாறாகச் செய்யத் தூண்டப்பட்டாலும், அவர்கள் இணங்க மாட்டார்கள். தேவன் கூறுவதை மாத்திரம் அவர்கள் கூறுவர். தேவன் அவர்களுக்குள்ளிருந்து, கிரியை நடப்பித்து அவருடைய வார்த்தையை நிறைவேற்ற வேண்டுமென்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். அவர் இவ்வுலகத்திலிருந்தபோது, எல்லாக் கிரியைகளையும் முடிக்காததன் காரணத்தால், இப்பொழுது மணவாட்டிக் குள்ளிருந்து அவள் மூலமாய் அவைகளை முடிக்கிறார். அவர் இப்பொழுது அவள் மூலமாய் நடப்பிக்கும் கிரியைகளை அவர் மாம்சத்தில் வந்தபோது நிறைவேற்று வதற்கு அது ஏற்ற சமயமில்லையென்பதை அவள் அறிவாள். தக்க சமயத்தில் அக்கிரியைகளை மணவாட்டியின் மூலம் அவர் நிறைவேற்றுகிறார். யோசுவா, காலேப் இவர்களைப் போன்று நாம் விசுவாசத்தில் உறுதியாய் நிற்போமாக. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நமது தேசமும் நமக்கு இப்பொழுது தென்படுகிறது. `யோசுவா’ என்பதற்கு `யெகோவா என் இரட்சகர்’ என்று அர்த்தம். கடைசிக் காலத்தில் வரப்போகும் வழிகாட்டிக்கு யோசுவா முன்னடையாளமாயிருக்கிறான். காலேப் யோசுவாவுக்குத்துணை நின்றது போல், கடைசி காலத்தின் உண்மையான சபையும் இவ்வழிகாட்டிக்குத் துணை நிற்கும். தொடக்கத்தில் இஸ்ரவேலர் வார்த்தையை உண்மையாகக் கடைபிடிக்கும் கன்னிச் சபையாக இருந்தனர். பின்னர், வார்த்தைக்கு மாறானவைகளைச் செய்ய அவர்கள் வாஞ்சித்தனர். கடைசி காலத்துச் சபையும் அவ்வாறே இருக்கிறது. குறித்த சமயம் வரும்வரை, தேவன் இஸ்ரவேல் ஜனங்களைப் புறப்படப்பண்ணவில்லை; அல்லது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குக் கொண்டு செல்லவில்லை. ஒருவேளை இஸ்ரவேலர் யோசுவாவை வற்புறுத்தி, `தேசம் நம்முடையதாய் இருப்பதால் நாம் இப்பொழுதே அதைச் சுதந்தரித்துக் கொள்வோம். உம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட உத்திரவாதம் பறிக்கப்பட்டது என்று நினைக்கிறோம். முன்பிருந்த வல்லமை உமக்கு இப்போதில்லை; தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அவருடைய சித்தத்தையறிந்து, துரிதமாகக் காரியங்களை முன்பு செய்தவண்ணம் இப்பொழுது நீர் செய்வதில்லை. உமக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்று கூறியிருக்கலாம். ஆனால் யோசுவா தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியாய், அவருடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் அறிந்ததால் அவைகள் நிறைவேறக் காத்திருந்தான். தேவனுடைய திட்டத்தை உறுதியாய் அறியும்வரை அவன் காத்திருந்தான். இஸ்ரவேலர் புறப்பட சமயம் வந்தபோது, தலைமை தாங்கும் உத்தரவாதத்தைத் தேவன் யோசுவாவிடம் ஒப்படைத்தார். அவனைத்தவிர வேறு யாரையும் அவர் நம்பவில்லை. இந்தக் கடைசி காலத்தில், மேற்கூறியது மறுபடியும் சம்பவிக்கும். மோசேயின் ஜீவியத்தை உதாரணமாக நாம் எடுத்துக்கொள்வோம். ஆபிரகாமின் சந்ததியை எகிப் திலிருந்து விடுவிக்க சமயம் வந்தபோது, தேவன் இவனைத் தோன்றப் பண்ணினார். எகிப்திலுள்ள மக்களோடு வேதத்தைக் குறித்து இவன் தர்க்கிக்காமல், அவர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும் சமயம் வரும்வரை வனாந்தரத்தில் காலங்கழித்தான். மோசே தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கருதி தேவன் அவனை வனாந்திரத்துக்குக் கொண்டு செல்லவில்லை. மோசேயை ஏற்றுக்கொள்ள மக்கள் ஆயத்தமாயிராததன் காரணத்தால் அவன் அங்கு கொண்டு செல்லப்பட்டான். மக்கள் இதைப் புரிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்; ஆனால் அவர்களோ இதைப் புரிந்துகொள்ளவில்லை. எலியாவுக்குத் தேவனுடைய வார்த்தையுண்டாயிற்று. அவன் சத்தியத்தைப் பிரசங்கித்தபோது, யேசபேலும் அவளைச் சார்ந்தவர்களும் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அப்பொழுது கர்த்தர் அவனை வனாந்தரத்துக்குக் கொண்டு சென்று, தேவனுடைய தீர்க்கதரிசியையும், அவன் கொடுத்த தேவனுடைய செய்தியையும் நிராகரித்ததன் காரணமாக, அந்தச் சந்ததியை வாதைகளால் வாதித்தார். இஸ்ரவேல் ராஜாவே அவனை வனாந்தரத்திலிருந்து வரும்படி அழைத்தாலும் அவன்போக ஆயத்தமாயில்லை. தேவன் தரிசனத்தின் மூலம் இவனோடு பேசினார். அப்பொழுது அவன் ஒளிப்பிடத்திலிருந்து வெளிவந்து, இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தேவனுடைய வார்த்தையை எடுத்துரைத்தான். கிறிஸ்துவுக்கு முன்னோடினவனான யோவான் ஸ்நானன், அவன் காலத்தில் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக விளங்கினான். அவன் ஆசாரிய முறைமையைத் தன் தகப்பனிடத்திலோ அல்லது பரிசேயரிடத்திலோ படிக்காமல், வனாந்தரத்துக்குத் தேவனால் அழைக்கப்பட்டு அங்கு சென்றான். `மேசியாவின் வருகை சமீபமாயிற்று’ என்ற செய்தியோடு தேவன் அவனை அனுப்பும்வரை, அவன் வனாந்தரத்தில் தங்கியிருந்தான். மோசேயின் காலத்தில், கோரா என்பவன் எழும்பி அவனை எதிர்த்தான் என்று வேதம் கூறுகிறது. இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த அவனுக்கும் உரிமையுண்டு என்றும் தேவனுடைய வெளிப்பாடு மோசேக்கு மாத்திரம் கொடுக்கப்படாமல் மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட் டதென்று கூறி, மோசே பெற்றிருந்த அதிகாரத்தை எதிர்த்தான். இஸ்ரவேல் ஜனங்கள் உண்மையான சத்தியத் தைக் கேட்டு, மோசே தேவனால் இவ்வூழியத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று அறிந்தும், அவர்களில் அநேகர் கோராவின் எதிர்ப்பேச்சுக்கு செவி சாய்த்து, அவனைப் பின்பற்றினர். இக்காலத்திய சுவிசேஷகர்களில் அநேகர் கோராவைப் போலிருக்கின்றனர். கோரா, மக்களுக்கு நல்லவனாகக் காட்சியளித்ததுபோல், இவர்களும் இக்காலத்து மக்களின் கண்களில் நல்லவராகக் காணப்படுகின்றனர். அவர்கள் நெற்றியில் இரத்தத்தையும், கைகளில் எண்ணெயையும் மேடையில் தீப்பந்தங்களையும் வருவிக்கின்றனர். அவர்கள் பெண்கள் பிரசங்கிக்கவும், மயிரைக் கத்தரிக்கவும், ஆண்கள் உடைகளை அணியவும் அனுமதித்து, தேவனுடைய வார்த்தையை அசட்டைசெய்து, தங்கள் சொந்த பிரமாணங்களையும் கொள்கைகளையும் பின்பற்றுகின்றனர். அவர்களுக்குள்ளிருக்கும் வித்தின் தன்மையை அவர்களுடைய கிரியைகள் எடுத்துக் காண்பிக்கின்றன. தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு சிலர் மோசேக்குத் துணை நின்றதுபோல், இக்காலத்திலும் அநேகர் சத்தியத்தை விட்டாலும், ஒரு சிலர் அதைக் கைக்கொள்கின்றனர். கோதுமை மணிகளையும் களைகளையும் குறித்த உவமையை நினைவுகூறுங்கள். களைகள் சுட்டெரிக்கப்படுவதற்கென முதலில் கட்டப்பட வேண்டும். சத்தியத்தை விட்டு வழுவிப்போன சபைகள் இப்பொழுது ஒன்றுபட்டு தேவனுடைய நியாயத் தீர்ப்பின் அக்கினிக்கு இரையாக்கப்படுவதற்கு ஆயத்தமாகின்றன. ஆனால் கோதுமை மணிகளை எஜமான் களஞ்சியங்களில் சேர்ப்பார். கடைசி காலங்களில் மல்கியா 4ம் அதிகாரத்தில் கூறப்பட்டவைகள் நிறைவேறுமென தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். மல்கியாவினால் உரைக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையானதால், அவன் கூறியதனைத்தும் நிச்சயமாக சம்பவிக்கும், இயேசுவும் மல்கியா உரைத்த தீர்க்கதரிசனத்தைக் குறிப்பிட்டிருக் கிறார். இயேசு இரண்டாம் முறை வரும் சற்று முன்பு, இவ்வதிகாரத்தில் மல்கியா கூறியவை நிறைவேறும். இயேசு வருவதற்கு முன்பு எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறவேண்டும். மல்கியாவால் உரைக்கப்பட்ட தூதன் வரும்போது, புறஜாதிகள் கடைசி சபையின் காலத்திலிருப்பர், அவன் வசனத்தில் உறுதியாய் நிற்பான். ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடிய வேதாகமத்தில் காணப்படும் புத்தகங்களில் அடங்கியுள்ள சத்தியமனைத்தும் அவன் போதிப்பான். `சர்ப்பத்தின் வித்து’ தொடங்கி, `பின் மாரிக்காலத்தில் வரும் தூதன்’ வரைக்கும் இதுவரை மறைபொருளாக இருக்கும் சத்தியங்களை அவன் விவரிப்பான். ஆனால் ஸ்தாபனங்கள் அவனை ஏற்றுக்கொள்ளாது. ஆகாபின் காலம் தொடங்கி இதுவரை, தீர்க்கதரிசிகள் ஸ்தாபனங்களால் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆகாப் காலத்தில் இஸ்ரவேலில் நடந்த சம்பவம், மல்கியாவினால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசி தோன்றும் சமயம், அமெரிக்காவில் நடைபெறும். இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்தரமாக வழிபட எகிப்தைவிட்டு வெளியேறி, அவர்கள் குடியேறிய நாடுகளிலுள்ள ஜாதிகளைப் புறம்பே தள்ளி, ஒரு பலத்த ஜனமாகி, தாவீதைப்போன்ற உத்தம தலைவர்களால் அரசாளப்பட்டு, பின்பு ஆகாப் என்னும் கொடியவனை சிம்மாசனத்தில் ஏற்றி, அவனுடைய மனைவியாகிய யேசபேல் இஸ்ரவேலின் நிர்வாகத்தை நடத்தியதுபோன்று, அமெரிக்காவிலும் நிகழ்ந்தது. அமெரிக்க ஜனங்களின் முற்பிதாக்கள் சுதந்தரமாக வாழ எண்ணி தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறினர். அமெரிக்காவின் சுதேசிகளை இவர்கள் விரட்டியடித்து, அந்நாட்டைக் கைப்பற்றினர். வாஷிங்டன், லின்கன் போன்ற மகத்தான ஜனாதிபதிகள் நாட்டின் நிர்வாகத்தை நடத்திவந்தனர். சிறிதுகாலம் கழித்து, தரம் குறைந்தவர்கள் ஜனாதிபதி பதவியேற்க, யேசபேலைப் போன்ற அவருடைய மனைவி மறைவாக நிர்வாகத்தை நடத்தினாள். இச்சமயத்தில்தான் மல்கியாவினால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசி தோன்ற வேண்டும். கர்மேல் பர்வதத்தில் தேவனுடைய மகிமை காணப்பட்டது போன்று, பின்மாரி காலத்திலும் சம்பவிக்க வேண்டும். மல்கியா 3ம் அதிகாரத்தில் கூறப்பட்ட முன்னோடியவன் (FORERUNNER) யோவான் ஸ்நானனாகும். அவன் முன்மாரியில் விதைவிதைத்து, ஸ்தாபனங்களின் கோபத்திற்கு ஆளானான். பின்னர் இயேசு வந்து, மறுரூபமலையின் சம்பவம் நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு இரண்டாம் முன்னோடியவன் பின்மாரிக்கென விதைப்பான். இயேசு வரும்போது, ஸ்தாபனங்களையும் பிரமாணங்களையும் உதறிதள்ளி, தம்முடைய மணவாட்டியைக் கொண்டு செல்வார். முதலாம் சம்பவம் கர்மேல் பர்வதத்திலும், இரண்டாவது மறுரூபமலையிலும் நிகழ்ந்தன. மூன்றாவது சம்பவம் கூடிய சீக்கிரத்தில் சீயோன் பர்வதத்தில் நடைபெறும். மோசே, எலியா, யோவான் ஸ்நானன் இம்மூவரும் மக்களின் சமூகத்தினின்று விலகி வனாந்தரத்துக்குச் சென்ற சம்பவம் அநேகரை குழப்பத்திற் குள்ளாக்கியது. அவர்களுடைய செய்திகளை மக்கள் ஏற்றுக் கொள்ளாததால், அவர்கள் வனாந்தரத்துக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதை அவர்கள் சிறிதேனும் உணரவில்லை. ஆயினும் விதை விதைக்கப்பட்டு நாற்று நடப்பட்டது. அடுத்தது நியாயத் தீர்ப்புதான். வரப்போகும் நியாயத்தீர்ப்பை அறிவிக்க இவர்கள் அனுப்பப்பட்டனர். அந்த நோக்கத்தை அவர்களும் நிறைவேற்றி முடித்தனர். அவர்களுடைய செய்திகளை நியாயத்தீர்ப்பு தொடர்ந்தது என்பதைக் கவனிக்கவும். வெளி, 13.16ல் கூறியிருக்கிறபடி, மிருகம் தன்னுடைய முத்திரையின் சின்னத்தைக் கையில் அல்லது நெற்றியில் அணியக்கட்டளையிடுகிறது, அச்சின்னத்தை அணிந்தால் மாத்திரம் பிரசங்கம் செய்ய அனுமதி அளிக்கப்படும் ஸ்தானபங்கள் இம்முத்திரையை அணியும். மணவாட்டியோ இதை அணிய மறுப்பதால், பிரசங்கம் செய்யத் தடைசெய்யப்படுவாள், சீக்கிரம் ஆட்டுக் குட்டியானவர் மணவாட்டிக்காக வந்து, வேசியை நியாயந்தீர்ப்பார். ஒரு முக்கியமான காரியத்தைச் செய்ய மோசே பிறந்தான். அக்கிரியைகளைச் செய்ய அவசியமான வரங்களைப் பெறும்வரை, அவன் வனாந்தரத்திற்குச் சென்று அங்கு காக்க வேண்டியதாயிருந்தது. இவைகளை நிறைவேற்றுவதற்குத் தேவன் ஒரு சமயத்தைக் குறித்திருந்தார். தேவனின் நோக்கம் நிறைவேற மோசே வனாந்தரத்திலிருந்து கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களைக் கொடுமைப்படுத்தி, அவர்கள் கொடுமை தாளாமல் அழவேண்டிய நிலை ஏற்பட வேண்டியதாயிருந்தது; இந்தக் காலத்திலும், தீர்க்கதரிசி அனுப்பப்படுவதற்கு முன்பு, இதற்கொத்த சம்பவம் நிகழவேண்டும். அநேகம்பேர் அடையாளங்களை இக்காலத்தில் செய்து, அதன் விளைவாக, வார்த்தையைக் குறித்தும் தேவனுடைய அசைவைக் குறித்தும் ஒன்றுமறியாத அடையாளங்களை மாத்திரம் தேடும் சந்ததி உண்டாயிருக்கிறது. இரத்தத்தையும், எண்ணெயையும், நெருப்பையும் காணும்போது அவர்கள் சந்தோஷப் படுகின்றனர். தேவவசனம் என்ன சொல்லுகிறது என்பதைக் குறித்து அவர்கள் சிறிதேனும் கவலை கொள்ளவில்லை. வார்த்தைக்கு மாறாக உண்டாகும் அடையாளங்களையும் அவர்கள் ஆதரிப்பார்கள். கடைசி காலங்களில் இரு ஆவிகளும் ஒன்றோடொன்று இசைத்திருந்து ஒரேவிதமான கிரியைகளை நடப்பிப்பதால், அநேகர் வஞ்சிக்கப்படுவார்களென்றும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரம் வஞ்சிக்கப்படாமல் இந்த ஆவிகளைப் பகுத்தறிவரென்றும் இயேசு கூறியிருக்கிறார். இவ்விரண்டு ஆவிகளைப் பகுத்தறிய வேண்டுமெனில், அவைகளைத் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும். சத்தியத்தைப் பேசாத ஆவி பொல்லாங்கானவனால் உண்டாயிருக்கிறது. பொல்லாங் கானவன் முதலிரண்டு மணவாட்டிகளை (ஏவாள், ஆதித்திருச்சபை) வஞ்சித்தது போல, கடைசிக் காலத்து மணவாட்டியையும் வஞ்சிக்க முற்படுவான். வார்த்தையைவிட்டு அகன்று அடையாளங்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவும் அல்லது பிரமாணங்களின் மூலம் அவர்கள் வசனத்தைக் கறைப்படுத்தவும் அவன் முயற்சிப்பான். தேவன் ஒருக்காலும் தம்முடைய வார்த்தைக்கு மேலாக அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. வார்த்தையை ஏற்றுக் கொள்வதன் மூலம் அடையாளங்கள் தொடரும். சாறிபாத் விதவை தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து, எலியாவுக்கு முதலில் ஒரு சிறிய அடையைச் செய்து கொடுத்தபோது, கலசத்தின் எண்ணெய் குறைந்து போகாமலும், பானையில் மாவு செலவழிந்து போகாமலும் இருந்தது. தேவனுடைய வார்த்தையைத் தொடர்ந்து அடையாளம் அங்கு உண்டானது. வார்த்தையை நீங்கள் முதலில் ஏற்றுக்கொண்டு, பின்பு உங்கள் ஜீவியத்தில் அற்புதம் நடப்பதைப் பாருங்கள். தேவனுடைய வார்த்தை ஆவியினால் உயிர்ப்பிக்கப்படும். தேவனால் அனுப்பப்பட்ட தூதன் வார்த்தையின் ஒரு பாகத்தை மாத்திரம் ஏற்றுக்கொண்டு, மற்றவைகளை எவ்வாறு நிராகரிக்க முடியும்? கடைசிக்காலத்தின் உண்மையான தீர்க்கதரிசி வார்த்தை முழுவதையும் மக்களுக்கு எடுத்துரைப்பான். ஸ்தாபனங்கள் அவனைப் பகைக்கும். `விரியன் பாம்புக்குட்டிகளே’ என்று அழைத்த யோவான் ஸ்நானனின் சொற்களைப் போன்று அவனுடைய சொற்கள் கடூரமாக இருக்கும். தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் மாத்திரம் அவனுக்குச் செவிகொடுத்து எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்படுவர். ஆபிரகாமின் ராஜரீக சந்ததியார் ஆபிரகாமோடு முன் குறிக்கப்பட்டு, அவன் விசுவாசத்தைப் பெற்றவர்களாய், அவனோடுகூட, தேவனுடைய வசனத்தை உறுதியாய்க் கடைபிடிப்பர். தேவன் நிர்ணயித்த காலத்தில், கடைசி காலத்தின் தூதன் தோன்றுவான். நாமெல்லாரும் அறிந்தவண்ணம், இது கடைசி காலம். இஸ்ரவேலர் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிச் சென்றனர். மல்கியாவின் வாக்கின்படி அந்தத் தூதன் இப்பொழுது எந்த நேரமும் வரக்கூடும். அவன் வசனத்தில் முற்றிலுமாய் சார்ந்து, வசனத்தில் குறிக்கப்பட் டிருப்பான் (வெளி 19.6). தேவன் அவன் ஊழியத்தை நிலை நிறுத்துவார். எலியாவைப் போன்று அவன் சத்தியத்தைப் பிரசங்கித்து, சீயோன் மலையின் காட்சிக்கு ஆயத்தமாயிருப் பான். அநேகர் வேதத்தைத் தவறான முறையில் கற்றுக் கொண்டிருக்கிறபடியால் இந்தத் தூதனை அவர்கள் தவறாகப் புரிந்துகொள்வார்கள். அவர்களறிந்த சத்தியத் திற்கு மாறாக அவன் போதிப்பவைகளை அவர்கள் நம்பவேமாட்டார்கள். சில உண்மையான ஊழியக்காரரும், தேவனுடைய சத்தியம் என்று வஞ்சகர் போதித்தவைகளை ஆமோதித்து அவனைத் தவறாக எண்ணுவர். இதோ, உலகத்தின் பாவங்களைச் சுமந்துதீர்க்கிறதேவாட் டுக்குட்டி என்று இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னோடியவனாகிய யோவான் ஸ்நானன் அறை கூவியது போன்று, அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடியவன் இதோ தேவனுடைய ஆட்டுக்குட்டி மகிமையில் வருகிறார்’ என்று பறை சாற்றுவான். அக்காலத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு யோவான் சத்தியத்தைப் பிரசங்கிக்கும் தூதனாக விளங்கியதுபோல், கடைசி காலத்துத் தெரிந்துகொள்ளப் பட்டவர்களும், வசனத்தினால் ஜெனிப்பிக்கப் பட்டவர்களுமான மணவாட்டிக்கு இவன் தூதனாக விளங்குவான். தேவன் சபையைப் பாராட்டுகிறார் வெளி 2.13. `உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன். `உன் கிரியைகளை நான் அறிந்திருக்கிறேன்’ ஒவ்வொரு காலத்திலுள்ள மக்களுக்கும் தூதர்களின் மூலமாய் தேவன் இதையே உரைக்கிறார். சபையிலுள்ள விசுவாசிகளுக்குக் குதுகலத்தையும், அவிசுவாசிகளுக்குத் திகிலையும் இது உண்டாக்கும். நம்முடைய கிரியைகளினிமித்தம் நாம் இரட்சிக்கப்படாமல், தேவனுடைய அளவற்ற கிருபையினால் நாம் இரட்சிக்கப்பட்டாலும், உண்மையான இரட்சிப்பு அடைந்த பிறகு, நம்மிலும் தேவனைப் பிரியப்படுத்தும் கிரியைகள் காணப்பட வேண்டும்.`பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறது போலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்’. (1 யோவான் 3: 7). ஒரு மனிதனின் கிரியைகள் அவன் இருதயத்தின் தன்மைகளை வெளிப்படுத்துகின்றன என்று இவ்வசனம் விளக்குகிறது `ஒரே ஊற்றுக் கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? (யாக் 3.11) `பாவத்துக்கு மரித்தநாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?’ (ரோமர் 6.2). `மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். விரியன் பாம்புக்குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானதை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்; நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத் திலிருந்து நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக் காட்டுகிறான்’ (மத் 12:33-35). ஒருவன் வார்த்தையாகிய வித்திலிருந்து உண்டாயிருந்தால், அவனிடத்தில் வார்த்தை காணப்பட வேண்டும்’. அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெனிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே’. (1 பேதுரு. 1.23). ஆம், ஒருவன் கொடுக்கும் கனியின் மூலம், அவன் தோன்றின மூலவித்தின் தன்மையை நன்கு அறியலாம். அவன் வார்த்தையிலிருந்து தோன்றினால், அவனுடைய கிரியைகள் வேதவாக்கியங்களோடு ஒத்திருக்கும். பெர்கமு சபையின் காலத்தின் மக்களை இச்சத்தியம் குற்றப்படுத்தும். தன்னிகரற்றவர், தேவனுடைய வார்த்தையாகிய இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைக் கையில் ஏந்தியவராய், அதோ அங்கே நிற்கிறார். கடைசி காலத்தில் அந்த வார்த்தை நம்மை நியாயந்தீர்க்கும். இப்பொழுதே வார்த்தையானது, இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுத்து, நியாயந் தீர்க்கிறது. அது மாம்சத்துக்குரியவர்களை ஆவிக்குரியவர்களினின்று பிரிக்கிறது. மக்கள் காணத்தக்கவாறு, தேவனுக்கு மகிமையாக, அது நம்மை ஜீவிக்கிற நிருபங்களாக மாற்றுகிறது. ஒருவன் வார்த்தையை நிறைவேற்றுவதன் மூலமே தேவனைப் பிரியப்படுத்தக்கூடும். `நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரானே’ என்று ஒருவன் அழைக்கப்பட விரும்பினால், அவனுடைய ஜீவியத்தில், அவன் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றவேண்டும். அன்றும், இன்றும் சத்திய வசனத்தை ஆதாரமாகக் கொண்டு ஒருவனின் பரிசுத்த ஜீவியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தையைக் கொண்டு இந்த உலகம் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவரால் நியாயந்தீர்க்கப்பட வேண்டும். ஒருவன் பெற்ற ஆவிக்குரிய நிலையை ஒருவன் அறிய வேண்டுமாயின், யாக்கோபு கூறும் வண்ணம், திருவசனமாகிய கண்ணாடியில் அவன் தன்னைப் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். இயேசுகிறிஸ்து, வார்த்தையைக் கையிலேந்திக்கொண்டு, பெர்கமு சபையின் காலத்திற்கென்று தீர்மானிக்கப்பட்ட திட்டத்தை ஆதாரமாகக் கொண்டு, அங்குள்ள பரிசுத்தவான்களின் ஜீவியத்தை ஆராயும்போது, தங்களுக்கு முன்பிருந்தவர்களைப் போன்று இவர்கள் துன்பத்தைச் சந்தோஷமாகச் சகித்து, அவரிடத்தில் நெருங்குவதைக் கண்டு, அவர்கள்மேல் பிரியங்கொண்டிருக்க வேண்டும். கர்த்தரைச் சேவிப்பதென்பது அந்நாளில் கடினமான காரியமாயிருந்தாலும், அவர்கள் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொண்டு வந்தனர். ஆனால் கள்ள விசுவாசிகள் அவ்வாறில்லை. வார்த்தையைக் கொண்ட ஜீவியத்தை அவர்கள் களைந்து, சத்தியத்தைவிட்டு அதிகமாக விலகிப் போனார்கள். நீ என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறாய் `ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே’ (யோவான் 6.68) என்று பேதுரு கூறினான். இச்சபையின் பரிசுத்தவான்கள், அவரோடு ஆவியில் ஒன்றுபட்ட நிச்சயத்தையடைந்து, அவருடைய பெலத்தைக் கொண்டே அவரை இறுகப் பற்றினர். இவர்கள் `கிறிஸ்தவர்கள்’ என்ற பெயருக்கேற்ப, அந்நாட்களில் சாட்சிகளாக விளங்கினர் அவர்களுடைய முழங்கால்கள் அந்த நாமத்திற்கு முடங்கின. அவர்களுடைய நாவுகள் அந்த நாமத்தை அறிக்கை பண்ணின. வார்த்தையினாலும் கிரியையினாலும் எதைச் செய்தாலும் அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் செய்தனர். அந்த நாமத்தை அவர்கள் தரித்து, பொல்லாங்கினின்று விலகி, அந்த நாமத்திற்கென்று மரிக்கவும் ஆயத்தமாயிருந்து, உயிர்த் தெழுதலின் நம்பிக்கையைப் பெற்றிருந்தனர். இந்த இரண்டாம் நூற்றாண்டின் காலத்திலேயே `பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, திரித்துவத்தைக் குறிக்கின்றன என்ற எண்ணம் மக்களிடையே பரவி, மூன்று கடவுள்களைப் பற்றிய போதனை கள்ளச் சபையில் இடம் பெற்றது. இது நிகழ்ந்த சிறிது காலத்திற்குள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம்’ சபைகளின்று அகற்றப்பட்டது, இக்காலத்திலும் `கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் ஒரே தேவனின் நாமத்தை மக்கள் புறக்கணித்து, அதற்குப் பதிலாக அவர் வகித்த பதவிகளைக் குறிக்கும் பெயர்களை ஏற்றுக்கொண்டு, திருத்துவக் கொள்கையை அனுசரித்து ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். ஆனால் கர்த்தருக்குகந்த சிறுமந்தை சத்தியத்தில் நிலைநின்று இன்னமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து வருகிறது. ஒரே தேவன் மூன்று கடவுள்களாக மாற்றப்பட்டு அவமதிக்கப்பட்டாலும், தேவன் தமது மக்களைக் கொண்டு, இச்சபையின் காலத்தில், அற்புதங்களையும் அடையாளங்களையும், நடப்பித்தார். மார்டினைப் போன்ற அநேகர் அற்புதங்களின் மூலமாகவும் ஆவிக்குரிய வரங்களின் மூலமாகவும் சாட்சியாக ஜீவித்தனர். வார்த்தைகளினாலும் விசுவாசத்தினாலும் தேவனைக் கனம் பண்ணும் பரிசுத்தவான்களிடையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் எப்பொழுதும் வல்லமையுள்ளதாய் விளங்கும். என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலிக்கவில்லை THOU HAST NOT DENIED MY FAITH அலங்கார வாசலண்டையில் உட்கார்ந்திருந்த சப்பாணி குணமாக்கப்பட்ட விதத்தைப் பேதுரு பின்வருமாறு விவரிக்கிறான். `அவருடைய (இயேசுவுடைய) நாமத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய (இயேசுவுடைய) நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனை (சப்பாணியாயிருந்தவனை) பெலப்படுத்தினது; அவரால் (இயேசுவால்) உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது’ (அப் 3.16). இயேசுவின் நாமமும், இயேசுவால் உண்டாகிய விசுவாசமும் இதைச் செய்ததென்று பேதுரு கூறினானேயன்றி, தன்னுடைய வல்லமையினால் அதைச் செய்ததாக அவன் கூறவில்லை. இயேசுவினிடத் திலிருந்து பெற்ற விசுவாசத்தை, இயேசுவின் நாமத்தில் உபயோகித்ததன் காரணமாக, இம் மகத்தான கிரியை நடந்தது என்று அவன் கூறுகிறான். இந்த விசுவாசத்தைத்தான் தேவன் இங்கு குறிப்பிடுகிறார். அது அவருடைய விசுவாசம்; அவரில் ஏற்படும் விசுவாசமல்ல இது அவருடைய சொந்த விசுவாசத்தை அவர் விசுவாசிகளுக்கு அளித்திருக்கிறார். `உங்களில் எவனாகிலும் தன்னைக் குறித்து மிஞ்சி எண்ணாமல் அவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்’ (ரோமர் 12.3). `அவனுக்கு’ என்பது முதலாம் வசனத்தின் பிரகாரம் சகோதரரைக் குறிக்கிறது. `கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது (விசுவாசம்) உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு (எபே 2.8). `என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப் (ஆங்கிலத்தில் (FAITH OF OUR LORD JESUS CHRIST) பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளா திருப்பீர்களாக’. (யாக் 2.1). பெரும்பாலோர் `இரட்சிப்புக் கர்த்தருடையது’ என்னும் சத்தியத்தையும் `தெரிந்துகொள்ளப்படுதலின்’ போதனையையும் உதறித் தள்ளி, (வார்த்தையை அசட்டை செய்தாலும்) தங்கள் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்களைச் சபையில் சேர்த்துக் கொண்ட பெர்கமு சபையின் காலத்திலும் ஒருசிலர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைப் பெற்று, அதைக் கொண்டு வல்லமையான கிரியைகளைச் செய்தது மாத்திரமல்ல, சபையின் அங்கத்தினராவதன் மூலம் இரட்சிப்புண்டு என்று கூறுபவர்களை எதிர்த்தனர். இயேசு கிறிஸ்துவினிடமிருந்து பெற்ற விசுவாசத்தின் மூலமே நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையை ஒருவன் அடைய முடியும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். இன்றைய சபைகளைப் போலவே, பெர்கமு சபையிலும் மக்கள் இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பையும் அவர் மரணத் தினாலுண்டான இரத்தஞ் சிந்துதலையும், நற்கருணையின் அர்த்தத்தையும் அறிந்திருந்தும் மனம் மாறாதவராயிருந் தனர். மனிதன் இவைகளில் கொள்ளும் விசுவாசம் ஒருக்காலும் இரட்சிப்புக்கு வழிகோல முடியாது. தேவனுடைய குமாரனின் விசுவாசம் மனிதனுடைய இருதயத்தில் வரும்போது, சரீரமாகிய ஆலயத்தில் அவன் மகிமையின் கர்த்தரை ஏற்றுக் கொள்கிறான். ஆம், நாம் விசுவாசத்தில் ஜீவிக்க வேண்டும். `நான் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினால் பிழைத்திருக்கிறேன்’ I LIVE BY THE FAITH OF THE SON OF GOD) (கலா 2.10) என்று பவுல் கூறுகிறான். தேவகுமாரனின் விசுவாசமே அவனுக்கு ஜீவனையளித்து கிறிஸ்துவ ஜீவியத்தில் வெற்றியை அளித்தது. பெர்கமு, சபையின் விசுவாசிகள் இரட்சிப்பு கர்த்தருடையதென்பதை விசுவாசித்து, இயேசுவின் நாமத்திலுள்ள சத்தியத்தையும் அவருடைய விசுவாசத் தையும் கடைப்பிடித்து, தேவனுடைய ஆசீர்வாதத்திற்குத் தகுதியாக எண்ணப்பட்டனர். எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா இந்த சகோதரனைப் பற்றி, வேதத்தின் வேறெந்த பாகத்திலும் அல்லது சபையின் சரித்திரத்திலும் குறிப்பு எதுவுமில்லை. ஆனால் அதைக் குறித்துக் கவலை கொள்ளவேண்டாம். தேவன் அவனை முன்னறிந்ததே போதுமானதா யிருக்கிறது. அவனுடைய விசுவாசமும் ஜீவவசனத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. அவன் இயேசுவின் நாமத்தைக் தரித்து, அவரின் விசுவாசத்தைப் பட்சபாதத் தோடு பற்றிக் கொள்ளாமலிருந்தான். ஸ்தேவானைப் போல் பரிசுத்த ஆவியிலும் விசுவாசத்திலும் நிறைந்தவனாய், அவன் அஞ்சாமல் சத்தியத்திற்காக வாழ்ந்தான். இயேசுகிறிஸ்துவின் நாமத்தையும் விசுவாசத்தையும் தரித்தவர் மரணாக்கினைக்குட்பட்ட போது, அவன் உறுதியாய் நின்று இரத்த சாட்சியாக மரித்தான். ஆபேலைப் போன்று அவனும் தேவனிடத்தில் நற்சாட்சி பெற்றான். அவனுடைய நாமம் வேதாகமத்தில் எழுதப்பட்டிருப்பதால், அவன் மரித்தாலும் இன்னும் பேசுகிறான். வேறொரு உண்மையுள்ள இரத்த சாட்சி இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தான். ஆனாலும், சாத்தான் வெற்றி கொள்ளவில்லை. சமாதானப் பிரபு சிலுவையின் மரணத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்டபோது, சாத்தான் வெற்றியடைந்ததாக எண்ணினான். ஆனால் சிலுவையின் மரணம் அவனை வென்றது. அவ்வாறே, அந்திப்பா சிந்திய இரத்தமும், ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு, அவரைப் பின்செல்ல ஏதுவாயிருக்கும். சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடம் தைரியங்கொண்ட சிலுவையின் போர்வீரர்கள், சாத்தானைத் தன் சொந்த ஸ்தலத்திலே மேற்கொண்டதால், ஆவியானவர் அவர்களைப் புகழுகிறார். அவர்கள் இயேசுவின் நாமத்திலும், அவருடைய விசுவாசத்திலும் போர் புரிந்து, அந்தகாரத்தின் அதிபதிகளின் பாளையங்களிலேயே அவர்களை மேற்கொண்டது, புகழ்ச்சிக்குரிய ஒரு செயலாகும். தாவீதின் வீரர்கள், அவன் தாகத்தைத் தீர்க்க விரோதிகளின் பாளையங்களில் தைரியமாக நுழைந்து, தண்ணீர் கொண்டு வந்ததுபோல், விசுவாசப் போர்வீரர்களாகிய இவர்களும் சாத்தானின் ஸ்தலத்தின்மேல் படையெடுத்து, மரணத் தருவாயிலிருந்தவர் களுக்குத் தங்கள் போதகத்தின் மூலம் இரட்சண்ணியம் என்னும் தண்ணீரைப் பருகக் கொடுத்தனர். சாத்தானின் சிங்காசனத்தைக் குறித்த தேவனுடைய வார்த்தைகள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் செயலைப் பாராட்டி, அதே சமயத்தில் சபையில் ஆதிக்கம் பெற்ற பொல்லாங்கைக் கண்டித்து உணர்த்துகின்றன. பெர்கமு சாத்தானின் சிங்காசனமும் இருப்பிடமும். பெர்கமு உண்மையாகவே சாத்தானின் இருப்பிடமாகத் திகழ்ந்ததென்று சபையின் சரித்திரம் நிரூபிக்கிறது. தொடக்கத்தில் பாபிலோன் சாத்தானின் குடியிருப் பாயிருந்தது. அங்குதான் சாத்தானின் வழிபாடு முதன் முதலாகத் தொடங்கியது. `கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான். ஆகையால், கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக் காரனான நிம்ரோதைப் போல என்னும் வழக்கச் சொல் உண்டாயிற்று. சிதெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள்’ (ஆதி 10.8-10) `பூமியெங்கும் ஒரே பாஷையும் ஒரேவிதமான பேச்சும் இருந்தது. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணுகையில், சிநெயார் தேசத்தில் சம பூமியைக் கண்டு அங்கே குடியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள். நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள். கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. பின்னும் அவர்கள், நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப் போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். அப்பொழுது கர்த்தர். இதோ ஜனங்கள் ஒரே கூட்டாய் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார்.; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கின படியால், அதின் பேர் பாபேல் எனப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார்’ (ஆதி 11. 1-9). பாபிலோன் நகரம் ஆதியில் பாபேல் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அது `குழப்பம்’ என்று பொருள்படும். காமின் குமாரனான கூஷ் என்பவனால் அது ஸ்தாபிக்கப்பட்டு, அவனுடைய குமாரனாகிய நிம்ரோத்தின் காலத்தில் வல்லமை பொருந்திய சாம்ராஜ்யமாக விளங்கியது. நிம்ரோத் மூன்று மகத்தான காரியங்களைச் சாதித்தான் என்று வேதமும், சரித்திரமும் கூறுகின்றன. முதலாவதாக அவன் பலமுள்ள இராஜ்யத்தை ஸ்தாபித்தான். இரண்டாவதாக அவன் தன்னுடைய சொந்த மார்க்கத்தைப் பரப்பினான். மூன்றாவதாக அவன் தனக்குக் கீர்த்தியைச் சம்பாதித்தான். இவ்வாறு, அவனுடைய விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாயின. எல்லா உலக ராஜ்யங்களைக் காட்டிலும் பாபிலோன் சாம்ராஜ்யம் தலைசிறந்து விளங்கியதால், அது `பொன்தலை’ (HEAD OF GOLD) என்று சரித்திரத்தில் அழைக்கப்படுகிறது. நிம்ரோத்தின் மார்க்கம் உலகெங்கும் பரவி, எல்லா விக்கிரகாராதனைகளுக்கும், கட்டுக்கதைகளுக்கும் ஆதாரமாக விளங்கினது என்று சரித்திரவாயிலாக நிரூபிக்க முடியும். இம்மார்க்கத்தைக் கடைப்பிடித்து தொழப்பட்ட தெய்வங்கள் வித்தியாசமான நாடுகளில் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன. சாத்தானோடு இம்மார்க்கம் சம்பந்தப்பட்டதாக ஏசாயா 14-ம் அதிகாரமும் வெளி 17-18 அதிகாரங்களும் கூறுகின்றன. நிம்ரோத் தனக்கென கீர்த்தியைச் சம்பாதித்துக்கொண்டதன் மூலம் அவனும் அவனைச் சார்ந்தவர்களும் வித்தியாசமான பெயர்களில் அநேக வருஷங்களாக, வணங்கப்பட்டு வருகின்றனர். இயேசுகிறிஸ்து தம்முடைய சகோதரருக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை, நிம்ரோத்தின் வழிபாடு நீடிக்கும். மற்ற நாடுகளின் சரித்திரம் வேதாகமத்தில் எழுதப் படாததால், பாபிலோனிய மார்க்கம் பெர்கமுவில் பரவிய விதத்தைச் சரித்திரத்தின் மூலமாகத்தான் நாம் அறிய முடியும். எகிப்திய, கிரேக்க பழக்கங்களின் குறிப் புகளிலிருந்து இவைகளைக் குறித்து நாம் பெரும்பாலும் அறியலாம். ஏனெனில் விஞ்ஞான அறிவையும், கணித அறிவையும் எகிப்தியர் கல்தேயரிடமிருந்து பெற்றனர். கிரேக்கர்கள் இவைகளை எகிப்தியர்களிடமிருந்து பெற்றனர். பண்டைய காலத்தில் இந்நூல்கள், மார்க்கத்தின் ஒரு பாகமாகக் கருதப்பட்டு, அவைகளைக் கற்பிக்கும் பொறுப்பு, மார்க்க ஆசாரியர்களிடம்ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஒரு தேசம் மற்றொரு தேசத்தை வெல்லும்போது, தோற்கடிக் கப்பட்ட தேசம் ஜெயித்த தேசத்தின் மார்க்கத்தைக் கடைபிடிப்பது அக்காலத்தின் வழக்கமாயிருந்தது. கிரேக்கர்களும், பாபிலோனியரும் ஒரேவிதமான இராசிமண்டலத்தின் அடையாளங்களைப் (SIGNS OF THE ZODIAC) பின்பற்றுவது இதன் காரணமாகத் தான் இருக்க வேண்டும். அநேக தெய்வங்களை வழிபடும் பழக்கத்தை கிரேக்கர்கள் எகிப்தியரிடமிருந்து பெற்றனரென்று எகிப்தியரின் புராதன நூல்களில் எழுதப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பாபிலோனின் பழக்க வழக்கங்கள் தேசத்திற்குத் தேசம் பரவி, ரோமாபுரி, சீனா, இந்தியா, அமெரிக்கா தேசங்களில் காணப்பட்டன. ஆதிகாலத்தில் மக்கள் கடைபிடித்த மார்க்கம் பாபிலோனிய மார்க்கத்திலிருந்து வேறுபட்டது என்று புராதன சரித்திரங்கள் கூறுகின்றன. ஆதிகாலத்தில் ஒரே தேவனின் வழிபாடு உண்டாயிருந்ததென்றும், அந்த தேவன் எல்லாவற்றிற்கும் மேலானவரும் (SUPREME), நித்தியமுள்ளவரும், காணப்படாதவருமாயிருந்து, தம்முடைய வார்த்தையினால் சகலத்தையும் சிருஷ்டித்து, அன்பும், உத்தமமும், நீதியும் பொருந்தியவராகக் கருதப்பட்டா ரென்று வில்கின்ஸன் (WILKINSON), மால்லெட் (MALLETT) என்னும் சரித்திர நிபுணர்கள் கூறுகின்றனர், பின்னர் சாத்தான் மக்களின் இருதயங்களையும் சிந்தனைகளையும் பாழாக்கி சத்தியத்தைப் புறக்கணிக்கச் செய்தான். தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட சாத்தான், மக்கள் சிருஷ்டிகரை வழிபடுவது போன்று, அவனையும் வழிபடவேண்டுமென விருப்பங் கொண்டு, மக்களின் இருதயத்தைக் கவர்ந்து, அவனைத்தொழும்படி ஏவினான். உலக முழுவதும் அவனுடைய மார்க்கம் பரவவேண்டுமென்ற அவனுடைய விருப்பம் உண்மையாகவே நிறைவேறிற்று. தேவன் ரோமரின் நிருபத்தில் இதை ஆமோதிக்கிறார். `அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்னு மகிமைப்படுத்தாமலும் ஸ்தோத்தரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்’ (ரோமர் 1.21, 25). சாத்தான் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன், அவன் விடிவெள்ளியின் மகனென்று வேதத்தில் அழைக்கப்படுகிறான், ஒருகாலத்தில் சத்தியம் பரவியிருந்த மக்களிடையே, தேவனைப் புறக்கணிக்கும் ஒரு கூட்டம் நாளடைவில் தோன்றி, பேய்களின் வழிபாட்டை உலகம் முழுவதும் பரப்பிற்று, சேமின் சந்ததியார் சத்தியத்தைக் கடைபிடித்து, பிசாசின் பொய்களுக்குச் செவி கொடுத்த காமின் சந்ததியாரோடு போராடினர் என்று சரித்திரம் நிரூபிக்கிறது. இதைக் குறித்து அதிகம் விவரிக்க அவசியமில்லை. உலகத்தில் இரண்டு மார்க்கங்களுண்டு என்றும், அவைகளில் பொல்லாங்கான மார்க்கம் உலகெங்கும் பரவியிருக்கிறது என்பதைக் காண்பிக்கவே இவை கூறப்பட்டன. பாபிலோனில், ஒரு தேவனின் வழிபாடு (MONOTHEISM) அநேக தெய்வங்களின் வழிபாடாக (POLYTHEISM) மாறிற்று. தேவனுடைய சத்தியத்திற்கு விரோதமாக, பிசாசின் பொய்கள் அப்பட்டினத்தில் எழும்பின. உண்மையாகவே சாத்தான் இப்பிரபஞ்சத்தின் தேவனாக, அவனால் வஞ்சிக்கப்பட்டவர்களால் தொழப்பட்டான். அநேக தெய்வங்களைக் கொண்ட விரோதியின் மார்க்கம் திரித்துவப் போதனையைக் கொண்டு தொடங்கப்பட்டது. பூர்வ காலத்திலேயே இந்த `மூன்று ஆட்களைக் கொண்ட ஒரு தேவனின்’ தத்துவம் ஆரம்பமானது. இக்காலத்திய வேத பண்டிதர்கள் இச்சரித்திரம் அறியாதது வியக்கத்தக்கது. தங்கள் முன்னோர்களைப் போன்று இவர்களும் வஞ்சிக்கப்பட்டு மூன்று ஆட்களைக் கொண்ட தேவத்துவத்தை விசுவாசிக்கின்றனர். இந்தப் போதனைக்கு ஆதாரமாக வேதத்தில் ஒரு வாக்கியத்தையாகிலும் அவர்கள் காண்பிக்கட்டும். காமின் சந்ததியார் மூன்று கடவுள்களின் தத்துவத்தைக் கொண்ட சாத்தானின் வழிபாட்டில் ஈடுபட்டபோது, சேமின் சந்ததியாரில் ஒருவராகிலும் இதை அனுசரிக்காமலிருந்தது அதிசய மூட்டுகின்றதல்லவா? தேவத்துவத்தில் மூன்று ஆட்கள் உண்டாயிருப்பார்களாயின் பின்னை ஏன் எபிரேயர்கள் `இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ என்று விசுவாசிக்க வேண்டும்? சேமின் சந்ததியில் பிறந்த ஆபிரகாம் ஒரே தேவனை இரண்டு தூதர்களோடு கண்டான். திரித்துவக் கொள்கை ஆதியில் பாபிலோனில் சமபக்க முக்கோணத்தின் (EQUILATERAL TRIANGLE) உதவியைக் கொண்டு விவரிக்கப்பட்டு, அவ்வாறே இன்று ரோமாபுரியிலும் விளக்கப்படுகிறது. எபிரேயர்கள் இவ்விதமான எண்ணத்தை உடையவர்களாயிருந்ததில்லை, அப்படியெனில் யாருடைய கொள்கை சரியானது, பாபிலோனியருடைய கொள்கையா? அல்லது எபிரேயரின் கொள்கையா? ஆசியாவில் மூன்று கடவுள்கள் கொண்ட தேவத்துவம் மூன்று தலைகளும் ஒரு தேகமும் கொண்ட ஒரு சொரூபத்தால் விளக்கப்பட்டது. சொரூபத்தின் மூன்று தலைகளும் மூன்று சக்திகளைக் குறிக்கின்றன. இந்தியாவில், ஒரே தேவன் மூன்று உருவங்களைக் கொண்டவராயிருக்கிறார் என்று கருதப்படுகிறது. நவீன வேத சாஸ்திரம் இந்தத் தத்துவத்தை ஒட்டி அமைந்திருக்கிறது. ஜப்பான் தேசத்தில் மூன்று தலைகளைக் கொண்ட புத்த சிலையொன்றுண்டு. இவைகளெல்லாவற்றைக் காட்டிலும் திரித்துவ கொள்கையை நன்கு விளக்குவது பின்வரும் உருவங்களைக் கொண்ட ஒரு அமைப்பு. (1) பிதாவாகிய தேவனைக் குறிக்கும் ஒரு கிழவனின் தலை, (2) வித்தாகிய குமாரனைச் சித்தரிக்கும் ஒரு வட்டம் (CIRCLE), (3) பரிசுத்த ஆவியை வெளிப்படுத்தும் புறாவின் சிறகுகளும் வாலும் தேவத்துவத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூன்று ஆட்கள் உண்டு என்னும் திரித்துவப் போதனையை இது நன்றாக விவரிக்கிறது. ரோமாபுரியிலும் இத்தத்துவமும் கைக்கொள்ளப்படுகிறதை நீங்கள் காணலாம், விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததியாருக்கும் தேவத்துவத்தைக் குறித்த வெளிப்பாடு உண்டாயிருந்ததைப் பார்க்கிலும் சாத்தானுக்கும் அவனை வழிபடுபவர்களுக்கும் அதிகம் உண்டாயிருந்தது என்று நாம் நம்பமுடியுமா? தேவனுடைய பிள்ளைகளைக் காட்டிலும் சாத்தானின் பிள்ளைகளுக்கு தேவனைப் பற்றிய அறிவு அதிகமாயிருக்கக்கூடுமா? நவீன வேதபண்டிதர்கள் திரித்துவத்தைக் குறித்துப் பேசும்போது நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அவ்வாறு விசுவாசிக்கின்றனர். இங்கு குறிக்கப்பட்டவைகள் யாவும் முற்றிலும் உண்மை என்பதை நான் கூற ஆசிக்கிறேன்’ சாத்தான் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் அளிக்கும் எந்த வெளிப்பாடும் பொய்யாகவே இருக்க வேண்டும். அவன் ஒரு கொலைகாரன். அவனுடைய திரித்துவப் போதனையும் ஆயிரக்கணக்கானவர்களை நிர்மூலமாக்கி இயேசு கிறிஸ்து வரும்வரை இன்னும் அநேகரை நிர்மூலமாக்கும். சாத்தான் முதலில் உண்மையான தேவத்துவத்தில் சிறிய மாற்றத்தை மாத்திரம் கொண்டுவந்தான் என்று சரித்திர வாயிலாக நாம் அறியலாம். அப்பொழுது தேவன் பின்வருமாறு அறியப்பட்டார்; 1. நித்திய பிதா, 2. மானிடத் தாய்க்குள் உருவாக்கப்பட்ட தேவனுடைய ஆவி, 3. அதன் விளைவினால் உண்டான திவ்விய குமாரன் (ஸ்திரீயின் வித்து), சாத்தான் இதோடு நின்றுவிடவில்லை. மக்கள் அவனை முழுவதுமாக வழிபட வேண்டுமென்று கருதி ஈடுபட்ட செயலில், அவன் இன்னும் பூரண வெற்றிபெறவில்லை. ஆகையால் அவன் அவர்களைச் சத்தியத்தினின்று அதிகமாக விலகச் செய்தான், காணக்கூடாத மகத்தான நித்தியபிதா, மக்களின் விவகாரங்களில் கவலை கொள்ளாமல் மௌனமாக இருக்கிறாரென்றும் ஆகையால் அவரை மௌனமாகத் தொழுது கொள்ளலாம் என்னும் போதனையை அவன் உலகமெங்கும் பரப்பினான், இதன் காரணமாக, தேவன் மறைமுகமாக அசட்டை செய்யப்பட்டார், இன்றைக்கும் இந்தியாவில் சிருஷ்டிகராகிய மௌன தேவனுக்கு ஆலயங்கள் எழுப்பப்பட்டிருக்கக் காணலாம். சிருஷ்டிகராகிய பிதாவைத் தொழுது கொள்ள அவசியமில்லாததால், மக்கள் தாயையும், பிள்ளையையும் வழிபடத் தொடங்கினர். எகிப்தில் ஈஸிஸ் (ISIS) என்ற பெயர் கொண்டதாயும், ஓஸிரிஸ் (OSIRIS) என்ற பெயர்கொண்ட மகனும் தொழப்பட்டனர். இந்தியாவில் இஸி (ISI), ஈஸ்வரன் (ISWARA) என்ற பெயர்கள் கொண்டும், ஆசியாவில் சிபேல் (SYBELE), டாயஸ் (DEOIUS) என்ற பெயர்களிலும் தாய்சேய் வழிபாடு நடந்துவந்தது. ரோமாபுரியிலும், கிரேக்க நாடுகளிலும், சீனாவிலும் இது பரவியது. சில ரோமன் கத்தோலிக்க மிஷனரிமார்கள் சீனாவுக்குச் சென்றபோது, ரோமாபுரியின் வாடிகன் அரண்மனையிலிருந்த தாய்-சேய் சொரூபத்தைப் போன்று, அந்நாட்டிலும் இருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். இவைகளுக்கெல்லாம் மூலம் தாய்-சேய் யாரென்பதை நாம் ஆராய்வோம், செமிராமிஸ் (SEMIRAMIS) என்பவள் பாபிலோனில் மூலத்தாய் தேவியாயிருந்தாள். அவள் ரீயா (RHEA) என்று கிழக்கத்திய நாடுகளில் வழங்கப்பட்டாள். அவள் கையிலேந்தியது குழந்தையாயிருப்பினும், அவன் உயரமுள்ளவனாகவும், திடகாத்திரமுள்ளவனாகவும், பெண்களை வசீகரிக்கத் தக்க அழகுள்ளவனாகவும் விவரிக்கப்பட்டான். அவன் தம்மூஸ் (TAMMUZ) என்று வேதத்தில் அழைக்கப்படுகிறான் (எசே 8.14). எழுத்தாளர்கள் அவனை பாக்கஸ் (BACCHUS) என்று அழைத்தனர். பாபிலோனில் அவன் நீனஸ் (NINUS) என்ற பெயரால் அறியப்பட்டான், அவன் ஒரே சமயத்தில் கணவனாகவும் மகனாகவும் இருப்பதாகக் கருதப்படுவதால் (HUSBAND-SON), அவன் குழந்தையாகத் தோற்றமளித்தாலும், வலிமையுள்ளவனாக விவரிக்கப்படு கிறான். இந்தியாவிலே ஈஸ்வரன் தன்னுடைய மனைவியாகிய ஈஸியின் முலைப்பாலை அருந்துவது போல் சொரூபங்கள் அமைந்திருக்கின்றன. பாபிலோனில் நீனஸ் என்று அழைக்கப்பட்டவனே வேதத்தில் கூறப்பட்ட நிம்ரோத் என்பதைச் சரித்திரத்தோடு ஆதியாகமத்தில் எழுதப்பட்டவைகளை ஒப்பிடும்போது அறியலாம். பாம்பேயஸ் (POM PEIUS) என்பவர் `நீனஸ் என்னும் அசீரியாவின் ராஜா, படையெடுப்பின் வாஞ்சையின் காரணத்தால், முன்புண்டாயிருந்த மிதமான ஜீவியத்தின் முறைகளை மாற்றிப்போட்டான். அடுத்துள்ள நாடுகளோடு முதன்முதல் போர் செய்தவன் இவனேயாகும். அசீரியா தொடங்கி லிபியா வரையுள்ள எல்லா நாடுகளையும் அவன் விரைவில் கைப்பற்ற, அவர்களின் போர்செய்யும் முறையைக் குறித்த அறியாமை சாதகமாயிருந்தது’ என்று கூறுகிறார். டயோடரஸ் (DIODORUS) என்பவர், `நீனஸ் என்பவன் சரித்திரத்திலேயே மிகவும்புராதன அசீரிய ராஜா, போர் செய்வதில் ஆர்வங்கொண்டு, அவன் அநேக வாலிபர்களைப் போர் செய்யும் முறைமையில் பழக்கினான். பாபிலோனியா என்று பின்னர் அழைக்கப்பட்ட நாடுகளை அவன் கைப்பற்றினான்’ என்று எழுதியிருக்கிறார். நீனஸ் என்பவன் பாபிலோனில் மகத்தானவனாய் விளங்கி, பாபேலைக் கட்டி, அசீரியாவைக் கைப்பற்றி அதன் அரசனாகி, பாம்பேயஸ் உரைத்தவண்ணம் போர் செய்யப் பழக்கமில்லாதவர் களாய் மிதமான ஜீவியத்தைக் கடைப்பிடித்த மக்களை வென்று, அநேக ராஜ்யங்களைச் சொந்தமாக்கிக் கொண்டான். நிம்ரோத்தின் சாம்ராஜ்யத்தைப் பற்றி ஆதியாகமம் பின்வருமாறு உரைக்கிறது. `சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள்’ அந்த தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப் போய், நினிவேயையும் ரெகோபாத் பட்டணத்தையும், காலாகையும், நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான். (அதி 10. 10-12). `அசூர்’ என்பது வினைச் சொல்லாகும், மொழிப் பெயர்ப்பாளர்கள் தவறாக அதைப் பெயர்ச் சொல்லாக மொழி பெயர்த்துவிட்டனர். அப்பதம் `பலப்படுத்திக் கொண்டான்’ என்னும் அர்த்தம் பெறும். அப்படியெனில் வேதத்தின் நிம்ரோம் தான் பாபிலோனின் நீனஸ் ஆவான். அவன் உலகத்தில் முதன்முறையாக சைனியத்தை ஏற்படுத்தி, கடின அப்பியாசத்தின் மூலம் அவர்களை யுத்தத்திற்குப் பழக்குவித்து, சிநெயார் தேசத்திற்கப்பால் சென்று தேசங்களை வென்று, நினிவே போன்ற பட்டினங்களைக் கட்டினான். பாழடைந்த நினிவே இன்றைக்கும் `நிம்ரௌத்’ (NIMROUD) என்று அழைக்கப் படுகிறது. நீனஸ் யாரென்பதை நாம் கண்டுபிடித்துவிட்டோம். அவனுடைய தகப்பனைக் குறித்து சிறிது ஆராய்வோம். சரித்திரத்தில் அவன் `பேல்’ (BEL) என்று அழைக்கப் படுகிறான். பாபிலோன் ஸ்தாபிக்கப்பட அவசியமாயிருந்த எல்லா ஒழுங்குகளையும் அவன் செய்த பிறகு அவனுடைய குமாரனான நீனஸ் அதை ஸ்தாபித்து அதன் முதல் ராஜாவானான். வேதத்தில் கூஷ் என்பவன் நிம்ரோத்தின் தகப்பனென்று எழுதப்பட்டிருக்கிறது. `கூஷ் நிம்ரோத்தைப் பெற்றான்’ (ஆதி 10.8). காம் என்பவன் கூஷைப் பெற்றான் (ஆதி 10.6). எகிப்திய சரித்திரத்தில் பேல் என்பவன், `ஹெர்மிஸ்’ HERMES) என்ற பெயரால் அறியப்படுகிறான். `ஹெர்மிஸ்’ என்ற பதத்திற்குக் `காமின் குமாரன்’ என்று அர்த்தம். அப்படியெனில் கூஷ் என்பவனுக்குப் பேல் என்பது மறுபெயராயிருக்க வேண்டும். விக்கிரக தெய்வங்களின் கருத்துக்களை அவன் வெளியிட்டதாகக் கருதப்பட்டானென்று சரித்திரம் கூறுகிறது. மெற்கூரி என்பது அவனுடைய வேறொரு பெயராகும். (அப் 14. 11-12). இவனைக் குறித்து ஹைஜினஸ் (HYGINUS) என்னும் சரித்திர ஆராய்ச்சியாளர் பின்வருமாறு கூறுகிறார். `அநேக காலங்களாக மக்கள் ஜவ் (JOVE) (அதாவது யெகோவா) என்னும் தேவனின் அதிகாரத்திற்குக் கீழ்பட்டு, தங்களுக்கென பட்டினங்கள் ஒன்றையும் ஸ்தாபிக்காமலும், சட்டங்கள் ஒன்றும் உண்டாக்கிக் கொள்ளாமலும், ஒரே மொழியைப் பேசி வந்தனர். அதன் பின்பு அவர்கள் வித்தியாசமான மொழிகளைப் பேசியபோது, அவைகளுக்கு மெர்கூரி (பேல், கூஷ்) அர்த்தம் கூறிவந்தான். இவனே பூமியை மக்களுக்கு நாடுகளாகப் பகிர்ந்து கொடுத்தான். அதன் பின்பு, நாடுகளிடையே சச்சரவு ஏற்பட்டது’ மக்கள் உண்மையான தேவனை விட்டுப் பின்வாங்கி வித்தியாசமான மார்க்கத்தைப் பின்பற்றக் காரணமாயிருந் தவன் நிம்ரோத்தின் தகப்பனான கூஷ் (அல்லது பேல்) என்பதை நாம் இதன் மூலமாக அறியலாம். பாபேல் கோபுரம் கட்டுவதன் எண்ணத்தை மக்களுக்குள் புகுத்தியது இவனே. அவனுடைய மகன் நிம்ரோத், அதைக் கட்டிமுடித்தான். கோபுரம் கட்டுவதற்கு மக்களை ஊக்குவித்ததன் விளைவாக அவர்களிடையே பிரிவினையும், குழப்பமும் ஏற்பட்டது என்பதை நாமறிவோம். அநேக தெய்வங்களின் வழிபாட்டை கூஷ் மக்களிடையே புகுத்தினான். மக்கள் மனிதரைத் தெய்வங்களாகத் தொழ ஆரம்பித்தபோது, கூஷ் தெய்வங்களின் தகப்பனாகக் கருதப்பட்டான். ரோம புராணங்களில், `ஜானஸ்’ (JANUS) என்ற பெயர் இவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவன் இரண்டு தலைகள் கொண்டு, ஒரு தடியும் கையில் ஏந்தினவனாக அவைகளில் சித்திரிக்கப்பட்டிருக்கிறான். அந்தத் தடியின் மூலம் அவன் மக்களைத் தாறுமாறாக்கிச் சிதறிடித்தான் என்று புராண சரித்திரம் கூறுகிறது. ஜானஸ், `முன்னோர்கள் என்னைக் `குழப்பம்’ என்று அழைத்தனர் என்று கூறியதாக ஓவிட் (OVID) என்பவர் எழுதியிருக்கிறார். ஆம், வேதத்தில் கூஷ் என்று அழைக்கப்பட்டவன் பேல், பேலஸ், ஹெர்மிஸ், ஜானஸ் போன்ற வித்தியாசமான பெயர்களால் அழைக்கப்பட்டான். அவன் ஒரு தேவனின் வழிபாட்டை (MONOTHEISM) எதிர்த்து, தேவர்களின் கருத்துக்களை அவன் மக்களுக்கு எடுத்துரைப்பவன் என்னும் எண்ணத்தை அவர்களிடையே பரப்பினான். அதனால் தேவன் கோபங்கொண்டு, மக்களைச் சிதறடித்து அவர்களிடையே குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டாக்கினார். தேவர்கள் மனிதர்களின் மூலம் வெளிப்படுகின்றனரென்று புராணங்கள் கூறுகின்றன. இதன் மூலமாக `முன்னோர்களின் வழிபாடு’ (ANCESTOR WORSHIP) மக்களிடையே தோன்றிற்று. இதைக் குறித்து சரித்திரத்தில் ஆராய முற்படுவோம். பிதா, குமாரன், ஆவி என்னும் மூன்று கடவுள்களின் வழிபாட்டை கூஷ் முதன் முதலில் ஏற்படுத்தினான் என்று சரித்திரம் கூறுகிறது. இவர் மூவரும் எல்லாவற்றிலும் சமமானவர்கள். ஸ்திரீயின் வித்து இவ்வுலகத்தில் தோன்றும் என்பதைக் கூஷ் அறிந்திருந்தான். ஆகையால் அஞ்ஞான வழிபாட்டில் ஒரு ஸ்திரீயும் அவள் வித்தும் இடம் பெறவேண்டும். நிம்ரோத் மரித்த பிறகு, அவனுடைய மனைவியாகிய செமிராமிஸ் (SEMIRAMIS) என்பவள் அவனைத் தெய்வமாக்கி, அவள் அவன் தாயெனக் கூறிக்கொண்டாள், பின்னர் அவள் தேவர்களின் தாயாக ஆக்கப்பட்டாள் (இதைப் போன்று மரியாளும் ரோமன் சபையில் தேவியாக ஆக்கப்பட்டாள். அவள் பாவமில்லாதவளாயிருந்து, தேவனின் தாயாகும் சிலாக்கியம் பெற்றாள் என்று அவர்கள் கூறுகின்றனர்). செமிராமிஸ் நிம்ரோதை `செரோஷ்டா (ZEORASHTA) என்று அழைத்தாள், அதற்கு `வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஸ்திரீயின் வித்து’ என்று அர்த்தம். சிறிது காலம் கழித்து, அந்த ஸ்திரீ, மகனைக் காட்டிலும் அதிகமாக மக்களின் கவனத்தைக் கவர்ந்தாள். கூடிய சீக்கிரத்தில், அவள் தன்னுடைய குதிங்காலின்கீழ் சர்ப்பத்தை நசுக்குவது போன்று சித்தரிக்கப்பட்டு, `விண்ணுலக ராணி’ என்று அழைக்கப்பட்டாள். அது போன்று, இன்றைக்கு இயேசுவின் தாயாகிய மரியாள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு, அவளுக்கில்லாத தன்மைகள் பெற்றவளாகக் கருதப்பட்டு, `மத்தியஸ்தம் செய்யும் மரியாள், `எல்லா விசுவாசிகளுக்கும் தாயான மரியாள், `சபையின் தாய்’ போன்ற வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள், பாபிலோனிய வழக்கமான முன்னோர்களின் வழிபாடு’ எல்லா மார்க்கத்தைக் காட்டிலும் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தில் அதிக இடம் பெற்றிருக்கிறது. பாபிலோனில் தான் இயற்கையின் வழிபாடும் முதன் முதலாகத் தோன்றியது. சூரியனையும், சந்திரனையும் அந்நாட்டு மக்கள் தெய்வங்களாகத் தொழ ஆரம்பித்தனர். இயற்கையில் காணப்படும் எல்லாவற்றிலும் சூரியன் முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதனுக்கு நெருப்பு உருண்டையாக அது வானத்தில் காணப்பட்டு, அவனுக்கு வெளிச்சத்தையும் உஷ்ணத்தையும் அளிக்கிறது. அதன் காரணமாக அது முக்கியமான தெய்வமாக `பாகால்’ என்ற பெயரில் அக்காலத்தில் தொழப்பட்டது. அநேக சமயங்களில் சூரியன் ஒரு நெருப்பு வட்டமாகச் சித்திரிக்கப்பட்டது. சொற்ப காலத்திற்குள், சர்ப்பம் இவ்வட்டத்தைச் சுற்றி வரையப்பட்டு, சூரியனின் அடையாளமாகக் கருதப்படடது. மக்களும் சர்ப்பத்தை வணங்குவதன் மூலம், சூரியதேவனை வணங்குவதாக எண்ணினர். அப்பொழுது தான் சாத்தானின் இருதயத்திற்குள் உண்டாயிருந்த வாஞ்சை நிறைவேறியது. அவன் ஒரு தெய்வமாகத் தொழப்பட்டான். அவனுடைய சிங்காசனம் நிலைநிறுத்தப்பட்டது. அவனுடைய அடிமைகள் அவனுக்குத் தலை வணங்கினர். பெர்கமுவில் அவன் உயிருள்ள சர்ப்பமாகத் தொழப்பட்டான். நன்மை தீமை அறியத்தக்க விருட்சம், உயிருள்ள சர்ப்பத்தின் ரூபத்தில் ஏவாளை மாத்திரமல்ல, மானிட வர்க்கத்தின் பெரும்பாலாரை வஞ்சித்தது. பாபிலோன் சாத்தானின் இருப்பிடமாயிருக்க, பெர்கமு எவ்வாறு அவனுடைய உறைவிடமாயிற்று என்பதைச் சரித்திரம் விளக்குகிறது. மேதியரும், பெரிசியரும், பாபிலோனைக் கைப்பற்றியபோது, ஆசாரிய உத்தியயோத் தைச் செய்த அத்தாலஸ் (ATTALUS) என்னும் ராஜாவும் அவனைச் சார்ந்த ஆசாரியர்களும் பெர்கமுவுக்குச் சென்றனர். இவன் தன்னுடைய ராஜய்த்தை ரோம சாம்ராஜ்யத்தின் வெளிப்புறத்தில் ஏற்படுத்தி, பிசாசின் பாதுகாப்பில் செழித்தோங்கினான். அஞ்ஞான வழிபாடு பெர்கமுவில் தலையெடுக்க இவன் காரணமாயிருந்தான். கடிந்து கொள்ளுதல் வெளி. 2.14 - 15. `ஆகிலும் சில காரியங்களைக் குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக் கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். பெர்கமு சபையின் காலத்தில்,கர்த்தர், அவர் வெறுக்கும் இரண்டு போதனைகளைக் கடிந்துகொள்கிறார். அவை. 1. பாகால் பேயோரில் இஸ்ரவேல் விக்கிரகாராதனைக்கும் பாவத்துக்கும் உட்பட காரணமாயிருந்த பிலேயாமின் போதகம், 2. எபேசு சபையின் காலத்தில் கிரியைகளாகத் தொடங்கின நிக்கொலாய் மதஸ்தரின் போதகம். பெர்கமு சபையிலுள்ளவர் மேற்கண்ட போதகங்களைப் பின்பற்றுவதோடுகூட, பாபிலோனியரின் அஞ்ஞான வழக்கங்களையும் கைக்கொண்டதாக வேதம் கூறுவதால், பாபிலோனிய மார்க்கம் கிறிஸ்தவ மார்க்கத்தோடு இங்கு கலந்துவிட்டது என்று நாம் முடிவு செய்யலாம். கி.பி. 36 முதல் கி.பி. 325 முடியவுள்ள சரித்திரத்தை நாம் ஆராயும்போது, இது உண்மையாகவே இருக்கிறது. ஆதிக் கிறிஸ்தவர்கள் (பெரும்பாலும் யூதர்கள்) எருசலேமிலிருந்து சிதறடிக்கப்பட்டபோது, அவர்கள் சிதறிய எல்லாவிடங் களிலும், முக்கியமாக யூத ஜெப ஆலயங்களில் (SYNAGOGUES), சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர். இவர்கள் சிதறடிக்கப்பட்ட மூன்று வருடங்களுக்குள், அதாவது சுமார் கி.பி. 36-ல் யூனியா (JUNIUS), அன்றோனிக்ரு (ANDRONICUS) என்பவர்களால் சுவிசேஷம் ரோமாபுரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இவர்களிருவரும் அக்காலத்தில் அப்போஸ்தலரென்று அழைக்கப்பட்டனர் (ரோமர் 16.7). அநேக வருஷங்களாக இவ்வூழியம் ரோமாபுரியில் வளர்ந்து கொண்டே வந்தது. ஆனால் யூதர்களுக்குள் அடிக்கடி நேர்ந்த சச்சரவின் காரணமாக கிளாடியஸ் (CLADIUS) சக்கரவர்த்தி அவர்களை ரோமாபுரியினின்று விரட்டியடித்தான். அதனால் அங்கு ஏற்படுத்தப்பட்ட சிறு சபையின் பெலன் முற்றிலும் குன்றிப்போயிற்று. ஒருக்கால் அச்சபையின் மூப்பர்களும் யூதர்களாயிருந்து, அவர்களும் விரட்டியடிக்கப்பட்டிருக்கலாம். இதனால், சபையும் கண்காணிக்கப்படாத நிலையில் இருந்திருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைகளும் அக்காலத்தில் புத்தகங்களாக எழுதிவைக்கப்படாததனால், சபையை வழிகாட்ட தேவனுடைய ஆலோசனை கிடைக்கப் பெறாமல் மக்கள் தத்துவஞானிகள் (PHILOSOPHERS), அஞ்ஞானிகள் போன்ற கொடிய ஓநாய்களின் உபதேசங்களுக்குச் செவிகொடுத்து, சத்தியத்தை விட்டுப் பின்வாங்கி, அஞ்ஞானிகளின் ஆசாரங்களைக் கிறிஸ்தவ பெயர்களோடு சபையில் புகுத்தினர். யூனியாவும், அன்றோனிக்கும், பதின்மூன்று வருடங்கள் கழித்து, அதாவது கி.பி. 54-ல் ரோமாபுரிக்குத் திரும்பியபோது, சபை கிறிஸ்தவ பெயர்கொண்ட அஞ்ஞான வழக்கங்களைக் கடைபிடிக்கக் கண்டு, அதிக பிரம்மிப்படைந்தனர். சபையில் பீடங்கள் கட்டப்பட்டு,அதன்மேல் தூபங்காட்டி, அஞ்ஞான வழிபாடு சிறப்பாக நடந்தேறியது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட சபையின் தலைவர்களைக் காண்பதும் அரிதாயிருந்தது. ஆகையால், உண்மையான விசுவாசத்தில் நின்ற ஒரு சிலரைக் கொண்டு, ஒரு புதிய சபைரோமாபுரியின் இரண்டாவது சபை தொடங்கினது. தேவன் தம்முடைய கிருபையினால், அற்புதங்களையும், அடையாளங்களையும் இச்சபையில் விளங்கப் பண்ணினதால், மூன்றாவது சபை வெகு சீக்கிரம் ஏற்படுத்தப்பட்டது. ரோமாபுரியின் முதலாம் சபையிலுள்ளவர்கள் தங்கள் வழிபாடுகளில் கிறிஸ்தவர்களாய் இராமல் அஞ்ஞானிகளாயிருப்பதைக் குறித்து அநேகமுறை கடிந்துகொள்ளப்பட்டும், அவர்கள் தங்கள் ஸ்தானத்தைக் கைவிடாமல், ரோமாபுரியின் முதல்சபை, அதாவது ரோமன் கத்தோலிக்க சபை, என்று இன்றும் அழைக்கப்படுகின்றனர். கிறிஸ்தவர்களென்று பெயர் கொண்டிருக்கும் எல்லாரும் பிசாசினால் துன்புறுத்தப்பட்டு அரசாங்கத்தின் கொடுமைக்கு ஆளாவர் என்று நம்மில் பெரும்பாலோர் தவறாக எண்ணுகின்றோம், ரோமாபுரியின் முதல் சபை பலுகிப் பெருகி, சக்ரவர்த்திகளும் அரசாங்க அதிகாரிகளும் அரசியல் காரணத்தினால் அதை ஆதரிக்கத் தொடங்கினர். அரசாங்கத்தை உண்மையான விசுவாசி களுக்கு விரோதமாய் ஏவிவிட்டு, அவர்களுடைய சபையில் சேராதவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினர். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்துவரும் பாலிகார்ப்பின் சமகாலத் தவருமான அனிசிடஸ் (ANICETUS) என்னும் முதலாம் சபையின் கண்காணிப்பாளர் இவ்வாறு விசுவாசிகளைத் துன்புறுத்திய தலைவர்களில் ஒருவராவார், முதலாம் சபையில் அஞ்ஞான வழிபாட்டைக் கைக்கொண்ட செய்தியை பாலிகார்ப் கேட்டு, அங்கு சென்று, அவைகளைக் கைவிட அவர்களிடம் மன்றாடினார். அப்போஸ்தலர்கள், பரிசுத்தவான்கள் பெயர் சூட்டப்பட்ட சொரூபங்களின் முன்னிலையில் அவர்கள் தாழவிழுந்து பணிந்து கொண்டதையும், மெழுகுவர்த்தி ஏற்றி, பீடங்களின் மேல் தூபங்காட்டியதையும், ஈஸ்டர் என்ற பெயரினால், சூரியதேவனை கனம் பண்ணும் தட்டை வடிவமுள்ள ரொட்டியை உயர்த்தி தெய்வங்களுக்கு மதுபான நைவேத்தியம் (LIBATION) செய்து திராட்சரசத்தை ஊற்றி, இவ்விதமாய் நற்கருணையை அவர்கள் ஆசரித்ததையும் அவர் கண்டார். வயது சென்ற பாலிகார்ப் 1500 மைல்கள் பிரயாணம் செய்தும், பலன் ஒன்றுமில்லாமல் போயிற்று. தேவன் அவர் மூலமாக`எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். அவனைப் போகவிடு` (ஓசி 4.15) என்று கூறினார். இதன் பின்பு, பாலிகார்ப் திரும்பி வரவேயில்லை. அனிசிடஸுக்குப் பிறகு விக்டர் என்பவர் கண்காணிப்பாளராக பதவியேற்ற போது, இன்னும் அதிகமாக அஞ்ஞான பண்டிகைகளையும், ஆசாரங்களையும் புகுத்தியதுமன்றி, உண்மையான சபைகளும் இவைகளை ஆசரிக்க வேண்டுமென்று அவர்களிடம் கோரினார். அவருடைய வேண்டுகோளுக்கு அவர்கள் இணங்காததைக் கண்டதும், அவர்கள் அரசாங்க அதிகாரிகள் மூலம் விசுவாசிகளைக் கொடுமைப்படுத்தி, நியாய ஸ்தலத்தில் நிறுத்தி, சிறையிலடைத்து, அநேகரை மரணத்திற் குட்படுத்தினார். விக்டரின் சிநேகிதனான காலிஸ்டஸ் (CALLISTUS) என்பவர், விக்டரின் தூண்டுதலின் பேரில் செப்டிமஸ் செவிரஸ் (SEPTIMUS SEVERUS) என்னும் சக்கரவர்த்தியின் உதவியால், அஸ்தரோத்தின் வழிபாட்டின் முறையை அனுசரிக்காமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக் கைக்கொண்டு நற்கருணையை ஆசரித்த 7000 தெசலோனிக்கேய கிறிஸ்தவர்களைக் கொன்றுபோட் டான் என்று சரித்திரம் கூறுகிறது. காயீன் ஆபேலைக் கொன்றதுபோல், கள்ளச்சபையும் தேவன் பேரில் கொண்ட கோபத்தை வெளிப்படுத்த, தெரிந்துகொள்ளப்பட்ட வர்களைக் கொன்று போட்டது. இவையெல்லாம் நிகழும்போதும், கள்ளச் சபைமனந்திரும்ப வேண்டுமென உண்மையான சபை பாடுபட்டது. ஆயினும் அவர்களுடைய முயற்சிகளில் அவர்கள் பலனைக் காணவில்லை. கள்ளச்சபை நாளடைவில் பெரிதாகி, அதன் செல்வாக்கும் ஓங்கினது. அது முதலாவது தொடங்கப்பட்டதால், அதுவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் உண்மையான பிரதிநிதி என்று கூறிக்கொண்டு, உண்மையான சபையை அது அவமதித்தது. மூன்றாவது சபையின் காலத்திற்குள்ளாக, ஒரே பெயரைத் தரித்த, இரண்டு முற்றிலும் வித்தியாசப்பட்ட சபைகள் தோன்றின. அவைகளில் ஒன்று சத்தியத்தைவிட்டு விலகி, விக்கிரகாராதனையில் ஈடுபட்டு, கலப்படைந்து, ஜீவனற்றதாய், மரணத்தின் அடையாளத்தைப் பெற்றிருந்தது. என்றாலும், அது அநேக அங்கத்தினர்களைக் கொண்டு, செல்வாக்குள்ளதாய் விளங்கி, உலகத்தாரால் ஆதரிக்கப்பட்டது. மற்றது துன்புறுத்தப்பட்ட ஒரு சிறு கூட்டமாக, தேவனுடைய வாத்தையைப் பின்பற்றி, வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்தி, மரித்தோரை உயிர்ப்பித்து, ஜீவனுள்ளதாய் விளங்கினது. அது தன்னுடைய ஜீவனை சிநேகிக்காமல், அவருடைய நாமத்தையும் விசுவாசத்தையும் மரணபரியந்தம் பற்றிக் கொண்டிருந்தது. கான்ஸ்டன்டைன் (CONSTANTINE) சக்கரவர்த்தி, மக்களுக்கு வழிபாட்டின் சுதந்திரம் அளிக்கும்வரை, ரோம அரசாங்கம் உண்மையான விசுவாசிகளைப் பயங்கரமாகத் துன்புறுத்தியது. இச்சுதந்தரம் அளிக்கப்படுவதற்கு இரு காரணங்கள் உண்டாயிருந்தன. முதலாவதாக, கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்தாத அநேக நல்ல சக்கரவர்த்திகளும், அவர்களைத் துன்புறுத்துகிறவர்களும் மாறி மாறி அரசாண்டதால், கிறிஸ்தவர்களைக் குறித்து அரசாங்கத்தின் கொள்கையில் உண்டான மாறுதல்கள் அர்த்தமற்றதா யிருந்தன. ஆகையால் கிறிஸ்தவர்களின் விவகாரங்களில் தலையிடாமலிருப்பது நல்லது என மக்கள் எண்ணினார்கள். இரண்டாவதாக, ராஜ்யத்தின் அதிகாரத் தைக் கைப்பற்ற, கான்ஸ்டன்டைன் அதிகமாகப் போராட வேண்டியிருந்தது. ஒரு இரவு, சொப்பனத்தில் ஒரு வெள்ளைச்சிலுவை அவன் முன்னால் நிற்கக்கண்டு, அதை நல்ல சகுனமாக அவன் கருதி, கிறிஸ்தவர்கள் ஜெபித்தால் அவன் வெற்றி பெறுவது திண்ணம் என்று எண்ணி, அவன் வெற்றி பெற்றால், கிறிஸ்தவர்களுக்கு சுதந்தரம் அளிப்பதாக வாக்களித்தான், அவ்வாறே அவன் வெற்றியடைந்த போது கி.பி. 312-ல் எழுதப்பட்ட நான்டிஸ் சாசனத்தின் மூலம் அவர்களுக்கு வழிபாட்டின் சுதந்திரம் அளிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட சுதந்தரம் ஆவிக்குரிய ஜீவியத்தில் நன்மை பயக்கவில்லை. அதற்கு மாறாக அது தீமையை விளைவித்தது. கான்ஸ்டன்டைன், சபையின் உபகாரியாக (PATRON) ஆனதால், அதன் விவகாரங்களில் அவன் அதிக சிரத்தை காண்பிக்க நேர்ந்தது. சபையில் காணப்படும் வேற்றுமைகளை அகற்ற அவன் முன்வந்தான். அலெக்ஸாண்டரின் கண்காணிப்பாளரான ஏரியஸ் (ARIUS) என்பவர், இயேசு தேவனல்லவென்றும், அவர் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டதால், அவரைக் காட்டிலும் தாழ்ந்தவரென்றும் தம்மைச் சார்ந்தவர்களுக்குப் போதித்து வந்தார். ஆனால் மேற்கத்திய சபைகள், முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டு இயேசு `தேவத்துவத்தின் பரிபூரணமாகத் திகழ்ந்து பிதாவோடு சமநிலையிலுள்ளவர் என்று கூறின. இந்த வித்தியாசபேதங்களோடு கூட, அஞ்ஞான ஆசாரங்கள் சபையின் வழிபாட்டில் இடம்பெற ஆரம்பித்தன. எல்லாக் கூட்டத்தவரிடையேயுள்ள வேற்றுமையான கருத்துககளைப் போக்கி, அவர்களை ஒன்றுபடுத்த முனைந்து, கான்ஸ்டன்டைன் கி.பி. 325-ல் நிசாயா ஆலோசனைச் சங்கத்தைக் கூட்டினான். கான்ஸ்டன்டைனால் தொடங்கப்பட்ட இந்த ஐக்கியம் அழியாது. இன்றைக்கும் உயிர்பெற்று, உலக சபைகளின் மகாநாடாக அது அமைந்திருப்பது ஒரு அதிசயம் தான். கான்ஸ்டன்டைன் சாதிக்கக்கூடாம லிருந்ததை இன்றைக்குள்ள ஐக்கியம் சாதிக்கும் என்பது திண்ணம். சபையின் விவகாரங்களில் அரசாங்கம் தலையிடுவது ஒரு மூடத்தனமாக செயலாகும். ஏனெனில் உலகப் பிரகாரமானவர்கள் வேதாகமத்திலுள்ள சத்தியங்களையும், சபையின் முறைகளையும் ஒருக்காலும் அறிந்து கொள்ள முடியாது. அதனால்தான் ஏரியஸ் என்பவரின் போதனை தவறு என்ற ஆலோசனை சங்கத்தின் தீர்மானம், இரண்டு வருடங்கள் கழித்து கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தியால் மாற்றப்பட்டு, அநேக வருஷங்களாக இந்தத் தவறான போதனை மக்கள் மேல் சுமத்தப்பட்டது. சபையும் அரசாங்கமும் ஒரு நாளில் ஒன்று படுமென்பதைக் கர்த்தர் முன்னறிந்திருந்தார் `பெர்கமு’ என்ற வாக்கிற்கு `பூரண விவாகம்’ என்று அர்த்தம். ஆம், சபையும் அரசாங்கமும் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டது. அரசியலும் மதமும் சேர்க்கப்பட்டன. இந்த ஐக்கியத்தின் விளைவால் தோன்றியவர்கள், மிகவும் பயங்கரமான கலப்புள்ளவர்களாய் (HYBRIDS) இருந்தனர். அவர்களிடம் சத்தியம் காணப்படாமல், முதன் முதல் கலப்பின் விளைவால் தோன்றின காயீனின் பொல்லாங்கான வழிகள் அனைத்தும் அவர்களிடையே காணப்பட்டன. அரசாங்கமும் சபையும் ஒன்றுக்கொன்று இணைந்தது மாத்திரமல்ல; பாபிலோனிய மார்க்கமும் அதிகாரப் பூர்வமாக முதல் சபையில் சேர்க்கப்பட்டது. கிறிஸ்துவின் நாமத்தைச் சாத்தான் தரித்துக்கொண்டு, தேவனுக்கு மாத்திரம் உரிய பதவியை அவன் வகித்து, தேவனாகத் தொழப்பட்டான். அரசாங்க உதவியினால் வெள்ளைச் சலவைக் கற்களால் உண்டாக்கப்பட்ட மரித்த பரிசுத்தவான்களின் சிலைகளும், பீடங்களும் கொண்ட அழகான கட்டடங்கள் சபைகளுக்கு உரிமையாயின. இந்தக் காலத்தில்தான் வெளி 13.3-ல் குறிக்கப்பட்ட `சாவுக்கேது வாய் காயப்பட்டிருந்த மிருகம்’ (அஞ்ஞான ரோம சாம்ராஜ்யம்), மீண்டும் உயிர்பெற்று, வல்லமை பொருந்திய `பரிசுத்த ரோம சாம்ராஜ்யமாகத் தோன்றியது. அஞ்ஞான ரோம சாம்ராஜ்யம் இனி முற்றிலும் அழிந்துபோனாலும் கவலை கொள்வதற்கில்லை, ஏனெனில் அவளின் மார்க்க சாம்ராஜ்யம் யாரும் காணாதவாறு, உள்ளிருந்து அரசாண்டு உலகத்தில் தலைசிறந்து விளங்கும். நான் இப்பொழுது கூறியது வேத ஆதாரங்கொண்டது. வேதத்தில் காணப்படாததை நான் கூறுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம். `ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்! அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ள தாயிருந்தது. அது உனக்கு எதிரே நின்றது; அதன் ரூபம் பயங்கரமாயிருந்தது. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதன் மார்பும் அதன் புயங்களும் வெள்ளியும், அதன் வயிறும் அதன் தொடையும் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும் அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது. நீர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்த்து உருண்டு வந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதன் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது. அப்பொழுது; அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடை காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப் போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டு போயிற்று; சிலையை மோதிய கல்லோ வென்றால், ஒரு பெரிய பர்வதமாக பூமியையெல்லாம் நிரப்பிற்று. சொப்பனம் இதுதான்; அதன் அர்த்தத்தையும் ராஜ சமூகத்தில் தெரிவிப்போம். ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாக இருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையும் மகிமையையும் அருளினார், சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளை யெல்லாம் ஆளும்படி செய்தார், பொன்னான அந்தத் தலை நீரே. உமக்குப் பிறகு கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும். பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும். நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல் உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக் குகிறதோ, அப்படியே இது நொறுக்கித் தகர்த்துப்போடும், பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் கண்மண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே, இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும், கால் விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒரு பங்கு உரமும் ஒரு பங்கு நெரிசலுமாயிருக்கும். நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தக் கலப்பார்கள், ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாதது போல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப் பார்கள். அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து உருண்டு வந்து, இரும்மைபயும் வெண்கலத்தையும், களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே. அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும். இனிமேல் சம்பவிக்கப் போவதை மகாதேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார். சொப்பனமானது நிச்சயம்; அதின் அர்த்தம் சத்தியம் என்றான்’ (தானி 2.1-45). தானியேலின் காலம் முதற்கொண்டு கர்த்தராகிய இயேசு தாவீதின் குமாரனாக வந்து ஆளுகை செய்யும் காலம் வரைக்கும், இப்பூமியில் நடக்கவிருக்கும் சம்பவங்களைத் தானியேல் தீர்க்கதரினமாக உரைக்கிறான். இந்தக் காலம் வேதத்தில் `புறஜாதியாரின் காலம்’ என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு காலத்திலும் தலைசிறந்து விளங்கிய சாம்ராஜ்யத்தை அடிப்படையாகக் கொண்டு இக்காலம் சரித்திரப் பிரகாரமாக நான்கு பிரிவுகளாகப் பரிக்கப்படுகின்றன. அவை (1) பாபிலோனியா காலம், (2) மேதிய-பெர்சியர் காலம், (3) கிரேக்கர் காலம், (4) ரோமர் காலம், இவைகளிலெல்லாவற்றிலும் உயர்ந்தது பாபிலோனிய அரசாட்சியாகும். அது சொரூபத்தின் `பசும் பொன் தலையாக’ச் சித்திரிக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக மேதியர்-பெர்சியர் சாம்ராஜ்யம் வல்லமையுள்ளதாய் விளங்கினது என்பதைச் சரித்திரமும் நிரூபிக்கிறது. இது வெள்ளியால் உண்டாக்கப்பட்ட சொரூபத்தின் மார்பும், புயங்களுமாகக் காணப்படுகிறது. இதைத் தொடர்ந்த கிரேக்கர் காலத்தின் அரசன், உலகத்திலேயே மிகச்சிறந்த சேனைத் தலைவனாக விளங்கினான். அதற்குப் பொருத்தமாக வெண்கலத்தால் செய்யப்பட்ட வயிறும் தொடைகளுமாக இக்காலம் சித்திரிக்கப்படுகிறது; இதற்கு முன்பிருந்த இரண்டு சாம்ராஜ்யங்களைக் காட்டிலும் இது வல்லமை குறைந்ததாய் இருந்தது, கடைசியாக சொரூபத்தின் கால்களும் பாதங்களும் குறிக்கும் ரோம சாம்ராஜ்யம் நிறுவப்பட்டது. முதன் மூன்று சாம்ராஜ்யங்களும் உலோகங்களால் மாத்திரம் செய்யப்பட்ட அவயங்களாக வர்ணிக்கப்படும் போது, கடைசி சாம்ராஜ்யம் இரும்பின் கால்களாகவும், இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களாகவும் காட்சியளிக்கின்றது. உலோகமும் களிமண்ணும் ஒன்றுக்கொன்று கலந்து, உறுதியைக் கொடுக்காது, என்றாலும் இவ்வாறு சித்திரிக்கப் பட்ட ரோம சாம்ராஜ்யம் இந்நிலையில் இயேசுவின் வருகைவரை நிற்குமென்பது ஆச்சரியத்தை விளைவிக்கிறது. இரும்பாக வர்ணிக்கப்படும் ரோம சாம்ராஜ்யம் (இரும்பு அதிகாரத்திற்கும் எதிரிகளை நொறுக்கும் பராக்கிரமத்திற்கும் எடுத்துக் காட்டாய் இருக்கிறது). சொப்பனத்தின் பிரகாரம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அவ்வாறே அது கிழக்கத்திய சாம்ராஜ்யம் என்றும், மேற்கத்திய சாம்ராஜ்யம் என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. இவ்விரண்டும் வல்லமை பொருந்தியதாய், எதிரிகளை யெல்லாம் நொறுக்கிப் போட்டன. ஆனால் நாளடைவில் இச்சாம்ராஜ்யத்தின் வல்லமையும் குறைந்து போனது, அஞ்ஞான ரோம சாம்ராஜ்யம் தவிடுபொடியாயிற்று. அது சாவுக்கேதுவாய் காயப்பட்டது; இனி ரோமாபுரி ஆளுகை செய்யவே முடியாது என்று உலகம் நினைத்தது. அந்தத் தலை (ரோமாபுரி) சாவுக் கேதுவாய் காயப்பட்டாலும், அது மரிக்கவில்லை. `அதன் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டி ருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்த மாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றினார்கள். (வெளி 13.3). ரோமாபுரிக்குள் போப் வேறொரு நாட்டை உண்டாக்கி ராஜ்ய தூதர்கள் (AMBASSADORS) மற்றைய நாடுகளுக்கு அனுப்பி, வேறு நாட்டு தூதர்களுக்கு வரவேற்பளித்து அந்நாட்டின் அரசனாக விளங்குகிறாரென்று யாரும் உணர்வதில்லை, போப்பின் ரோமாபுரி இன்று பராக்கிரமம் பொருந்தியதாய் விளங்கி, தன்னுடைய மார்க்கத்தின் மூலம் அஞ்ஞான ரோம சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் திறமையாக மக்களை அடக்கி ஆண்டு வருகிறது. கான்ஸ்டன்டைன் சபையையும் அரசாங்கத்தையும் ஒன்று சேர்த்தபோது, ரோமாபுரி புத்துயிர் பெற்றது, அஞ்ஞான ரோமாபுரியை இயக்கிய அதே ஆவி, இப்போது போப்பின் ரோமாபுரியை இயக்கியது. நான்காவது சாம்ராஜ்யம் அழியாமல், தன் வெளித் தோற்றத்தை மாத்திரம் மாற்றிக் கொண்டது. நிசயா ஆலோசனைச் சங்கம் ரோமாபுரியின் அரசியல் ஆதிக்கத்தைச் சபையில் திருப்பியவுடனே, முதலாம் சபை எல்லை கடந்து போயிற்று. கிறிஸ்தவர்கள் என்ற பெயர் சூடியதால் துன்புறுத்தப்பட்டவர்கள், இப்பொழுது அப்பெயரைத்தரித்து மற்றவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினர். இக்காலத்தில்தான் அகஸ்டின் என்பவர் (கி.பி. 354-430), சபையானது தன் வலிமையை உபயோகித்துச் சபையை விட்டுப்போனவர்களை மறுபடியும் அதற்குள் கொண்டுவரவேண்டுமென கட்டளை விடுத்தார், சபையின் போதனைகளை எதிர்ப்பவரைக் கொலை செய்வதை தேவனுடைய வார்த்தை ஆமோதிக்கிறதென்று அவர் கூறினார். டோனடிஸ்டுகள் (DONATISTS) என்பவர்களோடு நேர்ந்த தகராறில் அவர் பின்வருமாறு எழுதினார். `தேவ வார்த்தையைப் போதிப்பதன்மூலம் மனிதர்களைத் தெய்வ வழிபாட்டிற்குக் கொண்டு வருவது நல்லது, ஆனால் அவ்வார்த்தைக்குச் செவிகொடுக்காதவரை நாம் அசட்டை செய்துவிடக்கூடாது. பயமுறுத்தியாகிலும் அவர்களை வழிக்குக் கொண்டு வரவேண்டும்; தண்டனையடைவோம் என்ற பயத்தினால் தெய்வத்தை முதலில் வழிபடுபவர்கள், பின்பு, போதனையை ஏற்றுக்கொண்டு வசனத்தின்படி நடப்பார்கள் என்பதை அனுபவம் நமக்குப் போதிக்கிறது. அன்பினால் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டவர்களைக் காட்டிலும், பயத்தினால் சீர்திருத்தப்பட்டவர் அநேகர். ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுத்த கிறிஸ்துவைப்போல் யார் நம்மை சிநேகிக்க முடியும்! பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் தம்முடைய வார்த்தையினால் அவர் ஊழியத்திற்கு அழைத்தார். ஆனால் பவுலையோ தம்முடைய பராக்கிரமத்தினால் கீழே வீழ்த்தி, பலாத்காரமாக ஊழியத்திற்கு அழைத்தார். அவனுடைய இதயத்தில் வெளிச்சம் பிரகாசிக்க வேண்டுமென, அவனுடைய கண்களை அவர் குருடாக்கிப் போட்டார்; இயேசு கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி, இழந்துபோன குமாரர்களை மீண்டும் பெற சபை ஏன் தன் வலிமையை உபயோகிக்கக்கூடாது? இயேசு கிறிஸ்து தாமே சீஷர்களை நோக்கி, `நீங்கள் சந்தை வெளியில் சென்று, மக்களைக் கட்டாயப்படுத்தி அழைத்து வாருங்கள்’ என்று கூறினார். ஆகையால் தேவனுடைய சித்தத்தினால் கிடைக்கப்பெற்ற அதிகாரத்தை உபயோகித்து சந்தைவெளியிலுள்ளவர்களைச் (சபையைச் சேர்ந்தவர்களை) சபைக்குள் கொண்டு வருவதில் ஒருவனும் குற்றம் கண்டுபிடிக்காதிருப்பானாக’. பரிசுத்தவான்களைக் கொல்ல வேண்டுமென்ற ஆர்வம் இக்காலத்தில் வளர்ந்தோங்கியது. ஸ்பானியா தேசத்தின் கள்ளச்சபை, அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து, வார்த்தையில் உறுதியாய் நின்ற மக்களுக்கு விரோதமாக அந்நாட்டுச் சக்கரவர்த்தியான மாக்ஸிமஸ் என்பவரை ஏவினது. இவர்களில் அநேகர் மந்திரவாதிகளென்றும் நன்னடத்தையில்லாதவர்க ளென்றும் குற்றஞ்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களை மரணத்தினின்று காக்க மார்டின், ஆம்ப்ரூஸ் (AMBROSE) என்ற கண்காணிப்பாளர்கள் எடுத்த முயற்சியனைத்தும் வீணாயிற்று. இக்காலம் முதற்கொண்டு இருண்ட காலங்கள் முழுவதும், மாம்சத்துக்குரிய பிள்ளைகள் ஆவிக்குரிய பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தி வந்தனர். இஸ்மவேலும் ஈசாக்கும் ஒரே தகப்பனையுடையவர்களாயிருந்தது போன்று. இவர்களும் ஒரே பிதாவைத் தங்கள் உரிமையாகப் பாவித்தனர். நாளடைவில் சத்தியம் இருளடைந்து, கடைசியில் தேவனுடைய ஒளி மங்கி எரிய ஆரம்பித்தது. இருப்பினும், `அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை’ (யோவான் 1.5) என்னும் தேவனுடைய வாக்குத்தத்தம் நிலைநிற்கும். நிம்ரோத்தின் மார்க்கம், கிறிஸ்துவ மார்க்கத்தோடு எப்பொழுது ஒன்றுபட்டது என்பதைச் சரித்திரப் பூர்வமாக நான் இதுவரை குறிப்பிடவில்லை. அத்தாலஸ் (ATTALUS) என்பவன் பாபிலோனிருந்து பெர்கமுக்குத் தப்பியோடி, ரோம சாம்ராஜ்யத்தின் வெளிப்புறத்தில் தன் ராஜ்யத்தை ஸ்தாபித்தான் என்று நான் கூறியது நினைவிருக்கலாம். அந்த ராஜ்யம் இப்பிரபஞ்சத்தின் தேவனுடைய ஒத்தாசையால் செழித்தோங்கியது. அவன் வழிவந்த மூன்றாம் அரசன் (ATTALUS III). ஒரு காரணமுமின்றி, அந்த ராஜ்யத்தை ரோமாபுரிக்கு உயிலாகக் கொடுத்தான். அவன் அவ்வாறு செய்த காரணத்தைத் தேவன் தாமே அறிவார். ஜுலியஸ் சீசர் அரசனாகப் பதவி ஏற்றபோது, அவன் குருவாகவும், ராஜாவாகவும் (PRIEST-KING) பணியாற்றி இந்த பாபிலோன் மார்க்கத்தின் கண்காணிப்பாள னானான். இவன் வழிவந்த மாக்ஸிமஸ் III (MAXIMUS III) என்ற அரசன், கண்காணிப்பாளனின் பதவியை ஏற்க மறுத்ததால், அந்தப் பொறுப்பு, அதற்கென்று நியமிக்கப்பட்ட போப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவே போப்பின் ஆதிக்கத்தின் தொடக்கம். அது தொடர்ந்து இன்றுவரை போப் ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் மூன்று கிரீடங்களைச் சூடிக்கொண்டு ரோமாபுரியில் வாழ்கிறார். ஆம், சாத்தானின் இருப்பிடம் பெர்கமுவிலிருந்து மகா ரகசியமான பாபிலோனுக்கு (ரோமாபுரிக்கு) மாற்றப்பட்டது என்பதை வெளி. 17-ம் அதிகாரம் தெளிவாக்குகிறது. இந்த நகரம் ஏழு குன்றுகளின்மேல் கட்டப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் மத்தியஸ்த பதவியையும், பாவத்தை மன்னிக்கும் தன்மையையும் அபகரித்த அந்திக்கிறிஸ்து அதை அரசாட்சி செய்கிறார். நிக்கொலாய் மதஸ்தரின் போதகம் வெளி 2.15. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத் திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். `சபையின்மேல் அதிகாரம் செலுத்துபவர்கள்’ என்ற அர்த்தத்தை `நிக்கொலாய்’ என்ற பதம் கொண்டது என்பதை நான் முன்னமே குறிப்பிட்டுள் ளேன். தேவன் எப்பொழுதும், அரசியல் சிந்தனை கொண்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களிடம்சபையின் நிர்வாகத்தை ஒப்படைத்ததேயில்லை. பரிசுத்த ஆவியினால் நிரையப்பட்டு, வசனத்தில் உறுதியாய் நின்றவர்களுக்கே இப்பொறுப்பை அவர் அளித்திருக்கிறார். மக்களிடையே வகுப்புவாதம் காணப்பட்டு, அவர்கள் பரிசுத்த ஆசாரியத்துவத்தால் (HOLY PRIESTHOOD) நடத்தப்பட அவர் ஒருக்காலம் சித்தங்கொள்ளவில்லை. சபையை நடத்துபவர் மாத்திரமல்ல, சபையிலுள்ள எல்லோரும் பரிசுத்தமாயிருக்க வேண்டும். அல்லாமலும், குருமார்கள், தேவனுக்கும் மக்களுக்குமிடையே மத்தியஸ்த ஊழியம் செய்வதை வேதவசனம் ஆதரிக்கவில்லை. அதுவுமன்றி, இவர்கள் தனிப்பட்ட முறையில் தேவனை வழிபடுவதற்கு தேவ ஆதாரம் எதுவுமில்லை. எல்லாரும் தேவனில் அன்புகூர்ந்து, அவரைச் சேவிப்பதையே அவர் விரும்புகிறார். நிக்கொலாய் மதஸ்தரின் போதகம் இவையனைத்தையும் நிர்மூலமாக்கி மக்களையும் குருமார்களையும் பாகுபடுத்தி, ஊழியக்கார ராயிருக்க வேண்டிய குருமார்களை அவர்கள் மேல் அதிகாரியாக்கிற்று. இந்தப் போதகம் ஒரு கிரியையாக முதலாம் சபையின் காலத்தில் தொடங்கிற்று. அச்சமயம் `மூப்பர்கள்’ (ELDERS) `கண்காணிப்பாளர்கள்’ (OVERSEERS) என்னும் இருவாக்குகளைக் குறித்துத் தர்க்கம் உண்டாயிற்று. ஒவ்வொரு சபையிலும் அநேக மூப்பர்கள் இருந்ததாக வேதம் கூறுகிறது. இக்னேஷியஸ் (IGNATIUS) போன்றவர்கள். கண்காணிப்பாளர்கள் ஊழியக்காரரைவிட மேலான பதவியைப் பெற்று, அவர்கள்மேல் அதிகாரம் செலுத்த வேண்டுமெனத் தவறாகப் போதித்தனர். ஆனால் உண்மையாக, `கண்காணிப்பு’ என்னும் பதம் ஒரு மனிதன் வகிக்கும் உத்தியோகத்தையும், `மூப்பன்’ என்பது உத்தியோகத்தை வகிக்கும் மனிதனையும் குறிக்கின்றன. கிறிஸ்தவ அனுபவத்தில் தேர்ச்சி பெற்றவன் மூப்பனாக அக்காலத்தில் நியமிக்கப்பட்டானேயன்றி, தேர்தலின் மூலம் ஒருவன் மூப்பனாக ஆகவில்லை. அக்காலத்தில் கண்காணிப்பாளர்கள் பவுல் தன்நிரூபங்களில் கூறியுள்ளவைகளுக்குத் தவறான அர்த்தம் கொடுக்கத் தொடங்கினர். அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகம் 20ம் அதிகாரத்தில், பவுல் மூப்பரை எபேசுவிலிருந்து மிலேத்துவுக்கு வரவழைத்த சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது. அவ்வதிகாரத்தின் 17ம் வசனத்தில் இவர்கள் `மூப்பர்கள்’ என்றும் 28ம் வசனத்தில் `கண்காணிகள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். அரசியல் சிந்தைகொண்ட இவர்கள் ஆதிக்கத்தைப் பெற எண்ணி, சபைகளின் மூப்பர்களின் மேல் அதிகாரம் செலுத்த இவர்கள் பவுலால் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டனர். இத்தகைய எண்ணம் வேதப் பிரகாரமாகவும், சரித்திரப் பிரகாரமாகவும் தவறாகும். என்றாலும் பாலிகார்ப்பைப் போன்றவர்களும் கூட இக்கொள்கையைக் கடைபிடிக்கும் ஸ்தாபனங்களில் சார்ந்தனர். முதலாம் சபையின் காலத்தில் கிரியையாகத் தொடங்கப்பட்டது ஒரு போதகமாக மாறி இன்று வரைக்கும் நீடிக்கிறது. கண்காணிப்பாளர்கள் (BISHOPS) மனிதர்கள்மேல் ஆதிக்கம் செலுத்தும் உரிமை பாவித்து, தங்களின் விருப்பப்படி அவர்களுக்கு ஊழியத்தின் பொறுப்பைப் பகிர்ந்தளித்து, அவ்வாறு செய்தவன் மூலம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நிராகரிக்கின்றனர். இது வார்த்தைக்கும், கிறிஸ்துவுக்கும் விரோதமான செயலாகும். பரிசுத்த ஆவியானவர் ஒரு முறை, `பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள்’ என்று திருவுளம் பற்றினார். (அப் 13.3). இதுவே பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலாகும். `அப்பொழுது இயேசு அவர்களைக் கிட்ட வரச்செய்து. புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், உங்களுக்குள்ளே அப்படி இருக் கலாகாது; உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாய் இருக்க விரும்பினால் அவன் உங்களுக்கு ஊழியக்காரனா யிருக்கக் கடவன். அப்படியே, மனுஷ குமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்’ (மத் 20. 25-28). நீங்களோ ரபீ என்றழைக்கப்படா திருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார். நீங்களெல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலுக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்’. (மத் 23. 8-9). ஆம், கண்காணிப்பாளன் ஊழியக்கார னேயன்றி அதிகாரஞ் செலுத்துபவனல்ல. நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தைக் குறித்து இன்னும் விரிவாக உரைக்க விரும்புகிறேன். `அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றினார்கள்’ (வெளி 13.3) என்று வெளிப்படுத்தின விசேஷம் உரைக்கிறது. காயப்பட்ட தலை உலக ஆதிக்கம் படைத்த அஞ்ஞான ரோமாபுரியைக் குறிக்கிறதென்பதை நாமறிவோம். இந்தக் தலைசொஸ்தமாகி ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்யமாக எழும்பியது. அஞ்ஞான ரோம சாம்ராஜ்யம், இதர ராஜ்யங்களிடையே பிரிவினையுண்டாக்கி, பின்னர் அவைகளின் மேல் வெற்றி சிறந்தது. அது இரக்கமின்றி அவைகளை நாசப்படுத் தியதால், அவைகள் மறுபடியும் தலைதூக்க முடியாமல் போய்விட்டது. ரோமன் கத்தோலிக்க சபையும், மக்களை வேற்றுமைப்படுத்தி, அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தி, அஞ்ஞானரோம சாம்ராஜ்யம் கடைபிடித்த கொள்கையையே கடைபிடித்து, அதன் செயல்களைத் தொடர்ந்து நடத்திவந்தது. வேற்றுமையுண்டாக்கி அதிகாரம் செலுத்துவதே தேவன் வெறுக்கும் நிக்கொலாய் மதஸ்தரின் போதகம். இந்தத் தவறு சபையில் நுழைந்தபோது கண்காணிப்பின் உத்தியோகத்தை வகிக்க மக்கள் போட்டியிடத் தொடங்கினர். இதன் காரணமாக, படித்தவர்களும், ஐசுவரியவான்களும், அரசியல்வாதிகளும் கண்காணிப்பாளராக ஏற்படுத்தப் பட்டனர். அதன் விளைவால், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல் அறவே ஒழிந்து, மனித ஞானமும் மனித திட்டமும் சபையின் நிர்வாகத்தை நடத்தி வந்தன. சபையில் ஊழியம் செய்ய கிறிஸ்தவ ஒழுக்கம் அவசியமில்லையென்றும், சபையின் சடங்காச்சாரங்களும் ஒழுங்குகளும் கடைபிடித்தலே முக்கியமென்றும் கண்காணிப்பாளர்கள் வற்புறுத்தத் தொடங்கினர். இவ்விதம் மந்தையானது பொல்லாதவர்களால் பீறுண்டு போயிற்று. இதற்கு அடுத்தபடியாக குருக்களாட்சி (HIERACHY) சபைகளில் ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பாளர்கள் வித்தியாசமான பதவிகளை ஏற்றனர். கண்காணிப்பாளர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு, அவர்கள் தலைமை கண்காணிப்பாளர்களாக (ARCHBISHOPS) அதிகாரம் செலுத்தினர். இவர்கள் மேலும் உயர்வடைந்து கார்டினல்கள் என்னும் பட்டம் பெற்றனர், மூன்றாம் போனிபேஸின் (BONIFACE THE THIRD) காலத்தில் இவர்களெல்லாருக்கும் மேலாக போப் அதிகாரம் செலுத்தினார். கிறிஸ்தவ மார்க்கம் - பாபிலோனிய மார்க்கத்தோடு ஒன்று பட்டதுமல்லாமல், நிக்கொலாய் மதஸ்தரின் போதகம் இம்மார்க்கத்தில் நுழைந்தது கர்த்தரின் பார்வைக்கு அருவருப்பை விளைவித்தது. `நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும் பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் தீட்டப்பட்டிருந்தன’ (எசே 8.10). `அவன் பலத்த சத்தமிட்டு, மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவிதஅசுத்த ஆவிகளுடைய கூடுமாயிற்று; அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள் (வெளி 18.23). அக்காலத்திலிருந்த அநேகர், தேவனுடைய பிள்ளைகள் எழுதிய நிருபங்களையும், கட்டுரைகளையும் படிக்கச் சந்தர்ப்பம் ஏற்பட்டதால், சபையில் நிறுவப்பட்ட நிக்கொலாய் மதஸ்தரின் போதகம் அவர்களைப் பாதிக்கவில்லை. இதனால் கோபங்கொண்ட சபைத் தலைவர்கள், உத்தமக் கிறிஸ்தவர்களைச் சபையிலிருந்து விலக்கி வைத்து, நிருபங்களையெல்லாம் எரித்துப் போட்டனர். `தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதற்குப் பிரத்யேக கல்வி அறிவு வேண்டும். பவுல் எழுதிய அநேக காரியங்கள் பேதுருவுக்குப் புரியவில்லை யென்று அவனே கூறியுள்ளான்’ என்பதாக அவர்கள் கூறிவந்தனர். வார்த்தை மக்களிடமிருந்து அகற்றப்பட்ட பிறகு, அவர்கள் குருவானவர்கள் பிரசங்கித்ததைக் கேட்டு, அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியதா யிருந்தது. குருவானவர்கள் மக்களின் சிந்தனைகளையும் ஜீவியத்தையும் ஆட்கொண்டு, கொடூரமான குருக்களாட்சிக்கு அவர்களை அடிமைகளாக்கினர். பத்தாம் தியோடோஸியஸ் (THEODOSIUS X) எழுதிய சாசனம் அவர்கள் மக்களை அடிமைகளாக்கியதன் சான்றாக இருக்கிறது. அவர் முதலாம் சபையில் ஞானஸ்நானம் பெற்றவுடனே இதை விடுத்தார். அது பின்வருமாறு. `எங்களுடைய பிரஜைகள், பேதுரு ரோமர்களுக்குப் போதித்து, வழிவழியாக வந்தவர்களால் பாதுகாக்கப்பட்டு, இப்பொழுது ரோமாபுரியின் போப்பான டமஸஸ் என்பவராலும் அலெக்ஸாண்டரியாவின் கண்காணிப் பாளரான பேதுரு என்பவராலும் கைக்கொள்ளப்பட்ட மார்க்கத்தைக் கடைபிடிக்க நாங்கள் மூன்று சக்கரவர்த்திகளும் கட்டளையிடுகிறோம். பரிசுத்த திரித்துவத்திலே சமமகிமை பெற்ற பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஒரே தேவத்துவத்தை நாம் விசுவாசிப்போம். இவ்விசுவாசத்தைக் கடைபிடித்தவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட வேண்டும். மூடத்தனமாக ஏனைய மார்க்கங்களைக் கைக் கொள்ளுகிறவர்களைச் சமயபேதமுள்ளவர்கள் (HERETICS) என்று நிந்திக்க வேண்டும். அல்லாமல், நம்முடைய சபையின் தலைவர் திவ்விய ஞானம் கொண்டு அவர்களுக்கு அளிக்கும் தண்டனையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சக்கரவர்த்தி விடுத்த பதினைந்து சட்டங்கள் மார்க்க வழிபாட்டின் உரிமையைப் பறித்து, கத்தோலிக்க மார்க்கத்தில் சேராதவர்களை அரசாங்க அலுவலகத் திலிருந்து தள்ளி, அபராதம், நாடு கடத்தல், சொத்து பறிமுதல், மரணம் போன்ற தண்டனைகளை விதித்தன. இவைகளனைத்தும் இக்காலத்திலும் சம்பவிக்க சமயம் நெருங்கிவிட்டது. ரோமன் கத்தோலிக்க சபை தன்னைத் தாய்ச் சபையென அழைத்துக் கொள்ளுகிறது. அது உண்மைதான். ரோமாபுரியின் முதல்சபையாக இருந்த அது, பின்வாங்கி பாவத்தில் பிரவேசித்தது. ஸ்தாபனமாக மாறின முதல் சபை இதுவே. நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளும் போதகங்களும் அதனிடையில் காணப்பட்டன. இச்சபை தாயாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தாயாக அது இருந்து அநேக குமாரத்திகளை ஈன்றது. ஒரு மகள் ஸ்திரீயிலிருந்து தோன்றுகிறாள். இரத்தாம்பர ஆடையை அணிந்த ஸ்திரீ ரோமாபுரியின் ஏழு மலைகளின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் வேசியாயிருந்து அநேக குமாரத்திகளைப் பெற்றாள். இவர்கள் தாம் அவளிலிருந்து வெளிவந்து திரும்பவும் ஸ்தாபனங்களையுண்டாக்கி, நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தைப் பின்பற்றி, அவளையே மறுபடியும் சேர்ந்த பிராடெஸ்டண்ட் மார்க்கங்கள். வேசியென்பவள் விவாகத்தின்போது கொடுத்த வாக்குத்தத்தத்தை மீறினவள். அவள் தேவனை விவாகம் செய்து, பின்னர் பிசாசோடு வேசித்தனம் செய்து அதன் விளைவாக அவளைப் போன்ற வேசிப் பெண் மக்களை ஈன்றெடுத்தாள். தாயும் மக்களும் ஒன்று சேர்ந்து வார்த்தைக்கும் ஆவியானவருக்கும், கிறிஸ்துவுக்கும் விரோதமான அந்திக்கிறிஸ்துவாக இருக்கின்றனர். ஆதியிலிருந்த கண்காணிப்பாளர்கள் வார்த்தைக்கு மேலாகத் தங்களை எண்ணினர். மக்கள் பாவங்களை அறிக்கையிடும்போது, அவைகளை மன்னிக்க இவர்களுக்கு அதிகாரமுண்டென்று அவர்களிடம் கூறினர். இது உண்மையல்ல. இரண்டாம் நூற்றாண்டில் அவர்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததை நாமறிவோம். இரண்டாம் நூற்றாண்டிலேயே சத்தியம் கறைபடுமாயின், சத்தியம் கொடுக்கப்பட்ட காலத்திலிருந்து 2000 வருஷம் அப்பாலுள்ள சபை பயங்கரமான நிலையிலிருப்பதைக் குறித்து அதிசயப்பட யாதொன்றுமில்லை. ஓ! தேவனுடைய சபையே, உனக்குள்ளது ஒரே நம்பிக்கை. வார்த்தைக்குத் திரும்பி அதைக் கைக்கொள்வாயாக. பிலேயாமின் போதகம் வெளி 2.14. விக்கிரங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும், வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. நிக்கொலாய் மதஸ்தரின் போதகம் காணப்படும் எந்த சபையிலும் பிலேயாமின் போதகம் கைக்கொள்ளப் படவேண்டும். தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளும் முறையைத் தள்ளிவிட்டு, வசனத்தைவிட்டு விலகி, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நிராகரிக்கும் எந்தச் சபையும், அதற்குப் பதிலாக வேறு வழிபாட்டின் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன் விளைவாக, பிலேயாமின் போதகம் சபைகளில் வேரூன்றத் தொடங்கிற்று. புதிய ஏற்பாட்டின் சபையில் பிலேயாமின் போதகம் எதைக் குறிக்கிறது என்று அறியவேண்டுமெனில், பழைய ஏற்பாட்டின் காலத்தில் பிலேயாமின் மூலம் நிகழ்ந்த சம்பவத்தைப் படித்து அதை மூன்றாம் சபையின் காலத்தோடும் அதைத் தொடர்ந்து இன்றுவரை உண்டாயிருக்கும் சபையின் காலங்களோடும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்தச் சம்பவம் எண்ணாகமம் 22-ம் அதிகாரம் முதல் 25-ம் அதிகாரம் முடிய எழுதப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்கள் அக்காலத்தில் பெந்தேகோஸ்தே அனுபவம் பெற்ற கூட்டத்தாராவர். அவர்கள் இரத்தத்தில் அடைக்கலம் புகுந்து, சிவந்த சமுத்திரத்தில் ஞானஸ்நானம் பெற்று, அதனின்று வெளிவந்து, ஆவியில் நிறைந்து, மிரியாம் தம்புரு வாசிக்க, அவர்களெல்லாரும் ஆடிப் பாடினர். சிறிது காலம் பிரயாணம் செய்த பிறகு, அவர்கள் மோவாப் தேசத்தின் எல்லைகளில் வந்தனர். லோத்துக்கு அவன் குமாரத்தியின்மூலம் பிறந்தவன் மோவாப் என்பதை நீங்கள் அறிவீர்கள். லோத்து, ஆபிரகாமின் சகோதரியின் குமாரன். ஆகையால் இஸ்ரவேலரும் மோவாபியரும் பந்துக்கள். மோவாபியர்கள் சத்தியத்தை அறிந்திருந்தும் அதைப் பின்பற்றவில்லை. இஸ்ரவேலர் மோவாபின் எல்லைகளையடைந்தபோது, அவர்கள் மோவாபிய ராஜாவிடம் தூதர்களை அனுப்பி, நாங்கள் உமது சகோதரர்கள், உம்முடைய தேசத்தின் வழியாய்ப் பிரயாணம் செய்ய எங்களுக்கு உத்திரவு கொடுக்க வேண்டும். நாங்களோ அல்லது எங்கள் மிருகங்களோ இத்தேசத்தில் புசித்தாலும் குடித்தாலும் அதற்குரிய கிரயத்தைக் கொடுத்துவிடுவோம்’ என்று கூறினார்கள். ஆனால் பாலாக் ராஜா இதைக் குறித்துக் கலக்கமடைந்தான். அந்த நிக்கொலாய் மதஸ்தரின் தலைவன், பரிசுத்த ஆவியின் அடையாளங்களையும் அற்புதங்களையும் கொண்டு, தேவனுடைய மகிமையால் பிரகாசிக்கிற சபையை அவனுடைய தேசத்தின் வழியாய் அனுமதிக்க மறுத்துவிட்டான். அவனுடைய ஜனங்களில் சிலர் அவர்களைச் சேர்ந்து விடுவார்களோ என்று அவன் நினைத்தான். அவன் அதிகமாக நடுக்கமுற்றதால், கூலிக்காகக் தீர்க்க தரிசனம் உரைக்கும் பிலேயாமை அணுகி, அவனுக்கும் தேவனுக்குமிடையில் மத்தியஸ்தம் செய்து, இஸ்ரவேல் ஜனங்களைக் கர்த்தர் சபிக்குமாறு அவனிடம் ஜெபிக்கக் கோரினான். அரசியல் விவகாரங்களில் பங்கு கொண்டு மேன்மையுள்ளவனாக வேண்டுமென்று கருதிய பிலேயாம், அதற்கு உடனே இசைந்தான். அவனாகவே அவர்களைச் சபிக்க முடியாததால், தேவனிடத்தில் உத்திரவு பெற்று அவர்களைச் சபிக்க எண்ணி, தேவனுடைய அனுமதிக்காக அவன் காத்திருந்தான். இன்றைக்கு நம்முடைய மத்தியிலிருக்கும் நிக்கொலாய் மதஸ்தரும் அவர்கள் முறையைப் பின்பற்றாதவர்களைச் சபிக்க முற்படுகின்றனர். பிலேயாம் புறப்பட்டுப் போகத் தேவனிடத்தில் உத்தரவு கேட்டபோது, தேவன் அதற்கு மறுத்துவிட்டார். அப்பொழுது அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று தெரியவில்லை. அவனோடு செல்ல பாலாக் வற்புறுத்தி, அவ்வாறு செய்தால் அதிகசன்மானம் வழங்குவதாகக் கூறியதைக் கேட்டதும், பிலேயாம் மறுபடியும் தேவனுடைய சமூகத்தில் சென்றான். தேவன் ஒருமுறை அளித்த பதிலே போதுமானது. ஆனால் சுயசித்தம் கொண்ட பிலேயாமுக்கு, அவனுடைய கருத்து தேவனுடைய சித்தத்திற்கு முரண்பட்டிருந்ததால், அது போதவில்லை. அவனுடைய சொற்கேளாமையின் தன்மையைக் கண்ட தேவன், அவனோடு எழுந்து போக உத்தரவிட்டார். இதைக் கேட்ட பிலேயாம் அதிக சந்தோஷ மடைந்து, வேகமாக கழுதையின்மேல் சேணங்கட்டி விரைந்து சென்றான். இஸ்ரவேலரை ஆசீர்வதிப்பதே தேவனுடைய சித்தமென்றும் அவன் இருபது முறை சென்று அவர்களைச் சபிக்க எத்தனித்தாலும் அது கைகூடாது என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும். இன்றைக்கும் மக்கள் பிலேயாமைப் போன்றிருக்கின்றனர், அவர்கள் மூன்று கடவுள்களில் விசுவாசம் கொண்டு, தேவனுடைய நாமத்திற்குப் பதிலாக அவருடைய பட்டப் பெயர்களில் ஞானஸ்நானம் பெறுகின்றனர். இருந்தாலும் பிலேயாமின் மேல்தேவன் தம்முடைய ஆவியை அனுப்பியது போன்று, இவர்கள் மேலும் அனுப்புவார். ஆவியைப் பெற்ற காரணத்தால் அவர்கள் செய்வது யாவும் சரியென்று அவர்கள் நினைப்பார்கள். அவர்களெல்லாரும் பிலேயாமைச் சார்ந்தவர்களாயிருக் கின்றனர். தங்களுடைய சொந்த வழிகளைப் பின்பற்றி, `தேவன் எங்களை ஆசீர்வதித்தார். ஆகையால் தாங்கள் செய்வது சரியாயிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறாரென்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் பிலேயாமைப் போன்று இவர்கள் தேவனுடைய வார்த்தையை எதிர்த்து, அவன் சென்ற ஸ்தாபன வழியைப் பின்பற்றி, தவறான போதகத்தைக் கடைபிடிக்கின்றனர். பிலேயாம் ரஸ்தாவில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு தூதன் அவனை வழிமறித்தான். அவனுக்குக் கிடைக்கப் பெறும் ஐசுவரியம், கனம் இவைகளின் நினைவினால் ஆவிக்குரிய காரியங்களில் குருடாக்கப்பட்ட இந்தக் தீர்க்கதரிசி (கண்காணிப்பாளன் கார்டினல்) உருவிய பட்டயத்தோடு நிற்கும் தூதனைக் காணமுடியவில்லை. அவனைச் சுமந்த கழுதை தூதனைக் கண்டு, வழிவிலகி, கடைசியில் பிலேயாமின் காலைச் சுவரோடு நெருக்கிற்று. அதற்கப்புறம், அது செல்ல மறுத்துவிட்டது, பிலேயாம் கழுதையின் மேலிருந்து இறங்கி அதை அடித்தான். அப்பொழுது கழுதை அவனோடு பேசத் தொடங்கிற்று, கழுதை அன்னிய பாஷையில் பேச தேவன் அனுமதித்தார். கழுதை ஒரு கலப்புள்ள மிருகமல்ல. அது மூல வித்திலிருந்து தோன்றியது, குருடாக்கப்பட்ட அந்தத் தீர்க்கதரிசியை அது நோக்கி, `நான் உமது கழுதையல்லவா, இவ்வளவு காலம் விசுவாசத்தோடு உம்மைச் சுமந்து கொண்டு செல்லவில்லையா; என்று கேட்டது, அதற்குப் பிலேயாம், `அது உண்மைதான், ஆனால் இப்பொழுது நீ என்னைச் சுமந்துகொண்டு செல்லாவிடில், உன்னைக் கொன்று போடுவேன் என்று சொன்னான். தேவன் எத்தனையோ முறை அன்னிய பாஷையில் பேசியிருக்கிறார். பெல்ஷாத்சாரின் விருந்திலும், பெந்தேகோஸ்தே நாளிலும் அவர் அன்னிய பாஷையில் பேசினார். அன்னிய பாஷைவரப்போகும் நியாயத் தீர்ப்பை முன்னறிவிக்கிறது. பிலேயாமின் கண்கள் திறக்கப்பட்டு, அவன் தூதனைக் கண்டான். அந்தக் கழுதை அவன் உயிர்தப்பக் காரணமாயிருந்ததென்றும், இல்லாவிடில் தேவனைச் சோதித்ததற்காக அவன் கொல்லப்பட்டிருப்பானென்றும் தூதன் கூறினான். பிலேயாம் திரும்பிச் சென்று விடுவதாக வாக்களித்தபோது, பாலாக்கின் மனிதரோடு போவதற்கு அவன் உத்தரவு பெற்று, தேவன் அவனுக்கு அருளியதை மாத்திரம் கூறக் கட்டளையையும் பெற்றான். பிலேயாம் சென்று, சுத்தமான மிருகங்களைப் பலியிட ஏழுபலி பீடங்களைக் கட்டினான். அவன் வரப்போகும் மேசியாவுக்கு அறிகுறியாக ஒரு ஆட்டுக் கடாவைப் பலி செலுத்தினான். தேவனிடத்தில் நெருங்குவதற்குக் கடைபிடிக்க வேண்டிய முறைகளை அவன் நன்கு அறிந்திருந்தான். இருப்பினும் தேவனுடைய வல்லமையற்றவனாக அவன் இருந்தான். இன்றைக்கும் இதுவே சம்பவிக்கிறது, நிக்கொலாய். மதஸ்தரே, இதை நீங்கள் அறிந்துகொள்ள முடியவில்லையா? இஸ்ரவேலர் பள்ளத்தாக்கில் அதே பலியைச் செலுத்தி, அதே முறைகளைக் கையாண்டனர், ஆனால் இவர்களிருவரிடையே ஒரு வித்தியாசம் காணப்பட்டது. அதாவது, இஸ்ரவேலர் பரிசுத்த ஆவியின் அடையாளங்களைக் கொண்டவரா யிருந்தனர்; அவர்கள் மத்தியில் மாத்திரம் தேவன் பிரசன்னராயிருந்தார். ஆசாரங்கள் உங்களுக்கு ஒரு பிரயோசனத்தையும் அளிக்காது. பரிசுத்த ஆவியின் கிரியைகள் வகிக்கும் ஸ்தானத்தை ஆசாரங்கள் கைப்பற்ற முடியாது. நிசயாவில் இதுதான் நிகழ்ந்தது. அவர்கள் தேவனுடைய போதனைக்குப் பதிலாகப் பிலேயாமின் போதகத்தைப் பின்பற்றினர். அதன் காரணமாக, அவர்கள் இடறிவிழுந்து, ஆவிக்குரிய மரணம் எய்தினர். பலி செலுத்தின பிறகு, பிலேயாம் தீர்க்கதரிசனம் உரைக்க ஆயத்தமானான். ஆனால் தேவன் அவனுடைய நாவைக் கட்டினதால், இஸ்ரவேலரை அவன் சபிக்க முடியாமற் போயிற்று. அதற்குப் பதிலாக அவர்களை அவன் ஆசீர்வதித்தான். இதைக்கேட்ட பாலாக் கோபமூண்டான். அந்தத் தீர்க்க தரிசனத்தைப் பரிசுத்த ஆவியானவர் உரைத்ததால், பிலேயாம் அதைக் குறித்து ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்பு பாலாக் பிலேயாமைப் பள்ளத்தாக்குக்குக் கொண்டு சென்று, அவர்களின் பின்பாகத்தைப் பார்த்து எப்படியாயினும் அவர்களைச் சபிக்க வேண்டினான். பாலாக் உபயோகித்த தந்திரத்தையே இன்று மக்கள் உபயோகிக்கின்றனர். இன்றைய பெரிய ஸ்தாபனங்கள் சிறிய கூட்டங்களை அவமதித்து, அவர்களைக் குற்றப்படுத்த ஏதாவது சிறிய தவறு அவர்களிடம் காணப்படுமா என்று தேடிப் பார்த்து, அதை வெளியரங்கமாக்கி அவர்களை நிந்திக்கின்றனர். நவீன நாகரீகத்தைக் கடைபிடிப்பவர்கள் பாவம் செய்தால் அதைக் குறித்து கவலைகொள்ள யாருமில்லை. ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒருவன் சிறிய பிழை செய்தாலும், உடனே எல்லா பத்திரிகைகளும் அதைப் பிரசுரிக்கின்றன. ஆம், இஸ்ரவேலருக்கும் பின்பாகம் (மாமிசத்துக்குரியவைகள்) உண்டாயிருந்தது. அவர்களில் காணப்பட்ட சில கிரியைகள் போற்றத்தகாத வைகள். ஆயினும், அவர்களுடைய தவறுகளின் மத்தியில், கிருபையினாலும், தெரிந்து கொள்ளுதலினாலும் உண்டாகும் தேவனுடைய நோக்கத்தின்படி, அவர்களைப் பகலில் வழிநடத்த மேகஸ்தம்பமும், இரவில் வழிநடத்த அக்கினிஸ்தம்பமும், அடிக்கப்பட்ட கன்மலையும், வெண்கல சர்ப்பமும், அற்புதங்களும் அடையாளங்களும் அவர்களுக்குண்டாயிருந்தன. கர்த்தருக்குள் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயிருந்தனர். பட்டங்களைப் பெற்று ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்ட நிக்கொலாய் மதஸ்தரைத் தேவன் மதிக்கவில்லை. ஆனால் வார்த்தையில் நிலைநின்ற இஸ்ரவேல் ஜனங்களைத் தேவன் பாதுகாத்து வந்தார். எகிப்திலிருந்து வெளியேறி, கடினமான பிரயாணம் செய்த அவர்கள் நாகரீகமுள்ளவர்களாகத் தோன்றவில்லை, என்றாலும் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனக்கூட்ட மாயிருந்தனர். 300 வருட காலமாக, அவர்கள் மந்தைகளை மேய்ப்பதையும், நிலத்தைப் பண்படுத்துவதையும், எகிப்தில் அடிமைத் தனத்தினாலுண்டான மரண பயத்தையுமே அறிந்திருந்தனர். ஆனால் இப்பொழுதோ அவர்கள் அடிமைக் கட்டுகளிலிருந்து விடுதலையாயினர், தேவனுடைய சுயாதீன சித்தப்படி, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டனர். மோவாபியர் அவர்களை இகழ்ந்தனர். மற்றைய ஜாதிகளும் அவர்களை நிந்தித்தனர். அவ்வாறே ஸ்தாபனத்திலுள்ளவர்கள், அதிலில்லாத வர்களை இகழ்ந்து, அவர்களைத் தங்கள் ஸ்தாபனங்களில் சேர்க்க முயற்சிப்பர். அவர்கள் சேர மறுத்தால், அவர்களை நிர்மூலமாக்க முற்படுவர். உங்களில் சிலர், `மோவாபியர் ஒரு ஸ்தாபனமென்றும், இஸ்ரவேலர் அவ்வாறில்லையென்றும், நீங்கள் எங்ஙனம் கூற முடியும்?’ என்று ஒருவேளை கேட்கலாம். இதைக்குறித்து வேதம் தெளிவாகக் கூறுகிறது. பழைய ஏற்பாட்டின் சம்பவங்களனைத்தும், நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத்திற்காகத் தான் எழுதப்பட்டிருக்கின்றன. `கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள், (எண் 23.9) கர்த்தர் அவர்களைக் கன்மலையுச்சியிலிருந்து பார்க்கிறார். அவர்களிடம் குற்றத்தைக் கண்டுபிடிக்க அவர்களைப் பார்க்கவில்லை; அவருடைய அன்பின் சிகரத்திலிருந்தும், கிருபையின் சிகரத்திலிருந்தும் அவர் அவர்களைக் காண்கிறார். அவர்கள் தனியே வாசமாயிருந்தனர். அவர்கள் ஒரு ஸ்தாபனமாக இல்லை. அவர்களை வழிநடத்த ஒரு ராஜா அவர்களுக்கு இல்லை. தேவனை ஆவியாகக் கொண்ட ஒரு தீர்க்கதரிசி அவர்களை வழிநடத்திவந்தார், வார்த்தை அந்த தீர்க்கதரிசிக்கு உண்டாகி, அது மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஐக்கிய நாடுகளைச் சேரவில்லை. அல்லது அவர்கள் உலக சபைகளின் ஐக்கியம், பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் போன்ற ஸ்தாபனங்களைச் சார்ந்தவரல்ல. அவர்கள் தேவனைச் சார்ந்தவராயிருந்து, அவரோடு ஒன்று சேர்க்கப்பட்டிருந் தனர். உலக மக்களின் ஆலோசனை அவர்களுக்கு அவசியமில்லை. அவர்களுக்கு ஆலோசனை கூறத்தேவன் அவர்கள் மத்தியிலிருந்தார். தேவனை நெருங்கும் முறையையும், பரிசுத்த ஆவியினால் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெறும் முறையையும் பிலேயாம் அறிந்திருந்தாலும், அவன் கள்ளச் சபையின் தலைவனாக விளங்கினான், பாலாக்கின் நன்மதிப்பைப் பெறுவதற்காக, இஸ்ரவேல் ஜனங்களைப் பாவத்துக்குட்படுத்தும் ஒரு திட்டம் அவன் வகுத்தான், ஏவாள் வஞ்சிக்கப்பட்டால், பாவத்திற்கு நியாயத் தீர்ப்பான மரணம் மானிடரை ஆட்கொள்ளும் என்று சாத்தான் அறிந்தது போன்று, இஸ்ரவேலர் பாவம் செய்தால், தேவன் அவர்களை நிச்சயமாக அழிக்க வேண்டுமென்று பிலேயாம் அறிந்திருந்தான். அவனுடைய திட்டத்தை நிறைவேற்ற, இஸ்ரவேல் ஜனங்களைப் பாகால் பேயோரின் விருந்துக்கழைத் தான். எகிப்தியரின் பண்டிகைகளை இஸ்ரவேலர் கண்டிருந்தனர். ஆகையால் இந்தப் பண்டிகையைப் பார்ப்பதால் அல்லது மோவாபியரோடு சாப்பிடுவதால் தவறு எதுவுமில்லையென்று அவர்கள் எண்ணியிருந்தனர், அவர்களோடு ஐக்கியப்படுவதால் தவறு என்ன? அவர்களில் அன்புகூர்ந்து அவர்களை நம்மிடம் இழுத்துக் கொள்ள வேண்டுமென்று இன்று மக்கள் எண்ணுவது போல், அன்றும் அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் பருவமுள்ள மோவாபிய பெண்கள் நடனமாடிச் சுழன்று, தங்கள் ஆடைகளைக் கழற்றியபோது, இஸ்ரவேலர் தங்கள் மாமிச இச்சை தூண்டப்பெற்று, அவர்களோடு விபசாரம் செய்தனர். இதனால் கோபங்கொண்ட தேவன், அவர்களில் இருபத்து நான்காயிரம் பேரைச் சங்கரித்தார். இந்த ஐக்கியத்தைத்தான் கான்ஸ்டன்டைன் நிசயாவில் உண்டாக்கி அது இன்றுவரை நீடித்து வருகிறது. தேவனுடைய பிள்ளைகள் ஒரு மாநாட்டிற்கு நிசயாவுக்கு அழைக்கப்பட்டனர். சபையும் அஞ்ஞானிகளோடு சேர்ந்து புசித்து, களியாட்டில் பங்கு கொண்டபோது (அதாவது கிறிஸ்தவப் பெயர்களைக் கொண்ட அஞ்ஞானப் பண்டிகை, ஆசாரம் போன்றவைகள்). அது கண்ணியில் விழுந்தது. அது ஆவிக்குரிய விபசாரம் செய்ததால் தேவன் அதைவிட்டு வெளி நடந்தார். தேவனுடைய வார்த்தையை ஒருவன் விட்டு, பரிசுத்த ஆவியைப் பெறுவதற்குப் பதிலாக ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தால், அவன் ஆவிக்குரிய பிரகாரம் மரிக்கிறான். ஆம், நீங்கள் ஸ்தாபனத்தைச் சேரவேண்டாம். தேவனுடைய வார்த்தை, பரிசுத்த ஆவி இவைகளின் ஸ்தானத்தைக் கைப்பற்றிய பிரமாணங்களையும், பாரம்பரிய வழக்கங்களையும் நீங்கள் கைக்கொள்ள வேண்டாம். அவ்வாறு செய்தால், நீங்கள் மரித்து, தேவனிடத்திலிருந்து நித்திய காலமாய் பிரிக்கப்படுவீர்கள். ஒவ்வொரு காலத்திலும் இதுதான் சம்பவிக்கிறது. தேவன் மக்களை விடுவிக்கிறார். அவர்கள் இரத்தத்தின்கீழ் வெளிவந்து, வார்த்தையினால் பரிசுத்தமாக்கப்பட்டு, தண்ணீர் முழுக்கினால் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகின்றனர்; சிறிது காலம் கழித்து, ஆதியில் கொண்டிருந்த அன்பு தணிந்து போய், தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தங்களுக்குப் பெயரைத் தேடிக்கொள்ளவும் அவர்கள் ஒரு ஸ்தாபனமுண்டாக்கிக் கொள்கின்றனர். அதன் காரணமாய், அவர்கள் பரிசுத்த ஆவியையிழந்து, வழிபாட்டின் முறையை மாத்திரம் கைக்கொள்கின்றனர். அவர்கள் சபையின் பிரமாணங்களினாலும் ஆசாரங்களினாலும் தங்களைக் கலப்பாக்கிக் கொண்டதால், ஜீவனற்றவர்களாகிவிடுகின் றனர். இஸ்ரவேலரைப் பிலேயாம் விபசாரத்திற்குட்படுத் தினான். அன்றைய ஆவிக்குரிய விபசாரம் இன்றும் ஸ்தாபனங்களில் காணப்படுகின்றது. எல்லா விபசாரக் காரர்களும் அக்கினிக் கடலில் தள்ளப்படுவர். ஸ்தாபனங்களை வேசிகளாகத் தேவன் கருதுகிறார். ஆம், வேசியும் அவள் குமாரத்திகளும் அக்கினிக் கடலில்பங்கடைவர். ஸ்தாபனங்கள் தேவனால் உண்டாக்கப்பட்டவையல்ல. சபையின் மக்களை வேற்றுமைப்படுத்துவது தவறான ஆவியாகும். ஸ்தாபனங்கள் இதைத்தான் செய்கின்றன. அவைகள் தேவனுடைய வார்த்தையைவிட்டு விலகும்போது, ஆவிக்குரிய விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன. கான்ஸ்டன்டன் விசேஷ பண்டிகைகளை மக்களுக்கு அளித்தான். இவையெல்லாம் கிறிஸ்தவ பெயர்கள் சூடப்பட்ட அஞ்ஞான பண்டிகைகள், சில சமயங்களில் கிறிஸ்தவ வழிபாட்டின் முறை அஞ்ஞான வழக்கங்களோடு கலக்கப்பட்டன. கான்ஸ்டன்டைன் சூரியதேவனின் (SUN GOD) வழிபாட்டை தேவகுமாரனின் (SON OF GOD) வழிபாடாக மாற்றினான். டிசம்பர் 21-ம் தேதி சூரிய தேவனின் பண்டிகையைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, அதை டிசம்பர் 25ம் தேதி மாற்றி, அமைத்து, தேவகுமாரனின் பிறந்த நாளென்று அதை அழைத்தனர். ஆனால் அவர் டிசம்பரில் பிறக்கவில்லையென்று நாம் அறிவோம். அவ்வாறே, அஸ்தரோத்தின் பண்டிகையை, ஈஸ்டர் பண்டிகையாக மாற்றினர். அன்று, கிறிஸ்தவர்கள் தேவனுடைய உயிர்த்தெழுதலைக் கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது. உண்மையாகவே அது அஸ்தரோத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு அஞ்ஞானப் பண்டிகை. அவர்கள் ஆலயங்களில் பீடங்களைக் கட்டி, சுருபங்களை வைத்தனர். வேதத்தில் காணப்படாத அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. முன்னோர்களைத் தொழும் வழக்கத்தை அவர்கள் மக்களுக்குப் போதித்ததன் விளைவாக, இன்று ரோமன் கத்தோலிக்க சபை மரித்தவர்களை வழிபடுவதில் உலகத்தில் தலைசிறந்து விளங்குகிறது. பிராடெஸ்டண்டு ஸ்தாபனங்களும் இவைகளை இன்று கடைபிடிக்கிறதை நாம் காணலாம். அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசித்தனர். அவர்கள் உண்மையாகவே விக்கிரகங்களுக்குப் படைத்த பொருள்களைப் புசித்தன ரென்று நாம் இதை அர்த்தங்கொள்ளக்கூடாது எருசலேமிலுள்ள யூதசபை இதை விலக்கியிருந்தாலும், பவுல், ஒருவன் மனச்சாட்சி சுத்தமாயிருந்தால், அவன் விக்கிரகங்களுக்குப் படைப் பதைப் புசிப்பதில் யாதொன்றுமில்லையென்றும், ஆனால், ஆவியில் பலங்குன்றின ஒரு சகோதரனுக்கு இச்செய்கை இடறலாயிருப்பின், அதைத் தவிர்க்க வேண்டுமென்றும் புறஜாதிகளுக்குக் கூறியுள்ளான். தவிர, யோவானுக்கு அளிக்கப்பட்ட வெளிப்பாடு புறஜாதிகளின் சபைகளுக் குரியதேயன்றி யூத சபைகளுக்குரியதல்ல. ஆகையால் மேற்கூறிய வாக்கின் அர்த்தம் வேறாக இருக்க வேண்டும், `புசிப்பது என்பது ஆவிக்குரிய காரியங்களில் `பங்கு கொள்ளுதல்’ என அர்த்தம் பெறும். இயேசு, `என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு’ (யோவான் 6.54) என்றும், `மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்’ (மத் 4.4) என்றும் கூறியிருக்கிறார். ஆகையால், இச்சபையின் காலத்தவர் விக்கிரகங்களுக்கு முன்பு வணங்கி, அவைகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்ஞான பண்டிகைகள் கொண்டாடி, தங்கள் பாவங்களை மனிதர்களிடம் அறிக்கையிடுவதன் மூலம் தேவனிடம் பங்கு கொள்ளாமல் சாத்தானோடு பங்கு கொண்டனர். அவர்கள் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அவர்கள் விக்கிரகாராதனையில் ஈடுபட்டிருந்தனர். ஆலயங்களில் காணப்பட்ட பீடமும், அதன் மேல் காட்டும் தூபங்களும், கர்த்தர் ஏறெடுத்த ஜெபங்களை நினைப்பூட்டுவதற்கென்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் ஒரு வேளை கூறலாம்; அவ்வாறே விக்கிரங்களை வணங்கும்போது, தேவனைத் தத்ரூபமாக வணங்கும் எண்ணம் அவர்களுக்கு உண்டாகிறது என்றும், குருமார்களிடம் பாவ அறிக்கை செய்தாலும், இருதயங்களில் அவர்கள் தேவனிடம் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவ தாகவும், குருமார்கள் அவர்கள் பாவங்களை மன்னிக்கும்போதும், அதைக் கர்த்தரின் நாமத்தினால் அவர்கள் செய்கின்றனரென்றும் அவர்கள் கூறலாம். அவர்கள் என்ன கூறினாலும், சாத்தானால் உண்டாக்கப்பட்ட பாபிலோனிய மார்க்கத்தில் அவர்கள் பங்கு கொண்டு, விக்கிரகங்களோடு இணைந்து, ஆவிக்குரிய விபச்சாரம் செய்து மரித்துப் போயினர். இப்படியாக சபையும் அரசாங்கமும், ஒன்றுபட்டன. சபைவிக்கிரகங்களை வணங்கியது. அரசாங்க ஆதரவு அது பெற்று, `தேவனுடைய ராஜ்யம் நிறுவப்பட்டது; தேவனுடைய சித்தம் பூலோகத்தில் நிறைவேறிற்று’ என்று எண்ணியது. அதனால்தான் ரோமன் கத்தோலிக்க சபை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக் குவதில்லை. அவர்களுக்குக் கிறிஸ்துவின் ஆயிரம் வருஷ அரசாட்சியில் நம்பிக்கையில்லை. இப்பொழுதே அந்த அரசாட்சி தொடங்கி, தேவன் போப்பிற்குள் வாசம் செய்து அவர்மூலம் அரசாட்சி செய்கிறார் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். புதியவானமும் புதிய பூமியும் ஆயத்தமான பின்பு அவர் வருவாரென்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். கள்ளச் சபையின் தலைவனாக போப் இருக்கிறார். கிறிஸ்து நிச்சயமாக ஆயிரம் வருஷம் அரசாட்சி செய்வார். அச்சமயம் போப் அதில் பங்கு கொள்வதில்லை. அவர் வேறு எங்காகிலும் இருப்பார். எச்சரிக்கை வெளி 2.16. `நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவேன். இதைத் தவிர வேறெதை அவர் கூறமுடியும்? அவர் நாமத்தை வீணாய்ப் பற்றிக் கொண்டவர்களின் பாவத்தை அவர் காணாதது போல் இருக்க முடியுமா? பாவம் நிறைந்த காலத்தில் அவருடைய கிருபையைப் பெற ஒரே வழியுண்டு. மனந்திரும்பு. நீ தவறு செய்தாயென்று அவரிடம் அறிக்கையிடு. இது தேவனிடத்திலிருந்து வந்த கட்டளையாயிருக்கிறது. அதற்குக் கீழ்ப்படியாவிடில், மரணம் சம்பவிக்கும். `என் வாயின் பட்டயத்தால் உன்னோடு யுத்தம் பண்ணுவேன்’ என்று அவரே கூறியிருக்கிறார். மிருகம் பரிசுத்தவான்களோடு யுத்தம் பண்ணிற்று. ஆனால் தேவன் மிருகத்தோடு யுத்தம் பண்ணுவார். வார்த்தையை எதிர்த்த யாவரும், ஒரு நாளில் வார்த்தை அவர்களை எதிர்ப்பதைக் காண்பார்கள். தேவனுடைய வார்த்தையோடு எதையாகிலும் கூட்டுவதும் குறைப்பதும் மிகவும் ஆபத்தான காரியம். தங்களுடைய சௌகரியத்திற்கேற்ப வார்த்தையின் அர்த்தத்தை மாற்றியவர்களுக்கு மரணமும், அழிவும் அல்லாமல் வேறெந்த முடிவு உண்டாகும்? ஆனால் கர்த்தரின் கிருபை இன்னமும் `மனந்திரும்பு’ என்று அறைகூவிக் கொண்டே இருக்கிறது. மனந்திரும்புதலின் எண்ணம் எவ்வளவு இனிமையாயிருக்கிறது!. `கர்த்தாவே, என் கையில் ஒன்றுமில்லை; உம்முடைய சிலுவையைப் பற்றிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய துயரங்களெல்லாம் உமது சமுகத்தில் வைக்கிறேன். என்னுடைய தற்போதைய நிலையைக் குறித்து நான் மனஸ்தாபப்படுகிறேன்’ என்று நாம் கூறுவோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமேயன்றி, வேறொன்றும் பாவத்தைப் போக்காது. மனந்திரும்பு; இல்லையேல் மரணத்தின் பட்டயம் நிர்மூலமாக்க காத்துக் கொண்டிருக்கிறது. நீ இவ்விரண்டில் எதைவேண்டு மானாலும் தெரிந்து கொள். பரிசு வெளி 2.17. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி, வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன்’. ஒவ்வொரு காலத்தின் செய்தியும், அக்காலத்திலுள்ள விசுவாசியைத் தட்டி எழுப்பி, ஜெயங்கொண்டு தேவனிடத்தில் நன்மையைப் பெற உற்சாகப்படுத்து கிறது. இந்தச் சபையின் காலத்தில், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு மறைவான மன்னாவையும் வெண்மையான குறிக்கல்லையும் கொடுப்பதாக ஆவியானவர் வாக்களிக் கிறார். ஒவ்வொரு செய்தியும் அந்தந்தக் காலத்தின் தூதனுக்குக் கொடுக்கப்படுவ தனால், இந்தத் தூதர்கள் பெற்ற உத்திரவாதம் பெரிதாயிருக்கிறது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களும், பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருந்து, பன்னிரண்டு கோத்திரங்களை ஆளுவார்கள் என்று தேவன் அந்த சீஷர்களுக்கு வாக்களித்தது போன்று, இந்தத் தூதர்களுக்கும் விசேஷித்த வாக்குத் தத்தங்களை அளிக்கிறார். பவுல், அவன் காலத்தில் மணவாட்டியை இயேசு கிறிஸ்துவினிடத்தில் ஒப்படைக்கும் சிலாக்கியத் தைப் பெற்றான். `நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால் உங்களுக்காகத் தேவ வைராக்கியமான வைராக்கியங் கொண்டிருக்கிறேன், (2 கொரி. 11.2). அவ்வாறே ஒவ்வொரு காலத்தின் தூதனும், அக்காலத்தில் அளிக்கப்பட்ட வார்த்தைக்கு உண்மையும் விசுவாசமுள்ள வனாயிருந்தால், கடைசி நாளில் விசேஷ சிலாக்கியம் பெறுவான். நான் என்னுடைய ஊழியத்தில் அநேக முறை தவறியிருப்பதால், கர்த்தர் என்மேல் பிரியமாயிருக் கமாட்டார் என்று எண்ணி, அவரை முகமுகமாய்க் காணப் பயந்து, அதற்காக மரிக்கவும் அஞ்சினேனென்று நான் உங்களிடம் கூறியது நினைவிருக்கலாம். இதைக்குறித்து ஆலோசித்தவண்ணமாக, நான் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு விசித்திரமான தரிசனத்தை நான் கண்டேன். நான் இதுவரை கண்ட ஆயிரக்கணக்கான தரிசனங்களெல்லாவற்றிலும் இது விசித்திரமாயிருந்தது. ஏனெனில், இம்முறை நான் சரீரத்தை விட்டுப்போக நேர்ந்தது. நான் என் மனைவியைப் பார்க்கத் திரும்பியபோது, என்னுடைய சடலத்தை அவளருகில் கண்டேன். பிறகு, நான் மிகவும் ஒரு அழகான ஸ்தலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அது ஒரு பரதீசாக இருந்தது. அங்கு அழகுமிகுந்தவர்கள் அதிக குதூகலத்தோடு இருக்கக் கண்டேன். அவர்களெல்லாரும் வாலிபமாகக் காணப்பட்டனர். அவர்களுக்கு ஏறக்குறைய 20 வயதாயிருக்கும் என்று நான் எண்ணினேன். அவர்கள் முகத்தில் சுருக்கம் எதுவும் காணப்படவில்லை. அவர்கள் தலையும் நரைக்கவில்லை. வாலிபப் பெண்கள் எல்லோரும் தங்கள் கூந்தல்களை இடுப்புவரை வளர்த்திருந்தனர். வாலிபர்கள் அழகாகவும் திடகாத்திரம் பொருந் தியவராகவும் காணப்பட்டனர். அவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து என்னை வரவேற்றனர். என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, `சகோதரனே, உம்மைக் கண்டதில் எங்களுக்கு மிகவும் சந்தோஷம்’ என்று அவர்கள் கூறினர். இவர்கள் யாரென நான் வியந்துகொண்டிருக்கும்போது, அருகில் நின்ற ஒருவர் என்னிடம் `இவர்களெல்லாரும் உம்முடைய ஜனங்கள்’ என்று கூறினார். நான் வியப்புற்று, `இவர்களெல்லாரும் பிரான்ஹாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? என வினவினேன். அதற்கு அவர், `இல்லை, அவர்களெல்லாரும் உமது மூலம் கிறிஸ்துவை அறிந்தவர்கள் என பதிலளித்தார். பின்பு அவர் ஒரு பெண்ணை எனக்குக் காண்பித்து, `நீர் காணும் இவ்வாலிபப் பெண் உமது ஊழியத்தில் இரட்சிக்கப்பட்டபோது 90 வயதாயிருந்தாள்’ என்று கூறினார். மேலும் அவர் `கர்த்தருடைய வருகைக்காக நாங்கள் காத்திருந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்’ என்றார். அப்பொழுது, நான் மரிக்க பயமடைந்ததைக் குறித்து வெட்கப்பட்டேன். `நான் கர்த்தரைக் காணவேண்டும்’ என்று என்வாஞ்சையைத் தெரிவித்தேன். அதற்கு அவர் `இப்பொழுது அவரை நீர் காணமுடியாது; அவர் சீக்கிரம் வருகிறார். அவர் முதலில் உம்மிடத்தில் வந்து, நீர் பிரசங்கித்த சுவிசேஷத்தைக் கொண்டு உம்மை நியாயந் தீர்ப்பார். அதன் பின்பு நாங்கள் உமது பிரஜைகளாயிருப்போம்’ என்றார். அப்பொழுது நான் அதிசயமுற்று, `உங்களுடைய இரட்சிப்புக்கு நான் காரணம் என்றா கூறுகிறீர்கள்?’ என்றேன். அதற்கு அவர் `ஆம், நீர் தலைவனாகப் பிறந்தீர்’ என்றார். நான் பின்னும் `ஒவ்வொரு காலத்தின் தூதனும் அந்தந்த காலத்திற்கு உத்திரவாதமுள்ளவனாயிருப்பானா? பவுலைக் குறித்து என்ன நினைக் கிறீர்கள்?’ என்று கேட்க, அவர் பவுல் அவன் காலத்திற்கு உத்திரவாதமுள்ள வனாயிருப்பான்’ என்று பதிலுரைத்தார். நான் சந்தோஷமடைந்து, `பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்தையே நானும் பிரசங்கித்தேன்’ என்று கூறினேன் அப்பொழுது அவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து, `அதன் காரணமாகத்தான் நாங்கள் இப்பொழுது இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்’ என்றனர். ஆம், கொடுக்கப்பட்ட உத்திரவாதத்தை உண்மையோடு நிறைவேற்றின தமது தூதர்களுக்குத் தேவன் விசேஷித்த வெகுமானங்களை அளிப்பார். ஒவ்வொரு தூதனும் அவன் காலத்திற்குரிய வசனத்தின் வெளிப்பாட்டைப் பெற்று, அதை உண்மையாகப் பிரசங்கித்து, அதன் பிரகாரம் ஜீவித்திருப்பானானால், அவனுக்குத் தேவன் தக்க சன்மானம் அளிப்பார். இதை மனதில் வைத்துக்கொண்டு, `நான் மறைவான மன்னாவைப்புசிக்கக் கொடுப்பேன்’ என்னும் வசனத்தை மறுபடியும் ஆராய்வோம். மன்னா என்பது தூதர்களின் அப்பமாயிருந்தது என்பதை நாமறிவோம். இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பிரயாணம் செய்யும்போது, கர்த்தர் இதைப் புல்வெளிகளில் பெய்யப் பண்ணினார். அது மிகச் சிறியதாயிருந்தாலும், பரிபூரண உணவாயிருந்தது, இஸ்ரவேலருக்கு ஆரோக்கியத்தையளித்தது. இதைச் சாப்பிட்ட எவரும் வியாதிப்படவில்லை. உடன்படிக்கை பெட்டி செய்யப்பட்டபோது, மன்னா அதனுள்ளில் வைக்கப்பட்டது. அதன்பின்பு, அந்தப் பெட்டி கூடாரத்தின் திரையின் பின்னால் இடம்பெற்றது. பிரதான ஆசாரியன் மாத்திரம் பலியின் இரத்தத்தோடு அதனருகில் செல்லத் துணிவான், ஆனால் ஒரு நாள், ஜீவ அப்பம் வானத்திலிருந்திறங்கி, அவரை விசுவாசிப்பவர் அனைவருக்கும் ஜீவனைக் கொடுத்தது. அவருடைய வருகைக்கு மன்னா ஒரு எடுத்துக்காட்டாயிருந்தது. `நான் ஜீவ அப்பம், நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்’. (யோவான் 6. 48-51). அவர் போகும்போது, `மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்’ (மத் 4.4) என்னும் வார்த்தையைப் பின்வைத்துவிட்டுச் சென்றார். அவருடைய வார்த்தை அப்பமாயிருந்தது. அவருடைய வார்த்தையில் நிலைகொள்கிறவன் மரிக்காமல் என்றென்றைக்கும் பிழைப்பான். திருச்சபையின் ஆதிப் பிதாக்கள் மரித்த பிறகு, சத்தியம் யாருக்கும் புலப்படாமல், சிறிது காலத்திற்குள் இந்த மன்னா மக்களுக்கு மறைக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு காலத்திலும், மறைக்கப்பட்ட சத்தியம் வெளியாக்கப்பட்டது. இந்தக் கடைசி காலத்திலும், வெளி 19.6-ல் உள்ளபடி, ஒரு தீர்க்கதரிசி தோன்றி, மறைந் திருக்கும் எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்துவார். அதன் பின்பு கர்த்தராகிய இயேசு வருவார். பந்தியிருந்தவர்களுக்குச் சீஷர்கள் அப்பத்தையும் மீனையும் பரிமாறும் முன்பு இயேசு அதைப்பிட்டு சீஷர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. அதுபோன்று, ஒவ்வொரு காலத்தின் தூதனும், அவன் காலத்தின் வெளிப்பாட்டை இயேசுவினிடமிருந்து பெற்று, அதை மக்களுக்கு அறிவிக்கிறான். தேவன் தம்முடைய மறைவான மன்னாவை ஜெயங்கொள்ளு கிறவனுக்கு மாத்திரமே அளிக்கிறார். வெளிப்பட்ட சத்தியங்களை இகழுகிறவனுக்கு தேவன் ஒருக்காலும் தம்முடைய பொக்கிஷத்தைத் திறந்து காண்பிப்பதில்லை. பழைய ஏற்பாட்டின் காலத்தில், மோசே, தேவனுடைய கட்டளையின்படி, மூன்றரைபடி மன்னாவை ஒரு பொற்பாத்திரத்தில் அடக்கி, அதைத் திரைக்குப் பின்னால் மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைத்தான். ஒவ்வொரு காலத்துப் பிரதான ஆசாரியனும் பலியின் இரத்தத்தோடு அங்கு பிரவேசித்து, புழுபுழுக்காத மன்னாவில் கொஞ்சம் எடுத்து அதைப் புசிக்கலாம். அவ்வாறே ஒவ்வொரு காலத்தின் தூதனும் அந்தக் காலத்துக்குரிய தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்று, சத்தியத்தை அறிந்தவனாய், அதை மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கிறான். ஆவியானவரால் செவிதிறக்கப்பட்ட எவனும் சத்தியத்தைக் கேட்டு, விசுவாசித்து அதன்படி நடக்கிறான். அதுவுமன்றி, இனி வருங்காலத்திலும் நாம் மறைவான மன்னாவைப் புசிப்போமென்று இவ்வசனம் அறிவுறுத்துகிறது. நாம் நித்திய காலங்களில் இயேசுவோடு கூட இருந்து, நித்தியமாக அவருடைய வெளிப்பாட்டில் பங்குகொள்வோமென்று நான் நினைக்கிறேன். இல்லையெனில், அவரைக் குறித்த அளவிடப்பட முடியாத ரகசியங்கள் நமக்கு எங்ஙனம் வெளியரங்கமாகும், நாம் இதுவரை அறியவேண்டுமென்று வாஞ்சித்த அனைத்தும் நமக்கு வெளியரங்கமாகும். நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்துவே நமக்கு இவையெல்லாவற்றையும் வெளிப்படுத்துவார். நாம் இப்பொழுது அறிந்த சிறிது சத்தியமே நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்துகின்றது. அப்படியெனில், ஒருநாள் நம்முடைய ஜென்ம சரீரம் ஆவிக்குரிய சரீரமாக மாறும்போது, இயேசுவைக் குறித்தும், அவருடைய வார்த்தையைக் குறித்தும் இதுவரை நமது அறிவுக்கெட்டாத சத்தியங்களை நாமறிவோம். இயேசுகிறிஸ்து ஜெயங்கொள்ளுகிறவனுக்கு வெண் மையான குறிக்கல்லை அளிப்பாரென்றும், அந்தக் கல்லுக்குள் (மேலல்ல) (ஆங்கிலத்தில் IN THE STONE), அவன் மாத்திரம் அறியக்கூடிய புதிய நாமம் எழுதப்பட்டிருக்குமென்றும் இந்த வசனம் கூறுகிறது. புது நாமம் அளிக்கப்படுவது நமக்குப் புதியதல்ல. ஆபிராம் என்னும் பெயர் ஆபிரகாமாக மாற்றப்பட்டது; அவ்வாறே சாராயின் பெயர் சாராள் என்றும், யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்றும், சீமோனின் பெயர் பேதுருவென்றும் மாற்றப்பட்டன. இந்தப் பெயர் மாற்றம் அவர்களுடைய ஜீவியத்தில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியது; அல்லது அவர்களுடைய ஜீவியத்தில் மாற்றம் காணப்பட்டதால், அவர்களுடைய பெயர்கள் மாற்றப்பட்டன. பிறக்கப்போகும் குமாரனை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருந்த ஆபிராமின் பெயரையும், சாராயின் பெயரையும் தேவன் மாற்றினார். யாக்கோபு ஜெயங்கொண்ட பிறகு இஸ்ரவேல் (இராஜகுமாரன்) என்று அழைக்கப்பட்டான். சீமோனும், சவுலும் கர்த்தரை ஏற்றுக்கொண்டதால், அவர்கள் பெயர்கள் மாற்றப்பட்டன. இன்றைக்குள்ள ஒவ்வொரு விசுவாசியின் பெயரும் மாற்றப் பட்டிருக்கிறது. நாமெல்லாம் கிறிஸ்தவர்கள் இந்தப் பெயர் நம்மெல்லோருக்கும் பொதுவாயிருக்கிறது. ஆனால் ஒரு நாள் நம்முடைய பெயர் மாற்றப்படும். அப்பொழுது நாம் ஒரு புதிய நாமத்தைப் பெறுவோம். ஒருவேளை இது உலகத்தோற்றத்திற்கு முன்பு ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்ட நம்முடைய பெயராயிருக்கலாம். அந்தப் பெயரை அவர் மாத்திரமே அறிவார்; நாம் அதை அறியமாட்டோம், ஒரு நாள், தம்முடைய சித்தத்தின்படி, அதை நமக்கு வெளிப்படுத்துவார். ஒரு பரிசுத்தவான் இவ்வுலகத்தில் அனுபவித்த கஷ்டங்களுக்குச் சன்மானமாக வெண்மையான குறிக்கல்லைத் தேவனிடமிருந்து பெறுகிறான். கான்ஸ்டன்டைன் காலத்திலும், அதற்குப் பிறகும், கள்ளச்சபை அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து பணத்தை எடுத்து, அழகான கட்டிடங்களையும், சிலைகளையும் உண்டாக்கிற்று; வெள்ளைச் சலவைக் கற்களால் உண்டாக்கப்பட்ட ரோமத் தெய்வங்களின் சிலைகளுக்குப் பரிசுத்தவான்களின் நாமங்கள் சூட்டப்பட்டன. ஆனால் தேவன் அவர்களோடு உண்டாயிருக்க வில்லை. அவர், குகைகளிலும், மலைப்பிராந்தியங்களிலும் ஒளிந்திருந்த பரிசுத்தவான்களோடு கூட இருந்தார். இவர்களுக்கு அழகிய கட்டிடங்களும், அங்கியணிந்த பாடகக் குழுவும், கண்ணைக்கவரும் உடைகளும், இன்னும் உலகத்தில் கவர்ச்சியளிக்கும் காரியங்களும் உண்டாயிருக்கவில்லை. ஆனால், எல்லாக் காலத்திலுள்ள விசுவாசிகளுக்கும், நித்தியகாலமாய் நிலைநிற்கும் அழகிய சன்மானங்களைக் கொடுப்பதாக தேவன் வாக்களிக்கிறார். ஐசுவரியவான்கள் எளியவர்களை இகழட்டும், அவர்கள் அதிகமாக ஆலயங்களுக்குப் பணஉதவி செய்வதன் மூலம், அவர்களை மகிமைப்படுத்த சலவைக்கற்கள் ஆலயங்களின் சுவர்களில் பதிக்கப்படட்டும். எல்லாவற்றையும் கண்டும், அறிந்திருக்கிற தேவன், இரண்டு காசுகளை மாத்திரம் காணிக்கையாகக் கொடுத்த விதவையை மறுபடியும் புகழ்ந்து, பரலோகத்தின் பொக்கிஷங்களை அவளுக்குத் தந்தருளுவார். மறைவான மன்னாவையும், வெண்மையான குறிக்கல்லையும் பெற நாம் தகுதியற்றவர்கள். அவருடைய சித்தத்தைச் செய்ய எப்பொழுதும் ஆயத்தமாயிருந்து, பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்க்க நான் விரும்புகிறேன். ஆறாம் அத்தியாயம்: தியத்தீரா சபையின் காலம் THE THYATIREAN CHURCH AGE வெளி 2 : 18 – 29 `தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: அக்கினி ஜுவாலை போன்ற கண்களும் பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில் தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரியானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவை களைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத்தேன்; தன் வேசி மார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. இதோ, நான் அவளைக் கட்டில் கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளை விட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவ ரென்று எல்லாச் சபைகளும் அறிந்து கொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். தீயத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்து கொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள். ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்கிறவ னெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றது போல, ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக் கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள். விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. தியத்தீரா வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டிருக்கும் ஏழு பட்டினங்களில் மிகவும் குறைந்த செல்வாக்கைப் பெற்றது இப்பட்டினம் என்று சரித்திரம் விளம்புகிறது. மைசியா (MYSIA) நதியும், அயோனியா (IONIA) நதியும் கூடும் சங்க முகத்தில் இது அமைந்திருந்தது. அநேக நதிகளால் இது சூழப்பட்டிருந்தாலும், அவைகள் அட்டைகளால் நிறைந்திருந்தபடியால் உபயோகமற்றதாயிருந்தன. வியாபாரத் துறையில் இப்பட்டினம் புகழ்பெற்று ஐசுவரியமுள்ளதாக விளங்கியது. வெவ்வேறு தொழிலில் ஈடுபட்டவர்களான குயவரும், தோல் பதனிடுபவரும், நெசவாளரும், சாயம் பூசுபவர்களும், அங்கி நெய்பவர்களும் கூட்டுறவு முறையில் தங்கள் தொழிலை இங்கு நடத்தி வந்தனர். பவுலின் சுவிசேஷத்தினால் ஐரோப்பாவிலே முதன் முதல் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவளும் இரத்தாம்பரம் விற்பவளுமான லிதீயாள் என்னும் பெண் இப்பட்டினத்தைச் சேர்ந்தவள். இப்பட்டினத்தில் தழுவப்பட்ட மதத்தின் கொள்கைகள், நான்காவது சபையின் காலத்தில் காணப்படும் என்று ஆவியானவர் அறிந்து இந்தப் பட்டிணத்தை விளக்கவுரைக்கென்று தெரிந்துகொண்டார். தியத்தீராவின் பிரதம மார்க்கம் அப்போல்லோ (APPOLLO) என்பவனை வழிபடுதலும் அப்பட்டினத்தின் ராஜாவை வழிபடுத்தலுமேயாகும். அப்போல்லோ என்பவன் சூரிய தேவன்; தன்னுடைய தகப்பனாகிய சீயஸ் (ZEUS) ஸூக்கு அடுத்தபடியாக வல்லமை பெற்றவன். இவன் `பொல்லாங்கைத் தடுப்பவன்’ (AVERTER OF EVIL) என்று அறியப்பட்டான். மதச் சம்பந்தமான நியாயப் பிரமாணங்களை இவன் அளித்து, மக்களின் குற்றங்களுக்குப் பரிகாரம் கொடுத்தவன் எனப் பெயர் பெற்றவன். பிளாட்டோ (PLATO) என்ற தத்துவ சாஸ்திரி இவனைக் குறித்து `ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டதன் காரணத்தையும், தேவர்களுக்குப் பலியிடும் அவசியத்தையும், மரணத்தோடும் அதற்கப்பாலுள்ள ஜீவியத்தோடும் சம்பந்தப்பட்ட சடங்காச்சாரங்களையும் மக்களுக்கு விளக்கிக் கொடுத்தான்’ என்று கூறுகிறார். `இனி நடக்கவிருக்கும்’ சம்பவங்களையும் `தன்னுடைய தகப்பனின் சித்தத்தையும்’ தீர்க்கதரிசிகள் குறிசொல்லும் புத்தகங்கள் (ORACLES) மூலம் அப்போல்லோ தெரிவித்தான். தியத்தீரா பட்டினத்தில் ஒரு தீர்க்கதரிசினி முக்காலியில் உட்கார்ந்து, மெய்மறந்து அப்போல்லோவின் செய்தியை மக்களுக்குத் தெரிவித்தாள். தியத்தீராவில் அப்போல்லோவின் வழிபாடு மக்களை இறுகப்பிடித்திருந்தது. அப்போல்லோவை வழிபடாத யாரும் வியாபாரக் கூட்டுறவில் சேரத் தடைபண்ணப்பட்டனர். சமுதாய ஜீவியத்திலும் வியாபாரத் துறையிலும் கலந்து கொள்ள விருப்பமுள்ளோர். இந்த அஞ்ஞான வழிபாட்டில் பங்கு கொள்ளத்தான் வேண்டும். `தீயத்தீரா’ என்ற பதம் `அதிகாரம் செலுத்தும் ஸ்திரீ’ (DOMINATING FEMALE) என்ற அர்த்தங் கொண்டது, என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே தீயத்தீரா சபையின் காலத்தில் ஒரு ஸ்திரீ கொடூரமாக ஆதிக்கம் செலுத்தி எல்லோரையும் அடக்கி ஆண்டாள். அதிகாரம் செலுத்தும் ஸ்திரீ உலகத்திற்கு ஒரு பெரிய சாபமானவள். உலகத்தில் தலைசிறந்து விளங்கிய ஞானியாகிய சாலமோன், `ஞானத்தையும், காரண காரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் ஆகாமியத்தையும் புத்தி மயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என் மனதைச் செலுத்தினேன். கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன், தேவனுக்கு முன்பாகச் சற்குணனாயிருக் கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான். காரியத்தை அறியும்படிக்கு ஒவ்வொன்றாய் விசாரணை பண்ணி, இதோ, இதைக்கண்டு பிடித்தேன் என்று பிரசங்கி சொல்கிறான். என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன்; இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை’ என்று கூறுகிறான் (பிரசங்கி 7.25-28, பவுல், `உபதேசம் பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை’ என்று உரைக்கிறான். (1 தீமோ 2.12). ஏதேன் தோட்டம் காலந் தொடங்கி இதுவரை ஸ்திரீயானவள் புருஷனை அடக்கி ஆள முயற்சித்து, அவளுடைய முயற்சிகளில் வெற்றி பெற்றதுண்டு. இன்றைய உலகம் ஒரு ஸ்திரீயின் உலகமாகத் திகழ்ந்து, அமெரிக்காவின் தேவதையும் நிர்வாணமான ஸ்திரீயாகக் காணப்படுகிறாள். எபேசு சபையின் காலத்தில் தியானாளின் சிலை வானத்திலிருந்து விழுந்ததாகக் கருதப்பட்டது. அச்சிலையின் கைகள் இரும்புக் கம்பிகளால் உண்டாக்கப்பட்டிருந்தன. (இரும்பு - ஆதிக்கத்தைக் குறிக்கிறது) இந்த முதற் சபையின் காலம் தொடங்கி ஸ்திரீயின் ஆதிக்கம் வளர்ந்தோங்கி கடைசியில் முழு ஆதிக்கத்தையும் பெற்று கொடூர அரசாட்சி செய்ய அவள் முற்பட்டாள். பரிசுத்த வேதாகமப் பிரகாரம் ஸ்திரீயானவள் புருஷனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். அவள் அவன் மேல் ஆதிக்கஞ் செலுத்த முயற்சிக்கக் கூடாது. ஸ்திரீயின் உண்மையான தன்மைகளைக் கொண்டவள் புருஷனின் ஆளுகைக்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புவாள். புருஷனும் குடும்பத்தின் தலைவனாக இருக்க வேண்டும். ஸ்திரீயானவள் கர்த்தர் தனக்குக் கொடுத்த தன்மைகளை முறித்தெரிந்தால் அவளில், ஏதோ ஒரு குறையுண்டு (PERVERTED). அது போன்று, ஸ்திரீயானவள் தன் மேல் ஆதிக்கம் செலுத்த சம்மதிக்கும் எந்தப் புருஷனும் தன்மையில் வித்தியாசமுள்ளவனாகக் (PERVERTED) காணப்படுவான். ஒரு ஸ்திரீ புருஷனின் ஆடைகளை உடுத்தவோ அல்லது மயிரைக் கத்தரிக்கவோ கூடாது. அவ்வாறு செய்தால் அவள் புருஷனுக்குப் பிரத்தியேகமாயுள்ள காரியங்களில் தலையிட்டு அவனுடைய அதிகாரத்தைக் கைப்பற்றி, தன்மையில் மாறுபட்டவளாகக் (PERVERTED) காணப்படுவாள். ஸ்திரியானவள் பிரசங்கம் செய்யக் கூடாது என்று கட்டளை கொடுக்கப்பட்டும் அவள் அவ்வாறு செய்வதன் மூலம் தனக்குள்ளிருக்கும் ஆவியின் தன்மையை வெளிப்படுத்துகிறாள். அந்திக்கிறிஸ்துவின் ஆவியைக் கொண்ட எந்த ஸ்திரீயும் அதிகாரம் செலுத்துபவளாக இருப்பாள். அவள் எவ்வளவுதான் மறுத்தாலும் சரி, அவளுக்குள் ரோமன் கத்தோலிக்க சபையின் வித்து குடிகொண்டிருக்கிறது `தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக’ (ரோமர் 3.4). ஆதியில் தேவன் உலகத்திலுள்ள சகலவற்றையும் உண்டாக்கும்போது அவைகளை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார், மானிடவர்க்கத்திலோ, மனிதனை மாத்திரம் அவர் சிருஷ்டித்தார், ஆதாம் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்டான். அவன் தேவனுடைய குமாரனாயிருந்தபடியினால், அவன் சோதிக்கப்பட்டு பாவத்தில் விழக்கூடாமலிருந்தது, மனிதன் பாவத்தில் விழுவதற்கென்று ஸ்திரீயானவள் மனிதனிலிருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டியதாயிற்று (BY-PRODUCT OF MAN) ஸ்திரீயானவள் நேரடியாக தேவனால் உண்டாக்கப்பட் டவளல்ல. அவள் மனிதனிலிருந்து உண்டாக்கப்பட்டவள். இதன் காரணமாக, தேவனால் உண்டாக்கப்பட்டவளாக இருந்தாள், அதனால்தான் அவள் கற்பழிக்கப்பட முடிந்தது. தேவனுடைய சிருஷ்டியில் வேறெந்த பெண் வர்க்கமும் கற்பு தவற முடியாது. ஸ்திரீயில் காணப்பட்ட பெலவீனமோ சாத்தான் சர்ப்பத்தின் மூலமாக அவளைக் கற்பழிக்கக் காரணமாயிருந்தது. இதன் காரணமாக ஸ்திரீயானவள், தேவனுக்கு முன்பாகவும் அவருடைய வார்த்தைக்கு முன்பாகவும் ஒரு விசேஷித்த நிலையையடைந்து நன்மை, தீமையான தன்மைகளை ஒருங்கே பெற்றவளானாள். ஒருபுறம் ஸ்திரீயை நோக்கும்போது அவள் அசுத்தமும், அருவருக்கப்படத்தக்கவளாயும் இருக்கிறாள். ஆனால் மற்றொரு புறம் அவள் சுத்தமாயும், அழகுள்ளவளாகவும் தேவனுடைய ஆவியையும் ஆசீர்வாதத்தையும் பெற்றவளாயுமிருக்கிறாள். ஒருபுறம், வேசித்தனத்தின் மதுவைக் குடித்த வேசியென்று அழைக்கப்படுகின்றாள்; மற்றொரு புறம் அவள் கிறிஸ்துவின் மணவாட்டியென்று அழைக்கப்படுகிறாள். ஒருபுறம் தேவனுக்கு அருவருப்பான `மகா பாபிலோன் ரகசியம்’ என்று அழைக்கப்படுகிறாள். மற்றொருபுறம் நம்முடைய தாயாகிய `புதிய எருசலம்’ என்று அழைக்கப்படுகிறாள். ஒருபுறம் அவளுடைய அசுத்தமான தன்மையின் காரணமாக, அவளுக்குகந்த அக்கினிக் கடலில் தள்ளப்படுகிறாள். மற்றொரு புறமோ அவள் வானத்திற்கு உயர்த்தப்பட்டு, தேவனுடைய சிங்காசனத்தைப் பகிர்ந்து கொள்ளும் அரசியாயிருக்கிறாள். இந்த ஸ்திரீயானவள் தியத்தீரா சபையின் காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்திரீயாக (DOMINATING FEMALS) இருக்கிறாள். இவள் வேசியாகிய மகா பாபிலோன் ரகசியம். இவளே, யேசபேல் என்னும் கள்ளத்தீர்க்கதரிசினி. இந்த ஸ்திரீ ஏன் இவ்வாறு அழைக்கப்படவேண்டும்? ஒரு உண்மையான ஸ்திரீ கர்த்தருக்குப் பணிந்து நடக்க வேண்டும். கிறிஸ்துவே அவளுடைய தலைவன். அவருடைய வார்த்தைகளையும், எண்ணங்களையும் அவளுடையதாக அவள் ஏற்றுக் கொள்ளவேண்டும். அவருடைய வழிநடத்தலை அவள் பின்பற்ற வேண்டும். ஆனால் தியத்தீரா சபையில் நேர்ந்ததென்ன? இந்தச் சபை தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்து வேதபுத்தகங்களை அழித்துப்போட்டது. சத்தியத்தைப் பிரசங்கித்தவர்களை அது கொன்றுபோட்டு, இராணுவ சேனைகளைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்து, ராஜாக்களின் மேலும், நாடுகளின் மேலும் அதிகாரஞ் செலுத்தி, அதுவே கிறிஸ்துவின் உண்மையான திருச்சரீரம் என்றும், அதனுடைய போப்புகள் கிறிஸ்துவின் பிரதிநிதிகள் (VICARS OF CHRIST) என்றும் அறிவித்தது. இது பிசாசினால் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டு, மற்றவர்களை இது வஞ்சித்து, சாத்தானின் மணவாட்டியாகத் திகழ்ந்தது. அவனுக்குரிய மார்க்கத்தை ஈன்றது. இருளின் காலங்கள் (DAR AGES) முழுவதும் இந்தச் சபை ஆட்சி செலுத்தி, தொளாயிரம் வருஷங்களுக்கு மேலாக மக்களைக் கொள்ளையிட்டு அழித்தது. இதன் காரணமாக தேவனுடைய சத்திய வெளிச்சம் ஏறக்குறைய முழுவதுமாக அழிக்கப்பட்டு, அதினின்று ஒரு கதிர் மாத்திரம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதாவது, இந்தப் பயங்கரமான நிலைமையிலும் கூட, ஒரு சிறு கூட்டமானது கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, பரலோகத்திலே குடியிருப்பை ப்பெற்று, சத்தியத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தது. தேவன் தம்முடைய மந்தையை அழியாமல் பாதுகாத்து வந்தார். அத்தாலியாள் ராணி ராஜ வம்சத்திலுள்ளவர்களை அழித்தபோது, அவ்வம்சத்திலுள்ள, ஒருவனை மாத்திரம் தேவன் காத்துக்கொண்டார். அதேபோன்று ரோமசபையானது, தன்னில் அங்கத்தினராகாதவர்களை அழித்தபோது, தேவன் இந்தச் சிறு குழுவைப் பாதுகாத்துக் கொண்டார். இவர்கள் கைக்கொண்ட சத்தியத்தின் பயனாக லூத்தர் (LUTHER) பின்காலத்தில் தோன்றினார். ரோமன் கத்தோலிக்க சபையையும், அதன் வழிப்பாட்டின் முறையையும் நன்கு அறிந்தவர்கள், இருளின் காலங்களில் உண்டாயிருந்த இந்த சபைக்கு எடுத்துக் காட்டாக தியத்தீரா பட்டினத்தை ஆவியானவர் எதற்காக தெரிந்துகொண்டார் என்பதனை உணருவர். காலம் தியத்தீரா சபையின் காலம், மற்றெல்லாச் சபைகளின் காலத்தைக் காட்டிலும் நீண்டது. இது கி.பி. 606 முதல் கி.பி. 1520 முடிய சுமார் 900 வருஷங்கள் நீடித்தது. தூதன் அநேக காலங்களாக சபையானது பிளவுபட்டு, மேற்கத்திய குழுவென்றும், கிழக்கத்திய குழுவென்றும் இரண்டாகப் பிரிந்திருந்தது. அவ்வப்போது இக்குழுக்களினின்று சீர்திருத்தக்காரர்கள் தோன்றி, தேவனோடு அதிகத் தொடர்பு கொள்வதற்கென ஒரு சிலரை வழிநடத்தினர். அசிசி நாட்டைச் சேர்ந்தவரான பிரான்ஸிஸ் என்பவர் (FRANCIS OF ASSISI) மேற்கத்திய குழுவில் சீர்திருத்தக்காரராகத் தோன்றினார். சிறிது காலம் இவர் சத்தியத்தைப் பிரசங்கித்துக்கொண்டு வந்தார். பிறகு ரோமசபையின் ஆதிக்கத்தால் சத்தியத்தைப் பிரசங்கிக்காதபடிக்கு அவர் தடைசெய்யப்பட்டார். லையான்ஸ் (LYONS) நாட்டைச் சேர்ந்த பீட்டர் வால்டோ (PETER WALDO) என்ற வியாபாரியும், தன்னுடைய வியாபாரத்தை முற்றிலும் துறந்து, கர்த்தருக்கென்று சேவைசெய்து, அநேகரைத் தேவனுடைய சமூகத்திற்குக் கொண்டு சென்றார். பிறகு அக்காலத்திலிருந்த போப்பினால் சபையிலிருந்து அவர் தள்ளப்பட்டார் வேதத்தின் வாயிலாக நாம் நோக்கும் போது, இவ்விரண்டு குழுக்களிலுள்ள யாரும் இந்தக் காலத்தின் தூதனாக இருக்கும் அம்சங்களைப் பெற்றவராகக் காணப்படவில்லை. இருப்பினும் பிரிட்டிஷ் தீவுகளில் (BRITISH ISLES) இந்தக் காலங்களில் வாழ்ந்து வந்த பரி. பாட்ரிக் (ST.PATRICK) என்பவரும், பரி. கொலம்பா (ST. COLUMBA) என்பவரும், அடையாளங்களையும் அற்புதங்களையும் கொண்ட ஊழியத்தைச் செய்து சத்தியத்தைப் பிரசங்கித்து வந்தனர். பரி. கொலம்பா இக்காலத்தின் தூதனாக ஆவியானவரால் நியமிக்கப் படுகிறார். தியத்தீரா காலத்தின் தூதனால் பரி. கொலம்பா தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பரி. பாட்ரிக்கின் ஜீவியம் நமக்கு மாதிரியாக இருப்பதால், அதைக் குறித்துச் சற்றுக் குறிப்பிட விரும்புகிறேன். (CLYDE) கிளைட் என்னும் நதிக்கரையோரத்தில் போனவர்ன் (BONAVERN) என்னும் ஒரு சிறு பட்டினத்தில் பரி. பாட்ரிக் என்பவர் பரி. மார்டினின் (ST. MARTIN) சகோதரிக்குப் பிறந்தார். ஒரு நாள் நதிக் கரையோரத்தில் தன்னுடைய இரண்டு சகோதரிகளோடு அவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கடற்கொள்ளைக்காரர் (PIRATES) இம்மூவரையும் கடத்திக் கொண்டு போய்விட்டனர். இரண்டு சகோதரிகளின் கதி என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சக்கட் (SUCCAT) என்று அழைக்கப்பட்ட பாட்ரிக், வட அயர்லாந்திலுள்ள ஒருவருக்கு விற்கப்பட்டார். இங்கு பன்றிகளை மேய்ப்பது பாட்ரிக்கின் வேலையாயிருந்தது. அவைகளை மேய்ப்பதற்கென்று இச்சிறுவன் நாய்களைப் பழக்கினான். சிறந்த முறையில் நாய்களைப் பழக்கியதன் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து அநேகர் இந்நாய்களை வாங்குவதற்கென்று அவனிடம் வருவர். அவன் தன் தனிமையிலே கர்த்தரிடத்தில் திரும்பி இரட்சிக்கப்பட்டான். இரட்சிக்கப்பட்ட பிறகு தன்னுடைய அடிமைத்தனத் தினின்று விடுதலையாகி தன்னுடைய பெற்றோரைக் காண வேண்டும் என்ற அவா அவனுக்குள் எழுந்தது. இதற்கென்று, நாய்களைப் பழக்கும் தன்மையை உபயோகித்து ஒரு திட்டத்தை அவன் வகுத்தான். நாய்கள் தன்மேல் படுத்து முழுவதுமாக மூடிக்கொள்ள வேண்டுமென்றும், கட்டளை கொடுத்தாலன்றி எழும்பக்கூடாது என்றும் அவன் நாய்களுக்குக் கற்பித்துக் கொடுத்தான். ஒரு நாள், தன்னுடைய எஜமான் அநேக நாய்களை ஒரு மனுஷனுக்கு விற்றபொழுது, அவன் தலைவனான நாயைத் தவிர மற்ற நாய்கள் கப்பலில் ஏறக் கட்டளையிட்டான்; தலைவனான நாய்க்கு ரகசிய சைகை காண்பித்து அதை ஓடும்படியாகவும், கப்பலில் ஏற மறுக்கும்படியாகவும் செய்தான். எஜமானும், நாய்களை வாங்கியவனும், அந்த நாயைக் கப்பலுக்குள் ஏற்ற முயற்சி செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் காணாதவாறு பாட்ரிக் கப்பலில் ஏறி, நாய்கள் தன்னை மறைத்துக் கொள்ளக் கட்டளை கொடுத்தான். பின்பு, வாயினால் ஒசையுண்டாக்கி (WHISTLE) தலைவனான நாயைக் கப்பலிலேற்றித் தன்மேல் உட்காரச் செய்தான். இவ்விருவரும் பாட்ரிக்கைத் தேடிக் காணாததால், நாய்களை வாங்கியவன் பாய்மரத்தை ஏற்றிக் கப்பலை ஓட்டினான், கப்பல் தொலைதூரம் சென்ற பிறகு, நாய்கள் தன்னைவிட்டு நீங்குமாறு பாட்ரிக் சைகை காண்பித்தான். பிறகு அவன், கப்பலின் தளபதியிடத்தில் வந்து, தன்னை வீட்டுக்குக் கொண்டுவிட வேண்டுமென்றும், இல்லையேல் நாய்களை முரட்டாட்டம் பிடிக்கச் செய்து, அவனே கப்பலை ஓட்டிச் செல்வதாகவும் பயமுறுத்தினான். தளபதி கிறிஸ்தவனாகயிருந்தபடியால், பையனின் கதையை கவனத்தோடு கேட்டு, மிகவும் சந்தோஷத்தோடு அவனை வீடுகொண்டு போய்ச் சேர்த்தான். பாட்ரிக் வேதாகமப் பள்ளிக்கூடத்தில் படித்து அயர்லாந்துக்கு திரும்பிவந்து, வசனத்தினாலும் தேவனுடைய வல்லமையினாலும் அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து ஆயிரக்கணக்கான மக்களை இரட்சித்தான். பாட்ரிக் ஒரு முறையாவது ரோமாபுரிக்குச் செல்லவில்லை. ரோமாபுரி இந்தத் தீவில் ஆதிக்கம் கொண்டபோது, தக்க சமயம் பார்த்து, பாட்ரிக்கால் இரட்சிக்கப்பட்டு வளர்ந்த சபையைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு மேலுள்ள கிறிஸ்தவர்களைக் கொன்றுபோட்டது. பரி. பாட்ரிக் இறந்து சுமார் 60 வருடங்கள் கழிந்து, பரி. கொலம்பா என்பவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஃபர்கஸ் (FERGUS) என்பவருக்கு வட அயர்லாந்திலுள்ள டோனிகல் (DONEGAL) என்ற சிறிய பட்டினத்தில் பிறந்தார். இவர் வேத அறிவை அதிகமாகப் பெற்று, கொஞ்சங்குறைய வேதப்புத்தகம் முழுவதையும் மனப்பாடம் செய்தார். ஒருநாள் கர்த்தர் உரத்த சத்தமாய் அவரை ஊழியத்திற்கென்று அழைத்தார். அன்று முதல் இவர் அதிசயமான ஊழியத்தைச் செய்து வந்ததன் காரணமாக, ஆதிகால அப்போஸ்தலர்களுக்கு அடுத்தபடியாக இவர் வல்லமை பெற்றவர் என்று சரித்திரக்காரர்கள் கூறுகின்றனர். இவருடைய ஊழியம் அதிகமான அற்புதங்களையும் அடையாளங்களையும் கொண்டதாக இருந்தபடியால், ரோமசபையும் இவரைக் குறித்துக் கேள்விப்படுகின்ற காரியங்கள் கொஞ்சம் அதிகமாகக் கூட்டி சொல்லப்படுகின்றன (EXAGERRATED) என்று நினைத்தது. ஒரு முறை ஊழியத்திற்காக இவர் சென்றபோது, ஒரு மதில் சூழ்ந்த பட்டினத்தை அடைந்தார். அப்பட்டினத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டு, இவர் உள்ளே செல்லத் தடைசெய்யப்பட்டார். உடனே இவர் தன்னுடைய சத்தத்தைக் கர்த்தரிடத்தில் ஏறெடுத்து, கர்த்தர் தாமே தடையை நீக்கி அவர் சுவிசேஷத்தை இந்தப் பட்டினத்தில் பிரசங்கிக்க உதவி செய்யவேண்டும் என்று ஜெபித்தார். அவ்வமயம் அப்பட்டினத்தின் மந்திராலோசனை சபையிலுள்ளவர்கள் (COURT MAGICIANS) உரத்த சத்தமிட்டு அவரைத் துன்புறுத்தினர். இதைக் கண்ட கொலம்பா ஒரு சங்கீதம் பாடத் தொடங்கினார். கர்த்தர் கொலம்பாவின் சத்தத்தை உச்சநிலைக்கு உயர்த்தி அஞ்ஞானிகளின் சத்தத்தை அடக்கினார். அப்பொழுது திடீரென்று பட்டினத்தின் வாசல்கள் தானாகத் திறவுண்டன. கொலம்பா உள்ளே பிரவேசித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகம்பேரை கர்த்தருக்கென்று இரட்சித்தார். மற்றொரு சமயம், ஒரு கிராமத்தில் பிரசங்கம் செய்வதற்குக் கொலம்பா தடை செய்யப்பட்டார். அவ்விடம் புறப்பட அவர் எத்தனிக்கையில், அந்தக் கிராமத்தின் தலைவனுடைய மகன் மரணத்துக்கேதுவான வியாதி கொண்டான். அப்பொழுது கிராமத்து வாசிகள் அவரைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்தனர். கொலம்பா விசுவாசத்தின் ஜெபத்தை ஏறெடுத்த மாத்திரத்தில் அவன் சுகமடைந்தான். இந்தச் சம்பவத்தின் மூலமாக அந்தக் கிராமம் சுவிசேஷத்திற்கென்று திறக்கப்பட்டது. பரி. கொலம்பாவும் அவருடைய உடன் ஊழியரும் பிரசங்கித்த சுத்த சுவிசேஷம், ஸ்காட்லாந்து தேசம் முழுவதும் பரவி அநேகர் கிறிஸ்துவினிடத்தில் திரும்ப ஏதுவாயிருந்தது. மேலும் இச்சுவிசேஷம் ஐயர்லாந்திலும் வட ஐரோப்பாவிலும் பரவிற்று. சுவிசேஷத்தைப் பரப்புவதற்கென்று கொலம்பா ஒரு நல்ல முறையைக் கையாண்டார். வித்தியாசமான துறைகளில் பணியாற்றும் பன்னிரண்டுபேர் கொண்ட ஒரு குழு, அதன் தலைவனோடு ஒரு புதிய ஸ்தலத்திற்குச் செல்லும். அக்குழுவிலுள்ளவர்கள் வேத வசனத்தை நன்றாக அறிந்து, பரிசுத்த ஜீவியத்தைச் செய்வர். அவர்கள் சென்ற ஸ்தலத்தில் சுவிசேஷத்தைப் பரப்ப அவர்கள் முற்படுவர். இவர்களை அநேகம்பேர் சேர்ந்துகொண்டு, வசனத்தைக் கற்றுக்கொண்டு, கர்த்தருடைய ஊழியத்திற்கென்று தங்களை ஆயத்தப்படுத்தினர். இவர்களெல்லாரும் மணந்துகொள்ள உரிமை பெற்றிருந்த போதிலும், தேவனை அதிகமாய் சேவிக்க வேண்டும் என்ற எண்ணங்கொண்டதால் அவ்வாறு செய்யாமலிருந்தனர். அரசாங்க உதவியில்லாமல் இவர்கள் வாழ்ந்துவந்தபடியினால், அரசியலில் ஈடுபடா மலிருக்க இவர்களால் முடிந்தது. சத்தியமானது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றும் பலத்த ஆயுதம் என்பதை இவர்கள் அறிந்திருந்தபடியால் மற்ற மதங்களின் கோட்பாடுகளை அவர்கள் எதிர்ப்பதற்குப் பதிலாகச் சத்தியத்தை மாத்திரம் பிரசங்கித்தனர் ரோமாபுரியோடு எக்காரணம் கொண்டும் இவர்கள் சம்பந்தப்படவில்லை. ஸ்காட்லாந்து தேசத்தின் தென்மேற்குக் கரையில் இருந்த ஹை (HY) என்னும் தீவில் பரி. கொலம்பா ஒரு வேதாகமப் பள்ளியை நிறுவினார். அந்தத் தீவுக்கு அவர் சென்றபோது, அது கற்பாறையால் நிறைந்ததும் விளைச்சலற்ற பூமியுமாயும் இருக்கக் கண்டார். அவ்விடத்தில் கொலம்பா ஒரு கையில் விதையை விதைத்து, மறு கையை வானத்திற்கு ஏறெடுத்து விளைச்சலுண்டாக ஜெபித்தார், இன்றைக்கோ இத்தீவு உலகத்திலேயே மிகவும் செழிப்பான இடமாக விளங்குகிறது, இத்தீவிலிருந்து அநேகர் வேதத்தை அறிந்து, தேவனுடைய ஞானத்திலும் வல்லமையிலும் நிறைந்தவராய் ஊழியத்திற்கென்று புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர். கர்த்தருடைய ஊழியக்காரனாகிய இவருடைய சரித்திரத்தையும் இவருடைய மகத்தான கிரியைகளைக் குறித்தும் நான் படித்த போது, இவருடைய காலத்திற்குப் பிறகு, போப்பின் ஆதிக்கம், அவர் பிரசங்கித்த இடங்களைக் கைப்பற்றி, சத்தியத்தை அழித்துப் போட்டு, மக்களைத் தன்னிடம் சேர்த்துக் கொண்டதே என்று நான் விசனித்ததுண்டு. வாழ்த்து வெளி 2.18. `அக்கினி ஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது. இயேசுவே தேவனுடைய குமாரன் எனும் கர்த்தத்துவத்தின் வெளிப்பாடு தியத்தீரா சபைக்கு அளிக்கப்பட்டது. அவர் மாம்சத்திலிருந்தபோது மனுஷகுமாரன் என்று அழைக்கப்பட்டார். ஆனால் இது முதற்கொண்டு நாம் அவரை மாம்சத்தின்படி அறியோம். எல்லாத் தீர்க்கதரிசனங்களையும் தனக்குள் நிறைவேற்றின பெரிய தீர்க்கதரிசியாக அவர் மனுஷ குமாரனாக இனி ஒருபோதும் இருப்பதில்லை. தேவனுடைய ஒரே பேறானவர் பிதாவின் மடிக்குச் சென்றுவிட்டார். இப்பொழுது அவரை நாம் உயிர்த்தெழுந்த வல்லமையில்தான் அறிவோம். அவர் உயிர்த்தெழுந்து, வல்லமையைச் சுதந்தரித்துக்கொண்டு, தன்னுடைய சொந்த மகிமை புகழ்பட எல்லாரிலும் உயர்ந்தவராகவும், எல்லாவற்றிற்கும் மேலாகவும் இருக்கிறார். அவருடைய மகிமையை அவர் வேறு யாருடனும் பகிர்ந்துகொள்வதில்லை. சபையின் தலைமையின் பொறுப்பை எந்த மனிதரிடத்திலும் அவர் ஒப்படைக்கமாட்டார். தியத்தீராவை அவர் மேலேயிருந்து காணும்போது, அந்தப் பெயரைப் பெற்றிருக்கும் பட்டினத்திலும் அந்தப் பெயருக்குரிய தான நான்காவது சபையின் காலத்திலும், அவருக்கே உரிமையான மகத்துவத்தை வேறொருவன் பெற்றிருப்பதாகக் காண்கிறார். பிதாவின் ஒரே பேறான குமாரனாய் அவரேயிருக்க, அப்போல்லோ (EPOLLO) தேவனுடைய குமாரனாய் விளங்கப் படுவதைக் கண்டு அவருடைய கண்கள் கோபத்தின் உக்கிரத்தினாலும் நியாயத்தீர்ப்பின் அக்கினியினாலும் ஜொலிக்கின்றன. தியத்தீரா பட்டினத்தில் சூரிய தேவனான அப்போல்லோவை வழிபட்ட அஞ்ஞானிகளைப் போலவே தியத்தீரா காலத்திலுள்ள சபையின் அங்கத்தினர்களும், ஒரு மனிதனை உயர்த்தி அவனை வழிபட்டு, இந்த வழிபாடு அரசாங்க அங்கீகாரம் பெற்றிருந்தது என்பதனை அவர் கண்டார். அக்காலத்து விளங்கிய ரோமன் கத்தோலிக்க சபை, அப்போல்லோவை வழிபடும் சடங்குகளை ஆதாரமாகக் கொண்டு, விக்கிரக ஆராதனையில் மூழ்கி, சபையையும் அரசாங்கத்தையும் ஒன்று சேர்த்து, அதன் மூலம் மனிதனான போப்பைத் தேவனாக உயர்த்தியது. `ஆவிக்குரிய கண்களோடு போப்பை நாம் காண்போமானால், அவர் மனிதனாக அல்ல,தேவனாகவே இருக்கிறார். அவருடைய அதிகாரத்திற்கு எல்லையில்லை. தன்னுடைய மனதில் தோன்றும் எவையும் சரியென்று பிரகடனம் செய்யவும், அவருக்கு இஷ்டமில்லாதது சரியல்ல என்று எடுத்துவிடவும் அவருக்கு அதிகாரமுண்டு. இந்த அதிகாரத்தைக் (UNIVERSAL POWER) குறித்துச் சந்தேகிக்கிறவனுக்கு இரட்சிப்பில்லை, அவருக்கு கீழ்ப்படியாதவர்கள் சபையின் பெரிய எதிரியாகக் கருதப்படுவர்’ என்று தாமஸ் ஆக்வினாஸ் (THOMAS AQUINAS) என்பவரும் ஆல்விரஸ் பெலாகியஸ் (ALVERUS PELAGIUS) என்பவரும் அறிக்கை விடுத்தார்கள். `தேவனுக்கும் மனுஷருக்கும் (பன்மை) மத்தியஸ்தர் ஒருவரே.... மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே (தேவனுடைய குமாரன்)’ (1 தீமோ.2.5) ` தேவனுக்கும் மனுஷனுக்கும் (ஒருமை) மத்தியஸ்தர் ஒருவரே’ என்று ரோமாபுரியிலுள்ள போப் வார்த்தையை மாற்றிவிட்டார். ஆகையால் மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் மனிதனுக்குமிடையே அவர் மத்தியஸ்தம் செய்கிறார். ஆனால் குமாரனைத் தவிர வேறு எந்த மத்தியஸ்தருமில்லை. ரோம சபையின் மூலமாகப் போப் இரட்சிப்பை அளிக்கிறார். தேவனுடைய குமாரன் மூலமேயன்றி வேறு இரட்சிப்பில்லை. இதன் காரணமாகத்தான் நியாயத்தீர்ப்பினால் அவருடைய கண்கள் ஜொலிக்கின்றன. இவ்வுலகத்திலுள்ள எல்லாப் பொல்லாத ராஜ்யங்களையும் தன் கால்களின்கீழ் மிதித்துத் தூளாக்குவதற்கென்று வெண்கலம் போன்ற பாதங்களை அவர் பெற்றிருக்கிறார். இப்பாதங்களுக்காக நான் தேவனைத் ஸ்தோத்தரிக்கிறேன். இப்பாதங்கள் நமக்கென்று நியாயத்தீர்ப்பு பெற்று, ஆணிகளால் கடாவப்பட்டன. இந்நியாயத்தீர்ப்பின் மூலம் அவர் வெற்றி சிறந்தவையெல்லாம் இப்போது நமக்குரியவை. இப்பாதங்கள் நமக்கு இப்பொழுது அஸ்திபாரமாயிருக் கின்றன. நாம் தேவனுடைய குமாரனோடு ஒன்றுபடுத்தப் பட்டிருக்கிறோம். இந்தச் சபையின் காலத்தில்தான் முகம்மதிய மார்க்கம் தோன்றி தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை மறுதலித்து, கிறிஸ்தவர்களென்று தங்களை அழைத்துக் கொள்பவர்களைக் கொல்ல உறுதி கொண்டது. இதே காலத்தில்தான் கள்ளச் சபை சர்வ வல்லமையுள்ள தேவனுடைய முதற் கற்பனையை எதிர்த்து, இரண்டாவது கற்பனையையும் முறிக்கத் தலைப்பட்டது. ஏனெனில், அது போப்பை இயேசு கிறிஸ்துவின் ஸ்தானத்தில் நிறுத்தி, விக்கிரகாராதனையைச் சபையில் புகுத்திட, விக்கிரகங்களுக்குச் சபையில் இடமில்லை என்று எதிர்த்தவர்களெல்லோரையும் கொன்றுபோட்டது. கி.பி. 842 முதல் கி.பி. 867 முடிய அரசாட்சி செய்த தியோடரா ராணியின் (EMPRESS THEODORA) காலத்தில் மாத்திரம், விக்கிரகங்களை மதிக்காத ஒரு லட்சத்திற்கு மேலான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். உண்மையாகவே இச்சபை தன்னுடைய கிரியைகளுக்காக மனந்திரும்ப வேண்டும். மகிமையின் கர்த்தராகிய தேவன் நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரும் புறக்கணிக்கப்பட்டார், அவருடைய வார்த்தையும் புறக்கணிக்கப்பட்டது. மனிதக் கரங்களும் இருதயங்களும் அவரைப் புறக்கணித்தாலும், அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் உண்மையுள்ள வராகவே இருக்கிறார்.`பயப்படாதே சிறு மந்தையே, உனக்கு ராஜ்யத்தைக் கொடுப்பதற்கு உன் பிதா பிரியமாயிருக்கிறார், நான் வெண்கலம் போன்ற பாதங்களோடும் ஜொலிக்கும் கண்களோடும் வரும்போது, நான் பழிவாங்கு வேன், பழிவாங்குதல் எனக்குரியது, நான் பதில் செய்வேன் என்று கூறி அவர்களைத் தேற்றுகிறார். புகழ்ச்சி வெளி 2.19. `உன் கிரியைகளையும், உன் அன்பையும் உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக் கிறேன். `உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்’ எனும் முகவுரையைத் தான் நாம் மறுபடியும் இங்கு காண்கிறோம். `என்னுடைய கிரியைகளைக் குறித்தாவது என்னை விசுவாசியுங்கள்’ என்று தேவகுமாரன் தாமே சொன்னார். இந்த உலகத்தில் அவர்வாழ்ந்த போது அவருடைய சொந்தக் கிரியைகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார். அவரை விசுவாசிப்பதற்காக அவர் செய்த கிரியைகள் தேவனால் அருளப்பட்டன. அவருடைய கிரியைகள் அவருடைய ஊழியத்தில் ஒரு முக்கிய பாகம் வகித்தன. பவுலுக்குள் இருந்த பரிசுத்த ஆவியானவரும் `ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்’ என்று கூறுகிறார் (எபே 2.10). அவரோடு நாம் கொண்டிருக்கும் சம்பந்தம் திருஷ்டாந்தப்படுவதற்கென்று, அவருடைய கிரியைகள் நமக்கு விசுவாசத்தையுண்டாக்குகின்றன. இந்தச் சம்பந்தத்தைத் தான் `அவருக்குள் சிருஷ்டிக்கப்பட்டோம்’ என்னும் வாக்கியத்தினால் பவுல் அப்போஸ்தலன் விளக்குகிறான். நாம் இரட்சிக்கப்பட தேவன் பேரிலுள்ள விசுவாசம் நமக்கு அவசியமேயன்றி, கிரியைகளைக்கொண்டு நாம் ஒருக்காலும் இரட்சிக்கப்பட முடியாது. ஆனால், ஏற்கெனவே அவர்மேலுள்ள விசுவாசத்தைக் கிரியைகள் தான் வெளிப்படுத்த முடியும், நற்கிரியைகள் நம்மை இரட்சிக்காவிட்டாலும், அவைகள் இரட்சிக்கப் பட்ட ஒருவனுடைய ஜீவியத்தில் தேவனுக்கு ஏறெடுக்கும் கனிகளாகவிளங்கும், நான் நற்கிரியைகள் செய்வதை விசுவாசிக்கிறேன். ஒரு மனிதன் இரட்சிக்கப் படாவிட்டாலும் அவன் தன்னால் இயன்ற வரை நற்கிரியைகளைச் செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மக்கள் பொல்லாத கிரியைகளைச் செய்து, இதன் மூலம் நாங்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறோம் என்று சொல்வார்களாகில், அதுவே தேவனுடைய பார்வையில் மிகவும் பயங்கரமான காரியமாகும். ரோமாபுரியிலுள்ள அத்தியட்சகர்களும் BISHOPS), போப்புகளும் இவ்விதம் கர்த்தரின் நாமத்தினால் எல்லாப் பொல்லாத கிரியைகளையும் செய்து அநேகரைக் கொன்று துன்புறுத்தினர். தேவனுடைய வசனத்தின் போதனை களுக்கு மாறாக அவர்கள் தங்கள் ஜீவியத்தை நடத்தி வந்தனர். ஆயினும் இந்தப் பொல்லாத காலங்களில், உண்மையான விசுவாசிகள் நற்கிரியைகளைத் தொடர்ந்து செய்துஇருளிலே வெளிச்சத்தைப்போன்று பிரகாசித்தனர். சபித்தவர்களை அவர்கள் ஆசீர்வதித்தனர். தங்களுடைய ஜீவனையும் பொருட்படுத்தாமல், தேவனை மகிமைப்படுத்த எண்ணி அவர்கள் சத்தியத்தை வாழ்ந்து காட்டினர். மேற்கூறிய இந்த வசனத்தில் (வெளி 2.19) மாறுபட்ட ஒரு நல்ல ஜீவியத்தை நடத்தி வந்ததற்காக அவர்களை இயேசு கிறிஸ்து புகழுகிறார். அவர்களுடைய கிரியைகள் அவர்களுக்குள்ளிருந்த புதுஆவிக்கு சாட்சியாக இருந்தன. மனிதர் அவர்களுடைய நற்கிரியைகளைக் கண்டு தேவனை மகிமைப்படுத்தினர். ஆம், நீயும் கிறிஸ்தவனாக இருந்தால், நற்கிரியைகளைச் செய்வாய். உன்னுடைய கிரியைகள் உன்னுடைய நேர்மையான இருதயத்தை எடுத்துக் காட்டும். வெளிவேஷத்திற்கென்று, நற்கிரியைகளைச் செய்வது போல் பாசாங்கு செய்யாமல், யாரும் காணாத சமயத்திலும், தேவன் உன்னைக் காணும்போது, உன்னுடைய ஜீவனை நீ அதற்கென்று இழக்க நேரிட்டாலும், தேவனுடைய சித்தத்தை நீ செய்வாய். `உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும் அறிந்திருக் கிறேன்’. இந்த வசனத்தில் அவர்களில் காணப்பட்ட அன்பு, `ஊழியத்திற்கும், `கிரியைகளுக்கும்’ இடையில் அமைக்கப் பட்டிருக்கக் காணலாம். அது தான் அதற்குரிய ஸ்தலமுமாம்; ஏனெனில் நம்மிடத்தில் அன்பில்லாமல், தேவன் நம்முடைய கிரியைகளையும் ஊழியத்தையும் அங்கீகரிக்கமாட்டார். பவுல் கொரிந்து சபைக்கு எழுதும்போது `அன்பு இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை. அன்பு எனக்கிராவிட்டால் நான் எதைச் செய்தாலும் எனக்குப் பிரயோசனமில்லை’ எனக் குறிப்பிடுகின்றார். நிக்கொலாய் மதஸ்தரைப் போன்று, இக்காலத்து விசுவாசிகள், இரட்சிக்கப் படுவதற்கென்றோ அல்லது மற்றவர் மெச்ச வேண்டும் என்ற எண்ணத்தோடு தங்களுடைய கிரியைகளைச் செய்யாமல், பரிசுத்த ஆவியினால் தங்களுடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருந்த தேவனுடைய அன்பினிமித்தம் அவைகளைச் செய்து வந்தார்கள். அவர்களுடைய இருதயங்களில் உண்டாயிருந்த அன்பு, தேவன் தம்முடைய சொந்தமானவர்களிடத்தில் காண்பிக்கும் அன்பாகும். இயேசு கிறிஸ்துவும் `நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்களே’ என்றார், (யோவான் 13.35). ஆதிக் கிறிஸ்தவர்களின் ஜீவியத்தைக் கண்ட அஞ்ஞானிகள் `இவர்கள் ஒருவரி லொருவர் எவ்வளவு அன்புள்ளவர்களாயிருக்கின்றனர்’ என்று வியந்தனர். யோவான் `அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்’ என்று கூறியிருக்கிறான் (1 யோவான் 4.7). கடைசிக் காலங்களில் அக்கிரமத்தின் மிகுதியால் அன்பு தணிந்து போகும் என்று கூறியிருப்பதை நான் நினைவூட்டி எச்சரிக்கிறேன். லவோதிக்கேயாவின் சபையின் காலமாகிய கடைசிக் காலத்தில், சுய அன்பும், உலகப் பொருள்களின் மேலுள்ள அன்பும், நாம் தேவன்பேரில் வைத்திருக்கும் அன்பைப் புறம்பாக்கிப்போடும். இக்காலங்களில் நம்மைப் பாவத்தின் வல்லமையிலிருந்து காத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது. கடைசிக்காலத்து ஆவியின் தன்மையின் விளைவை அநேகர் அறியாதிருக்கிறபடியால், அவர்கள் மனக்கடினமுள்ளவர்க ளாயிருக்கின்றனர். தேவனிடத்தில் நாம் அதிகமாக நெருங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அவருடைய அன்பினால் நம்முடைய ஜீவியத்தை நிரப்ப நாம் அனுமதிப்போம். இல்லையேல் இந்தக் கடைசி காலச் சபையின் தணிந்த நிலைமையை நாம் அடைந்து, தேவனுடைய சத்தியத்தைப் புறக்கணித்துவிடுவோம். இந்தக் காலத்தில் சத்தியமே நமக்கு உதவி செய்ய வல்லதாயிருக்கிறது. இருளின் காலங்களில் இருந்த உண்மையான திருச்சபை தேவன்பேரில் வைத்திருந்த அன்பையும் சகோதரரிடத் திலுள்ள அன்பையும் பற்றியிருந்ததால், தேவன் அவர்களைப் புகழ்கிறார். `நான் உன் ஊழியத்தை அறிந்திருக்கிறேன்’. `உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாயிருக்கக் கடவன்’ என்று இயேசு கூறுகிறார். ஒரு ஞானவான் இயேசுவின் இந்த வாக்கியத்தைக் குறித்து, சரித்திரம்தான் இந்த வாக்கியத்தின் உண்மையைப் புலப்படுத்தக்கூடும்’ என்று விளம்பினார். அந்த மனிதன் கூறினதும் சரியே. சரித்திரம் கூறும் பெரிய மனிதர்களெல்லாம் ஒரு காலத்தில் ஊழியக்காரராக விளங்கினர். ஆனால் மற்றவர்கள் தங்களுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தினவர்களும், மற்றவரைத் துன்புறுத்தின வர்களும், எப்பொழுதும் முதன்மையாயிருக்க விரும்பினவரும், ஒன்றுமில்லாமல் அவமானப்பட்டு தாழ்த்தப்பட்டனர். தங்களுடைய ஆஸ்தியை சரிவர உபயோகிக்காத செல்வந்தர்களும்கூட தேவனால் கடிந்துகொள்ளப்படு கின்றனர். மற்றவர்களுக்கு ஊழியஞ் செய்தவரே உண்மையாகவே கடைசியில் முதன்மை ஸ்நானம் வகித்தனர் என்று சரித்திரத்தில் நாம் காணலாம். சரித்திரமும் ஊழியஞ் செய்தவர்களைத்தான் புகழுகிறது. மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், நாம் அவருடைய மாதிரியைப் பின்பற்ற, அநேகருக்கு ஊழியஞ் செய்யும்படி வந்தார். அப்போஸ்தலருடைய களைப்புற்ற, அழுக்கு நிறைந்த பாதங்களை அவர் கழுவினார். `நான் செய்வதை இப்போது அறியமாட்டாய், இனிமேல் அறிவாய்’ என்று அவர் பேதுருவுக்குச் சொன்னார். அதுமட்டுமன்றி `நான் செய்யக் காண்பவைகளெவைகளோ அவைகளை நீங்களும் செய்யவேண்டும்’ என்றும் கூறினார். இவரை உன்னத நிலைக்குத் தேவன் உயர்த்துவதெற்கென்று, அவர் ஊழியக்காரனாக வேண்டியிருந்தது. `நல்லது உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உன்னுடைய எஜமானனுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி’ என்று அவர் பரிசுத்தவான்களின் நியாயத் தீர்ப்பில் கூறுவதை நாம் கேட்கலாம். மற்றவருக்கு ஊழியம் செய்பவன் ஒருநாள் அவரோடு சிங்காசனத்தில் உட்காரும் அருளைப் பெறுவான். `நான் உன் விசுவாசத்தை அறிந்திருக்கிறேன்’ என் விசுவாசத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறாய்’ என்று பெர்கமு சபைக்குக் கூறியதுபோல அவர் இங்கு கூறவில்லை. அவருடைய விசுவாசத்தைக் குறித்து அவர் இங்கு பேசாமல், அவர்களுடைய (தியத்தீரா சபையின் விசுவாசிகள்) விசுவாசத்தைக் கண்டுபுகழ்கிறார். அவர்களுடைய `பொறுமை’யைப் பற்றியும்இங்கு அவர் குறிப்பிடுகிறார். விசுவாசமும் பொறுமையும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டது. விசுவாசத்தில் நிலைத்திருப்பதன் காரணமாக பொறுமை உண்டாகிறது. `உங்கள் விசுவாசத்தின் பரீச்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறியுங்கள்’ (யாக் 1.3). பொறுமையை அடைவதற்கு வேறு வழி எதுவுமில்லை. அதை விசுவாசத்தின் பரீட்சையின் மூலம்தான் அடையமுடியும். `உபத்திரவம் பொறுமையை உணடாக்கும். (ரோமர் 5.3). நீங்கன் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாய் இராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது’ (யாக் 1.4) என்ற வசனத்தின் மூலமாய் தேவன் பொறுமையைக் குறித்து எவ்வளவு உயர்வாக எண்ணுகிறார் என்பது நமக்குப் புலப்படுகிறது. நாம் பூரணப்படுவது கர்த்தருடைய சித்தமாயிருக்கிறது. தேவனிடத்தில் காத்திருப்பதனாலும், தேவனுடைய வருகைக்குக் காத்திருப் பதனாலும் உண்டாகும் பொறுமை நம்மை பூரணப்படுத்தி நம்முடைய தன்மைகளை வளரச் செய்கிறது. இருள் காலங்களில் ஜீவித்த விசுவாசிகளின் பொறுமையினிமித்தம் தேவன் அவர்களை உயர்வாகப் புகழுகிறார். அடிக்கப்படும்படி கொண்டு போகப்படும் ஆட்டுக் குட்டிகளைப் போல் பொறுமையாயிருந்து, அன்போடும் விசுவாசத்தோடும் அவர்கள் தேவனைச் சேவித்து, அவ்வாறு சேவிப்பதையே அவர்களுடைய ஜீவியத்தின் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்காக பரலோகத்தில் அவர்களுடைய பலன் மிகுதியாக இருக்க வேண்டும். `நான் உன்னுடைய கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறது’ இது அபாரமான ஒரு காரியமாகும். இரு காலங்களின் பயங்கரம் அதிகமாகிக்கொண்டேபோய், அதிகமதிகமான பரிசுத்தவான்கள் நாள்தோறும் கொல்லப்பட்டபோது, இவ்விசுவாசிகள் கர்த்தருக்கென்று அதிகமதிகமாய் ஊழியம் செய்து, அவர்களுடைய விசுவாசமும் அதிகரித்துப் பலப்பட்டது. எபேசு சபையின் காலத்தில் ஆதியில் கொண்டிருந்த அன்பு குறைந்து போனது அதைத் தொடர்ந்த மற்றைய சபைகளின் காலங்களிலும் அன்பின் ஊழியம் அதிகப்பட்டது என்று எங்கும் கூறப்படவில்லை, ஆனால் மிகவும் பயங்கரமான இருள் சூழ்ந்த இந்தக் காலத்தில், விசுவாசிகள் தேவனை அதிகமாகச் சேவித்தார்கள். இது நமக்கு ஒரு பாடமாகத் திகழவேண்டும். நம்முடைய அன்பின் ஊழியம் முன்னிட்டும் அது குறைவுபடக் கூடாது. இது ஒரு பெரிய இரகசியம். நாம் தேவனுக்குச் செய்யும் ஊழியத்தைச் சாத்தான் கெடுக்கப் பார்த்தாலும், நம்முடைய ஊழியம் அதிகப்பட வேண்டும். சோர்ந்து போனவர்கள் பயத்தினால் அலறுவதற்குப் பதிலாக, வெற்றியடைய முயற்சிக்க வேண்டும். `நீ முன்பு செய்தகிரியைகளிலும் பின்பு செய்தகிரியைகள் அதிகமாயிருக் கிறது’ நாம் முன்கூறியபடி, இந்தக் காலம், சரித்திரத்திலேயே மிகவும் கொடூரமான காலமாயிருக்கிறபடியால், `இருளின் காலம் (DARK AGES) என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் போப் இன்னோஸென்ட் III (POPE INNOCENT III) என்பவர் தன்னைத் `தேவனின் பிரதிநிதி’ (VICAR OF CHRIST) என்றும், சபையின் மேலும் உலகத்தின் மேலும் அதிகாரம் செலுத்த உரிமையுடையவர் என்றும் கூறிக்கொண்டார். இவர் காலத்தில் ஆயிரக்கணக்கானவர் கொல்லப்பட்டனர். சீர்திருத்தக் காலத்தைத் தவிர்த்து, மக்களின் இரத்தம் அதிகமாகச் சிந்தப்பட்ட காலம் இதுவே. அதுவுமன்றி, இந்தக் காலம் வேசிகள் ஆட்சி செய்யும் காலமாயிருந்தது. சகேரியஸ் III (SAGARIUS III) என்பவருக்கு ஒரு வைப்பாட்டி (SISTERS) இருந்தாள். அவள் மூலமாய் இவருக்கு அநேக கள்ளப்புத்திரர் (BASTARD SONS) இருந்தனர். இவர்கள் போப்பின் அரண்மனையை நிறைத்து அதைக் கள்ளர் குகையாக்கிப் போட்டனர். சகரியஸின் வைப்பாட்டியான மரோஸியா (MAROZIA) என்பவள் அனஸ்டேஸியஸ் III (ANASTASUS III) என்பவரைக் கொன்று போட்டாள். ஜான் XI (JOHN XI) என்பவர் மரோஸியாவுக்குப் பிறந்த கள்ள புத்திரன். ஜான் XII என்பவர் மரோஸியாவின் பேரன். அவர் அநேக விதவைகளையும் கன்னிப் பெண்களையும் கற்பழித்தார். ஒரு நாள் ஒரு பெண்ணோடு விபசாரம் செய்திருந்தபோது, அந்தப் பெண்ணின் கணவன் கோபங்கொண்டு அவரைக் கொன்று போட்டான். இரண்டு வம்சங்களிலிருந்து தோன்றிய போப்புகள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டு, ஒருவர் அவிக்னான் (AVIGNON) என்ற இடத்திலிருந்தும் மற்றவர் ரோமாபுரியிலிருந்தும் ஆளுகை செய்தனர். இந்தப் போப்புகள் அசுத்தமான வழிகளில் நடந்து அநேகக் கள்ளக் குழந்தைகளுக்குத் தகப்பன்மாராகி, ஆண்புணர்ச்சியில் ஈடுபட்டு, ஆசாரிய ஊழியத்தை (PRIESTLY OFFICE) அதிகப் பணம் கொடுத்தவர்களுக்கு விற்றுப் போட்டனர். இந்தக் காலத்தில் ஒளி மங்கி எரிந்தாலும், காலம் பயங்கரமாகுந்தோறும், ஜீவித்த கொஞ்ச விசுவாசிகள் ஊக்கத்தோடு உழைத்ததன் காரணமாக, அந்தக் காலத்தின் முடிவில் அநேகம்பேர்தோன்றி சபையைச் சீர்திருத்த முயற்சித்தனர். பிற்காலத்தில் தோன்றின சீர்திருத்தத்திற்கு வழிகோலியது இவர்களுடைய உழைப்பேயாம். ஆகையால்தான் வேதவாக்கியம் `நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் (அதாவது இக்காலத்தின் முடிவில் செய்தகிரியைகள்) அதிகமாயிருக்கிறது’ எனக்கூறுகிறது. `தியத்தீரா’ என்ற பதத்திற்கு அநேக அர்த்தங்களுண்டு. அவைகளின் ஒரு அர்த்தம் `தொடர்ந்து நடக்கும் பலி’ (CONTINUAL SACRIFICE) என்பதாம். அந்தக் காலத்தில் கிறிஸ்துவின் பலியைக் காண்பிக்க `மாஸ்’ (MASS) என்னும் ஆராதனை சபையில் புகுத்தப்பட்டது. இதன் காரணமாகத்தான் இந்தச் சபை `தியத்தீரா’ வென்று முன்கூட்டியே தீர்க்கதரிசனமாகப் பெயரிடப்பட்டது என்று அநேகர் நம்புகின்றனர். இந்த விளக்கம் நன்றாக இருக்கிறது. எனினும் கர்த்தரின் உண்மையான பரிசுத்தவான்கள் தங்களுடைய ஜீவியத்திலும் ஊழியத்திலும் காண்பித்த ஜீவபலியையும் இது குறிப்பிடுவதாக இருக்கலாம். உண்மையாகவே, தியத்தீராவின் பரிசுத்தவான்கள், மற்றெல்லாக் காலத்துப் பரிசுத்தவான்களையும்விட அதிகமாய் பரிசுத்த ஆவியினாலும், விசுவாசத்தினாலும் நிறைந்தவர்களாய், நற்கிரியைகளுக்கென்று உண்டாக்கப் பட்டு, தேவனுடைய ஸ்தோத்திரத்தை வெளிப்படுத்தி, தங்களுடைய ஜீவனையும் பொருட்படுத்தாமல், கர்த்தருக்கென்று இனிய பலியாக அதைச் சந்தோஷத்தோடு ஒப்புக்கொடுத்தனர். கடிந்து கொள்ளுதல் வெளி 2.20. `ஆகிலும் உன்பேரில் எனக்குக் குறை உண்டு. என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள், என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்’. நான் இவ்வளவு காலமாய் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சத்தியத்தை நிரூபிப்பதற்கென, 23ம் வசனத்தையும் நீங்கள் படிக்க விரும்புகிறேன்; `அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந் திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவ ரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்’. உண்மையாகவே இரண்டு சபைகளுண்டென்றும், ஆவியானவர் இவைகளிரண்டையும் ஒன்றாகக் கருதி அவைகளிடம் பேசுகிறார் என்றும் நான் அநேகமுறை கூறியதுண்டு. மேற்கூறிய வசனத்தின் மூலம், சபைகள் உண்டென்றும், கர்த்தர் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து அறிபவர் என்பதைச் சில சபைகள் அறியவில்லையென்றும் நமக்குப் புலனாகிறது. அவர் அத்தகைய தன்மையுடையவர் என்பதை இச்சபைகளுக்கு நிரூபித்துக் காண்பிக்கப் போகிறார். கள்ளச் சபைகள் இச்சத்தியத்தை அறியாமலிருக்கின்றன. ஆனால் உண்மையான விசுவாசிகளைக் கொண்ட சபையோ, நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் தொடங்குகிறது என்பதையறிந்து, தேவனுக்குப் பயந்து, மற்றவர்கள் தங்களை நியாயந்தீர்க்காதபடிக்குத் தங்களைச் சரிப்படுத்திக் கொள்வார்கள். கள்ளச் சபைகளையும் ஏன் தம்முடைய சபைகளாகக் கர்த்தர் அழைக்கிறார்? கள்ளச் சபையைச் சேர்ந்தவர்கள் மாம்சத்தின்படி கிறிஸ்தவர்கள்தான். ஆனால் ஆவிக்குரிய பிரகாரம் அவர்களைக் கிறிஸ்தவர்களென்று கருத முடியாது. கிறிஸ்துவின் நாமத்தை அவர்கள் வீணாகத் தரித்துக் கொண்டிருக்கிறார்கள். `மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்’ (மாற்கு 7.7) இருப்பினும், இயேசு தேவனுடைய குமாரன்; அவர் சிலுவையிலறையுண்டு, மரித்து, உயிரோடெழுந்தார்; அவரே உலகரட்சகர் என்னும் சத்தியத்தை ஆதரிக்கும் ஒவ்வொருவனும் கிறிஸ்தவன் தான். அவ்வாறே குரானில் கூறப்பட்டதைஆதரிப்பவன் முகமதியனாவான். லவோதிக்கேயா சபையின் காலத்தில் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் அநேகர் கிறிஸ்து அருமையான குணாதிசயங்களைப் பெற்றிருக்கிறார் என உரைத்து, அதே சமயத்தில் அவருடைய தேவத்துவத்தை மறுப்பார்கள். `கிறிஸ்துவ விஞ்ஞானிகள்’ (CHRISTIAN SCIENTISTS) என்றழைக்கப்படும் ஒரு சாராரும் `சமூக சுவிசேஷத்தைப்’ (SOCIAL GOSPEL) பிரசங்கித்து வரும் ஆயிரக்கணக்கானவர்களும் இக்காலத்தில் இவ்வாறு செய்து வருகின்றனர். மேற்கூறியவர்களைச் `சாதாரணக் கிறிஸ்தவர்கள்’ என்றழைக்கலாம் (NOMINAL CHRISTIANS) இவர்கள் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் உண்மையான ஆவிக்குரிய விசுவாசிகளல்ல. உண்மையான விசுவாசியோ கர்த்தருடைய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்று, அவருடைய அவயவமாயிருக் கிறான். கோதுமை மணியோடு களையும் வளரவேண்டுமென்றும் அவைகள் கடைசி வரை பிடுங்கப்படக் கூடாதென்றும் தேவனுடைய திட்டமும் கட்டளையுமாயிருக்கிறது. களைகளைக் கட்டி அக்கினியில் போடப்படும் நாள் இனியும் வரவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் அது வரப்போகிறது. ஆவியானவர் இந்த இரண்டு சபைகளோடும் ஒருங்கே பேசுகிறார். உண்மையான சபையை அவர் புகழுகிறார். கள்ளச் சபையையோ கடிந்து கொள்கிறார். சரியான மார்க்கம் எதுவென்று உண்மையான விசுவாசிக்கு அவர் போதித்துவிட்டார். தேவனுடைய சமூகத்தில் நீதிமானாயிருக்க வேண்டுமாயின் எவைகளைச் செய்ய வேண்டும் என்பதனையும் கள்ளச் சபைக்குப் போதித்து எச்சரிக்கிறார். யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் பாவத்தின் போக்கை யாக்கோபு அப்போஸ்தலன் நமக்குக் காண்பிக்கிறார். `அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும் போது மரணத்தைப் பிறப்பிக்கும்’ (யாக் 1. 14-15). சபையின் காலங்களில் நடந்த சம்பவங்களை மேற்கூறிய வசனம் தெளிவாக எடுத்துக் காண்பிக்கிறது. ஆதியில் பாவம் எவ்வாறு ஒரு சிறுஉணர்ச்சியாக (FEELING) (ஏவாளுடைய) இருதயத்தில் தோன்றியதோ, அதே போன்று சபையின் மரணம், நிக்கொலாய் மதஸ்தரின் சாதாரண கிரியைகளோடு தொடங்கியது. இந்தக் கிரியைகள் வளர்ந்து போதகமாக (DOCTINE) மாறின. பிறகு இது அரசாங்க அதிகாரம் பெற்று,அதன் மூலம் அஞ்ஞான வழிபாடு சபையில் நிறுவப்பட்டது. தியத்தீரா சபையின் காலத்திலும் இந்தக் கொள்கைகள் தீர்க்கதரிசினியினால் போதிக்கப்பட்டது. இவ்வாறு இவைகள் ஒவ்வொரு சபையின் காலத்திலும் பரவி, கடைசியில் இரண்டாம் மரணமாகிய அக்கினிக் கடலில் முடிவடையும். இந்த நான்காவது சபையின் காலம் முழுவதும் கர்த்தர் யேசபேல் தீர்க்கதரிசினியைக் கடிந்து கொள்கிறார். வேதத்தின் சரித்திரத்தின் வாயிலாக, யேசபேலின் செய்கைகளின்தன்மையை நாம் அறிவோமானால், இச்சபையின் காலத்தில் நடந்த சம்பவங்களின் தன்மைகளையும் நாம் அறியலாம். யேசபேல் என்பவள் ஆபிரகாமின் குமாரத்தியல்ல என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மோவாபிய குடும்பத்தைக் சேர்ந்த ரூத் (RUTH), ஆவிக்குரிய பிரகாரம் இஸ்ரவேல் கோத்திரங்களில் சேர்த்துக் கொள்ளப்பட்டது போல் யேசபேல் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இவள் அஸ்தரோத்தின் (ASTARTE) ஆசாரியனும், சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தியாவாள் (1 ராஜா 16.31) இவள் தகப்பன், தனக்கு முன் அரசாண்ட பீலிஸ் (PHELES) என்பவனைக் கொன்று சிங்காசனத்தைக் கைப்பற்றினான். அப்படியெனில் யேசபேல் ஒரு கொலைகாரனின் மகள். (இது நமக்குக் காயீனை நினைப்பூட்டுகிறது) இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களுக்கு அரசனாயிருந்த ஆகாபை மணந்து கொண்டதன் காரணமாக இவள் இஸ்ரவேலின் ஒரு பாகமானாளேயன்றி, இஸ்ரவேல் கோத்திரத்தில் சேர்க்கப்படுவதற்கென்று தேவன் நியமித்த பிரமாணத்தைக் கடைபிடித்து அவள் இஸ்ரவேலைச் சேரவில்லை. ஆகையால் இந்தச் சேர்க்கை ஆவிக்குரியதல்ல. அரசியல் சம்பந்தப்பட்டது. விக்கிரகாராதனையிலே அமிழ்ந்து கிடந்த இவளுக்கு உண்மையான ஒரே தேவனை வழிபடவேண்டுமென்ற எண்ணம் சிறிதேனும் இல்லை. அதற்கு மாறாக இஸ்ரவேலை உண்மையான தேவனிடத்திலிருந்து திருப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இவள் இஸ்ரவேல் கோத்திரத்தில் நுழைந்தாள். இஸ்ரவேல் ஜனங்களும் ஏற்கெனவே பொன்னால் செய்யப்பட்ட கன்றுக் குட்டியை வணங்கிய அனுபவம் பெற்றிருந்தனர். இருப்பினும் இவர்கள் முழுவதும் தங்களை விக்கிரகாராதனைக்கு ஒப்புக் கொடுக்காமல், மோசேயின் நியாயப் பிரமாணத்தைக் கைக்கொண்டு, ஒரே தேவனை வழிபட்டு வந்தனர். யேசபேல் ஆகாபை மணந்த நாள் முதற்கொண்டு, விக்கிரகாராதனை பயங்கரமாக இஸ்ரவேலில் தலையெடுக்கத் தொடங்கியது. யேசபேல் அஸ்தரோத்துக்கும் (வீனஸ்), பாகாலுக்கும் (சூரிய தேவன்) ஆலயங்களைக் கட்டி இத்தேவர்களுக்கு ஆசாரியப் பணியை ஏற்றுக் கொண்டபோது, இஸ்ரவேல் ஜனங்களின் ஜீவியத்தில் ஒரு பெருத்த மாறுதல் ஏற்படும் காலம் வந்தது. மேற்கூறிய சரித்திர சம்பவத்தை நாம் மனதிற் கொண்டவர்களாய்; தேவ ஆவியானவர் தியத்தீரா சபையின் காலத்தில் எதை விவரிக்கிறார் என்று கவனிப்போம். ஆகாப் ராஜா, தன்னுடைய ராஜ்யம் பலப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும் என்று கருதி, அரசியல் சாமர்த்தியத்தோடு, யேசபேலை மணந்தான். சபையும் கான்ஸ்டன்டைன் ராஜாவை மணந்து அவனுடைய ஆதிக்கத்தில் வந்தபோது, பலப்பட்டு பாதுகாக்கப்பட்டது. இவ்விருவரும் அரசியல் காரணங் கொண்டு இல்வாறு செய்து, ஆவிக்குரிய வளர்ச்சிக் கென்று இவ்வாறு செய்ததாக புறம்பே காண்பித்தனர். கான்ஸ்டன்டைன் உண்மையான கிறிஸ்தவனல்ல. அவன் அஞ்ஞானியாயிருந்து, கிறிஸ்தவர்களுக்குரியதாய் தோன்றும் செய்கைகளில் ஈடுபட்டான். இராணுவ சிப்பாய்களின் கேடகத்தில் இவன் வெள்ளைச் சிலுவையை வர்ணம் பூசினான்; கொலம்பஸ் வீரர்களின் குழுவைத் (KNIGHTS OF COLUMBUS) தொடங்கி வைத்தான். பரி. சோபியாவின் (ST. SOPHIA) ஆலயத்தின் உச்சியில் சிலுவையை நாட்டி அதன் மூலம் ஒரு பாரம்பரிய, வழக்கத்தை உண்டு பண்ணினான். அஞ்ஞானிகளையும், பெயர்க்கிறிஸ்தவர்களையும், உண்மையான கிறிஸ்தவர் களையும் ஒன்றுபடுத்த கான்ஸ்டன்டைன் எண்ணினான். இந்த ஒன்றுபடுத்துதலின் மூலம் வசனத்தை விட்டுப் போனவர்களை மறுபடியும் சத்தியத்திற்குள் கொண்டுவர இது ஒரு தருணம் என்று எண்ணி விசுவாசிகள் இந்த ஐக்கியத்தில் சேர முடிவு கொண்ட போது, கான்ஸ்டன்டைனின் எண்ணம் வெற்றிபெறும் என்று தோன்றியது. விசுவாசிகள் அவர்களுடைய முயற்சிகளில் தோல்வி கண்டதும் இந்த அரசியல் குழுவினின்று பிரியநேர்ந்தது. அவ்வாறு பிரிந்தபோது, அவர்கள் துரோகிகள் என்று கருதப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இக்காலத்தும் இதே சம்பவம் தான் நிகழ்கிறது என்று நாம் கூறமுடியும். எல்லா மக்களும் தற்பொழுது ஒன்று கூடுகின்றனர். யூதருக்கும், கத்தோலிக்கருக்கும், பிராடெஸ்டன்டுகளுக்கும் ஒரு பொதுவான வேதப்புத்தகம் எழுதப்படுகிறது. இக்கூட்டத்தாருக்கு ஒரு நிசியா மகாநாடு (NICENE COUNCIL) உண்டு. ஆனால் அதை உலக சபைகளின் மகாநாடு (ECUMENICAL COUNCIL) என்று அழைக்கின்றனர். அந்தக் கூட்டுறவு உண்மையான பெந்தேகோஸ்தரை எதிர்க்கின்றது. பெந்தேகோஸ்தே என்று கூறும்போது, அப்பெயர் பெற்ற ஸ்தாபனத்தை நான் குறிப்பிடாமல் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு சத்தியத்திலே நடப்பதனால் அடையாளங்களையும் அற்புதங்களையும் கொண்டவர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். அரசியல் காரணங்களினால் ஆகாப் யேசபேலை மணந்தபோது அவன் தன் புத்திர பாகத்தை விற்றுப் போட்டான். அதேபோல் நீங்களும் ஒரு ஸ்தாபனத்தைச் சேரும்போது, நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உங்கள் புத்திர பாகத்தை விற்றுப் போடுகிறீர்கள் சபையை விட்டுப் பிரிந்து வந்து மறுபடியும் அந்தச் சபைக்குள்ளேயே சென்ற ஒவ்வொரு பிராடெஸ்டன்ட் குழுவும் தன்னுடைய புத்திரபாகத்தை விற்று போட்டது. நீங்களும் ஏசாவைப் போன்று புத்திரபாகத்தை விற்றுப் போட்டு, பின்பு அழுது மனந்திரும்பலாம். ஆனால் இவையெல்லாம் உங்களுக்கு ஒரு நன்மையும் செய்யாது. நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஒன்றேயுண்டு. அது `அவளுடைய பாவத்திற்கு உட்படாமல் அவளை விட்டு வெளியே வாருங்கள்’ என்பதே. நான் தவறு என்று நீங்கள் நினைத்தால் பின்வரும் இக்கேள்விக்கு மாத்திரம் விடை கூறுங்கள். எந்தச் சபையாவது ஸ்தாபனங்களுக்குள் புகுந்து, எழுப்புதலையுண்டாக்கியிருக்கிறது என்று உங்களால் கூறமுடியுமா? சரித்திரங்களைப் படித்தால் ஒரு சபையும் அவ்வாறு செய்ததில்லை என்பதை அறிவீர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் ஆவிக்குரிய காரியங்களைக் கைவிட்டு உலகத்தோடு சம்பந்தப்பட்டு அரசியலில் பங்கு கொண்டபோது, அவர்களுடைய ஜீவியத்தில் அது (அழிவைக் குறிக்கும்) நடுநிசியாக இருந்தது. சபையும் அவ்வாறு நிசியாவில் (NICEA) செய்தபோது, அதற்கு அது நடுநிசி வேளையாக இருந்தது. இக்காலத்தும் சபைகள் ஒன்று கூடும்போது, இது அவைகளுக்கு நடுநிசி வேளையாக இருக்கிறது. ஆகாப் யேசபேலை மணந்த பிறகு, அஸ்தரோத்துக்கும் பாகாலுக்கும் இரண்டு பெரிய ஆலயங்களைக் கட்டுவதற்கென, அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து பணத்தை எடுக்க, ஆகாப் யேசபேலுக்குச் சம்மதம் கொடுத்தான். பாகாலுக்கென்று கட்டப்பட்ட ஆலயம், இஸ்ரவேல் ஜனங்களெல்லாரும் ஒன்று கூடி வழிபடத்தக்க அவ்வளவு விஸ்தீரணமுள்ளதாய் இருந்தது, அதைப் போன்று கான்ஸ்டன்டைனும் சபையை மணந்து கொண்ட பிறகு, பெரிய ஆலயங்களைக் கட்டி பீடங்களையும் சுரூபங்களையும் உண்டாக்கி, பரம்பரை ஆசாரியர்களை (HEIRARCHY) ஏற்படுத்தினான். அரசாங்க அதிகாரத்தைப் பெற்றபோது, யேசபேல் தன்னுடைய மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்று எல்லோரையும் வற்புறுத்தி, தேவனுடைய தீர்க்கதரிசிகளையும் ஆசாரியர்களையும் கொலை செய்தாள். இவளுடைய பயங்கரமான செய்கைகளைக் கண்டு, அந்தக் காலத்துத் தூதனான எலியா தீர்க்கதரிசி, தான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருப்பதாக எண்ணினான். ஆனால் கர்த்தரோ பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத 7000 பேரை மீதியாக வைத்திருந்தார். இப்பொழுதும், பாப்டிஸ்ட், மெதோடிஸ்ட், பிரஸ்பிடேரியன் போன்ற அநேக ஸ்தாபனங்களிலுள்ள சிலர் அவைகளை விட்டு வெளியே வந்து தேவனிடத்தில் சேருவார்கள். நான் இப்பொழுதும், எப்பொழுதும் மக்களை விரோதித்ததில்லை. ஆனால் ஸ்தாபனங்களுக்கும் அவைகளை நடத்தும் முறைக்கும் விரோதமாய் நான் இருக்கிறேன். தேவன் அவைகளை வெறுப்பதால் நானும் அவைகளுக்கு விரோதமாக இருக்க வேண்டும். தியத்திராவின் மக்கள் அப்போல்லோவையும் சக்கரவர்த்தியையும் வணங்கி வந்தனர் என்று நான் முன்னமே கூறினேன். அப்போல்லோ `பொல்லாங்கைத் தடுப்பவன்’ என்று அழைக்கப்பட்டான். பொல்லாங்கை மக்களிடமிருந்து நீக்கி, அவர்களை ஆசீர்வதித்து அவர்களின் தேவனாக அவன் இருந்தான். முக்காலியில் மெய்மறந்து உட்கார்ந்திருக்க யேசபேல் தீர்க்கதரிசினியின் மூலமாய் மக்களுக்கு வழிபாடு, ஆலயச் சடங்குகள் தேவர்களைச் சேவிக்கும் விதம், பலி செலுத்துதல், மரணம், மரணத்திற்கப்பாலுள்ள வாழ்க்கை இவைகளைக் குறித்துப் போதித்தான். அவளுடைய போதனையினிமித்தம் தேவனுடைய ஊழியக்காரர் வழிதப்பி, ஆவிக்குரிய விபச்சாரம் செய்ய நேர்ந்தது. விக்கிரகாராதனை செய்தல் ஆவிக்குரிய விபசாரமே. அது பிரமாணத்திற்கு விரோதமான ஐக்கியமாகும் (ILLEGAL UNION). ஆகாபும் கான்ஸ்டன்டைனும் தங்களுடைய ஐக்கியத்தின் மூலமாக ஆவிக்குரிய விபசாரம் செய்தனர். ஒவ்வொரு விபசாரக்காரனும் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான் என்று கர்த்தர் உரைத்தார். கத்தோலிக்க சபையின் போதனையும் தேவனுடைய வார்த்தையைப் புறக்கணிக்கிறது. (சபை ஸ்திரீயாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது). நவீன அப்போல்லோவாகிய போப்பும் தம்முடைய போதனையினால், மக்களை விக்கிரகாராதனைக் குட்படுத்தியிருக்கிறார். மக்களுக்குத் தேவனுடைய வசனத்தைப் போதிப்பதற்குப் பதிலாக ரோமன் சபை பாவ மன்னிப்பைப் பெறுவதற்கும், தேவனுடைய ஆசீர்வாதங்களை அடைவதற்கென்றும் தன்னுடைய சொந்த எண்ணங்களைக் கற்றுக் கொடுத்திருப்பதால், அவள் கள்ளத் தீர்க்கதரிசினியாக விளங்குகிறாள். அவளின் குருமார்கள் இம்மையின் மேலும் மறுமையின் மேலும் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். தேவனுடைய வசனம் போதிக்காத பாவ விமோசன ஸ்தானத்தைக் குறித்து (PURGATORY) இவர்கள் போதிக்கின்றனர். அது மட்டுமின்றி ஜெபங்களும், ஆராதனைகளும், பணமும் ஒரு மனிதனை மேற்கூறிய ஸ்தலத்திலிருந்து விடுதலையாக்கிப் பரலோகத்திற்குக் கொண்டு செல்லும் என்று கற்பிக்கின்றனர். இந்தப் போதனைகளை ஆதாரமாகக் கொண்ட இது முழுவதும் தவறான மார்க்கமாகும். கர்த்தர் தமது வசனத்தை வெளிப்படுத்திக் கொடுத்தலின் அஸ்திபாரத்தின் மேல் இது அமையாமல், ஸ்திரமில்லாததும் அமிழ்ந்து போகக் கூடியதுமான தங்களுடைய பொய்யான போதகங்களாகிய மணலின் மேல் இது கட்டப்பட்டதாயிருக்கிறது. தேவன் தம்முடைய வார்த்தையின் மூலமாய் தம்மை வெளிப்படுத்துகிறார் என்னும் சத்தியத்தை ரோமன் கத்தோலிக்க சபை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களோ தேவன் சபையின் மூலமாய் தம்மை வெளிப்படுத்துகிறார் என்று கூறுகின்றனர். அப்படியெனில் வேதம் முழுவதும் ரோமன் கத்தோலிக்க சபையின் சரித்திரமாக இருக்க வேண்டும். ஆனால் அது அவ்வாறில்லை. தண்ணீர் ஞானஸ்நானத்தை அவர்கள் எவ்விதம் மாற்றிப் போட்டார்கள் என்று பாருங்கள். அது கிறிஸ்துவ ஞானஸ்நானமாயிருப்பதை நிராகரித்து, பட்டங்களைக் கொண்ட அஞ்ஞான ஞானஸ்நானமாக மாற்றினர். ஒரு கத்தோலிக்கப் போதகனோடு எனக்குண்டாயிருந்த அனுபவத்தை இங்கு கூற விரும்புகிறேன். நான் ஞானஸ்நானம் கொடுத்த ஒரு பெண் கத்தோலிக்க மார்க்கத்தைத் தழுவினாள். அவளைப்பற்றி அதிகம் அறிய வேண்டுமென்று இந்தப் போதகர் என்னைச் சந்தித்தார். அவள் எந்த ஞானஸ்நானம் எடுத்தாள் என்று அவர் என்னைக் கேட்டபோது வேதத்தில் சொல்லப்பட்ட ஒரே ஞானஸ்நானமான கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைக் கொடுத்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் அவளைத் தண்ணீரில் அடக்கம் செய்தேன் என்று நான் கூறினேன். கத்தோலிக்கசபையும் இவ்வித ஞானஸ்நானத்தை ஒருக்காலத்தில் கொடுத்து வந்தது என்று அந்தப் போதகர் என்னிடம் கூற, நான் வியப்புற்று, கத்தோலிக்க சபையின் சரித்திரங்களில் இதைக் குறித்து எங்கும் சொல்லப்படவில்லை யென்றும் எப்போது அந்தவிதமான ஞானஸ்நானத்தை இந்தச் சபை கொடுத்தது என்றும் வினவினேன். அதற்கு அவர் அதைக் குறித்து வேதப்புத்தகத்தில் எழுதியிருக்கிறதென்றும், இயேசு கத்தோலிக்க சபையைத்தான் ஸ்தாபித்தார் என்றும், பேதுரு கத்தோலிக்க சபையின் முதல் போப்பாக பணியாற்றினார் என்று அவர் நினைப்பதாகவும் கூறினார். நான் பின்னும் அவரை நோக்கி, ஆராதனை (MASS) களின் ஒழுங்குகள் மாறக்கூடாது என்ற காரணத்தினால் தான் அவைகள் லத்தீன் (LATIN) மொழியில் சொல்லப்படுகின்றனவா என்று கேட்டதற்கு அவர் `ஆம்’ என்று பதிலுரைத்தார். ரோமன் சபையானது ஆதிக்கால சபையைவிட எவ்வளவோ மாறுபட்டது என்று நான் கூறினேன். கத்தோலிக்க சபை உண்மையாகவே அப்போஸ்தலருடைய நடபடிகளில் விசுவாசம் வைத்து அதன்படி நடந்தால், நானும் பழைய கத்தோலிக்கன்தான் என்று கூறினேன். வேதம் கத்தோலிக்க சபையின் ஆகமங்களைக் (RECORD) கொண்டது என்றும் தேவன் சபையிலிருக்கிறார் என்றும் அவர் சொன்னபோது, அதற்கு இணங்காமல் தேவன் தம்முடைய வார்த்தையிலிருக்கிறார் என்று நான் கூறினேன். `தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக’ இந்தப் புஸ்தகத்தில் உள்ளவைகளில் ஒருவன் எதையாகிலும் கூட்டினால் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன் மேல் கூட்டுவார். இந்தப் புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாயிலும் எடுத்துப்போட்டால் ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப் போடுவார் 9வெளி (22. 18 - 19). 23ம் போப் ஜான் எழுதிய குறிப்புப் புத்தகத்திலிருந்து (DIARY),. தேவன் தம்முடைய சபையிலிருக்கிறார் என்று ரோமன் கத்தோலிக்க சபை விசுவாசிக்கிறதென்பதையறியலாம். அவர் போப்பாக வேண்டும் என்ற தேவனுடைய சித்தம் உக்கிராணக்காரர் கொண்ட சபையின் மூலமாய் (SACRED COLLEGE OF CARDINALS) அவருக்கு அறிவிக்கப்பட்டதென்றும், அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இக்காலத்தையும், எதிர்காலத் தையும் குறித்து யாதொரு கவலையுமின்றி, அமைதியோடு அவர் மேல் விசவாசம் வைத்து இந்த ஊழியத்தைப் பயத்தோடும் நடுக்கத்தோடும் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தேவன் தம்முடைய சித்தத்தைச் சபையின் மூலம் வெளிப்படுத்தினார் என்று போப்பு கூறியிருப்பது மிகவும் தவறாகும். தேவன் தம்முடைய வார்த்தையில் இருந்து, தம்முடைய வார்த்தையின் மூலம் அவருடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறார். மனிதருடைய வார்த்தைகளின் மேல் விசுவாசம் வைத்து அமைதியோடு இதற்குக் கீழ்ப்படிந்ததாகப் போப் கூறியிருக்கிறார். இது கேட்பதற்கு மிகவும் நன்றாக இருந்தாலும், அது முற்றிலும் பொய்யாகும். ஏதேன் தோட்டத்தில் தேவனுடைய வார்த்தை மாற்றப்பட்டது போல் இங்கேயும் மாற்றப்பட்டது. வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில், தேவனுடைய வசனத்தின்படியல்லாமல் கள்ளத் தீர்க்கதரிசனங்களினால் ஜீவிக்கும் சபையாகிய ஸ்திரீயைக் காண்கிறோம், அவள் விக்கிரகாராதனை செய்து, தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் அதை விட்டுவிட்டபடியால், அவள் அவ்வதிகாரத்தின் முதலாம் வசனத்தில் மகா வேசியென்று அழைக்கப் படுகிறாள். இவள் திரளான தண்ணீர்களின் மேல் உட்கார்ந்து கொண்டிருக் கிறாள். இத்தண்ணீர்கள், ஜனங்களையும், கூட்டங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும் குறிக்கும், தேவனுடைய சபை குறைந்த அங்கத்தினர்களைக் கொண்டதாய் இருக்கும். அதை ஒரு சிலரே கண்டுபிடிப்பார்கள். ஆகையால் அநேக ஜனங்களைக் கொண்ட இந்தச் சபை கள்ளச் சபையாக இருக்க வேண்டும். இந்த மகா வேசி பார்வைக்கு அழகாகவும், அவளுடைய தத்துவம் கேட்பதற்கு நன்றாகவும் இருப்பினும், தேவனுடைய பார்வையில் வேசித்தனமான மதுவைக் குடித்து அழுக்குள்ளவளாக அவள் காணப்படுகிறாள். இவள் அநேக பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறி கொண்டிருந்தாள். பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத தேவனுடைய பிள்ளைகளை அழித்து, தீர்க்கதரிசிகளையும் ஆசாரியர்களையும் கொன்று போட்ட யேசபேலைப் போன்றவள் இவள், கத்தோலிக்க சபை (மகா வேசி) போப்பின் அதிகாரத்திற்கு அடங்காத மக்களையும் தேவனுடைய வசனத்தை வாஞ்சித்த மக்களையும் கொடூரமான முறைகளில் கொன்று போட்டது. இது ஆவிக்குரிய பிரகாரம் மரணமடைந்து அதை அறியாதிருந்தது. அதற்குள் ஜீவன் இல்லாமையால், அற்புத அடையாளங்களொன்றும் அதனிடம் காணப்படவில்லை. மனந்திரும்பத் தவணை வெளி 2.21. `அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத்தேன்; தன் வேசி மார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. தியத்தீரா சபை ஆகாபைக் காட்டிலும் பொல்லாங்கானதாக இருந்தது. ஏனெனில் ஆகாபும் கொஞ்சக்காலம் தன்னுடைய பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடந்து கொண்டான். ரோமன் கத்தோலிக்க சபையோ ஒருபோதும் தன்னுடைய பாவங்களுக்காக மனஸ்தாபப் படாமல், அவள் மனந்திரும்ப வேண்டுமென்றெண்ணி அதற்கென்று பிரயாசப்பட்ட எல்லாரையும் கொன்று போட்டது என்று சரித்திரம் கூறுகிறது. தேவன் ஒவ்வொரு காலத்துக்குரிய தூதர்களை எழுப்பி அவர்களுடைய ஊழியத்தில் உதவிசெய்வதற்கென சில அருமையான ஊழியக்காரரையும் எழுப்பினார். இவர்களெல்லாம் தங்களால் இயன்றவரை, சபையைத் தேவனிடம் சேர்க்க முயற்சித்தனர். எத்தனையோ முறை தேவனும் சபை மனந்திரும்பு வதற்கென்று அதற்குத் தருணமளித்தார். எனினும் அவள் மனந்திரும்பவில்லை. அவள் ஒருபோதும் மனந்திரும்பப் போவதுமில்லை. ஏனெனில் அவள் வெறிகொண்டவளாய் ஆவிக்குரிய காரியங்களில் தன்னுடைய புத்தியை இழந்தாள். ரோமன் கத்தோலிக்க சபையானது இப்பொழுது பிராடெஸ்டண்ட் மார்க்கங்களோடு இணைய முயற்சித்து பிராடெஸ்டண்ட் பிரமாணங்களோடு அதனுடைய பிரமாணம் ஒன்றாக இருக்க வேண்டுமென்று தன் பிரமாணங்களை மாற்றிக்கொள்வதனால், பரிசுத் தவான்களைக் கொன்ற செய்கைகளுக்காக அது மனஸ்தாபப்பட்டது என்று நீங்கள் எண்ணவேண்டாம். ஒரு முறையாவது தன்னுடைய மனஸ்தாபத்தைக் குறித்து அந்தச் சபை பகிரங்கமாக அறிக்கை செய்யவில்லை; அவ்வாறு அறிக்கை செய்யப்போவதுமில்லை. இந்தக் காலத்தில் எவ்வளவு அன்பாகவும் அருமையாகவும் அவள் காணப்பட்டபோதிலும், மனந்திரும்பாத அவளுடைய இருதயத்தில் கொலைக்குரிய பொல்லாங்கு மறைந்து கிடப்பதனால், ஒரு நாள் அவள் மறுபடியும் எழும்பி மக்களைக் கொலைசெய்வாள். வேசிக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டது வெளி 2.22-23. `இதோ, நான் அவளைக் கட்டில் கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளை விட்டுமனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்து கொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படி பலனளிப்பேன்’. இவள் தன்னுடைய வேசித்தனத்தின் மூலமாய் பிள்ளைகளைப் பெற்றதனால் தேவனுடைய வார்த்தையின்படி அக்கினியினால் சுட்டெரிக்கப்பட வேண்டும். ஆம், உண்மையாகவே அவள் முடிவில் அக்கினிக் கடலில் வெந்துபோவாள். அவளுடைய பிள்ளைகளைக் குறித்துச் சற்று சிந்திப்போம். அவளில் தோன்றி வெளிப்பட்ட பிள்ளைகளும் அவள் செய்த கிரியைகளையே செய்தனர். ஸ்தாபனத்திலிருந்து வெளிவந்து மறுபடியும் அதற்கே திரும்பிச் செல்லாத ஒரு சபையை எனக்குக் காண்பியுங்கள். லூதரன்கள் (LUTHERANS) ஸ்தாபனத்தை விட்டு வெளியில் வந்து தங்களுக்கென்று ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டனர். இன்றைக்கோ, கத்தோலிக்க பிராடெஸ்டன்டாரின் ஐக்கியத்தை (ECUMENICAL MOVE) இவர்கள் முழு இருதயத்தோடும் ஆதரிக்கின்றனர். அதேபேன்று மெதோடிஸ்டுகளும் (METHODISTS). பெந்தகோஸ்தரும் (PENTECHOSTALS) ஸ்தாபனங்களை விட்டு வெளியில் வந்தாலும், தங்களுக்கென்று ஸ்தானபங்களை உண்டாக்கிக் கொண்டு, தாங்கள் பிரிந்து வந்த சபையின் கொள்கைகளைப் பின்பற்றினர். சபையைவிட்டு மக்கள் வெளிவரும் காலம் இப்பொழுது ஒன்றுண்டு. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர்கள் சத்தியத்தை அறிவதனால், அவர்கள் ஸ்தாபனங்களின் கொள்கைகளைப் பின்பற்றுவதில்லை. இவர்கள் தான் கடைசி நாட்களின் மணவாட்டி சபையாவார். வேசியின் பிள்ளைகளென்று வேதத்தில் கூறப்படுவது, ரோமன் கத்தோலிக்க சபையைப் போன்ற கொள்கைகளையுடைய மற்றைய சபைகளைக் குறிக்கும். யேசபேலுக்கும் ஆகாபுக்கும் ஒரு குமாரத்தி பிறந்தாள். அவள் யூதாவின் ராஜவாகிய யோசபாத்தின் மகனான யோராமை மணந்தாள். `அவன் (யோராம்) இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்து, ஆகாபின் வீட்டார் செய்தது போலச் செய்தான்’ (2 ராஜா 8.18), இந்தக் கலியாணத்தின் மூலம் யோராம் விக்கிரகாராதனையைப் பின்பற்றியதுமல்லாமல், தேவனுக்குப் பயந்து அவரை வழிபட்டு வந்து யூதாவையும் விக்கிரகாராதனையில் கொண்டு சென்றான். நான் முன் கூறியவண்ணம், இதைத் தான் வேசியின் பிள்ளைகளாகிய சபைகளெல்லாம் செய்தன. வெளியில் வந்தவுடனே அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றத் தொடங்கி பின்னர் கட்டுப்பட்ட ஸ்தாபனங்களுக்குள் மணந்து கொண்டு, மக்களின் பிரமாணங்களையும், கொள்கைகளையும் ஆசாரங்களையும் கைக்கொண்டு தேவனுடைய வசனத்தைப் புறக்கணித்தனர். `தேவ வசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்’ (எபி 13.7). தேவனுடைய வசனம் நம்மை ஆளுகிறதேயன்றி, மக்கள் நம்மை ஆள்வதில்லை. ஒரு மனிதன், கணவனானபின், ஸ்திரீக்குத் தலைவனாக இருந்து, அவளை ஆளுகிறான். சபையும் ஒரு ஸ்திரீயாக கருதப்படுகிறது. அவள் வார்த்தையினால் ஆளப்பட வேண்டும். இயேசுவே அந்த வார்த்தையாம் சபை வார்த்தையைப் புறக்கணித்து மனிதனைத் தலைவனாகக் கொண்டால், அவள் வேசியாகிறாள். எல்லாச் சபைகளும் ஆசாரங்களையும், கொள்கைகளையும் கடைப்பிடித்து, வசனத்தைப் புறக்கணிக்கின்றன. அவ்வாறு செய்யாத ஒரு சபையின் பெயரைக் கூறுங்கள். ஆகவே தான், தாயைப் போலவே பிள்ளைகளும் வேசிகளாகக் கருதப்படுகின்றனர். வேசிக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் இரண்டு விதமான தண்டனை நியமிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது `அவளைக் கட்டில் கிடையாக்குவேன்’ என்று இயேசு கூறுகிறார். அந்த வசனத்தின் கடைசி பாகத்தைப் படித்தால், அது `உபத்திரவத்தின் கட்டில்’ என்பது விளங்கும். ஆம், வரப்போகும் உபத்திரவங்களின் காலங்களில் அவள் பங்கு கொள்ளவேண்டும். இயேசுவும் மத் 25.1-13-ல் இதைக் குறித்துச் சொல்லுகிறார். பத்துக் கன்னிகைகள் இருந்தனர். அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்; ஐந்து பேர் புத்தியில்லாதவர். புத்தியுள்ள கன்னிகைகளிடத்தில் எண்ணெய் (பரிசுத்த ஆவி) இருந்தது. புத்தியில்லாத கன்னிகைகளிடத்தில் எண்ணெய் இல்லை. `இதோ மணவாளன் வருகிறார்’ என்ற சத்தம் உண்டானபோது, புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள் எண்ணெய்க்காகத் தேடி ஓடினர். ஆனால் புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளோ கலியாண வீட்டில் பிரவேசித்தனர். புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் உபத்திரவத்தில் பங்கு கொள்வதற்கென விடப்பட்டனர். இரகசிய வருகையில் (RAPTURE) எடுத்துக் கொள்ளப்படாத யாவருக்கும் இதுதான் சம்பவிக்கும். வேசியும் அவளுடைய பிள்ளைகளும் உபத்திரவத்தில் பங்கு கொள்ளவேண்டும். இரண்டாவதாக `அவர்களைக் கொல்லவே கொல்வேன்’ என்று இயேசு கூறுகிறார். (ஆங்கிலத்தில் ‘I WILL KILL THEM WITH DEATH’ என்று எழுதப்பட்டிருக்கிறது). மக்கள் தூக்கிலிடப்படுவதன் மூலமோ அல்லது வேறு விதமாகவோ கொல்லப்படலாம். ஆனால் மரணமே இவர்கள் மரணத்திற்குக் காரணமாயிருக்கிறது. யேசபேலின் மகள் யோராமை மணந்து, யூதாவின் வீட்டில் புகுந்து யூதாவை விக்கிரகாராதனைக்கு வழிநடத்தியதின்காரணமாகக் கர்த்தர் யூதாவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அவள் அவனைக் கலியாணம் செய்த அந்த க்ஷணமே, யூதா ஆவிக்குரிய மரணமடைந்தது. அதுபோன்று, ரோமாபுரியின் ஆதிச்சபை தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்ட (ORGANISED) அதே நேரத்தில் ஆவிக்குரிய மரணமடைந்தது. லூதரன்களும் அவ்வாறு செய்தபோது, ஆவிக்குரிய மரணம் எய்தினர். கடைசியில் பெந்தேகோஸ்தே சபையும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டபோது, பரிசுத்த ஆவி அவர்களை விட்டுப் போனதை அவர்கள் நம்புவதில்லை. இதன் பிறகு தேவத்துவத்தின் ஒருமையைக் குறித்த உண்மை (ONENESS OF THE GODHEAD) வெளிப்பட்டது. அவர்களும் தங்களை ஸ்தாபித்துக் கொண்டதால் மரணமடைந்தனர். கடைசியில் 1933ம் வருஷத்தில் ஒஹையோ நதியில் (OHIA RIVER) தேவனுடைய அக்கினி விழுந்த பிறகு மக்களைச் சுகமாக்கும் எழுப்புதுல் (HEALING REVIVAL) உலகத்தையே அசைத்தது. இந்த எழுப்புதல் எந்த ஸ்தாபனங்களின் மூலமாகவும் உண்டாகவிலை. கர்த்தர் இனிச் செய்யப்போகும் எல்லாக் கிரியைகளையும் ஸ்தாபனங்களின் வெளியில்தான் செய்வார். மரித்தோர்களைக் கொண்டு அவர் கிரியை செய்யவே முடியாது. பாபிலோனுக்குப் புறம்பேயுள்ள ஜீவிக்கிற அங்கத்தினர்களின் மூலமாய்த்தான் அவர் கிரியை நடப்பிக்க முடியும். இதுவரை ஜீவனால் ஆட்கொள்ளப்படட சபைகள், தங்களை ஸ்தாபித்துக்கொண்டதால், ஜீவனையிழந்து மரணமடைந்தன. நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கை, பிலேயாமின் கொள்கை இவைகளின் விளைவால் உண்டான ஸ்தாபனங்கள் தங்களுடைய கொள்கையை யேசபேல் தீர்க்க தரிசினியின் மூலமாய்ப் போதித்து, ஏவாள் மானிடவர்க் கத்துக்கு மரணத்தைச் சம்பாதித்துக் கொடுத் ததுபோல, இவைகளும் மரணத்தையளித்தன. ஏவாளும் சர்ப்பமும் தங்களுடைய பொல்லாத செய்கைகளுக்காக அக்கினியில் சுட்டெரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆதாமோ இவ்வாறு செய்யாமல், ஏவாளைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டதால் அவள் இரட்சிக்கப்பட்டாள். ஆனால் சாத்தானின் மார்க்கமோ எல்லாக் காலங்களையும் கடந்த பிறகு அதை அழிவினின்று இரட்சிக்க யாரும் குறுக்கிடப்போவதில்லை. வேசியும் அவளுடைய பிள்ளைகளும், அந்திக்கிறிஸ்துவும், இவர்களை வஞ்சித்த சாத்தானும் அக்கினிக் கடலில் பங்கடைவார்கள். இப்பொழுது நான் கூறப்போகும் செய்தியைக் கடைசிக் காலத்திற்குரிய செய்தியோடு சேர்த்து அளித்திருக்க வேண்டும். ஆனால் இது ஸ்தாபனங்களைக் குறித்தும் அவைகளுக்கு நேரிடப் போவதையும் குறித்துத் திட்டவட்டமாக அறிவிப்பதால், அதை இங்கேயே கூறி உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். `பின்பு நான் கடற்கரை மணலின் மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின் மேல் தூஷணமான நாமமும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது; அதன் கால்கள் கரடியின் கால்களைப் போலவும், அதின் வாய்சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன்பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன். ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும் மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம் பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத் தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம் பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும், பாஷைக்காரர் மேலும் ஜாதிகள் மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. உலகத் தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். காதுள்ளவனெவனோ அவன் கேட்கக் கடவன். சிறைப்படுத்திக் கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப் போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும். பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுச்சர்ப்பத்தைப் போலப்பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின்முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது. அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின் மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம் போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ண வேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும் மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங் கொடுக்கப் பட்டது. அது சிறியோர் பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் வலது கைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும் அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும். அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமா யிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு’ (வெளி 13. 1 - 18). ரோமன் கத்தோலிக்க சபையின் வல்லமையையும், அது ஸ்தாபனங்களின் மூலம் என்ன செய்யும் என்பதையும் மேற்கூறிய அதிகாரம் எடுத்துக் காண்பிக்கிறது. தேவனுடைய நாமத்தை எவ்வளவாக இது உச்சரித்தாலும், அது மாய்மாலமான ஒரு கள்ளச் சபையேயாகும். சாத்தானைத் தலைமையாகக் கொண்டு இந்த சபை நடத்தப்படுகிறது. சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஏறியிருக்கும் வேசியானவள், ரோமன் கத்தோலிக்க சபையின் ஆதிக்கம் இப்பிரபஞ்சத்தின் சக்தியாகிய சாத்தானால் உண்டாயிற்றென்றும், நம்முடைய தேவனாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவால் உண்டாகவில்லை என்பதையும் நமக்கு வெளிப்படுத்துகிறாள். 17ம் வசனத்தின் மூலமாக, இந்த வேசி பூலோகத்திலுள்ள வாணிபத்தின்மேல் அதிகாரம் செலுத்தி, அவளுடைய சம்பந்தம் இல்லாமல் யாரும் கொள்ளவும் விற்கவும் கூடாது என்று நாம் அறிகிறோம். வெளி 18. 9 - 17ன் மூலம் இவள் ராஜாக்கள், ராஜகுமாரர், வர்த்தகர் இவர்களோடு சம்பந்தங் கலப்பாள் என்று தெளிவாகிறது. அதாவது ஒரு காலத்தில் ரோமாபுரி சபை வாணிபத் துறையில் சம்பந்தப்படும் என்று தெளிவாகிறது. வெளி 13.14ன் பிரகாரம் மிருகம் தனக்கென்று உண்டாக்கப்பட்ட சொரூபத்தின் மூலம் தன்னுடைய செல்வாக்கைப் பரப்பும், உலகத்திலுள்ள எல்லா ஸ்தாபிக்கப்பட்ட சபைகளும் கத்தோலிக்கரும் ஒன்றுபட்டதன் விளைவால் உண்டாகும். உலக சபை (ECUMENICAL COUNCIL) ஐக்கியத்தையே இந்த சொரூபம் குறிக்கிறது. கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கென்று இந்த ஐக்கியம் உண்டாக்கப்பட்டிருக்க வழியுண்டு. ஆனால் கம்யூனிஸமோ, நேபுகாத் நேச்சார் ஒரு நோக்கத்திற்கென்று எழுப்பப்பட்டது போல, வேசியின் மார்க்கத்தைச் சுட்டெரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தேவனுடைய சித்தத்தினால் எழுப்பப்பட்டதால், ஒரு நாள் அந்த நோக்கம் நிறைவேறி, ரோமாபுரியானது கம்யூனிஸ்டுகளால் அழிக்கப்படும். எவ்விடங்களில் ரோமசபை ஸ்தாபிக்கப்பட்டதோ, அவ்விடங்களிலெல்லாம் கம்யூனிஸமும் பரவிற்று என்பதை நாம் அறியவேண்டும். இவ்வாறு நேரவேண்டும் என்று தேவனுடைய திட்டமாயிருக்கிறது. கம்யூனிஸம் மாத்திரம் உங்களுடைய விரோதியென்று நீங்கள் எண்ணவேண்டாம். அதைக் காட்டிலும் பரம விரோதி கத்தோலிக்க சபை என்று நான் உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். வெளி 13:1 - 4 படித்து அந்த வசனங்களை வெளி 12 : 15 வசனங்களோடு ஒப்பிடுவோம். வெளி 13:1 - 4. `பின்பு நான் கடற்கரை மணலின் மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வரக் கண்டேன். அதற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின் மேல் தூஷணமான நாமமும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது. அதின் கால்கள் கரடியின் கால்களைப் போலவும் அதின் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன. வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும் மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி மிருகத்தையும் வணங்கினார்கள். வெளி 12. 1 -5. `அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள். அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவ வேதயைடைந்து, பிள்ளை பெறும்படி வருத்தப்பட்டு, அலறினாள். அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்தில் காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்து கொம்புகளையும், தன் தலைகளின் மேல் ஏழு முடிகளையுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது. அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை இழுத்து அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவ வேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப் போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது. சகல ஜாதிகளையும் இருப்புக் கோலால் ஆளுகை செய்யும் ஆண் பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. சர்வாதிகாரம் பொருந்திய அஞ்ஞான ரோம சாம்ராஜ்யம், முரடர்களால் (BARBARIANS) முறியடிக்கப்பட்டு உலக ஆதிக்கத்தை இழந்தது. ஆனால் இந்த ஆதிக்கத்தைப் போப்பால் ஆளப்பட்ட ரோம ராஜ்யத்தின் மூலம் இது திரும்பவும் பெற்றது. வெளி 13. 3ல் சொல்லப்பட்ட மிருகம் சாவுக்கேதுவான காயமடைந்தும் சொஸ்தமாக்கப்பட்டது. ஆம், எல்லாவற்றையும் நசுக்கி உலகத்திலேயே மிகவும் வல்லமையான சாம்ராஜ்யமாக விளங்கிய ரோம சாம்ராஜ்யம் கடைசியில் சாவுக்கேதுவாகக் காயப்பட்டது. அவள் வல்லமை இழந்தவளாய் சைனியங்களால் ஆளப்பட்டாள். ஆனால் கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தில் அவள் புத்துயிர் பெற்றாள். அதன் மூலம் போப்பின் ரோம சாம்ராஜ்யம் இன்று உலக முழுவதும் பரவி சர்வாதிகாரம் பெற்று விளங்குகிறது. ராஜாக்கள் வர்த்தகர்கள் உதவியை இவள் பெற்று, மதபலமும் செல்வபலமும் கொண்டவளாய் இந்தக் காலத்தின் தேவதையாக அவள் அரசாண்டு வருகிறாள். பிள்ளையைப் பட்சித்துப் போடக்காத்துக் கொண்டிருக்கும் வலுசர்ப்பமாக இவளே காட்சியளிக்கிறாள். ஏரோது இயேசு கிறிஸ்துவைக் கொல்ல வகைதேடி, அவனுடைய முயற்சியில் தோல்வியடைந்தான். ஆனால் பின்பு, இயேசு ரோமப் போர்ச் சேவகர்களால் சிலுவையில் அறையப்பட்டு, இப்பொழுதோ சிங்காசன மிடத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வராயிருக்கிறார். மேற்கூறியவைகளோடு, தானியேல் கண்ட தரிசனத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும், தானியேல் கண்ட சொரூபத்தின் கடைசி பாகம், அதாவது கடைசி உலக ஆதிக்கம், இரும்பும் களிமண்ணும் கலந்து உண்டாக்கப்பட்ட பாதங்களில் உள்ளது. இரும்பு ரோம சாம்ராஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் இப்பொழுதோ அது பலமுள்ள இரும்பாயிராமல் களிமண் கலந்ததாயிருக்கிறது. இருப்பினும் அது நீடித்து ஜனநாயக நாடுகளிலும் கொடூர ஆட்சி செலுத்தப்படும் நாடுகளிலும் தன்னுடைய விவகாரத்தை நடத்திக் கொண்டு வருகிறது. ஐக்கிய நாடுகளின் சபையில் க்ருக்ஷேவும் (KHRUSCHEV) ஐசன் ஹோவரும் (EISENHOWER) சந்தித்தார்கள். இச்சபையின் ஐந்து கிழக்கத்திய நாடுகளும் ஐந்து மேற்கத்திய நாடுகளும் அங்கத்தினராயிருந்தன. க்ருஷேவ் கிழக்கத்திய நாடுகளின் சார்பிலும், ஐசன்ஹோவர் மேற்கத்திய நாடுகளின் சார்பிலும் பேசினர். `குருஷ்சேவ்’ என்ற பதம் ருஷிய மொழியில் களிமண் என்று பொருள்படும். `ஐசன்ஹோவர்’ என்ற வாக்கிற்கு, இரும்பு என்று அர்த்தம். உலகத்தின் இரண்டு முக்கியமான தலைவர்கள், அதாவது இரும்பினாலும் களிமண்ணினாலும் செய்யப்பட்ட பாதங்களின் இரு பெருவிரல்கள், ஒருவருக்கொருவர் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதற்கு இது ஓர் அறிகுறி. 4ம் வசனத்தில் `மிருகத்தோடு யுத்தம் பண்ணத்தக்கவன் யார்? என்ற கேள்வி கேட்கப்படுகிறது. தற்பொழுது அநேக வல்லமையுள்ள நாடுகள் உண்டு. ஆனால் இப்பொழுதோ போப்பின் ரோம ஆதிக்கம் தன்னிஷ்டப்படி அதிகாரம் செலுத்திக்கொண்டு வருகிறது. போகப்போக போப்பின் வல்லமை அதிகரிக்கும். அவரோடு யுத்தம் செய்ய யாருக்கும் முடியாது. 6ம் வசனம் `தேவனைத் தூஷிக்கும்படி அது தன் வாயைத் திறந்தது’ என்று கூறுகிறது. (மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, துரோகிகளாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப் பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக் கிறவர்களாயும் இருப்பார்கள்). அது தேவனுடைய நாமத்தைத் தூஷித்து அவருடைய நாமத்தைப் பட்டங்களாக மாற்றிப்போட்டது. 7ம் வசனம் `மேலும் பரிசுத்தவான்களோடே யுத்தம் பண்ணி அவர்களை ஜெயிக்கும்படி அதிகாரங் கொடுக்கப்பட்டது’. கத்தோலிக்க மார்க்கம் ருஷியாவில் செய்த கிரியைகளினால் தேவனுடைய நாமம் அங்கு தூஷிக்கப் பட்டது போல அவருடைய நாமம் தூஷிக்கப்படுவதற்கென, அவருடைய நாமத்தினாலேயே உண்மையான விசுவாசி கொல்லப்படுவான். 8ம் வசனம் `உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்கு வார்கள்’, ஆடுகள் அதை வணங்காததால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் வஞ்சிக்கப்படுவார்கள். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மேய்ப்பனின் சத்தத்தைக் கேட்டு அவர் பின் செல்வதால் வஞ்சிக்கப்படுவதில்லை. மரணத்தின் வித்து (அதாவது ஸ்தாபனங்களின் வித்து) முதலாம் சபையின் காலத்தில் விதைக்கப்பட்டு, கடைசியில் பெரியமரமாக வளர்ந்து எல்லாப் பொல்லாத பறவைகளும் அந்த மரத்தில் தங்குவதற்கு ஏதுவாயிற்று என்று காண்பிக்க நாங்கள் விழைகிறோம், ஜீவனைக் கொடுப்பதாக இந்தப் பொய் சபை பறைசாற்றினாலும், அது உண்மையில் மரணத்தை அளிக்கிறது. அதன் கனி மரணம். அவனில் பங்கு கொள்பவர்கள், மரணமடைவர். மகத்தான இந்தஉலகச் சபையின் குழு, உலகப் பிரகாரமாகவும் ஆத்துமப் பிரகாரமாகவும் இரட்சிப்பை அளிப்பதாகக் கூறி, உலகத்தை ஏமாற்றி, ஆயிரக்கணக்கான மக்களை மரணத்துக்குட்படுத்துகிறது, மரணமடைந்த இச்சபை, கடைசியில் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டு அழிக்கப்படும். இந்தச் சபையில் தங்கியிருப்பதனால் உண்டாகப்போகும் பயங்கரமான முடிவைக் குறித்து மக்கள் அறிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! `அவளை விட்டு வெளியே வாருங்கள் நீங்கள் ஏன் மரிக்க வேண்டும்?’ கடைசி எச்சரிக்கை வெளி 2. 23. `அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவ ரென்று எல்லாச் சபைகளும் அறிந்து கொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்’. கர்த்தர் இருதயத்தைப் பார்க்கிறார். அது ஒருபொழுதும் மாறினதில்லை, மாறப்போவதுமில்லை. எல்லாச் சபையின் காலங்களிலும் போல இந்தச் சபையின் காலத்திலும் இரண்டு குழுக்கள் தோன்றி, இவ்விரண்டும் தேவனோடு நெருங்கி ஜீவித்து அவரிடத்திலிருந்து வெளிப்படுதலைப் பெற்றதாகவும் கூறிக் கொண்டன. `ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது. கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும் ... அதற்கு முத்தினதாயிருக்கிறது’ (2 திமோ 2. 19). கர்த்தர் உள்ளிந்திரியங்களை ஆராய்கிறவராயிருக்கிறார்’. நம்முடைய இருதயத்திலுள்ளவைகளை வெளிப்படுத்தும் கிரியைகளையும் அவர் கண்ணோக்குகிறார். இந்த இருதயத்திலிருந்து நல்லவைகளும் பொல்லாத சிந்தனைகளும் தோன்றுகின்றன. நம்முடைய கிரியைகளைக் கர்த்தர் கவனிக்கும்போது, நம்முடைய நோக்கங்களை அவர் நன்றாக அறிகிறார். நம்முடைய ஒவ்வொரு கிரியையும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், நம்முடைய ஜீவியத்தின் கணக்கு ஒப்புவிக்கப்படும் போது நியாயத்தீர்ப்புக்குக் கொண்டு வரப்படும், கள்ளச் சபைக்கு தேவனுடைய பயம் கொஞ்சமேனுமில்லை; அதற்கென்று அவர்கள் தண்டிக்கப்படுவர். கர்த்தருடைய நாமத்தை உச்சரிக்கிறவர்களெல்லாம் பரிசுத்தவான்களாகத் தங்கள் நடக்கையில் காணப்படட்டும். நாம் மனிதரை ஒரு வேளை ஏமாற்றலாம். ஆனால் தேவனையோ ஏமாற்றவே முடியாது. இருள் காலங்களில் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் வெளி 2. 24 - 25, `தியத்திராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக் கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்து கொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான்சொல்லுகிறதாவது; உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள். இந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து சிந்திக்கும் முன்பு கள்ளச் சபையும் நல்ல சபையும் ஒன்றோடொன்று இணைந்த இந்த சபையோடு ஆவியானவர் பேசுகிறார் என்பதை நான் நினைப்பூட்ட விரும்புகிறேன். `தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக் கொள்ளாமலிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது’ என்னும் ஆவியானவரின் சொற்களின் மூலம் இரண்டு சபைகளுண்டு என்பதை அறியலாம். ஒரு சார்பார் இந்தப் போதகத்தைப் பற்றிக்கொண்டனர்; மற்றொரு சார்பார் இதைப் பற்றிக் கொள்ளவில்லை. இவர்களிருவரும் எல்லாத் தேசங்களிலும் பரவி, இவர்களுடைய போதகங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாயிருந்தன. ஒரு போதகம் தேவனால் உண்டாயிருந்து தேவனுடைய ஆழத்தை அறிந்திருக்கிறது; மற்றொன்றோ சாத்தானால் உண்டாயிருந்து சாத்தானுடைய ஆழங்களை அறிந்திருக்கிறது. `உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்’ இருள் காலங்களில் விசுவாசிகளின் மேல் பாரம் சுமத்தப்பட்டது. இந்தப் பாரத்திற்கு அவர்கள் பணியவேண்டும்; இல்லையேல் தங்கள் ஜீவனை இழக்க வேண்டும். சாத்தானின் வழிபடுதலை ரோம சாம்ராஜ்யத்தின் ஆதிக்கம் ஆதரித்து அந்தப் பாரத்தை மக்கள் மேல் சுமத்தியது. இவர்கள் அது உண்டாக்கிய ஸ்தாபனத்தில் சேர வேண்டும். அப்படிச் சேராதவர்கள் கொல்லப்படுவர். இந்த நான்காவது சபையின் விசுவாசிகளுக்கு தேவனைப் பற்றிய ஒரு பாரம் உண்டாயிருந்தது. அதன் மூலம் அவர்கள் ரோமாபுரியை எதிர்த்து மரணம் நேரிட்டாலும், அவர்கள் வசனத்திற்கென்று உறுதியாய், நின்றனர். `அவர்கள் சாத்தானின் ஆழங்களை அறிந்து கொள்ளவில்லை’ வேத விரிவுரையாளர்கள் இந்த வாக்கியத்திற்கு அர்த்தம் கண்டுபிடிக்க முடியாமையால், இதைத் தங்களுடைய விரிவுரையில் சேர்க்கவில்லை. தேவனுடைய ஆழம் என்னவென்பதை நாம் அறிந்தால், அதற்கு முரண்பாடாயிருக்கும் சாத்தானின் ஆழம் என்னவென்பதையும் அறிவோம். `நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும் நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடும் கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து அறிவுக் கெட்டாத அந்த அன்பை அறிந்து கொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும், நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்’ (எபே. 3. 16 - 19). ஒரு மனிதனுக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்து, வார்த்தையின் மூலம் அவனுடைய சிந்தை தேவனுடைய ஞானத்தினாலும் அறிவினாலும் பிரகாசித்தால், அவன்தன் ஜீவியத்திலே தேவனுடைய ஆழத்தின் அனுபவத்தைப் பெறுகிறான் என்று மேற்கூறிய வசனம் விளக்குகிறது. சாத்தானின் ஆழமோ மனிதன் பெற்ற இந்த ஞானத்தை அழிக்க முற்படுகிறது. இதற்கென்று சாத்தான் தேவனுடைய உண்மைத்தத் துவத்திற்குப் பதிலாகப் பொய்யான தத்துவத்தைப் புகுத்துவான். தேவனுடைய சத்தியத்தை அழித்து தன்னுடைய சொந்தவார்த்தையை தேவனுடைய வார்த்தையென்று சொல்லி ஏமாற்றி அதைப் புகுத்துவான். அதுமட்டுமின்றி, கிறிஸ்து நம்முடைய ஆவிக்குள் தங்கி நம்முடைய ஜீவியத்தை ஆட்கொள்வதற்குப் பதிலாக வேறொருவனை அவருடைய ஸ்தானத்தில் நிறுத்துவான். இஸ்ரவேல் ஜனங்களும் இவ்வாறே தேவனுடைய வழிநடத்துதலைப் புறக்கணித்து, தங்களை ஆள ஒரு ராஜா வேண்டுமென்று கேட்க அவன் தூண்டினான். இந்த மாற்றம் ஒரு மனிதனுடைய ஜீவியத்தில் உண்டாகும்போது, அவன் மறுபிறப்பின் அனுபவத்தை நிராகரித்து ஒரு ஸ்தாபனத்தின் அங்கத்தினனாய் சேருவான். தியத்தீரா சபையின் காலத்திலும் சாத்தானின் ஆழம் புகுந்துவிட்டது. அந்த ஆழத்தின் கனிகளாகிய பொய், கொலை, பொல்லாங்கான செய்கைகள் எல்லாம் அதனின்று தோன்றியது. பரிசுகள் வெளி 2. 26 - 29. `ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என்பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக் கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள். விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றெழுது’. `ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளு கிறவன்’. தேவன் தம்முடைய சொந்தமானவர்களுக்கு அவருடைய நீதியின் கிரியைகளின் தம்மையை அறிவிக்க விரும்புகிறார் என்று ஆவியானவர் விளம்பிய மேற்கூறிய வசனத்திலிருந்து புலனாகிறது. நான்கு முறை அவர் கிரியைகளைப் பற்றிப் பேசுகிறார். இப்பொழுது, முடிவு பரியந்தம் அவருடைய கிரியைகளை உண்மையாகக் கைக்கொண்டால், ஜாதிகள் மேல் வல்லமையாய் அதிகாரம் செலுத்தி, எந்த எதிரிகளையும் முறியடிக்க வல்லமை கொடுப்பதாகவும் வாக்களிக்கிறார். ஜெயங்கொள்ளுகிறவனின் வல்லமை பொருந்திய ஆட்சி, குமாரனின் ஆட்சியைப் போன்றே இருக்கும். தியத்தீரா காலத்திற்கு இந்த வாக்குத்தத்தம் எப்படி அர்த்தம் பொருந்தியது என்று நாம் சிந்திப்போம். ரோமன் சபை, அரசாங்க அதிகாரம் பெற்று, ராஜாக்கள், சைனியங்கள், மந்திரிகள் இவர்களின் உதவியைக் கொண்டு, தன்னுடைய கொள்கைகளுக்குக் கீழ்ப்படியாத ஆயிரக்கணக்கான மக்களை இக்காலத்தில் கொன்றுபோட்டு அவ்வாறு பின்வரும் காலங்களிலும் தொடர்ந்து செய்து, பிசாசின் கிரியைகளைக் கைக்கொண்டு, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அழிக்க உறுதிக் கொண்டது. இதன் காரணமாக அது எத்தனையோ நாடுகளை வீழ்த்தி, ராஜாக்களைத் தன்னிஷ்டம்போல் சிங்காசனத்தில் ஏற்றவும் அவர்களை வீழ்த்தவும் செய்தது. ஆனால் இனி வரப்போகும் ஒருநாளில் கர்த்தர் `என் எதிரிகளை என் முன் கொண்டு வந்து அழித்துப் போடுங்கள்’ என்று சொல்லி அவருடைய உக்கிரக் கோபம் அவருடைய நாமத்தைத் தூஷித்தவர்களின் மேல் விழும்போது, நீதிமான்கள் இவ்வுலகத்தையும் பரிசுத்தவான்களையும் அழித்தவர்களை நிர்மூலமாக்குவார்கள். இந்தச் சபையின் காலம் உபத்திரவத்தின் காலமாயிருப்பினும், இனி வரப்போகும் ஒரு நாளில் சத்தியம் தழைத்தோங்கி, அதன் உக்கிரத்தினின்று மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் மாத்திரம் காக்கப்படுவார்கள். `விடிவெள்ளி நட்சத்திரத்தை அவனுக்குக் கொடுப்பேன்’. இயேசு விடிவெள்ளி நட்சத்திரமென்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன. `நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்’ (வெளி 22. 16). `பொழுது விடிந்து, விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும், (2 பேது 1.19). இருள் காலங்களிலும் பின்வரும் காலங்களிலும் உண்டாயிருந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்குத் தம்மைக் குறித்த வாக்குத்தத்ததை அவர் அளிக்கிறார். நான் முன்கூறியபடி, இயேசு ஒவ்வொரு காலத்திற்குரிய தூதனோடு தம்மை ஒன்றுபடுத்துகிறார். அந்தந்தக் காலத்துக்குரிய வார்த்தையை இத்தூதர்கள் அவரிடமிருந்து பெறுகின்றனர். இந்த வார்த்தை வெளிப்பட்டு, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை உலகத்தினின்று பிரித்தெடுத்து, இயேசு கிறிஸ்துவோடு பூரண ஐக்கியப் படுத்துகிறது. இத்தூதர்கள், இயேசு கிறிஸ்துவினிடமிருந்து பெற்ற வெளிச்சத்தினால் பிரகாசிப்பதால், நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றனர். (நட்சத்திரங்களுக்குச் சொந்தமான வெளிச்சமில்லை. சூரியனிடமிருந்து வெளிச்சத்தைப் பெற்று அவை பிரகாசிக்க வேண்டும்), அது மட்டுமன்றி, நட்சத்திரங்களைப் போல் அவர்கள் இருளில் ஜொலிப்பதாலும் அவர்கள் அவ்வாறு அழைக்கப் படுகின்றனர். பாவத்தின் அந்தகாரத்தில் தேவனுடைய வெளிச்சத்தை அவர்கள் மக்களுக்குக் கொண்டுவருகின்றனர். இந்தச் சபையின் காலத்தில் தேவனுடைய வார்த்தை மக்களிடமிருந்து முழுவதுமாய் மறைக்கப்பட்டு அது இருள் காலமாயிருந்தது. சர்வ வல்லமையுள்ள தேவனைப் பற்றிய அறிவு முழுவதும் போய்விட்டது. உண்மையான விசுவாசிகள் வார்த்தையில் நின்றதால், கொல்லப்பட்டு, அவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தேவனுடைய காரியங்கள் மிகவும் தாழ்ந்த நிலையையடைந்து, சாத்தான் தேவனுடைய பிள்ளைகளை முற்றிலும் மடங்கடிப்பானோ என்ற ஐயமும் மக்களிடையே குடிகொண்டது. இருள் காலங்களிலிருந்த விசுவாசிகளுக்கு, இருளில்லாத நாட்டைச் சுதந்தரிப்பார் என்ற வாக்குத்தத்தம் மிகமிக அவசியமாயிருந்து, அதற்காகத் தான் விடிவெள்ளி நட்சத்திரத்தை அவர்களுக்குக் கொடுப்பதாக ஆவியானவர் வாக்களிக்கிறார். சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரான இயேசுகிறிஸ்து, இனிவரப்போகும் ராஜ்யத்தைத் தம்முடைய மகிமையின் பிரசன்னத்தினால் பிரகாசமாக்குவதாகக் கூறுகிறார். இருளில் வெளிச்சம் கொடுப்பதற்கு அவர் இனி ஒரு பொழுதும் நட்சத்திரங்களை (அதாவது தூதர்களை) உபயோகப்படுத்துவதில்லை; அவருடைய ராஜ்யத்தை அவர்களோடு பகிர்ந்துகொண்டு அவர்களோடு முகமுகமாய்ப் பேசுவார். சூரிய வெளிச்சம் பிரகாசிக்கத் தொடங்கும்போது, விடிவெள்ளி நட்சத்திரம் காணப்படும். நம்முடைய சூரியனாகிய இயேசு வரும்போதும், வேறு தூதர்களின் அவசியமிராது. அவர் சந்தோஷமான செய்தியை நமக்குக் கொண்டுவருவார், அவர் ராஜ்யத்தை அரசாண்டு அவர் பிரசன்னத்தில் நாம் ஜீவிக்கும்போது, நாம் பூரணப்பட்ட அந்த நாளிலே, தேவனுடைய வார்த்தையாகிய வெளிச்சம் அதிகமாய்ப் பிரகாசிக்கும். இயேசுவைக் காட்டிலும் வேறெதை நாம் விரும்பப் போகிறோம். அவரே நமக்கு எல்லாமும் எல்லாவற்றிலும் பூரணராயும் இருக்கிறார். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன். ஆமென். கர்த்தராகிய தேவனே, உம்முடைய ஆவியின் மூலம் நாங்கள் சத்தியத்தைக் கேட்க கிருபை செய்யும். ஏழாம் அத்தியாயம்: சர்தை சபையின் காலம் THE SARDISEAN CHURCH AGE வெளி 3 : 1 - 6 `சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ உயிருள்ளவனென்னு பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ள வைகளாக நான் காணவில்லை. ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு, நீ விழித்திராவிட்டால், திருடனைப் போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய். ஆனால் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு. அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடே கூட நடப்பார்கள். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரந்தரிக்கப்படும், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப் போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றெழுது. சர்தை புராதன காலத்திலிருந்த லிதியா (LYDIA) நாட்டின் தலைநகரம் சர்தைபட்டினமாகும். லிதியாவின் ராஜாக்களின் காலத்திற்குப் பின்பு, இந்நாடு பாரசீகர்கள் கைவசப்பட்டு, அவர்களிடமிருந்து மகா அலெக்ஸாண்டர் இதைக் கைப்பற்றினான். சிறிது காலம் கழித்து, பெர்கமுவின் ராஜாக்கள் இந்நாட்டை அரசாளத் தொடங்கினர். பின்பு இது ரோம அரசாட்சிக்குட்பட்டது. ரோமச் சக்கரவர்த்தியான திபேரியுராயன் (TIBERIUS) காலத்தில் இது பூகம்பங்களினாலும் வாதைகளினாலும் அவதியுற்று, மனித சஞ்சாரமற்ற நாடாக ஆனது. இன்று, பாழடைந்த நிலையில் இது காணப்படுகிறது. ஒரு காலத்தில் சர்தை பட்டினம் வாணிபத் துறையில் பிரசித்தி பெற்று விளங்கினது. கம்பளிக்குச் சாயம் பூசும் முறை இங்கு தான் கண்டுபிடிக்கப் பட்டதாக ப்ளைனி (PLINY) என்னும் சரித்திரக்காரர் எழுதியுள்ளார். கம்பளம் நெய்யும் தொழிலிலும் இப்பட்டினம் பெயர்போனது. வெள்ளியும் பொன்னும் இந்நாட்டின் பாறைகளில் அதிகமாக விளைந்திருந்தன. பொன் நாணயங்கள் இங்கு தான் முதன் முதலில் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அடிமைகளை வாங்கும் வழக்கம் இந்நாட்டில் குடிகொண்டிருந்தது. சிபேல் (CYBELE) என்னும் தேவியை இந்நாட்டு மக்கள் வழிபட்டு வந்தனர். அவளின் ஆலயத்தைப் பாழடைந்த நிலையில் இன்றும் காணலாம். பாபிலோனில் `தாய் சேயாக’ (MOTHER AND SON) செமிராமிஸ் (SEMIRAMIS) என்பவளும் நைனஸ் (NINUS) என்பவனும் வணங்கப்பட்டு இவ்விருவரும் சிபேல் (CYBELE), டாயஸ் (DEOIUS) என்னும் பெயரால் ஆசியாவில் வழிபட்டனர் என்று பெர்கமு சபையின் காலத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது நான் கூறினேன். இவ்விருவருக்கும் அளிக்கப்பட்ட தன்மைகள் (ATTRIBUTES) பின்வருமாறு: அவன் சூரிய தேவன்; அவள் சந்திரதேவதை. அவன் பரலோகத்தின் தேவன்; அவள் பரலோகத்தின் அரசி. அவன் நற்பண்பையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துகிறவன்; அவள் சாந்தம், கிருபை என்னும் தன்மைகளை வெளிப்படுத்துகிறவள். அவன் மதியஸ்தம் செய்பவன்; அவள் மத்தியஸ்தம் செய்பவள். காணக்கூடாத உலகத்தைத் திறக்கவும் பூட்டவும் அவன் திறவுகோலைப் பெற்றிருக்கிறவன்; அதுபோன்ற திறவுகோலை அவளும் பெற்று அவ்வாறே செய்பவள். அவன் மரித்தவர்களை நியாயந்தீர்க்கின்றவன்; அவள் நியாயத் தீர்ப்பில் அவன் அருகாமையில் நிற்கிறவள். அவன் கொல்லப்பட்டு, உயிர்தெழுந்து, வானத்திற்கு எழுந்தருளியவன்; அவள் தன்மகனால் சரீரத்தோடு வானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டவள். ரோமாபுரியில் இவன் நம்முடைய கர்த்தருக்கே உரிய பட்டமாகிய `தேவகுமாரன்’ (SON OF GOD) என்னும் பட்டத்தைப் பெற்றிருக்கிறான். அவளோ `தேவனின் தாய்’ (MOTHER OF GOD) என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்படுகிறாள். பெர்கமு, தியத்தீரா சபைகளின் காலங்களில் `தாய் சேய்’ வழிபாடு அதிகமாகப் பரவியிருந்தது என்று பார்த்தோம். சர்தை சபையின் காலத்தில், பாபிலோனில் நடந்தது போலவே, மகனின் வழிபாடு கொஞ்சங் கொஞ்சம் குறைய ஆரம்பித்து, கடைசியில் தாயாகிய சிபேலை மாத்திரம் மக்கள் வழிபட ஆரம்பித்தனர். இவளுக்குத் தேவத்துவத்தின் அம்சங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டன. இவ்வழக்கம் ரோம சபையில் புகுந்து, மரியாள், சிபேலின் ஸ்தானத்தில் நிறுத்தப்பட்டு, அவளின் அம்சங்களனைத்தையும் பெற்றவளானாள். முன் கூறிய வண்ணம், சிபேல் என்பவள் ஜானஸ் (JANUS) (டயாஸூக்கு மறுபெயர்) என்பவனைப் போன்று வானத்துக்கும் பூமிக்குமுரிய திறவுகோலைப் பெற்றிருந்ததாகக் கருதப்பட்டாள். பாவ மன்னிப்புக்கென்று அக்காலத்து ஜனங்கள் சிபேலுக்கு முன்பாக, இரத்தம் தேகத்தினின்று பீறிடும்வரை தங்களைச் சாட்டையால் அடித்துக்கொள்வார்கள். இன்றைக்கும் கத்தோலிக்கர்கள் இவ்வழக்கத்தைக் கைக்கொண்டு கர்த்தரைப் போல் உபத்திரவப்படுவதாக நினைத்துக் கொள்கின்றனர். இக்காலத்தில் செழித்தோங்கிய ரோம சபையினின்று முதன் முதலாக அநேக மக்கள் வெளிவந்து மரியாளுக்கு இரட்சிப்பின் திட்டத்தில் பங்கில்லையென்றும், இரட்சகரான இயேசு கிறிஸ்துவைக் கர்ப்பத்தில் சுமக்கும் சிலாக்கியத்தை மாத்திரம் அவள் பெற்றவள் என்று கூறி சபையை எதிர்த்தனர். கள்ளத் தீர்க்கதரிசினியான யேசபேல் (ரோம சபை) இதைக் கண்டதும், மரியாளை குறித்த அவளுடைய போதனைகளை அதிகம் வற்புறுத்தத் தொடங்கினாள். சபையை விட்டு வெளிவந்த லூதரும் (LUTHER) விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்’ (JUSTIFICATION BY FAITH) என்னும் போதனையை உறுதிப்படுத்தும் போது, ரோமன் கத்தோலிக்க சபையானது கிரியைகள், தபசுகள், ஜெபங்கள், இன்னும் வேதத்திற் கப்பாற்பட்ட அநேக போதனைகளை மும்மரமாகக் கடைபிடித்து வந்தது, சபையின் கட்டுகளிலிருந்து விடுதலையானவர்கள் தேவகுமாரனான இயேசுவை மகிமைப்படுத்தின போது, ரோமன் கத்தோலிக்கர்கள் மரியாளை இன்னும் அதிகமாக வழிபடத் தொடங்கினர். கடைசியில் இருபதாம் நுற்றாண்டில் போப் பயஸ் (POPE PIUS) என்பவர் ரோம வேதசாஸ்திரங்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், உயிர்த்தெழுந்து மகிமையின் சரீரத்தோடு மரியாள் வானத்திற்கு எழுந்தருளினாள் என்று அறிவித்தார். தாயை மகன் பரலோகத்திற்குக் கொண்டு சென்றான் என்னும் பாபிலோனிய வழக்கத்தை ஒட்டியே போப்பின் இவ்வறிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஐந்தாம் சபையும் மற்ற சபைகளின் வழிகளைப் பின்பற்றி, கடைசியில், வேசியும் அவளுடைய பிள்ளைகளும் தள்ளப்படும் அக்கினிக் கடலில் முடிவடையும், மரியாளின் வழிபாடும் சிபேலின் வழிபாடும் ஒன்றே. ஆனால் வித்தியாசமான பெயர்களில் அவ்வழிபாடு நிகழுகிறது. சிபேல் (CYBELE) என்பது, இஸ்ரவேலை விக்கிரகாராதனைக்குட்படுத்திய யேசேபேல் ஆசாரிய ஊழியம் செய்த அஸ்தரோத்திற்கு (ASTARITE) மறுபெயராகும். காலம் ஐந்தாம் சபையாகிய சர்தை சபையின் காலம் கி.பி.. 1520 முதல் 1750 வரை நீடித்தது. இது சாதாரணமாக `சீர்திருத்தக் காலம்’ என்று அழைக்கப்படுவதுண்டு. தூதன் இக்காலத்துச் சபையின் தூதனாக மார்டின் லூதர் என்பவர் நியமிக்கப்படுகிறார். கிறிஸ்தவர்களிடையே இவர் மற்றெல்லாச் சபையின் தூதர்களைக் காட்டிலும் நன்கு அறியப்பட்டவர். அவர் சாதுவான குணம் படைத்து, படிப்பில் நிபுணனாக விளங்கினார். லூதர் சட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அநேக நாள் நோய்வாய்ப்பட்டு மரித்துப் போனார். தம்முடைய ஜீவியம் ஆவிக்குரிய பிரகாரம் எந்நிலையிலுள்ளது என்று ஆழ்ந்து அவர் சிந்திக்க இச்சம்பவம் காரணமா யிருந்தது. ஆவியிலே வளர்ந்து நித்திய ஜீவனையடைய வேண்டுமென்று அவர் எண்ணி, 1505ம் வருஷத்தில் எர்ஃபர்ட் (ERFURT) என்னும் ஸ்தலத்தில் இருந்த அகஸ்தீன் கான்வென்ட்டில் (AUGUSTINIAN CONVENT) சேர்ந்து, தத்துவமும் (PHILOSOPHY) தேவனுடைய வசனமும் படிக்கலானார். அவருடைய சரீத்தை அவர் அதிகமாக ஒடுக்கியபோதும் (SEVEREST PENANCE) இத்தகைய வெளித்தோற்ற முள்ள செய்கைகள் பாவ உணர்ச்சியிலிருந்து அவரை விடுவிக்கக் கூடாம லிருந்தன. `நான் தேவனோடு ஒப்புரவாக வேண்டும் என்றெண்ணி சாவுக் கேதுவாக என்னைத்தானே துன்புறுத்திக் கொண்டேன், என்றாலும் நான் அந்தகாரத்திலிருந்தேன். நான் இவைகளின் மூலம் அவரோடு ஒப்புரவாக முடியவில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய குழுவின் தலைவரான (VICAR GENERAL) ஸ்டௌபிட்ஸ் (STAUPITZ) என்பவர், இரட்சிப்பு என்பது ஆசாரங்களின் மூலம் கிடைக்கப்பெறுவதல்ல; அது மனிதனின் இருதயத்தில் ஏற்படும் ஒரு மாற்றத்தின் அனுபவம் என்பதை அறுவுறுத்தினார். இதனால் புத்துணர்ச்சி பெற்ற லூதர் தேவனை அதிகமாகத் தேடத் தொடங்கினார். கொஞ்சக் காலங் கழித்து அவர் குருவாக நியமிக்கப்பட்டார். இவ்வுத்தியோகம் அவருக்கு இரட்சிப்பின் அனுபவத்தைக் கொடுக்கவில்லை. அக்காலத்தில் இருந்த எல்லா வேதசாஸ்திர நூல்களையும் லூதர் ஆராய முற்பட்டு பிரபல வேதசாஸ்திரியாக விளங்கினார். அவர் நூல்களைப் படித்ததனால் பெற்ற பாண்டித்தியத்தின் காரணமாக, வேதத்தைப் போதிப்பதற்கென அநேக இடங்களிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. ஒரு நாள் அவர் செய்த பொருத்தனையை நிறைவேற்றுவதற்கென லூதர் ரோமாபுரிக்குச் சென்றார். இரட்சிப்பு அடைவதற்கென்று ரோம சபையானது நிர்ணயித்த கிரியைகளனைத்தும் வீணென்னு அவர் அங்கு உணர்ந்தார். கிரியைகளினாலல்ல, விசுவாசத்தினால் மாத்திரமே நீதிமான் பிழைக்க முடியும் என்னும் சத்தியம் அவருடைய இருதயத்தைத் தொட்டது. ரோமாபுரியிலிருந்து திரும்பியவுடனே, அவர் இச்சத்தியத்தின் முக்கியத்துவத்தைப் பூரணமாகத் தன் சிந்தையில் கொண்டு, பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு மறுபிறப்படைந்தார். இது நேர்ந்த சிறிது காலத்திற்குள் அவர் டாக்டர் பட்டம் (DOCTOR OF DIVINITY) பெற்று, தன்னுடைய ஜீவகாலம் முழுவதும், வேதத்தை ஆராய்ந்து, சத்தியத்தைப் போதிப்பதற்கென சபையால் நியமிக்கப்பட்டார். அவருடைய உத்தியோகத்தை அவர் சரிவரச் செய்ததன் காரணமாக, அவரும், அவருடைய, பிரசங்கத்தைக் கேட்டவர்களும் வார்த்தையின் உண்மையான சத்தியத்தை அறிந்து, சபையின் பிரமாணங்களையும் போதனைகளையும் பகிரங்கமாக எதிர்க்கத் தொடங்கினர். பத்தாம் லியோ (LEO X) என்பவர் போப்பாக பணிபுரிந்த காலத்தில், ஜான் டெட்ஸல் (JOHN TETZEL)) என்பவர் பாவத்திற்கேற்ற பரிகாரத்தை மக்கள் சபைக்குக் கொடுக்கும் காணிக்கையின் மூலம் வாங்கிக் கொள்ள முடியும் என்ற அறிக்கை விடுத்தார். வேதத்தின் சத்தியத்திற்கு முற்றிலும் மாறுபட்ட இப்போதனையை லூதர் எதிர்த்தார். முதலில் இதற்கு விரோதமாக அவர் பிரசங்கித்து, பின்பு புகழ்வாய்ந்த 95 பிரபந்தங்களை (THESES) எழுதி எல்லோரும் படிக்கத்தக்கதாக காஸல் ஆலயத்தின் (CASTLE CHURCH) கதவுகளில் இவைகளை 1517-ம் வருஷம் அக்டோபர் மாதம் 31ம் தேதியன்று ஆணியடித்தார். இதன் பயனாக, குறுகிய காலத்திற்குள் ஜெர்மனி முழுவதிலும் சீர்திருத்தம் தொடங்கியது. லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்கக் காரணமாயிருந்தாலும், இதற்கு முன்பு போப்பின் அநியாய ஆதிக்கத்தை எதிர்த்தவர்களும், ஏன் சிறிய தற்காலிக சீர்திருத்தங்களைச் செய்த போப்புகளும்கூட, இம்மகத்தான சீர்திருத்தத்திற்கு வழிகோலினர். லூதரின் காலத்தில், அசைவுக்கான தேவனுடைய சமயம் வந்துவிட்டபடியால், லூதரை அதற்கென்று கர்த்தர் உபயோகித்தார். அநேக வருஷங்கள் கழித்து சபையானது பழைய நிலைக்குத்திரும்பி பரிசுத்த ஆவி சபையில் ஊற்றப்படுவதற்கு இந்த அசைவு மூலக் காரணமாயிருந்தது. மார்டின் லூதரும் ஆவியைப் பெற்ற ஒரு கிறிஸ்தவர் தான், வார்த்தையை அவர் நன்றாக அறிந்தது மாத்திரமல்ல, மக்களும் வார்த்தையின்படி ஜீவிக்க வேண்டுமாயின் வேதத்திலுள்ளவைகளை அறிய வேண்டுமென்று கருதி புதிய ஏற்பாட்டை அவர் தாமே மொழிபெயர்த்தார். பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்க அவர் எபிரேய மொழி நிபுணர்களின் உதவியைப் பெற்றார். லூதர் மொழிபெயர்த்த வேதாகமத்தை ஆதாரமாகக் கொண்டு, வேதத்துக்கடுத்த அநேக புத்தகங்கள் பின்னர் ஜெர்மனியில் வெளியிடப்பட்டன. வேத வசனத்தை லூதர் வல்லமையாகப் பிரசங்கித்துக் கிரியைகளினால் யாரும் இரட்சிப்படைவதில்லை என்றும், ஞானஸ்நானம் ஒருவனை மறுபிறப்படையச் செய்வதில்லை என்றும் சாதித்தார். ஜெபத்தில் இவர் அநேக மணி நேரம் செலவழித்து, தாம் ஈடுபட்ட காரியங்களில் வெற்றி பெற்றார். ஒருமுறை சாத்தான் அவர் முன் தோன்றியபோது, தன் கையிலுள்ள மையை (INK) அவன் மேலெறிந்து அவனைப் போகக் கட்டளையிட்டார். வேறொரு சமயம் இரண்டு பேர் அவரிடம் வந்து பாதிரிமார்களையும் வேதாகமங்களையும் அழிப்பதற்கென்று அவர்களோடு சேர அவரை வேண்டிக் கொண்டனர். அவர்களுக்குள்ளிருந்த ஆவியை அவர் பகுத்தறிந்து அவர்களை அனுப்பிவிட்டார். டாக்டர் மார்டின் லூதர் என்பவர் `ஒரு தீர்க்கதரிசி, சுவிசேஷகர், அன்னிய பாஷை பேசி அதன் அர்த்தத்தைக் கூறுபவர், ஆவியின் ஒன்பது வரங்களையும் பெற்றவர்’ என்று சாயர் (SAUER) எழுதின சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐந்தாம் சபையின் காலத்தின் தூதனாக லூதர் நியமிக்கப்பட்டு, `விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்’ என்னும் சத்தியத்தைப் போதித்தார். தேவனுடைய சுயாதிபத்தியம் (SOVEREIGNTY) தெரிந்து கொள்ளுதல் (ELECTION) முன் குறிக்கப்படுதல் (PREDESTINATION) போன்ற சத்தியங்களை அவர் நன்கு அறிந்திருந்தார். கிரியைகளினால் மனிதன் இரட்சிக்கப்பட முடியாது; விசுவாசத்தினால் மாத்திரமே அவன் இரட்சிப்பைப் பெற முடியும் என்னும் சத்தியத்தைத் தேவன் லூதர் மூலம் மக்களுக்குப் போதித்தார். சரித்திரக்காரர் இக்காலத்தைச் `சீர்திருத்தக் காலம்’ என்று அழைக்கின்றனர். உண்மையாகவே இக்காலம் சீர்திருத்தக் காலமாயிருந்தது. லூதரும் ஒரு சீர்திருத்த வாதியேயன்றி சரித்திரக்காரர் கூறுவது போன்று அவர் ஒரு தீர்க்கதரிசியல்ல. தீர்க்கதரிசியில் காணப்படும் அம்சங்கள் அவரில் காணப்படவில்லை. அவர் நல்லவேத போதகராகத் திகழ்ந்து, ஆவியின் வரங்களைக் கொண்டிருந்தார். பவுலைப் போன்று அவர் தீர்க்கதரிசியாக இல்லாததன் காரணத்தினால் தான் (பவுல், அப்போஸ்தலன், தீர்க்கதரிசி இவர்கள் தன்மைகளை ஒருங்கே பெற்றவன்) சபையை முழுச் சத்தியத்திற்குள் கொண்டுவர அவரால் கூடாமற் போயிற்று. காலம் கடந்த போது, லூதரின் நடைமுறையில் மாறுதல்கள் காணப்பட்டன. ஊழியத்தின் தொடக்கத்தில் அவர் சாந்த குணம் படைத்தவராயும், எவருக்கும் அஞ்சாதவராயும், பொறுமையுள்ளவராயும், எல்லா காரியங்களுக்கும் தேவனுடைய ஆலோசனையைப் பெற்றவராயுமிருந்தார். ஆனால் அநேக நண்பர்கள் அவருடைய குழுவைச் சேர்ந்த போது, அவர்களுடைய நோக்கம் ஆவிக்குரியதாயிராமல் அரசியல் சம்பந்தப்பட்டவைகளாக மாறிப்போயின. ஆவியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவத்தை அவர்கள் கொடுக்காமல், போப்பின் ஆதிக்கத்தை ஒழிப்பதையே தங்கள் ஒரே நோக்கமாகக் கொண்டு, மக்கள் சபைக்குக் காணிக்கை செலுத்துவதை எதிர்த்தனர். சபையின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஜெபத்தையும், பிரசங்கத்தையும் லூதர் தள்ளிப்போட்டு அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். குடியானவர்களுக்கும் செல்வந்தர்களுக்கு மிடையே ஏற்பட்ட சச்சரவை நீக்க அவர் முற்பட்டார். இவ்விவகாரத்தில் அவருடைய ஆலோசனை தவறாகயிருந்தபடியால் குழப்பம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கானவர் கொல்லப்பட்டனர். அவர் ஆவிக்குரிய பிரகாரமாய்த் தம்முடைய ஊழியத்தைத் தொடங்கினாலும் மறுபடியும் சபை - அரசாங்க குழப்பத்தில் சிக்கிக் கொண்டபடியால் அதற்குரிய பலனை அவர் அடைய வேண்டியதாயிற்று. இக்குறைகளின் மத்தியிலும் தேவன் லூதரை வல்லமையாய் உபயோகித்தார் அவருடைய நோக்கங்கள் தவறாயிருக்கவில்லை. அவருடைய ஆலோசனைகள் தவறாயிருந்தன. லூதரன் சபையினர் அவருடைய போதனையைக் கைக்கொண்டு அவரைப்போன்று கர்த்தரைச் சேவிப்பாரெனில், நம்முடைய மகாதேவனும், இரட்சகருமாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையும் புகழ்ச்சியுமாயிருப்பர். வாழ்த்துதல் வெளி 3.1. `தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது. கடந்த நான்கு சபைகளின் காலங்களில் நடந்தது போன்று, இச்சபையின் காலத்திலும் ஆவியானவர் தேவனுடைய தன்மைகளை எடுத்துக்கூறி, அதற்குரியவரான இயேசு கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்துகிறார். இச்சபையின் காலத்தில் இயேசு கிறிஸ்து சபையின் மத்தியில் நின்று, தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவராயிருக் கிறார். அவருடைய கரத்திலுள்ள ஏழு நட்சத்திரங்களும் சபைகளின் காலங்களில் நியமிக்கப்பட்ட ஏழு தூதர்களென்பதை நாமறிவோம். ஏழு ஆவிகள் யாரைக் குறிக்கின்றன என்பது பற்றி நாம் சிந்திப்போம். `ஏழு ஆவிகள்’ என்னும் பதம் வெளிப்படுத்தின விசேஷத்தில் நான்கு முறை உபயோகிக்கப்பட்டிருக்கிறது. `........... அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்’ (வெளி 1.4). ஏழு ஆவிகளையும் உடையவர் சொல்லுகிறதாவது (வெளி 3:1) அந்தச் சிங்காசத்திலிருந்து மின்னல்களும் இடி முழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்து கொண்டிருந்தன. (வெளி 4.5). `அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்கானத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும் மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்’ (வெளி 5.6). `தேவன் (ஒரு) ஆவியாயிருக்கிறார்’ (யோவான் 4.24) என்று வேதம் போதிப்பதற்கு மாறாக மேற்கூறிய வசனங்கள் உண்டாயிருக்கின்றன என்று எண்ணுதல் தவறாகும். ஒரே ஆவி ஒன்பது வழிகளில் தம்மை வெளிப்படுத்தக் கூடும் என்று பவுல் கொரிந்தியருக்கு எழுதியிருக்கிறார் (1 கொரி 12. 8-11). அதேவிதமாக, ஒரே ஆவி ஏழு வித்தியாசமான வழிகளில் இங்கு காணப்படு கிறது. இந்த ஏழு ஆவிகள் தேவனுக்கு முன்பாக ஏழு அக்கினி தீபங்களாய் எரிகின்றன (வெளி 4.5). யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதும் போது, பழைய ஏற்பாட்டின் அடையாளங்களையே உபயோகித்திருக்கிறான். ஆகையால் பழைய ஏற்பாட்டில் அக்கினித் தீபம் எதைக் குறிக்கிறது என்று பார்ப்போம். `மனுஷனுடைய ஆவிகர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது’ (நீதி 20.27). யோவான் ஸ்நானன் `எரிந்து பிரகாசிக்கும் விளக்கு’ என்று அழைக்கப்படுகிறான். (யோவான் 5.35). அப்படியெனில் இவ்வேழு ஆவிகளும் மனிதனோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அல்லாமலும் இந்த ஆவிகள் ஆட்டுக் குட்டியானவரின் ஏழு கண்களாகக் காட்சியளிக்கின்றன (வெளி 5.6). பழைய ஏற்பாட்டில் சகரியா தீர்க்கதரிசனப் புத்தகத்தில் `அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்கு நூலைச் சந்தோஷமாகப் பார்க்கிறது’ என்று எழுதப்பட்டிருக்கிறது (சகரியா 4.10). ஆகையால், கர்த்தருடைய ஆவியினால் நிரப்பப்பட்டு அதன் வல்லமையினால் ஊழியம் செய்யும் ஏழு மனிதர்களை இந்த ஏழு கண்களும் குறிக்கின்றன. ஒரே பரிசுத்த ஆவி, ஏழு மனிதர்களின் ஜீவியத்தின் மூலம் ஊழியத்தைக் காலங்கள் தோறும் தொடர்ச்சியாய் நடத்திக் கொண்டு வந்திருக்கிறது. இவர்கள் அவருடைய கண்களாகவும் தீபங்களாயுமிருக்கின்றனர். இவ்வசனத்தின் (வெளி 3.1) அடுத்த வாக்கியம் இவர்களை ஏழு நட்சத்திரங்களென்று விஸ்தரிக்கிறபடியால், ஏழு ஆவிகளும் ஏழு சபைகளின் தூதர்களையே குறிக்கின்றன. சூரியன் அஸ்தமித்த பிறகு, நட்சத்திரங்கள் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கிறது போன்று, ஒவ்வொரு காலத்தின் தூதனும் தேவனுடய வெளிச்சத்தைப் பரிசுத்த ஆவியின் மூலம் பிரதிபலிக்கிறான். முதலாம் சபையின் தூதனான பவுல் எப்பொழுதும் ஒரே சுவிசேஷத்தைப் பின்பற்ற வேண்டும் என்று சபைகளை எச்சரித்தான். ஏனெனில் அவனுக்குப் பின்பு, கொடிய ஓநாய்கள் சபைக்குள் புகுந்து சத்தியத்தைக் குலைத்துப் போடுமென்றும், சாத்தான் ஒளியின் தூதனாக காட்சியளித்து வேறொரு சுவிசேஷத்தை மக்களிடையே புகுத்துவான் என்பதையும் அவன் அறிந்திருந்தான். `நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன் (கலா 1.8). கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் பவுல் ஞானஸ்நானம் கொடுத்து, அந்த ஞானஸ்நானத்தைப் பெறாதவர்களுக்கு மறுபடியும் அந்த நாமத்தில் ஞானஸ்நானங் கொடுத்தான், அன்றியும் சபையை அவன் ஒழுங்குபடுத்தி, ஆவியின் வரங்களைச் சரிவர உபயோகிக்கும் முறையை அவன் எடுத்துரைத்து, இயேசு மறுபடியும் வருமளவும் சபையில் இவை காணப்படும் என்று கூறினான். இதுவே பவுல் பிரசங்கித்த சுவிசேஷம். அப்படியெனில் மற்றைய ஆறு தூதர்களும் பவுல் பெற்ற பரிசுத்த ஆவியைத் தாங்களும் பெற்று, அவன் பிரசங்கித்த கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவர்களும் பிரசங்கித்து, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய வேண்டும். இரினேயஸ், மார்டின், கொலம்பா, லூதர் வெஸ்லி எல்லோரும் தூதர்களுக்குரிய இத்தகுதியைப் பெற்றிருந்தனர். அவர்கள் வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வில்லை. ஏழு ஆவிகளும் தேவனுடைய ஒரே ஆவியாக இருந்து, வித்தியாசமான காலங்களில் தேவனுடைய சித்தத்தையும் அந்தந்தக் காலத்திற்குரிய தேவனுடைய வார்த்தையையும் நிறைவேற்றின என்று நாம் பார்த்தோம். வேத வாக்கியங்களின் மூலம் இதை நான் இன்னமும் விவரிக்க விரும்புகிறேன். தேவ ஆவியானவர் வல்லமையாக எலியாவின் மேல் தங்கிருந்தார். அதே ஆவியானவர் இரட்டிப்பான வல்லமையோடு எலிசாவின் மேல் அமர்ந்தார். நூற்றாண்டுகள் கழித்து, இந்த `எலியாவின் ஆவி’ (ஒரே விதமான ஊழியத்தைக் குறிக்க இது `எலியாவின் ஆவி’ என்று அழைக்கப்படுகிறது யோவான் ஸ்நானன் மேல் இறங்கிற்று. புறஜாதிகளின் சபையின் காலம் முடிவடையும் தருணத்திலும் அந்த ஆவி ஒரு மனிதனின் மேல் இறங்கி அதேவிதமான ஊழியத்தைக் கொடுக்கும். தேவன் நசரேயனாகிய இயேசுவை பரிசுத்த ஆவியினாலும் வல்லமை யினாலும் அபிஷேகம் செய்தாரென்றும், இயேசுவும் நன்மை செய்பவராகவே சுற்றித் திரிந்து பிசாசினால் பீடிக்கப்பட்டவர்களை சொஸ்தமாக் கினாரென்றும் வேதம் கூறுகிறது. இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்து போகும்போது, அவருடைய சீஷர்களிடம் பெந்தேகோஸ்தே நாள்வரை காத்திருக்கவும் அப்பொழுது அவர் மேல் தங்கியிருந்த ஆவி திரும்பவும் இறங்கி அவர்களை நிரப்புமென்றும் கூறிச் சென்றார். அவருடைய ஸ்தானத்தை அபிஷேகம் பெற்ற அவருடைய சரீரமாகிய சபை ஏற்று, அவர் செய்த கிரியைகளையே தானும் செய்யும். ஆம், இயேசு கிறிஸ்துவின் உண்மையான திருச்சரீரமாகிய சபை இயேசு பெற்ற ஆவியைப் பெற்றிருப்பதால், அவர் செய்த கிரியைகள் அவளிடத்திலும் காணப்பட வேண்டும். அவருடைய ஆவியையும் கிரியைகளையும் பெற்றிராத எந்தச் சபையும் தேவனிடத்தில் ஒரு நாளில் கணக்கொப்புவிக்க வேண்டும். இந்த ஏழு தூதர்களையும் (ஏழு நட்சத்திரங்களையும்) இயேசு தம்முடைய கரத்தில் ஏந்திக்கொண்டிருக்கிறார். இயேசுவின் கரம் வல்லமையையும் அதிகாரத்தையும் குறிக்கும். அப்படியெனில் சபைகளின் காலங்களிலுள்ள தூதர்கள் அவருடைய வல்லமையையும் அதிகாரத்தையும் பெற்றிருக்கின்றனர் என்று இக்காட்சி நமக்கு அறிவுறுத்துகிறது, அவர்களில் ஒருவராவது தங்களுடைய அதிகாரத்திலும், வல்லமையிலும் வரவில்லை. தேவனுடைய அதிகாரத்தையும் பரிசுத்த ஆவியின் வல்லமையும் கொண்டவர்களாய் அவர்கள் குறிப்பிட்ட காலங்களில் தோன்றினர், சுவிசேஷம் தேவனுடைய வல்லமையோடும் பரிசுத்த ஆவியோடும் வந்ததென்று பவுல் கூறுகிறான் (1 தெச 1.5). தூதர்களெல்லாரும் தேவனுடைய வல்லமையைப் பெற்றதால் உலகத்தையே எதிர்த்து நிற்க அவர்களால் முடிந்தது. இயேசு கிறிஸ்து, தாம் போனபின்பு உலகம் பெறக்கூடாத பரிசுத்த ஆவியை அனுப்புவதாக வாக்களித்துச் சென்றார். தூதர்களும் இத்தகைய பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்ததனால் உலகத்திற்கு மாறாக நடந்து கொண்டனர். ஸ்தாபனங்களெல்லாம் உலகத்திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டதால், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை. பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு ஸ்தாபனத்தையாவது நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு செய்வீர்களானால், தேவனுடைய வார்த்தையில் ஏதோ தவறிருக்க வேண்டும். சபையின் தூதர்கள் தங்களை எவ்விதத்திலும் ஸ்தாபனங்களின் கொள்கையினால் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் ஸ்தாபனங் களால் புறங்கணிக்கப்பட்டனர்; அல்லது ஸ்தாபனங்களின் பாவமான நிலையைக் கண்டு அவர்களே அவைகளினின்று வெளி வந்தனர். ஸ்தாபனங்கள் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை நிராகரித்து தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாகத் தங்களுடைய சொந்தப் போதனைகளைப் பின்பற்றும் போது, பரிசுத்த ஆவியானவர் இந்த ஸ்தாபனங்களில் எங்ஙனம் பிரசன்னராயிருக்கக் கூடும்? ஸ்தாபனங்களெல்லாம் ஆவிக்குரிய மரணம் எய்திவிட்டன. அவைகள் பரிசுத்த ஆவிக்குப் பதிலாக உலக வழக்கங்களை ஏற்றுக்கொள்ளும்போது, ஆவியானவர் அவர்களை விட்டுப் போய்விடுகிறார். ஆம், ஏழு தூதர்களும் ஒரே ஆவியைப் பெற்று, ஒரே சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஆவிக்குரிய வல்லமையைப் பெற்றிருந்தனர். இதே ஆவியை உண்மையான சபையும் பெற்று, வார்த்தையில் நிலைநின்று, வல்லமையான கிரியைகளை நடப்பித்து, ஆவிக்குரிய வரங்களனைத்தையும் பெற்றிருந்தது. தேவனும் எப்பொழுதும் சபையின் மத்தியில் நின்று தம்மைச் சபையோடு ஒன்றுபடுத்தி, அவருடைய வல்லமையை அதற்களிக்கிறார். உண்மையான சபை கட்டுப்பட்டதாக இருக்கவே முடியாது. இயேசுகிறிஸ்து அவருடைய ஆவியைத் தூதர்களுக்குள் வைத்து, அதன்மூலம் அவரைச் சபைகளுக்கு வெளிப்படுத்துகிறார். இஸ்ரவேல் ஜனங்களை மோசே வழிநடத்தியதுபோன்று, இத்தூதர்களும் அவரவரின் காலங்களிலுள்ள சபையை வழிநடத்தினர். மோசே, அவன் காலத்திற்குரிய வெளிப்பாட்டை தேவனிடத்திலிருந்து பெற்றதுபோன்று, ஒவ்வொரு தூதனும் அவனவன் காலத்திற்குரிய வெளிப்பாட்டையும் ஊழியத்தையும் பெற்றான். இயேசுவின் கரத்திலுள்ள தூதர்கள், அவரோடு ஒன்றுபட்டு அவருடைய வல்லமையைப் பெற்றனர். தூதர்களோடு தம்மை ஒன்றுபடுத்துவது மாத்திரமின்றி, ஏழு குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவுவதன் மூலம் அவர் எல்லாச் சபைகளோடு தம்மை ஒன்றுபடுத்துகிறார். ஆனால் சபையானது ஒவ்வொரு காலத்திலும் தேவனை விட்டுப் பின்வாங்கினது. சபையின் அங்கத்தினர்கள் (LAITY) மாத்திரமல்ல, போதகர்களும் (CLERGY) பின் வாங்கினர். மேய்ப்பர்களும் ஆடுகளும் தவறான வழியில் சென்றனர்; அச்சமயம் தேவன் பிரதான மேய்ப்பனின் ஸ்தானத்தை வகித்து, ஏழு தூதர்களின் ஊழியத்தின் மூலம் மக்களைச் சத்தியத்திற்கும் அதற்குரிய வல்லமைக்கும் மறுபடியும் கொண்டு வருகிறார். தேவன் தம்முடைய சொந்த மக்களுக்குள் வாசம் செய்கிறார். `கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல’ (ரோமர் 8.9). அவரே வார்த்தையாயிருப்ப தால், இவ்வாறு அவர் வாசம் செய்வதன் மூலம் அவர்கள் வார்த்தையை அங்கீகரிக்கின்றனர். இதோடு நின்றுவிடாமல் அவர்களை வழிநடத்த தேவன் தூதர்களைத் தெரிந்தெடுத்து அவருடைய ஆலோசனையை அவர்களுக்குக் கொடுத்தார். இவர்கள் ஒவ்வொருவராக, ஒவ்வொரு சபையின் காலத்திலும் தோன்றுகின்றனர். ரோம ஆதிக்கம் இதைக் காட்டிலும் எவ்வளவு மாறுபட்டதாயிருக்கிறது என்று பாருங்கள், சபையின் தலைவர்கள் பரிசுத்த ஆவியானவரால் தெரிந்து கொள்ளப்படாமல் மனிதரின் சுயசித்தத்தினாலே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் தேவனுடைய வல்லமை காணப்படு வதில்லை. அவர்கள் யாரும் தேவனுடைய வார்த்தையிலும் உறுதியாய் நிற்பதில்லை. ஒவ்வொரு தலைவனும் தனக்கு முன்னிருந்தவனின்று வித்தியாசப்பட்டு தன்னிஷ்டம் போல் கொள்கைகளைச் சபையில் புகுத்துகிறான். தேவனோ அவ்விதம் நடத்தப்படும் சபையில் பிரசன்னராயில்லை. அவர் தம்முடைய தூதர்களுக்குள் வாசம் செய்து அவர்களை வழிநடத்துகிறார். தூதர்கள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அவரைப் பின்தொடருவது போன்று, தேவனுடைய பரிபூரணத்தைப் பெற்ற ஒவ்வொருவனும் தூதர்களைப் பின்தொடருவான். `தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர்’ முதலில் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு, மானிடரோடு சம்பந்தங்கொண்டார். இப்பொழுது அவருடைய ஆவிமனிதனுக்குள் வாசம் செய்வதன் மூலம் அவனோடு அவர் சம்பந்தங்கொள்ளுகிறார். இந்த ஏழு தூதர்களுக்குள்ளும் பரிசுத்த ஆவி குடிகொண்டிருந்ததால், தேவன் அவர்களைத் தமக்குச் சொந்தமானவர்கள் என்று கருதுகிறார். மனிதர் ஒருவேளை அவர்களுடைய பலவீனங்களைக் கண்டு, அவர்கள் தூதர்களாவதற்குத் தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் கொள்ளலாம். ஆனாலும் அவர்கள் தங்கள் காலத்தின் தூதர்களாகவே இருக்கின்றனர். பலவீனமுள்ள மனிதர்களைத் தேவன் அவருடைய மகிமைக்கென்று உபயோகித்தார். ஆபிரகாம் பொய் சொன்னான்; மோசே முரட்டாட்டம் பிடித்தான்;யோனா கீழ்ப்படியாமற் போனான். சிம்சோன் பாவம் செய்தான்; தாவீது கொலை செய்தான். ஆனாலும் கர்த்தர் இவர்களெல்லாரையும் தம்முடைய மகிமைக்கென்று உபயோகித்தார். அல்லாமலும், வார்த்தைக்குப் பூரணமாய் கீழ்ப்படிந்து மாமிச பலவீனம் எதுவும் காணப்படாத யோசுவாவையும் யோசேப்பையும் கர்த்தர் உபயோகித்தார். ஆனால் பூரணரைக் காட்டிலும் மாமிச பலவீனமுள்ள அநேகரைக் கர்த்தர் உபயோகித்தார். தூதர்களெல்லாரும் கர்த்தருடையவர்கள். அதை யாரும் மறுக்க முடியாது. பரிசுத்த ஆவியை அவர்களுக்குள் வைத்து, அதன்மூலம் அவர்களைக் கர்த்தர் உபயோகித்தார். தேவனுடைய இராஜாதிபத்திய சித்தம் (SOVEREIGN WILL) அவர்களுக்குள் நிறைவேறியது. சரித்திரம் இதை மறுத்தாலும் அது உண்மையாகவே இருக்கிறது. நித்தியதேவன் பொன்குத்து விளக்குகளின் மத்தியில் உலாவி, ஒவ்வொரு காலத்திலும் அவருடைய தூதனை அனுப்பி, அவருடைய பரிசுத்தஆவியின் மூலம் அக்காலத்துக்குரிய வார்த்தையை மக்களுக்கு அளிக்கிறார். கடிந்து கொள்ளுதல் வெளி 3.1 `......... உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்’ வெளி 3.2 `...... உன்கிரியைகளைத் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை’ ஒவ்வொரு சபையின் காலத்திலும் ஆவியானவர் முதலில் உண்மையான விசுவாசிகளைப் புகழ்ந்து, பின்னர் கள்ளச் சபையைக் கடிந்து கொள்கிறார். ஆனால் இச்சபையின் காலத்து மக்கள் வார்த்தையின் முக்கியத்துவத்தை அறிந்தும் அதை அவமதித்ததால், அதற்குரிய செய்திமுழுவதும் கடிந்து கொள்ளுதலாகவே இருக்கிறது. `உன் கிரியைகளை நான் அறிந்திருக்கிறேன்’ ஒரு சபையின் காலத்தில் உண்டாயிருந்த கிரியைகள் தொடர்ந்து அடுத்த சபையின் காலத்திலும் காணப்பட்டன என்று நாமறிவோம். அவ்வாறு நான்காம் சபையின் காலத்திலுண்டாயிருந்த கிரியைகள் ஐந்தாம் சபையின் காலத்திலும் (தியத்தீரா சபையின் காலம்) கடைபிடிக்கப்பட்டன. இக்கிரியைகள் பின்வருமாறு : 1. பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் புறக்கணிக்கப்பட்டு மனிதனின் வழிநடத்துதல் ஏற்கப்பட்டது. 2.தேவனுடைய சுத்தவசனமும் அதைக் கைக்கொள் ளுவதனால் உண்டாகும் பலனும் மறுதலிக்கப்பட்டு, சபையின் பிரமாணங்கள், ஒழுங்குகள் பின்பற்றப்பட்டன. 3. ஆவியில் தொழுது கொள்ளுதலும், ஆவியின் வரங்களும், பரிசுத்தவான்களின் உண்மையான ஐக்கியத்தோடு சம்பந்தப்பட்டிருக்கும் அநேக செய்கைகளும் நிராகரிக்கப்பட்டு, விக்கிரகாராதனையும் அஞ்ஞான பண்டிகைகள் கொண்டாடுதல் சபையில் நுழைக்கப்பட்டன. 4. மரியாளின் வழிபாடு கிறிஸ்தவ வழிபாட்டில் முதன்மை ஸ்தானம் பெற்று, கடைசியில் அவள் குமாரனுக்குரிய தேவத்துவத்தைப் பெற்றவளாக கருதப்பட்டாள், எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் மேலான இயேசுகிறிஸ்துவின் மகிமை குறைக்கப்பட்டு, கிறிஸ்துவின் பிரதிநிதி (VISCAR OF CHRIST) என்று கூறிக்கொள்ளும் போப்பிற்கு அந்த மகிமையின் தன்மை அளிக்கப்பட்டது. மேற்கூறியவைகளைப் பின்பற்றிய அந்திக்கிறிஸ்துவின் சபையை எதிர்த்தவர்கள் இரக்கமின்றி நிர்மூலமாக்கப்பட்டனர். அச்சபையின் அங்கத்தினரா யிருந்தவர்கள் அதற்கு அடிமைகளாகி, தங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்காமல், அவைகள் ரோம சபைக்கே உரியதாக பாவித்தனர். இயேசுவின் இரத்தம் பாவங்களை நீக்கும் என்று ரோம சபை கூறினாலும், சபையின் மக்கள் இரட்சிப்பையும் பாவமன்னிப்பையும், சபைக்கு அளிக்கும் விலையுயர்ந்த காணிக்கையின் மூலமே சம்பாதிக்க முடியும் என்ற தவறான அபிப்பிராயத்தை அதுமக்களிடையே பரவச் செய்தது. பத்தாம் லியோ (LEO X) போப்பாக இருந்த சமயம் மக்கள் இனிமேல் செய்யப்போகும் பாவங்களுக்குப் பரிகாரம் இப்பொழுதே காணிக்கையின் மூலம் சம்பாதித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டபோது, செல்வந்தர்கள் இத்தருணத்தை ஆதாயப்படுத்திக் கொண்டு, அநேகப் பொல்லாங்கான செய்கைகளில் ஈடுபடதிட்டம் வகுத்து, அதனாலுண்டாகும் பாவத்திற்கு ஏற்கெனவே பணம் கொண்டு பரிகாரத்தைப் போப்பின் மூலம் சம்பாதித்துக் கொண்டோம் என்ற தவறான எண்ணங் கொண்டிருந்தபடியால் அவர்கள் மனச்சாட்சி குத்தப்படாமலிருந்தனர். ரோம சபையிலுள்ளவர்களுக்குத் தேவ வசனம் போதிக்கப்படவில்லை. அதனால் சத்தியத்தைக் குறித்து மக்கள் அறிந்து கொள்ள முடியவில்லை. சபையாகிய இருட்டறையிலே அடைக்கப்பட்டிருந்த மக்கள், சத்தியமாகிய வெளிச்சத்தைக் காணத் தடை செய்யப்பட்டு, ஆவிக்குரிய மரணமடைந்து, நியாயத்தீர்ப்பைக் குறித்து ஒன்றும் அறியாமலிருந்தனர். மகா வேசியாகிய ரோம சபை, பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறிகொண்டு ஜனங்களை சரீர மரணத்திலும், ஆவிக்குரிய மரணத்திலும் ஆழ்த்தினாள். நான்காவது சபையின் கால முடிவில் (அதாவது ஐந்தாவது சபையின் காலத் தொடக்கத்தில்) துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிலின் மேல் படையெடுத்தனர். அவ்வமயம் அநேக பண்டிதர்கள் தங்கள் கிரேக்கக் கைப்பிரதிகளோடு (MANUSCRIPTS) மேற்கு பாகத்திற்கு ஓடிப்போனார்கள். இதன் காரணமாக, தேவ வசனங்களடங்கியதும், விசுவாசிகளின் போதனைகளைக் கொண்ட கைப்பிரதிகள் ஆங்காங்கே சிதறிப் போயின. இதுவரை இக்கைப்பிரதிகளினால் கிழக்கு பாகம் மாத்திரமே நன்மை பெற்றிருந்தது. இப்பொழுது, மேற்கு பாகத்திலுள்ளவர்களும் தேவவசனத்தின் முக்கியத்து வத்தை அறியத் தலைப்பட்டனர். மக்களிடையே தேவவசனத்தையறிய வேண்டுமென்ற வாஞ்சை எழும்பினது. தக்க சமயத்தில், அச்சு இயந்திரம் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. வேதாகமத்தை அச்சிட்டு மக்களுக்கு அளிக்க இது வழிகோலியது. இக்காலத்தில் லூதர், ஸ்விங்லி (ZWINGLI), கால்வின் (CALVIN) போன்றவர்களைக் கர்த்தர் தம்முடைய ஊழியத்திற்கென்று எழுப்பினார். இதன் காரணமாக, சத்தியம் ஜனங்களிடையே பரவியது. லூதரைப் போன்றவர்கள் சீர்திருத்தத்தை உண்டாக்கினாலும் தேவனுடைய மகத்தான கிரியைகளுக்கு இவர்களுடைய செய்கைகள் இடறலாயிருந்தன. முதலாவதாக, நிசாய ஆலோசனைச் சங்கத்தில் தீர்மானிக்கப்பட்டதும், வார்த்தைக்கு விரோதமுமாயிருக்கிற சபை-அரசாங்க ஒப்பந்தத்தை இவர்கள் ஆதரித்தனர். அன்றியும், சுவிசேஷத்தின் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதை இவர்கள் வரவேற்றனர். எட்டாம் ஹென்றி (HENRY VIII) சீர்திருத்தக்காரரின் சார்பாக, போப்பின் அதிகாரத்தை நிராகரித்தாலும், சபை பெந்தேகோஸ்தேவின் சத்தியத்தை முழுவதுமாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சபையின் விவகாரங்கள் சபையிலுள்ளவர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டுமென லூதர் போதித்திருப்பினும், சீர்திருத்தம் பெற்ற சபை, சபையின் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பை அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட அத்தியட்சகர் (BISHOP), பிரதம அத்தியட்சகர் (ARCH BISHOP) இவர்களிடம் மறுபடியும் ஒப்படைத்தது. சபையானது சத்தியத்தையறிந்து ரோம சபையை விட்டு வெளியில் வந்தாலும், அச்சபையின் பழக்க வழக்கங்களை விடாமலிருந்தது. சிறைப்பட்ட இருட்டறையிலிருந்து அவள் தப்பித்துக்கொள்ள முயன்றும், இவைகளின் மூலம் அதே இருட்டறையில் மறுபடியும் அவள் சிறையாக்கப்பட்டாள். இக்காலத்தில் அநேக பொல்லாத கிரியைகள் நடைபெற தேவனுடைய மக்களே காரணமாயிருந்தனர். உதாரணமாக, லூதரின் தவறான ஆலோசனை, மக்களை அரசாங்கத்திற்கு விரோதமாய் ஏவிவிட்டது. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஸ்விங்லியைச் சார்ந்தவர்கள், தேவபக்தனான டாக்டர் ஹுப் மேயர் (DR. HUBMAYER) என்பவரைத் துன்புறுத்திச் சிறைபடுத்தினர். அவர் சுட்டெரிக்கப்படுவதற்கு இவர்கள் பெரும்பாலும் காரணமாயிருந்தனர். தேவன் ஒருவரே என்று போதித்த செர்வடஸ் (SERVETAS) என்பவரைச் சிறைபடுத்த கால்வின் (CALVIN) வற்புறுத்தினார். அரசாங்கம் அவரைச் சுட்டெரித்தது. இத்தகைய தண்டனையைக் கால்வின் எதிர்பார்க்காததனால், இதைக்குறித்து அவர் மிகவும் வேதனைப்பட்டார். ஸ்தாபனங்கள் அமைக்கப்படவேண்டும் என்ற எண்ணம் இக்காலத்தில் பரவியிருந்தது. கமீனியஸ் (COMENIUS) என்பவர் எழுதிய `தேவையானது ஒன்றே’ என்பதிலிருந்து இக்காலத்து நிலைமையை நாம் நன்கு அறியலாம், உலகத்தை அவர் ஒரு சிக்கலான ஸ்தலத்திற்கு (LABYRINTH) ஒப்பிட்டு அதனின்று வெளியில் வரவேண்டுமென்றால், தேவையில்லாத அநேக காரியங்களை விட்டுவிட்டு தேவையான ஒன்றாகிய இயேசு கிற்ஸ்துவை மாத்திரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். `கணக்கற்ற போதகர்கள் இக்காலத்தில் எழும்பின காரணத்தினால் சபையானது அநேகப் பிரிவுகளாகப் பிளக்கப்பட்டது. இவ்வாறு பிளவுபட்ட ஒவ்வொரு ஸ்தாபனமும், அதுவே உண்மையுள்ள சபையென்று எண்ணிக் கொண்டு, மற்ற ஸ்தாபனங்களிலுள்ள வரைத் துன்புறுத்தவும் விரோதிக்கவும் தொடங்கினது. அவர்களுக்குள் மறுபடியும் ஒற்றுமை ஏற்பட வழியேயில்லை. வேதத்தின் முக்கியமான ஒரு உபதேசத்தை ஒவ்வொரு சபையும் ஏற்று, வித்தியாசமான பிரமாணங்களை உண்டுபண்ணி, அவைகளையே அரண்களாக்கி அவைகளின் பின்னால் மறைந்து, வரக்கூடிய எல்லா எதிர்ப்புகளையும் சமாளிக்கின்றன. இந்த ஸ்தாபனங்கள் ஒன்றையொன்று விரோதிப்பதால், அவைகள் கடைபிடிக்கும் விசுவாசம் பலனற்றுப்போகிறது. இவைகளனைத்தையும் அகற்றுவதன் மூலமே உண்மையான சபைக்கு உண்டான காயங்களைச் சுகப்படுத்த முடியும்’ என்று அவர் கூறுகிறார். மேலும் அவர் `இந்த ஸ்தாபனங்கள் தங்களுடைய போதனைகளைக் குறித்து ஒன்றோடொன்று தர்க்கிக்க ஆவல் கொள்ளுகின்றன. ஆனால் இந்தத் தர்க்கத்தின் மூலம் எதுவும் ஒரு முடிவுக்கு வந்ததாகக் காணோம். சாத்தான் தர்க்கத்தில் பிரசித்தி பெற்றவன் (SOPHIST). ஆகையால் இதன் மூலம் அவனை யாரும் வெல்ல இயலாது. ஆராதனைகளில் தேவனுடைய வசனம் போதிக்கப்படுவதற்குப் பதிலாக மனிதனின் சுயவார்த்தைகளே போதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு போதகனும் அர்த்தமில்லாமல் பேசி, ஏனைய ஸ்தாபனங்களின் கருத்துக்கள் தவறு என்று நிரூபிக்க முற்படுகிறான். மறுபிறப்பைக் குறித்தும், ஒரு மனிதன் திவ்ய சுபாவத்தில் பங்குள்ளவனாவதற்கு, கிறிஸ்துவின் சாயலில் மாற்றப்பட வேண்டும். (2 பேது 1.4) என்றும் யாரும் போதிப்பதில்லை சபைக்குக் கொடுக்கப்பட்ட வல்லமையில், சபையானது ஒருங்கே கட்டும் வல்லமையையிழந்து, கட்டவிழ்க்கும் வல்லமையே பெற்றிருக்கிறது..... ஐக்கியத்திற்கும், அன்பிற்கும், கிறிஸ்துவ ஜீவியத்திற்கும் அடையாளமான நற்கருணை. மக்களிலுள்ள விரோதத்தையும், பாகுபாட்டையும் வெளிப்படுத்துவதற்கென உபயோகப்படுத்தப் படுகிறது. சுருங்கக் கூறினால் கிறிஸ்தவ சமுதாயம் சிக்கலான பாதையில் சென்று அதைவிட்டு வெளிவர முடியாமல் திகைக்கின்றது (LABYRINTH). கிறிஸ்தவ விசுவாசம் ஆயிரம் பாகங்களாகத் துண்டிக்கப்பட்டு, அவைகளிலொன்றை ஒருவன் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவன் சமயபேதமுள்ளவனாகக் (HERETIC) கருதப்படுகிறான்...... தேவையானது ஒன்றே. கிறிஸ்துவினிடத்தில் திரும்பி, அவரையே வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, மற்றெல்லா வழிகளையும் அகற்றி, விசுவாசத்தில் ஒருமைப்பட்டவர்களாகி (எபே 4.11) இலக்கை அடைவோமாக. நம்முடைய பரம எஜமானன் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு எல்லாவற்றையும் செய்தது போல், நாமும் ஒரு சாரார் பின்பற்றும் பிரத்தியேகமான போதனையை அறவே தள்ளி, நம்மெல்லாருக்கும் சொந்தமான தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டைப் பெற்றுத் திருப்தியடையவேண்டும். வேதாகமத்தை நம்முடைய கைகளில் ஏந்தினவர்களாய், `தேவன் இப்புத்தகத்தின் மூலமாய் வெளிப்படுத்தின அனைத்தையும் விசுவாசிக்கிறேன். அவருடைய கட்டளைகளுக்கு முழுவதும் கீழ்ப்படிவேன்; அவர் வாக்குத்தத்தம் செய்தவைகளைப் பெற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று நாமெல்லாரும் கூறுவோம். கிறிஸ்தவர்களே செவி கொடுங்கள்! ஒரு ஜீவனே நமக்குண்டு ஆனால் மரணம் கணக்கற்ற வழிகளில் சம்பவிக்கும். கிறிஸ்து, ஒருவரே, ஆனால் அந்திக்கிறிஸ்துக்கள் அநேகர்...... கிறிஸ்தவ சமுதாயமே, உனக்குத் தேவையானதை இப்பொழுது அறிந்திருக்கிறாய். கிறிஸ்துவினிடத்தில் திரும்பு; இல்லையேல் அந்திக் கிறிஸ்து வைப்போல் நீயும் நிர்மூலமாக்கப்படுவாய். நீ ஜீவிக்க வேண்டுமாயின், புத்திமானாய் ஜீவனுக்கு வழிகாட்டியாயிருக்கும் கிறிஸ்துவைப் பின்பற்று. கிறிஸ்தவர்களே, நீங்கள் பரத்திற்கு எடுத்துக் கொள்வதைக் குறித்துக் களிகூறுங்கள். `என்னிடத்தில் வாருங்கள்’ என்னும் கிறிஸ்துவின் அழைப்புக்குச் செவிகொடுங்கள்’ என்று கூறுகிறார். கொரிந்து சபையின் காலத்தில் சபையானது பிளவுபட்டு, அதைச் சார்ந்த மக்கள் `நான் பவுலைச் சேர்ந்தவன்’ என்றும், `நான் கேபாவைச் சேர்ந்தவன்’ என்றும் சொன்னது போன்று, இச்சபையின் காலத்திலும் அநேக ஸ்தாபனங்கள் ஏற்பட்டு, மக்கள் லூதரன்கள் (LUTHERANS) ஹுஸைட்டுகள் (HUSSITES), ஸ்விங்லி (ZWINGLI)யைச் சேர்ந்தவர்கள் என்று தங்களைப் பாகுபடுத்திக் கொண்டனர். கிறிஸ்துவின் சரீரமாகிய சபை இவ்வாறு பிளவுபட்டது வருந்தத்தக்கது. இவர்களெல்லாரும், ஸ்தாபனங்களை உண்டாக்கிக்கொண்ட அந்த க்ஷணமே, ஆவிக்குரிய மரணமடைந்தனர். லூதரன்கள் ரோமன் சபையின் கிரியைகளைப் பழித்தனர், ஆவிக்குரிய காரியங்கள் அரசியல் சம்பந்தப் பட்டதல்ல என்பதை, அவர்கள் அறிந்திருந்தனர். என்றாலும், பேதுரு யூத மார்க்கத்தவருக்குப் பயந்து நெறி தவறியது போன்று (கலா 2.11), லூதரும் தேவனுக்குப் பதிலாக அரசாங்கத்தை, விசுவாசத்தைக் காப்பதற்கென நியமித்து, அதன்மூலம் சத்தியத்தைக் கைவிட்டார். வேசியின் மார்க்கத்தைவிட்டு வெளிவந்த பிரக்யாதிபெற்ற முதல் ஸ்தாபனம் இதுவே. ஆனால் லூதர் மரித்த கொஞ்ச காலத்திற்குள், அது எதிர்த்த சபையில் காணப்பட்ட குருக்களாட்சியை (HIERARCHY), அதுவே பின்பற்றத் தொடங்கினது. இந்த ஸ்தாபனம் ஏற்பட்டு, இரண்டு தலைமுறைக்கெல்லாம், அது தாய் வேசியின் பாதுகாப்பையடைந்து, அவள் செய்ததுபோல அதுவும் செய்ய முற்பட்டது. லூதரன்களும், மற்றெல்லா ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களும், கிறிஸ்துவின் நாமத்தைத்தரித்து, அதற்கு மகிமையாக ஜீவிப்பதற்குப் பதிலாக, தங்களுடைய ஸ்தாபனங்களின் நாமங்களைத் தரித்து, அவைகளுக்குப் புகழ்ச்சியாக ஜீவித்தனர். இன்றைய ஸ்தாபனங்களும் இதே நிலையிலுள்ளன. கிறிஸ்துவின் வல்லமையைப் பெற்றதன் மூலம் இவைகள் அறியப்படாமல், தேவனை வழிபடும் முறையின் மூலம் இவைகளறியப்படுகின்றன. தீயத்தீரா சபையிலும், அதனின்று தோன்றிய ஸ்தாபனங்களிலும், அற்புதங்களும் அடையாளங்களும் காணப்படவில்லை. இவைகள் தேவனின் வல்லமையைப் புறக்கணித்து, அரசாங்கத்தின் அதிகாரத்தில் சார்ந்திருந்தன. ஸ்தாபனங்களின் பெயர்களை இவைகள் பற்றிக்கொண்டு அவைகளைப் பிரபலியமாக்கின. ஒவ்வொரு ஸ்தாபனமும் மக்களை அதற்குள் சேர்த்துக் கொள்ள விரைந்தது, இன்றைக்கும் பாப்டிஸ்டுகள் மெதோடிஸ்டுகளைத் தங்களுடைய ஸ்தாபனத்தில் சேர்க்க விரும்புகின்றனர். அவ்வாறே மெதோடிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களைத் தங்களுடைய ஸ்தாபனத்தில் சேர அழைக்கின்றனர். பெந்தேகோஸ்தே ஸ்தாபனம் இவர்களெல்லாரையும் அதனுடன் சேர்க்க முயல்கிறது. ஒவ்வொரு ஸ்தாபனமும் பரிபூரண சத்தியத்தைக் கடைப்பிடித்து. சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறது. இது மிகவும் பரிதபிக்கப்படத்தக்கது. ஒவ்வொரு ஸ்தாபனமும், அதற்குரிய நியமங்களையும். பிரமாணங்களையும் பிரமாண புத்தகத்தில் (MANUAL) எழுதி வைத்து, அவைகளையே மக்களுக்குப் போதிக்கின்றது. அன்றியும், அது வித்தியாசமான பதவிகளை ஏற்படுத்தி, குருமார்களுக்கு இப்பதவிகளை அளித்து, இவ்விதம் சபை அரசாங்கத்தை (CHURCH GOVERNMENT) உண்டாக்கிக் கொண்டது. ரோமன் சபையின் செயல்களிலல்லவா இந்த ஸ்தாபனங்களும் ஈடுபடுகின்றன? அப்படியெனில் இவ்விரு சாராருக்கும் என்ன வித்தியாசமுண்டு? இவர்களெல்லாரும் தாய் வேசியினிடத்தில் சேர்ந்தும், அதை அறியாதிருக்கின்றனர். இச்சபையின் காலத்தில் சீர்திருத்தம் ஏற்பட்டது உண்மையே. ஆயினும் வேசியினிடமிருந்து தப்பித்துக்கொள்ள தேவன் ஒரு வழியைத் திறந்து கொடுத்த போதிலும் வெளிவந்த மக்கள் ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டு மறுபடியும் அவளிடம் திரும்பினபடியால் `நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்’ என்று அவர் இச்சபையைக் கடிந்து கொள்கிறார். இக்காலத்து மக்களில் பெரும்பாலோர் ஆவிக்குரிய சத்தியங்களை அறிந்ததின் காரணத்தினால் ரோமன் சபையை விட்டு வெளிவரவில்லை; அச்சபையின் அரசியலாதிக்கத்தையும், சபையின் மக்களை வற்புறுத்திப் பணம் சேர்த்தலையும் வெறுத்ததன் காரணத்தால் அவர்கள் வெளிவந்தனர். பெந்தேகோஸ்தே காலத்தில் பரிசுத்த ஆவியின் கிரியைகளினால் தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றியது போன்றல்ல. இது சபையின் மேல் மக்களுக்குண்டாயிருந்த கோபம், தேவனை மகிமைப்படுத்தக் காரணமாயிருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள், எகிப்தைவிட்டுப் புறப்பட்டு வனாந்தரத்தில் அலைந்து திரிந்து, கானானுக்குள் பிரவேசிக்க முடியாமற் போனது. அதே போன்று ரோமன் சபையாகிய எகிப்தை விட்டு வெளிவந்த இந்த மக்கள், சத்திய மறியாமல் வனாந்தரத்தில் அலைந்து கடைசியில் நித்திய இளைப்பாறுதலாகிய கானானுக்குள் பிரவேசிப்பது அரிதாகும். இக்காலத்திலுண்டாயிருந்த சீர்திருத்தம் சில நன்மைகளையளித்தது. ரோமாபுரியின் நுகம் சிறிதேனும் முறிந்து, மக்கள் பயமின்றி தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியின் நடத்துதலுக்குக் கீழ்படிய இது ஏதுவாயிருந்தது. இதற்கடுத்து உண்டான `சுவிசேஷப் பிரபல்யக் காலத்திற்கு’ (MISSIONARY AGE), இச்சீர்திருத்தம் வழிகோலியது. யேசபேலின் மரணத்திற்குப் பின்பு, அவளுடைய புத்திரியான அத்தாலியாள் தேவனுடைய பிள்ளைகளை அழிக்க முயன்றாள் (2 ராஜா 11. 1-2) என்று வேதம் கூறுகிறது. அதே விதமாக, தியத்தீரா காலத்தின் யேசபேல்’ மரித்தாலும் அவருடைய புத்திரியான `அத்தாலியாள்’ சர்தை சபையின் காலத்தில் தோன்றி, அநேக ஸ்தாபனங்களின் திட்டங்கள் மூலம் தேவனுடைய உண்மையான சந்ததியை நிர்மூலமாக்க வகை தேடினாள். எச்சரிக்கை வெளி 3:2 `நீ விழித்துக் கொண்டு, சாகிறதற்கேது வாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை’. சர்தை சபையின் காலத்தில், சபையில் சீர்திருத்தம் உண்டானதேயன்றி, அது புதுப்பிக்கப்பட்டு (RESTORATION) பெந்தேகோஸ்தே சபையின் நிலைமைக்குத் திரும்பவில்லை. இந்தக் காலத்திலுள்ளவர்களுக்கு விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படும் போதனை (JUSTIFICATION) லூதரின் மூலம் அளிக்கப்பட்டது. மற்றைய முக்கியமான போதனைகளாகிய `பரிசுத்தமாக்கப்படுதல்’ (SANCTIFICATION) `பரிசுத்த ஆவியின் அபிஷேகம்’ (BAPTISM WITH THE HOLY GHOST) என்பவைகள் இவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. ஒரு பூரணப்பட்ட சபை, இம்மூன்றையும் பெற்று அவைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்பதே தேவனுடைய திட்டமாயிருந்தது. பெந்தேகோஸ்தே காலத்துச் சபையின் மக்கள் நீதிமான்களாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தனர். ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமாயின், அவன் முதலில் நீதிமானாக்கப்பட்டு, பின்னர் பரிசுத்தமாக்கப்பட வேண்டும். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற பிறகுதான், சபை உண்டாகிறது. சபையானது பரிசுத்த ஆவி வாசம் செய்யும் தேவனுடைய ஆலயமாகத் திகழ்கிறது, இயேசுவுக்குள்ளிருந்து, அவர் இவ்வுலகத்தில் மகத்தான கிரியைகளைச் செய்யக் காரணமாயிருந்த அதே ஆவி, பெந்தேகோஸ்தே காலத்தில் திரும்பி வந்து, சபையை நிரப்பிய காரணத்தால் அவர்களும் இயேசு செய்த கிரியைகளையே செய்தனர். சர்தை சபையில் இவ்விதமான கிரியைகள் காணப்படவில்லை. அவர்களிடம் தேவனுடைய வார்த்தைகளடங்கிய வேதாகமம் உண்டாயிருந் தாலும், அவ்வார்த்தைகளின் அர்த்தம் அவர்களுக்கு வெளிப்பட வில்லை. ஆகையால் ஆவியானவர், `நீ விழித்துக் கொண்டு, சாவுக்கேது வாயிருக் கிறவைகளை ஸ்திரப்படுத்து’ என்கிறார். தேவன் சபையைப் பெந்தேகோஸ்தே நிலைமைக்குத் திரும்பக் கொண்டுவர, சீர்திருத்தம் முதல் படியாயிருந்தது. அவர் வாக்குத் தத்தம் செய்த பிரகாரம், இருளின் காலத்தில் அடைந்த சாத்தானின் ஆழத்திலிருந்து அவர் சபையைத் தூக்கி எடுத்து, பெந்தேகோஸ்தே காலத்தில் விளங்கின தேவனுடைய ஆழத்திற்குக் கொண்டு செல்வார். `உன் கிரியைகள் தேவனுக்கு முன்பாக நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை’ என்று ஆவியானவர் கூறுகிறார். கிரியைகள் நிறைவடையாததன் காரணத்தினால், இது சீர்திருத்தக் காலம் என்று அழைக்கப்படுகிறது. சபை புதுப்பிக்கப்படும் போது (RESTORATION), கிரியைகள் நிறைவுள்ளவைகளாகக் காணப்படும். `நீதிமானாக்கப்படுதலின்’ (JUSTIFICATION) போதனையை லூதர் மக்களுக்கு எடுத்துரைத்து, இரட்சிப்பு கர்த்தருடையதென்பதை அறிவுறுத்தினார். அல்லாமலும், தேவனுடைய இராஜாதிபத்தியத்தையும் (SOVEREIGNTY), இரட்சிப்புக்கென்று தெரிந்து கொள்ளப்படுதலையும் (ELECTION) அவர் அருமையாகப் போதித்து, தேவனுடைய கிருபையே ஒருவனை இரட்சிப்புக்குள் கொண்டு வருகிறதென்பதைத் தெளிவாக விளக்கினார். அவர் சபையை குருக்களாட்சியிலிருந்து (ECCLECIASTICAL HIERARCHY) பிரித்து, விக்கிரகங்களை நொறுக்கினார். குருமார்களிடம் மக்கள் பாவ அறிக்கை செய்யும் வழக்கத்தை அவர் அகற்றி, போப்பின் ஆதிக்கத்தைக் கண்டித்தார். இவையெல்லாம் தேவனுடைய சமூகத்தில் உகந்தவைகளாய்க் காணப்பட்டன. ஆயினும், இவை நிகழும் 1500 வருடங்களுக்கு முன்பே கர்த்தர், `லூதரே, இவைகளையெல்லாம் நீ தொடங்கினாலும் உன் காலம் இக்கிரியைகளின் நிறைவைப் பெறாது. அது பிற்காலத்திற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கிறது’ என்பதாக யோவானை எழுதச் சொன்னார். நம்முடைய தேவனுக்குத் தொடக்கம் முதல் முடிவு வரை, எல்லாம் தெரியும். லூதர் இக்காலத்தின் தேவனுடைய தூதனாக இருந்தார். அவரிடமிருந்த குறைகளினிமித்தம், அவர் இப்பதவி ஏற்கத் தகுதியற்றவர் என்று சிலர் நினைக்கலாம், யோனா கர்த்தருடைய சமூகத்தினின்று விலகியோடின காரணத்தால் அவன் தீர்க்க தரிசியல்ல என்று நாம் கூற முடியாது. தேவன் அவருக்குச் சொந்தமானவர்களை அறிவார். யோனாவைத் தேவன் அவருடைய சித்தத்தின்படி நடத்தினது போன்று லூதரையும் இக்காலத்தில் வழிநடத்தி, சபைகளின் காலம் முடிவுபெறும் வரை அவருடைய தூதர்களின் மூலம் அவருடைய நோக்கம் நிறைவேறச் செய்வார். அப்படியெனில் இச்சபையின் காலம் சீர்திருத்தக் காலமாயிருக்க வேண்டுமென்று தேவனுடைய சித்தமாயிருந்தது. மேற்குபாகத்தில், ஒரு வேதாகமப் பள்ளியை நிறுவின ஒரு லூதரன் சகோதரன் என்னை விருத்திற்கழைத்து, பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு ஆசை கொண்டு, அதைப் பெறும் முறையை அறிவதற்கென, பெந்தேகோஸ்தேவைப் பற்றியும் ஆவிக்குரிய வரங்களைப் பற்றியும் புத்தகமாக எழுதியவரைக் கலிபோர்னியாவுக்குச் சென்று சந்தித்ததாகவும், அவர் புத்தகத்தைத் தொகுத்த போதிலும், ஆவியின் வரங்கள் அவரிடத்தில் உண்டாயிருக்கவில்லையென்று அறிந்து ஏமாற்றத்தோடு அவர் திரும்பி வந்தததாகவும், என்னுடைய ஊழியத்தில் ஆவியின் கிரியைகளுண்டு என்று கண்டதால், நான் பரிசுத்த ஆவியைக் குறித்து அவருக்குப் போதிக்க முடியுமென்று கருதி என்னை அழைத்ததாகவும் அவர் கூறினார். இந்தச் சகோதரனின் வேதாகமப் பள்ளிக்கூடம் ஒரு கிராமத்தில் வயல் வெளிகளின் மத்தியில் அமைந்திருந்தது. பரிசுத்த ஆவியைப் பெறுவதை விளக்க, வயலை நான் உதாரணமாக எடுத்துக் கொண்டு பின்வருமாறு கூறினேன். ஒருவன் நிலத்தை உழுது, பண்படுத்தி விதைகளை விதைத்தான். அவன் தினந்தோறும் வயலுக்குச் சென்று விதைகள் முளைத்தனவா என நோக்குவான். ஒருநாள் முனைகள் தோன்றியதைக் கண்டு அவன் `என்னுடைய கோதுமைப் பயிர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்’ என்று கூறினான். அப்பொழுது நான் அவரிடம் `அவனுக்கு உண்மையாகவே கோதுமை தானியங்கள் கிடைத்தனவா’ என்று கேட்டேன். அதற்கு அவர் ஒருவகையில் அவை அவனுக்குக் கிடைத்த மாதிரிதான்’ என்று பதிலுரைத்தார். நான் `ஆம், கோதுமை மணி இம்முளைகளின் மூலம் பின்பு தோன்றுவதால், அது முளைகளில் மறைந்து கிடக்கிறது’ (POTENTIAL) என்றேன். அவ்வாறே கடைசிச் சபையின் காலத்தில் கோதுமை தானியம் கிடைப்பதற்கென, இருளின் காலங்களில் விதைக்கப்பட்ட விதைகள் அழுகி, செத்து, சீர்திருத்தக் காலத்தில் முளைத்தெழும்பின. இம் முளைகள் லூதரன்களைக் குறிக்கின்றன. சிறிது காலம் கழித்து, தண்டுகள் தோன்றி, ஒருநாள் பட்டுக் குஞ்சம் (TASSEL OF SILK) அவைகளில் காணப்பட்டது. இது வெஸ்லியின் காலம். பட்டுக் குஞ்சம் முளைகளை நோக்கி, `லூதரன்களே, உங்களிடம் ஒன்றும் காணப்படவில்லை. எங்களைப் பாருங்கள் நாங்கள் அதிகமாக சுவிசேஷ ஊழியம் செய்கிறோம். எங்களுடைய காலம் சுவிசேஷ ஊழியத்தின் காலமாயிருக்கிறது’ என்றது. உண்மையிலேயே வெஸ்லியின் காலத்திலுண் டாயிருந்தவர்கள் வல்லமையுள்ள சுவிசேஷகர்களாக விளங்கினர். ஆனால் பட்டுக்குஞ்சம் மகரந்தத்தைப் போல்காற்றில் சிதறிப் போயிற்று. அடுத்தபடியாக, கோதுமை மணியைப் பாதுகாக்கும் பதர் (CHAFF) உண்டாயிற்று. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், லவோதிக்கேயா சபையின் ஆரம்பத்தில், பரிசுத்த ஆவி பெந்தேகோஸ்தே நாளில் விழுந்ததுபோல் இக்காலத்து மக்களின் மேலும் விழுந்ததாக எல்லாரும் எண்ணினர். இவர்கள் அன்னிய பாஷைகளைப் பேசி, பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளம் இதுவே என்றும் கூறிக்கொண்டனர். இதுதான் பதரின் காலம். அநேக முறை நான் கதிர்களைக் கொய்து கைகளால் தேய்க்கும்போது, பதர் மாத்திரம் பிரிந்து வந்ததைக் கண்டிருக்கிறேன். அதற்குள் கோதுமை மணியை நான் காணவில்லை. ஆயினும் வெளித்தோற்றத்திற்கு பதருக்குள் கோதுமை மணி இருந்தது போலவே காணப்பட்டது. இக்காலத்தில் உண்டாயிருந்த பெந்தேகோஸ்தே அசைவுக்கு இது சரியான எடுத்துக்காட்டு. இவர்கள் முன்பிருந்தவர்களைப் போன்று, ஒரு போதனையை (DOCTRINE) (அன்னிய பாஷை பேசுதல்) ஆதாரமாகக் கொண்டு தங்களுக்கு ஒரு ஸ்தானபத்தையுண்டு பண்ணி, இனி உண்டாகும் கோதுமை மணியைப் பாதுகாக்கும் பதரென்றும் உண்மையான கோதுமை மணியல்லவென்றும் தங்கள் செய்கையின் மூலம் நிரூபித்தனர். `கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படும்’ (மத் 24.24) பயங்கரமான பதரின் காலம் இதுவே இந்தப் `பெந்தேகோஸ்தே காலத்தில்’ உண்டான பதர்தான் உண்மையான கோதுமை மணி என்று மனிதன் விசுவாசித்தான். ஆனால் இது கோதுமை மணியாயிராமல், இனி வரப்போகும் கோதுமை மணிக்குச் சத்தையூட்டி, அதை வளரச் செய்து, அதைச் சுமந்தது. மணவாட்டி கோதுமை மணியாக விளங்கி எசேக்கியேல் 47.2-5-ல் சொல்லப்பட்டிருக்கும் வல்லமையைப் பெறுவாள். அப்பொழுது சபை பெந்தேகேஸ்தே காலத்துச் சபையின் நிலைக்குத் திரும்பும் (RESTORATION). `அவர் என்னை வடக்கு வாசல் வழியாய் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல் மட்டும் சுற்றி நடத்திக்கொண்டு போனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது. அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது. பின்னும் அவர் ஆயிர முழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக்கூடாத நதியாயிருந்தது; தண்ணீர் நீச்சாழமும் கடக்க முடியாத நதியுமாயிருந்தது. தேவனுடைய பிழையற்ற சித்தத்தின்படியும், திட்டத்தின்படியும் இவைகள் காலந்தோறும் சம்பவித்தன. `நீதிமானாக்கப்படுதல்’ (JUSTIFICATION) என்னும் போதனையை ஏற்றுக்கொண்டதன் மூலம் அக்காலத்து லூதரன்கள் மறைவாகப் (POTENTIALLY) பரிசுத்த ஆவியைப் பெற்றனர். அவ்விதம் `பரிசுத்தமாக்கப்படுதல்’ (SANCTIFICATION) என்னும் போதகத்தை அக்காலத்து மெதோடிஸ்டுகள் ஏற்றுக்கொண்டு, மறைவாகப் பரிசுத்த ஆவியைப் பெற்றனர். இக்காலத்தில் பரிசுத்த ஆவியின் மூலம் வேதத்தின் எல்லா சத்தியங்களும் சபைக்கு அளிக்கப்பட்டு, சபையானது பெந்தேகோஸ்தே சபையின் நிலைமையை அடைகிறது. `நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக் கிறவைகளை ஸ்திரப் படுத்து’, `விழித்துக்கொண்டு’ என்னும் பதம் உறங்காமல் கவனமாயிருகிறதைக் குறிக்கிறது. அவ்வாறு கவனமாயில்லாவிடில், ஆபத்தும் நஷ்டமும் விளையும். `ஸ்திரப்படுத்து’ என்னும் பதம் இப்போதுள்ளதை சாசுவதப்படுத்த முயற்சி செய் என்னும் அர்த்தத்தைக் கொடுக்கிறது. அச்சபையின் காலத்தில் சத்தியமானது கறைபடுத்தப்பட்டு, அழிவடையும் நிலையிலுள்ளது என்றும் அதைக் கவனமாய்ப் பாதுகாக்க வேண்டுமென்றும் ஆவியானவர் கட்டளையிடுகிறார். சிறை வைக்கப்பட்ட அடிமைகள் தப்பிவிட்டனர் என்று வைத்துக்கொள்வோம். (`சர்தை’ என்னும் பதம்’ தப்பிச் சென்றவர்கள்’ என்னும் அர்த்தத்தைப் பெறும்) அவர்கள் பின் தொடரப்பட்டும், பிடிபடவில்லை. என்றாலும் பின்தொடரப்பட்டதன் காரணமாக, விடுதலையினால் உண்டான எல்லா அனுகூலத்தையும் அவர்கள் இழந்துபோயினர். அதே போன்று சர்தை சபையின் மக்கள், ரோமன் சபையின் அடிமைத்தனத்தினின்று தப்பினர். இருப்பினும், விட்டுவந்த சபையின் ஆசாரங்களைக் கைப்பற்றியதால், முழுவதும் விடுதலையடைந்து, சுதந்திரம் பெற இவர்களால் கூடாமற் போயிற்று. ஆவியானவர் இவர்களைப் பார்த்து, `நீங்கள் விடுதலையடைந்தாலும் அடிமைப்பட்ட நிலையில்தான் இருக்கிறீர்கள். இன்னும் அதிகமாக அடிமைத் தனத்திற்குள்ளாகாதபடி உங்களைக் கவனமாய்க் காத்துக்கொள்ளுங்கள்; இல்லையேல் நீங்கள் அனுபவிக்கும் சிறிது சுதந்திரத்தையும் இழக்க நேரிடும். உங்களிடத்தில் காணப்படும் கொஞ்சம் சத்தியத்தையாகிலும் சாசுவதமாக ஸ்திரப்படுத்தி, அதை இழக்காதபடி பாருங்கள். நீங்கள் நிறைவேற்றாத காரியங்களைச் சிறிதேனும் நிறைவேற்ற இதுவே தருணம்’ என்று கூறினார். ஆவியானவர் சத்தத்திற்கு இவர்கள் செவிகொடுக்காமல், தங்களுடைய கிரியைகளின் மூலம் மறுபடியும் அடிமைத்தனத்திற்குள்ளானார்கள். ஆகையால் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கென மற்றவர்களை எழுப்பி, இதற்கு முன்னிருந்த ஸ்தாபனங்களை அவர் புறக்கணித்தது போன்று, லூதரன் ஸ்தாபனத்தையும் கடந்து போனார். தேவன் ஒருமுறை நிராகரித்த சபைகளை மறுபடியும் ஏற்றுக் கொள்வதில்லை. இவ்விதமாக, அவர் ஒவ்வொரு காலத்தையும் கடந்து, வருங்கால சபைகளுக்கு இன்னும் சிறிது அதிகமான சத்தியத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி கடைசிக் காலத்தின் சபைக்கு முழு சத்தியத்தையும் அளித்து, அதை பெந்தேகோஸ்தே சபையின் நிலைமைக்குத் திரும்பக் கொண்டு வருவார். நியாயத் தீர்ப்பு வெளி 3.3 `ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப் போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய்’. வியூயெஸ்ட் (WUEST) என்பவரின் மொழிபெயர்ப்பில் இச்சபையின் மக்கள் சத்தியத்தைத் தேவனிடமிருந்து சாசுவதமாகப் பெற்றனர் என்று எழுதப்பட்டிருக் கிறது. `விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்’, `இரட்சிப்பு கர்த்தருடையது’ என்னும் வேதத்தின் மூல சத்தியங்கள் (BASIC TRUTHS) இவர்களுக்கு அளிக்கப்பட்டன. வேத சத்தியங்களின் வாயிலாக ரோம சபையின் கொள்கை களையும், போப்பின் ஆதிக்கத்தையும் அகற்ற இவர்களால் முடிந்தது. சபையானது ஒருவனையும் இரட்சிக்க முடியாது என்னும் சத்தியத்தையும், திருவிருந்தின் கருத்தையும் இவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். உண்மையான தண்ணீர் ஞானஸ்நானத்தின் சத்தியமும் இவர்களுக்கு வெளிப்பட்டது; விக்கிரகங்களையும் இவர்கள் தங்களை விட்டு விலக்கினர். இக்காலத்தில் சத்தியத்தை அறிவுறுத்த மக்கள் எழுப்பப்பட்டது போன்று, வேறெந்த சபையின் காலத்திலும் உண்டாயிருக்கவில்லை. பழையவைகளனைத்தையும் புதுப்பித்து, அல்லது எல்லாவற்றையும் புதிதாய் தொடங்கி, கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமுமாகத் தேவன் வழிநடத்தத் தங்களைக் கர்த்தரின் சமூகத்தில் முழுவதும் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். என்றாலும், இவர்கள் கிரேக்கரைப் போன்று மனமாற்றமின்றி, அருமையான சத்தியங்களைத் தர்க்கித்து, தங்களுக்கென தத்துவங்களையும் போதகங்களையும் உண்டாக்கிக் கொண்டனரேயன்றி, இவைகளை நடை முறையில் கொண்டுவரவில்லை. இச்சத்தியங்கள் தேவனால் அருளப்பட்டவை என்று அவர்கள் உணர்ந்திருப்பார்களாயின், அவைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். சத்தியத்துக்குக் கீழ்ப்படியாத மக்களைத் தேவன் நியாயந் தீர்ப்பார். பரிசுத்த ஆலயத்தின் காவலர்கள் உறங்குவதாகக் கண்டால், அவர்கள் அடிக்கப்பட்டு, அவர்களுடைய அங்கிகள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாயிருக்கிறது. அப்படியெனில், இக்காலத்தில் கொடுக்கப்பட்ட சத்தியத்தைச் சரிவர பாதுகாக்காதவர்களுக்கு எவ்வித தண்டனை அளிக்கப்பட வேண்டும்? `நான் திருடனைப் போல் உன்மேல் வருவேன்’. பழைய சர்தைபட்டினத்தின் ஜனத்தொகை, மலைகளில் வாழ்ந்த கொள்ளைக்காரக் கூட்டத்தினால் அடிக்கடி துன்புறுத்தப்பட்டதால், ஆவியானவர் இவ்வாறு கூறுவதன் அர்த்தத்தைத் தங்கள் அனுபவத்தின் காரணத்தால் நன்கு அறிவர். கொள்ளைக்காரருக்குப் பயந்து இம்மக்கள் அநேக முறை கண்விழித்து, வீடுகளைக் காத்ததுண்டு, அதுபோன்று விழிப்பும், ஆயத்தமும் மாத்திரமே கர்த்தரின் வருகைக்கு நாம் எதிர்நோக்கியிருக்கச் செய்யும். நோவாவின் காலத்தில் எதிர்பாராத விதமாய் தேவனுடைய வருகை இருந்தது போன்று, அவருடைய இரண்டாவது வருகையும் உண்டாகுமென்று இக்காலத்துக் கள்ளச் சபையை அவர் எச்சரிக்கிறார். பேழைக்குள்ளிருந்த எட்டுபேர் மாத்திரமே வெள்ளம் வருவதையறிந்து அதற்கென்று தங்களை ஆயத்தப்படுத்தி, அழிவினின்று காத்துக்கொண்டனர். ஆனால் தேவனற்ற அனைவரும் நிர்மூலமானார்கள். அதுபோன்று கள்ளச் சபைகள் தினந்தோறும் நீதிமான்களோடு தொடர்பு கொண்டு சத்தியத்தைக் கேட்டிருந்தும், அதைப் புறக்கணித்தன. மாம்சத்துக்குரிய இவர்கள், ஆவிக்குரிய காலங்களில் சிரத்தையற்று, உலகக் காரியங்களில் ஈடுபட்டு, தேவனுடைய வருகையை அறியாமலும் அதற்கென்று தங்களை ஆயத்தப்படுத்தாமலுமிருக்கிற இக்காலத்துப் பெயர்க் கிறிஸ்தவர்களைப் போன்றிருந்தனர். வாழ்த்துதல் வெளி 3.4 `ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையில் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண் வஸ்திரந்தரித்து என்னோடே கூட நடப்பார்கள்’. இக்காலத்துச் சபை, நீதிமான்களையும் அவிசுவாசிகளையும் ஒருங்கே கொண்டு, தேவனுடைய சுயாதீன (SOVERIGN) நோக்கத்தின்படி, ஒரே சபையாகக் கருதப்படுகிறது. அவிசுவாசிகளை நோக்கி, அவர், `உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ செத்தவனாயிருக்கிறாய்.... உன் கிரியைகள் நிறைவுள்ள வைகளாக நான் காணவில்லை’ என்றும்,அச்சபையின் நீதிமான்களைக் குறித்து, `தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண் வஸ்திரந்தரிப்பார்கள்’ என்றும் கூறுகிறார் ஒரு சிலர் மாத்திரமே தேவனுடைய உண்மையான பரிசுத்தவான்களாயிருந்து, தேவனைப் பிரியப்படுத் தினார்கள். அவர்களுடைய வஸ்திரங்கள் வெண்மையாயிருந்தன. அக்காலத்து வஸ்திரங்கள் தரைமட்டும் நீளமாயிருந்தபடியால், அவைகள் அழுக்காகாதபடிக்கு கவனமாய் ஜனங்கள் நடக்கவேண்டும். அவ்வாறே இச்சபையின் பரிசுத்தவான்கள் உலகத்தினால் கறைபடாமல் கவனமாய் நடந்தனர். `தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லா தவர்களுமாயிருப்பதற்கு கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்’ (எபே 1.4) என்ற வேதவாக்கியத்தின்படி அவர்கள் பரிசுத்தமுள்ள வர்களாயும், குற்றமற்றவர்களுமாயும் நடந்து தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினர். `சிலபேர்’ மாத்திரமே இச்சபையில் தெரிந்துகொள்ளப் பட்டவர்களென்பதை இவ்வசனத்தின் மூலம் நாம் அறிகிறோம். அப்படியெனில் இச்சபையின் நிலையைச் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். அது குழப்பமுற்று, நிறைவற்று, பிளவுபட்டு, பலவீனமுள்ளதாய் மரிக்குந்தருவாயில் இருந்தது. தேவன் இச்சபையை முழுவதுமாக கடிந்து கொள்ளுகிறார். மாம்ச சிந்தை பொருந்திய கிறிஸ்தவச் சரித்திரக்காரர் சித்திரிப்பது போன்று இது ஒரு மகத்தான காலமாக விளங்கவில்லை. மரமாகிய இச்சபை இலையற்று, கனியற்றிருந்தது. காணப்பட்ட ஒருசில கனிகள் பூச்சரிக்கப்பட்டு, வேகமாகத் தரையில் விழுந்தன. ஆனால் அம்மரத்தின் உச்சியில், நீதியின் சூரிய வெளிச்சத்தில் சில நல்ல கனிகள் (சிலபேர்) உண்டாயிருந்தன. இவர்கள் பரிபூரணமடைந்து, அவருக்குள் பிறந்து, அவரால் நிறையப்பட்டு, தேவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டனர். `அவர்கள் என்னோடே கூட நடப்பார்கள்’ உத்தமமாய் நடப்பவர்களுக்குக் கர்த்தர் இவ்வாக்குத்தத்தத்தை அருளுகிறார். இது அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் பிறப்புரிமைகளில் ஒன்றாகும். இவ்வுலகத்தில் ஏற்படும் கஷ்டங்களிலும் ஆபத்துகளிலும் அவரோடுகூட நடந்து அவருக்கு மகிமையாக இவர்கள் ஜீவித்ததால்,கர்த்தர் அவர்களுக்குத் தகுந்த பலனையளிக்கிறார். தேவன் நம்முடைய அன்பின் ஊழியத்தை ஒருக்காலும் மறக்காமல்,அதற்கேற்ற பலனைக் கொடுக்கிறார். இச்சபையின் பரிசுத்தவான்கள் உலகத்தின் கிரியைகளில் பங்கு கொள்ளாமலும், கள்ளச் சபைகளின் போதனைகளை ஏற்காமலும் இருந்தனர். அக்காலத்தில் பிரசித்தி பெற்றவர்கள், அரசாங்கத்தைப் பிரியப்படுத்த எண்ணி, ஆவிக்குரியவைகளை அறவே அகற்றி, அரசியலில் ஈடுபட்டு, உலக வழிகளில் சென்றுகொண்டிருந்தபோது, இந்த ஒரு சிலர் மாத்திரம் தேவனுடைய வார்த்தைக்கு உறுதியாய் நின்று அவரை மகிமைப்படுத்தினர். ஆகையால் கர்த்தர் இவர்களை மகிமைப்படுத்துவார். இவர்கள் வெண் வஸ்திர தரித்தவர்களாய் அவரோடுகூட நடப்பார்கள். இவ்வுலகத்தில் அவர்கள் கிறிஸ்துவோடு தங்களை ஒன்றுபடுத்தினபடியால், பரம எருசலேமில் கர்த்தர் அவர்களைத் தம்மோடு ஒன்றுபடுத்துவார். கர்த்தருடைய தாழ்மை எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருவிக்கிறது. அவர் சபையின் குருமார்கள் செய்வது போன்று வேறு நிறமுள்ள வஸ்திரத்தை உடுப்பதில்லை. பரிசுத்தவான்கள் அவரைப் போலவே இருப்பார்கள். யோவான் கூறுவது போன்று அவர் இருக்கிற வண்ணமாகவே அவர்கள் அவரைத் தரிசிப்பார்கள். `அவர்கள் பாத்திரவான்கள், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய கையிலிருந்த புத்தகத்தை வாங்கப் பாத்திரவானாக எண்ணப்பட்டவரும், நியாயத் தீர்ப்பு செய்யத் தகுதியுள்ளவருமான இயேசுகிறிஸ்து, இப்பரிசுத்த வான்களைப் `பாத்திரவான்கள்’ என்று அழைக்கிறார். தேவனுடைய நீதியின் வெளிச்சத்தில், இயேசுவின் இனிய சத்தத்தைக் கேளுங்கள். `இவர்கள் என்னுடையவர்கள்; இவர்கள் நீதிமான்கள்; இவர்கள் பாத்திரவான்கள் அவர்கள் என்னோடுகூட வெண் வஸ்திரந்தரித்தவர்களாய் நடப்பார்கள்’ என்று அவர் கூறுகிறார். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு அளிக்கப்படும் வாக்குத்தத்தம் வெளி 3.5 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண் வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப் போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். `ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண் வஸ்திரம் தரிக்கப்படும்’ தங்களுடைய வஸ்திரங்களைக் கறைபடுத்தாத சில பரிசுத்தவான்களைக் குறித்து நான்காம் வசனத்தில் சொல்லப்பட்டதே இங்குத் திரும்பவும் கூறப்படுகிறது. `உன் வஸ்திரங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்’ (KEEP YOUR SKIRTS CLEAN) என்னும் ஒரு பழமொழியுண்டு. அதற்கு அர்த்தம் `சந்தேகமுள்ள காரியங்களில் தலையிடாதே’ என்பதே. இவைகளில் தலையிடவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தாலும் அல்லது மற்றவர்கள் இவைகளில் சிக்கவைக்க முயற்சித்தாலும், இவைகளைவிட்டு விலகி நேரான பாதையில் செல்ல வேண்டும் என்று இப்பழமொழி போதிக்கிறது. இந்த அறிவுரையை ஏற்றுக்கொள்பவர் களுக்குத் தேவன் சன்மானம் அளிப்பார். அதாவது, அவர் வெண்வஸ்திரம் தரித்திருப்பது போன்று அவர்களும் வெண்வஸ்திரம் தரிப்பார்கள். மறுரூபமலையில் அவர் வஸ்திரம் வெண்மையாகப் பிரகாசித்ததைப் பேதுரு, யாக்கோபு, யோவான் கண்டனர். பரிசுத்தவான்களும் அவ்வாறே பிரகாசமான வெண் வஸ்திரம் தரிப்பார்கள். நாம் ஜீவிக்கும் கடைசி காலத்தில் சபைகளெல்லாம் ஒன்றுசேரும். இப்பொழுது அவர்கள் உலக அரசியலைக் (WORLD POLITICS) கைப்பற்றி அதை ஆளுகின்றனர். கூடிய சீக்கிரத்தில் உலக வருமானத்தின் மேல் அவர்கள் ஆதிக்கங் கொள்வர். உலக சபைகளின் ஐக்கியத்தில் (WORLD COUNCIL OF CHURCHES) சேராவிடில், நீங்கள் கொள்ளவோ விற்கவோ முடியாது. எல்லாவற்றையும் நீங்கள் இழக்க நேரிடும், கர்த்தருக்கு உண்மையாய் ஜீவித்து, உலக சபைகளின் வழிகளில் பங்கு கொள்ளாமல், தங்களுடைய வஸ்திரங்களைச் சுத்தமாய் வைத்திருப்பவர்களிடமிருந்து சகலமும் பறிக்கப்படும். அவர்கள் அப்பொழுது சோர்வுற்று, அவர்களோடு சேர்ந்து விடவேண்டுமென்ற எண்ண முண்டாகும். அந்திக் கிறிஸ்துவின் மார்க்கத்திலிருந்து கொண்டே தேவனைச் சேவிக்கலாமென்று போதகர்கள் சாக்கு போக்கு சொல்லி, அதோடு சேருவார்கள். மக்களும் இந்த கள்ள மேய்ப்பர்களைப் பின்பற்றி, அடிக்கப்படும்படி கொண்டு செல்லப்படுவர். நியாந்தீர்ப்பில் இவர்களெல்லாரும் நிர்வாணிகளாகக் காணப்படுவர். அவர்களுக்கு வெண்வஸ்திரம் கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் கர்த்தரோடு நடப்பதில்லை. அழுக்கு படிந்த இவ்வுலகத்தின் வஸ்திரத்தை அணிந்து கொண்டு, பிசாசோடு கைகோர்த்து, அதே சமயத்தில் தேவனோடு சஞ்சரிக்க முடியும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. உறக்கத்தினின்று எழுந்து, `என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய (ஸ்தாபன மார்க்கங்களின்) பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப் படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்’ (வெளி 18.4) என்னும் தேவனுடைய வார்த்தையைக் கேட்க சமயம் வந்துவிட்டது. தேவன் இப்பொழுது பேசுகிறார். வாதையை அகற்றுவது போல், இவ்வுலக மார்க்கங்களை அகற்றுங்கள். இவ்வுலகத்தோடு ஒத்து நடப்பதை விட்டு, மனந்திரும்பி, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, உங்கள் வஸ்திரங்களைத் தூய்மையாக்குங்கள். இதை இன்றே செய்யுங்கள். நாளைக்கென்று ஒத்திப் போட்டால், ஒரு வேளை தாமதமாகிவிடும். `ஜெயங்கொள்ளுகிறவனெவனோ, ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப் போடுவதில்லை’ வேதத்தில் காணப்படும் அதிகக் கடினமான பாகங்களில் இது ஒன்றாகும். ஆர்மினியன்களும் (ARMENIANS), கால்வினிஸ்டுகளும் (CALVINISTS), இவ்வசனத்தின் ஆழமான அர்த்தத்தை அறியாதவர்களாய், அவர்களுடைய போதகத்தை வலியுறுத்த இவ்வசனத்திற்கு வித்தியாசமான அர்த்தம் கொடுக்கின்றனர். `பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின் படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்திய ஜீவனை அடைவதும் நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக் குறித்து முறுமுறுத்து; இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள், இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக; உங்களுக்குள்ளே முறுமுறுக்க வேண்டாம். என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்’ (யோவான் 6.37-44). இவ்விதம் கூறி, இயேசு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என இதன் மூலம் குறிப்பிட்டார். இந்த உபதேசத்தில் விசுவாசம் கொள்ளாத ஆர்மினியர்கள், எல்லாரும் இரட்சிக்கப்பட்டு நித்திய ஜீவனையடைவார்களென்றும், ஆகையால் யாருடைய பெயரையும் ஜீவபுத்தகத்தி லிருந்து அவர் கிறுக்கிப் போடுவதில்லையென்று மேற்கூறிய வசனம் தெளிவாக விளங்குகிறது என்று கூறுகின்றனர். தேவனுக்கு ஒரு சுயாதீன நோக்கம் (SOVERIGN PURPOSE) கிடையாது. எல்லா மனிதரும் அவரின் நல்ஈவுகளையும் நித்திய ஜீவனையும் பெற்று, அதைக் கொண்டு அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்று காண்பதே தேவனுடைய வாஞ்சையும், சித்தமுமாயிருக்கிறதென்று அவர்கள் எண்ணுகின்றனர். கால்வினிஸ்டுகள் வேறுவிதமாக இவ்வசனத்தை விளக்குகின்றனர். கஷ்டப்படும் பரிசுத்தவான்களுக்கு இவ்வசனம் ஆறுதலளித்து, அவர்கள் எவ்வளவு பயங்கரமாகத் துன்புறுத்தப்பட்டாலும், இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசித்து ஜெயங்கொண்டதால், அவர்கள் நாமங்கள் ஜீவபுத்தகத்திலிருந்து கிறுக்கப்படுவதில்லை என்று இது கூறுகிறது என அவர்கள் நம்புகின்றனர். ஜீவபுஸ்தகம்` என்பதும் `ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகம்’ என்பதும் வித்தியாசமான புத்தகங்களென்று வேறு சிலர் கூறுகின்றனர். ஒரு வசனத்தை ஆழமாக சிந்திக்காவிடில், அது வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கும். ஒருவன் மறுபடியும் பிறக்கும்போது, கர்த்தர் அவனுடைய பெயரை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதுகிறாரென்றும், ஏதாவது காரணத்தைக் கொண்டு அந்தப் பெயர் அகற்றப்படுமாயின், அது எழுதப் பட்டிருந்த இடம் காலியாக விடப்படுமென்றும் அநேகர் விசுவாசிப்பதுண்டு. இக்கருத்து தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்டது. தேவன் தற்பொழுது பெயர்களைத் தொடர்ச்சியாக புத்தகத்தில் எழுதிக் கொண்டு வருகிறார் என்பதற்கு வேதத்திலிருந்து ஒரு சான்றுமில்லை. இவைகளனைத்தும் உலகத்தோற்றத்திற்கு முன்பு எழுதப்பட்டன என்பதை இன்னும் சிறிது நேரத்தில் காண்பிப்போம். அதுவுமன்றி, நித்திய ஜீவனைப் பெறுவதற்கென அளிக்கப்பட்ட தருணத்தை ஆதாயப்படுத்திக் கொண்ட வர்களின் பெயர்கள் மாத்திரம் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன; அவ்வாறு செய்ய மறுத்தவர்களின் பெயர் இப்புஸ்தகத்தில் இடம் பெறவில்லை என்று நீங்கள் தவறாக எண்ணவேண்டாம். மறுபடியும் பிறவாத கணக்கற்றவர்களும் நித்திய ஜீவனில் பிரவேசிப்பார்கள் என்று வேதத்தின் மூலம் நான் நிரூபிக்க முடியும். அல்லாமலும், உலகத்தோற்றத்திற்கு முன்னால் ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்ட ஒரு சாராருண்டு; அவர்கள் பெயர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் அகற்றபப்படுவதில்லை என்று நாம் காண்பிப்போம். மேலும் உலகத் தோற்றத்திற்கு முன்னால் ஜீவபுத்தகத்தில் பெயரெழுதப்பட்ட வேறொரு சாராருண்டு; அவர்கள் பெயர்கள் அப்புஸ்தகத்திலிருந்து அகற்றப்படும் என்பதையும் காண்பிக்க முடியும். `ஜீவபுஸ்தகம்’ என்பதும் `ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகம்’ என்பதும் ஒரே புத்தகமல்ல என்று சிலர் கூறுவதற்கு ஆதாரமில்லை. இவையிரண்டும் ஒரே புத்தகத்தைத்தான் குறிக்கின்றன. ஜீவபுஸ்தகம் `ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகம்’. `கர்த்தருடைய புஸ்தகம்’ அல்லது `ஜீவிக்கிறவர்களின் புஸ்தகம்’ என்னும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படலாம். பெயர்கள் மாத்திரமே இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. `உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்’ (வெளி 13.8). `மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத் தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்’ (வெளி 20. 12-15). வேதம் அநேக புத்தகங்களைக் குறிப்பிட்டாலும், ஒரு புத்தகத்தை மாத்திரம் பெயர்களடங்கிய புத்தகமாக எப்பொழுதும் குறிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷத்தில், இது `ஆட்டுக்குட்டியின் ஜீவபுஸ்தகம்’ அல்லது `ஜீவபுஸ்தகம்’ என்று அழைக்கப்படுகிறது. ஜீவபுஸ்தகம் இப்பொழுது எங்கு வைக்கப்பட்டிருக்கிறது? `பின்பு அந்த எழுபது பேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து. ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி, சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன். ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து. பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக் கொடுக்கப் பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும் குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி. நீங்கள் காண்கின்றவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கின்றவைகளைக் காணவும், நீங்கள் கேட்கின்றவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்’ (லூக்கா 10.17-24). ஜீவபுஸ்தகம் பரலோகத்தில் வைக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பின்போது காணப்படும். சீஷர்களின் நாமங்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதாக இயேசு கூறுகிறார். அவைகள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இயேசு எழுபது சீஷர்களுக்கு மாத்திரமல்ல (17ம் வசனம்), பன்னிருவருக்கும் (23ம் வசனம்) இவைகளைக் கூறுகிறார் என்பதைக் கவனிக்கவும். பிசாசுகள் இயேசுவின் நாமத்தில் அவர்களுக்குக் கீழ்ப்படிகின்றன என்று அவர்கள் சந்தோஷங் கொண்டிருந்தனர். அதற்கு இயேசு `ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் (ஜீவபுஸ்தகத்தில்) சந்தோஷப்படுங்கள்’ என்று பதிலுரைத்தார். யூதாஸ், பன்னிருவரில் ஒருவனாக இயேசுவின் நாமத்தில் பிசாசுகளைத் துரத்தினான். அவன் பிசாசென்றும், கேட்டின் மகனென்றும் நாமறிவோம். `இயேசு அவர்களை நோக்கி, பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொரு வனாயிருந்தும், தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகிறவனாயிருந்தபடியால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்’ (யோவான் 6.70-71). `நான் அவர்களுடனே கூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக் கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டு வந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப் போனானேயல்லாமல் அவர்களில் ஒருவனும் கெட்டுப் போகவில்லை’ (யோவான் 17.12) `இயேசு அவனை நோக்கி. முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவ வேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள். ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்த படியினால் நீங்களெல்லாரும் சுத்தமல்ல என்றார். உங்களெல்லாரையும் குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்து கொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிக்காலைத் தூக்கினான்’ (யோவான் 13. 10-11, 18). யூதாஸை இயேசு தெரிந்து கொண்டாலும் (யோவான் 13.18), அவன் சுத்தமாயில்லை (யோவான் 13. 10-11). பிதாவானவர் யூதாஸை இயேசுவுக்குத் தந்தார் (யோவான் 17.12). (குறிப்பு. மோசே, பார்வோன், யாக்கோபு, ஏசா இவர்களைத் தேவன் தெரிந்து கொண்ட போதிலும், பார்வோனும் ஏசாவும் கோபாக்கினைக்கென்று முன்னரே நியமிக்கப்பட்டனர். மோசேயும் யாக்கோபும் முடிவில் மகிமையடைந்தனர். அதுபோன்று யூதாஸ் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு, அழிவுக்கென நியமிக்கப்பட்டான். 1 பேதுரு 2.8 `அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர் களாயிருந்து இடறுகிறார்கள்; (அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்) யூதாஸ் பன்னிருவரில் ஒருவனாக எண்ணப்பட்டு பெந்தேகோஸ்தே காலத்திற்கு முன்னிருந்த ஊழியத்தில் பங்கு கொண்டான். `சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக் குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது. அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்கு பெற்றவனாயிருந்தான்’ (அப் 1.16-17). அவன் செய்த ஊழியம், மற்ற சீஷர்களின் ஊழியத்தைக் காட்டிலும் தாழ்ந்ததல்ல; அல்லது இது சீஷர்களின் ஊழியத்தின் மத்தியில் ஏற்பட்ட பிசாசின் ஊழியமுமல்ல. `யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்து போன இந்த ஊழியத்திலும்’ (அப் 1.24) என்று வேதம் கூறுகிறது. பிசாசான யூதாஸ், தேவனால் அருளப்பட்ட பரிசுத்த ஆவியின் ஊழியத்தையிழந்து, தற்கொலை செய்து கொண்டு, தனக்குரிய இடத்திற்குச் சென்றான். அவனுடைய பெயரும் ஜீவபுஸ்தகத்தில் உண்டாயிருந்து, பின்னர் அகற்றப்பட்டது. ஜீவ புஸ்தகத்திலிருந்து பெயர்கள் அகற்றப்பட்ட சம்பவம் ஏதாயினும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றதா என்று ஆராய்வோம். யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களின் பெயர்கள் பின்வருமாறு (ஆதி 35. 22 - 26). ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், யோசேப்பு, பென்யமீன்; தாண், நப்தலி; காத், ஆசேர். இந்த பன்னிரண்டு குமாரர்களின் சந்ததிகளும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களாயின. யோசேப்பின் இரண்டு குமாரர்களான எப்பிராயீம், மனாசே என்பவர்களின் பெயர்களில் சந்ததிகளுண்டாகி, மொத்தம் பதின்மூன்று கோந்திரங்கள் இஸ்ரவேலில் உண்டாக வேண்டுமென்று தேவனுடைய நோக்கமாயிருந்தது. அவைகளில் லேவி கோத்திரத்தார் தேவனுடைய ஆசாரிய ஊழியத்துக்கென்று பிரித்தெடுக்கப்பட்டனர். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வெளிவந்த பிறகு, வனாந்தரத்தில் ஆசாரிப்புக் கூடாரத்தை அமைக்க தேவன் கட்டளையிட்டார். அப்பொழுது லேவி கோத்திரத்தார் ரூபன், சிமியோன், இசக்கார், யூதா, செபுலோன், பென்யமீன், தாண், நப்தலி, காத், ஆசேர், எப்பிராயீம், மனாசே என்னும் பன்னிரண்டு கோத்திரங்களுக்குப் பணிவிடை செய்தனர். இக்கோத்திரங்களின் பெயர் வரிசை இவ்விதமாக எண்ணாகமம் 10. 11-28-ல் குறிக்கப்பட்டிருக்கிறது. யோசேப்பு, லேவி இவர்களின் பெயர் காணப்படவில்லை. ஆனால் `இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்’ (வெளி 7.4), யூதா, ரூபன், காத், ஆசேர், நப்தலி, மனாசே, சிமியோன், லேவி, இசக்கார், செபுலோன், யோசேப்பு, பென்யமீன் கோத்திரங்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டனர் என்று வெளிப்படுத்தின விசேஷம் உரைக்கிறது (வெளி 7. 5-8). எண்ணாகமத்தில் கூறப்பட்ட பெயர் வரிசையிலிருந்து தாண், எப்பிராயீம் கோத்திரங்கள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக லேவி, யோசேப்பு கோத்திரங்கள் புகுத்தப்பட்டன. தாண், எப்பிராயீம் கோத்திரங்கள் எக்காரணத்தைக் கொண்டு அகற்றப்பட்டன? அதற்குரிய பதில் பின்வரும் வசனங்களில் அடங்கியிருக்கிறது. `நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்து வந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்து வந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்தி லிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள். ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திர மாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள். அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்றுதன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார். அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன் மேல் புகையும்; இந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன் மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தில் கீழ் இராதபடிக்குக் குலைத்துப் போடுவார்’ (உபா 29. 16-20). விக்கிரகாராதனை அல்லது ஆவிக்குரிய விபசாரத்தில் ஈடுபடுபவர் களுக்குச் சாபம் இதன் மூலம் அளிக்கப்படுகிறது. அப்படியெனில் விக்கிரங்களை ஆராதித்த கோத்திரங்களின் பெயர்கள் இக்காரணத்தினால் அகற்றப்பட்டன. `யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம் பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக்கட்டினான். யெரொபெயாம்; இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்சவசமாய்த் திரும்புகிறதாயிருக்கும். இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய்விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்து கொண்டிருந்தான். ஆகையால் ராஜாவானவன் யோசனை பண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக் குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து; நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண் மட்டும் போவார்கள்’ (I ராஜா. 12. 25 - 30). `எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக் கிறான், அவனைப் போகவிடு’ (ஓசியா 4.17). விக்கிரங்களை வணங்கும் கோத்திரத்தின் பெயரை வானத்தின் கீழ் இராதபடிக்குக் கர்த்தர் குலைத்துப் போடுவார் (உபா 29.20). இஸ்ரவேல் ஜனங்கள் இப்பொழுது பாலஸ்தீனாவில் சேர்ந்துவிட்டார்கள். அவர்களில் 1,44,000 பேரைக் கர்த்தர் முத்தரிப்பார். தாண், எப்பிராயீம் கோத்திரங்களைக் கர்த்தர் அவர் வாக்கின்படி குலைத்துப் போட்டதால், அவைகளைச் சேர்ந்தவர்கள், முத்தரிக்கப்பட்ட தொகையில் காணப்படுவதில்லை. ‘முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடையசகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர், யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம் ரூபன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம், காத் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ஆசேர் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம், மனாசே கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம், (வெளி 7. 4-8). (தாண், எப்பிராயீம் பெயர்கள் காணப்படவில்லை என்பதைக் கவனிக்கவும்). இதோடு பின்வரும் வசனத்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, இந்த 1,44,000) இஸ்ரவேலர் யாக்கோபின் இக்கட்டுக் காலத்தில் (அதாவது வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்ட ஆறாவது முத்திரையின் காலத்தில்) முத்தரிக்கப்படுவார்கள் என்று தெளிவாகிறது. ‘உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்’ (தானி 12.1). இந்த உபத்திரவக் காலத்திற்குப் பின்பு, ஆயிர வருஷ அரசாட்சியில் இஸ்ரவேல் கோத்திரங்கள், எசேக்கியல் தீர்க்கதரிசியால் உரைத்தபடி. மறுபடியும் தேவனுடைய வரிசைக்கிரமத்தில் வரும். எப்பிராயீமும், தாணும் விக்கிரகங்களை ஆராதித்தபடியால், அக்கோத்திரங்கள் இனி ஒருபோதும் அறியப்படுவதில்லை. எருசலேமின் அழிவின்போது, இஸ்ரவேல் கோத்திரங்களின் குறிப்பும் புத்தகங்களும் (RECORDS) அழிக்கப்பட்டதால், ஒவ்வொரு இஸ்ரவேலனும் அவனுக்குரிய கோத்திரத்தை அறியமுடியாமற் போய்விட்டது. ஆனால் தேவன் இஸ்ரவேலரில் ஒவ்வொருவனுடைய கோத்திரத்தையும் அறிவார். ஆகையால் பாலஸ்தீனாவில் கூடினவர்களில் முத்திரையிடப்பட்ட 1,44,000 பேர்களில் தாண், எம்பிராயீம் கோத்திரத்தார் உண்டாவதில்லை. எசேக்கியல் தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட கோத்திரங்கள் பின்வருமாறு; ‘வடமுனை துவக்கி ஆமாத்துக்குப் போகிற எத்லோன் வழியின் ஒரத்துக்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் தாணுக்கு ஒரு பங்கும், தாணின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் ஆசேருக்கு ஒரு பங்கும், ஆசேரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் நப்தலிக்கு ஒரு பங்கும், நப்தலியின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் மனாசேக்கு ஒரு பங்கும், மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும், எப்பிராயீமின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் ரூபனுக்கு ஒரு பங்கும், ரூபனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் யூதாவுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக, அதிபதியினுடையதற்கு நடுவேயிருக்கும் லேவியரின் காணிதுவக்கியும் நகரத்தின் காணிதுவக்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவேயிருக்கிறது அதிபதியினுடையது (PRINCE). மற்றக்கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன. கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் பென்யமீனுக்கு ஒரு பங்கும், பென்யமீன் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் சிமியோனுக்கு ஒரு பங்கும், சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இசக்காருக்கு ஒரு பங்கும், இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் செபுலோனுக்கு ஒரு பங்கும், செபுலோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருப்பதாக’ (எசேக் 48 : 1-7, 22 - 27). ஜீவபுத்தகத்திலிருந்து பெயர் அழிக்கப்பட்டதற்கு இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரமே ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. தேவன், இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்து, கடைசிவரை அவர்கள் அவரைச் சேவிக்க, கானான் தேசத்திற்குள் கொண்டு செல்ல எத்தனித்தார். எகிப்தைவிட்டு இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் கீழாக வெளிவந்தனர்; எல்லாரும் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து ஞானஸ்நானம் பெற்றனர்; எல்லாரும் மகத்தான அற்புதங்களால் அனுகூலமடைந்தனர்; எல்லாரும் மன்னாவைப் புசித்தனர்; எல்லாரும் கன்மலையின் தண்ணீரைக் குடித்தனர். வெளித்தோற்றமுள்ள ஆசிர்வாதங்களிலும் அற்புதங்களிலும் எல்லாரும் சரிசமமாகப் பங்குகொண்டனர். மோவாபியரின் எல்லைக்குள் அவர்கள் வந்தபோது பெரும்பாலோர் பாகால்பேயோரின் பண்டிகையில் கலந்துகொண்டு தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்ததினிமித்தம் மாண்டுபோயினர்; அவர்கள் சவங்கள் வனாந்தரங்களில் விழுந்து கிடந்தன. தேவனுடைய நல்வார்த்தையை ருசிபார்த்து, அதை மறுதலிக்கிறவர்களுக்கு இரட்சிப்பில்லை என்று எபிரேயர் 6.1-9) கூறுகிறது, இதற்குரிய விளக்கத்தை ‘பெர்கமு சபையின் காலம்’ அத்தியாயத்தில் நான் கொடுத்தேன். தேவவசனங்களில் சிலவற்றை மாத்திரம் நாம் ஏற்று மற்றவைகளை விட்டுவிடமுடியாது, வேதாகமம் போதிக்கும் அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய விஷயங்களில் முற்றிலுமாக ஈடுபடுபவராய்க் காணப்படும் அநேகருண்டு. யூதாஸைக் குறித்து இயேசுவைத் தவிர வேறு யாரும் அறியவில்லை. ஒருநாளில் இஸ்ரவேலர் பாகால்பேயோரில் செய்ததை யூதாஸ் செய்தான். அவன் பணத்திற்கும் அரசியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, இயேசுவுக்கும், தேவனுடைய வார்த்தைக்கும் விரோதமாயிருந்த ஸ்தாபனத்தோடு சேர்ந்தான், கடைசியில் ஏமாற்றமடைந்து அவன் தற்கொலை செய்துகொண்டான். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட மற்ற பதினொன்று சீஷர்களும் அவ்வாறு செய்யவில்லை. யூதாஸ் இயேசுவை மறுதளித்தபோது, அவனுடைய பேர் ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. (வெளி 22.19). இயேசு கிறிஸ்துவின் காலத்தில், உண்மையான தேவனை வழிபட்ட யூதமார்க்கத்தவரின் பெயர்களும் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் அவரை உண்மையோடு (அதாவது தேவனுடைய வார்த்தையின்படி) தொழுதுகொள்ளவில்லை. ஆகையால் இவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்திலிருந்து அழிக்கப்பட்டன. இவர்கள் இயேசுகிறிஸ்துவை பகிரங்கமாக வெறுத்ததால் சத்தியத்தை அறியக்கூடாமற் போயிற்று. ஆனால் யூதாஸோ, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, சத்தியத்தில் போதிக்கப்பட்டவன். எல்லா பரம ரகசியங்களையும் அவன் அறிந்திருந்தான்; வல்லமையுள்ள ஊழியம் அவனுக்கு அளிக்கப்பட்டது; இயேசுவின் நாமத்தில் அவன் பிணியாளிகளைச் சுகப்படுத்தி, பிசாசுகளை ஓட்டினான். ஆனால் கடைசியில், பணத்திற்காகவும் ஆதிக்கத்திற்காகவும் இயேசுவை விற்றுப்போட்டான். அவன் பெந்தேகோஸ்தே நாளுக்கு முன்பாக இறந்துவிட்டதால், பரிசுத்த ஆவியைப் பெறவில்லை. அதனால் அவன் ‘வார்த்தை’யில் கடைசிவரை நிலைநிற்க முடியாமற் போயிற்று. ஆம் பரிசுத்த ஆவியின் நிறைவைப்பெற்று. கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட ஒவ்வொருவனும் முடிவுபரியந்தம் வசனத்தில் நிலைநிற்பான், அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளம். யூதாஸைப் போன்று ஆயிரக்கணக்கானவர் இதில் தோல்வியடைகின்றனர். அதன் காரணமாக அவர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுக்கப்படுகின்றன. ஜீவ புஸ்தகத்திலிருந்து பெயர்கள் அழிக்கப்படுகின்றன என்பதற்கு ஆதாரமாக வேதத்திலிருந்து ஒரு பாகத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ‘மறு நாளில் மோசே ஜனங்களை நோக்கி, நீங்கள் மகாபெரியபாவஞ் செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்குத் திரும்பிப் போய்; ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள். ஆகிலும் தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும். இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என்பேரைக் கிறுக்கிப் போடும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி;எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என்புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடுவேன். இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்து கொண்டு போ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார். ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்’ (யாத் 32.30-34). ஜீவபுஸ்தகத்தில் முன்பு பெயர்கள் கிறுக்கப்பட்டதென்றும், இனிமேலும் கிறுக்கப்படுமென்றும் இதிலிருந்து நமக்குத்தெளிவாகிறது. பொன்னால் செய்யப்பட்ட கன்றுக்குட்டியை வணங்கிய இஸ்ரவேலரின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டன. விக்கிரகாராதனையின் காரணத் தினால் தாணும், எப்பிராயீமும் தங்களின் கோத்திர உரிமையை இழந்தனர் என்று நினைவுகூறுங்கள். விக்கிரகத்தை வணங்கும் யாவரின் பெயரும் ஜீவபுஸ்தகத்திலிருந்து அகற்றப்படும். இயேசுகிறிஸ்துவை மேசியாவாக மறுதலித்தவர்களுக்கும் இதைப் போன்ற ஒரு தண்டனை விதிக்கப்படவேண்டும். இயேசு அடைந்த அவமானத்தைத் தீர்க்கதரிசனமாக உரைக்கும் சங்கீதத்தில், ‘என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள், அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக் கடவது. அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப் பண்ணும். உம்முடைய உக்கிரத்தை அவர்கள் மேல் ஊற்றும். உம்முடைய கோபாக்கினை அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக, அவர்கள் வாசஸ்தலம் பாழாகக் கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற் போவதாக, தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத் தினவர்களை நோகப் பேசுகிறார்களே. அக்கிரமத்தின் மேல் அக்கிரமத்தை அவர்கள் மேல் சுமத்தும். அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக. ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப் போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக’ (சங் 69. 21-28) என்று சொல்லப்பட்டிருக்கிறது. யூதர்கள் இயேசுவைப் புறக்கணித்தபோது, தேவன் அவர்களை விட்டுப் புறஜாதிகளிடத்தில் சென்றார். ‘அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங் கொண்டு அவர்களை நோக்கி; முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்ல வேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேத வாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள். புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள் (அப் 13. 46-48). இஸ்ரவேலர்களின் பெயர்களெல்லாம் ஜீவபுஸ்தகத் திலிருந்து அகற்றப்பட்டன என்று இதன் மூலம் நாம் அர்த்தங்கொள்ளுதல் தவறாகும். அவர்களில் சிலர் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, புறஜாதிகளின் சபைகளின் பாகமாகி, கிறிஸ்துவின் சரீரத்திற்குள் வருவர். இவர்களின் பெயர்களெல்லாம் ஜீவபுஸ்தகத் திலிருந்து அகற்றப்படுவதில்லை. மேலும் ஐந்தாம் முத்திரையின் கீழ் காணப்படும் இரத்த சாட்சிகளான யூதர்களுக்குக் கர்த்தர் வெள்ளையங்கிகளையும் நித்திய ஜீவனையும் அருளுவார். இவர்களின் பெயர்களும் ஜீவபுஸ்தகத்தினின்று எடுக்கப்படுவதில்லை. அதுவுமின்றி, இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது முத்தரிக்கப்படும் 1,44,000 இஸ்ரவேலரின் பெயர்களும் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்படா மலிருக்கும், 69ஆம் சங்கீதத்தில் கூறியிருக்கிற பிரகாரம். இயேசு கிறிஸ்துவை அநீதமாகப் புறக்கணித்த தீயவர்களின் பெயர்களும், அவருடைய மக்களை நிர்மூலமாக்குகிறவர்களின் பெயர்களும் ஜீவபுஸ்தகத் திலிருந்து எடுத்துப்போடப்படும். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேலரில் பெரும்பாலோர் ஜீவபுஸ்தகத்தில் பெயர் காணப்படும் உரிமையை இழந்தது போன்று, பெரும்பாலான புறஜாதி சபைகளின் மக்களும், தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்து, மிருகத்தின் சொரூபமான உலக சபைகளின் ஐக்கியத்தில் (ECUMENICAL MOVEMENT) பங்கு கொள்வதின் மூலம், ஆக்கினைத். தீர்பபுக்குட்பட்டு. அவர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலிருந்து அகற்றப்படும். நியாயத்தீர்ப்பின் போது மக்கள் இரண்டாகப் பிரிக்கப்படுவர். ஜீவபுஸ்தகமும், வேறொரு புஸ்தகமும் திறக்கப்படும். ‘அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறி யாடுகளையும் வெள்ளையாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுப்பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடப் பக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது ராஜா தமது வலப் பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து. வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங் கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன்; என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன் எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன். என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார், அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக; ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனம் கொடுத்தோம். எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக் கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக. மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார் அப்பொழுது, இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர். சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங் கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன். நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக. ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில் லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக் கப்பட்ட வராகவும், நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக; மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீரகளோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்’. (மத் 25. 31.46). ‘பின்பு நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன், அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்று போயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவை களின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத் தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத் தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெ வனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டான்’ (வெளி 20. 11, 15). இந்நியாயத் தீர்ப்பிலே நீதிமான்களும், அநீதிசெய்தவர்களும் இருப்பார்கள் என்று நாமறியலாம். இந்த நீதிமான்கள் மணவாட்டியாயிருக்க முடியாது; ஏனெனில் நியாயத் தீர்ப்பில் மணவாட்டி அவரோடு உட்காருவாள். ‘பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடா திருக்கிறது. எப்படி; (1 கொரி 6. 2.3). ‘நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடய சிங்காசனத்தில் என்னோடே உட்காரும்படிக்கு அருள் செய்வேன்’ (வெளி 3.21), மணவாட்டி உலகத்தை நியாயந்தீர்க்கப் போவதால், நியாயந்தீர்ப்பில் அவரோடு கூட சிங்காசனத்தில் உட்காரவேண்டும் தானியேல் கண்ட தரிசனம் பின்வருமாறு; ‘நான் பார்த்துக் கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது. நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார். அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போலவும், அவருடைய சிரசின்மயிர் வெண்மையாகவும் பஞ்சைப் போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினி ஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது. ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது’ (தானி 7.9-10). அவரைச் சேவிக்கும் ஆயிரமாயிரம் பேர் மணவாட்டியாகும். மனைவியேயல்லாமல் கணவனுக்கு ஊழியஞ்செய்பவர் வேறு யார்? நீதிமான்கள் ஏன் நியாயத்தீர்ப்பில் காணப்பட வேண்டும் என்ற கேள்வி நமக்குள்ளே எழுகிறது. வேதப் பிரகாரம் இரண்டு உயிர்த்தெழுதல்கள் உண்டு; முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு கொள்ளத் தகுதியற்றவர்கள், நியாயத் தீர்ப்புக்கேற்ற இரண்டாம் உயிர்த்தெழுதலில் பங்கு கொண்டு உயிரோடு எழுந்திருப்பார்கள். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு கொள்ளும் மணவாட்டி நியாயத் தீர்ப்பில் காணப்படுவதில்லை. ‘என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு (அதாவது ஒரு விசுவாசி ஏற்கெனவே நித்திய ஜீவனைப் பெற்று அதனைச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறான். அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் (நியாயத்தீர்ப்பில் பங்கு கொள்ளாமல்) மரணத்தைவிட்டு நீங்கி (நிரந்தரமாக) ஜீவனுக்குட் பட்டிருக்கிறான்’ (யோவான் 5.24) ஒரு சாரார், குறிப்பிட்ட ஒரு உயிர்த்தெழுதலில் நித்திய ஜீவனைப் பெற வேண்டுமென்று இயேசு தீர்மானித்திருக்க வேண்டும். அவர்கள் மணவாட்டியாக நித்திய ஜீவனைப் பெறாமல் இரண்டாவது உயிர்த்தெழுதலில் அதைப் பெறுவார்கள். ‘இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். ஏனென்றால் பிரேதத் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்போது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்’ (யோவான் 5. 28-29) இவ்வசனங்கள் இரண்டாம் உயிர்த்தெழுதலைக் குறிக்கிறதேயன்றி இரகசிய வருகையைக் (RAPTURE) குறிப்பதல்ல. ஏனெனில், இரகசிய வருகையின்போது அனைவரும் உயிர்த்தெழாமல், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் மாத்திரம் உயிர்த்தெழுந்து, பூமியில் ஜீவிக்கிற மணவாட்டியோடு எடுத்துக்கொள்ளப்படு வார்கள். ‘ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள், பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்’ (1 தெச 4. 16 - 17). இரண்டாம் உயிர்த்தெழுதலைக் குறித்துதான் வெளிப்படுத்தின விசேஷம் உரைக்கிறது (வெளி 20. 11 - 15). அப்பொழுது மரித்தோர் தேவனுக்கு முன்பாகக் கொண்டு வரப்பட்டு தங்கள் தங்கள் கிரியைகளின்படி நியாயத் தீர்ப்படைவார்கள். ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவனாகக் காணப்படாத வனெவனும் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான். கிறிஸ்துவின் ஆவியைப் பெறாதவனுக்கு நித்திய ஜீவனில்லை என்று அப்போஸ்தலர்களின் நிருபர்கள் கூறியிருக்க, ஆவியைப் பெறாதவர்கள் எங்ஙனம் நியாயத் தீர்ப்பில் நித்திய ஜீவனைப் பெற முடியும் என்ற கேள்வி எழலாம். ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்களில் சிலர் பொதுவான உயிர்த்தெழுதலுக்கு முன்பும் சிலர் அதற்குப் பின்பும் நித்திய ஜீவனைப் பெறுவர் என்று இயேசு கூறிய வார்த்தைகளை நாம் சந்தேகிக்க முடியாது. ‘எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கு’ (பிலி 3.10) என்று பவுல் கூறும்போது, முதலாம் உயிர்த்தெழுதலில் அவன் பங்கு கொள்ள வேண்டும் என்று வாஞ்சிக்கிறான். ‘முதலாம் உயிர்த் தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்’ (வெளி 20.6) என்னும் வசனம் முதலாம் உயிர்த்தெழுதலைக் குறித்துச் சொல்லுகிறது. முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு கொள்பவர்கள் இரண்டாம் மரணத்தோடு சம்பந்தப்படுவதில்லை. ஆயிரம் வருஷமுடிவில் மரணமடைந்த மற்றவர்கள் உயிரடைவார்கள். இவர்களில் ஒரு சாரார் நித்திய ஜீவனைப் பெற்று, மற்றவர் இரண்டாம் மரணத்தையடைவர். இரண்டாம் உயிர்த்தெழுதலில் எந்த ஆதாரம் கொண்டு இவர்களுக்கு நித்திய ஜீவன் அளிக்கப்படும் என்று நாம் ஊகிக்க வேண்டிய அவசியமில்லை. ‘சகோதரர்களுக்கு’ நன்மை செய்தவன் நித்திய ஜீவனையடைவான்; ‘சகோதரர்களைப்’ பகைத்துத் துன்புறுத்தினவன் இரண்டாம் மரணமாகிய அக்கினிக் கடலில் தள்ளப்படுவான் என்று தேவனுடைய வார்த்தை உரைக்கிறது. இதைக் குறித்து நாம் தர்க்கிக்காமல், அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டும். மத் 25.31-46ல் மேய்ப்பனானவன் ஆடுகளைப் பிரித்தான் என்று காணப்படாமல் ‘மேய்ப்பானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிப்பது போல்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. நியாயத் தீர்ப்பின் போது செம்மறியாடுகள் காணப்படுவதில்லை மேய்ப்பவனுடைய சத்தத்தைக் (வார்த்தையை) கேட்டு அவனுக்குப்பின் சென்றன. அவைகளுக்கு ஏற்கனவே நித்திய ஜீவன் இருந்தபடியால், நியாயத் தீர்ப்புக்கு உட்பட முடியாது. நியாயத் தீர்ப்பில் காணப்படுபவர்களுக்கு நித்திய ஜீவன் இல்லை. அவர்களில் சிலர் அவருடைய சகோதரரிடத்தில் அன்பு கூர்ந்தபடியால், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அப்படிப் பிரவேசித்தவர்கள் சகோதரரல்ல; அவ்வாறாயின் அவர்கள் இயேசுவோடு உடன் சுதந்தரராயிருந்து அவரோடு சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளினிடத்தில் அவர்கள் காண்பித்த அன்பைக் கர்த்தர் அங்கீகரித்து அவர்களை இரட்சிக்கிறார். அவர்கள் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் காணப்பட்டு அழிக்கப்படாதிருந்தன. நிக்கொதேமையும் கமாலியேலையும் போன்று, இவர்கள் துன்ப காலத்தில் தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்பு பாராட்டியிருக்கக் கூடும். ஒரு சிலர் கூறுவது போன்று எல்லாரும் மீட்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெறுவதில்லை. பொல்லாங்கானவர்கள் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டனர் என்பதை கவனிக்கவும். அழிக்கப்பட்டவர்களில் அநேகரின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் காணப்பட்டன. ஆனால் தேவனுடைய வார்த்தையை ஜீவியத்தில் கடைபிடித்து, ஜீவிக்கிற நிருபங்களாக விளங்கிய தேவனுடைய பிள்ளைகளை அவமதித்ததன் காரணமாக அவர்கள் பெயர்கள் ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்பட்டன. ஐந்தாவது முத்திரையின் கீழே காணப்படும் ‘கொல்லப்பட்ட ஆத்துமாக்கள்’ இரண்டாம் உயிர்த்தெழுதலில் வெள்ளையங்கிகளைப் பெற்று நித்திய ஜீவனையடைவர். ‘அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவ வசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர் களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன். அவர்கள், பரிசுத்தமும் சத்தியமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின் மேல் குடியிருக்கிறவர் களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத் தீர்ப்பு செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகாசத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப் பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரரு மானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக் காலம் இளைப்பாற வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது’ (வெளி 6. 9-11). பலிபீடத்தின்கீழ் காணப்படும் யாவரும் இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் கொல்லப்படவில்லை என்பதைக் கவனிக்கவும். அந்திப்பாவைப் போன்று, அவருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டதன் காரணமாக அவர்கள் கொல்லப்படவில்லை. அப்படியெனில் இவர்கள் மறுபடியும் பிறந்து, நித்திய ஜீவனைத் தங்கள் உரிமையாக்கிக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. அவர்கள் மணவாட்டியாயிருப்பின், ‘பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்’ என்று தங்களைத் துன்புறுத்தினவர்களுக்காகப் பரிந்து பேசியிருப்பார்கள். ஆனால் அவர்களோ தங்களைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று கூக்குரலிடு கின்றனர். நான்காம் முத்திரையில் புறஜாதிகளின் சபை எடுத்துக் கொள்ளப்படு கின்றது. இவர்கள் ஐந்தாம் முத்திரையில் காணப்படுவதால் யூதர்களாயிருக்க வேண்டும். அப்படியெனில் அவர்கள் ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களல்ல. இயேசு மேசியாவென்பதை அவர்கள் விசுவாசிப்பதில்லை. புறஜாதிகள் இரட்சிப்படைவதற்கென்று இவர்களின் கண்கள் குருடாக்கப்பட்டன. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையை உண்மையாய்க் கடைபிடித்து, அதில் வைராக்கியம் காண்பித்ததற்காக ஹிட்லர், ஸ்டாலின் போன்றவர்களால் கொல்லப்பட்டு, இனியும் கொல்லப்படுவர். இதன் காரணமாகத் தேவன் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளும் இரண்டாவது உயிர்த்தெழுதலில் பங்கு கொண்டு நித்திய ஜீவனைப் பெறுவர். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாததால், இவர்கள் மணவாட்டியாயிருக்க முடியவில்லை. பரிசுத்த ஆவியைப் பெற்ற ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் மணவாட்டியின் பாகமாயினர். புத்தியற்ற கன்னிகைகள் பிரித்தெடுக்கப்பட்டவர்களாய், தேவனிடத்தில் அன்புகூர்ந்து, தாங்கள் அறிந்தவரை தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றி, அவருடைய ஊழியத்தில் துணையாயிருந்ததால், கடைசி காலங்களில் உயிரோடெழுந்து நித்திய ஜீவனை அடைவார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலானதும், நாம் நினைத்ததைவிட அற்புதமாயிருக்கும் ஆயிரம் வருஷ அரசாட்சியில் அவர்கள் பங்குகொள்வதில்லை. மேற்கூறிய அனைவரின் பெயர்களும் ஜீவ புஸ்தகத்தினின்று அழிக்கப்படவில்லை. அப்படியெனில் யாருடைய பெயர்கள் அழிக்கப்படும்? மணவாட்டியை எதிர்த்துப் போராடிய உலகசபைகளின் ஐக்கியத்திலுள்ளவர்களின் பெயர்களைனைத்தும் அகற்றப்படும். அவர்கள் அக்கினிக் கடலில் தள்ளப்படுவார்கள். நாம் இதுவரை சிந்தித்ததை மறுபடியும் சுருக்கமாகக் கூறுவோம். வார்த்தையில் சார்ந்திருந்து, தம்முடைய தன்மைகளைப் பெற்ற மக்களை மணவாட்டியாகத் தெரிந்துகொள்ள தேவன் சித்தங்கொண்டார். இவர்களனை வரும் அவருக்குள் உலகத் தோற்றத்திற்கு முன்பு தெரிந்து கொள்ளப்பட்டனர். காலாகாலங்களில் இப் பூலோகத்தில் தோன்றுவதற்கு முன்னமே இவர்கள் எல்லாரையும் தேவன் முன்குறித்து அவர்களிடத்தில் அன்பு கூர்ந்தார். மணவாட்டியானவள் அவருடைய இரத்தத்தினால் மீட்கப்பட்டு ஆக்கினைத் தீர்ப்புக்குள் வரமாட்டாள். அவளுடைய பாவத்தைத் தேவன் எண்ணாம லிருப்பதால், அவள் நியாயத் தீர்க்கப்படுவதில்லை ‘எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்’ (ரோமர் 4.8). அவள் அவரோடு சிங்காசனத்தில் வீற்றிருந்து உலகத்தையும் தேவ தூதர்களையும் நியாயம் தீர்ப்பாள். மணவாட்டியாயிருக்கும் மக்களின் பெயர்களனைத்தும் உலகத் தோற்றத்திற்கு முன்பே ஜீவபுஸ்தகத்தின் ஒரு பாகத்தில் எழுதப்பட்டுவிட்டன. இரண்டாவதாக, ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளும், நியாயத் தீர்ப்பில் நீதிமான்களென்று தீர்க்கப்பட்டவர்களும், மிருகத்தை வணங்காமலும், அந்திக் கிறிஸ்துவின் மார்க்கத்தில் பங்கு கொள்ளாமலும், தாங்கள் பற்றின விசுவாசத்தின் காரணமாய்க் கொல்லப்பட்டவர்களும், இரண்டாம் உயிர்த்தெழுதலில் பங்குகொண்டு நித்திய ஜீவனில் பிரவேசிப்பார்கள். இவர்களுடைய பெயர்களும் ஜீவ புஸ்தகத்தில் காணப்படும். மூன்றாவதாக, பெயர்க் கிறிஸ்தவர்கள், எகிப்தைவிட்டு, வெளியேறிய இஸ்ரவேலரைப் போன்று, ஆவியைப் பெறாமல், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியத் தவறியதால், ஜீவபுஸ்தகத்தில் காணப்பட்ட அவர்களின் பெயர்கள் கிறுக்கிப் போடப்படும். யூதாஸைப்போல் பக்தியுள்ளவர்களாய், இவர்கள் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வர். ஆயினும் இவர்கள் அவருக்குள் தெரிந்து கொள்ளப்படவில்லை. பிலேயாமைப் போன்றவர்களும் இக்கூட்டத்தைச் சார்ந்தவர்கள். நான்காவதாக மிருகத்தையும் (அந்திக் கிறிஸ்துவையும்) அதனுடைய சொரூபத்தையும் (உலக சபைகளின் ஐக்கியத்தையும்) வணங்குகிறவர்களின் பெயர்கள் ஒருக்காலும் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படவேயில்லை. ‘உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்’ (வெளி 13.8). ‘நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது. இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து நாசமடையப் போகிறது, உலகத்தோற்ற முதல் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இல்லாமற் போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்’ (வெளி 17.8). ஒரு கூட்டம் சுய நாமத்தில் வருபவன் ஒருவனை (அந்திக் கிறிஸ்துவை) ஏற்றுக்கொள்ளும் என்று இயேசு தாமே கூறியிருக்கிறார். இவர்கள் தேவனால் நியமிக்கப்பட்டாலும், நித்திய ஜீவனுக்கென்று தெரிந்துகொள்ளப்படவில்லை. பார்வோன் இவர்களில் ஒருவன். ‘மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது’ (ரோமர் 9.17) அன்றியும், ‘தேவன் தம்முடைய கோபத்தைக் காண்பிக்கவும் தம்முடைய வல்லமையைத் தெரிவிக்கவும் இவர்கள் அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்’ (ரோமர் 9. 22-23) என்று பவுல் கூறுகிறான். இவர்களின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படவேயில்லை. ‘கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்கு நாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்’ (நீதி 16.4). ‘துன்மார்க்கன் ஆபத்து நாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டு வரப்படுகிறான்’ (யோபு 21.30). மேற்கூறிய வசனங்கள் துன்மார்க்கன் ஜீவிப்பதன் நோக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. துன்மார்க்கன் அழிவுக்கென்று நியமிக்கப்படுவது மனித ஞானத்திற்கு எட்டாத ஒரு காரியமாயிருப்பதால், அது விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். தேவனின் சுயாதிபத்தியத்தை (SOVEREIGNTY) அநேகம் பேர் புரிந்துகொள்ளுவதில்லை, தேவன் தேவனாயிருக்கிறார். ஆகையால் அவருடைய ஆலோசனையை யாரும் மாற்றமுடியாது; அவருடைய சித்தமும் நோக்கமும் நிறைவேறுவதை யாரும் தடைசெய்ய முடியாது. அவர் சர்வ வல்லவராயிருப்பதால், எல்லாக் காரியங்களிலும் அவர் ஆளுகை செய்து, அவருடைய மகிழ்ச்சிக்கென்று உண்டாக்கப்பட்ட சிருஷ்டிகளுக்குத் தம்முடைய சித்தம்போல் யாவற்றையும் செய்கிறார். பவுல் கூறும்வண்ணம், மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே தேவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் உண்டாக்கினார், அவரை யார் குறை கூறமுடியும்? (ரோமர் 9.21). நாம் அவருடைய சிருஷ்டிகளாயிருப்பதால், நம்மேல் அவருக்கு எல்லா அதிகாரமும் உண்டு. அது மாத்திரமின்றி, அவர் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே நம்மைக் கிரயத்துக்குக் கொண்டபடியால், நாம் அவருக்குச் சொந்தமாகிறோம். அவருக்குச் சொந்தமானவர்களுக்கு அவர் சித்தப்படி எதுவேண்டுமாயினும் செய்யலாம். ‘நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை. ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம். நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். கிறிஸ்துவும் மரித்தோர் மேலும் ஜீவனுள்ளோர் மேலும் ஆண்டவராயிருக்கும் பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்’. (ரோமர் 14. 7-9). ‘நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும் பொருட்டு, மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே....’ (யோவான் 17.2). தேவன் சர்வத்தையும் அறிந்தவர் (OMNISCIENT) என்று நாம் அங்கீகரிப்போமாயின், அவருடைய ஞானமும் நீதியும் பிழையற்றவை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். நித்திய ஜீவனுக்கென்று தெரிந்துகொள்ளப் படுதலும், அழிவுக்கென்று நியமிக்கப்படுதலுமாகிய திட்டம் எல்லாக் காலங்களிலும் வெளிப்பட்ட தேவனுடைய ஞானமாயிருக்கிறது. ‘நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின நம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப் பண்ணினார். காலங்கள் நிறைவேறும் போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். மேலும் கிறிஸ்துவின் மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன் குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்திரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம்’ (எபே 1.3-12). கர்த்தர் சிலரை மணவாட்டியாகத் தெரிந்துகொண்டு, அவர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தி லிருந்து எப்போதும் அழிக்கப்படுவதில்லை என்று திட்டங்கொண்டால், அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலருடைய பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் காணப்பட்டு, தேவனுடய முன்னறிவில் அவர்கள் பாவத்தில் விழுந்து அவர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்றிருந்தால், அதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரு சிலரின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படவேயில்லையென்றும், வேறு சிலர், கர்த்தரின் சகோதரரிடத்தில் அன்பாயிருந்ததால், நியாயத்தீர்ப்பில் நீதிமான்களாகக் கருதப்பட்டு நித்திய ஜீவனையடைவார்களென்றும் தேவனுடைய சித்தமானால் அவைகளை நாம் ஏற்றுக்கொள்ளாமலிருக்க முடியாது. கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? விசுவாசத்தின் மூலம் நம்முடைய பிதாவுக்கு கீழடங்கி ஜீவிப்போமாக. இதுவரை, தனிப்பட்ட நபர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுக்கப்படுவதைக் குறித்து நாம் சிந்தித்தோம். இப்பொழுது சபையின் குழுக்களைப் பற்றிக் காண்போம். காலாகாலங்களில் அமைக்கப்பட்ட சபையை, ஒரு கோதுமைச் செடிக்கு ஒப்பிடலாம். ஒரு கோதுமை மணி, நிலத்தில் புதைக்கப்பட்டு, அழுகி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அநேக கோதுமை மணிகளைக் கொடுக்கிறது. கோதுமை மணி அழுகும்போது, அதில் காணப்படும் சத்து செடியில் பாய்ந்து, செடியிலிருந்து அநேக கோதுமை மணிகளில் செல்கிறது. அது போன்று, ராஜரீக வித்தாகிய (ROYAL SEED) இயேசுகிறிஸ்து மரித்தார், சபைக்கு ஜீவனாயிருக்கும் இந்த தன்னிகரற்றவர், ஏழு சபைகளின் காலங்களிலும் சபையின் மத்தியிலிருந்து, தம்முடைய ஜீவனை சபைக்கு அளிக்கிறார். சபையின் மக்களுக்குள் அந்த ஜீவன் பாய்ந்து, உயிர்த்தெழுதலின் நாளில் அவர் பெற்ற மகிமையின் சரீரத்தைப் போன்ற சரீரங்களை அவர்கள் பெறுவர். அந்நாளில், ஒரு ராஜரீக வித்து (இயேசு கிறிஸ்து) அவரைப் போன்ற அநேக ராஜரீகவித்துக்களைக் காண்பார், அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்’ (1 யோவான் 3.2) என்று யோவான் கூறுகிறான். இயேசு கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார் என்று யோவான் ஸ்நானன் கூறும்போது நித்திய ஜீவனுக்கென்று தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அடையும் உயிர்த்தெழுதலைக் குறிப்பிட்டான். ஒரு கோதுமை மணி அழிவதன் மூலம் அநேக கோதுமை மணிகள் தோன்றும். கோதுமை செடியின் சரித்திரம் தான் ஜீவபுஸ்தகம். ஒரு கோதுமைச் செடிக்கு அநேக பாகங்கள் உண்டு. அதின் ஒரு பாகம்தான் சத்து முழுவதையும் பெற்ற கோதுமை. அது போன்று ஜீவபுஸ்தகத்தின் ஒரு பாகம் நித்திய ஜீவனின் குறிப்புப் புஸ்தகம் (RECORD OF ENTERNAL LIFE). இயேசு கிறிஸ்து மரித்துத் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார். அந்த ஜீவன் திரும்பவும் சபைக்குக் கொடுக்கப்பட்டு, அதன்மூலம், உயிர்த்தெழுதலில் இயேசுவைப் போன்று மகிமையின் சரீரம் பெறும் அநேக வேதபுத்திரர்கள் (SONS OF GOD) தோன்றினர். பூமியில் புதைக்கப்பட்ட வித்திலிருந்து சத்து செடியின் தண்டின் மூலம், கோதுமை மணிகளில் பாய்வது போல், கிறிஸ்துவின் ஜீவன் தேவபுத்திரர்களில் பாய்வதற்குக் காலங்கள் தோறும் காணப்பட்ட சபை அவசியமாயிருந்தது. கோதுமை செடியின் ஒரு பாகமே (அதாவது கோதுமை மணிகளே) சத்தை முழுவதுமாகப் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. எகிப்திலிருந்து வெளியேறிய இருபது லட்சம் இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரம் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. எல்லாரும் பலி செலுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலம் வெளியேறினர்; எல்லாரும் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்; எல்லாரும் சமுத்திரத்தை விட்டு வெளிவந்து பரிசுத்த ஆவியின் அடையாளங்களிலும், அற்புதங்களிலும், ஆசீர்வாதங்களிலும் பங்குகொண்டனர்; எல்லாரும் அவர்களோடுகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் கானான் தேசத்திற்குள் போகமுடியாமல், அவர்களுடைய பிள்ளைகளுக்கு அந்த சிலாக்கியம் அளிக்கப்பட்டது. இஸ்ரவேலரெல்லாரும் இஸ்ரவேலர் அல்ல. அவர்களில் ஒரு சிலரைத் தவிர, மற்றெல்லாருடைய பெயர்களும் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டன. இன்றைய சபையும் அதே நிலையிலுள்ளது. ஜீவபுஸ்தகத்திலிருந்து அநேக பெயர்கள் கிறுக்கப்படும். ஆனால் நித்திய ஜீவனின் புஸ்தகத்திலிருந்து ஒரு பெயரும் அகற்றப்படுவதில்லை. ‘தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்; குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்’ (1 யோவான் 5. 11-12). அந்த ஜீவனையுடையவர்கள் உலகத் தோற்றத்திற்கு முன் அவருக்குள் இருந்தனர். உலகத் தோற்றத்திற்குமுன் அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டனர். மகத்தான ராஜரீக வித்து (இயேசு கிறிஸ்து) இப்பூமியில் புதைக்கப்பட்டு (மரித்து) அவருடைய ஜீவன் கோதுமைச் செடியின் மூலம் (சபைகள்) அநேக கோதுமை மணிகளுக்கு (தேவபுத்திரருக்கு) கொடுக்கப்பட்டு, அவைகள் எல்லாவற்றிலும் மூல வித்தைப் போலவே இருக்கின்றன. ஆகையால், கிரயத்தினால் கொள்ளப்பட்டு மீட்கப்பட்ட மணவாட்டியின் அங்கத்தினர்களின் பெயர்கள் புஸ்தகத்திலிருந்து அகற்றப்படுவதில்லை. ஏவாள் ஆதாமுக்குள் இருந்தது போல், அவளும் அவருக்குள்ளிருந்து, பின்பு பிரித்தெடுக்கப்பட்டு, அவருடைய ஒரு பாகமாக விளங்குகிறாள். அவள் நியாயந்தீர்க்கப்படாமல், நியாயந்தீர்ப்பதற்கென அவரோடு சிங்காசனத்தில் உட்காருவாள். மணவாட்டியின் அங்கத்தினர்களில் ஒருவரையும் அவர் இழப்பதில்லை. யூதாஸைப் போன்ற அநேகரின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது, பின்பு அழிக்கப்படும். கடைசி நாட்களில் அற்புதங்களைச் செய்த அநேகரை நோக்கி, ‘நான் உங்களை அறியேன்’ என்று இயேசு கூறுவார். எல்லாமறியும் இயேசு அவர்களை அறியவில்லை என்று கூறும்போது, அவர்கள் மணவாட்டியாகவோ அல்லது இரண்டாம் உயிர்த்தெழுதலில் பங்கு கொண்ட நீதிமான்களாகவோ முன்குறிக்கப்படவில்லை என்பதாக அர்த்தம் கொள்ள வேண்டும். அவர்கள் வசனத்தில் நிலைக்காமல் இருந்ததனால், கனிகளைக் கொடுக்கவில்லை. ஆகையால் அவர்கள் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப் பட்டனர். மணவாட்டியை ஆதரித்து, உதவிசெய்து, ஆறுதல் படுத்தியவர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் காணப்பட்டு, அவர்கள் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள். பார்வோனைப் போன்றவரின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் ஆதியிலிருந்தே எழுதப்படவில்லை; இவர்கள் அக்கினிக் கடலில் தள்ளப்படுவர். கோதுமை மணி செடியாக வளருவது சபையின் சரித்திரத்திற்கு உதாரணமாயிருக்கிறது. கோதுமை செடி முழுவதும் வித்தல்ல; கோதுமை செடி முழுவதும் அறுவடை செய்யப்படுவதில்லை. அவ்வாறே சபை முழுவதும் மணவாட்டியல்ல; அவர்களெல்லாருக்கும் நித்திய ஜீவன் கொடுக்கப்பட வில்லை. சபையின் ஒரு பாகம் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டது. ஒரு பாகம் பதரென்று கருதப்பட்டு அக்கினிக் கடலில் சுட்டெரிக்கப்பட்டது. கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு, பதர் அவியாத அக்கினியில் போடப்படும் என்று யோவான் ஸ்நானன் கூறினான். ‘கோதுமை மணிகளைச் சேர்த்து, களைகளைக் கட்டுங்கள்’ என்று இயேசு கூறினார். சபைகளின் ஐக்கியம் களைகளாகிய சபைகளை ஒன்று சேர்த்து கட்டும். களைகள் முதலில் கட்டப்பட்டு பிற்காலத்தில் அக்கினியில் போடப்படும் என்பதைக் கவனிக்கவும். அதுபோன்று களைகளாகிய சபைகள் முதலில் கட்டப்பட்டு, ஆயிரம் வருஷ அரசாட்சியின் முடிவில் அல்லது இரண்டாம் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், அக்கினியில் தள்ளப்படும். களைகள் கட்டப்பட்ட பின்பு, எடுத்துக் கொள்ளப்படுதல் (RAPTURE) சம்பவிக்கும். அந்திக்கிறிஸ்து வெளிப்படுவதற்கு முன்பு இது சம்பவிக்க வேண்டும். அதன் பின்பு, ஒரு நாளில், தானியேல் கண்டவிதமாய் ராஜாவுக்கும் அவர் மனையாட்டிக்கும் முன்பாக எல்லாரும் நிற்பார்கள். அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டு, எல்லாரும் அவரவர் கிரியைகளின்படி நியாயத் தீர்க்கப்படுவார்கள். அறுவடை உண்மையாகவே முடிவடைந்தது. திறக்கப்பட்ட புத்தகங்கள் அப்பொழுது மூடப்பட்டது. இரட்சிக்கப்பட்டவர்களின் பெயர்களைக் கர்த்தர் இப்பொழுது தொகுத்துக் கொண்டு வருகிறார் என்று கூறுவதற்கு வேதத்தில் ஒருவித சான்றுமில்லை என்று முன்பு கூறினேன். ஆனபோதிலும் சீயோனைக் குறித்துச் சங்கீதக்காரன் ‘கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார்’ (சங் 87.6) என்று எழுதுகிறான். சீயோனில் பிறந்தவர்களின் பெயரெழுதுவதற்கென, சர்வத்தையும் அறிந்த கர்த்தர் கடைசி காலம் வரை காக்கவேண்டிய அவசியமில்லை. இவர்களெல்லாரையும் முன்னமே அவர் அறிந்திருந்தார். அப்படியெனில், இரண்டாம் உயர்த்தெழுதலுக்குப் பின்னர், ஜீவபுஸ்தகத்தில் காணப்படும் சீயோனில் பிறக்க வேண்டியவர்களின் பெயர்களைக் கர்த்தர் ஒரு புதிய குறிப்புப் புத்தகத்தில் எழுதுவாரென்பதைச் சங்கீதக்காரன் தீர்க்கதரிசனமாக உரைக்கிறான். ‘என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்’ ‘மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின் மேல் விருப்பம் வைப்பீராக’ (யோபு 14. 14-15) என்று யோபு கூறுகிறான். நல்ல மேய்ப்பன் தமது ஆடுகளைப் பெயர் சொல்லி அழைக்கிறார். தேவனின் சிருஷ்டிப்பின் சத்தம் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களைப் பூமியின் தூளிலிருந்து எழுப்பும்; உயிரோடிருக்கும் மணவாட்டியின் சரீரமும் அணுவணுவாக மகிமையின் சரீரமாக மாறும். அப்பொழுது எடுத்துக்கொள்ளுதல் (RAPTURE) சம்பவித்து, ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் நடைபெறும். இரண்டாம் உயிர்த்தெழுதலில், நியாயத்தீர்ப்பில் பிதாவுக்கும் அவருடைய தூதர்களுக்கும் முன்பாகப் பெயர்கள் அறிக்கையிடப்படும். தேவனுடைய சத்தம் மிகவும் இனிமையாக ஜீவபுஸ்தகத்திலுள்ள பெயர்களைப் படிக்கும். ‘பிதாவே இவர்கள் பூமியில் என் நாமத்தை அறிக்கையிட்டனர். இப்பொழுது உமக்கு முன்பாகவும் தூதர்களுக்கு முன்பாகவும் இவர்களுடைய நாமத்தை நான் அறிக்கையிடுவேன்’ என்று இயேசு கூறுவார். ‘ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்’. ஆவியானவர் இதற்கு முன்பிருந்த சபைகளுக்குக் கூறிய அனைத்தும் சம்பவித்தன என்று சரித்திர வாயிலாக நாம் நிரூபித்தோம். சர்தை சபைக்கு அவர் கூறியதும் அவ்வாறே நிறைவேறியது. ஆவியானவர் தம்முடைய எல்லா வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்ற ஒருபோதும் தவறுவதில்லை என்னும் சத்தியம் கடைசி காலத்து மணவாட்டிக்கு மிகுந்த ஆறுதலையளிக்கிறது. சர்தை சபையின் காலத்தில் அவர் உண்மையுள்ளவராயிருந்தது போல் நம்முடைய சபையின் காலத்திலும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். அக்காலத்து மக்கள் பெற்றது போன்று, நாமும் கிருபையும் வல்லமையும் அவரிடத்திலிருந்து பெறுவோம். இதை மனதில் கொண்டு, பரிபூரணமடைந்து, கர்த்தரை ஆகாயத்தில் சந்தித்து அவரோடு என்றென்றைக்கும் ஜீவிப்போமாக. எட்டாம் அத்தியாயம்: பிலதெல்பியா சபையின் காலம் THE PHILADELPHIAN CHURCH AGE வெளி 3 : 7 – 13 பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாத படிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக் கொண்டபடியினாலே, இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்து கொள்ளும்படி செய்வேன். என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கீரிடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்தில் தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும் என் புதிய நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றெழுது. பிலதெல்பியா இப்பட்டினம், சர்தை பட்டினத்தின் தென்கிழக்கே, சுமார் எழுபத்தைந்து மைல் அப்பால் அமைந்திருந்தது. இது லீதியா நகரத்தின் இரண்டாவது பெரிய பட்டினமாகத் திகழ்ந்தது, திராட்சை செடிகள் வளரும் மாவட்டத்தில், அநேக மலைகளின் மேல் கட்டப்பட்டதாயிருந்தது. அங்கு உபயோகித்த நாணயத்தின் ஒருபுறம் பாக்கஸ் (BACCHUS) தெய்வத்தின் உருவமும், மறுபக்கத்தில் இத்தெய்வத்தின் பெண் ஆசாரியாகிய பக்காண்டி (BACCANTE) என்பவளின் உருவமும் அச்சிடப்பட்டிருந்தன. இப்பட்டினத்தின் ஜனத்தொகை, யூதர்களையும், கிறிஸ்துவ யூதர்களையும், புறமதங்களிலிருந்து கிறிஸ்தவமார்க்கத்தைத் தழுவினவரையும் கொண்டிருந்தது. அநேக முறை இது பூகம்பங்களால் பாதிக்கப்பட்டாலும், வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டிருக்கும் ஏழு பட்டினங்களிலும் இது அதிக காலம் நீடித்திருந்தது. இன்றைக்கும் தேவனுடைய பட்டினம் (CITY OF GOD) என்னும் அர்த்தங் கொண்ட `அலாசேஹீர்’ (ALASEHIR) என்னும் துருக்கிய பெயரைக் கொண்டு இப்பட்டினம் இருக்கிறது. நாணயத்தில் பதிக்கப்பட்ட உருவத்தின் மூலம், பாக்கஸ் என்பவன் தெய்வமாக இப்பட்டினத்தில் தொழப்பட்டான் என்பதையறியலாம். நிம்ரோத் அல்லது நீனஸ் என்பவனின் மறுபெயரே பாக்கஸ் என்பதாகும். அவனுடைய வழிபாடு, களியாட்டங்கள் கொண்டது என்று நம்மில் அநேகர் நினைப்பதுண்டு; உண்மையில் அவன் `புலம்பலின் தெய்வ’ மாகக்கருதப்பட்டான். நாணயத்தின் இருபுறமுள்ள பாக்கஸும் பக்காண்டியும் இப்பட்டினத்தில் வழிபட்டது போன்று, ரோம சபையும் இவ்வழிபாட்டை அனுசரித்து மரியாளையும் இயேசுவையும் வழிபட ஆரம்பித்தது. வேசியாகிய இந்த சபைக்கும், அவளுடைய குமாரத்திகளான மற்றைய ஸ்தாபனங்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டாயிருந்தது. அதாவது, இவர்கள் மரியாளின் வழிபாட்டை மக்களிடையே புகுத்தாமல், அதற்குப் பதிலாக அவர்களின் பிரமாணங்களையும், கொள்கைகளையும், சட்டங்களையும் மக்களிடையே பரப்பி, இரட்சிப்படைவதற்காக இவைகளனைத்தையும் கைக்கொள்ள வேண்டுமென்று போதித்தனர். வேசியும் அவளுடைய குமாரத்திகளும் பரலோகத்திற்குச் செல்லும் `உரிமையைப்’ பணத்தின் மூலம் வாங்க முயற்சி செய்து, அதற்கென்று கிரயமாகக் கொடுக்கப்பட்ட இயேசுவின் இரத்தத்தை நிராகரித்தனவென்பதை இந்நாணயம் சித்தரிக்கிறது. ஆவியானவரின் வல்லமையைக் கொண்டு இவர்கள் காரியங்களைச் சாதிக்காமல், அவர்கள் கொண்டிருந்த செல்வத்தினால் இவைகளைச் சாதிக்க முற்பட்டனர். இப்பிரபஞ்சத்தின் தேவனான மம்மோன் (MAMMON) இவர்களின் கண்களைக் குருடாக்கிப் போட்டான். காலம் இச்சபையின் காலம் கி.பி. 1750 முதல் கி.பி. 1906 முடிய நீடித்திருந்தது. `பிலிதெல்பியா’ என்பது `சகோதரசிநேகம்’ என்று அர்த்தம் பெறும். இச்சபையின் காலத்திலும் சகோதரசிநேகம் நிலைத்திருந்தது. தூதன் ஜான் வெஸ்லி என்பவர் சந்தேகமின்றி இச்சபையின் தூதனாவார். இவர் எப்வர்த் (EPWORTH) என்னும் பட்டினத்தில் சாமுவேல் வெஸ்லி என்பவருக்கும், சுசன்னா வெஸ்லி என்னும் அம்மையாருக்கும், கி.பி. 1703ம் வருஷம் ஜுன் 17ம் தேதி பிறந்தார். இவருக்குக் கூடப் பிறந்தவர்கள் பதினெட்டுப் பேர் அவருடைய தகப்பனார். ஆங்ளிகன் திருச்சபையின் குருவானவராகப் பணியாற்றி வந்தார். அவருடைய தகப்பனாரின் வேத அறிவைக்காட்டிலும், தாயாரின் உத்தம ஜீவியம், அவர் மனந்திரும்பக் காரணமாயிருந்திருக்க வேண்டும். ஜான் ஒரு பிரசித்தி பெற்ற பண்டிதராக விளங்கினார். அவர் ஆக்ஸ்போர்டில் படித்துக் கொண்டிருக்கும் போது, அவரும் அவருடைய சகோதரனான சார்ல்ஸும், வேதபோதகத்தை நடைமுறையில் கடைபிடிக்க வேண்டுமென ஆர்வங் கொண்ட குழுவில் அங்கத்தினரானார்கள். ஏழைகளுக்கு ஈதல், பிணியாளிகளையும், சிறைவாசம் செய்பவர்களையும் சந்தித்தல் போன்ற கிரியைகளை, ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கென்று இவர்கள் கைக் கொண்டனர். அதன் காரணமாக `மெதோடிஸ்டுகள்’ (METHODISTS) என்னும் பரிகாசப் பெயரால் இவர்கள் அழைக்கப்பட்டனர். உலகத்தின் மக்களுக்கு மதபோதகம் அவசியமென்று ஜான் உணர்ந்து, அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா (GEORGIA) என்னும் பட்டினத்தில் வசித்த இந்தியர்களிடையே சுவிசேஷம் போதிக்கப் புறப்பட்டார். அவர் பிரயாணம் செய்த கப்பலில் அநேக மொரேவியர்கள் உடன் பிரயாணிகளாக இருந்தனர். அவர்களின் சாந்தம், சமாதானம், தைரியம் போன்ற தன்மைகள் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது, சுயவெறுப்பு, கஷ்ட ஜீவியம் இவைகளின் மத்தியிலும், ஜார்ஜியாவில் அவர் செய்த ஊழியம் வெற்றி பெறாமல் அவர் இங்கிலாந்துக்குத் திரும்பினார். இங்கிலாந்தில் அவர் திரும்பவும் மொரேவியர்களைச் சந்தித்தார். அவர்களில் பீட்டர் போஹலர் (PERT BOHELER) என்பவர் இரட்சிப்பின் வழியை அவருக்குக் காண்பித்துக் கொடுத்தார். அப்பொழுது அவர் உண்மையாகவே மனந்திரும்பி, அதுவரை கர்த்தருடைய பார்வையில் அவருடைய இருதயம் செம்மையாயிருக்க வில்லை என்று சாட்சி கூறினார். ஜானைப் போன்ற பக்தியுள்ளவர் இவ்வாறு எங்ஙனம் கூறமுடியுமென்று சார்ல்ஸுக்குப் புரியவில்லை. ஆயினும், வெகு சீக்கிரத்தில் அவரும் கிருபையினால் இரட்சிக்கப்பட்டார். இரட்சிப்படைத்த பிறகு, ஜான், அவர் முன்பு பிரசங்கித்த ஆலயங்களில், கிருபையினால் வரும் இரட்சிப்பைக் குறித்த சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தொடங்கினார். இதன் காரணத்தால், தொடர்ந்து பிரசங்கிக்க அவர் தடை செய்யப்பட்டார். இச்சமயத்தில் ஜார்ஜ் வைட்பீஃல்ட் (GEORGE WHITEFIELD) என்னும் சிநேகிதர், ஆயிரக்கணக்கானவர்கள் திறந்த வெளிகளில் தேவனுடைய வார்த்தையை ஆவலோடு கேட்பதாகவும், ஜான் வெஸ்லியும் அவர்களின் மத்தியில் பிரசங்கித்து அவருக்கு ஒத்தாசை செய்ய அவரை அழைத்தார். திறந்த வெளிகளில் பிரசங்கிப்பது சரியான முறையா என்ற சந்தேகம் ஜான் வெஸ்லியில் எழுந்தது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் சுவிசேஷத்தின் மூலம் கணக்கற்றவர்கள் மத்தியில் கிரியை நடப்பித்ததைக் கண்டு, திறந்த வெளியில் பிரசங்கிக்க அவர் முழுமனதோடு ஒப்புக்கொண்டார். இவ்வூழியம் வளருந்தோறும், வசனத்தைப் பிரசங்கிக்க, தேர்ச்சி பெறாத அநேகரை வெஸ்லி பல இடங்களுக்கு அனுப்ப வேண்டியதாயிருந்தது. பெந்தேகோஸ்தே நாளில் நடந்தது போன்று, இக்காலத்திலும் தேர்ச்சி பெறாதவர்களைப் பரிசுத்த ஆவியானவர் நிரப்பி, வசனத்தைப் பிரசங்கிக்க அவர்களை உடனடியாக ஆயத்தம் செய்தார். அவருடைய ஊழியத்திற்கு அநேக தடைகள் ஏற்பட்டன, ஆனால் தேவன் அவரோடு கூடஇருந்தார். பரிசுத்த ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு கிரியை செய்ததன் காரணமாக, மக்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், பலனற்று நிலத்தில் விழுந்து தங்கள் பாவங்களுக்காக அழுது துக்கித்தனர். வெஸ்லி மிகவும் பலசாலியாக இருந்தார். சொற்ப நேரம்கூட அவருக்கு உற்சாகம் தளர்ந்ததாக ஞாபகமில்லையென்று அவரே கூறியிருக்கிறார். ஒரு நாளில் ஆறுமணி நேரம் மாத்திரம் அவர் உறங்குவார். அதிகாலையில் எழுந்திருந்து, ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணிக்குப் பிரசங்கம் செய்யத் தொடங்குவார். ஏறக்குறைய நான்கு பிரசங்கங்களை அவர் ஒரே நாளில் செய்வார். இவ்வாறு ஒரு வருஷத்தில் சரசாரி 800 பிரசங்கங்களை அவர் நிகழ்த்துவார். அவரும், அவரைச் சார்ந்தவர்களும் ஆயிரக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர். வெஸ்லி, வருஷத்தில் 4500 மைல்கள் குதிரையின் மேல் சவாரி செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் தேவனுடைய வல்லமையில் விசுவாசம் கொண்டு, ஜெபத்தின் மூலம் அநேக பிணியாளிகளைச் சொஸ்தப்படுத்தினார். ஸ்தாபனங்கள் ஏற்படுவதை வெஸ்லி விரும்பவில்லை. தேவனுடைய வல்லமையைத் தேடி, ஒன்றுகூடி ஜெபிக்கவும், தேவனுடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவும், ஒருவரையொருவர் அன்பினால் கவனித்து, அவர்களில் இரட்சிப்பின் கிரியை நடப்பிக்க ஒத்தாசை செய்யவும் கருதி, வெஸ்லியைச் சார்ந்தவர்கள் `ஐக்கியக் குழு’ (UNITED SOCIETY) என்னும் குழுவை ஏற்படுத்தினர். `பாவத்தினின்று இரட்சிக்கப்பட்டு, வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொண்டவர்களே’ அக்குழுவில் சேரமுடியும். சுய ஒழுக்கத்திற்கென்று, அக்குழுவைச் சார்ந்தவர்கள் சில நிபந்தனைகளை உண்டாக்கிக் கொண்டனர். தன் மரணத்திற்குப் பிறகு, இக்குழு ஒரு ஸ்தாபனமாக மாறி, ஆசாரங்களைக் கைக்கொள்வதன் விளைவாக பரிசுத்த ஆவி அவர்களை விட்டுப் போய்விடுவார் என்பதை வெஸ்லி நன்கு அறிந்திருந்தார். `மெதோடிஸ்டு’ என்னும் பெயர் பூமியில் நிலை நிற்காமல் போய்விடும் என்று அவர் பயப்படவில்லையென்றும், பரிசுத்த ஆவி அவர்களைவிட்டுப் போய்விடுவாரென்றே பயப் படுவதாகவும், அவர் ஒருமுறை கூறியிருக்கிறார். வெஸ்லி, தன்னுடைய ஜீவிய காலத்தில், அதிக ஐசுவரியத்தைச் சம்பாதித்திருக்கலாம். அவரோ அவ்வாறு செய்யவில்லை `சம்பாதிக்கக் கூடுமானவைகளையெல்லாம் சம்பாதித்து, சேமிக்கக் கூடியவைகளைச் சேமித்து, கொடுக்கக்கூடியவைகளனைத்தையும் கொடுங்கள், என்று அவர் அநேக முறை கூறியிருக்கிறார். இன்றைய மெதோடிஸ்டு ஸ்தாபனம் மிகவும் ஐசுவரியமுள்ளவைகளாயிருப்பதை வெஸ்லி கண்டால், அவர் மிகவும் வருத்தப்படுவார். வெஸ்லி பெற்றிருந்த ஜீவனையும் வல்லமையையும் இன்றைய மெதோடிஸ்டு ஸ்தாபனங்கள் இழந்துவிட்டன. ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தி ஊழியம் செய்யவேண்டுமென்று வெஸ்லி விரும்பினதேயில்லை. ஆர்மினிய கொள்கைகளில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தாலும், கொள்கைகளின் வேற்றுமை காரணமாக ஏனைய கிறிஸ்தவ சகோதரரிடமிருந்து பிரிந்துபோக அவர் எண்ணங்கொள்ளவில்லை. யாக்கோபு அப்போஸ்தலனைப் போன்று, நித்திய ஜீவனுக்கென்று விசுவாசத்திலும், விசுவாசத்தின் கிரியைகளிலும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார், ஒரு போதகத்தை ஏற்றுக்கொள்வது மாத்திரமல்ல, அதை நடைமுறையிலும் கடைபிடிக்க வேண்டுமென்று அவர் வற்புறுத்தினார். வாழ்த்துதல் வெளி 3.7. `பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில், பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது’. மேற்கூறிய வார்த்தைகள் எவ்வளவு அழகாயிருக்கின்றன, ஒருவர் இத்தனை தன்மைகளையும் கொண்டிருக்கிறார் என்று நினைக்கும்போது, எவ்வளவு அதிசயமாயிருக்கிறது. மகிமையின் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவேயல்லாமல் வேறு யார் தம்மை இவ்விதம் வர்ணித்துக்கொள்ள முடியும். இவ்வாறு தம்மை வர்ணிக்கக் காரணம் அறியவேண்டுமாயின், ஒன்பதாம் வசனத்தைப் பார்க்கவும், `இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன். `யூதர்கள் தாங்கள் மாத்திரம் தேவனுடைய பிள்ளைகளென்று எண்ணியிருந்தனர். அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்து கொன்றனர். இந்தப் பயங்கர செய்கை, நூற்றாண்டுகளாக அவர்களுடைய இரத்தப்பழியை அவர்கள் தலையில் சுமத்தினது. மேசியாவாகிய இயேசுகிறிஸ்துவை, மேசியாவல்ல என்று அவர்கள் மறுதலித்ததன் காரணமாக அவையனைத்தும் சம்பவித்தன. இவரை, வரப்போகும் ராஜாவாகவும், தாவீதின் குமாரனாகவும் அவர்கள் அறியாமல், பெயல்செபூல் அல்லது அழிவுக்குத் தகுதியான துன்மார்க்கன் என்று எண்ணியிருந்தனர். அவர் உண்மையாகவே இம்மானுவேல், மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன், மேசியா, மேற்கூறிய அவருடைய வர்ணனையின் மூலம், அவர் யார் என்பதை வெளிப்படுத்துகிறார். நேற்றும், இன்றும், என்றும், மாறாத அதே இயேசு. அங்கே நிற்கிறார். கலிலேயாவின் கடலோரங்களில் நடந்து பிணியாளிகளைச் சொஸ்தப்படுத்தி, மரித்தோரை உயிர்ப்பித்து, என்றாலும் சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்து, உன்னதங்களில் சிங்காசனத்தில் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் அதே இயேசு பரிசுத்தமுள்ளவராக, விளக்குத் தண்டுகளின் மத்தியில் உலாவுகிறார். இயேசு இவ்வுலகத்திலிருந்தபோது, யூதர்கள் அவரைப் பரிசுத்தமுள்ளவராகக் கருதவில்லை. இப்பொழுதும் அவ்வாறு அவர்கள் கருதுவதில்லை. ஆயினும் அவர் பரிசுத்தமுள்ளவர். `என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்’ (சங் 16. 10). யூதர்கள் நியாயப் பிரமாணத்தின் மூலம் நீதியைத் தேடி, அதைக் பெறாதிருந்தனர். நியாயப் பிரயாணத்தின் மூலம் எவனும் நீதிமானாகவோ, பரிசுத்தவானாகவோ ஆகமுடியாது. பரிசுத்தம் கர்த்தருடையது. `அந்தப்படி நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள்..... அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்’. (1 கொரி 1. 30-31). `நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு......’ (2 கொரி 5.21). கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிடில், அழிவு, நிச்சயம், யூதர்கள் அவரைப் புறக்கணித்ததால், அழிந்து போயினர். இக்காலத்து மக்கள் செய்யும் தப்பிதத்தையே, அச்சபையின் காலத்து மக்கள் செய்தனர். யூதர்கள் ஜெப ஆலயங்களில் (SYNAGOGUE) வழிபாட்டின் முறையை மாத்திரம் கைக்கொண்டது போன்று, பிலதெல்பியா சபையின் காலத்தின் மக்கள் ஒரு சபையில் சேர்ந்து, வழிபாட்டின் ஆசாரங்களைப் பின்பற்றினர். சபையில் ஜீவனில்லை. கிறிஸ்துவில் மாத்திரமே ஜீவனுண்டு. `தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிற தென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்’ (1 யோவான் 5. 11-12). ஆவியினாலே மனிதன் பரிசுத்தமாக்கப்படுகிறான். பரிசுத்த ஆவி இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்து, நமக்குள் வாசம் செய்து, அவருடைய பரிசுத்தத்தினால் நம்மை பரிசுத்தமாக்குகிறது. பரிசுத்தமுள்ளவர் அதோ அங்கே நிற்கிறார். அவருடைய நீதியின் வஸ்திரத்தைத் தரித்து, அவருடைய பரிசுத்தத்தினால் பரிசுத்தமானவர்களாக நாமும் அவரோடு நிற்போம். இது ஆறாவது சபையின் காலம். கர்த்தருடைய பார்வையில் காலம் முடிவடையப் போகிறது. அவர் சீக்கிரம் வரப்போகிறார். `அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் (வெளி 22.11) என்னும் சத்தம் கூடிய சீக்கிரம் புறப்பட்டுச் செல்லும். என்னுடைய பரிசுத்தம் என்னாலுண்டாகாமல், நான் கிறிஸ்துவுக்குள்ளிருந்து, அவருடைய நீதியின் தன்மையைப் பெறுவதால் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். `சத்தியமுள்ளவர் (TRUE) சொல்லுகிறதாவது’ சத்தியம் (TRUE) என்னும் வாக்கு ஒரு கருத்தின் பூரண நிறைவேறுதலைக் குறிக்கிறது. உதாரணமாக இயேசு, `வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான (TRUE) அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார்’ என்றார். (யோவான் 15.1) என்று இயேசு கூறுகிறார். அந்தப்படி மெய்யான (TRUE) பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலே தானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமூகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்’ (எபி 9.24). `இருள் நீங்கிப் போகிறது. மெய்யான (TRUE) ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது’ (1 யோவான் 2.8). பூரணப்படாத கருத்துக்கள், பூரணப்பட்டவைகளின் நிழலாயிருக்கிறது என்று நாமறிகிறோம். வானத்திலிருந்து விழுந்த மன்னாவை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இஸ்ரவேலுக்கென்று, தூதரின் அப்பத்தைக் கர்த்தர் வனாந்தரத்தில் விழப்பண்ணினார். இந்த அப்பம் ஒருவனுக்குப் பூரண திருப்தியளிக்கவில்லை. அதைப் புசித்தவர்கள் மறுபடியும் பசியடைந்தனர். அடுத்த நாள் அதை மீதியாக வைத்தால், அது புழுத்துவிடும். ஆனால் இயேசு வானத்திலிருந்து வந்த மெய்யான (TRUE) அப்பம், அதற்கு வானாந்தரத்தில் விழுந்த மன்னா ஒரு எடுத்துக்காட்டாயிருந்தது. வானத்திலிருந்து வந்த அப்பத்தைப் புசித்தவனெவனும் பசியடைவதில்லை. அவன் மறுபடியும் வந்து அதைப்புசிக்க அவசியமில்லை. அந்த அப்பத்தில் பங்கு கொண்டவுடனே, அவன் நித்திய ஜீவனைப் பெறுகிறான். இது உண்மையான கருத்தைச் சித்தரிக்கிறது. இது சம்பவிக்கும்போது இதற்கு நிழலாயிருந்த சம்பவம் முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது. பூரணப்படாத இரட்சிப்பு இனி அவசியமில்லை. பூரண இரட்சிப்பு இயேசுவின் மூலம் நமக்கு அளிக்கப்படுகிறது. அவர் தேவனின் ஒரு பாகமல்ல; அவரே தேவன். இஸ்ரவேல் ஜனங்கள் வெளிச்சத்தைப் பெற்றிருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எகிப்தியரின் வீடுகளில் வாதையினால் இருள் சூழ்ந்தபோது, இஸ்ரவேலரின் வீடுகளில் வெளிச்சம் உண்டாயிற்று. இப்பொழுது மெய்யான (TRUE) ஒளி வீசுகிறது. இயேசுவே உலகத்தின் மெய்யான ஒளி, மோசேயும், தீர்க்கதரிசிகளும், வேதத்தின் மூலம் மேசியாவைக் குறித்த வெளிச்சத்தை (சத்தியத்தை) மக்களுக்களித்தனர். இதன் காரணமாக இஸ்ரவேலர் சிறிது சத்தியத்தைப் பெற்றிருந்தனர். ஆனால் வெளிச்சத்தின் (சத்தியத்தின்) நிறைவேறுதலாக இயேசு பிரகாசமாக மக்களிடையே தோன்றினார். ஒருகாலத்தில் அக்கினிஸ்தம்பம் இஸ்ரவேலருக்கு இரவில் வெளிச்சம் கொடுத்தது. இப்பொழுது தேவத்துவத்தின் பரிபூரணத்தைச் சரீரப் பிரகாரமாக பெற்றவரின் மூலம் ஜீவனும் வெளிச்சமும் தோன்றுகின்றன. பாவத்தின் பரிகாரமாக இஸ்ரவேலர் சிவப்பு கன்றுக்குட்டியைப் பலியாகச் செலுத்தி வந்தனர். பலி செலுத்தினவனின் பாவம் ஒரு வருஷகாலம் இப்பலியின் மூலம் மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தப்பலி, பாவம் செய்ய வேண்டுமென்ற வாஞ்சையை எடுத்துப் போடவில்லை. இது பூரண பலி வெளிப்படுவதன் நிழலாயிருந்தது. ஒவ்வொரு வருஷமும் மனிதன், பாவம் மறைக்கப்பட பலி, செலுத்த வேண்டிய அவசியம் உண்டாயிருந்தது, மனிதனின் பாவத்திற்கு மிருகத்தின் ஜீவன் ஈடு செய்யப்பட்டதால், அது மனிதனின் மேல் வந்து அவனைப் புதுப்பிக்க முடியவில்லை. ஆனால் பூரணப்பட்ட கிறிஸ்து நமக்காகப் பலிசெலுத்தப்பட்ட போது, கிறிஸ்துவுக்குள்ளிருந்த ஜீவன் மனந்திரும்பின பாவியின் மேல் திரும்பவும் வந்ததால், பாவத்தின் வாஞ்சை அவனை விட்டு எடுக்கப்பட்டு, பூரண விடுதலையடைகிறான். `கிறிஸ்து இயேசுவினால் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்று’ (ரோமர் 8.2). இயேசுவின் காலத்திலிருந்த யூதர்கள் இப்பலியை ஏற்றுக்கொள்ளவில்லை. காளைகள், ஆட்டுக்குட்டிகள் இவைகளின் இரத்தம் எதையும் பூரணப்படுத்தாது. ஒருகாலத்தில், பலி செலுத்துவது தேவனால் நியமிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்து மாமிசத்தில் தோன்றி, தம்முடைய இரத்தத்தைச் சிந்தினதினால் பாவத்தை வென்று நம்மை பூரணராக்கினார். யூதர்கள் மாத்திரமல்ல, பிலதெல்பியா சபையின் காலத்தவரும், மற்றைய சபையின் காலத்தவரும் பூரணமான இப்பலியை ஏற்றுக்கொள்ளவில்லை. `விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்’ (JUSTIFICATION) என்னும் சத்தியத்தை லூதர் மக்களுக்குக் கொண்டு வந்தபோதிலும், ரோம சபையும், அதற்கு ஒத்ததாயிருந்த `வைதீக சபையும்’ (ORTHODOS CHURCH) கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். கிரியைகள் நல்லது தான், ஆனால் அவைகள் உங்களை இரட்சிக்க முடியாது. அவைகள் உங்களைப் பூரணப்படுத்தாது; கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவேண்டும் அல்லது அழியவேண்டும், கிறிஸ்துவையும் ஏற்றுக்கொண்டு, நற்கிரியைகளையும் கடைபிடிப்பதால் இரட்சிப்படைய வேண்டுமென்றில்லை. இரட்சிப்புக்கு கிறிஸ்து மாத்திரமே போதும். இச்சபையின் காலத்தில் தோன்றிய ஆர்மினியர்கள், இரட்சிப்புக்கேற்ற கிறிஸ்துவின் பலியில் மாத்திரம் விசுவாசம் வைக்கவில்லை. அதனோடு நல்நடத்தையையும் கடைபிடித்தால் இரட்சிக்கப் படுவோமென்று அவர்கள் எண்ணினர். நற்கிரியைகளின் மூலம் நாம் இரட்சிப்படைவதில்லை. இரட்சிப்பின் மூலம் நாம் நற்கிரியைகளைச் செய்ய முடியும். இதைக்குறித்து நாம் முன்னமே ஆராய்ந்தோம். இரட்சிப்படைய இயேசுவோடு நாம் வேறெதையும் கூட்ட அவசியமில்லை. அதற்கு இயேசு மாத்திரமே போதும். இரட்சிப்பு கர்த்தருடையது தொடக்கம் முதல் முடிவுவரை அது தேவனுடையது. அவருடைய ஜீவன் எனக்குள்ளிருக்கட்டும். அவருடைய இரத்தம் என்னைக் கழுவட்டும். அவருடைய ஆவி என்னை நிரப்பட்டும். அவருடைய வார்த்தை என் இருதயத்திலும் வாயிலுமிருக்கட்டும். அவருடைய தழும்புகள் என்னை குணமாக்கட்டும். இயேசு மாத்திரமே எனக்குப் போதுமானவராயிருக்கிறார். என்னுடைய நற்கிரியைகளினால் நான் இரட்சிக்கப்படுவதில்லை. கிறிஸ்துவே என் ஜீவன். ஆமென். இவ்வுலகத்தில் எதுவும் என்னைத் திருப்திபடுத்த முடியாது; எதுவும் எனக்கு நன்றாக காண்பதில்லை. கிறிஸ்துவே எனக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமாகவும் பூரணராயுமிருக்கிறார். அவருக்கு முன்னால் சகலமும் அற்பமாய் காணப் படுகின்றன. `தாவீதின் திறவுகோலை உடையவர்’, `அவர் சத்தியமுள்ளவர்’ என்னும் வாக்கைத் தொடர்ந்து இது வருகிறது. ஆம், கிறிஸ்துவே எல்லாவற்றின் நிறைவேறுதலாயிருக்கிறார். மோசே, தேவனுடைய ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான் (A PROPHET); ஆனால் இயேசு தேவனுடைய தீர்க்கதரிசியாயிருந்தார் (THE PROPHET) கர்த்தரின் இருதயத்துக்கேற்றவனாயிருந்த தாவீது, இஸ்ரவேலின் ராஜாவாயிருந்தான்; இயேசு ராஜாதிராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும் தேவாதி தேவனுமாகிய பெரிய தாவீதாயிருக்கிறார். ஆசாரியர்கள் தோன்றாத யூதாவின் கோத்திரத்தில் தாவீது பிறந்து, ஆசாரியர்களுக்கென்று நியமிக்கப்பட்ட பரிசுத்த அப்பத்தைத் தின்றான். அவன் விரோதிகளை நிர்மூலமாக்கி, பிரஜைகளை ஆபத்திலிருந்து காப்பாற்றினான்; ராஜாவாக அவன் சிங்காசனத்தில் உட்கார்ந்தான். அவன் தீர்க்கதரிசியாய் விளங்கி, இயேசுகிறிஸ்துவுக்கு அற்புதமான முன்னடையா ளமாயிருந்தான். `தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்’, (ஏசா 22.22) என்று ஏசாயா உரைக்கிறான். இயேசுவையும், சபையில் அவர் நடத்தும் ஊழியத்தையும் குறித்த பழைய ஏற்பாட்டின் வசனத்தை ஆவியானவர் இங்கு உபயோகிக்கிறார். பழைய ஏற்பாட்டின் காலத்தில், தாவீதின் திறவுகோலைக் குறித்த அர்த்தம் ஒரு மறைபொருளாயிருந்து, இயேசு விளக்குத் தண்டுகளின் மத்தியில் நிற்கும்போது, அது வெளிப்படுகிறது. இயேசு இவ்வுலகத்திலிருந்த போது, தாவீதின் திறவுகோலை உடையவராயில்லை. அவர் உயிர்த்தெழுந்த பிறகு அதை உடையவராயிருக்கிறார். இந்தத் திறவுகோல் எதைக் குறிக்கிறது? அதற்குரிய விடை, அது வீற்றிருக்கும் ஸ்தலத்தில் அமைந்துள்ளது. திறவுகோல் அவருடைய கையில் காணப்படவில்லை, அல்லது அவருடைய கழுத்தில் தொங்கப்படவில்லை. ரோமன் சபையார் கூறுவது போன்று, அது மனிதரின் கரங்களில் கொடுக்கப்படவில்லை. அவ்வாறாயின் தாவீதின் திறவுகோலை அவர் மாத்திரமே உபயோகிக்கிறாரென்றும் அவர் மாத்திரம் திறக்கவும் பூட்டவும் முடியுமென்றும், ஒரு மனிதனுக்கும் அவ்வுரிமையில்லையென்றும் வேதவாக்கியம் கூற வேண்டிய அவசியமில்லை. அந்தத் திறவுகோல் அவர் தோளின் மேலிருப்பதைக் கவனிக்கவும் (ஏசா 22.22). தோளுக்கும் திறவுகோலுக்கும் சம்பந்தமென்ன? `கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்’ (ஏசா 9.6). கிழக்கு நாடுகளில் நடைபெறும் கலியாண வைபவத்தில் உண்டாகும் ஒரு பிரத்தியேக வழக்கத்தையொட்டி இவ்வாக்கு அமைந்திருக்கிறது. மணவாட்டி மணவாளனுடன் சேர்க்கப்பட்டவுடன், மணவாளனின் ஆதிக்கத்தில் மணவாட்டியிருப்பாளென்றும், அவளுக்குரிய உரிமைய னைத்தும் அவனுக்குக் கொடுக்கப்பட்டதென்றும், அவன் மாத்திரமே சகல உத்திரவாதத்தையும் ஏற்று அவளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு அறிகுறியாக மணவாட்டி தான் உடுத்தியிருக்கும் திரையைக் (VELI) கழற்றி மணவாளன் தோளின் மேல் வைப்பது வழக்கம். இதுதான் அன்பர்களே, தாவீதின் திறவுகோல், தேவன் தம்முடைய சுயாதீன சித்தத்தின்படி, தன்னுடைய மணவாட்டியை முன்னறிந்து, அவளைத் தெரிந்துகொண்டார். அவள் அவரைத் தெரிந்து கொள்ளவில்லை அவர் அவளை அழைத்தார்; அல்லாமல் அவள் தன் சொந்தமாக வரவில்லை. அவர் அவளுக்காக மரித்து, அவருடைய இரத்தத்தினால் அவளைக் கழுவினார். அவளைக் கிரயத்திற்கு வாங்கினார். அவள் அவருக்கு மாத்திரமே சொந்தமானவள். அவள் தன்னை முழுவதுமாக அவரிடம் சமர்ப்பிக்கிறாள். அவரும் அவளைப் பாதுகாக்கும் உத்திரவாதத்தை ஏற்கிறார். அவரே அவளுக்குத் தலைவன்; ஆம் கிறிஸ்துவே அவருடைய சபைக்குத் தலையாயிருக்கிறார். சாராள் ஆபிரகாமை `ஆண்டவனே’ என்று அழைத்தது போல் அவளும் அவரை ஆண்டவனென்று அழைத்து, அவர் அவ்வாறிருப்பதால் சந்தோஷப்படுகிறாள், அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் அவள் சந்தோஷம் கொள்கிறாள். மனிதர் இச்சத்தியத்தில் கவனம் செலுத்துகின்றனரா? திருச்சபையின் மேல் சகல அதிகாரமும் பெற்ற அவரை உயர்வாக மதிக்கின்றனரா? இல்லவே இல்லை. ஒவ்வொரு காலத்திலும் சபை குருமார்களால் அரசாளப்பட்டு, தேவனுடைய கிருபையும், இரக்கமும் மக்களிடமிருந்து மறைக்கப்படுகிறது. குருமார்கள் அன்போடு சபையின் உத்திரவாதத்தை ஏற்காமல், பண ஆசை கொண்டவர்களாய் மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி சபையை அழித்தனர். அவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்து, சபையின் மக்களை நிந்தித்தனர். எல்லாக் காலங்களிலும் இது நிகழ்ந்தது. ஒவ்வொரு காலத்துச் சபையும் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டு, மக்களை மக்கள் அரசாள சம்மதித்து, மக்களின் ஆதிக்கத்தை உண்டு பண்ணினது. இதற்கு விரோதமாக கிளர்ச்சி செய்தவர் கொடூரமாக அடக்கப்பட்டனர்; இல்லையேல் புறக்கணிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஸ்தாபனமும் சபையை அரசாள அதிகாரம் பெற்றிருப்பதாக ஆணையிடுகிறது. ஒவ்வொரு ஸ்தாபனமும் சத்தியத்துக்குரிய வாசலைத்திறப்பதாகக் கூறுகிறது. அது உண்மையல்ல இயேசு மாத்திரமே சபையின் அங்கத்தினர்களை நியமித்து, அவர்களுக்கு ஊழியத்தையும், ஆவியின் வரங்களையுமளிக்கிறார். சபையானது அவருடைய உரிமை, அவளையன்றி, அவருக்கு வேறு யாருமில்லை. அவர் அவளைப் பாதுகாத்து வழிநடத்துகிறார். நாம் வாழும் காலத்திலுள்ள சபை, உண்மையான சபையை விட்டு எவ்வளவாக வழுவிப் போயிருக்கிறது! சபையின் சார்பாக பேசுகின்றோம் என்று கூறுபவர்கள் கூடிய சீக்கிரம் உலக சபைகளின் ஐக்கியத்தில் பங்குபெற்று இயேசுவை சிம்மாசனத்திலிருந்து விலக்கி, ஜீவிக்கிற அந்திக்கிறிஸ்துவை இந்த ஐக்கியத்தின் தலைவனாக நியமிப்பர், கிறிஸ்து சபையின் வெளியிலிருந்து `இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன் ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான் (வெளி 3.20) என்று கூறுகிறார். நம்முடைய ஆண்டவர் தோற்கடிக்கப்படவில்லை. மக்கள் இரட்சிப்படைய நாங்கள் காரணமாயிருக் கிறோமென்று மனிதர் கூறிக்கொள்வது தவறாகும். பிதாவானவர் அவருக்குக் கொடுக்கிற யாவும் அவரிடத்தில் வரும்; அவரிடத்தில் வருகிறவனை அவர் புறம்பே தள்ளுவதில்லை. அவர் தந்தவைகளில் யாவையும் அவர் இழந்து போவதில்லை. (யோவான் 6. 37-39). கிறிஸ்துவின் சரீரத்திற்கென்று தெரிந்துகொள்ளப்பட்ட கடைசி நபர் இரட்சிக்கப்படும்போது, கர்த்தர் தரிசனமாவார். தாவீது இஸ்ரவேலை அரசாண்டது போன்று தாவீதின் குமாரனாகிய இயேசு, அவனுடைய சிங்காசனத்தில் வீற்றிருந்து ஆயிரம் வருஷம் அரசாட்சி செய்வார். இதைத்தான் `தாவீதின் திறவுகோல்’ குறிக்கிறது. மரணத்திற்கும் பாதாளத்திற்கு முரிய திறவுகோலையுடையவராயிருக்கிற இயேசு, பூமியில் அவருடைய நீதியின் அரசாட்சியில் பங்கு கொள்வதற்கென, தமக்குச் சொந்தமானவர்களை உயிரோடு எழுப்புவார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் எல்லா வாக்குத்தத்தங்களும் உண்மையாகவே நிறைவேறுகின்றன. அவருக்குள் நாம் இருப்பதனால், அவர் நமக்கென்று கிரயத்துக்குக்கொண்ட அனைத்திற்கும் நாம் உரிமையாகிறோம். ஆம், மகிமையின் கர்த்தர் அதோ நிற்கிறார். ஒருகாலத்தில் பிதாவாக, `சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர்’ என்று சத்தமிடும் தூதர்களாலும், பிரதான தூதர்களாலும் கேரூபின்களாலும், சேராபீன்களாலும், வானத்தின் சேனைகளாலும் அவர் சூழப்பட்டிருந்தார். அவருடைய பரிசுத்தத்தின் காரணத்தினால் ஒரு மனிதனும் அவரை அணுக முடியாதிருந்தது. ஆனால் இப்பொழுது, அவருக்குள் நாம் தேவநீதியாகும்படி அவர் சபைகளின் மத்தியில் உலாவித் தம்முடைய பரிசுத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ஆம், பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம், பதினாயிரம் பேர்களில் சிறந்தவர். அல்பா ஓமேகா, தாவீதின் வேரும் சந்ததியுமானவர், பிதா குமாரன், பரிசுத்த ஆவி, எல்லாவற்றிற்கும் எல்லாமானவர், எல்லாவற்றிலும் பூரணரான இயேசு, அங்கே நிற்கிறார். `நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்’ (ஏசா 9.6). அவருக்குள் சகலமும் பரிபூரணமாய் நிறைவேறின. ஒருகாலத்தில் அவரை நாம் மதிக்கவில்லையென்றாலும், இப்பொழுது நாம் மகிமையுள்ளதும், விவரிக்கக் கூடாததுமான சந்தோஷத்தினால் அவரில் அன்புகூறுகிறோம். சபையின் மத்தியில் அவர் நிற்கிறார். சகலத்தையும் வென்ற அவர் மணவாட்டியாகிய சபைக்கு தலையாயிருப்பதால், அவருடைய துதிகளை நாம் பாடுவோம். அவர் மணவாட்டியைக் கிரயத்துக்கு வாங்கி, அவளைச் சொந்தமாக்கிக் கொண்டார். அவள் அவருக்கு மாத்திரம் சொந்தமானவள்; அவரும் அவளைப் பாதுகாக்கிறார், அவர் நம்முடைய ராஜா; நாம் அவருடைய ராஜ்யங்கள். அவர் நம்மில் ஆளுகை செய்கிறார். நாம் அவருடைய உடைமைகளாயிருக்கிறோம். யூதர்கள் இயேசுகிறிஸ்துவைப் புறக்கணித்தது போன்று, ஒரு பெயர்க் கிறிஸ்தவனும் அவரைப் புறக்கணிக்கிறான். யூதர்கள் அவரைச் சிலுவையிலறைந்து, உண்மையான விசுவாசிகளைப் பகைத்தனர். பெயர்க் கிறிஸ்தவர்கள் அவரை மறுபடியும் சிலுவையிலறைந்து, உண்மையான சபையை நிர்மூலமாக்க முயன்றனர். எல்லாவற்றிற்கும் மேலான தேவன் திரும்ப வரும்பொது, உண்மையான ராஜா யாரென்பதை நிரூபிப்பார். அப்பொழுது உலகம் முழுவதும் அவருக்கும் பரிசுத்தவான்களுக்கும் தலைவணங்கும். திறந்த வாசலின் காலம் வெளி 3.8. `உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்’. இச்சபையிலுள்ளவர்களின் கிரியைகளினால் வாசல் திறக்கப்பட்டது. இவ்வசனத்தை விளக்கும் முன்பு, ஒரு சபையின் காலத்திற்கும் அதைத் தொடர்ந்துவரும் சபையின் காலத்திற்குமிடையே பிளவு எதுவுமின்றி, ஒரு காலம் மற்றொரு காலத்திற்குள் தொடர்ந்து செல்கின்றது (OVERLAPPING) என்பதை நான் நினைவுறுத்த விரும்புகிறேன். அப்படியெனில், ஆறாம் சபையின் காலத்தில் நடைபெற்ற கிரியைகள் ஏழாம் சபையின் காலத்திலும் காணப்பட்டன. ஏழாம் சபையின் காலம், மிகவும் குறுகிய காலமாயிருந்து, ஆறு சபைகளின் காலத்தில் காணப்பட்ட பொல்லாங்கை ஒருங்கே கொண்டு, அதே சமயத்தில் பெந்தேகோஸ்தின் வல்லமையையும் தத்ரூபமாகப் பெற்றிருக்கிறது. பிலதெல்பியா சபையின் காலம் முடியும் தருணத்தில், லவோதிக்கேயா சபையின் காலம் தொடங்கி, கோதுமை மணிகளையும் களைகளையும் அறுவடைக்குக் கொண்டுவரும். `முதலாவது களைகளைப் பிடுங்கி, அவைகளைக் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்’ (மத் 13.30). பெந்தேகோஸ்தே காலத்தில் நடப்பட்ட வித்து, தண்ணீர்பாய்ச்சப்பட்டு வளர்ந்து, கோதுமை மணிகள் மறுபடியும் அச்செடியில் காணப்படும் வரை, சர்தை சபையின் காலத்தில் தொடங்கப்பட்ட சீர்திருத்தம் நீடிக்கும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். கோதுமை செடி வளரும்போது, விதைக்கப்பட்ட களைகளும் வளர்ந்து, இவ்விரண்டும் ஒன்றாக அறுவடை செய்யப்படும். பருவ காலங்களை நீங்கள் கவனிப்பீர்களானால், கோடையில் முழுவதுமாக வளர்ந்த கோதுமைச் செடி, இலையுதிர் காலத்தில் (AUTUMN) விதையுதிர்க்கிறதை நாம் பார்க்கலாம். கோடை எப்பொழுது இலையுதிர் காலமாய் மாறுகிறது என்பதை நாமறிவதில்லை. அதுபோன்று, கடைசி இரு சபைகளின் காலங்களும் இருக்கின்றன. இந்தக் காலத்திலுள்ள சபைக்கு, `நான் சீக்கிரமாய் வருகிறேன்’ (11ம் வசனம்) என்று இயேசு உரைக்கிறார். அப்படியாயின் கடைசி சபையின் காலம் மிகவும் குறுகியதாயிருக்க வேண்டும். யாரும் பூட்டக்கூடாத திறந்த வாசலைக் குறித்து நாம் சற்று சிந்திப்போம். இச்சபையின் காலத்தில் நடைபெற்ற பிரமாண்டமான சுவிசேஷ ஊழியத்தை இது குறிக்கிறது. `மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவா பட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்.....’ (2 கொரி. 2.12) என்று பவுல் ஒரு புதிய பட்டிணத்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எடுத்த முயற்சியைக் குறிப்பிடுகிறான். அதுவரை உலகம் காணாத மகத்தான சுவிசேஷ ஊழியம் பிலதெல்பியா சபையின் காலத்தில் நடைபெற்றதைத் `திறந்த வாசல்’ குறிக்கிறது. தேவனுக்கும், `மூன்று என்ற எண்ணுக்கும் சம்பந்தமுண்டு. மூன்றாம் சபையாகிய பெர்கமு சபையின் காலத்தில் சபை அரசாங்கத்தோடு ஒன்றுபட்டது. அப்பொழுது நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள், அவர்களின் போதகமாக மாறியது; கள்ளச் சபைக்கு, இக்காலத்தில் வாசல் திறக்கப்பட்டது. அரசாங்க அங்கீகாரம் பெற்ற இச்சபை, கிறிஸ்தவப் பெயரைக் சூடிக்கொண்டதேயல்லாமல், கிறிஸ்தவ கொள்கைகளில் ஒன்றையும் கடைபிடிக்கவில்லை. இதன் கொள்கைகள் காட்டுத் தீயைப் போன்று எங்கும் பரவியது. அதற்கு மூன்று காலங்கள் கழித்து, ஆறாம் சபையின் காலத்தில், அநேக போராட்டங்களுக்குப் பிறகு சத்தியத்திற்கு வாசல் திறக்கப்பட்டது. இந்தத் `திறந்த வாசல்’, பின்வரும் வசனங்களில் கூறப்பட்ட பெந்தேகோஸ்தே நாளின் மாதிரியைப் பின்பற்றியிருந்தால் நலமாயிருக்கும். `ஆகையால் நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய் கவனிக்க வேண்டும். ஏனெனில் தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவர்களிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து கொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வோம்’ (எபி 2. 1-4), இயேசு தாமே ஒரு உண்மையான சபையின் மாதிரியைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். `பின்பு, அவர் அவர்களை நோக்கி; நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப் படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப் படுவான்; விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன. என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்’ (மாற் 16. 15-20). உலகெங்கும் போய் வேதபள்ளிகளை நிறுவ, அல்லது கைப்பிரதிகளை வழங்கக் கர்த்தர் கட்டளையிடவில்லை. இவைகளெல்லாம் நல்லதுதான். ஆனால் இயேசு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, வார்த்தையில் உறுதியாய் நிற்கக் கட்டளையிட்டார்; அப்பொழுது அடையாளங்கள் பின்தொடரும் என்று அவர் கூறினார். தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிக்கும் முறையை அவர் பன்னிரண்டு சீஷர்களுக்குப் போதித்தார். `அப்பொழுது, அவர் பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தருடைய நாமங்களாவன. முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே, இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்; நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள், போகையில், பரலோக ராஜ்யம் சமீபத்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம் பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள். பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள். இலவசமாய்க் கொடுங்கள்’ (மத் 19. 1-8), அவருடைய ஊழியத்தைத்தான் பன்னிரண்டு சீஷர்களுக்கும் இவர் பகிர்ந்து கொடுத்தார். `பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து. ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார். அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும் சிதறப்பட்டவர்களுமாயிருந்த படியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீஷர்களை நோக்கி; அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்’ (மத் 9. 35-38). இத்தகைய ஊழியம் அப்போஸ்தலர்களுக்கு மாத்திரம் அளிக்கப்பட்ட தென்றும், அவர்களுடைய மரணத்தோடு இந்த ஊழியமும் முடிவடைந்ததென்றும் பலர் கூறுகின்றனர். அது உண்மையல்ல. இயேசு இவ்வுலகத்திலிருந்தபோது, வல்லமை பொருந்திய ஊழியத்தை அவருக்குச் சொந்தமானவர்களுக்கு ஏற்கனவே அளிக்கத் தொடங்கினார். `இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி; அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல் இதோ நான் உங்களை அனுப்புகிறேன்; பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டு போகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம். ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது. இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக் கொண்டால் அவர்கள் உங்கள் முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்’ (லூக்கா 10. 1 - 9). பிலிப்பின் மகத்தான ஊழியத்தை யார் மறுக்கமுடியும்? இரினேயஸ், மார்டின், கொலம்பா, பாட்ரிக், இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் நடத்திய பரிசுத்த ஆவியின் ஊழியத்தை மறுக்க யார் துணிச்சல் கொள்ளுவர்? ஆம், வேதத்தில் கூறப்பட்ட முறையே திறந்த வாசலின் உண்மையான வழியாகும். இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறாரென்றும், அவரை விசுவாசித்து, ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு இப்பொழுதும் வல்லமையளிக்கப்படுமென்பதை என் சொந்த ஜீவியத்தில் நேர்ந்த சம்பவம் கொண்டு நிரூபிக்க விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பன் (DURBAN) என்னும் பட்டணத்தில், ஒரு லட்சத்திற்கு மேலான ஜனங்கள், தேவனை அறியவேண்டுமென்ற வாஞ்சையோடு, அநேக மைல்கள் பிரயாணம் செய்து, என் பிரசங்கத்தைக் கேட்கக் குழுமியிருந்தனர். சுகம் அவசியமாயிருந்த அநேகரை, மக்கள் தங்கள் முதுகுகளில் சுமந்து, வயல்களையும், மலைகளையும் கடந்து, கூட்டத்திற்குக் கொண்டு வந்தனர். பரிசுத்த ஆவியினால் நடத்தப்படும் மகத்தான கிரியைகளைக் கண்டு, அந்த தேசம் முழுவதும் உணர்ச்சிவசப்பட்டது. ஒரு மத்தியான வேளையில் நான் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான முகம்மதியர்களில் ஒருவள் மேடையின் மேல் ஏறிவந்தாள். அச்சமயம் முகம்மதியரின் மத்தியில் ஊழியம் செய்யும் ஒரு சுவிசேஷகர், மேடையின் மேலிருந்து, அவளுடைய ஆத்தும இரட்சிப்புக்கென்று மெதுவாக ஜெபிக்கத் தொடங்கினார். எத்தனையோ வருஷங்களாக ஊழியத்தை நடத்தியும், அதுவரை ஒரு முகம்மதியன் மாத்திரம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டானென்று அவர் தாமே கூறியிருக்கிறார். இம் முகம்மதியர்கள் மேதிய - பெர்சிய பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்களை மாற்றுவது மிகவும் கடினமான காரியம். இந்த முகம்மதியப் பெண் என் முன் நின்றபோது, நான் மொழிப் பெயர்ப்பாளரின் உதவியைக் கொண்டு அவளிடமும், அங்கிருந்த முகமதியர்களோடும் பேச ஆரம்பித்தேன். இயேசுவைக் குறித்து சுவிசேஷர்கள் அவளிடம் கூறியிருக் கின்றனராவென்றும், அவர் சுகமளிப்பவரென்றும், காலங்கள் தோறும் அவருடைய மக்களுக்குள் அவர் தங்கி, கடைசியில் அவர்களைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள அவர் திரும்பி வருவாரென்று வேதவாக்கியங்களின் மூலம் அவர்கள் போதித்திருக்கின்றனராவென்றும் கேட்டேன் அல்லாமலும், இயேசு இரட்சித்து சுகமளிப்பவர் என்பதை அவர்கள் அறிவார்களாவென்றும் வினவினேன். அதே இயேசு, உலகத்திலிருந்தபோது செய்த அதே கிரியைகளை, இப்போது தம்முடைய ஆவியினால் அவர்கள் மத்தியில் செய்ய வாஞ்சிக்கிறீர்களா? என்று நான் கேட்டபோது, அவர்கள் `ஆம்’ என்று பதிலுரைத்தனர். `அப்படியெனில் அவருடைய வார்த்தையை விசுவாசிப்பீர்களா? என்றதும் அந்த ஸ்திரி `ஆம்’ என்றாள். முகம்மதியர்கள் ஆபிரகாமின் சந்ததியார். அவர்கள் ஒரே தேவனுண்டென்று விசுவாசித்தாலும், இயேசு தேவனுடைய குமாரனில்லை யென்று அவரைப் புறக்கணித்து, அவருக்குப் பதிலாக முகம்மது என்பவரைத் தேவனுடைய தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்கின்றனர். இயேசு மரித்து உயிர்த்தெழுந்திருக்க வில்லையென்று அவர்கள் போதிக்கப்பட்டதனால், அவர்கள் அவ்வாறு விசுவாசிக்கின்றனர். ஆனால், இயேசு மரித்து உயிர்தெழுந்தார், அவருடைய ஆவியைச் சபைக்கனுப்பினார். அவருக்குள்ளிருந்த ஆவி, இப்பொழுது சபையில் காணப்பட்டு, அவர் செய்த கிரியைகளையே சபையும் செய்கிறது. இயேசு, `பிதாவானவர் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்’ (யோவான் 5.19) என்று கூறினார். நான் முகம்மதிய ஸ்திரீயை நோக்கி, `உனக்கிருக்கும் பிணியை இயேசு இப்பொழுது வெளிப்படுத்தி உன்னுடைய பூர்வீகத்தையும் தெரிவித்தால், வருங்காலத்திற்கென்று அவரை விசுவாசிப்பாயா? என்று கேட்டேன். `அவ்வாறே செய்வேன்’ என்று அவள் பதிலுரைத்தாள். முகம்மதியர்களெல்லாரும் என்ன நேரிடுமென்று ஊக்கத்தோடு கவனிக்க ஆரம்பித்தனர். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், `உன் கணவன் குள்ளமாயும், பருமனாயும் இருப்பான். அவனுக்குக் கறுத்த மீசையுண்டு. உனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். மூன்று நாட்களுக்கு முன்பு, வைத்தியர் உன்னைப் பரிசோதித்து, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி (CYST) யுண்டு எனக் கூறினார்’ என்றார். அவள் `அது சரி’யென்று ஆமோதித்தாள். `நீ சுகத்திற்கென ஒரு கிறிஸ்தவனிடம் வரக் காரணமென்ன? முகம்மது தீர்க்கதரிசியிடம் போகாததேன்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவள் `நீங்கள் எனக்கு ஒத்தாசை செய்யமுடியும்’ என்று கூறினாள். அப்பொழுது நான், `நான் உனக்கு ஒத்தாசை செய்யமுடியாது; ஆனால் இங்கிருக்கும் உன் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து உன்னைக்குறித்து எல்லாமறிவார். அவர் உனக்குக் சகாயம் செய்வார்’ என்று கூறினேன். நான் இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகிறேன்’ என்று அவள் கூறினமாத்திரத்திலே சொஸ்தமடைந்தாள். சுவிசேஷம் வார்த்தையோடும் வல்லமையோடும் பிரசங்கிக்கப்பட்டதால், பத்தாயிரம் முகம்மதியர்கள் அன்று கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். முப்பது வருடம் பிரசங்கித்து அதன் பலனை அனுபவிக்க வேண்டாமென்று தேவன் எப்பொழுதுமே கூறினதில்லை. வார்த்தையும் வல்லமையுமாகிய திறந்த வாசலை அவர் நமக்குக் கொடுத்தார். பவுலின் ஊழியத்தில் இவையிரண்டும் நற்பலனளித்தன.. `என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட தாயிருந்தது’ (1 கொரி. 2.5). ரொடீஷியா (RHODESIA) என்னும் ஸ்தலத்திலுள்ள நியூசாலிஸ்பரி (NEW SALISBURY) பட்டினத்தில் நான் விமானமேறிய போது, நான்கு அமெரிக்க மெதோடிஸ்டுகளைக் கொண்ட குழுவைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களின் இரண்டு வருஷ ஊழியத்தில், ஒரு ஆத்துமாவையாவது இரட்சிக்க முடிந்ததா என்று நான் கேட்டதற்கு, அவர்களால் பதிலுரைக்க முடியவில்லை. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, உண்மையான சுவிசேஷத்தைப் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு போதித்தாலன்றி, இயேசு கூறிய அடையாளங்களை (மாற் 16. 17 - 18) ஊழியத்தில் காண்பதரிது என்று நான் அவர்களிடம் கூறினேன். பெந்தேகோஸ்தே நாளில் திறக்கப்பட்ட அந்த வாசலின் மூலம் வசனம் போதிக்கப்படாததனால், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வல்லமையற்றுக் காணப்படுகின்றனர். பிலதெல்பியா சபையின் காலத்தின் ஊழியம் திறந்த வாசலின் வல்லமையைப் பெறவில்லை. ஆகையால் தான் இயேசு `உனக்குக் கொஞ்சம் பலனிருக்கிறது’ என்று கூறுகிறார். ஆம், ஆவியின் வல்லமை இச்சபையின் காலத்தில் காணப்படவில்லை. வேத வசனம் நன்றாகப் போதிக்கப்பட்டதன் காரணமாக, இரட்சிப்படைய வேண்டிய முறையை மக்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆனால் பொதுவாக மகத்தான கிரியைகளை நடப்பிக்கும் தேவ ஆவியின் வல்லமை அந்தக் காலத்தில் காணப்படவில்லை. ஆயினும் சீர்திருத்தக் காலத்தைவிட, இக்காலம் ஆவிக்குரிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இக்காலத்தில் `மிஷன்களுக்குத் தகப்பன்’ என்று அழைக்கப்பட்ட வில்லியம் காரி (WILLIAM CAREY) என்பவர் தோன்றி, எல்லா ஜாதிகளுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்க அப்போஸ்தலர்களுக்கு இயேசு கொடுத்த கட்டளையை மக்களுக்கு நினைவுறுத்தி, உலக முடிவு பரியந்தமுள்ள சுவிசேஷகருக்கும் இக்கட்டளை பொருந்தும் எனப் பிரசங்கித்து, சுவிசேஷ ஊழியத்தின் ஆர்வத்தைப் புத்துயிர் பெறச் செய்தார். `தெரிந்து கொள்ளப்படுதலில்’ நம்பிக்கை கொண்ட கால்வினிஸ்டுகள், சுவிசேஷ ஊழியமின்றியே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இரட்சிக்கப்படுவர் எனும் கருத்துக் கொண்டு, இத்தகைய ஊழியம் ஆவியானவரின் கிரியைக்கு விரோதமாக எழும்பியது எனத் தவறான எண்ணம் கொண்டு, அதை மும்முரமாக எதிர்த்தனர். ஆனால், ஆண்ட்ரூஃபுல்லர் (ANDREW FULLER) என்பவர் பிரசங்கம் நிகழ்த்தி பணம் சேர்த்து, காரிக்கு ஒத்தாசை செய்ததினிமித்தம், கி.பி. 1792ல் சகல நாடுகளுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப் படுவதற்கென ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சங்கம் காரியை வெளிநாட்டுக்கு அனுப்பியது. அதனால் அநேக ஆத்துமாக்கள் இந்தியாவில் இரட்சிக்கப்பட்டனர். கி.பி. 1795ல் லண்டன் மிஷினரி சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற, இது ஆயிரக்கணக்கான சுவிசேஷகரை உலகத்தின் எல்லாப் பாகங்களிலும் அனுப்பினது. திறந்த வாசலை உனக்கு முன்பாக வைக்கிறேன்’ என்னும் வாக்கியத்தைத் திரும்பவும் ஆராய நான் விரும்புகிறேன். இந்தச் சபையின் காலத்தில் `நான் சீக்கிரமாய் வருகிறேன்’ (வெளி 3.11) என்று இயேசு கூறினார்; கடைசி சபையின் காலத்தில் அவர் நீதியோடு சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் (ரோமர் 9.28). வெளி 3.8ல் `திறந்த வாசல்’, `கொஞ்சம் பலன்’, `வசனம்’, `நாமம்’ என்னும் நான்கு பதங்கள் காணப்படுகின்றன. `திறந்த வாசல்’ மற்ற மூன்றோடும் சம்பந்தங்கொண்டது. வாசல் எதைக் குறிக்கிறது? `ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி. நானே (I AM) ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ (யோவான் 19.7) ஆம், நானே (I AM) என்பவர். ஆடுகளுக்கு வாசலாயிருக்கிறார். இயேசு இந்த உவமையைக் கூறும் போது, தம்மை `மேய்ப்பன்’ என்றும் அழைத்துக் கொள்ளுகிறார் (யோவான் 19.11). அப்படியெனில் மேய்ப்பன் ஆடுகளுக்கு வாசலாயிருக்கிறான். கிழக்கு தேசத்திற்குச் சென்றிருந்தபோது, இரவு நேரத்தில் மேய்ப்பன் தன் ஆடுகளை ஒன்று கூட்டி, ஆட்டுக் கிடைக்குள் ஓட்டிச் சென்று, அவைகளை எண்ணுவதைக் கண்டிருக்கிறேன். பிறகு ஆட்டுக் கிடையின் திறந்த வாசலில் அவன் படுத்து, அவனே கிடையின் வாசலாகிவிடுவான். அவன் மூலமேயன்றி, யாரும் உள்ளே பிரவேசிக்கவோ, அல்லது வெளிவரவோ முடியாது. அடுத்த நாள் என்னுடைய சிநேகிதனோடு மோட்டார் வண்டியில் பிரயாணம் செய்தபோது, மேயப்பன் ஆடுகளைப் பட்டினத்திற்குள் ஓட்டிச் செல்வதைக் கண்டேன். ஆட்டு மந்தை கடப்பதற்கென எல்லாப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. கிழக்கிந்திய பட்டினங்களில், பொருட்களை சந்தை வெளியில் விற்கும் வழக்கமுண்டு. இவைகளைக் கண்டதும் ஆடுகள் அவைகளைத் தின்பதற்கென அங்குமிங்கும் ஓடிக் குழப்பமேற்படுமென நான் எண்ணினேன். ஆனால் மேய்ப்பன் சென்றவழியில், சிறிதளவும் மாற்றமின்றி, ஆடுகள் செல்வதைக் கண்டு வியப்படைந்தேன். அப்பொருட்களைக் கண்டும்கூட, அவைகள் தங்கள் வழியை விட்டு அகலவில்லை. அவ்வாறே நாமும் நல்லமேய்ப்பனைச் சார்ந்தவர்களாயிருப்பின், அவருடைய அடிச் சுவடிகளைப் பின்பற்றுவோம். சபையின் அந்தஸ்தைக் கண்டு நாம் வழிவிலகமாட்டோம்; அல்லது பட்டம் பெற்ற வேத பண்டிதர்களின் சத்தத்தைக் கேட்கமாட்டோம். `ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியால் அவனுக்குப் பின் செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல் அவனை விட்டோடிப்போம்’ (யோவான் 19. 4-5) என்று வேதம் உரைக்கிறது. கிழக்குப் பாகங்களில், பன்றி, ஒட்டகம், கோவேறுக் கழுதை போன்றவைகளை மேய்ப்பவர்களும் `மேய்ப்பர்கள்’ என்றே அழைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்களுக்கும் ஆடு மேய்ப்பவர்களுக்கும் வித்தியாசமுண்டு. ஆடுகளை மேய்ப்பவன் மாத்திரம் அவைகளை ஆட்டுக்கிடைக்கு ஓட்டிச் சென்று, இரவில் அவைகளைப் பாதுகாக்கின்றான். மற்ற மிருகங்களை மேய்ப்பவர்களோ, அவைகளை வெளியில் தங்க விட்டு, வீடு திரும்புவர். நம்முடைய மேய்ப்பன் நம்மை விட்டு விலகுவதுமில்லை. நம்மைக் கைவிடுவதுமில்லை. இரவு நேரத்தில் நான் அவர் பாதுகாப்பிலிருக்க விரும்புகிறேன். இயேசுவே வாசலென்பதை நாம் அறிந்து கொண்டோம். அவரே ஆடுகளின் வாசல், வாசல் திறக்கப்படுவதைக் குறித்து இங்கே கூறப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இயேசுவானவர் தம்மை வெளிப்படுத்திக் கொடுப்பதை இது குறிக்கிறது. வெளிப்பாட்டின் அர்த்தம் நம்மை பெலப்படுத்தவும், அவருடைய நாமம் மகிமைப்படவும், வார்த்தையின் முக்கியத்துவத்தை நாம் உணரவும், இக்காலத்தில் கொடுக்கப்படுகிறது, கடைசி இரு சபைகளின் காலங்களில், இயேசுகிறிஸ்துவின் தேவதத்துவம் வெளிப்படையானது குறிப்பிடத்தக்கது. ஆம், அவர் தேவனென்று நாம் அறிந்து கொண்டோம். அவ்வாறில்லாவிடில் அவர் எங்ஙனம் நமது இரட்சகராக இருக்க முடியும்? அவர் மாத்திரம் தேவனென்றும், அவர் அல்பா, ஓமேகாவென்றும், நாமறிந்து கொண்டோம். ஆண்டவரும் கிறிஸ்துவுமான அவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் சத்தியம் முதல் சபையின் காலத்திற்குப் பிறகு மறைந்து, இக்கடைசி காலங்களில் வெளியரங்கமாகிறது. அவர் யார் என்னும் வெளிப்பாடு நமக்குக் கிடைத்துவிட்டது. ஒரே தன்மையுடைய மூன்று ஆட்கள் தேவத்துவத்தில் இல்லை. இவ்வாறு விசுவாசம் கொள்பவர்கள் முதலாம் கற்பனையை மீறுகிறவர்களாயிருக்கிறார்கள். தேவத்துவத்தின் வெளிப்பாடு கிடைக்கப் பெற்ற காரணத்தால், உண்மையான சபை பெலப்படும். இவ்வளவு காலம் கழித்து அவளுடைய ஆண்டவர் யாரென்பதை அவள் அறிந்து கொண்டாள். பெந்தேகோஸ்தே காலத்தில் செய்தது போன்று, இப்பொழுது நாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறோம். திரியேக முறையில் ஞானஸ்நானம் கொடுப்பதைக் குறித்து தேவன் எனக்கு அருளிய சொப்பனத்தைக் கூற விரும்புகிறேன். ஒரு பலமுள்ள மனிதனையும், ஒரு ஸ்திரீயையும் நான் என் சொப்பனத்தில் கண்டேன். இவர்கள் என் பெற்றோராவர். ஆனாலும் அவர்கள் பார்வைக்கு என் பெற்றோரைப் போல் சிறிதேனும் இல்லை. அம்மனிதன் திடகாத்திரம் பொருந்தியவன். அவன் மூன்று முனைகளைக் கொண்ட ஒரு கடினமான தடியினால் (CLUB), மனைவியை அடித்து, அவளை வீழ்த்தி, அவ்வாறு செய்ததில் பெருமை கொண்டான்; ஒவ்வொரு முறையும் அவள் எழுந்திருக்க முயற்சித்தபோது அவன் அவளைத் தடியினால் அடித்து வீழ்த்தினான். அந்த மனிதனின் செய்கை எனக்கு வெறுப்புண்டாக்கியது. அவனோடு சண்டையிட நான் நினைத்தேன். அவன் பலசாலியானதால் அது சாத்தியமல்ல என்று உணர்ந்தேன். மேலும் இம்மனிதன் என்னுடைய தகப்பன். ஆனால் உள்ளத்தில் அவன் தகப்பனல்ல என்னும் உணர்ச்சி அதே சமயத்தில் எனக்கு ஏற்பட்டது. ஒரு மனிதனுக்கும் தன்னுடைய மனைவியை இவ்வாறு கொடுமைப்படுத்த உரிமையில்லையென்றும் நான் நினைத்தேன். உடனே நான் அவனுடைய சட்டையைப் பிடித்துக் குலுக்கி, `அவளையடிக்க உனக்குரிமையில்லை’ என்று கூறினேன். நான் கூறும்போது, என்னுடைய தசைகள் வளரத்தொடங்கி, நான் ஒரு பலசாலியாக மாறினேன். அதைக் கண்டதும் அம்மனிதன் பயந்தான். அப்பொழுது அவளை அடிப்பதை அவன் நிறுத்தினான். உடனே என்னுடைய சொப்பனமும் கலைந்தது. இவ்விசித்திரமான சொப்பனத்தைக் குறித்துச் சிந்திக்கையில், தேவன் பிரசன்னமாகி, சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்தினார். (எத்தனையோ முறை நான் உங்கள் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் சரியாக விவரித்திருக்கிறேனென்பதை நீங்கள் அறிவீர்கள்). இந்த ஸ்திரீ உலக சபைகளைக் குறிக்கிறாள். அவள் தாறுமாறான நிலையிலுள்ள போது நான் பிறந்தேன் சொப்பனத்தில் அவள் தாயாகக் கருதப்படுகிறாள். (வேசிகளின் தாய்). அவளை ஆளும் ஸ்தாபனம் ஒரு மனிதனாகக் குறிக்கப்படுகிறது. மூன்று முனைகளைக் கொண்டதடி, தவறான திரியேக முறையைக் கடைபிடித்துக் கொடுக்கப்படும் ஞானஸ்நானமாகும், ஒவ்வொரு முறையும் சபை சத்தியத்தை ஏற்றுக்கொண்டபோது, ஸ்தாபனம் அவளைத் தவறான போதனையால் வீழ்த்தியது. ஸ்தாபனத்தின் வல்லமையைக் கண்ட நான் முதலில் பயந்தேன். ஆனால் அதை எதிர்த்த போது, எனக்கு விசுவாசத் தசைகள் அளிக்கப்பட்டு நான் பலவானானதைக் கண்டேன். தேவன் என்னோடு கூட இருந்து, ஸ்தாபனத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கப் பலன் தருகிறாரென்பதை இச்சொப்பனம் எடுத்துக் காண்பித்தது. சொப்பனத்தின் மூலமாக ஒரு போதனையை நிலைநிறுத்த விழைகிறேன் என்று நீங்கள் எண்ணவேண்டாம். ஆதி. 1.1 முதல் வெளி. 22.21 முடியவுள்ள வேதபுத்தகங்களனைத்தும் ஒரே தேவனின் தத்துவத்தைத்தான் போதிக் கின்றன. ஆனால் வேதத்தில் காணப்படாத திரியேகப் போதனையின் மூலம் மக்களின் கண்கள் குருடாக்கப்பட்டன. அது உலகெங்கும் பரவி நிலை கொண்டதால் ஒரே ஆளைக் கொண்ட தேவனை மக்கள் காணத் தவறுகின்றனர். தேவத்துவத்தின் சத்தியத்தை அவர்கள் எதிர்ப்பார்களானால், ஏனைய சத்தியங்களை அவர்கள் அறிந்து கொள்ளமுடியாது. ஏனெனில், இயேசுகிறிஸ்து மாத்திரம் சபைகளின் மத்தியிலிருந்து ஏழு சபைகளின் காலங்களிலும் கிரியை நடப்பிக்கிறாரென்பது நமக்கு அருளப்பட்டிருக்கும் வெளிப்படாகும். `உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டாய்’ இழந்து போன பெலன் எவ்வாறு மீண்டும் இக்காலத்தில் வந்தது என்பதை நான் குறிப்பிட்டேன். மதத்தை விட்டு வெளியேறினவர்களைக் குற்ற விசாரணை செய்த ரோம சபையின் ஆதிக்கம் (POWER OF INQUISITION) இக்காலத்தில் குறைவுபடத் தொடங்கியது. அநேகர் தாய் நாடுகளை விட்டுப்போய், மக்கள் சுதந்திரமாக தேவனை வழிபட வேண்டுமென்று போதித்தனர். குருக்களாட்சியின் நுகம் இக்காலத்தில் சிறிது சிறிதாக முறிக்கப்பட்டது, அரசாங்கமும் எந்த ஒரு பிரிவையும் பட்சபாதம் கொண்டு ஆதரிக்கவுமில்லை; அவர்களிடையே சண்டை வளரவும் அது தூண்டவில்லை. சத்தியத்தை அறிந்தவர், வழிபாட்டின் உரிமைக்கென போரிடவும் தயாரா யிருந்தனர். இக்காலத்தில் பிரான்ஸில் உண்டான அரசியல் புரட்சி, இங்கிலாந்தில் பரவாதது, அங்குள்ள மக்கள் கொண்ட மதவைராக்கியத்தை நமக்கு உணர்த்துகிறது. அநேக வருஷ காலம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்று வதற்குக் கருவியாக உபயோகப்பட இங்கிலாந்து புரட்சியினின்று காப்பாற்றப்பட்டது. இக்காலத்தில் தேவவசனம் போதிக்கப்பட்ட விதமாக எக்காலத்திலும் போதிக்கப்படவில்லை. ஸ்பர்ஜியன், பார்க்கர், மக்ளாரன், எட்வர்ட், பனியன், முல்லர், ப்ரேய்னார்ட் பார்ன்ஸ், பிஷப்போன்ற மகத்தான ஊழியர்களைத் தேவன் இக்காலத்தில் எழுப்பினார். இவர்களெல்லாரும் வசனத்தைப் போதித்து, பிரசங்கித்து, அதைக் குறித்த வியாக்கியானத்தையும் புத்தகரூபமாக வெளியிட்டனர். FREE THINKERS என்னும் பரந்த மனப்பான்மை கொண்ட வேத பண்டிதர்களைச் சாத்தான் இக்காலத்தில் எழுப்பி வசனத்தின் உண்மையான அர்த்தத்தைக் குலைக்க முற்பட்டான். கம்யூனிஸம் இக்காலத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. பொய்யான யூதனின் நியாயத்தீர்ப்பு வெளி 3.9. `இதோ யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்’. யூதரல்லாதிருந்தும் யூதர்களென்று பொய் சொன்னவர்கள் இரண்டாம் சபையின் காலத்திலுண்டாயிருந்தனர் என்பதை நாமறிவோம். சீர்திருத்தக் காலத்திற்குப் பிறகுள்ள இரண்டாம் சபையின் காலத்தில் அவர்கள் மறுபடியும் தோன்றுகின்றனர். இது எதேச்சையான சம்பவமென்று நினைக்க வேண்டாம். சிமிர்னாசபையின் காலத்தில், இவர்கள் யூதர்கள் (விசுவாசிகள்) என்று பொய் சொல்லிக்கொண்டு, சாத்தானின் கூட்டமாயிருந்து, வேதமுறைக்கு மாறுபாடாகச் சபையின் தலைவர்களை ஏற்படுத்தினர். மூன்றாம் சபையின் காலத்தில் `சாத்தானின் சிங்காசனம்’ என்று கூறப்படும் சாத்தான் குடிகொண்டிருக்கும் ஸ்தலம் உண்டாயிருந்தது. சபையும் அரசாங்கமும் இணைந்தது இக்காலத்தில்தான். அரசாங்க ஆதிக்கம் கொண்டு, உலகப் பிரகாரமாக வெல்ல முடியாத நிலையில் அக்காலத்துச் சபை அமைந்திருந்தது. ஆனால் தேவன் அதன் வல்லமையை முறித்ததால், சீர்திருத்தம் உண்டாகி, அதன் மூலம் சத்தியம் வெளிப்பட்டது. பின்பு லூதரின் போதனையை ஏற்றுக்கொண்டவர்கள் ஸ்தாபனமுண்டாக்கிக் கொண்டு அரசாங்கத்தோடு தொடர்பு கொண்டனர். அவ்வாறு சாத்தானின் கூட்டம் ஆறாம் சபையின் காலத்தில் மறுபடியும் தோன்றியது. ஆனால் அவர்களோ தேவனைச் சார்ந்தவர்களென்று (யூதர்களென்று) கூறிக்கொள்கின்றனர். உண்மையான யூதன், ஆவியில் யூதனாயிருக்க வேண்டும். `ஆவியில்லாதவர்கள்’ (யூதா 19) தேவனைச் சார்ந்தவர்களல்ல இவர்கள் செத்தவர்களாயிருக்கின்றனர். ஸ்தாபனத்தின் பிள்ளை களாக இவர்களிருந்து, சொந்த பிரமாணங்களையும், கொள்கை களையும், போதனைகளும் உண்டாக்கிக் கொண்டு, தேவனுடைய வார்த்தையை நிராகரித்து, தங்களுடைய ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர், உண்மையான கனிகள் அவர்களிடம் காணப்படவில்லை. இரண்டு வித்தியாசமான ஆவிகளாலுண்டான இரு சபைகளைக் குறித்து நான் முன்னமே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அதை இன்னமும் விவரிக்க இயேசுவையும் யூதாஸையும், உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இயேசு தேவகுமாரன்; யூதாஸ் பிசாசின் மகன். தேவன் இயேசுவுக்குள்ளிருந்தார்; சாத்தான் யூதாஸுக்குள் நுழைந்தான், இயேசு பரிசுத்த ஆவியின் ஊழியத்தைச் செய்தார். `நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்’ (அப் 10.38). யூதாசும் இயேசுவின் ஊழியத்தில் பங்கு கொண்டான். `அவன் (யூதாஸ்) எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு இந்த ஊழியத்தில் பங்கு பெற்றவனாயிருந்தான்’ (அப் 1.17), `அப்பொழுது அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்’ (மத் 10.1). யூதாசுக்குள்ளிருந்த ஆவி, இயேசுவின் ஊழியத்தில் கடைசி வரை பங்கு கொண்டது. பின்னர் இருவரும் மரித்தனர். இயேசு சிலுவையில் தொங்கி, பாவிகளுக்குச் சந்தோஷமாய் தன் ஜீவனைக் கொடுத்து, தன்னுடைய ஆவியைத் தேவனிடத்தில் ஒப்புவித்தார். இந்த ஆவி பெந்தேகோஸ்தே காலத்தில் சபையில் ஊற்றப்பட்டது, யூதாஸ் நான்று கொண்டு செத்தான். அவனுடைய ஆவி சாத்தானிடத்தில் சென்றது. பெந்தேகோஸ்தே நாளுக்குப் பின்னர், யூதாஸுக்குள்ளிருந்த அதே ஆவி கள்ளச் சபைக்கு அளிக்கப்பட்டது, கள்ளச் சபையும், உண்மையான சபையும் ஒன்றோடொன்று வளர்ந்துகொண்டு வருகின்றன. யூதாஸின் ஆவி பெந்தேகோஸ்தே வரை சென்று, பரிசுத்த ஆவியைப் பெறவில்லை. ஆனால் அது பணத்தின்மேல் ஆசைகொண்டது. இன்றைக்கும் அது பண ஆசை கொண்டதாயிருக்கிறது. இயேசுவின் நாமத்தில் அது கூட்டங்களை நடத்தி, மகத்தான கிரியைகளை நிகழ்த்தினாலும், இன்னும் பணம் சம்பாதித்து, கட்டடங்களைக் கட்டி, உலகப் பிரகாரமான காரியங்களில் அது ஈடுபடுகிறது. இவ்வாறு செய்பவர்களுக்குள்ளிருக்கும் ஆவியைப் பகுத்தறியுங்கள்; ஏமாந்து போக வேண்டாம். யூதாஸும் பன்னிருவரில் ஒருவனாக அதிசயங்களைச் செய்தான். ஆனால் தேவனுடைய ஆவியை அவன் பெறவில்லை. அவனுக்கும் ஒரு ஊழியம் கொடுக்கப் பட்டது. அவன் தேவனுடைய பிள்ளையல்லாததனால் பெந்தேகோஸ்தேயின் அனுபவத்தில் அவன் பங்கு கொள்ளவில்லை. சாத்தானின் கூட்டமும் இவ்வனுபவத்தைப் பெறுவதில்லை. ஏமாந்து போகாதீர்கள். நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களயிருந்தால் வஞ்சிக்கப்படு வதில்லையென்று இயேசு கூறினார். இக்கூட்டத்தி லுள்ளவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்களென்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்களல்ல. `அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்து கொள்ளும்படி செய்வேன்’ `பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந் தீர்ப்பார்களென்று அறியீர்களா?’ (1 கொரி 6.2). பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களை நியாயந் தீர்ப்பது மாத்திரமல்ல; பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள், `நாங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள்; அவர் எங்களில் அன்பு கூறுகிறார்’ என்று உரிமை கொண்டாடுபவர்கள் அக்காலத்தில் தேவனுடைய பிள்ளை யாரென்பதையும் குமாரன் எவனில் அன்பு கூறுகிறாரென்பதையும் அறிந்து கொள்வர். இச்சபையின் காலத்தில் ஸ்தாபனமுண்டாக்கி உலகத்தை ஆவலோடு அரசாளுபவர்களும், கடைசிக் காலத்தில் மிருகத்திற்கு ஒரு சொரூபமுண்டாக்கி உலகத்தை முழுவதும் அரசாளுபவர்களும். இயேசு நீதியோடு நியாயந்தீர்க்கத் தம்முடைய பரிசுத்தவான்களோடு வரும்போது வெட்கப்படுவர். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு கொள்ளாத `அனைவரும்’, நியாயாதிபதிக்கு முன்பாகவும், அவருடைய மணவாட்டிக்கு முன்பாகவும் நிற்க வேண்டும். புகழ்ச்சியும் வாக்குத்தத்தமும் வெளி 3.10. `என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்’. `அவருடைய பொறுமையைக் குறித்தவசனம்’ என்பது என்ன? `ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம் பண்ணின போது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றார். அந்தப்படியே அவன் பொறுமையாய்க் காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்’ (எபி. 6.13-15). நமக்கு அளிக்கப்பட்ட தேவவசனத்தைக் குறித்து ஆவியானவர் இங்கு குறிப்பிடுகிறார். ஆபிரகாம் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருந்த வண்ணம், நாமும் தேவவார்த்தை நிறைவேறப் பொறுமையோடு காத்திருத்தல் அவசியம். இம்முறையில் தேவன் தம்முடைய மக்களுக்குப் பொறுமையைக் குறித்துப் போதிக்கிறார். நாம் ஜெபம் செய்த மாத்திரத்தில், தேவன் உலகப் பிரகாரமானவைகள் அனைத்தையும், நமக்கு அருளி அவருடைய வாக்குத்தத்தை நிறைவேற்றினால், பொறுமையாவது என்னவென்பதை நாம் அறிந்துகொள்ளவே முடியாது; அல்லாமலும் ஜீவியத்தில் எப்பொழுதும் பொறுமையிழந்தவர்களாகவும் நாம் காணப்படுவோம் பொறுமையைக் குறித்த சத்தியத்தை இன்னமும் விளக்க விரும்புகிறேன். மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக் கொடுத்தான். இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் (தேவனுடைய வார்த்தையை) பெற்றவன்... தனக்கு ஒரே பேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்’ (எபி 11.17 - 19). வாக்குத்தத்தத்தைப் பெற்ற பிறகு ஆபிரகாம் சோதிக்கப்பட்டான். இயேசுவின் நாமத்தில் நாம் ஜெபம் செய்து தேவனுடைய வாக்குத் தத்தங்களைக் கோரும்போது, சோதனையுண்டாக வழியில்லையென்று அநேகர் நினைக்கின்றனர். ஆனால் ஆபிரகாம் வாக்குத்தத்தத்தைப் பெற்ற பிறகு சோதிக்கப்பட்டான். யோசேப்பும் அவ்வாறு சோதிக்கப்பட்டதாக சங்கீதக்காரன் கூறுகிறான். `கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப்புடமிட்டது’. (சங் 105.19) தேவன் நமக்கு விலை மதிக்கமுடியாத அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுத்து, அவைகளை நிறைவேற்றுவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார். அவர் நிச்சயமாக அவைகளை நிறைவேற்றுவார். ஆனால் நம்முடைய ஜெபத்திற்கு உத்தரவு கிடைக்கும் வரை, நாம் பொறுமையோடு காத்திருப்பது அவசியம். பொறுமையைக் கடைபிடிப்பதன் மூலமே நாம் உண்மையான ஜீவியம் செய்யமுடியும். ஆறாவது சபையின் காலத்திலுள்ளவர் பொறுமையைக் கற்றுக்கொண்டனர்; நாமும் அவர்களைப் போல் கற்றுக்கொள்ள தேவன் கிருபை செய்வாராக. அச்சபையின் காலத்தில் வாழ்ந்த மகத்தான கிறிஸ்தவர்களின் ஜீவியத்திற்கும், நம்முடைய ஜீவியத்திற்கும் எத்தனையோ வேற்றுமையுண்டு அவர்கள் பொறுமையைக் கடைபிடித்து சாந்தகுணமுள்ள வராயிருந்தனர். இன்றைக்கு நாம் பொறுமை யற்றவர்களாகவும் எல்லாவற்றையும் அவசரப்பட்டு செய்பவர்களாகவும் இருக்கிறோம். `பூமியின் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நான் உன்னைக் காப்பேன்’, உண்மையான சபை உபத்திரவக் காலத்தில் பங்குகொள்ளும் என்பது இதன் அர்த்தமல்ல, `சோதனை காலம்’ என்று கூறப்படுவது, ஏதேன் தோட்டத்தில் ஏவாளுக்குண்டான சோதனையைப் போன்ற ஒரு சோதனை நமக்கு உண்டாகும் காலத்தைத்தான் குறிப்பிடுகிறது. தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான ஒரு திட்டம் அக்காலத்தில் உருவாக்கப்படும். ஆனால், மனிதனின் பார்வையில் அது சரியானதாகவும், தேவனுடைய திட்டத்தோடு ஒத்ததாகவும் காணப்பட்டு, உலகம் முழுவதையும் வஞ்சிக்கும். தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ இதனால் வஞ்சிக்கப்படுவதில்லை. இத்திட்டம் பின்வருமாறு? உலகத்தின் சபைகளனைத்தும் ஐக்கியப்பட்டு, எல்லாம் ஒன்றாயிருக்க வேண்டுமென்ற கிறிஸ்துவின் ஜெபத்தை நிறைவேற்றினதாகக் கூறிக்கொள்கின்றன. இந்த ஐக்கியம் அரசியல் வல்லமைபெற்று அரசாங்கத்தைத் தூண்டிவிட்டு, சட்டம் வகுத்து, அதன் மூலம் எல்லாக் குழுக்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சிக்கும். இதற்கு இணங்காதவர்கள் சபைகளாகக் கருதப்படாமல், தங்களுக்குண்டான சொத்துக்களையும், மற்றுமுள்ள சிலாக்கியங்களையும் இழக்க நேரிடும். இப்பொழுதே, மார்க்க சம்பந்தமான கூட்டம் நடத்துவதற்கென கட்டடங்களை வாடகைக்கு எடுக்கவேண்டுமாயின், அதற்கு குருமார்கள் சங்கத்தின் அனுமதி அவசியம். வைத்திய சாலையிலும், இராணுவத்திலும் குருவாக நியமிக்கப்பட வேண்டுமெனில், திரித்துவப் போதனையைக் கைக்கொள்ளும் சபைகளின் ஐக்கியத்தின் ஆதரவைப் பெற்றிருக்கவேண்டும். இந்நிபந்தனைகள் நாள்தோறும் வளர்ந்துகொண்டே வந்து, கடைசியில் அநேகர் அவைகளை எதிர்க்க வல்லமையற்றவர்களாய், அவைகளுக்கு இணங்க நேரிடும். அவைகளைத் துணிந்து எதிர்ப்பவர்கள் சுயாதீன உரிமையை இழப்பார்கள். இதன் காரணத்தால் அநேகர், தேவனுக்கு ஊழியம் செய்யாமலிருப்பதற்குப் பதிலாக, இந்த ஐக்கியத்தின் மூலமாவது சேவிக்கலாம் என்றெண்ணி, ஐக்கியத்தில் சேருவார்கள். அவ்வாறு சேருபவர்கள் பிசாசின் பொய்யை விசுவாசித்து சாத்தானைச் சேவிக்கிறவர்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட முடியாததால், இவ்வைக்கியத்தில் கலந்து கொள்ளுவதில்லை. அல்லாமலும் உலக சபைகளின் ஐக்கியம் `மிருகத்திற்கென்று உண்டாக்கப்பட்ட சொரூபமாக’ மாறும்போது, பரிசுத்தவான்கள் எடுக்கப்பட்டிருப்பார்கள் (RAPTURE). எபேசு சபையில் தொடங்கப்பட்ட ஐக்கியம் கடைசி காலத்தில் சாத்தானின் சொரூபமாக மாறி, முழு உலகத்தையும் ஏமாற்றும். ரோமன் கத்தோலிக்க சபையும், பிராடெஸ்டண்ட் சபைகளும் கடைசி காலத்தில் ஒன்று சேர்ந்து உலக செல்வத்தின் மேல் அதிகாரம் செலுத்தி, அந்த ஐக்கியத்தில் சேராதவர்கள் கொள்ளவும் விற்கவும் கூடாதபடிக்குத் தடைவிதிக்கும். வேசியாகிய ரோமன் கத்தோலிக்க சபையோடு, அவள் குமாரத்திகளான பிராடெஸ்டண்ட் சபைகள் இப்பொழுது ஒன்று சேர்ந்துவிட்டன. ரோமசபை அதிகமான பொன்னைச் சேகரித்துவிட்டது. யூதர்கள் முதலீட்டுப் பங்கு வாக்குறுதிச் சீட்டுகளை (SHARE BONDS) வைத்திருக்கின்றனர். ஆதிக்கம் பெற்ற வேசியானவள், தக்கசமயத்தில், பேப்பர் நாணயங்களைத் தடைசெய்து, பொன் நாணயங்களை உபயோகிக்கக் கட்டளையிடுவாள். பொன்னில்லாத யூதர்கள் அவளுடைய கண்ணியில் விழுந்து அவளோடு உடன்படிக்கை செய்துகொள் வார்கள். வேசி சபை இவ்விதம் முழு உலகத்தையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும். தம்முடைய சொந்தமானவர்களுக்கு வாக்குத்தத்தம் வெளி 3.11-12. `இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கீரிடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. ஜெயங் கொள்ளுகிறவனெவனோ அவனை என்தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன். அதனின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என்தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்’. நாம் கடைசிகாலத்தின் முடிவிலிருக்கிறபடியால், அவர் சீக்கிரமாய் வரப்போகிறார் என்பதை அறிவோம். அவர் வருகையை அறிவிப்பததோடு அவர் நின்றுவிடாமல், ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு’ என்று கூறுகிறார். இயேசு வரும்போது, அவருக்குள் மரித்தவர்கள் உயிரோடெழுந்து அவருடைய வருகைக்காகக் காத்திருப்பவர்களோடு எடுத்துக் கொள்ளப்படுவர். இந்தத் தேவனுடைய பிள்ளைகளுக்கு, அவரோடு அரசாளும் உரிமையைப் பெற்றதன் அறிகுறியாக கிரீடங்கள் கொடுக்கப்படும். இவ்வுலகத்தில் அவரோடு பொறுமையோடு பாடனுபவித்தவரனைவருக்கும், தேவன் இந்த வாக்குத்தத் தத்தைக் கொடுத்தார், அவருக்கென்று சகலத்தையும் விட்டு, பூரணமாகத் தங்களைச் சமர்ப்பித்தவர் எல்லாரும் அவரோடு கூட சிங்காசனத்தில் உட்கார்ந்து; அவருடைய மகத்தான ராஜ்யத்தை ஆளுமுரிமையைப் பெறுவர். இந்தக் கிரீடத்தைப் பற்றிக்கொள்ள இயேசு அறிவுறுத்துகிறார். தேவனுடைய பிள்ளைகளே, கர்த்தரின் சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் எல்லாவரங்களையும் உபயோகப்படுத்தி, சந்தோஷத்தோடு முன்நோக்கிப் பாருங்கள். இராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தாவுமாயிருக்கிறவர் உங்களுக்குக் கிரீடம் சூட்டுவார். மணவாட்டியிலிருப்பவர்கள், கிரீடம் அணிவது மாத்திரமல்ல, அவர்கள் தேவனுடைய ஆலயத்தின் தூணாக நிற்பார்கள். தேவனுடைய ஆலயமென்பது என்ன? இயேசு தம்முடைய சரீரத்தைத் தேவனுடைய ஆலயமென்று குறிப்பிட்டார். இப்பொழுது நாம் அவருடைய சரீரமாகிய சபையாயிருப்பதால், பரிசுத்த ஆவி நமக்குள் வாசம் செய்யும் தேவனுடைய ஆலயமாக நாம் திகழ்கிறோம். தூணென்பது எதைக் குறிக்கிறது? அது கட்டிடத்தைத்தாங்கும் அஸ்திபாரத்தின் ஒரு பாகமாயிருக்கிறது. அப்படியெனில், ஜெயங்கொள்ளு கிறவன், அப்போஸ்தலரும் தீர்க்கதரிசிகளும் வகித்த ஸ்தானத்தை வகிக்கிறான். `ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான் களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களு மாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர் மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்கள்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்’ (எபே. 2. 19-22). இவர்களெல்லாரும் வாசலாகிய இயேசுவின் மூலம் உள்ளே பிரவேசித்து அவருடைய சரீரமாகிய ஆலயத்தின் ஒரு பாகமாகின்றனர். தேவன் மனிதனைத் தூணாக நிறுத்தி அஸ்திபாரத்தின் ஒரு பாகமாக்கினாரெனில், அவரை அவனுக்கு வெளிப்படுத்தி, வார்த்தையின் உண்மையான அர்த்தத்தையும் வெளிப்படுத்துகிறாரென்று அர்த்தம். அப்போஸ்தலரும், தீர்க்கதரிசிகளும் இந்த வெளிப்பாட்டைப் பெற்றிருந்தனர். இயேசுவே கிறிஸ்து - ஒரே ஆள், இரண்டல்ல என்று விசுவாசிக்கிறவனே ஜெயங்கொள்ளுகிறவன். அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருப்பான். ஜெயங்கொள்ளுகிறவர்களைக் கொண்டது தான் மணவாட்டி சபையாகும். இவர்கள் புறஜாதிகளிலிருந்து தெரிந்தெடுக்கப் பட்டவர்கள். அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இரவும் பகலும் நின்று, அவருடைய ஆலயத்தில் அவருக்குச் சேவை செய்கின்றனர். கர்த்தர் அவர்களை விசேஷமாகப் பாதுகாக்கிறார். மணவாளன் எங்கு சென்றாலும் மணவாட்டி அவரைப் பின்தொடருகிறாள். அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிவதில்லை. அவரோடுகூட அவள் சிங்காசனத்தில் வீற்றிருந்து, அவருடைய மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூடப்படுகிறாள். `என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன்’ தேவனுடைய நாமம் என்ன? அவர் இம்மானுவேலாக நம்மோடிருந்தார். இம்மானுவேல் என்னும் நாமத்தினால் அவர் உலகத்தில் அறியப்படவில்லை; `இயேசு’ என்ற பெயரால் அவர் அறியப்பட்டார். `அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக’ (லூக்கா 1.31) `நான் என்பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை’ (யோவான் 6.43) என்று இயேசு கூறினார். அப்படியெனில், பிதாவின் நாமம் இயேசு என்பதே. அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஒரு பெண் தன் கணவனின் பெயரை ஏற்றுக் கொள்வது போன்று, மணவாட்டியும் மணவாளனைச் சேரும் போது, அவருடைய பெயரைத் தரித்துக்கொள்வாள். `பின்பு நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின. சமுத்திரமும் இல்லாமற் போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக் கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப் பட்டிருந்தது. மேலும் பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ் சத்தத்தைக் கேட்டேன்; அது, இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக் கிறது. அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார். அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன் தாமே அவர்களோடே கூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின என்று விளம்பியது. (வெளி 21.1-4). ஆம், தேவனுடைய அருமையான வாக்குத்தத் தங்களனைத்தும் நிறைவேறும். ஆட்டுக்குட்டியானவரும் அவருடைய மணவாட்டியும் தேவனுடைய பரிபூரணத்தையடைந்து ஒன்று சேருவர். முதலாம் உயிர்தெழுதலின் மணவாட்டி அடையப் போகும் மகிமை மனித ஞானத்திற்கு எட்டாததாயிருக்கிறது. `என் புதிய நாமத்தை அவன் மேல் எழுதுவேன்’ எல்லாம் புதிதாக்கப்பட்ட பின்பு, அவர் புதிய நாமத்தைத் தரிப்பார். இந்த நாமம் மணவாட்டியின் நாமமாகவும் இருக்கும். அந்தப் பெயர் என்னவென்பதை யாரும் உத்தேசிக்க முடியாது. தக்க சமயத்தில், அது ஆவியானவரால் திட்டவட்டமாக வெளிப்படுத்தப்படும். நாம் நினைப்பதைவிட அந்நாமம் அற்புதமாயிருக்குமென்று நாம் தற்பொழுது அறிந்தால், அதுவே போதுமானது. இக்காலத்தின் கடைசி எச்சரிப்பு வெளி 3.13. `ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்’. தேவனுடைய சத்தத்தைக் கேட்க வேண்டுமென்று, ஒவ்வொரு சபையும் எச்சரிக்கப்படுகிறது. கர்த்தருடைய வருகை அதிசீக்கிரமாய் இருப்பதால், இக்காலத்துச்சபை இதை அதிகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இச்சபையின் காலத்தைத் தொடர்ந்து வேறொரு சபையின் காலமுண்டாகி அதன் முடிவில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவாரெனில், இச்சபையின் காலத்தில் அவருடைய வருகை அறிவிக்கப்பட வேண்டுவதன் காரணமென்ன? என்று சிலர் வினவலாம். முதலாவதாக, இதைத் தொடரும் சபையின் காலம் மிகவும் குறுகியதாயிருக்கும். ஆகையால் இந்தச் சபையின் காலத்திலேயே, அவசர எச்சரிப்பைக் கொடுப்பது அவசியமாயிருக்கிறது. அல்லாமலும் தேவனுடைய பார்வையில் ஆயிரம் வருஷங்கள் ஒரு நாளைப்போன்றிருப்பதால், அதன் பிரகாரம் அவருடைய வருகை இன்னும் சில மணிநேரத்தில் சம்பவிக்கும். உலகத்தில் எத்தனையோ சத்தங்கள் நம்முடைய கவனத்தைக் கவர முயற்சிக்கின்றன. இவைகளெல்லாவற்றிலும் `ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்’ என்னும் தேவனின் சத்தம் அதிக முக்கியம் வாய்ந்தது. ஒன்பதாம் அத்தியாயம்: லவோதிக்கேயா சபையின் காலம் THE LAODICEAN CHURCH AGE வெளி 3 : 14 - 22 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்; உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப் பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப்போடுவேன். நீ நிர்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்பட்டத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; நான். நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங் களையும் என்னிடத்தில் வாங்கிக் கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்றும் உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக்கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு. இதோ, வாசற்படியில் நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன். அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்ததுபோல; ஜெயங்கொள்ளு கிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்திலே என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றெழுது என்றார். லவோதிக்கேயா புராதன ராஜபரம்பரையில் தோன்றிய பெருமாட்டிகளில் அநேகர் `லவோதிக்கேயா’ என்ற பெயரிடப்பட்டனர், இந்த வாக்கிற்கு `மக்களின் உரிமை’ என்று அர்த்தம். இப்பெருமாட்டிகளைக் கனம் பண்ணுவதற்கென, இந்தப் பெயர் அநேக பட்டினங்களுக்கு அளிக்கப்பட்டன. இப்பொழுது நாம் விவரிக்கும் இப்பெயரைக் கொண்ட பட்டினம், ஆசியா மைனரில் செல்வம் பெருத்து, அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினங்களில் ஒன்றாகும். ஒரு பெரிய மருத்துவப் பள்ளிக்கூடம் இங்கு நிறுவப்பட்டிருந்தது. இப்பட்டின வாசிகள் கைத்தொழில்களிலும், விஞ்ஞானத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இருபத்தைந்து பட்டினங்களுக்குப் பிரதிநிதியாக இது அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டதால், `இராஜதானி’ (METROPOLIS) என்று அநேகரால் அழைக்கப்பட்டது. சீயஸ் (ZEUS) என்னும் அஞ்ஞான தெய்வத்தை இப்பட்டினத்திலுள்ளவர்கள் வழிபட்டு வந்தனர். சீயஸின் பட்டினம் என்று அர்த்தங் கொள்ளும் `டையோபோலிஸ்’ (DIOPOLIS) என்னும் பெயரால் ஒரு சமயம் இப்பட்டினம் வழங்கப்பட்டது. நான்காவது நூற்றாண்டில், முக்கியமான ஒரு சபை ஆலோசனை சங்கம் இங்கு கூடியது. பூகம்பங்கள் அடிக்கடி இப்பட்டினத்தில் ஏற்பட்டு, கடைசியில் இது மனித சஞ்சாரமில்லாமல் போயிற்று. நாம் வாழும் கடைசி சபையின் காலத்தில் காணப்படும் தன்மைகளனைத் தையும் இப்பட்டினம் பெற்றிருந்தது. உதாரணமாக, இப்பட்டினத்தவர் எல்லாத் தேவர்களுக்கும் பிதாவாகக் கருதப்பட்ட சீயஸை வழிபட்டனர். இந்த இருபதாம் நூற்றாண்டிலும், நம்மெல்லாருக்கும் பிதாவாகிய ஒரே தேவனுண்டு’ என்னும் மனிதனின் சகோதரத்துவத்தைக் குறிக்கும் கொள்கை நிலைநாட்டப்பட்டதன் விளைவாக பிராடஸ்டென்டுகள், கத்தோலிக்கர்கள், யூதர்கள், இந்துக்கள், இன்னும் மற்றவர் எல்லோரும் ஒருங்கே கூடி, ஒருவருடைய வழிபாட்டை மற்றவர் பின்பற்றி, இதன் காரணமாய் அவர்களிடையே அன்பு அதிகரித்து, மன ஒற்றுமையும், சம்ரட்சனையும் ஏற்படுமென்று அவர்கள் எண்ணுகின்றனர். கத்தோலிக்கர்களும் பிராடெஸ்டன்டுகளும், இப்பொழுது ஐக்கியப்பட்டு, மற்றவர்களும் இவர்களோடு ஐக்கியப்பட வேண்டுமென்று விழைகின்றனர். ஐக்கிய நாடுகளின் ஸ்தாபனமும், எல்லா மதங்களும் ஒன்று என்னும் கோட்பாட்டைக் கொண்டு, அவைகளனைத்தும் சத்தியத்தைப் போதித்து ஒரே நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்று கருதி, பிரத்யோகமான ஒரு மார்க்க வழிபாட்டின் முறையை அனுசரிக்க மறுத்துவிட்டது. இந்த இருபதாம் நூற்றாண்டின் காலத்தில், எல்லா நாடுகளும் சமஉரிமை கோருவது போன்று எக்காலத்திலும் இருந்ததில்லை. (`லவோதிக்கேயா’ என்பது `மக்களின் உரிமை’ என்று பொருள்படும்). இக்காலத்தில் கம்யூனிஸ்டுகள் தோன்றி, நடைமுறையில் கடைபிடிக்காவிட்டாலும், எல்லா மக்களும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்னும் கொள்கையைப் பரப்புகின்றனர். கிறிஸ்தவ பெயர்களைக் கொண்ட அநேக அரசியல் குழுக்கள் - `கிறிஸ்தவ ஜனநாயகர்’ (CHRISTIAN DEMOCRATS),கிறிஸ்தவ சோஷலிஸ்டுகள்’ (CHRISTIAN SOCIALISTS) போன்றவைகள் இக்காலத்தில் தோன்றியிருக்கின்றன. பரந்த மனப்பான்மை கொண்ட வேதப்பண்டிதர்கள், இயேசு சோஷலிஸ்டாக இருந்தாரென்றும், ஆதித்திருச்சபை பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலினால் சோஷலிஸ்டு கொள்கை களைக் கடைபிடித்ததால், நாமும் அவைகளைக் கடை பிடிக்கவேண்டுமென்று இக்காலத்தில் தவறாகப் போதித்து வருகின்றனர். புராதன காலத்தவர், லவோதிக்கேயா பட்டினத்தை `இராஜதானி’ என்று அழைத்து, நாம் இப்பொழுது ஏற்படுத்தியிருக்கும் பொதுவான உலக அரசாங்கத்தை எதிர்நோக்கியிருந்தனர். அவ்விடம் நடைபெற்ற சபை ஆலோசனை மாநாடு, இக்காலத்தில், கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவரனைவரும் ஒன்றுபடும் இயக்கத்திற்கு எடுத்துக் காட்டாயிருக்கிறது. ஆம், சபையும் அரசாங்கமும், மார்க்கமும் அரசியலும் இக்காலத்தில் உண்மையாகவே ஒன்றுபடுகின்றன. களைகளெல்லாம் இப்பொழுது கட்டப்படுகின்றன. கோதுமையோ விரைவில் களஞ்சியத்தில் சேர்க்கப்படும். லவோதிக்கேயா பட்டினத்தில் அநேக பூகம்பங்கள் உண்டாகி, கடைசியில் ஏற்பட்ட பூகம்பம் அதை முழுவதும் சேதப்படுத்தியது. அவ்வாறே, இந்தக் கடைசி காலத்தில், பழைய வேசியோடு காதல் புரியச் சென்ற உலகத்தைக் கர்த்தர் அசைத்து அதை நிர்மூலமாக்குவார். உலகத்தாரால் ஏற்பட்ட ஸ்தாபனங்கள் அழிவது மாத்திரமல்ல. இந்தப் பூமியும் பூகம்பத்தினால் அழிந்து கிறிஸ்துவின் ஆயிர வருஷ அரசாட்சிக்கென புதுப்பிக்கப்படும். அந்தப்பட்டினம் ஐசுவரியம் பொருந்தியதாய், நாகரீகமுற்று, விஞ்ஞானத்தில் பிரசித்தி பெற்று விளங்கியது. அதைப்போன்று, இன்றைய சபைகள் ஐசுவரியமுள்ளதாய் விளங்குகின்றன. அங்கு நடைபெறும் வழிபாடு சம்பிரதாயப்படி அமைந்து, காண்பதற்கு மிகவும் அழகாயிருக்கிறது. ஆனால் உண்மையில் அது ஆவியில் தணிந்து, மரித்துப் போனதாயிருக்கிறது. நாகரீகமும், கல்வியின் மேன்மையும் சபைகளுக்குள் புகுந்து, ஆவியால் அருளப்பட்ட வார்த்தையின் முக்கியத்துவத்தைக் குலைத்துப் போட்டன. அவ்வாறே அஞ்ஞான அறிவும், விசுவாசத் தன்மையைப் பாழ்படுத்திவிட்டது. இதன் விளைவால் மனிதன் ஆவிக்குரிய காரியங்களைக் காட்டிலும் உலகக் காரியங்களில் நம்பிக்கை அதிகம் கொண்டவனாயிருக்கிறான். லவோதிக்கேயா பட்டினத்தின் தன்மைகளனைத்தும் இருபதாம் நூற்றாண்டின் லவோதிக்கேயா சபையில் குடிகொண்டிருக்கின்றன. ஆயினும், தேவனுடைய இரக்கத்தின் காரணமாய் காதுள்ளவர்கள் சத்தியத்தைக் கேட்டு, இச்சபையின் பாவங்களுக்குடன்படாமல், அதை விட்டு வெளிவந்து, அது அடையப்போகும் நியாயத்தீர்ப்பினின்று தப்பித்துக் கொள்கின்றனர். லவோதிக்கேயா சபையின் காலம் இச்சபையின் காலம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமானது ஒருக்கால் இது கி.பி. 1906ம் ஆண்டில் தொடங்கியிருக்கக்கூடும். இது எவ்வளவு காலம் நீடிக்கும்? இதுவரை கணக்கற்ற தரிசனங்களைக் கண்ட (அவைகளி லொன்றும் பிழையில்லாமல் நிகழ்ந்தேறியது) தேவனுடைய ஊழியக்காரன் என்ற நிலையில், இக்காலம் சுமார் 1977ம் வருஷத்தில் முடிவடையும் என்பதை நான் முன்னறிவிக்கிறேன் (PREDICT); நான் ஆவிக்குரிய தீர்க்கதரிசனமாக இதை உரைக்கவில்லை, 1933ம் வருஷம் ஜுன் மாதம், ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் நான் தொடர்ச்சியாகக் கண்ட ஏழு தரிசனங்களை ஆதாரமாகக் கொண்டு நான் இதைக் கூறுகிறேன். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவருடைய வருகை சமீபமாயிருக்கிறதென்றும், அவர் வருமுன்பு நான் தரிசனமாகக் கண்ட இந்த ஏழு சம்பவங்களும் நிகழ்ந்தேற வேண்டுமென்று எனக்கு அறிவித்தார். நான் அவைகளையெல்லாம் எழுதிக்கொண்டு அன்று காலையில் தேவனிடத்தி லிருந்து கிடைக்கப் பெற்ற வெளிப்பாட்டை மக்களுக்கு எடுத்துரைத்தேன். நான் முதலாகக் கண்ட தரிசனம் முஸோலினி என்பவன் எத்தியோப்பியாவின் மேல் படையெடுத்து அதை எளிதில் கைப்பற்றுவான் என்பதாம். நான் முதலில் அதை அறிவித்தபோது, அநேக எதிர்ப்புகளுக்கு அது ஆளானது. ஆனால் நான் கண்டவிதமாகவே அது சம்பவித்தது. முஸோலினி தன்னுடைய நவீன யுத்த ஆயுதங்களை உபயோகித்து அந்நாட்டைக் கைப்பற்றினான். அந்நாட்டின் சுதேசிகளுக்கு அவனை எதிர்க்கவும் கூடத் தருணமில்லாதபடியாயிற்று. முஸோலினி, தன்னுடைய சொந்த ஜனங்கள் அவனை எதிர்த்து, பயங்கரமான முடிவை அடைவானென்றும் அத்தரிசனம் எனக்கு வெளிப்படுத்தியது. அதுவும் பிழையில்லாமல் நிகழ்ந்தேறியது. நான் கண்ட அடுத்த தரிசனம், அடால்ஃப் ஹிட்லர் என்னும் ஆஸ்திரியா தேசத்தான் ஜெர்மனி நாட்டில் சர்வாதிகாரியாய்த் தோன்றி உலக மகாயுத்தம் நடைபெறக் காரணமாயிருப்பான் என்று முன்கூட்டி அறிவித்தது. சீக்ஃபிரீட் எல்லையும் (SIEGFRIED LANE) அதை மேற்கொள்ள நம்முடைய சைனியங்கள் படும் பாடுகளையும் அது எனக்குத் தெளிவாகக் காண்பித்தது. அன்றியும், ஹிட்லர் மர்மமான முடிவை அடைவான் என்பதையும் அது காண்பித்தது. நான் கண்ட மூன்றாவது தரிசனம் உலக அரசியலோடு சம்பந்தப்பட்டது. பாஸீஸம் (FACISM), நாஸீஸம் (NAZISM), கம்யூனீஸம் (COMMUNISM), என்னும் மூன்று பெரிய கோட்பாடுகள் இவ்வுலகத்தில் தோன்றுமென்றும், கம்யூனிஸம் மற்ற இரண்டையும் மேற்கொள்ளுமென்றும் இது எனக்கு அறிவித்தது. அப்பொழுது, `ருஷியாவை ஜாக்கிரதையாய் கவனிக்கவும், வடக்கு பாகத்தின் ராஜாவாகிய அவனைக் கவனிக்கவும்’ என்ற சத்தத்தை நான் கேட்டேன். நான்காவது தரிசனம், இரண்டாவது உலக மகாயுத்தத்திற்குப் பிறகு விஞ்ஞானத்தில் ஏற்பட விருந்த முன்னேற்றத்தைக் காண்பித்தது. பிளாஸ்டிக் என்னும் சாதனத்தால் உண்டாக்கப்பட்ட ஒரு மோட்டார் வண்டி, யாரும் ஓட்டாமலே, தூரத்திலிருந்து இயக்கப்பட்டு (REMOTE CONTROL) அழகான ரஸ்தாக்களின் வழியாய் செல்வதை நான் அத்தரிசனத்தில் கண்டேன். அந்த வண்டியிலிருந்தவர்கள், ஏதோ ஒரு விளையாட்டில் குதூகலமாக ஈடுபட்டிருந்தனர். ஐந்தாவது தரிசனம், நம்முடைய காலத்திலுண்டாகும் நல்லொழுக்க மின்மையைக் குறித்தது. பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டதனால், பெண்கள் மிஞ்சிவிட்டனர் என்பதைத் தேவன் எனக்கு வெளிப்படுத்தினார். மனிதனின் அதிகாரத்திற்கு அவர்கள் இனியும் கீழ்ப்பட்டிருக்காமல், சம உரிமை கோரினர் என்பதன் அறிகுறியாக அவர்கள் தங்கள் கூந்தல்களைக் கத்தரித்துக் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்களின் உடைகளைத் தரித்து, கடைசியில் நிர்வாணிகளாகக் காணப்பட்டனர். அந்தத் தரிசனத்தின் கடைசிபாகத்தில், அத்தி இலையின் வடிவில் அமைந்த ஒரு சிறு துணியை மாத்திரம் இடுப்பின் முன்னால் உடுத்தி, மற்றபடி முழுவதும் நிர்வாணமாயிருந்த ஒரு பெண்ணைக் கண்டேன். முழு உலகமும் தாறுமாறான நிலைமையையடைந்து நல்லொழுக்கத்தைக் கைவிடும் என்பது எனக்கு உணர்த்தப்பட்டது. நான் கண்ட ஆறாம் தரிசனத்தில், மிகவும் அழகுள்ள ஒரு பெண் அமெரிக்காவில் தோன்றினாள், அவள் அழகிற் சிறந்திருந்தாலும், மிகவும் கொடூரமான குணம் படைத்தவளாயிருந்தாள். ரோமன் கத்தோலிக்க சபை அமெரிக்காவில் வளர்ந்து ஆதிக்கம் பெறுவதை இது குறிக்கிறது என்று நான் நம்புகிறேன்; இல்லையேல், அமெரிக்காவில் ஸ்திரீகள் ஒட்டுரிமை பெற்றதன் காரணமாக, ஒரு ஸ்திரீ அமெரிக்காவில் அரசியல் வல்லமை பெறுவதையும் இது குறிக்கலாம். நான் கடைசியாகக் கண்ட ஏழாம் தரிசனத்தில், மிகப்பெரிய சத்தத்தைக் கேட்டேன். நான் திரும்பிப் பார்த்தபோது, அமெரிக்கா முழுவதும் பாழடைந்து, இடிந்து புகைக்காடாய் இருக்கக் கண்டேன். கடந்த ஐம்பது வருஷங்களாக இவ்வுலகத்தில் வேகமாக நேர்ந்த மாற்றங்களையும், இந்த ஏழு தரிசனங்களையும் ஆதாரமாகக் கொண்டு, நான் தரிசனங்களில் கண்ட சம்பவங்களனைத்தும் 1977ம் ஆண்டுக்கு முன்பு சம்பவிக்குமென்பதை நான் முன்னறிவிக்கிறேன். (நான் இதைத் தீர்க்கதரிசனமாக உரைக்கவில்லை). `அந்த நாளையும் அந்த நாழிகையும் ஒரு மனிதனும் அறியான்’ (மத் 24. 32) என்று இயேசு கூறியிருப்பதால், இது உண்மையல்ல வென்று உங்களில் அநேகர் நினைக்கலாம். அவர் வரும் வருஷம் மாதம் அல்லது வாரத்தை ஒரு மனிதனும் அறியானென்னு இயேசு கூறவில்லை. அதனால், இத்தரிசனம் கண்ட முப்பது வருடங்களுக்குப் பிறகும் இது நிச்சயமாக சம்பவிக்கும் என்ற எண்ணத்தை உடையவனாயிருக்கிறேன். பரிசுத்த ஆவியின் ஏவுதலினாலும், தேவ வார்த்தையை நிதானித்து ஆராய்ந்ததன் காரணத்தாலும், 1977-ஆம் ஆண்டிற்குள் இவை அனைத்தும் முடிவு பெறும் என்பதை மறுபடியும் கூறுகிறேன். நான் கண்ட இத்தரிசனத்திலுள்ள சம்பவங்கள் தவறாக நிகழ்ந்தன என்று யாராகிலும் நிரூபிக்கக் கூடுமா? அவைகளில் சில ஏற்கனவே நிகழ்ந்ததேறின, மற்றவை நிகழும் தருவாயில் இருக்கின்றன. முஸோலினி எத்தியோப்பியாவின் மேற்படையெடுத்து வெற்றி சிறந்தான். ஹிட்லரும் உலக மகா யுத்தத்தைத் தொடங்கிமர்மமான மணத்தை யடைந்தான். கம்யூனிஸம் மற்றைய கோட்பாடுகளைக் காட்டிலும் தழைத்தோங்கியது, மனிதன் இயக்காத பிளாஸ்டிக் மோட்டார் வண்டியும் செய்து முடிந்தது. இனிநல்ல ரஸ்தாக்கள் அமைக்கப்பட்டால் அது ஓடத்தொடங்கும். பெண்கள் நிர்வாணிகளாகக் காணப்படுகின்றனர். நான் தரிசனத்தில் கண்ட அதே ஆடையை ஒரு பெண் உடுத்தியிருப்பதை ஒரு பத்திரிகையில் கண்டேன். அது அகம் முழுவதும் காணத்தக்க (TRANSPARENT) ப்ளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட உடையாகும். அதிலுண்டாயிருந்த மூன்று சிறிய கறுப்புப் புள்ளிகள் முலைகளின் பாகங்களை மறைத்தன. அது போன்று தாழ உள்ளதை மறைக்க ஒரு கறுப்பு பாகம் காணப்பட்டது. கத்தோலிக்க சபையின் ஆதிக்கமும் வளர்ந்து கொண்டே வருகிறது. கத்தோலிக்கர் ஒருவர் அமெரிக்காவின் ஜனாதிபதியானார். சந்தேகமின்றி, கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த வேறொருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இனி எபிரேயர் நிரூபத்தில் கூறப்பட்டது சம்பவிக்க வேண்டும். `அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணியது. இன்னும் ஒரு தரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைக்கப் பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார்’. (எபி 12.26). ஆம், இனியும் ஒரு முறை தேவன் பூமியையும், இன்னும் அசையக் கூடியவைகளனைத்தையும் அசையப்பண்ணுவார். அதன் பின்பு அவர் பூமியைப் புதுப்பிப்பார், 1964ம் வருஷம் மார்ச் மாதம் பெரிய வெள்ளிக்கிழமையன்று, அலாஸ்கா என்னும் பட்டினத்தில் நேர்ந்த பூகம்பம் உலகத்தையே அசைத்தது. கூடிய சீக்கிரத்தில் உண்டாகவிருக்கும் மகத்தான அசைவைக் குறித்து, இப்பூகம்பத்தின் மூலம் கர்த்தர் எச்சரிக்கிறார், என் சகோதரனே, சகோதரியே, பாவம் நிறைந்த இவ்வுலகத்தைக் கர்த்தர் வெடிக்கச் செய்து, அதை அசையப்பண்ணுவார். கர்த்தராகிய இயேசுவின் பாதுகாப்பிலிருப்பவர் மாத்திரமே இந்த அதிர்ச்சியைத் தாங்குவார். தேவனுடைய இரக்கம் கிடைக்கப் பெறும் இச்சமயத்திலே, உங்களுடைய முழு ஜீவியத்தையும் இயேசு கிறிஸ்துவினிடத்தில் ஒப்படைக்க நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன். அவர் உண்மையுள்ள மேய்ப்பனாக, பொறுப்பேற்று உங்களைப் பாதுகாத்து, தமது மகிமையுள்ள சன்னிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களை மாசற்றவர்களாய் நிறுத்துவார். தூதன் பவுல் தூதனாக அனுப்பப்பட்ட முதலாம் சபையைத் தவிர, வேறெந்த சபையும், தேவனால் அந்தச் சபைக்கு அனுப்பப்பட்ட தூதனை அறிந்துகொள்ளவில்லை. பவுலின் காலத்திலும்கூட, அநேகர் அவனைத் தூதனாக ஏற்றுக்கொள்ள வில்லை. நாம் ஜீவிக்கும் இந்தக் காலம் மிகவும் குறுகியதாயிருக்கும் என்பதை நான் கூற விரும்புகிறேன். சம்பவங்கள் அனைத்தும், இக்காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக நிகழ்ந்தேறும். அப்படியெனில், லவோதிக்கேயா சபையின் தூதன், நாம் அவரை அறியவில்லையென்றாலும், இந்நேரம் தோன்றியிருக்க வேண்டும். அவருடைய ஊழியத்தை விவரிக்கும் வேதவசனங்கள் இருப்பதால், அவர் நிச்சயமாக ஒரு காலத்தில் அறியப்பட வேண்டும். முதலாவதாக, இச்சபையின் தூதன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்து, தீர்க்கதரிசன ஊழியத்தை உடையவராயிருக்க வேண்டும். அவர் உரைக்கும் தீர்க்க தரிசனங்களும், அவர் காணும் தரிசனங்களும், வார்த்தையை ஆதாரமாகக் கொண்டதாயிருந்து, நிச்சயமாக நிறைவேற வேண்டும். அவர் தீர்க்கதரிசியென்று ரூபகாரப்படுவார். வேதவசனமும் அவர் தீர்க்கதரிசியென்பதை நிரூபிக்கிறது. `தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்’. (வெளி 10.6). இங்கு `தூதன்’ என்று அழைக்கப்படுவர் ஒரு தேவ தூதனல்ல. எக்காளம் ஊதும் ஆறாம் தேவதூதன் வெளி. 9.13லும், ஏழாம் தேவதூதன் வெளி 11.15லும் குறிக்கப்படுகின்றனர். ஆனால் வெளி 10.6ல் கூறப்படுபவர் ஏழாம் சபையின் காலத்தின் தூதன்; அவர் ஒரு மனிதன் அவர் தேவனுடைய செய்தியை மனிதர்களிடம் கொண்டு வருவார். அவருடைய செய்தியும், ஊழியத்தின் தன்மையும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு அறிவித்தபடி, தேவ ரகசியத்தை நிறைவேற்றும், அவர் தீர்க்கதரிசியாயிருப்பதால், தேவன் அவரைத் தீர்க்கதரிசியாகக் கருதுகிறார். பவுல், முதல் சபையின் காலத்தில் தீர்க்கதரிசியாக விளங்கினான். கடைசிச் சபையின் காலமும் ஒரு தீர்க்கதரிசியை உடையதாய் இருக்க வேண்டும். `ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்’. (ஆமோஸ். 3. 6 - 7). கடைசி காலத்தில்தான் இயேசுவின் ஏழு இடிகள் முழங்கின என்று நாம் வெளிப்படுத்தலின் புத்தகத்திலிருந்து அறிகிறோம். சிங்கம் கெர்ச்சிக்கிறது போல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான். அவன் ஆர்ப்பரித்தபோது, ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது ஏழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்’ (வெளி 10. 3-4). அந்த இடி முழக்கங்கள் கூறியவைகளை யாரும் இதுவரை அறியவில்லை. தேவன் வேதப்பிரகாரமான வெளிப்பாட்டைத் தீர்க்கதரிசிகளின் மூலமேயளிப்பதால், ஏழு இடி முழக்கங்கள் கூறினயாவையும் ஒரு தீர்க்கதரிசியே வெளிப்படுத்த வேண்டுமென்பது தேவனுடைய நியமமாயிருக் கிறதென்பதை வேதத்தின் மூலம் நாமறியலாம். தம்முடைய வழிகளில் மாறாத நித்திய தேவன், ஒவ்வொரு காலத்திலும் மக்கள் தெய்வீக ஒழுக்கங்களை விட்டு அகலும்போது, தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பினார். வேதபண்டிதர்களும் சபையின் மக்களும் வார்த்தையைப் புறக்கணித்த போது தவறான போதனையைச் சரிப்படுத்தி, மக்களைத் தேவனிடத்தில் திரும்ப தம்முடைய ஊழியக்காரரைச் சபையின் மக்களிடம் அவர் அனுப்பினார். (வேத பண்டிதரிடத்திலில்லை). இதிலிருந்து ஏழாம் சபையின் தூதன் வரவேண்டுமென்றும் அவர் தீர்க்கதரிசியாயிருப்பா ரென்றும் நாமறிகிறோம். இயேசுவின் வருகைக்கு முன்பு எலியா வரவேண்டுமென்று வேதம் நமக்குப் போதிக்கிறது. `அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி, அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லு கிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக; எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான் என்றார்’. (மத் 17. 10-11). கர்த்தர் மறுபடியும் வருமுன்பு, எலியா வந்து சபையைப் பழைய நிலைக்குத் திருப்பிக்கொண்டு வரவேண்டும். `இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமானநாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத் திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்’ (மல் 4. 5-6). இயேசுகிறிஸ்து வருமுன்பு, எலியா நிச்சயமாகத் திரும்பி வரவேண்டும். அவன் நிறைவேற்ற வேண்டிய ஒரு பிரத்தியேக ஊழியம் அவனுக்குண்டு. அதுதான் மல் 4.6ன் ஒரு பாகம். `அவன் பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்குத் திருப்புவான்’. எலியாவின் ஊழியம் யோவான் ஸ்நானன் மூலம் நிகழ்ந்தபோது, மல் 4.5ன் மற்ற பாகமான `அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்தில் திருப்பும்’ ஊழியம் நிறைவேறியதென்று வேதத்தின் வாயிலாய் நாமறிகின்றோம். `பிதாக்களுடைய இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும், கீழப்படியாத வர்களை நீதிமான் களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும் படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்’ (லூக் 1.17). ஆம் இயேசுவின் இரண்டாம் வருகையின் முன்பு எலியா வந்து, கடைசி காலத்தின் பிள்ளைகளின் இருதயத்தைப் பெந்தேகோஸ்தே காலத்தின் முற்பிதாக்களிடத்திற்குத் திருப்புவான். இயேசு தம்முடைய பிள்ளைகளைத் தம்முடைய பாதுகாப்பிற்குள் வரவேற்க, யோவான் ஸ்நானன் பிதாக்களை ஆயத்தம் செய்தான். ஆனால், எலியாவின் ஆவியைக் கொண்ட கடைசி காலத்துத் தீர்க்கதரிசி, இயேசுவை வரவேற்கப் பிள்ளைகளை ஆயத்தம் செய்வான். இயேசு யோவான் ஸ்நானனை எலியாவென்று அழைத்தார். `ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்’. (மத் 17.2). எலியாவின் மேல் இருந்த அதே ஆவி, ஆகாப் ராஜாவின் அரசாட்சிக்குப் பின்பு, எலிசாவின் மேல் வந்தது போன்று, அது யோவான் ஸ்நானனின் மேலும் வந்தது. மறுபடியும் அதே ஆவி, இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்பு வேறொரு மனிதனின் மேல் வரும். இந்த மனிதன் தீர்க்கதரிசியாயிருப்பார். பரிசுத்த ஆவியானவரும், அவர் மூலம் நடப்பிக்கும் மகத்தான கிரியைகளைக் கொண்டு, அவரைத் தீர்க்கதரிசியென நிருபிப்பார். அவருக்கு வெளிப்படும் ஒவ்வொன்றும் நிச்சயமாய் சம்பவிக்கும். அவருடைய கட்டளையினால், மகத்தான கிரியைகள் நடக்கும். அதன்பின்பு, மக்களைச் சத்தியத்துக்கும், தேவனுடைய உண்மையான வல்லமைக்கும் திருப்ப, தேவன் அளித்த செய்தியை அவர் மக்களுக்குக் கொடுப்பார். ஒரு சிலர் அவருடைய செய்தியை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பெரும்பாலோர் சபையின் ஆசாரங்களுக்கு உண்மையாய் ஜீவித்து, அவரைப் புறக்கணிப்பார்கள். வெளி. 10.6ல் கூறப்பட்ட தீர்க்கதரிசி தூதனே மல். 4. 5-6ல் குறிக்கப்பட்டிருக் கிறார். ஆகையால் இவர் எலியாவைப் போன்றும், யோவான் ஸ்நானனைப் போன்றும் இருப்பார். இவ்விருவரும் அவரவர் காலத்தின் மார்க்கக் கொள்கைகளைப் பின்பற்றாதவராயிருந்தனர். இருவரும் வனாந்தரத்தில் ஜீவித்தனர். இருவரும், தேவனுடைய வெளிப்பாட்டையும் அவருடைய கட்டளையையும் பெற்றாலன்றி, தாமாகவே எதையும் செய்யவில்லை. இருவரும் அவரவர் காலத்தில் வாழ்ந்த மதத்தலைவர்களையும், கடைபிடிக்கப்பட்ட மதக் கொள்கைகளையும் எதிர்த்தனர். அது மாத்திரமல்ல, அவர்கள் நேர்மையிழந்தவர் களையும், மற்றவர்களை நேர்மையிழக்கச் செய்தவர்களையும் எதிர்த்தனர். அது மாத்திரமல்ல, அவர்கள் நேர்மையிழந்தவர்களையும் மற்றவர்களை நேர்மையிழக்கச் செய்தவர்களையும் எதிர்த்துப் பேசினர். இருவரும் நல்லொழுக்கமில்லாப் பெண்களையும், அவர்கள் பின்பற்றின வழிகளையும் கண்டித்தனர். எலியா யேசபேலுக்கு விரோதமாக அறைகூவினான். யோவான் ஸ்நானன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைக் கண்டித்துணர்தினான். இக்காலத்துத் தூதன் புகழ் பெற்றவராயிராவிட்டாலும், தேவன் அவர் சரியென்று நிரூபிப்பார். (VINDICATE) யோவான் ஸ்நானனை இயேசுவும், இயேசுவைப் பரிசுத்த ஆவியும் உறுதிப்படுத்தியதுபோன்று வேறெங்கும் காணக்கூடாத அற்புதங்களையும், அடையாளங்களையும் பரிசுத்த ஆவியானவர் இத்தூதனுடைய ஜீவியத்தின் மூலம் நிகழ்த்தி, அவரை உறுதிப்படுத்துவார். இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்தபோது, யோவானைக் குறித்துச் சாட்சி கொடுத்தது போன்று, தம்முடைய இரண்டாம் வருகையில் இத்தூதனைக் குறித்து சாட்சி கொடுப்பார். இத்தூதனும் யோவானைப் போன்று,இயேசுவின் வருகையை அறிவிப்பார். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையே இந்த தூதன் அவருடைய வருகைக்கு முன்னோடியவன் என்பதை நிரூபிக்கும். இயேசு மறுபடியும் பிரசன்னமாகும்போது, புறஜாதிகளின் காலம் முடிவுபெறும், அப்பொழுது அவரைப் புறக்கணித்தவர்கள் இரட்சிக்கப்பட முடியாமல் காலதாமதமாகியிருக்கும். மத். 11.12ல் குறிக்கப்பட்ட தீர்க்கதரிசி யோவான் ஸ்நானன். அவனுடைய தோற்றம் மல். 3.1ல் முன்னறிவிக்கப்பட்டது. `இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.’. (மல் 3.1). `இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளை கொடுத்து முடித்த பின்பு, அவர்களுடைய பட்டினங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார். அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக் குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து. வருகிறவர் நீர் தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக. நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; குருடர்கள் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக் குறித்துச் சொன்னது என்னவென்றால், எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால் எதைப் பார்க்க போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்தவர்கள் அரசர் மாளிகையில் இருக்கிறார்கள், அல்லவென்றால் எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்; இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய் உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும் பரலோக ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். (மத் 11.1-11). யோவான் ஸ்நானன் ஏற்கனவே வந்தாயிற்று; அதன் மூலம் மல் 3.1ல் உரைக்கப்பட்டது நிறைவேறியது. இப்பொழுது கீழ்க்கண்ட வசனங்களை வாசியுங்கள்; `இதோ சூளையைப் போல் எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ் செய்கிறயாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப் போல வளருவீர்கள். துன்மார்க்கரை மிதிப்பீர்கள். நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மேசே நான் கற்பித்த நியாயப் பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள். இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன், நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு அவன் பிதாக்களுடய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும் பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்’. (மல் 4. 1 - 6). இந்த வசனங்களில் குறிக்கப்பட்ட எலியா தீர்க்கதரிசி வந்தவுடனே, பூமியானது நெருப்பினால் சுத்திகரிக்கப்பட்டு, பொல்லாதவர்கள் சாம்பலாய் எரிக்கப்பட்டு போவார்கள். யோவான் ஸ்நானன் (அவன் காலத்து எலியா தீர்க்கதரிசி) இவ்வுலகத்தில் தோன்றினபோது, இச்சம்பவங்கள் நிகழவில்லை. தேவ ஆவியானவர் ஏசாயா 40.3ல் தூதனுடைய (யோவானுடைய) வருகையை முன்னறிவித்து, சுமார் முன்னூறு வருடங்கள் கழித்து மல். 3.1ல் அதை மறுபடியும் உரைக்கிறார். `கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், வனாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வை பண்ணுங்கள்’ (ஏசாயா 40.3) ஏசாயாவின் சத்தமும் மல்கியாவின் சத்தமும் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் யோவானின் மூலம் உண்டாயிற்று. `கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வை பண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே’ (மத் 3.3). மல்கியா 3ம் அதிகாரத்தில் குறிக்கப்பட்ட தீர்க்கதரிசியாகிய யோவான் ஸ்நானன், மல்கியா 4ம் அதிகாரத்தில் கூறப்பட்ட தீர்க்கதரிசி அல்ல என்பதை நாம் வேதத்தின் மூலம் அறியலாம். ஆனால் எலியாவின் மேல் தங்கியிருந்த அதே ஆவி, யோவான் ஸ்நானன் மேல் தங்கியிருந்து, இப்பொழுது கடைசி காலத்துத் தீர்க்கதரிசியின் மேலும் அமர்ந்திருக்கும். மல்கியா 4ம் அதிகாரத்திலும் வெளி. 10.6லும் உரைக்கப்பட்ட இந்தத் தூதன் இரண்டு பெரிய காரியங்களைச் சாதிப்பார். முதலாவதாக, மல்கியா உரைத்தபடி அவர் பிள்ளைகளின் இருதயத்தைப் பிதாக்களிடத்திற்குத் திருப்புவார். இரண்டவதாக, வெளி 10ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் ஏழு இடி முழக்கங்களின் இரகசியத்தை (அதாவது ஏழு முத்திரைகளின் இரகசியத்தை) அவர் வெளிப்படுத்துவார். தேவனால் அருளப்பட்ட இந்த சத்தியம் பிள்ளைகளுடைய இருதயத்தைப் பெந்தேகோஸ்தே பிதாக்களிடத்திற்குத் திருப்பும். இந்தத் தூதன், எலியாவின் தன்மைகளையும் யோவானின் தன்மைகளையும் உடையவராயிருப்பார். இக்காலத்து மக்களும், ஆகாபின் காலத்து மக்களைப் போன்றும், யோவான் ஸ்நானன் வாழ்ந்த காலத்தின் மக்களைப் போன்றும் இருப்பார்கள். பிள்ளைகளுடைய இருதயங்கள் மாத்திரமே பிதாக்களிடத்தில் திருப்பப்படுவதால், பிள்ளைகள்தான், அந்தத் தூதனுக்குச் செவி கொடுப்பார்கள். ஆகாபின் காலத்தில், 7000 உண்மையான இஸ்ரவேலர்கள் காணப்பட்டனர். யோவானின் காலத்திலும் சொற்பப் பேர் மாத்திரம் சத்தியத்தை ஏற்றுக் கொண்டனர். இவ்விரு காலத்திலும் வாழ்ந்த பெரும்பான்மையோர் விக்கிரகாராதனையில் ஈடுபட்டிருந்தனர். லவோதிக்கேயா காலத்தின் தூதனுக்கும் இயேசுவின் முதல் வருகைக்கு முன்பு தோன்றிய யோவானுக்குமிடையே காணப்படும் வேறொரு ஒற்றைமையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அக்காலத்து மக்கள், யோவானை மேசியாவென்று தவறாக எண்ணினர். `எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி. நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்’. (யோவான் 1.19-20). அவ்வாறே கடைசி காலத் தூதனுக்கிருக்கும் வல்லமையை மக்கள் கண்டு, அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் தவறான எண்ணம் கொள்வர். (கடைசி காலத்தில் பொய்யின் ஆவி உலகத்தில்மக்களிடையே காணப்பட்டு, அவர்களை வஞ்சிக்கும். மத் 24. 23-26. இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால் அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்’). அவர் இயேசு கிறிஸ்துவல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி தூதன். தேவனுடைய ஊழியன், சகோதரரில் ஒருவர், அவருக்கு விசேஷமான கௌரவம் அளிக்கப்பட அவசியமில்லை. யோவானும் கீர்த்தி எதுவும் தனக்கென்று தேடிக்கொள்ளாமல், `நான் அவரல்ல. எனக்குப் பின் ஒருவர் வருகிறார்’ என்று அறிக்கையிட்டான். லவோதிக்கேயா சபையின் தூதனைக் குறித்துள்ள செய்தியை நான் முடிக்கும் முன்பு இரு காரியங்களைச் சிந்திக்க விரும்புகிறேன். முதலாவதாக, தீர்க்கதரிசியின் தன்மையைக் கொண்ட ஒரே ஒரு தூதன் இக்காலத்திற்கென்று அளிக்கப்படுவான். `அவன் எக்காளம் ஊதப் போகிறபோது’ (வெளி 10.6) என்று ஒருமையில் வெளிப்படுத்தின விசேஷம் குறிக்கிறது. தேவன் எந்தக் காலத்திலும், இரண்டு பெரிய தீர்க்கதரிசிகளை ஒரே நேரத்தில் அளிக்கவில்லை. தேவன் ஏனோக்கையும், நோவாவையும் தனியாக உலகத்திற்கு அளித்தார். மோசே மாத்திரம் அவன் காலத்தில் வேத வார்த்தையைக் கொண்டவனாயிருந்தான். மற்றவர்கள் தீர்க்க தரிசனம் உரைத்தனர். யோவான் ஸ்நானன் தனியாக வந்தான். கடைசி காலத்திலும், ஒரு தீர்க்கதரிசி தோன்றுவார். (தீர்க்க தரிசினி ஒருக்காலும் தோன்றுவதில்லை. இக்காலத்தில் பெண்கள்,, ஆண்களைக் காட்டிலும் அதிகம் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெறுவதாகக் கூறிக்கொள்கின்றனர்). இந்தத் தீர்க்கதரிசி கடைசி காலத்தின் மக்களுக்கு இதுவரை மறைபொருளாயிருந்த இரகசியங்களை வெளிப்படுத்தி, பிள்ளைகளின் இருதயங்களைப் பிதாக்களிடத்தில் திருப்புவாரென்று பிழையற்ற தேவவசனம் தெளிவாய் நமக்குப் போதிக்கிறது. அநேகருக்குக் கிடைக்கப் பெறும் வெளிப்பாட்டின் மூலம் (COLLECTIVE REVELATION), தேவனுடைய மக்கள் ஒன்றுபடுவர் என்று சிலர் கூறுவதுண்டு. இதை நான் ஆட்சேபிக்கிறேன். வெளி. 10.6 இதைத் தவறென்று நிரூபிக்கிறது. கடைசி காலத்தில் மக்கள் தீர்க்கதரிசனம் உரைத்து, சரியான ஊழியத்தைச் செய்வர் என்பதை நான் மறுக்கிறேன் என்று நீங்கள் எண்ணவேண்டாம். பவுலின் காலத்திலும் அகபு என்னும் தீர்க்கதரிசி வரப்போகும் பஞ்சத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்ததாக வேதம் கூறுகிறது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட `தீர்க்கதரிசி - தூதர்கள்’ தேவனுடைய வார்த்தையில் அடங்கியிருக்கும் இரகசியங்களை வெளிப்படுத்தி, பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களிடத்தில் திருப்புவார்கள் என்பதைப் பிழையற்ற வேத வசனங்களை ஆதாரமாகக் கொண்டு நான் மறுக்கிறேன். இக்காலத்திற்கு ஒரு தூதனே அளிக்கப்பட்டிருக்கிறார். அநேகம் பேர்கொண்ட ஸ்தலத்தில், போதக வேற்றுமை ஏற்படுவது சகஜமென்பதை நாமறிவோம், அப்படியெனில் வேதத்துக்கடுத்தவைகளைப் பிழையற்ற விதத்தில் யார் போதிக்கக்கூடும்? கடைசி காலத்துச் சபை தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு பழைய நிலைமைக்குத் திரும்பவேண்டும். வார்த்தையில் உறுதியாய் நிற்கும் மணவாட்டியின் சபை இக்காலத்தில் தோன்றவேண்டும். பவுலின் காலத்தில் சுவிசேஷம் போதிக்கப்பட்டு, அதை மக்கள் புரிந்து கொண்டவிதமாய் இக்காலத்திலும் அதுபோதிக்கப்பட்டு, மக்கள் வார்த்தையின் அர்த்தத்தைச் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறாயின், இதைச் செய்ய கர்த்தரால் நிலைநிறுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசி அவசியம். தேவன் தம்மை அவருக்கு வெளிப்படுத்துவார். அவர் தாமாகவே பேச அவசியமில்லை. தேவன் அவர் மூலமாய் அடையாளங்களை நிகழ்த்தி மக்களோடு பேசுவார். ஆமென். இரண்டவதாக, ஏழு சபையின் காலங்களும், பரிசுத்த ஆவியின் தன்மையையும், அந்திக் கிறிஸ்துவின் ஆவியின் தன்மையையும் கொண்டதாய் தொடங்கப்பட்டன. `பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்’ (1 யோவான் 4.1). அந்திக் கிறிஸ்துவின் ஆவி கள்ளத் தீர்க்கதரிசிகளில் காணப்படுகிறது என்பதைக் கவனிக்கவும், கள்ளத் தீர்க்கதரிசிகளைக் கொண்டவாறு சபையின் காலங்கள் தொடங்கி, அவர்களைக் கொண்டவாறே அவைகள் முடிவுபெறும், வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்ட உண்மையான கள்ளத் தீர்க்கதரிசி தோன்றும் முன்பு, அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகள் உலகத்தில் காணப்படுவர் `அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்க தாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால், அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ அறை வீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்’ (மத் 24. 23-26). `கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள். அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப் புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களை கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள் அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்’. (2 பேது. 2.1-2). `ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுயஇச்சைகளுக்கேற்ற போதர்களை தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகுங் காலம் வரும்’ (2 தீமோ. 4. 3-4). `ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப் போவார்கள்’ (1 தீமோ. 4.1). கள்ளத் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுபவன் தேவனுடைய வார்த்தைகளைவிட்டு விலகினவன் என்பதை இவ்வசனங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. `அந்திக் கிறிஸ்து’ என்னும் வாக்கு `வார்த்தைக்கு விரோதமா யுள்ளவன்’ என்று பொருள்படும் என்பதை நான் முன்னமே கூறியுள்ளேன் ஆகையால், கள்ளத் தீர்க்கதரிசிகளெனப்படுபவர் வார்த்தையைத் தாறு மாறாக்கி, தங்களுடைய பொல்லாங்கான வழிகளுக்கேற்ப அதற்கு அர்த்தத்தை உண்டாக்கிக் கொள்வர். மக்களை வார்த்தைவிட்டு அகலச் செய்பவர்கள், இம்மக்களை பயமுறுத்தி, தங்களோடு ஒன்றாகச் சேர்த்து வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் கூறுவதை மக்கள் பின்பற்றாமல் விட்டுவிட்டால், அழிவு சம்பவிக்கும் என்று அவர்கள் பயமுறுத்துகின்றனர். இவர்களெல்லாம் கள்ளத் தீர்க்கதரிசிகளாயிருக்கின்றனர். உண்மையான தீர்க்கதரிசியோ, வார்த்தையை மக்களுக்குப் போதித்து, அவர்களை இயேசுகிறிஸ்துவோடு ஒன்று சேர்ப்பான். மக்கள் அவனைக் கண்டு பயப்படவேண்டுமென்று அவன் ஒருக்காலும் கூறுவதில்லை; வார்த்தை கூறுவதை மாத்திரம் அவர்கள் பயத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர்களுக்குப் போதிப்பான். இந்தக் கள்ளத் தீர்க்கதரிசிகள் யூதாஸைப் போன்று பண ஆசை பிடித்தவராயிருக்கின்றனர். உங்களுக்குள்ள எல்லாவற்றையும் அவர்கள் விற்கச் செய்து, அதனால் வரும் பணத்தைக் கொண்டு, தங்கள் திட்டங்களை நிறைவேற்ற உபயோகிப்பார்கள். அற்புதங்களைச் செய்யும் அநேகர், வார்த்தையைப் புறக்கணித்து, இவைகளினால் பணம் சம்பாதிக்கின்றனர். ஜனங்களும், அது மரணத்திற்குப் போகும் வழியென்பதை உணராமல், அவர்கள் செய்யும் அற்புதங்களை விசுவாசித்து, அவர்களை ஆதரிப்பார்கள். ஆம், பூலோகம் முழுவதும் இத்தகைய போலி அற்புதங்களைச் செய்பவர்களால் நிறைந்திருக்கிறது. கடைசி காலத்தில் இவர்கள், தீர்க்கதரிசி தூதன் செய்யும் அனைத்தையும் செய்ய முயற்சிப்பார்கள். ஸ்கேவாவின் ஏழு குமாரர்களும் இவ்விதமாகப் பவுலின் செயல்களையே செய்ய முயற்சித்தனர். மந்திரவாதியாகிய சீமோன், பேதுரு நடப்பித்த கிரியைகளைத் தானும் செய்ய எண்ணினான். இவர்களின் பாவனை அனைத்தும் மாம்சத்துக்குரியது. உண்மையான தீர்க்கதரிசி செய்பவைகளை இவர்கள் செய்யமுடியாது. அந்தத் தீர்க்கதரிசி எழுப்புதலின் காலம் கழிந்தது என்று கூறிய பிறகும், மக்களிடையே தேவன் இன்னும் வல்லமையான கிரியைகளைச் செய்து, பெரிய எழுப்புதலை உண்டுபண்ணுவாரென்று இவர்கள் தவறாகப் போதித்து வருகின்றனர். மக்களும் இவர்களுடைய சொற்கேட்டு விசுவாசத்தைவிட்டு வழுவிப் போவர். கடைசி காலத்துத் தூதன் வேதசாஸ்திரம் படித்தவரல்ல வென்றும், அதனால் மக்கள் அவருடைய பிரசங்கத்தைக் கேட்கக்கூடாது என்று இந்தக் கள்ளத்தீர்க்க தரிசிகள் போதிக்கின்றனர். ஆனால், அந்தத் தூதன் செய்யும் கிரியைகளை இவர்களால் செய்ய இயலாது, தேவனும் கடைசி காலத்து தூதனின் வார்த்தைகளைக் கிரியைகளினால் உறுதிப்படுத்துவது போன்று, அவர்களின் போதகத்தை உறுதிப்படுத்துவதில்லை. ஆனால் அவர்கள், தாங்கள் பெற்றிருக்கும் செல்வாக்கை உபயோகித்து, அந்தத் தூதன் கூறுவது யாவும் தவறென்றும் அவருடைய சொற்களை யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடாதென்றும் மக்களை எச்சரிப்பர். இவர்கள், தங்கள் முற்பிதாக்களாகிய பரிசேயரைப் போன்று பிசாசினால் உண்டானவர்கள், பரிசேயர்கள், இயேசுவும் யோவானும் போதித்தவை தவறென்னு அக்காலத்தில் கூறினர். ஆகாபின் காலத்தில், அந்தக் கள்ளத் தீர்க்கதரிசிகளின் முற்பிதாக்களான 400 தீர்க்கதரிசிகள் மிகாயா தீர்க்கதரிசியை எதிர்த்தனர். இவர்களெல்லாரும் ஒரே தீர்க்கதரிசனத்தைஉரைத்ததன் காரணமாக, ஜனங்கள் ஏமாந்தனர். ஆனால் மிகாயா ஒருவன் மாத்திரமே தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்று, சரியான தீர்க்கதரிசனம் உரைத்தான். கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிக்கை யாயிருங்கள். அவர்கள் பட்சிக்கிற ஒநாய்களாயிருக்கின்றனர். இதைப்பற்றி உங்களுக்கு இனியும் சந்தேகம் உண்டாயிருக்குமாயின், தேவன் தம்முடைய ஆவியினாலே உங்களை நிரப்பி, வழிநடத்த அவரிடம் மன்றாடுங்கள், தெரிந்துகொள்ளப்பட்ட எவரும் ஏமாந்து போவதில்லை. ஒரு மனிதனும் அவர்களை வஞ்சிக்கமுடியாது. பவுல் ஒருக்கால் தவறாகப் பிரசங்கித்திருந்தால், தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் அந்தத் தவறை உடனே உணர்ந்திருப்பார்கள். முதலாம் சபையாகிய எபேசு சபையின் காலத்தில் உண்டாயிருந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், கள்ள அப்போஸ்தலர்களையும் சோதித்தறிந்து அவர்களைச் சபையினின்று புறம்பாக்கினர். அல்லேலூயா! அவருடைய ஆடுகள் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து அவரைப் பின்செல்கின்றனர். ஆமென். நான் அதை முற்றிலும் நம்புகிறேன். வாழ்த்துதல் வெளி 3.14. `.... உண்மையும், சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது’. இது, நம்முடைய அருமையான ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் தன்மைகளை மிகவும் அழகாக விவரிக்கிறதல்லவா, இது என்னுடைய இருதயத்திற்கு மிகுந்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அளித்து, சந்தோஷ மிகுதியால் கூக்குரலிட என்னை ஏவுகிறது. கடைசி காலத்தோடு இயேசுகிறிஸ்து தம்மைச் சம்பந்தப்படுத்திக் கொண்டு, அவரைக் குறித்த விவரணத்தை நமக்கு அருளுகிறார். கிருபையின் காலம் இன்னும் கூடிய சீக்கிரத்தில் முடிவு பெறும். முதலாம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டு முடியவுள்ள சபையின் காலங்களில் சம்பவிக்கப் போகிறவைகள் அனைத்தையும் அவர் நமக்கு வெளிப்படுத்தினார். கடைசி காலத்துக்குரிய சம்பவங்களை நமக்கு வெளிப்படுத்தும் முன்னதாக அவர் தம்முடைய மேலான தெய்வீகத்தை விவரிக்கிறார். `ஆமென்’ என்பவர் சொல்லுகிறதாவது. இயேசு தேவனின் ஆமெனாக இருக்கிறார். ஆமென் என்பது முடிவைக் குறிக்கிறது. அது சம்மதத்தையும் என்றென்றைக்கும் மாறாத தேவனுடைய வாக்குத்தத்தங்களையும் தெரிவிக்கிறது. இது தேவனுடைய அதிகாரத்தைக் காண்பிக்கும் முத்திரையாகும். இதை நீங்கள் கவனமாய்ப் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஏனெனில் இது கடைசி காலத்திற்கென்று அளிக்கப்பட்ட தேவனைக் குறித்த வெளிப் படாகும். கிருபையின் காலம் முடிந்தவுடனே, ஆயிரம் வருஷ அரசாட்சியின் காலம் தொடங்கும். `அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்தியதேவன் பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறைக்கப்பட்டு அவைகள் என் கண்களுக்கு மறைந்து போயின. இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை. மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிற தினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ எருசலேமைக் களிகூறுதலாகவும் அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன், நான் எருசலேமின் மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின் மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக்கேட்கப்படுவதில்லை’ (ஏசா 65. 16-19). மேற்கூறிய வசனங்கள் புதிய எருசலேமை விவரிக்கின்றன. நாம் ஆயிரம் வருஷ அரசாட்சியில் பிரவேசிக்கும் போது தேவன் தம்மை `சத்திய தேவன்’ (16ம் வசனம்) என்று அழைத்துக் கொள்கிறார், ஆனால் அதன் உண்மையான மொழிபெயர்ப்பு, ஆமென் என்பதின் தேவன் என்பதாகும், (GOD OF AMEN) அப்படியெனில், இவைகளைப் பின்வருமாறு வாசிக்க வேண்டும் பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் ஆமென் என்பதின் தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் ஆமென் என்பதின் தேவன் பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு அவைகள் என் கண்களுக்கு மறைந்து போயின. இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனிநினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவது மில்லை...’ அல்லேலூயா! பழைய ஏற்பாட்டின் யெகோவா `ஆமென் என்பதின் தேவனாயிருக்கிறார்’. புதிய ஏற்பாட்டின் இயேசுவும் `ஆமென் என்பதின் தேவனாயிருக்கிறார்’ இஸ்ரவேலே,கேள், உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். ஆம், பழைய ஏற்பாட்டின் யெகோவா தான் புதிய ஏற்பாட்டின் இயேசுகிறிஸ்து புதிய ஏற்பாடு வேறொரு தேவனை வெளிப்படுத்தவில்லை. ஒரே தேவனை அது மறுபடியும் வெளிப்படுத்துகிறது. கிறிஸ்து தம்மை வெளிப்படுத்த வேண்டுமென்று எண்ணி, தாழ இறங்கி வரவில்லை. அல்லது குமாரனை வெளிப்படுத்த அவர் வரவில்லை. பிதாவை வெளிப்படுத்தி அவரை அறிவிக்கவே அவர் தாழ இறங்கி வந்தார். இரண்டுதேவர்களைக் குறித்து எங்கேயும் குறிப்பிடவில்லை. அவர் ஒரு தேவனை மாத்திரம் குறிப்பிட்டுப் பேசினார். இந்தக் கடைசி காலத்தில் தேவத்துவத்தின் முக்கியமான வெளிப்பாடு நமக்கு மறுபடியும் அருளப்பட்டிருக்கிறது. இயேசுவே தேவன், அவரும் பிதாவும் ஒன்றாயிருக்கிறார்கள். ஒரே தேவன் நமக்குண்டு. அவருடைய நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்பது நமக்கு கிடைத்த வெளிப்பாடாகும். அவர் ஆமென் என்பதன் தேவனாயிருக்கிறார். அவர் ஒரு போதும் மாறுவதில்லை. அவருடைய கிரியைகளும் எப்பொழுதும் மாறாதவைகள். அவர் கூறியவை யாவும் கடைசிவரையும் நிலைநிற்கும். அவருடைய வார்த்தைகளிலிருந்து ஒருவனும் கூட்டவும் குறைக்கவும் கூடாது. அப்படியே ஆகட்டும், ஆமென், இவ்விதத் தன்மைகளைக் கொண்ட தேவனைத் தொழுவதைக் குறித்து நீங்கள் சந்தோஷப்படுவதில்லையா? அவர் ஆமெனின் தேவனாயிருக்கிறார். அவர் ஒருபோதும் மாறுவதில்லை. `ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது’ இந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அவர் கூறுவது தீர்மானமுள்ளது (FINAL) என்பது இதன் அர்த்தம், உண்மையான சபையைக் குறித்தும் கள்ளச் சபையைக் குறித்தும் அவர் முதலாம் சபையின் காலம் முதல் கடைசி சபையின் காலம் முடியவுள்ள காலங்களில் கூறிய யாவும் உண்மையே என்றும், அவை ஒருபோதும் மாறுவதில்லை என்பதும் இதன் அர்த்தம், ஆதியாகமத்தில் அவர் தொடங்கிய கிரியைகளை, வெளிப்படுத்தின விசேஷத்தில் அவர் முடிப்பார் என்பது இதன் அர்த்தம். ஆம், அவர் அது அப்படியே ஆகட்டும் (ஆமென்) என்னும் தேவனாயிருக்கிறார். இக்காரணத் தினால், பிசாசு இவ்விரு புத்தகங்களையும் வெறுக்கிறான். அவன் சத்தியத்தை வெறுக்கிறான். சத்தியம் கடைசியில் ஜெயங்கொள்ளும் என்பதை அவன் அறிவான், அவனுடைய முடிவைக் குறித்தும் அவன் அறிந்திருக்கிறான். ஆகையால் தான் அவன் போராடுகிறான். ஆனால் தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற நாமோ ஜெயங்கொள்ளும் ஆமென் என்னும் தேவனுடைய பக்கம் சார்ந்திருக்கிறோம். `உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி சொல்லுகிறதாவது’ `உண்மையும்’ (FAITHFULY) என்ற வார்த்தையின் மூலம் நான் அறிந்த சத்தியங்களை இங்கு கூற விரும்புகிறேன். தேவன் மாறாதவரென்றும் அவருடைய வார்த்தைகளும் ஒரு போதும் மாறுவதில்லை என்றும் நாம் அநேக முறை கூறுகின்றோம். நாம் அவ்வாறு கூறும்போது தேவன் அண்ட சராசரங்களையும் படைத்து அவைகள் இயங்குவதற்கென சகல விதிகளையும் உண்டாக்கி, அதன்பின்பு அவைகளைக் குறித்துச் சிறிதேனும் கவலை கொள்ளாதவரா யிருக்கிறாரென்று நாம் எண்ணுவதுண்டு. இழந்துபோன மானிடவர்க்கத்தை மீட்பதற்கென்று, கிறிஸ்து சிலுவையில் மரித்து, இரட்சிப்பின் மார்க்கத்தை மனிதனுக்களித்து, அவரை நாம் அடைவதற்கென அவர் உயிரோடெழுந்து அதன் பின்பு மனிதரின் மேல் கவலை கொள்ளாதவராக அவர் இருக்கவில்லை. அவருடைய சிருஷ்டிப்பின் மேலுள்ள சிரத்தையை அவர் ஒருக்காலும் இழக்கவில்லை. தேவன் இப்பொழுதும் மனிதரின் விவகாரங்களில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அவர் சிருஷ்டிகரும் சிருஷ்டிகளை நிலைநிறுத் துகிறவருமாயிருக்கிறார். `ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது, பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவை களுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவை களுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும் கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. (கொலோ 1. 16-17). அவர் ஏகாதிபத்தியமுள்ள தேவன், அவருடைய சொந்த ஆலோசனையைக் கொண்டு அவர் முன்னறிந்து தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களை மீட்பதற்கென, இரட்சிப்பின் திட்டத்தை அவர் வகுத்தார். இரட்சிப்பின் மார்க்கத்தை நிலைநிறுத்த குமாரன் சிலுவையிலறையுண்டார்; பரிசுத்த ஆவி கவனமாக பிதாவின் சித்தத்தை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். இந்நேரத்தில், அவர் தம்முடைய தீர்மானத்தின்படி, கிரியைகளை நடப்பிக்கிறார். அவர் சபையின் மத்தியிலிருந்து, ஆடுகளைக் கவனத்தோடு பாதுகாக்கும் மேய்ப்பனைப் போல், தமக்குச் சொந்தமானவர்களை உண்மையோடும் விசுவாசத்தோடும் பாதுகாத்துக் கொண்டு வருகிறார். தமக்குச் சொந்தமானவர்களுக்காகவே அவர் ஜீவிக்கிறார். அவர் அவர்களில் அன்பு கூர்ந்து அவர்களைப் பாதுகாக்கிறார். அவருடைய கண் அவர்கள் மேல் எப்பொழுதும் இருக்கிறது. நம்முடைய ஜீவன் உண்மையாகவே கிறிஸ்துவுக்குள் மறைந்து கிடக்கிறது. என்னுடைய தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதைக் குறித்து நான் களிகூறுகிறேன். அவர் உண்மையுள்ளவர். அவர் ஒருபோதும் பொய்யுரையார், அவர் வார்த்தைக்கு உண்மையாயிருந்து, அதைத் தாங்குகிறார். அவர் நமக்கும் உண்மையுள்ள வராயிருந்து, அவர்களுடையவர்களில் ஒன்றையும் அவர் இழந்து போகாமல், அவர்களைக் கடைசி நாளில் எழுப்புவார். அவருடைய விசுவாசத்தில் நான் இளைப்பாறுகிறதற்காக சந்தோஷப்படுகிறேன். `உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவார்’ (பிலி 1.5). `அவர் சத்தியமுள்ள சாட்சியாயிருக்கிறார்’ சத்தியம் (TRUE) என்னும் வாக்கு, இயேசுகிறிஸ்துவின் பூரண நிறைவேறுதலைக் குறிக்கிறது என்பதை நாம் பிலதெல்பியா சபையின் காலத்தைப் பற்றி சிந்திக்கும்போதே பார்த்தோம். அந்தச் சபையின் காலத்திலேயே, தேவனுடைய வருகை சமீபமாயிருந்தது. அந்தக் காலத்தவர் தேவன் பேரில் அதிகமாகப் பற்றுக் கொண்டிருந்தனர்; இது பின்வரும் வசனங்களை எனக்கு நினைப்பூட்டுகிறது. `அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூறுகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து’ சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும ரட்சிப்பை அடைகிறீர்கள்’ (1 பேது 1.8) ஆம், பிலதெல்பியா சபையின் காலத்தவரோடு நாமும் சேர்ந்து களிகூருகிறோம். நாம் அவரைக் காணவில்லை; இருந்தாலும் நாம் அவரை உணருகிறோம். குறைவுள்ள நம்முடைய ஐம்புலன்கள் நமக்கு அவரை வெளிப்படுத்தும் அளவுக்கு நாம் அவரை அறிகிறோம். ஆனால் ஒரு நாளில் நாம் அவரை முகமுகமாய் பார்ப்போம், இந்தக் காலத்தின் முடிவில் அவர் நிச்சயமாக வருகிறார். இப்பொழுது நாம் அடைந்திருக்கும் பூரணப்படாத அறிவு, அப்பொழுது பிழையற்ற பூரண அறிவாக மாறும், அல்லேலூயா! நாம் இவ்வளவு காலம் கண்ணாடியில் நிழலாட்டமாய்க் கண்டிருந்தோம். ஆனால் சீக்கிரத்தில் அவரை முகமுகமாய்க் காண்போம், நாம் இப்பொழுது மகிமையின் மேல் மகிமையடைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், சீக்கிரத்தில் அந்த மகிமையிலேயே பிரவேசிப்போம், அப்பொழுது அவருடைய மகிமையில் நாம் பிரகாசிப்போம், நம்முடைய தெய்வீக இரட்சகராகிய இயேசு இருக்கிற வண்ணமாகவே நாம் இருப்போம், இது ஒரு அதிசயமல்லவா? நாம் அவரில் பூரணப்படுவோம் இது முற்றிலும் உண்மையான ஒரு வாக்குத்தத்தம். அதைக் குறித்து அவர் பொய்யுரைக்கமாட்டார். ஒரு நாளில் நாம் அணுஅணுவாக மாறி அழியாமையைத் தரித்துக் கொள்வோம். நாம் அப்பொழுது ஜீவனையடைந்து பூரண அறிவைப் பெறுவோம். `அவர் சத்தியமும் உண்மையுள்ள சாட்சியாயிருக்கிறார்’ `சாட்சி’ என்னும் வார்த்தையிலிருந்து நாம் `இரத்த சாட்சி என்னும் வார்த்தையைப் பெற்றோம், ஸ்தேவானும், அந்திப்பாவும் இரத்த சாட்சியாக மரித்தனர் என்று வேதம் கூறுகிறது. அவர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு சாட்சியாகவும் ஜீவித்தனர். இயேசு உண்மையுள்ள இரத்த சாட்சியாக மரித்தார். அதற்குப் பரிசுத்த ஆவியானவர் தாமே சாட்சியாயிருக்கிறார். இவ்வுலகம் இயேசுவை வெறுத்து அவரைக் கொன்று போட்டது. ஆனால் தேவன் அவரிடம் அன்பு கூர்ந்ததால், அவர் பிதாவினிடத்திற்குச் சென்றார். அவர் அங்கு ஏறிச் சென்றதை நிரூபிப்பதற்கென பரிசுத்த ஆவியானவர் வந்தார், பிதாவானவர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமலிருந்தால், பரிசுத்த ஆவி நமக்கு அருளப்பட்டிருப்பதில்லை, `நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோசனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன், அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாத படியினாலேயே பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு, நான் என் பிதாவினிடத்தில் போகிறபடியினாலே நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார், (யோவான் 16. -11). இயேசு நீதிபரராயிருந்து பிதாவினிடத்திற்குச் சென்றார் என்பதைப் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் நமக்கு நிரூபித்துக் காண்பிக்கிறது. ஆனால் இயேசு பின்வருமாறும் கூறுகிறார். `நான் உங்களைத் திக்கற்றவர்களாக (ஆங்கிலத்தில் COMFORTLESS) விடேன், உங்களிடத்தில் வருவேன்’ (யோவான் 14.18) அவர் தேற்றரவாளனை (COMFORTER) அனுப்பினார். அவரே அந்த தேற்றரவாளன். அவர் ஆவியாக உண்மையான சபையின் மேல் வந்தார். அவர் சபைக்கு நடுவே இருக்கும் உண்மையும் சத்தியமுள்ள சாட்சி, ஆனால் ஒரு நாளில் அவர் மாமிசத்தில் மறுபடியும் காணப்படுவார். அப்பொழுது ஞானமுள்ள ஏகசக்ராதிபதி யார் என்பதை அவர் நிரூபிப்பார். அவரே மகிமையின் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து. அவர் உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், சிருஷ்டிகரும், நிலைநிறுத்துபவரும், பூரண அறிவாயும் தேவனுடைய ஆமென் என்பவராயுமிருக்கிறார். ஓ! நான் தேவனுடைய குமாரனாகிய இயேசுவை எவ்வளவாய் நேசித்து அவரைத் தொழுதுகொள்ளுகிறேன்; கீழ்க்கண்ட வசனங்களோடு இதை நான் முடிக்க விரும்புகிறேன். `நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி, என்னாலும், சில்வானாவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப் பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார். எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே, உங்களோடே கூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம் பண்ணினவர் தேவனே, அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்’ (2 கொரி 1.18-22). `அவர் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறார்’ இது இயேசு கிறிஸ்துவை விவரிக்கிறது. சிலர் இதைத் தப்பான அர்த்தம் கொண்டு, இயேசுகிறிஸ்து முதலில் சிருஷ்டிக்கப்பட்டவரென்றும் தேவனைவிட அவர் தாழ்ந்த நிலையிலுள்ளவரென்றும் கூறுகின்றனர், அப்படியெனில் முதலில் சிருஷ்டிக்கப்பட்டவர் அண்ட சராசரங்களையும் அவைகளிலுள்ள யாவையும் படைத்தாரென்பது வேதத்திற்கொத்த சத்தியமன்று, `அவர் தேவனுடைய சகல சிருஷ்டிப்பையும் தொடங்கியவர் (BEGINER) அல்லது உண்டாக்கியவர் (AUTHOR)’ என்பதைத்தான் இவ்வசனம் குறிக்கிறது. இயேசுவே தேவனென்பதை நாம் நிச்சயமாக அறிவோம். அவரே சிருஷ்டிகர்த்தர், `சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை’ (யோவான் 1.3). அவரைக் குறித்துத்தான் `ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’ (ஆதி 1.1) என்றும் `கர்த்தர் ஆறு நாளைக்குள்ளே வானத்தையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார்’ (யாத் 20.11) என்று சொல்லியிருக்கிறது. அவர் சிருஷ்டி கர்த்தர் என்பதற்கு யாதொரு சந்தேகமு மில்லை. இயற்கையான யாவையும் சிருஷ்டித்து முடித்த சிருஷ்டிக்கர்த்தர் அவரே. மேற்கூறிய வசனத்திற்கு இந்த அர்த்தத்தைத் தவிர வேறெந்த அர்த்தமும் பொருந்தாது; தேவன் தேவனைச் சிருஷ்டித்தார் என்று சிலர் எண்ணுவது மிகவும் தவறாகும். சிருஷ்டிக்கப்பட்டவர் சிருஷ்டிகர்த்தராக எங்ஙனம் இருக்க முடியும்! இந்தக் கர்த்தர் இப்பொழுது சபையின் மத்தியில் நின்று கொண்டு, கடைசி காலத்தவருக்குத் `தேவனுடைய சிருஷ்டிப்பின் காரணகர்த்தராகத் தம்மை வெளிப்படுத்துகிறார். ஆம், அவர்தாம் சபையின் சிருஷ்டிகர், இது அவருடைய வேறொரு சிருஷ்டிப்பு பரம மணவாளன் தம்முடைய சொந்த மணவாட்டியைச் சிருஷ்டித்தார். அவர் தேவனுடைய ஆவியாகத் தாழ இறங்கி, கன்னிமரியாளின் கர்ப்பத்தில் அணுக்களைச் (CELLS) சிருஷ்டித்ததனால், அவருடைய சரீரம் தோன்றிற்று, அந்தச் சரீரத்தை ஆயத்தப்படுத்த, மரியாளின் கர்ப்பத்தில் அவர் அணுக்களை சிருஷ்டித்தாரென்று நான் மறுபடியும் கூற விரும்புகிறேன். மரியாளின் அண்டகோசத்திலிருந்து (OVARY) தானாகவே தோன்றும் அணுக்களுக்குப் (OVUM) பரிசுத்த ஆவியானவர் ஜீவனைக் கொடுக்க சித்தங் கொள்ளவில்லை, அப்படியாயின், அது பாவத்தில் விழுந்த மானிடரிலிருந்து தோன்றும் ஒரு சரீரமாக அமைந்திருக்கும்; இது `பிந்தின ஆதாமை’த் தோன்றச் செய்யாது, `ஒரு சரீரத்தை எனக்கு நீர் (பிதா) ஆயத்தம் பண்ணினீர்’ (எபி. 10.5) என்று வேதம் கூறுகிறது. ஆம், தேவனே அச்சரீரத்தை ஆயத்தம் பண்ணினார். மரியாள் இதைச் செய்யவில்லை. மரியாள் பரிசுத்த குழந்தையைச் சுமந்து அதைப் பிரசவிக்கும் கருவியாக மாத்திரம் அமைந்திருந்தாள். அவர் மனிதனாகத் தோன்றின தேவன். அவர் தேவனுடைய குமாரன், அவர் புதிய சிருஷ்டியைச் சேர்ந்தவர். தேவனும் மனிதனும் ஒருவரையொருவர் சந்தித்து, ஒருவரோடொருவர் இணைந்தனர். இவ்வாறு ஏற்பட்ட சந்ததியில் அவர்தான் முதல்வர் அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையாயிருக்கிறார்’ `அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும் படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்’ (கொலோ. 1.18). `இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக் கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின’ (2 கொரி 5.17). மனிதன் பழைய சிருஷ்டியைச் சேர்ந்தவனாயிருந்தாலும், கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதன் மூலம் அவன் தேவனுடைய புது சிருஷ்டியாகிறான் என்பதைக் கவனிக்கவும், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்’ (எபே 2.10). `மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயாலாகச் சிருஷ்டிக் கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்’ (எபே. 4.24). பழைய சிருஷ்டிப்பு புதுப்பிக்கப்பட்டதன் மூலம் புதிய சிருஷ்டிப்பு உண்டாவதில்லை. அவ்வாறு அது புதுப்பிக்கப்படுமாயின், அதைப் `புதிய சிருஷ்டிப்பு’ என்று அழைப்பது தவறாகும். இது பழைய சிருஷ்டிப்பினின்று முற்றிலும் வித்தியாசப் பட்ட ஒரு சிருஷ்டிப்பாகும். இதில் பங்குகொள்பவர்களை மாம்சத்துக்குரிய வழிகளில் தேவன் நடத்துவதில்லை. இஸ்ரவேல் ஜனங்களை மாம்சப்பிரகார மாகவே அவர் நடத்தினார். அவர் முதலில் ஆபிரகாமைத் தெரிந்துகொண்டு, பின்பு ஆபிரகாமின் குமாரனான ஈசாக்கின் வழிவந்தவர்களைத் தெரிந்து கொண்டார். ஆனால் இப்பொழுதோ எல்லா வம்சங்களினின்றும், ஜாதிகளி னின்றும், கோத்திரங்களினின்றும் புதிய சிருஷ்டிப்பை உண்டு பண்ண அவர் தீர்மானித்திருக்கிறார். அவரே இந்த சிருஷ்டிப்பின் முதல்வராயிருக்கிறார். அவர் மனித உருவில் உண்டாக்கப்பட்ட தேவனாயிருக்கிறார். இப்பொழுது அவருடைய ஆவியினால் அநேக தேவ புத்திரர்களைத் தமக்கென்று அவர் சிருஷ்டிக்கிறார். இதுதான் தேவனைக் குறித்த உண்மையான வெளிப்பாடாகும். அவருடைய நோக்கம் `தெரிந்து கொள்ளப்படுதலின்’ மூலம் நிறைவேறுகிறது அதற்காகத் தான் அவர் சபையின் மத்தியில், தேவனுடைய புது சிருஷ்டிப்பின் காரணகர்த்தாவாக கடைசி காலம் முடியும்வரை உலாவிக்கொண்டிருக்கிறார். அவருடைய இராஜாதிபத்தியத்தின் வல்லமை இவைகளனைத்தையும் நிறைவேற்றியது. இவர், தம்முடைய சுயசித்தத்தின்படி, அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகும்படி முன்குறித்தார். சகலத்தையும் அறியும் தன்மையையும் (OMNISCIENCE) சகல வல்லமையையும் (OMNIPRESENCE) கொண்டவராய், அவர் இவைகளெல்லாவற் றையும், நிறைவேற்றினார். இப்பொழுது சபையின் மத்தியில் அவர் உலாவி, தம்முடைய சகோதரரிடமிருந்து மகிமையைப் பெற்றுக்கொண் டிருக்கிறார். அவர் சகலத்தையும் அறிந்தவராய், தம்முடைய திருவுளச் சித்தத்தின்படி, சகல கிரியைகளையும் நடப்பித்து, அவருடைய எல்லா நோக்கங்களையும் நிறைவேற்று கிறார், `தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்’ (எபே 1.12). அல்லேலூயா! நீங்கள் அவருக்குச் சொந்தமானவர்களாயிருப்பதால் களிகூருகிறீர்களா? லவோதிக்கேயா சபைக்கு அளிக்கப்பட்ட செய்தி வெளி 3.15-19. `உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும், இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவேன். நீ நிர்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; நான் நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும் உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்தில் வாங்கிக்கொள்ளவும், நீ பார்வை யடையும்படிக்கு உன் கண்களுக்கு கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு நான் ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதை யாயிருந்து மனந்திரும்பு’. இந்தக் காலத்தில் ஆவியானவர் ஏதேனும் ஒரு நல்ல காரியத்தையாகிலும் கூறவில்லையென்பதை நீங்கள் கவனித்திருப்பீர்களென்று நான் நம்புகிறேன். இரண்டு குற்றங்களை அவர் இச்சபையின் மேல் சுமத்தி அதற்குரிய தண்டனையையும் அவர் விதிக்கிறார். (1) `உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும் இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப்போடுவேன்’ (வெளி 3. 15-16). இதை நாம் கவனமாய் படிக்க வேண்டும். லவோதிக்கேயா சபையின் வெதுவெதுப்புத் தன்மையை இது உரைத்து, அதற்குரிய தண்டனையாகத் தேவன் அவர்களைத் தம் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவாரென்று கூறுகிறது. இந்த வசனத்தை அநேகர் தவறாக அர்த்தங்கொண்டு, தேவன் ஒருவனை வாயிலிருந்து வாந்தி பண்ணிப்போடக் கூடுமாதலால், `பரிசுத்தவான்கள் கடைசிவரை நிலைநிற்பர்’ (PERSEVERANCE OF THE SANITS) என்னும் போதகம் சரியல்ல என்று கூறுகின்றனர். அவ்வாறு சிந்தை கொண்டவர்கள், அவர்களுடைய எண்ணங்களை மாற்றி சரியான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நான் வேண்டுகிறேன், முதலாவதாக, இவ்வாக்கியம் தனிப்பட்ட ஒருவனைக் குறிக்காமல், ஒரு சபைக்கு உரைக்கிறார். மேலும், நாம் தேவனுடைய வாயினுள் இருக்கிறோமென்று வேதத்தில் எங்கும் எழுதப்படவில்லை. நாம் அவருடைய உள்ளங் கைகளில் வரையப்பட்டிருக்கிறோம்; அவருடைய மடியில் நாம் இருக்கிறோம். அவருடைய மந்தையாக நாம் புல்லுள்ள அவருடைய இடங்களில் மேய்கிறோம். அவருடைய வாயில் நாம் எப்பொழுதுமே இருந்ததில்லை. அப்படியெனில் தேவனுடைய வாயில் என்ன இருக்கிறது? வார்த்தையானது அவருடைய வாயிலிருந்து புறப்படுகிறது என்று வேதம் கூறுகிறது. `அவர் பிரதியுத்தரமாக; மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்’ (மத் 4.4). வார்த்தை நம்முடைய வாய்களிலும் இருக்கவேண்டும். சபையானது அவருடைய சரீரமாயிருந்து, அவருடைய ஸ்தானத்தை வகிக்கிறதென்பதை நாமறிவோம். அப்படியாயின் சபையின் வாயில் என்ன இருக்கவேண்டும்? வார்த்தையே. `ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன், (1 பேது 4.11). `தீர்க்கதரிசினமானது ஒரு காலத்திலும் மனுஷனுடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்’ (2 பேது, 1.21). அவ்வாறாயின் கடைசி காலத்தின் மக்களிடையே காணப்பட்ட குறை யாது? அவர்கள் வார்த்தையைவிட்டு விலகிப் போனார்கள். அதைக் குறித்த வைராக்கியம் குன்றியவர்களாய் அவர்கள் வெதுவெதுப்பாக மாறினார்கள். இதை இப்பொழுது நான் உங்களுக்கு நிரூபிக்கப் போகிறேன். பாப்டிஸ்டுகள் வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு தங்களுக்குகென பிரமாணங்களையும் கொள்கைகளையும் உண்டாக்கிக்கொண்டனர். இந்த நிலையிலிருந்து அவர்களை அசைக்கவே முடியாது. அடையாளங்களும் அற்புதங்களும் நிகழ்ந்த அப்போஸ்தலருடைய காலங்கள் முடிவு பெற்றதென்றும் அவர்கள் கூறுகின்றனர். மெதோடிஸ்டுகளும் வார்த்தையையே ஆதாரமாகக் கொண்டு தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தை மறுத்து, பரிசுத்தமாக்கப் படுதலே (SANCTIFICATION) பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுவதாகும் என்று சொல்லுகின்றனர். கிறிஸ்துவின் சபை (THE CHURCH OF CHRIST) என்னும் ஸ்தாபனமும், மறுபிறப்பிற்கேற்ற ஞானஸ்நானத்தை ஆதரித்து அந்த ஞானஸ்நானத்தைப் பெற்றும்,பாவம் நீங்காதவர்களா யிருக்கின்றனர். ஆயினும் அவர்களுடைய ஞானஸ்நானம் வார்த்தையையே ஆதாரமாகக் கொண்டது என்று அவர்களும் கூறுகின்றனர். இன்றைய பெந்தேகோஸ்தே ஸ்தானபங்களும் வார்த்தையில் உறுதியாய் நிற்கவில்லை. அவர்கள் உணர்ச்சி வசப்பட ஏதேனும் சம்பவம் நடைபெறுமாயின், அதற்காக அவர்கள் வார்த்தையையும் புறக்கணிப் பார்கள். எண்ணெயையும் இரத்தத்தையும், அன்னிய பாஷை பேசுதல் போன்ற அடையாளங்களையும், வார்த்தைக்கு அப்பாற்பட்ட இன்னும் அநேக காரியங்களையும், அவர்கள் விசுவாசித்து, வார்த்தையைவிட்டு விலகிப் போகிறார்கள். தேவனுடைய வார்த்தையானது இவ்விதமாகப் புறக்கணிக்கப்படு கிறது. ஆகையால் தேவன், `நான் உங்கள் எல்லோருக்கும் விரோதமாக வருவேன். நான் உங்களை என் வாயினின்று வாந்திபண்ணிப் போடுவேன். இது முடிவு காலமாயிருக்கிறது. இந்த ஏழு சபையின் காலங்களிலும் மனிதர் என்னுடைய வார்த்தைக்கு மேலாகத் தங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பதையே நான் கண்டேன். ஆகையால் இந்த கடைசி காலத்தில் என் வாயினின்று உங்களைப் புறம்பாக்குவேன். இனிஇவையெல்லாம் முடிந்துவிட்டன. நான் சபையின் மத்தியில் உலாவி, உண்மையுள்ள சாட்சியாயும் தேவனுடைய ஆமென் என்பவராயும் இருக்கிறேன். என்னுடைய தீர்க்கதரிசியின் மூலம் நான் என்னை வெளிப்படுத்தப் போகிறேன்’என்று கூறுகிறார். ஆம், அது உண்மையாக சம்பவிக்கும். `தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசி களுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில் அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ ரகசியம் நிறைவேறும்’ (வெளி 10.6) அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் நிரூபிக்கப் பட்ட தீர்க்கதரிசியை அவர் அனுப்புவார். சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பிறகு, இப்பொழுதுதான் தீர்க்கதரிசி தோன்றுவார். அவர் எலியாவைப் போன்றும், யோவான் ஸ்நானனைப் போன்றும், ஸ்தாபனங்களோடும், மார்க்க ஆசாரங்க ளோடும், தொடர்பு கொள்ளாமலும், படிக்காதவராயும் இருப்பார். அவர்கள் இருவரையும் போன்று, தேவன் கூறியவைகளை மாத்திரம் அவர் கூறுவார். மல் 4.6ல் உரைத்தபடி இவர் பிள்ளைகளுடைய இருதயங்களைப் பிதாக்களிடத் திற்குத் திருப்புவார். கடைசி காலத்திலிருக்கும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், பவுல் உரைத்த சத்தியத்தையே இவர் போதிக்கக் கேட்பர். அவர் பெந்தேகோஸ்தே முற்பிதாக்கள் பெற்ற சத்தியத்தையும் மறுபடியும் நிலைநாட்டுவார். கடைசி காலத்தின் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவரோடு ஒன்று சேர்ந்து தேவனை உண்மையாய் வெளிப்படுத்தி, அவருடைய சரீரமாயும், சத்தமாயும் திகழ்ந்து அவர் செய்த கிரியைகளையே தாங்களும் செய்வர். அல்லேலூயா! சபையின் சரித்திரத்தை நாம் சற்று ஆராய்வோமானால், நான் மேற்கூறியதன் உண்மை நன்கு விளங்கும். இருள் காலங்களில் வார்த்தை முழுவதுமாக மக்களிடமிருந்து அகற்றப்பட்டது. அப்பொழுது தேவன் தம்முடைய வார்த்தையை அளிக்க தூதரை அனுப்பினார். அச்சமயம், லூதரன்கள் தேவனின் சார்பாகப் பேசினர். ஆனால் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிகொண்ட காரணத்தால், ஸ்தாபனத்தின் கொள்கைகளினாலும், பிரமாணங்க ளினாலும் சுத்த வார்த்தை கறைபட்டது. அதன்பின்பு, அவர்கள் தேவனின் சார்பாகப் பேசக்கூடாமற் போயிற்று. அப்பொழுது தேவன் வெஸ்லியை அனுப்பினார். வெஸ்லி அவருடைய காலத்தில் தேவனின் சத்தமாக விளங்கினார். தேவன் அவருக்குக் கொடுத்த வெளிப்பாட்டை ஏற்றுக்கொண்டவரனைவரும் அந்தச் சந்ததியில் ஜீவிக்கும் நிருபங்களாகத் திகழ்ந்தனர். மெதோடிஸ்டுகளும் நெறிதவறியபோது, தேவன் மற்றவர்களை எழுப்பினார். இது காலா காலங்களாகத் தொடர்ந்து சம்பவித்து, கடைசி காலத்திலுள்ள மக்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்கென ஒரு தூதன் தோன்றுவார். தற்போதைய சபைகள் தேவனுடைய சத்தத்தை மக்களுக்கு அறிவிப் பதில்லை; தங்களுடைய சொந்த போதகத்தையே மக்களுக்குப் போதித்து வருகின்றன. இதன் விளைவாக, தேவன் அவைகளை விட்டுப் போய்விட்டார். இப்பொழுது அவர் தூதனுக்குள்ளும் மணவாட்டிக்குள்ளும் தம்முடைய சத்தத்தை வைத்து, சபைகளைக் கலங்கச் செய்வார். ஆம் தூதனும் மணவாட்டியும் தேவனுடைய சத்தத்தையே உடையவராயிருப்பர். ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்’ (வெளி 22.17), இனியும் ஒருமுறை இவ்வுலகம், பெந்தேகோஸ்தே காலத்தில் நிகழ்ந்தது போன்று, தேவனுடைய சத்தத்தைக் கேட்கும் முதல் சபையின் காலத்தில் நிகழ்ந்தது போலவே இச்சபையின் காலத்திலும் வார்த்தையில் உறுதியாய் நிற்கும் மணவாட்டி புறக்கணிக்கப் படுவாள். தேவன் இந்தக் கடைசி காலத்தவரை நோக்கி, வார்த்தை உங்களுக்குப் போதிய அளவில் கிடைத்திருக்கிறது. எல்லா காலங்களைக் காட்டிலும் இக்காலத்தில் வேதாகமங்கள் அதிகமுண்டு. என்றாலும் நீங்கள் அதைப் பாகுபடுத்திட, உங்களுக்கு வேண்டியவைகளை மாத்திரம் ஏற்றுக்கொண்டு, மற்றவைகளை நிராகரித்துவிட்டீர்கள். வார்த்தை கூறுவதன் பிரகாரம் ஜீவிக்க உங்களுக்கு ஆர்வமில்லை. ஆனால் அதைக் குறித்து வாக்குவாதம் செய்ய நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். நீங்கள் தணிந்து போய் சத்தியத்தைப் புறக்கணித்திருந்தால், நான் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பேன்; அல்லது வைராக்கியம் பொருந்தினவர்களாய் சத்தியத்தை அறிந்து அதை ஜீவியத்தில் கடைபிடித்திருந்தால், நான் உங்களைப் புகழ்ந்திருப்பேன். ஆனால் நீங்கள் வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அதே சமயத்தில் அதை அவமதித்தால், நானும் உங்களை அவமதிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். நீங்கள் எனக்குக் குமட்டலாயிருப்பதால், நான் உங்களைக் கக்குவேன்’ என்கிறார். வெது வெதுப்பான நீர் வயிற்றைக் குமட்டுமென்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு வாந்தி மருந்து (EMETIC) வேண்டுமாயின், வெதுவெதுப்பான நீர் அதற்குச் சிறந்தது. அவ்வாறே ஒரு வெதுவெதுப்பான சபை தேவனுக்குக் குமட்டலாயிருக்கிறது. ஆகையால் அவர்களை வாந்திபண்ணிப் போடுவதாக அவர் கூறுகிறார். நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முன்பும், இவ்விதமான உணர்ச்சியே அவருக்கு இருந்திருக்க வேண்டும். சபையானது அனலாயாவது குளிராயாவது இருந்தால் நலமாயிருக்கும், அவள் அனலாயிருந்தால் நன்றாயிருந்திருக்கும். ஆனால் அவள் அவ்வாறில்லை. அதற்காக அவளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவள் இப்பொழுது தேவனுடைய சத்தத்தை உலகத்திற்கு அறிவிப்பதில்லை; என்றாலும் அவள் அவ்வாறு செய்வதாகக் கூறிக்கொள்கிறான். தேவன் தம்முடைய மணவாட்டியின் மூலம் உலகத்தின் மக்களோடு இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார். (2) `நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; நான், நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும் உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாத படிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக் கொள்ளவும். நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்கிறேன்’ (வெளி 8. 17-18). `நீ சொல்லுகிறபடியால்’ என்னும் வசனத்தைச் சற்று சிந்திப்போம். இந்தச் சபையானது தேவனுடைய கருத்துக்களை வெளியிடுவதாகச் சொல்லுகிறது. ஆனால் அது உண்மையல்ல. கத்தோலிக்க சபையானது தேவனுடைய சத்தத்தை மக்களுக்கு வெளிப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளுகிறது. ஆனால் இவர்களைப் போன்ற ஆவிக்குரிய பொல்லாங்கானவர்களை நாம் காண்பது அரிதாகும். அவர்களுக்குள்ளிருக்கும் வித்தின் தன்மைகளை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். அந்த வித்து எங்கிருந்து தோன்றியது என்பதை நாமறிவோம். `நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும்’ லவோதிக்கேயா சபை கூறுகிறது. இவ்வுலகத்தின் பொருள்களினால் ஐசுவரியமடைந்ததாக அது பெருமை பாராட்டிக் கொள்கிறது. என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர் களுக்குத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களா கவும் தெரிந்து கொள்ளவில்லையா? நீங்களோ தரித்திரரைக் கனவீனம் பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்? உங்களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷிக்கிறார்கள்?’ (யாக் 2. 5-7). ஒரு ஐசுவரியவான் ஆவிக்குரிய ஜீவியத்தைச் செய்ய முடியாது என்று நான் கூறுவதாக நீங்கள் எண்ணவேண்டாம், அவர்களில் சிலரே அவ்வித ஜீவியத்தைக் கடைபிடிக்க முடியும் என்று வேதம் நமக்குத் தெளிவாகப் போதிக்கிறது. உண்மையான திருச்சபையிலுள்ள பெரும்பாலோர் ஏழ்மையான நிலையிலிருக்கின்றனர். சபையானது ஐசுவரியத்தை நிரம்பப் பெற்றால், `இக்கபோத்’ (அதாவது மகிமை அவளை விட்டுப்போய்விட்டது) என்னும் வாக்கு அதன் வாசலில் எழுதப்படும் என்று வேதம் கூறுகிறது. சபை இன்று ஐசுவரியமுள்ளதாய் விளக்குவதைப் போன்று எக்காலத்திலும் இருந்ததில்லை. கணக்கற்ற அழகான ஆலயங்கள் இக்காலத்தில் அதிகமாக எழும்புகின்றன. ஒவ்வொரு ஸ்தாபனமும் அழகு பொருந்திய மகத்தான ஆலயங்களைக் கட்டுவதில் மற்ற ஸ்தாபனங்களோடு போட்டியிடுகின்றது. அல்லாமலும், ஸ்தாபனங்கள் தொகையிடப்பட முடியாத ஆயிரக்கணக்கான டாலர்களைச் செலவழித்து, பள்ளிக்கூடங்களைக் கட்டி, அவைகளை வாரத்திற்கு இரண்டு மணி நேரமே உபயோகப்படுத்துகின்றன. எல்லா ஸ்தாபனங்களிலும் செல்வம் குவிந்து, அவைகள் அரசினர் பத்திரங்களையும் (STOCKS), வாக்குறுதி சீட்டுகளையும் (BONDS) தொழிற்சாலைகளையும், எண்ணெய்க் கிணறுகளையும், இன்ஷுரன்ஸ் ஸ்தாபனங்களையும் சொந்தமாக வைத்திருக்கின்றன. அல்லாமல், அவைகள் குருமார்களின் நலனுக்கென்றும் சபையோர்கள் நலனுக்கென்றும் பணத்தை அநேக நிதிகளில் போட்டு வைத்திருக்கின்றன. ஆனால், குருமார்களுக்கு இவை கண்ணியாக அமைந்திருக்கின்றன. எப்படியெனில், சத்தியத்தை அதிகமாக அறிய வேண்டுமென்று வாஞ்சை கொண்டு ஸ்தாபனங்களை விட்டு விலகும் ஊழியக்காரர் உபகார சம்பளத்தை இழக்க நேரிடுகிறது. அதன் காரணமாக, இவர்கள் சத்தியத்தை அறிந்தாலும் ஸ்தாபனங்களிலேயே இருக்க விருப்பங் கொள்கின்றனர். இது கடைசி காலமென்பதை நீங்கள் மறந்து போகவேண்டாம். இஸ்ரவேல் ஜனங்கள் பாலஸ்தீனாவுக்கு திரும்பிவிட்டதால் இது கடைசி காலமென்பதை நாம் அறிய வேண்டும். அவர் உண்மையாக வருவார் என்று நாம் விசுவாசித்தால், இந்த மகத்தான கட்டிடங்களின் அவசியமென்ன? அவ்வாறு செய்பவர்கள், இவ்வுலகத்தில் நிரந்தரமாகக் தங்கிவிட திட்டமிட்டிருக்க வேண்டும்; இல்லையேல், இயேசுவின் வருகை நூற்றுக்கணக்கான வருடங்கள் கழித்து சம்பவிக்கும் என்று எண்ணியிருக்க வேண்டும். இன்றைய கிறிஸ்தவ மார்க்கம் ஒரு பெரிய வியாபார ஸ்தலமாகத் திகழ்கிறது. சபையின் வருமானத்தை நிர்வாகிப்பதற்கென இன்று வியாபார நிர்வாகிகள் (BUSINESS MANAGER) நியமிக்கப்படுகின்றனர். தேவன் இதையா விரும்புகிறார்? பரிசுத்த ஆவியினால் நிறைந்து, தேவனை உண்மையோடு சேவித்த ஏழு பேர் சபையின் விவகாரங்களைக் கண்காணித்து வந்தனர் என்று அப்போஸ்தல ருடைய நடபடிகள் நமக்குப் போதிக்கவில்லையா? தேவன் இக்காலத்துச் சபையை நோக்கி, `நீ உன்னை ஐசுவரியவானென்று அழைத்துக்கொள்கிறாய்; ஆனால் நான் உன்னை அவ்வாறு அழைப்பதில்லை’ என்று கூறுகிறார். இன்றைக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழிக்கப்பட்டு ரேடியோ, டெலிவிஷன் நிகழ்ச்சி நிரல்கள் நடத்தப்படுகின்றன. சபையில் அங்கத்தினர் களின் தொகை அதிகரித்து, அதோடு செல்வமும் அதிகரிக்கின்றது. என்றாலும், பண ஒத்தாசை எதுவுமின்றி பரிசுத்த ஆவியை முற்றிலும் சார்ந்து நடத்தப்பட்ட மகத்தான ஊழியத்தைத் தற்போதைய ஐசுவரியம் நிறைந்த ஸ்தாபனங்கள் நடத்த முடியவில்லை. இக்காலத்தில் குருமார்களும், உடன் ஊழியர்களும், பாடகக் குழுவும் சம்பளத்திற்கென்று பணிபுரிகின்றனர். அதுவுமின்றி, பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டு, இன்னும் அநேக திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழிந்தாலும், தேவனுடைய வல்லமையானது குறைந்து கொண்டே வருகிறது. ஐசுவரியம் பொருந்திய சபையில் வல்லமை காணப்படவில்லை. தேவன் தம்முடைய ஆவியினால் அசைவாடுகிறாரேயன்றி, செல்வத்தைக் கொண்டும், மக்களின் திறனைக் கொண்டும் ஒருக்காலும் அசைவாடுவதில்லை. பண ஆசை எவ்வளவு கொடூரமானது என்பதைக் காண்பிக்க நான் விரும்புகிறேன். ஐசுவரியமுள்ளவர்களை அங்கத்தினர்களாகச் சேர்ப்பதற்குச் சபையானது அரும்பாடுபடுகிறது. செல்வாக்கு மிகுந்தவர்களும், படித்தவர்களும், பணக்காரரும் அங்கத்தினராக சேரவேண்டுமென்று எண்ணி, அது மார்க்கத்தை வசீகரமாக்குகிறது. ஆவிக்குரிய வளர்ச்சி, செல்வத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்படுமானால், உலகம் இப்பொழுதே தேவனைக் கொண்டிருக்க வேண்டும்; அதே சமயத்தில் உண்மையான திருச்சபை தேவனற்றதாயிருக்க வேண்டும். இது உண்மையல்லவென்பதை நாமறிவோம். `நான் திரவிய சம்பன்னனென்று நீ சொல்லிக்கொள்கிறாய்’ `நான் ஆவிக்குரிய சம்பத்தையுடையவன்’ என்று இருபதாம் நூற்றாண்டின் லவோதிக்கேயா சபை பெருமையோடு கூறுகிறது. இது உண்மையாவென்று நாம் வேத வசனங்களின் மூலம் ஆராய முற்படுவோம். சபையானது உண்மையாக ஆவிக்குரிய பிரகாரம் ஐசுவரியமுள்ள தாயிருப்பின், சமுதாய ஜீவியம் அதன் காரணத்தால் சீர்திருந்தியிருக்க வேண்டும். ஆனால் ஆவிக்குரிய ஜீவியத்தைக் கடைப்பிடிப்பதாக கூறிக்கொள்பவரின் ஜீவியமே சரியான நிலையில்லை. அதுவுமல்லாமல், வேசித்தனம், மனைவியைத் தள்ளிவிடுதல் போன்றவைகள் மக்களிடையே அதிகமாகிக்கொண்டே வருகின்றன. சிறுவர்கள் மற்றவருடைய சொத்துக்களை அழிப்பதில் சந்தோஷம் கொள்கின்றனர். நன்னடத்தையின்மை, ஒழுங்கற்ற மாமிச புணர்ச்சிகள், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடுதல், திருடுதல் முதலியவைகள் உச்சநிலையை இக்காலத்தில் அடைந்திருக்கின்றன. இருந்தாலும் தற்போதைய சந்ததி மிகவும் ஒழுக்கமுள்ளதென்றும், ஆலயங்கள் மக்களால் நிறைந்து, சுதேசிகளும் கூட இரட்சிக்கப்பட்டிருக்கின்றனரென்றும் சபை கூறுகிறது. அது ஆவிக்குரிய வறுமையடைந்திருக்கிறதேயன்றி, ஐசுவரியமடையவில்லை. உங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் நடையுடை பாவனைகளை ஆராய்ந்து பாருங்கள். உண்மையான கிறிஸ்தவர்களின் தோற்றமுடைய எத்தனைபேரை நீங்கள் கணக்கற்ற ஜனக்கூட்டத்தின் மத்தியில் காணக்கூடும்? மறுபிறப்பின் உண்மையான அடையாளம் சிலரிடமே காணப்படும். ஆயினும், கோடிக்கணக்கானவர்கள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாக சபைகள் கூறுகின்றன. ஆண்களின் உடையை அணிந்து, மயிரைக் கத்தரித்து, யேசபேலைப் போன்று வர்ணம் தீட்டிக்கொள்ளும் ஒரு பெண் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க முடியுமா? ஹாலிவுட் பட்டினம் நாகரீகத்தை உண்டாக்கி, அதை அடிப்படையாகக் கொண்டு உடைகள் தைக்கப்பட்டு, அவைகள் கடைகளில் விற்கப்படுகின்றன வென்றும், அந்த ஆடைகளைத் தவிர வேறுவித ஆடைகள் அங்கு கிடைப்பதில்லையென்றும் பெண்களாகிய நீங்கள் சாக்குப்போக்கு கூறலாம். ஆனால் துணிகளும், தையல் இயந்திரங்களும் (SEWING MACHINES) கடைகளில் இன்னமும் விற்கப்படுகின்றன. ஆகையால் அடக்கமுள்ள உடைகளை நீங்களே வீடுகளில் தைத்துக்கொள்ளலாம். `ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று’ (மத் 5.28) என்று வேதம் கூறுகிறது. மனிதன் இச்சையோடு பார்ப்பதற்கு நீங்கள் உடுக்கும் ஆடைகள் காரணமாயிருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அப்படியெனில், நீங்கள் அறியாமலேயே அவன் விழுந்த பாவத்திற்கு நீங்களும் உடந்தையாயிருக் கிறீர்கள். கர்த்தர் இதைக் குறித்து உங்களை நியாயந் தீர்ப்பார். ஸ்திரீகள் இவ்விதமான போதகத்தை விரும்புவதில்லை என்பதை நானறிவேன். ஆனால் சகோதரியே, உன்னுடைய செயல்கள் தேவனுடைய பார்வையில் தவறாகக் காணப்படுகின்றன. ஒரு ஸ்திரீ மயிர் கத்தரிப்பதை வேதம் அனுமதிப்பதில்லை. தேவன் தலையை மூடுவதற்கென்று மயிரைப் பெண்களுக்குக் கொடுத்திருக்கிறார்; அவர்கள் அதை நீளமாக வளர்க்க வேண்டுமென்றும் அவர்கட்டளையிட்டிருக்கிறார். அது ஸ்திரீகளின் மகிமையாயிருக்கிறது. அவர்கள் மயிரைக் கத்தரிக்கும்போது, தங்களுடைய கணவன் மாரின் ஆதிக்கத்திலில்லை என்பதை அவர்கள் அறிவிக்கிறார்கள். அப்பொழுது ஏவாளைப் போன்று அவர்கள் தங்கள் சொந்த வழிகளைப் பின்பற்றுகிறவர்களாகக் கருதப்படுவர். பெண்கள் ஓட்டுரிமையைப் பெற்றனர். மனிதனுக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட அலுவல்களையும் செய்யத் தொடங்கினர். அவர்கள் பெண்களுக்குரிய சுபாவம் முழுவதையும் இழந்துபோயினர். ஆம், ஸ்திரீயே, மனந்திரும்பி தேவனிடத்தில் வரவேண்டும். உங்களில் அநேகர் சபைகளில் பிரசங்கிக்கவும், இன்னும் ஆண்களுக்கேயுரிய சபை ஊழியங்களையும் செய்கின்றீர்கள். பிரசங்கிக்கவோ அல்லது மனிதனின் மேல் அதிகாரம் செலுத்தவோ, பெண்களுக்குரிமையுண்டு என்று கூறும் ஒரு வேதவசனத்தையாவது நீங்கள் எனக்குக் காண்பித்தால், நான் உங்களிடம் மன்னிப்புகோரத் தயாராயிருக்கிறேன். நான் தவறு என்று உங்களில் யாரும் நிரூபிக்க முடியாது; ஏனெனில் நான் தேவனுடைய வசனத்தில் உறுதியாய் நிலைநிற்கிறேன். நீங்கள் ஆவிக்குரிய ஐசுவரியம் உண்மையாகப் பெற்றிருந்தால், நான் கூறுவது உண்மையென உங்களுக்கு விளங்கும். வார்த்தையைத் தவிர வேறெதுவும் உண்மையானதல்ல. `உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை’ (1 தீமோ. 2.12) என்று பவுல் கூறுகிறான். எபேசியர் 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்ட ஐந்துவிதமான ஊழியங்களை நீங்கள் ஏற்று, அதேசமயத்தில் புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தாமலிருக்க உங்களால் முடியாது. சகோதரியே, வார்த்தைக்குச் செவிகொடு. தேவ ஆவியானவர் ஒருபொழுதும் உங்களைப் பிரசங்கிக்க அனுமதிக்க மாட்டார்; ஏனெனில் வார்த்தையும் ஆவியும் ஒன்றே. ஆவியானவர் கூறுவதையே வார்த்தையும் கூறும், நீங்கள் தவறு செய்கிறீர்கள்; நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள். தாமதமாவதற்கு முன்பு விழித்தெழும்பி சத்தியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். சாத்தான் உங்கள் தாயாகிய ஏவாளை வஞ்சித்தான். இப்பொழுது அவளின் குமாரத்திகளை அவன் ஏமாற்றுகின்றான். தேவன் உங்களுக்கு ஒத்தாசை செய்யட்டும். `எனக்கு ஒரு குறைவுமில்லை இவ்வாறு ஒருவன் கூறும்போது, அவனுக்குச் சகலமும் உண்டு என்றும், அதனால் அவனுக்கு வேறெதும் அவசியமில்லை யென்றும் அர்த்தமாகிறது. சபையின் திருப்தியுள்ள தன்மையை இது எடுத்துக் காட்டுகிறது. அவளுக்குப் போதுமானவையுண்டு என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கிறாள். தேவனுடைய வெளிப்பாட்டையும், வல்லமையையும், சத்தியத்தையும் பெற்றுக்கொண்டதாக எந்த ஸ்தாபனம் இன்று கூறாமல் இருக்கிறது? பாப்டிஸ்டுகள் எல்லாவற்றையும் பெற்றுவிட்டதாகக் கூறுகின்றனர். மெதோடிஸ்டுகளும், `கிறிஸ்துவின் சபை’ (CHURCH OF CHRIST) என்னும் ஸ்தாபனத்திலிருக்கிறவர்களும் அவ்வாறே கூறுகின்றனர். பெந்தேகோஸ் தேகாரர் சத்தியத்தின் நிறைவைப் பெற்றதாக உரிமை பாராட்டுகின்றனர். அவர்களுடைய சபைபுத்தகங்களில், அவர்களுடைய சொந்த சத்தியங்களை மிகவும் அழகாக அவர்கள் எழுதி தேவனிடமிருந்து சத்தியத்தைப் பெற்றுவிட்டதாகக் கூறுகின்றனர். அவர்களில் சிலர் வார்த்தையில் காணப்படும் தெய்வீக சுகத்தை விசுவாசிப்பதுமில்லை; அவர்களுக்குத் தெய்வீகசுகம் அவசியமுமில்லை. தேவன் வானத்தைத் திறந்து பரிசுத்த ஆவியை ஊற்றினாலும் அவர்களில் சிலருக்கு அது அவசியமில்லை. ஆனால் இவர்களெல்லாரும் தங்களுக்கு ஒரு குறைவுமில்லையென்று கூறுகின்றனர். அவர்கள் கூறுவது உண்மையா என்று அறியவேண்டுமாயின், இருபதாம் நூற்றாண்டு சபையோடு முதல் நூற்றாண்டு சபையை ஒப்பிட்டுப் பாருங்கள். முதலாம் நூற்றாண்டு சபையில் காணப்பட்ட வல்லமையும், அன்பும் இப்பொழுது எங்கே? பாவத்தை மேற்கொண்டு, பரிசுத்தமடைந்து, இயேசுவை நோக்கிச் சென்ற சபை இப்பொழுது எங்கிருக்கிறது, அன்று காணப்பட்ட ஒருமனமும் ஒற்றுமையும் எங்கு போயிற்று? இவைகளை நீங்கள் இக்காலத்தின் சபைகளில் காணமுடியாது. அவைகள் தங்களுக்கு ஒரு குறைவுமில்லையென்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் முழு நிறைவுள்ள ஆதித்திருச்சபை, தேவனுடைய வல்லமையை அதிகமாகப் பெற எண்ணி எப்பொழுதும் தேவனோடு தொடர்பு கொண்டது என்று நாம் அப்போஸ்தலருடைய நடபடிகளில் வாசிக்கிறோம். தேவனுடைய வியாதி நிர்ணயம் GOD’S DIAGNOSIS அவர்களுக்கு ஒரு குறைவுமில்லையென்றும், ஆவிக்குரிய பிரகாரம் ஐசுவரியவான்களாயிருக்கின்றனரென்றும் அவர்கள் கூறினாலும், தேவன் அவர்களைக் குறைவுள்ளவராகக் காண்கிறார். தேவன் அவர்களை நோக்கி, `நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத் தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமலிருக்கிறாய்’ என்று கூறினார். நிர்வாணியாயிருப்பவர்கள் தங்கள் நிர்வாண நிலையை அறியாமலிருந்தால் அவர்களில் ஏதோ ஒரு கோளாறு இருக்க வேண்டும், ஆம், தேவன் யூதர்களின் கண்களைக் குருடாக்கிப் போட்டது போன்று, தங்கள் நிர்வாணம் காணாதபடி இவர்கள் கண்களையும் குருடாக்கிப் போட்டார். சுவிசேஷம் இப்பொழுது யூதர்களிடத்தில் போகும் சமயம் வந்துவிட்டது. லவோதிக்கேயா சபை நிர்ப்பாக்கியமுள்ளதாய்’ இருக்கிறதென்று தேவன் கூறுகிறார். `நிர்ப்பாக்கியம்’ (WRETCHED) என்னும் வாக்கு `சகித்துக்கொள்’ (ENDURE), சோதனை (TRIAL) என்று அர்த்தங்கொள்ளும் இரண்டு கிரேக்க பதங்களிலிருந்து உண்டானது. இந்தச் `சோதனை’ கிறிஸ்தவனுக்கு நேரிடும் சோதனையைக் குறிப்பதல்ல; சோதனையைச் சந்தோஷத்தோடு சகிக்கும் ஒரு கிறிஸ்தவன் பாக்கியமுள்ளவனாகக் கருதப்படுகிறான். ஆனால் சோதனை நேரிடும் இவர்கள் நிர்பாக்கியரென்றும், பரிதபிக்கப்படத்தக்கவர்களென்றும் விவரிக்கப்படுகின்றனர். நிறைவும், முன்னேற்றமுமுள்ள காலத்தில், சோதனைகள் (துன்பங்கள்) எவ்வாறு நேரிடும்? விஞ்ஞானம் அபிவிருத்தி யடைந்து, எல்லாம் அதிகமாகக் கிடைத்து, சந்தோஷத்தையளிக்கும் அநேக செயல்கள் நடைபெறும் இக்காலத்தில், திடீரென மக்கள் மனநோயுற்று மரிப்பதைக் காணும்போது மிகவும் அதிசயமாயிருக்கிறது. எல்லாரும் சந்தோஷமாயிருக்க வேண்டிய இக்காலத்தில், ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் நரம்புணர்ச்சியை அடக்க, இரவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு (SEDATIVE), காலையில் புத்துணர்ச்சி பெறுவதற்கென வேறு மாத்திரைகளை விழுங்கி, வைத்தியர்களிடம் ஓடி, காரணம் எதுவுமின்றி அவர்களுக்குள் குடிகொண்டிருக்கும் பயத்தைப் போக்குவதற்கென சாராயம் குடித்தும் வருகின்றனர். ஆம், இந்தக் காலம் உலகப் பொருள்களை அதிகமாகக் கொண்டதால் பெருமையடைகின்றது; ஆனால் இக்காலத்து மக்களின் சந்தோஷம் குறைவுபட்டது. இக்காலம் ஆவிக்குரிய காரியங்களில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகப் பெருமை கொள்கிறது; ஆனால் மக்களோ அவர்கள் பின்பற்றும் வழியைக் குறித்து நிச்சயமில்லாதவர் களாயிருக்கின்றனர். இக்காலம் நன்னடத்தையுள்ள காலமென்று பெருமை யடித்துக் கொள்கிறது. ஆனால், நோவாவின் காலத்தைத் தவிர வேறெந்த காலத்திலும் மக்கள் இவ்வளவு நேர்மையிழந்தவர்களாகக் காணப்படவில்லை. அது ஞானத்தைக் குறித்தும், விஞ்ஞானத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் குறித்தும் பேசுகிறது. ஆனால் மனிதனின் சிந்தையும், ஆத்துமாவும், ஆவியும், இப்பூலோகத்தில் உண்டாகும் மாறுதல்களுக்குத் தங்களைச் சரிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்தச் சந்ததியில் நாம் அதிக முன்னேற்றத்தையடைந்து, வானமண்டலங்களை எட்டிப்பிடிக்கும் சாமர்த்தியமனைத்தையும் ஒருவாறு அடைந்துவிட்டோம். ஆனால் மனிதனுடைய இருதயத்துக்குள் அந்தகாரம் நிறைத்து, காரணம் எதுவுமின்றி மக்களின் இருதயங்கள் திகிலடைந்து சோர்ந்து போயிருக்கின்றன. சமாதானம் நிலவவேண்டுமென்று இக்காலம் கூக்குரலிடுகின்றது. ஆனால் சமாதானத்தை எங்கும் காணோம். எல்லாப் பொருள்களும் அதிகமாக இருந்தாலும், மக்களின் இருதயங்களில் திருப்தியில்லை. துன்மார்க்கனுக்குச் சமாதானமில்லையென்று தேவன் கூறுகிறார். `அவர்கள் பரிதபிக்கப்படத் தக்கவர்களாயிருக்கின்றனர்’, என்றாலும் அவர்களிடம் காண்பிக்கப்படும் பரிதாபத்தை அவர்கள் இகழ்ந்து பெருமையுள்ளவர்களாயிருக்கின்றனர். அவர்களிடமுள்ளதைக் குறித்து பெருமை பாராட்டுகின்றனர். ஆனால், இவையனைத்தும் அதிக காலம் நீடிக்காது, அவர்கள் தேவனுடைய வசனத்தின் வெளிப்பாட்டின் மேல் கட்டப்பட்டவர்களாயிராமல், மணலின் மேல் கட்டப்பட்டவர்களாயிருக்கின்றனர். வெகு சீக்கிரத்தில் பூகம்பம் நேரிடும்; வெகு சீக்கிரம் தேவனுடைய கோபாக்கினையாகிய புயல்காற்று வீசும். அப்பொழுது அழிவு சடுதியாய் அவர்கள் மேல் வரும். மாமிசத்துக்குரிய பிரகாரமாய் அவர்கள் செய்த ஆயத்தமனைத்தும் வீணாகும். இவ்வுலகத்தில் நேரிடுபவைகளுக்கு அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளாத நிலையில் இருப்பார்கள். அவர்கள் உண்மையாகவே பரிதபிக்கப்படத்தக்கவர்கள், உலக சபைகளின் ஐக்கியத்தில் பங்கு கொள்பவர்களுக்காக நாம் அனுதாபப்பட வேண்டும். அது தேவனுடைய அசைவு என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் அது சாத்தானின் இயக்கமாயிருக்கிறது. ஸ்தாபனங்களின் மேலுள்ள தேவனுடைய சாபத்தை அறியாத மக்களுக்காக நாம் அனுதாப்படவேண்டும். அழகிய ஆலயங் களையும்,குருமார்களின் வீடுகளையும், நன்றாக பழக்கப்பட்ட பாடகக் குழுவையும், செல்வத்தையும், அமைதியும், பயபக்தியுமான வழிபாட்டின் முறையையும் கொண்டவர்களுக்காக நாம் அனுதாபப்பட வேண்டும், அவர்களுக்காக பரிதபிக்க வேண்டுமேயன்றி, அவர்கள் மேல் பொறாமை கொள்ளக்கூடாது. மகத்தான கட்டிடங்களை விட்டு, பாழடைந்து போன கட்டிடங்களுக்கு நாம் மறுபடியும் சென்று, உலகத்தை நிராகரித்து, தேவனை அதிகமாக அடைய நாம் முற்படுவோம். ஆவியின் வரங்கள் பெற்றதாகப் பெருமை கொள்பவர்களுக்காக நாம் அனுதாபப்பட வேண்டும். ஏனெனில் இவர்களெல்லாரும் வெகு சீக்கிரம் கோபாக்கினையடைவார்கள். `அவர்கள் தரித்திரராயிருக்கிறார்கள்’. அவர்கள் ஆவிக்குரிய காரியங்களில் தரித்திரராயிருக்கின்றனரென்பது இதன் அர்த்தம். அழகான பெரிய ஆலயங்களும், அதிகமதிகமான சபை அங்கத்தினர்களும் பரிசுத்த ஆவியின் கிரியைகள் என்று கருதப்படும் அநேக செயல்களும் இக்காலத்தில் அடையாளங்களாயிருக்கின்றன. இந்தக் காலம் முடிவுக்கு வருந்தோறும், இவைகள் பெருகிக்கொண்டே வருகின்றன. இவைகளனைத்தும் தேவனால் உண்டாகவில்லை. ஜனங்கள் எழுப்புதல் பிரசங்கங்களைக் கேட்டு மனந்திரும்பி, அதற்கு அறிகுறியாக பீடங்களுக்கு முன்பு வருகின்றனர் (ALTER CALL) என்று அநேகர் எண்ணுகின்றனர். ஆனால் இவ்வாறு மனந்திரும்பினவர்களில் பெரும்பாலோர் தேவனுடைய வழியில் செல்வதில்லை; சுவிசேஷ கூட்டங்கள் முடிவடைந்தவுடன் அவர்களும் பின்வாங்கிப் போகின்றனர். ஒரு மனிதனின் பிரசங்கத்தை அவர்கள் கேட்கின்றனர். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பரப்பின வலைக்குள் அவர்கள் வருகின்றனர், ஆனால் அவர்கள் மீன்களல்லாததால், ஆமையைப் போல் ஊர்ந்து தங்களுக்குரிய ஸ்தலத்திற்குச் சென்று விடுகின்றனர். அல்லாமலும், அன்னிய பாஷை பேசுதல் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் அடையாளமாக இக்காலத்தில் கருதப்படுகிறது; நாம் ஒரு பெரிய எழுப்புதலின் மத்தியில் இருப்பதாக ஜனங்கள் எண்ணுகின்றனர். ஆனால் எழுப்புதலின் காலம் முடிவடைந்துவிட்டது. அமெரிக்காவுக்கு 1957ம் வருஷத்தில்கடைசி தருணம் அளிக்கப்பட்டது- பெல்ஷாத்சாரின் விருந்தில் அன்னிய பாஷை வரப்போகும் அழிவை அறிவிக்கும் தேவனுடைய அடையாளமாயிருந்தது போன்று, இக்காலத்திலும் அது வரப்போகும் அழிவை அறிவிக்கிறது. அநேகர் கடைசி நாளில் இயேசுவை நோக்கி, `கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? என்பார்கள், அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து, `நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என்பார். (மத் 7.22-23), ஆம், இயேசு அவர்களை அக்கிரமச் செய்கைக்காரரென்று அழைத்தார். என்றாலும் வியாதியஸ்தருக்கு ஜெபம் செய்ய அவர்களை நீங்கள் அழைக்கிறீர்கள். அவர்கள் ஜனங்களுக்கு முன்பாக எண்ணெயையும் இரத்தத்தையும் வரவழைக்கிறார்கள்; எல்லாவிதமான தீர்க்கதரிசனமும், அவர்கள் உரைக்கின்றனர். ஜனங்கள் இவர்களைச் சூழ்ந்துகொண்டு, அவர்கள் தேவனால் உண்டானவர்கள் என்று கூறுகின்றனர். உண்மையாகவே அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கென இவைகளைச் செய்து, பாவத்தில் ஜீவிக்கின்றனர், `அவர்களின் செயல்கள் பலனையளிக்கின்றன. ஆகையால், அவர்கள் தேவனால் உண்டாயிருக்க வேண்டும்’ என்று ஜனங்கள் கூறுவது வேதத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகும். இந்தக் காலம் ஆவிக்குரிய நிலையில் எவ்வளவாய் வறுமையடைந்திருக்கிறது! இந்த வறுமை நிலையை மக்கள் உணராதிருக்கின்றனர். `நீ குருடனும் நிர்வாணியுமாயிருக்கிறாய்’ ஒருவன் குருடனும் நிர்வாணியுமாயிருந்து அதைக் குறித்து எவ்வாறு அறியாதிருக்க முடியும்? இது மாம்சத்துக்கிரிய நிலையைக் குறிப்பதல்ல. ஜனங்கள் ஆவிக்குரிய பிரகாரம் குருடர்களாயும் நிர்வாணிகளாயும் காணப்படுகின்றனர் என்று இவ்வசனம் விளங்குகிறது. எலிசாவும் கேயாசியும் சீரிய இராணுவங்களால் சூழப்பட்டபோது, எலிசா தேவனுடைய வல்லமையினால் அவர்களைக் குருடாக்கிப் போட்டான். அவர்களுடைய கண்கள் விரிவாகத் திறந்து, அவர்கள் போகும் இடத்தையும், அவர்களால் காணமுடிந்தது. அவர்கள் அடைந்த குருட்டுத்தனம் விசித்திர மானது; அதாவது, அவர்கள் சிலவற்றைத் தங்கள் கண்களால் காணமுடிந்தது. ஆனால் எலிசாவையும், அவனுடைய வேலைக்காரனையும், இஸ்ரவேலரின் பாளையத்தையும் அவர்களால் காணமுடியவில்லை. இவர்கள் காணக்கூடாமலிருந்த இஸ்ரவேலர் இவர்களைச் சிறைப்படுத்தினர். இதே சம்பவம், இயேசுவின் ஊழியத்திலும் நிகழ்ந்தது. அவர்கள் ஜனங்களுக்குச் சத்தியத்தைப் போதிக்க முயற்சித்தார். ஆனால் அவர்கள் அவருக்குச் செவிகொடுக்கவில்லை. `அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது. நாங்களும் குருடரோ என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி; நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது, நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்’ (யோவான் 9. 40-41), இக்காலத்திலுள்ளவர்களின் மனப்பான்மையும் இயேசுவின் காலத்திலுள்ளவரின் மனப்பான்மை போன்றே இருக்கிறது. ஜனங்கள் எல்லாமறிந்தவர்கள் என்று தங்களை எண்ணிக்கொள் கின்றனர். ஒரு மனிதன் மக்கள் கொண்ட கருத்துக்களுக்கு வேறுபட்டதும், தேவனுடைய உண்மையான சத்தியமுமாயிருக்கிறவைகளை விவரிக்கும்போது, அவர்கள் அதை ஆட்சேபிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு அவைகளைக் கேட்கிறார்களேயன்றி, அவைகளை அறியவேண்டுமென்ற வாஞ்சையோடு அவர்கள் கவனமாய் கேட்பதில்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். வேதம் வேதத்திற்கு எதிராக இருக்க முடியுமா? வேதத்திலுள்ள சத்தியங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை களாய் இருக்கக்கூடுமா? சத்தியத்தை ஆதாரமாகக் கொண்ட முற்றிலும் வித்தியாசப்பட்ட இரண்டு உபதேசங்கள் எவ்வாறு இருக்க முடியும்? அது அவ்வாறு இருக்கவே முடியாது. இருந்தாலும் தேவனுடைய பிள்ளைகளில் எத்தனைபேருக்குக் கண்கள் சத்தியத்தைக் காண்பதற்கென்று திறந்திருக் கின்றன? நான் அறிந்தவரை, அவர்களில் ஒரு சதவிகிதம்கூட, வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறதென்றும் அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தத்துக்கும் பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறதென்றும் அறிந்து கொள்ள வில்லை. வேதவாக்கியங்கள் தேவ ஆவியால் அருளப்பட்டிருப்பதால், ஒரு வசனம் மற்றெல்லா வசனங்களோடு அழகாகப் பொருந்தும், நம்மில் எத்தனைபேர் தெரிந்துகொள்ளப்படுதலின் சத்தியத்தையும்,அழிவுக்கென்று நியமிக்கப்படுதலின் சத்தியத்தையும் ஏற்றுக்கொள்கிறோம்? இவைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்தச் சத்தியத் திற்குச் செவிசாய்ப்பார்களா? இவைகள் சந்தேகமின்றி தேவவசனங்களில் அடங்கியிருக்கின்றன; அவைகளை ஒருபோதும் நாம் மாற்ற முடியாது இவைகளை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் கோபத்தினால் பற்களைக் கடிக்கின்றனர். இந்தக் காலத்தின் முடிவில், ஒரு தீர்க்கதரிசி தோன்றுவார். ஆனால் அவருடைய உபதேசத்திற்கும் கிரியைகளுக்கும் அவர்கள் குருடாயிருப்பார்கள். தாங்கள் செய்யும் அனைத்தும் சரியென்று அவர்கள் குருட்டுத்தனமாக எண்ணுகிறபடியால், அவர்கள் சத்தியத்தை இழக்க நேரிடும். தேவன் அவர்களை நிர்வாணிகளென்றும் குருடர்களென்றும் அழைக்கிறார். அவ்வாறிருந்தும் அதைக்குறித்து அறியாத ஜனங்களின் நிலைமை பரிதமாயிருக்கிறது. அவர்கள் சிந்தனை கோளாறுடையவர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு ஞாபகமறதி உண்டாகிறது. அவர்களுடைய புத்தித்திறமையெல்லாம் போய்விட்டது. ஆம், ஆவிக்குரிய ஞாபகமறதி அவர்களிடம் காணப்படுகின்றது. அப்படியெனில், பரிசுத்த ஆவியானவர் கடைசி காலத்துச் சபையை விட்டுப் போய் விட்டாரென்று அர்த்தமா? அல்லது மக்கள் தேவனுடைய சிந்தையற்றவர்களாய் இருப்பதால் பவுல் ரோமசபைக்கு எழுதியது நிகழ்கின்றதா? `தேவனை அறியும் அறிவைப் பற்றிக் கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தாகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். (ரோமர் 1.28). மேற்கூறியது சம்பவித்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இந்த ஜனங்கள், தாங்கள் தேவனால் உண்டானவர்களென்றும், தேவனையறிந்து அவருடைய பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாகவும் கூறுகின்றனர். இருப்பினும், அவர்கள் நிர்வாணிகளாகவும், குருடர்களாகவுமிருந்து அவர்களுடைய நிலையை அறியாதிருக்கின்றனர். அவர்கள் ஏற்கனவே ஏமாற்றப்பட்டனர். அவர்கள் தவறான ஆவியைப் பெற்றிருக்கின்றனர். தெரிந்து கொள்ளப்பட்ட வர்கள் வஞ்சிக்கப்பட முடியாது. தெரிந்துகொள்ளப்படாத மற்றவர்கள் வஞ்சிக்கப்பட்டனர் என்பது தெளிவாகிறது, தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள மறுத்ததனால் அநேகர் குருடராயினர். தேவனுடைய பாதுகாப்பிலிருந்து அநேகர்விலகியோடி, ஸ்தாபனங்களின் மூலம் பாபேல் கோபுரத்தைக் கட்டிக்கொண்டு, இரட்சிப்புக்கென்று தங்களுடய சொந்த வழியைத் தேடிக் கொண்டதால், அவர்கள் தங்களை நிர்வாணிகளாக்கிக் கொண்டனர். அவர்கள் தங்களுக்கென குழுக்களையும், ஐக்கியங்களையும் கூட்டங்களையும் நியமித்துக்கொண்டு, இவைகளை ஆடைகளாக உடுத்திக் கொண்டதால், அவர்கள் அழகாகக் காணப்படுகின்றனரென்று நினைக்கின்றனர். ஆனால் தேவன் இவைகளனைத்தையும் இப்பொழுது களைந்து போடுகிறதால், அவர்கள் நிர்வாணிகளாயினர். இத்தகைய குழுக்கள் அவர்களை அந்திக்கிறிஸ்துவின் பாளையத்துக்குள்ளும், களைகளுள்ள பூமிக்கும் வழிநடத்துவதால், இவர்களெல்லாரும் கடைசியில் ஒன்றாகக் கட்டப்பட்டு அக்கினியில் போடப்படுவர். இவர்கள் உண்மையாகவே பரிதபிக்கப்படத்தக்கவர்கள். அவர்களுக்காக நாம் பரிதபித்து அவர்களை எவ்வளவாக எச்சரித்து, அழிவுக்குரிய வழியிலிருந்து விலக வேண்டிக் கொண்டாலும், அவர்கள் கோபங் கொண்டவர்களாய், எல்லாவற்றையும் நிராகரிக்கின்றனர். அவர்களின் பரிதாப நிலைமையை அவர்கள் அறியாதிருக்கின்றனர். மனக் கடினமுள்ளவர்களும், நம்பிக்கையற்ற வர்களுமான இவர்கள், தங்கள் அவமானத்தைக் குறித்துப் பெருமையடைகின்றனர். வார்த்தைக்கு விரோதமான இவர்கள், ஒருநாள் வார்த்தையைக் கொண்டு நியாந்தீர்க்கப்பட்டு அதற்குரிய பலனையடைவார்கள். சபையின் காலங்களுக்கு அளிக்கப்படும் கடைசி ஆலோசனை வெளி 3. 18-19. `நான், நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண் வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக் கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடவேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிற வர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு. தேவனுடைய ஆலோசனை மிகவும் சுருக்கமாயிருக்கிறது. அவர் கடைசி கால சபையை ஒரே நம்பிக்கைக்கு வழி நடத்துகிறார். அந்த நம்பிக்கை அவரே. அவர் `என்னிடத்தில் வந்து வாங்கிக்கொள்’ என்பதாய் கூறுகிறார். லவோதிக்கேயா சபை தேவனுடைய ராஜ்யத்தின் ஆவிக்குரிய பொருள்களை இயேசுவினிட மிருந்து வாங்கவில்லையென்று இவ்வசனத்தின் மூலம் நமக்குத் தெளிவாகிறது. அவர்களுடைய வியாபாரம் ஆவிக்குரியதல்ல. அவர்கள் ஆவிக்குரியவர்க ளென்று தங்களை எண்ணிக்கொள்ளலாம். ஆனால் அவர்களுடைய மத்தியில் நடக்கும் கிரியைகளோ அவைகளை நிரூபிக்கவில்லை. பவுல் கூறிய `தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்’ (பிலி 2.13) என்பது அவர்களிடம் காணப்பட வில்லை. அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சபைகளும், பள்ளிக்கூடங்களும் மருத்துவசாலைகளும், சுவிசேஷம் பரம்புவதற்கென எடுக்கும் முயற்சிகளும் ஸ்தாபனங்களின் வித்துக்களிலிருந்து உண்டானதால், தேவன் அவைகளில் பிரசன்னராயிருக்கவில்லை. தேவனுடைய வித்தின் மூலம் தோன்றினவைகளில் தேவன் நிச்சயமாக இருப்பார். `நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை என்னிடத்திலே வாங்கிக்கொள்’ அவர்களிடம் ஏராளமான பொன் இருந்தாலும், அது தவறான பொன்னாய் இருக்கிறது. பூமியில் விளையும் பொன் மக்களின் ஜீவியத்தை அடிமைப்பபடுத்தி, அவர்களுடைய தன்மைகளை மாற்றி, அவர்களை நிர்மூலமாக்குகிறது. அது மேலுள்ள பேராசை எல்லாப் பொல்லாங்கிற்கும் காரணமாயிருக்கிறது. `இவைகளுக்குப் பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. அவன் பலத்த சத்தமிட்டு மகாபாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று. அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம் பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவருடைய செல்வச் செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான். பின்பு வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது. என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன் படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார். அவள் உங்களுக்குப் பலனளித்தது போல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள், அவளுடைய கிரியைகளுக்குத் தக்ககதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்து கொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்து கொடுங்கள். அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச் செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரியாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள். ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத் தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர். அவளுடனே வேசித்தனஞ் செய்து செல்வச் செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்மி, அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று, ஐயையோ! பாபிலோன் மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள். பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிப்பாடைகளையும், சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், இலவங்கப்பட்டையையும், தூபவர்க் கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள். உன் ஆத்துமா இச்சித்த பழ வர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமானவை களும் உன்னை விட்டுப் நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை’ (வெளி 18. 1-4). இந்த வசனங்கள் கடைசி காலத்தின் ஸ்தாபனங்களைச் சரியாக விவரிக்கின்றன. கர்த்தருடைய ஜனங்கள் வேசியாகிய அவளை விட்டு வெளிவர நான்காம் வசனம் அழைக்கிறது. ஐசுவரியம் நிறைந்த இந்தக் கள்ளச் சபை இவ்வளவு பயங்கரமான நிலையிலிருந்தாலும், மணவாட்டி இன்னமும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவள் பிரிக்கப்பட்ட பின்பு, எடுத்துக் கொள்ளப்படுவாள். இக்காலத்துக் கள்ளச் சபை பூமியில் விளையும் பொன்னையுடையதா யிருக்கிறது. ஆனால் தேவனுடைய பொன் ஒன்றுண்டு. `அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியையும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். (1 பேது 1.7) துன்பங்களின் மூலம் சோதிக்கப்பட்டு பிரகாசமாக விளங்கும் கிறிஸ்தவனின் தன்மையே தேவனுடைய பொன்னாயிருக்கிறது. இதுதான் நாம் அடையவேண்டிய பொன்னாகும். ஆனால் சபையோ இன்று அழிந்துபோகும் பொன்னை வைத்திருக்கிறது. அது ஐசுவரியமுள்ளதாயிருக்கிறது. அதன் தற்போதைய நிலைமையைக் குறித்து அது திருப்தியடைந்ததாய் இருக்கிறது. அதன் ஆவிக்குரிய முன்னேற்றம் அது பெற்ற ஐசுவரியத்தைக் கொண்டு அளவிடப்படுகிறது. தேவனுடைய ஆசீர்வாதமும், உபதேசத்தின் உண்மையும், அதில் சம்பந்தங்கொள்ளும் ஐசுவரியமுள்ள அங்கத்தினர்களின் எண்ணிக்கையை ஆதாரமாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றன. `தாமதமாவதற்கு முன்பு நீ திரும்பிவந்து நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை என்னிடத்தில் வாங்கிக்கொள்; அப்பொழுது நீ ஐசுவரியவானாவாய்’ என்று தேவன் அழைக்கிறார். நாம் அந்த அழைப்புக்கு இணங்குகிறோமா? மாம்சத்தில் நிர்வாணமாய் இவ்வுலகத்தில் நாம் வந்தோம். ஆனால் ஆவியில் நிர்வாணிகளாய் நாம் இதைவிட்டுப் போகக்கூடாது; நம்முடன் நாம் எதையாகிலும் கொண்டு போகவேண்டும். நம்முடைய தன்மைகளை மாத்திரமே நம்முடன் நாம் கொண்டுபோகமுடியும். துன்பமாகிய நெருப்பில் புடமிடப்பட்டு விளங்கிய கிறிஸ்துவின் தன்மைகள் போன்றவைகளை நாம்கூடக் கொண்டு செல்வோமா? இது சுயேச்சையாய் ஒவ்வொருவனும் தீர்மானித்துக் கொள்ளவேண்டிய காரியமாகும். அந்த நாளில் அவனவன் தன்தன் சுமையைச் சுமக்க வேண்டும். லவோதிக்கேயா பட்டினம், ஐசுவரியம் பொருந்திய தாயிருந்தது என்று நான் முன்னமே கூறியுள்ளேன். அதுபோன்று லவோதிக்கேயா சபையும் ஐசுவரியங்கொண்டு,பணத்தின் மூலம் பாவத்திலிருந்து விடுதலையடையவும், பரலோகத்தில் பிரவேசிக்கவும் முயல்கிறது. ஆனால் ஐசுவரியத்தினால் இவைகளைச் சம்பாதிக்க முடியாது என்பதை தேவன் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். இன்றைய சபையிலிருக்கும் ஐசுவரியங் கொண்டு, உலக வர்த்தகம் முழுவதையும் சபை கைப்பற்றலாம். உலக சபைகளின் ஐக்கியத்தின் ஒரு தலைவன், வெகு சீக்கிரம் இது நேரிடுமென்று தீர்க்கதரிசனம் உரைத்திருக் கிறார். ஆனால், பொன்னால் செய்யப்பட்ட அவர்களின் பாபேல் கோபுரம் நிச்சயமாக விழுந்துபோகும், நெருப்பிலே புடமிடப்பட்ட பொன் மாத்திரமே (விசுவாசம்) என்றென்றைக்கும் நிலைநிற்கும். சபையானது காலங்கள் தோறும் இவ்வாறே தேவனுடைய வசனத்தைப் புறக்கணித்து, சொந்த பிரமாணங்களையும் கொள்கைகளையும் பின்பற்றி ஸ்தானபங்களையுண்டாக்கிக் கொண்டு உலகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டது. அதனால் அவள் நிர்வாணமாகக் காணப்படுகிறாள். தேவன் அவளுடைய கற்பில்லாத் தன்மையை நியாயந்தீர்க்கிறார். இந்தப் பயங்கரமான நிலையிலிருந்து அவள் மீளவேண்டுமெனில், அதற்கு ஒரே வழிதான் உண்டு. அவள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும். `என் ஜனங்களே அவளை விட்டு வெளியே வாருங்கள்’ (வெளி 18.4). `அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம் பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று தேவன் சொன்னபடி நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக் கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்’ (2 கொரி. 6. 14-18). நிர்வாணத்தை மறைக்கும் உடைகளை வாங்குவற்கென்று ஒரு கிரயம் கொடுக்கப்படவேண்டும்; அதுதான் பிரிந்துவரும் கிரயமாம். நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடு’, இந்தக் கலிக்கத்தை விலைக்கு வாங்க அவர் கூறவில்லை, பரிசுத்த ஆவியாகிய இந்தக் கலிக்கம் கிரயமில்லாமல் அளிக்கப்படும். நியாயப் பிரமானத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?’ (கலா 3.2). பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றாலன்றி, ஒருவனுடைய கண்கள் தேவனுடைய வசனத்தின் ஆவிக்குரிய வெளிப்பாட்டைக் காணத் திறக்கப்படுவதில்லை. ஆவியில்லாதவன் தேவனைக் குறித்தும் அவருடைய சத்தியத்தைக் குறித்தும் அறியாமல் குருடனாயிருக்கிறான். நான் சிறுவனாயிருந்தபோது, நானும் என்னுடைய சகோதரனும் ஒரு பாழடைந்த வீட்டின் மேல்மாடியில், வைக்கோலினால் செய்யப்பட்ட படுக்கையின் மேல் உறங்குவது வழக்கம். குளிர்காலங்களில், வீட்டின் சுவர்களில் உண்டாயிருந்த வெடிப்புகளின் வழியாய் குளிர்ந்த காற்று வீசுவதனால், எங்கள்கண்கள் வீங்கி இறுக மூடிக்கொள்ளும். நாங்கள் எங்கள் தாயாரிடம் அழுது கொண்டே போவோம். அப்பொழுது அவர்கள் கூன் (COON) என்னும் மிருகத்தில் உண்டாகும் பசையைச் சூடாக்கிக் கண்களில் தேய்க்கும் போது, கண்களில் படிந்திருந்த அழுக்கு, போய், அவைகள் திறக்கப்படும். அவ்வாறே, இந்தச் சந்ததியில் காணப்படும் சபையின் மேல் குளிர்ந்த காற்று வீசுவதனால், அவளுடைய கண்கள் மூடிக்கொண்டன. அதன் விளைவாக, தேவன் அவளுக்கு வைத்திருக்கும் காரியங்களை அவள் காண முடியவில்லை. அவளுடைய கண்கள் திறக்கப்பட, தேவனுடைய ஆவியாகிய சூடான எண்ணெய் அவளுக்கு அவசியமாயிருக்கிறது. அவள் பரிசுத்த ஆவியைப் பெறாவிட்டால், தேவனுடைய வல்லமைக்கும் வார்த்தைக்கும் பதிலாக திட்டங்களையும் பிரமாணங்களையும் பின்பற்றுவாள். மக்களின் தொகையைக் கொண்டு, அவளுடைய திட்டத்தின் வெற்றியை அவள் நிர்ணயிப்பாளேயன்றி, ஆவியின் கனிகள் மக்களிடத்தில் காணப்படுகின்றனவா என்று சிறிதேனும் கவலை கொள்ளமாட்டாள், வேத சாஸ்திரம் படித்த நிபுணர்கள் விசுவாசத்திற்குப் போகும் வழியை அடைத்துவிட்டு, மக்கள் அதில் பிரவேசிக்கக் கூடாதபடி அவர்களைத் தடுத்து நிறுத்துகின்றனர். அவர்களும் அவ்வழியில் செல்வதில்லை; மற்றவர்களும் அவ்வழியில் செல்ல அனுமதிப்பதில்லை. ஒரு அவிசுவாசி எழுதும் மனோதத்துவ சாஸ்திரபுத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு அவர்களுடைய வேத சாஸ்திரம் உண்டாக்கப்படுகிறது. நம்மெல்லாருக்கும் ஒரே ஒரு மனோதத்துவ சாஸ்திர புத்தகம் தேவையாயிருக்கிறது; அதுதான் வேதாகமம். அது தேவனால் எழுதப்பட்டு தேவனுடைய மனோதத்துவத்தைக் கொண்டிருக்கிறது. அதை விவரிக்க ஒரு பண்டிதர் நமக்கு அவசியமில்லை. பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றால், அவரே உங்களுக்கு வேத வசனங்களை விவரிப்பார். அவர் அந்த புத்தகத்தை எழுதியபடியால், அதில் அடங்கியிருப் பவைகளின் அர்த்தத்தை உங்களுக்குப் போதிப்பார். `எழுதியிருக்கிறபடி, தேவன் தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண்காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப் போல, தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிடத்தி லிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப் படுத்திக் காண்பிக்கிறோம். ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படு கிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். கர்த்தருக்குப் போதிக்கத் தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது’ (1 கொரி 2. 9-16). பரிசுத்த ஆவியானவர் இங்கு கூறுவதனைத்தும் இக்காலத்துக் குரியவை களாயிருப்பின், யோவான் ஸ்நானனைப் போன்ற ஒருவர் இக்காலத்தில் தோன்றி சபையைக் கண்டித்துணர்த்துவது அவசியமாயிருக்கிறது. ஆம், இக்காலத்தில் அத்தகைய ஒருவர் தோன்றுவார். யோவான் ஸ்நானனைப்போல் அவர் சபையைக் கண்டிப்பார். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன். ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு, யோவான் ஸ்நானன் பரிசேயர்களையும், சதுசேயர்களையும், புறஜாதிகளையும் நோக்கி இவ்வாறே `மனந்திரும்புங்கள்’ என்று அறைகூவினான். அக்காலத்தில் ஒருவன் மனந்திரும்பாமல், வேறு வழியேயில்லை, இக்காலத்திலும் மனந்திரும்பாமல் வேறுவழியில்லை. மனந்திரும்புங்கள். நீங்கள் ஏன் சாகவேண்டும்? `நான் நேசிக்கிறவர்களெவர்களோ’ என்பதைக் குறித்துச் சற்று சிந்திப்போம். கிரேக்க மொழியில் அவ்வாக்கியத்திலுள்ள `நான்’ என்னும் பதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. `என்னை நேசிக்கிறவர்களெவர்களோ’ என்று அவர் கூறாமல், `நான் நேசிக்கிறவர்களெவர்களோ’ என்று அவர் கூறுகிறார். நாம் அவர் பேரில் வைக்கும் அன்பைக் காட்டிலும், அவர் நம்மேல் காண்பிக்கும் அன்புதான் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகையால் அவருடைய இரட்சிப்பு, அவருடைய நோக்கம், அவருடைய திட்டம் ஆகிய இவைகளில் நாம் மறுபடியும் சந்தோஷப்படுகிறோம். தேவனுடைய சுயாதிபத்தியத்தைக் (SOVEREIGNTY OF GOD) குறித்த போதகத்தின் உண்மையை நாம் இன்னும் நன்றாக உணருகிறோம். `யாக்கோபை நான் சிநேகித்தேன்’ (ரோமர் 9.13) என்று அவர் கூறுகிறார். அப்படியெனில் சிலர் கூறுவது போன்று, இதுவரை அவரில் அன்புகூறாத எல்லாரும் அவரை நேசிக்கும் வரை அவர் காத்துக் கொண்டிருக்கிறாரா? இல்லவே இல்லை. ஏனெனில் `ஏசாவை நான் வெறுத்தேன்’ (ரோமர் 9.13) என்றும் அவர் கூறியிருக்கிறார். பின்னும் ஆவியானவர் தைரியமாக, `பிள்ளைகள் இன்னும் பிறவாமலும் நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவரால் நிலைநிற்கும்படிக்கு’ (ரோமர் 9.11) என்று கூறுகிறார். ஆம், அவருடைய அன்பு தெரிந்து கொள்ளுதலின்படியிருக்கும் அன்பாகும். தேவன் தாம் தெரிந்து கொண்டவர்கள் மேல் அன்பு கூறுகிறார். அவருடைய அன்பு மனிதரின் தகுதிகளுக்கு அப்பாற்பட்டது. தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின்படியிருக்கிற தீர்மானம் அழைக்கிறவரால் நிலைநிற்கிறதென்றும் கிரியைகளினால் நிலைநிற்கவில்லையென்றும் வேதம் நமக்குப் போதிக்கிறது. பிள்ளைகள் பிறக்கும் முன்பே அவர் `யாக்கோபைச் சிநேகித்து ஏசாவை வெறுத்தேன்’ என்று தீர்மானித்தார். இப்பொழுது அவர் `நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்’ என்று கூறுகிறார். தாம் நேசிக்கிறவர்கள் சீர்திருந்தி ஓழுக்கமடைய வேண்டுமென்ற எண்ணத்தோடு தான் அவர் கடிந்து கொள்கிறார். இதைப் பின்வரும் வசனங்களில் நாம் காணலாம். `அன்றியும் என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே,அவரால் கடிந்து கொள்ளப் படும்போது சோர்ந்து போகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துத் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறது போல் உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்ததால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப் பிள்ளைகளாயிருப்பீர்களே. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன் மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்க வேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்’ (எபி 12. 5-11). மேற்கூறிய வசனங்களில் தேவனுடைய அன்பு விவரிக்கப்படுகிறது. அவரைப்போன்ற தன்மைகளைக் கொண்ட புத்திரர்கள் அடங்கிய தமது சொந்தமான குடும்பத்தைப் பெற அவர் அன்பினால் வாஞ்சித்தார். அவருக்கு முன்பாக மானிடவர்க்கம் முழுவதும் மிதியிட்ட ஒரே களிமண்ணாக இருக்கிறது. அவற்றிலிருந்து அவர் பாத்திரங்களைக் கனமான காரியத்திற்கும், கனவீனமான காரியத்திற்கும் செய்வார். பாத்திரங்கள் எந்தெந்த காரியத்திற்கு உபயோகப்படவேண்டுமென்பதை அவரே தேர்ந்தெடுப்பார். அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்து, அவருடைய சாயலையடைந்து, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கென பழக்குவிக்கப்படுவார்கள். அவர் நீடிய பொறுமையோடும், சாந்தத்தோடும், கிருபையோடும் அவர்களைக் கடிந்துகொள்ளுகிறார். ஆணி கடாவப்பட்டதால் உண்டான தழும்புகளைக் கொண்ட கைகளினால் அவர்களைச் சிட்சிக்கிறார். சிலசமயங்களில் இக்குயவன், முன்பு உண்டாக்கின பாத்திரத்தை மறுபடியும் தன்னுடைய விருப்பப்படி வனைவதற்கென அதை உடைக்க நேரிடும். ஆனால் இவையனைத்தும் அன்பின் காரணமாய் செய்யப்படுகிறது. அது அவருடைய அன்பு, அவர் அன்பு செலுத்தும் முறை வேறெதுவுமில்லை; அது வேறெதாகவும் இருக்க முடியாது. சிறுமந்தையே, பயப்படாதே, இந்தக் காலம் வெகு சீக்கிரம் முடிவடையும். அப்பொழுது களைகளெல்லாம் ஒன்றாகக் கட்டப்படும். மாம்சத்துக்குரிய வல்லமையையும், ஆவிக்குரிய வல்லமையையும், அரசியல் வல்லமையையும் ஒருங்கே கொண்ட சாத்தானின் ஆதிக்கம், கிறிஸ்துவின் மணவாட்டியை நிர்மூலமாக்க முயற்சிக்கும். அவள் துன்பப்பட்டு, அதைப் பொறுமையோடே சகிப்பாள். இப்பூலோகத்தில் சம்பவிக்கப் போகிறவைகளைக் குறித்து சிறிதேனும் ஐயமுற வேண்டாம். `தம்முடையவர்களிடத்தில் அன்பு வைக்கும் இயேசு முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைப்பார்’ (யோவான் 13.1). `ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து (ZEALOUS) மனந்திரும்பு’ இந்தக் கள்ளச் சபை வைராக்கியமுள்ளதாயிருந்தது (ZALOUS). யூதர்களிடத்தில் காணப்பட்ட வைராக்கியத்திற்கு இதை நாம் ஒப்பிடலாம். `உம்முடைய வீட்டைக் குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது’ (யோவான் 2.1). அவர்களுடைய வைராக்கியம் ஒரு தவறான வைராக்கியமாகும். அவர்கள் தங்கள் சொந்த பிரமாணங்களிலும், கொள்கைகளிலும், ஸ்தாபனங்களிலும் வைராக்கியம் காண்பித்தனர். வார்த்தையை அவர்கள் புறக்கணித்து, தங்கள் சொந்த எண்ணங்களைப் புகுத்தினர். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை அவர்கள் நிராகரித்து, மனிதரைத் தங்களுடைய வழிகாட்டிகளாக நியமித்தனர். நித்திய ஜீவனாகிய இயேசு கிறிஸ்துவை அவர்கள் அறவே அகற்றி, நற்கிரியைகளுக்கும், சபை ஒழுங்குகளை அனுசரிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் தேவன் வேறுவிதமான வைராக்கியத்தை எதிர்பார்க்கிறார், `நான் தவறு’ என்று வைராக்கியத்தோடு இவர்கள் கூக்குரலிட வேண்டுமென்றார். ஆனால் யார் அவர்களுடைய தவறை ஒப்புக்கொள்வார்கள்; ஸ்தாபனங்களெல்லாம் தேவனாலுண்டானவையென்றும் அவைகள் யாவும் சரியேயென்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றன. வித்தியாசமான உபதேசங்களைக் கைக்கொள்ளும் எல்லா ஸ்தாபனங்களும் ஒரே நேரத்தில் சரியான முறையைப் பின்பற்ற முடியாது. அவைகளில் ஒன்றுகூட சரியில்லையென்பதை நான் கூறுகிறேன். அவைகள் மரித்தவர்களின் எலும்புக் கூடுகள் அடங்கிய வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள். அவைகளில் ஜீவனில்லை. அவைகள் தேவனால் நிலைநிறுத்தப் படுவதில்லை. தேவன் தம்மை ஒருபோதும் எந்த ஸ்தாபனத்திலும் வெளிப்படுத்துவதில்லை, அவர்களின் கொள்கைகள் தேவனுடைய அங்கீகாரம் பெறவில்லை. தேவன் `மனந்திரும்பு’ என்று கள்ளச் சபைக்கு மாத்திரம் இங்கு கூறவில்லை. தம்மால் தெரிந்துகொள்ளப்பட் டவர்களுக்கும் அவர் இதைக் கூறுகிறார். அவர்கள் சிறிது மனந்திரும்ப வேண்டும். அவருடைய பிள்ளைகளில் அநேகர் இன்னும் கள்ளச் சபைகளில் இருக்கின்றனர். அவர்களைக் குறித்துதான் `ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு. அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பார். (எபே 5.14) என்று சொல்லப்பட்டிருக்கிறது. தூங்கிறவர்கள் மரித்தவர்களல்ல. அவர்கள் மரித்தவர்களின் மத்தியில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஜீவனற்ற ஸ்தானபங்களைச் சேர்ந்தவர்களா யிருக்கின்றனர். தேவன் அவர்களை நோக்கி `எழுந்திருங்கள், உங்களுடைய தவறுக்காக மனந்திரும்புங்கள்’ என்று கூறுகிறார். அவர்கள் தங்கள் செல்வாக்கையும் சமயத்தையும், பணத்தையும் தங்களுடைய ஜீவியத்தையும் இந்த அந்திக்கிறிஸ்து மார்க்கங்களுக்குச் செலவழித்து, அவ்வாறு செய்வது சரியென்று எண்ணுகின்றனர். அவர்கள் மனந்திரும்புதல் அவசியம். அவர்கள் கண்டிப்பாக மனந்திரும்ப வேண்டும். அவர்கள் மனம்மாறி, சத்தியத்திற்குத் திரும்ப வேண்டும். இந்தச் சபையின் காலம் நிச்சியமாக மனந்திரும்ப வேண்டிய அவசியமாயிருக் கிறது. ஆனால் அது மனந்திரும்புமா? மனிதர்கள் தங்கள் ஜீவியத்தில் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை ஏற்க அது முயற்சிக்குமா? இயேசுவை மாத்திரம் இரட்சகராக அது ஏற்றுக் கொள்ளுமா? இல்லவே இல்லை. சபைக்கு வெளியே கிறிஸ்து வெளி 3.20-22. `இதோ, வாசற்படியில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன். அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளு கிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூடஉட்காரும்படிக்கு அருள் செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றெழுதுஎன்றார். இயேசு கிறிஸ்து ஒவ்வொரு பாவியின் இருதயத்தையும் தட்டி உள்ளே வர அனுமதி கேட்பதாகவும், அவன் கதவைத் திறந்தால் அவர் உள்ளே நுழைவாரென்றும் அநேக சுவிசேஷர்கள் கூறுகிறபடியால், இவ்வசனத்தைக் குறித்துக் குழப்பமேற்படுகிறது. இது தனிப்பட்ட பாவிக்குக் கூறப்படுவதல்ல. இது கடைசி காலத்துச் சபைக்கு அளிக்கப்படும் ஒரு செய்தியாகும். ஏனெனில் 22ம் வசனத்தில் `ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. லவோதிக்கேயா சபை முடிவு காலத்தில் இந்நிலையில் இருக்கும். அது தனிப்பட்டவருக்குக் கொடுக்கப்படும் செய்தியல்ல, இயேசுவானவர் இப்பொழுது எங்கிருக்கிறார் என்பதை ஆவியானவர் நமக்குத் தெரியப்படுத்துகிறார். கிறிஸ்து சபையை விட்டுப் போய்விட்டார். சபையானது வார்த்தைக்குப் பதிலாகப் பிரமாணங்களைக் கைக்கொண்டு, பரிசுத்த ஆவியை நிராகரித்து, போப்பையும், அத்தியட்சகர் களையும் பிரஸிடெண்டுகளையும், கவுன்சிலர்களையும் நியமித்து, இரட்சகரைப் புறக்கணித்து, சபையில் அங்கத்தினராகச் சேர்தலையும், திட்டங்களையும், சபையின் ஒழுங்குகளையும் கைக்கொண்டதினால் ஏற்பட்ட விளைவு இதுவேயாகும். இதைக்காட்டிலும் தேவனுக்கு வேறெந்த தீங்கு விளைவிக்க முடியும்; சபையானது விழுந்துவிட்டது. அந்திக் கிறிஸ்துவுக்கு அது தன் வாசல்களைத் திறந்துவிட்டது. பிதாவின் நாமத்தினாலே வந்த இயேசுவை அது ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து, தன் சொந்த நாமத்தில் வந்த அந்திக் கிறிஸ்துவை (பொய்யனை, பாசாங்குகாரனை) அது ஏற்றுக்கொள்ளும். (யோவான் 5.43), பாவத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த கேட்டின் மகன் முக்கியத்துவம் பெறுவான். இயேசு வருவதற்குச் சற்று முன்பு வானத்தில் ஏற்படவிருக்கும் அடையாளங்களை மத்தேயு 24ம் அதிகாரம் விவரிக்கிறது. இயேசு கிறிஸ்து சபையிலிருந்து சிறிது சிறிதாகப் புறக்கணிக்கப்பட்டு கடைசி காலத்தில் முழுவதும் புறக்கணிக்கப்பட்டார் என்னும் சத்தியம் சமீபத்தில் வானத்தில் காணப்பட்ட அடையாளங்களால் நிரூபிக்கப்பட்டது. முதலாம் சபையின் காலத்தில் சத்தியம் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அது பெரும்பாலும் முழு உருண்டையாகத் தென்பட்டது, அக்காலத்தில் காணப்பட்ட `நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்’ என்னும் தவறுகள் சபையில் நுழைந்து அந்த உருண்டை அந்தகாரத்தால் சிறிது மறைக்கப்பட்டது. அதற்கடுத்த சபையின் காலத்தில் அதிக அந்தகாரம் சபையில் காணப்பட்டு, அந்த உருண்டை இன்னும் மங்கி எரிய ஆரம்பித்து, அந்தகாரம் சற்று அதிகமாக உருண்டையை மறைந்தது. மூன்றாவது சபையின் காலத்தில் அது இன்னும் சற்று அதிகமாக மறைக்கப்பட்டு, நான்காம் சபையாகிய இருளின் காலங்களில் அதிலுள்ள வெளிச்சம் பெரும்பாலும் மங்கியது. சபையானது கிறிஸ்துவின் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கின்றது. கிறிஸ்துவே சூரியன்; சபை சந்திரன், சபையில் காணப்படும் ஒளி உருண்டை சந்திரனாகும். முதலாம் சபையின் காலத்தில் முழுநிலவாகக் காணப்பட்ட அது, நான்காம் சபையின் காலத்தில் சிறியதாகத் தோற்றமளித்தது. ஐந்தாம் சபையின் காலம் தொடங்கி ஏழாம் சபையின் காலத்தின் ஒரு பாகம் வரை அது வளர ஆரம்பித்தது. சடுதியாக, அது அந்தகாரப்பட்டு, இந்தச் சபையின் கால முடிவில் அது முழுவதும் அந்தகாரமாகும். கிறிஸ்து இப்பொழுது சபையின் வெளியில் இருக்கிறார். இதற்குரிய அடையாளத்தை வானத்தில் காணுங்கள், கடைசியாக ஏற்பட்ட சந்திரகிரகணம், முழு கிரகணமாயிருந்தது. அது ஏழு படிகளில். முழு அந்தகாரத்தையடைந்தது. ரோமாபுரியிலுள்ள போப் (ஆறாம் பவுல்) எருசலேமின் சுற்றுப்பிரயாணத்தை ஏற்று பாலஸ்தீனாவை அடைந்தபோது. சந்திர கிரகணம் ஏழாம் நிலையடைந்து முழுவதுமாக அந்த காரப்பட்டது. எருசலேமுக்குப் போன முதல் போப்பு இவர்தான்’ அவருடைய பெயர் ஆறாம் பவுல் என்பது. முதலாவது சபையின் தூதனாக விளங்கிய பவுலின் நாமத்தை இவர் சூடிக்கொண்டிருக் கிறார். அவர் எருசலேமுக்குச் சென்றபோது சந்திரன் (சபை) முழுவதும் இருளடைந்தது. இதுவே முடிவின் காலம். சகலமும் முடிவடையும் முன்பு, இந்தச் சந்ததி ஒழிந்து போகாது. ஆமென். கர்த்தராகிய இயேசுவே, சீக்கிரம் வாரும். கள்ளச் சபை, உண்மையான சபை என்று இரண்டு சபைகள் ஏன் உண்டாயிருந்தன என்று நாம் இப்பொழுது அறியலாம். ஆபிரகாமுக்கு மாம்சத்தின்படி ஒரு குமாரனும், வாக்குத்தத்தத்தின்படி ஒரு குமாரனும் ஏன் இருந்தனர் என்றும் நாமறியலாம். மாம்சத்தின்படி தோன்றின புத்திரன் வாக்குத்தத்தத்தின்படி உண்டான ஈசாக்கைத் துன்புறுத்தினான், ஒரே பெற்றோரின் மூலம் இருவர் தோன்றினர். அவர்களில் ஒருவன் தேவனுடைய காரியங்களை அறிந்து அவர்களில் அன்பு கூர்ந்தான். மற்றொருவனோ பெரும்பாலும் அதே சத்தியத்தை அறிந்திருந்தாலும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அவன் சகோதரனைத் துன்புறுத்தினான். தேவன் தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமே மற்றவர்களை ஆக்கினைக்குட்படுத்தினார். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைத் துன்புறுத்த முடியாது. ஆக்கினைக்குட்பட்டவர்களே (REPROBATES) தெரிந்துகொள்ளப் பட்டவர்களைத் துன்புறுத்தி, நிர்மூலமாக்குகின்றனர். இவர்கள் பக்தியுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். ஆனால் அவர்கள் சர்ப்பத்தின் வித்திலிருந்து தோன்றியவர்கள்; அவர்கள் காயீனின் சந்ததியார் அவர்கள் தங்கள் பாபேல் நகரங்களையும், சாம்ராஜ்யங்களையும் கட்டி, அதே சமயத்தில் தேவனை நோக்கிக் கூப்பிடுகின்றனர், அவர்கள் உண்மையான சந்ததியை வெறுக்கின்றனர். தேவனுடைய நாமத்தின் பேரிலேயே அவர்கள் தங்களால் இயன்றதைச் செய்து, தேவனால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களை அழிக்க முற்படுகின்றனர், கோதுமை மணியைப் பாதுகாப்பதற்குப் பதர் எவ்வாறு அவசியமாயிருக்கின்றதோ, அதேவிதமாக இவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு அவசியமாயிருக் கின்றனர். கடைசியில் பதர் அவியாத அக்கினியில் சுட்டெரிக்கப்படும். கோதுமை மணியோ களஞ்சியத்தில் சேர்க்கப்படும். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களே, கவனமாயிருங்கள். அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். தேவன் பேரில் சார்ந்திருந்து அவருடைய வல்லமையில் பலப்படுங்கள். உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோவென்று இப்பொழுதும் வகைதேடிச் சுற்றித் திரிகிறான். இடைவிடாமல் ஜெபத்தில் விழித்திருங்கள். இது கடைசிக் காலமாயிருக்கிறது. கோதுமையும் களையும் இக்காலத்தில் முதிர்வடையும். ஆனால் கோதுமை முதிர்வடையும் முன்பு, முதிர்ந்த களைகள் சுட்டெரிக்கப்படுவதற்கென்று கட்டப்படவேண்டும். அவர்களெல்லாரும் உலக சபைகளின் ஐக்கியத்தில் சேர்வதைப் பாருங்கள். அவ்விதமாகவே அவர்கள் கட்டப்படுகின்றனர். வெகு சீக்கிரத்தில் கோதுமை பிரிக்கப்பட்டு களஞ்சியத்தில் சேர்க்கப்படும். ஆனால் இப்பொழுது இரண்டு ஆவிகளும் சபைகளில் கிரியை செய்து கொண்டு வருகின்றன. களைகளிலிருந்து நீங்கள் வெளிவாருங்கள். நீங்கள் தேவனால் புகழப்பட்டு, அவரோடு அரசாட்சி செய்ய தகுதியாவதற்கு ஜெயங்கொள்ள முற்படுங்கள். ஜெயங்கொள்ளுபவனின் சிங்காசனம் வெளி. 3.21. `நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன். நாம் எதன் மேல் ஜெயங்கொள்ள வேண்டுமென்ற கேள்வி இப்பொழுது எழும். நாம் எவ்வாறு ஜெயங்கொள்ள வேண்டுமென்பதே முக்கியமேயற்றி, எதன் மேல் ஜெயங்கொள்ள வேண்டுமென்பது முக்கியமல்ல. நாம் ஜெயங்கொள்ள வேண்டிய முறையை அறிந்திருப்போமாயின், ஜெயங்கொள்ள வேண்டிய காரியங்கள் நமக்கு அவ்வளவாக முக்கியமாய் தோன்றாது. இயேசு கிறிஸ்து எவைகளின் மேல் வெற்றி சிறந்தாரென்பதை நாம் வேதத்தின் வாயிலாக ஆராய்வோம். இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டபோது, அவர் தேவனுடைய வார்த்தையைக் கொண்டே சோதனையை வென்றார். அவருக்கு, ஏதேன் தோட்டத்தில் நேர்ந்தது போன்று, மாமிசத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமையாகிய சோதனைகள் நேர்ந்தன. ஆனால் இவைகளனைத்தையும் அவர் வார்த்தையின் மூலம் மேற்கொண்டார். நாம் ஜெயங்கொள்ள வேண்டுமாயின், வார்த்தையின் மூலம் ஜெயங்கொள்ளும் ஒரு வழியேயுண்டு. வார்த்தை ஒரு போதும் தவறுவதில்லை. இயேசு அவர் காலத்திலுண்டாயிருந்த மார்க்கங்களின் பேரில் எவ்வாறு வெற்றி சிறந்தாரென்பதைக் கவனியுங்கள். வேதபாரகர் அவரை அடிக்கடி தொந்தரவு செய்தபோது, அவர் வார்த்தையை உபயோகித்தார். பிதா அவருக்கு அருளிய வார்த்தையை மாத்திரமே அவர் பேசினார். ஒவ்வொரு முறையும் தேவனுடைய ஞானமான வார்த்தைகளால் மக்கள் குழப்படைந்தனர். அவருடைய சொந்த ஜீவியத்திலும், இயேசு தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து ஜெயங்கொண்டவராக விளங்கினார். `அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினால் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரான பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார். (எபி 5. 7-9). ஆம் அவர் தேவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டு, கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அந்த வார்த்தையை ஜீவியத்தில் கடைபிடிக்காத எவனும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிங்காசனத்தில் உட்காரமாட்டான். அதுவன்றி, உங்களுடைய ஜெபங்களும், உங்களுடைய மனஸ்தாபங்களும், நீங்கள் தேவனுக்கு ஏறெடுக்கும் எவைகளும், அந்தச் சிங்காசனத்தில் உட்காரும் சிலாக்கியத்தை அருளமாட்டார். வார்த்தையை முற்றிலும் கடைபிடித்த மணவாட்டிக்கே அந்த உரிமை அளிக்கப்படும். இராஜாவினுடய சிங்காசனத்தை, அவனோடு ஒன்றுபட்ட அரசி பகிர்ந்து கொள்வது போன்று, இயேசுவைப்போல் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு அவரோடு ஒன்றுபட்டவர்கள் மாத்திரமே சிங்காசனத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆதாமும் ஏவாளும் வார்த்தையைப் புறக்கணித்ததால் பாவத்தில் விழுந்தனரென்றும். எபேசு சபை வார்த்தையிலிருந்து சிறிது வழுவிப் போய் ஒவ்வொரு காலத்துச் சபையும் வார்த்தையை அதிகமாகப் புறக்கணித்து, கடைசியில் உலக சபைகளின் ஐக்கியம் வார்த்தையை அறவே அகற்றின வென்றும் நான் தெளிவாக விவரித்தேன். இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில், வார்த்தை முழுவதுமாக அந்தகாரப்பட்டதால், தேவன் அவள் மத்தியிலிருந்து போய்விட்டார். அவர் சபையின் வெளியே நின்றுகொண்டு, வார்த்தைக்குக் கீழ்படியும் தமக்குச் சொந்தமானவர்களை அழைக்கிறார். ஆவியானவர் வல்லமையாகக் கிரியை செய்த பிறகு துன்புறுத்தப்பட்ட இந்த சிறிய கூட்டம் இயேசுவோடுகூட ஜீவிப்பதற்கென செல்லும். புறஜாதிகளின் காலங்களின் நிறைவேற்றம் இது ஏழு சபை காலங்களின் கடைசிகாலம். முதலாம் சபையாகிய எபேசு சபையின் காலத்தில் தொடங்கினவை கடைசி காலமாகிய லவோதிக்கேயா சபையின் காலத்தில் முதிர்வடைந்து அறுவடை செய்யப்படும். அப்பொழுது இரண்டு திராட்சை செடிகளும் சபைகளும் தங்கள் கனிகளைக் கொடுக்கும். இரண்டு ஆவிகளும் தாங்கள் சேரவேண்டிய இடங்களையடைந்து ஓய்வு பெறும். விதை விதைப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, வளருவது இவையனைத்தும் முடிவடைந்தன. கோடைகாலமும் சென்றுவிட்டது. இப்பொழுது அறிவாள் அறுவடைக்கென்று நீட்டப்படுகிறது. வெளி 3.15-18ல் கள்ள ஆவியினால் நடத்தப்பட்டு முதிர்வடைந்த கள்ளச் சபையின் நிலை சித்தரிக்கப்படுகிறது. `உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ குளிருமல்ல அனலுமல்ல, நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிற படியினால் உன்னை என் வாயினின்று வாந்திப் பண்ணிப்போடுவேன். நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவாவென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால், நான், நீ ஐசுவரியவானாகும் படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண் வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக் கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலேசனை சொல்லுகிறேன்’. இவைகளைக்காட்டிலும் கடினமான வசைச்சொற்கள் உபயோகிக்கப்பட முடியாது. பெருமையும் கர்வமும் பொருந்திய இந்த மார்க்கத்தவரைக் காட்டிலும் வேறு யாரும் இச்சொற்களை ஏற்பதற்குத் தகுதியுள்ளவர்களல்ல. ஆனால் இருபத்தோராம் வசனத்தில் `நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்தில் அவரோடேகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்’ என்று இயேசு கூறுகிறார். உண்மையான ஆவியைப் பெற்ற எளிய மக்கள், தேவனுடைய சிங்காசனத்திற்கு உயர்த்தப்பட்டு தேவனால் புகழப்படுவர். கிறிஸ்துவுக்கும் சபைக்குமுரிய சம்பந்தத்தை வெளிப்படுத்தும் யோவான் ஸ்நானனின் கீழ்க்கண்ட வார்த்தைகள் இக்காலத்தில் நிறைவேறும். `மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப் பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார். அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்’. மத் 3. 11-12). அறுவடை செய்யும் கிறிஸ்து, இப்பொழுது பூமியின் பலன்களை அறுக்கிறார். அவர் தமக்குச் சொந்தமானவர்களுக்கென வந்து, தம்மோடு என்றென்றைக்கும் இருக்கும் படிக்கு, கோதுமை மணிகளாகிய அவர்களைக் களஞ்சியத்தில் கூட்டிச் சேர்ப்பார். அவர் மறுபடியும் வந்து, துன்மார்க்கரை அவியாத அக்கினியினால் நிர்மூலமாக்குவார். மத். 13.24-30ல் கூறப்பட்ட கீழ்க்கண்ட உவமையின் இரகசியம் இக்காலத்தில் வெளியாகும். `வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார், பரலோக ராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து,கோதுமைக்குள் களைகளை விதைத்து விட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர் விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து. ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன் சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்போது வேலைக்காரர். நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன். வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள். அறுப்புக் காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி, முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைப் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்’. முதலாம் சபையின் காலம் தொடங்கி இதுவரை அடுத்தடுத்து வளர்ந்த கோதுமையும் களைகளும் அறுவடை செய்யப்பட்டன. நிசயாவில் சாதிக்கப்பட வேண்டுமென்று கருதியவைகளனைத்தும் இக்காலத்தில் நிறைவேறும். ஸ்தாபனங்களின் வல்லமையைப் பெற்ற கள்ளச்சபை, கடைபிடித்த சிறிது சத்தியத்தையும் அறவே நிராகரித்து அரசியலாதிக்கமும் அரசாங்க அதிகாரமும் பெற்று உண்மையான விசுவாசியை நிர்மூலமாக்க முற்படும். இத்தகைய செயல்களில் அவள் ஈடுபடும் சமயத்தில், கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்படும். இனி ஒருபோதும் கோதுமையும் களைகளும் அடுத்தடுத்து வளர்வதிலை. களைகள் இனி ஒருபோதும் தேவனுடைய ஆசீர்வாதங்களைக் கோதுமையோடு பெறுவதில்லை. கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டது. தேவனுடைய கோபாக்கினை ஆறாம் முத்திரையில் ஊற்றப்பட்டு, துன்மார்க் கரனைவரும் நிர்மூலமாவார்கள். கள்ளச்சபை இக்காலத்தில் முழுவளர்ச்சியையடைந்தது என்று சற்று முன்பு நான் கூறினேன். அதன் கனியும் முதிர்ந்து பழுத்தது. அக்கிரமம் நிறைந்ததும், பொல்லாங்கான ஆவியால் நடத்தப்படுகிறதுமான இச்சபை, ஒரு கடுகு விதையாக விதைக்கப்பட்டு, காலங்கள் தோறும் வளர்ந்து, தற்பொழுது எல்லா ஆகாயத்துப் பறவைகளுக்கும் உறைவிடமாயிற்று. அக்கிரமத்தின் இரகசியமான (MYSTERY OFINIQIITY) அந்திக்கிறிஸ்து இச்சபையின் தலைவனாயிருப்பான். நான் இச்சபையைப் பற்றி கூறுவதனைத்தும் உண்மையே. அப்படியெனில், கள்ளச் சபையோடு கூட வளர்ந்த உண்மையான ஆவியைப் பெற்ற மணவாட்டி சபையும் முதிர்வடைந்து, வார்த்தையின் மூலம் தன்னைக் கர்த்தரோடு ஒன்றுபடுத்துவாள் என்பதும் உண்மையாயிருக்க வேண்டும். தேவபக்தியின் இரகசியமான (MYSTERY OF GODLINESS) கிறிஸ்து இயேசு இச்சபைக்குத் தலையாக இருப்பார். கள்ளச் சபையானது, அரசியல் வல்லமையையும், மனித வல்லமையையும், அந்தகாரத்தின் பிசாசுகளின் வல்லமையையும் ஒருங்கே கொண்டு உண்மையான சபைக்கு விரோதமாக எழும்பும்; அப்பொழுது உண்மையான சபை ஆவியின் நிறைவும் வார்த்தையும் கொண்டதாய், இயேசு செய்தவல்லமையுள்ள கிரியைகளையே தானும் செய்யும், இவ்விதம் அது வளர்ந்துகொண்டே வந்து உச்ச நிலையை அடைந்து, வார்த்தையை ஏற்றுக்கொண்ட காரணத்தால் அவரைப் போலாகும்போது, இயேசு வந்து மணவாட்டியை அழைத்துக் கொண்டுபோய் அவளோடு ஒன்றுபடுவார். நாம் இதுவரை கூறியதெல்லாம் இப்பொழுது வெளியரங்கமாக நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்றன. களைகளின் உலக சபைகளின் ஐக்கியம் நிகழ்ந்தேறிவிட்டது. கடைசி காலத்துத் தீர்க்கதரிசியும், இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குச் சற்று முன்னதாக தேவனுடைய செய்தியை மக்களுக்குக் கொண்டுவர வேண்டுவது அவசியம். அவருடைய செய்தி பிள்ளைகளின் இருதயத்தைப் பெந்தேகோஸ்தே பிதாக்களிடத்திற்குத் திருப்பும். தேவனுடைய வார்த்தையை இவ்விதம் பழைய நிலைக்குக் கொண்டு வரும்போது, அதனுடன் ஆதிச்சபையின் பழைய வல்லமையும் மீண்டும் அளிக்கப்படும். நாம் ஜீவிக்கும் காலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது. நாம் வார்த்தைக்கு முழுவதும் கீழ்ப்படிந்து, அதனின்று ஒன்றையும் கூட்ட அல்லது குறைக்கா மலிருக்கும்படிக்கு மிகவும் கவனமாயிருக்க வேண்டும். தேவன் கூறாததை மனிதன் கூறினால் அவன் பொய்யனாவான். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், பிலதெல்பியா சபையின் காலத்தில் தொடங்கின தேவனைப்பற்றி அறியும் அவா அதிகரித்து, மககள் தேவனுடைய ஆவியைப் பெறுவதற்கென்று அவரிடம் மன்றாடினர். தேவன் அவர்களுடைய கூக்குரலுக்கு இரங்கி, அன்னிய பாஷை, பாஷைக்குஅர்த்தம் விவரித்தல், தீர்க்கதரிசனம் போன்ற ஆவிக்குரிய வரங்களை அருளினார். உடனே ஒரு கூட்டம், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு அன்னிய பாஷை பேசுதல் அடையாளமென்று கூறி, வசனத்திற்கு முரண்பாடான ஒரு போதகத்தை உண்டாக்கிக் கொண்டது. அந்த அந்நிய பாஷை பேசுதல் ஆவியின் அனுக்கிரகமாயிருக்கிறதேயன்றி, அது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் அடையாளமல்ல. இந்த உபதேசம் தவறு என்று வார்த்தை நிரூபிப்பது மாத்திரமல்ல, அந்த உபதேசத்தை ஆதரித்தவர்கள், இதை ஆதாரமாகக் கொண்டு ஒருஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டதன் மூலமாய், அவர்கள், மனிதர் நினைக்கிற பிரகாரம், சத்தியத்தைக் கடைபிடிக்கவில்லை என்பதை நிரூபித்தனர். அவர்களின் கிரியைகள் மிகவும் நல்லதாக காணப்பட்டன. பெந்தேகோஸ்தே நாள் திரும்பி வந்தது என்ற உணர்ச்சி மக்களிடையே ஏற்பட்டது. ஆனால், பெந்தேகோஸ்தே ஸ்தாபனம் உண்டானதன் காரணமாய், அது பெந்தேகோஸ்தே வல்லமையல்ல என்பது ரூபகாரமாயிற்று. ஸ்தாபனம் மரணத்தைக் குறிப்பதேயல்லாமல், ஜீவனைக் குறிப்பதல்ல. இந்த அசைவு பெந்தேகோஸ்தே அசைவைப் போன்று காணப்பட்டதால், ஆயிரக்கணக்கான வர்கள் வஞ்சிக்கப்பட்டனர். உண்மையாக இது கோதுமை மணியை மூடும் பதராயிருந்தது. வயல் வெளிக்கு நாம் சென்றால், கோதுமை மணியைப் போலவே காட்சியளிக்கும் இந்தப் பதரைக் கண்டு ஏமாறக்கூடும். ஆனால் அதற்குள் கோதுமை மணி உண்டாயிருக்காது. அவ்வாறே, இந்த அசைவு, இனி உண்டாகப்போகும் கோதுமை மணியை மூடும் உரையாகத் திகழ்ந்தது. பெந்தேகோஸ்தேயின் மூல கோதுமை வித்து, கடைசி சபையின் காலத்தில் மறுபடியும் தோன்றும். அது நிசாயாவில் புதைக்கப்பட்டது. சர்தை சபையின் காலத்தில் அதனின்று குருத்து விளைந்து, பிலதெல்பியா சபையின் காலத்தில் குஞ்சம் வளர்ந்து, லவோதிக்கேயா சபையின் காலத்தில் முதிர்ந்த கோதுமை மணி தோன்றும். ஆனால், தீர்க்கதரிசி தோன்றி, வார்த்தையைப் பழைய நிலைக்குத் திருப்பாமல், கோதுமை மணி உண்டாவதில்லை. நாம் இப்பொழுது வாழும் லவோதிக்கேயா சபையின் காலத்தில் நேரிடும் சம்பவங்களை ஆழ்ந்து சிந்தித்தால், இந்நேரம் வெளி 10.6ல் கூறப்பட்ட தீர்க்கதரிசி தோன்றியிருக்க வேண்டும் என்று நமக்குப் புலனாகும். `கர்த்தர் சொல்லுகிறதாவது’ (கர்த்தர் இவ்விதம் கூறுகிறார்) என்று சொல்லும் தீர்க்கதரிசி தோன்றி, அவருடைய செயல்கள் யாவும் கர்த்தரால் பிழையின்றி உறுதிப்படுத்தப்படும். உண்மையான கோதுமை வித்துக்கள் தீர்க்கதரிசியின் செய்திகளை ஏற்றுக்கொண்டு முதிர்வடைந்த பிறகு அறுவடை செய்யப்படும். இதுவரை ஒன்றாக வளர்ந்து ஒன்றோடொன்று பிணைந்திருந்த இரு திராட்சை செடிகளின் (கள்ளச் சபை, உண்மையான சபை) கிளைகளும் இக்காலத்தில் பிரிக்கப்படும். இச்செடிகளில் காணப்படும் முற்றிலும் வித்தியாசப்பட்ட கனிகள் வெவ்வேறாகச் சேர்க்கப்படும். இரண்டு ஆவிகளும் தங்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் முடிவையடையும். கோதுமை மணியான மணவாட்டிக்கு உண்டாகும் சத்தத்தைக் கேட்பதற்கு இதுவே சமயம். `என் ஜனங்களே, நீங்கள் (கோதுமை) அவளுடைய (களைகளுடைய) பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் (மத் 24ல் கூறப்பட்டதும், ஆறாம் முத்திரையில் ஏற்படும் உபத்திரவங்களிலும்) அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்’. (வெளி 18.4). ஆவியானவரின் கடைசி எச்சரிக்கை வெளி 3.22. `ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றெழுது’ இதுவே கடைசி எச்சரிக்கை. இதற்குப் பிறகு வேறொரு எச்சரிக்கை கொடுக்கப்படுவதில்லை. சிங்காசனம் வைக்கப்படும் நகரம் தயாராகிவிட்டது. பன்னிரண்டு அஸ்திபாரங்களும் போடப்பட்டன சுத்தப் பொன்னால் வீதிகள் அமைக்கப்பட்டன. பெரிய முத்துக்களால் செய்யப்பட்ட வாசல்கள் அதன் ஸ்தானங்களில் வைக்கப்பட்டன. ஒரு கூர்நுனிக் கோபுரம் (PYRAMID) போன்று அது மகத்தானதாயிருக்கிறது. அதன் மகிமையின் பிரகாசத்தை அதை ஆயத்தம் செய்த பரலோகவாசிகள் வியப்புடன் நோக்குகின்றனர். அதன் அழகின் ஒவ்வொரு அங்கமும் இயேசுவின் கிருபையையும் அன்பையும் வெளிப்படுத்து கின்றது. இயேசுவின் வருகைக்கென ஆயத்தம் செய்யப்பட்ட மக்களுக்கென்று இந்நகரம் உண்டாக்கப்பட்டது. அவர்கள் கூடிய சீக்கிரம் அதன் வீதிகளில் சந்தோஷமாக உலாவுவார். ஆம், இதுவே கடைசி அழைப்பு. ஆவியானவர் வரப்போகும் வேறொரு காலத்தில் பேசமாட்டார். ஏனெனில் சபையின் காலங்கள் இதோடு முடிவுபெற்றன. கடைசி சபையின் காலம் இன்னும் முடிவு பெறாததைக் குறித்து நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். ஆவியானவர்மக்களின் ஆவிக்குரிய செவிகளில் பேசுவதோடு மட்டுமின்றி, ஒரு தீர்க்கதரிசியின் மூலமாகவும் இக்காலத்தில் பேசுகிறார். பவுலுக்கு அவர் சத்தியத்தை வெளிப்படுத்தியது போன்று இக்காலத்தின் தூதனுக்கும் அவர் வெளிப்படுத்துவார். லவோதிக்கேயா சபையின் காலத்தில் தோன்றும் ஏழாம் தூதனின் நாட்களில், பவுலுக்கு வெளிப்பட்ட தேவரகசியத்தை அது வெளிப்பட்ட வண்ணமாகவே இந்தத் தூதன் வெளிப்படுத்துவார். இந்தத் தீர்க்கதரிசி தூதனானவர் பேசுவார். தீர்க்கதரிசியை அவரது சொந்த நாமத்தில் ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் அந்தத் தீர்க்கதரிசியின் ஊழியத்தின் நற்பலனைப் பெறுவார்கள். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு வெளி 22.17ல் கூறப்பட்ட கடைசி காலத்து மணவாட்டியின் ஒரு பாகமாவார்கள். `ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள். நிசாயாவில் பூமியில் விழுந்த கோதுமை மணி (மணவாட்டி) மறுபடியுமாக வார்த்தையில் நிலைநிற்கும் கோதுமை மணியாகத் தோன்றுகிறது. இந்தக் கடைசி காலத்தில் எழும்பும் உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசிக்குச் செவிகொடுங்கள். அவர் தேவனிடமிருந்து பெற்று, மக்களுக்கு உரைக்கும் சத்தியத்தையே மணவாட்டியும், உரைப்பாள். ஆவியானவரும், தீர்க்கதரிசியும் மணவாட்டியும் ஒரே காரியத்தையே கூறுவர். அவர்கள் கூறுவது ஏற்கனவே வேதவாக்கியத்ததில் காணப்படும். இப்பொழுது அவர்கள் `அவள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போங்கள்’ என்று கூக்குரலிடுகின்றனர். இந்தச் சத்தம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? இது அதிக காலம் நீடிக்காது என்பதை நாம் அறிவோம். ஏனெனில் இது கடைசி காலமாயிருக்கிறது. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன். ஆவியானவர் பேசிமுடித்துவிட்டார். சபைகளுக்கு வெளிச்சம் கொடுத்த சூரியன் இன்னும் வெகு சீக்கிரம் நித்தியமாக அஸ்தமிக்கும். அப்பொழுது காலதாமதமாயிருக்கும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, தேவ ஆவியானவர் உங்களோடு பேசியிருப்பாரெனில், இப்பொழுதே மனந்திரும்பி உங்களுடைய ஜீவியத்தை அவருக்கு ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கு நித்திய ஜீவனைத் தத்தருளுவார். பத்தாம் அத்தியாயம்: சபை காலங்களின் சுருக்கம் RESUME OF AGES நாம் இதுவரை ஏழு சபை காலங்களைக் குறித்த வேத வசனங்களை, ஒவ்வொரு வசனமாக எடுத்து வியாக்கியானம் செய்ததால், சபையின் சரித்திரத்தைத் தொடர்ச்சியாகக் கூற சந்தர்ப்பம் எழவில்லை. ஆகையால் இந்த அத்தியாயத்தில் தேவ ஆவியானவர் யோவானுக்கு வெளிப்படுத்தின வண்ணமாக, எபேசு சபை காலம் தொடங்கி கடைசி காலம் முடியவுள்ள காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களை நாம் தொடர்ச்சியாகக் கூற முற்படுவோம். நாம் ஏற்கனவே கூறியவைகளை ஒழுங்குபடுத்திக் கூறுகிறோமேயன்றி புதிய வரலாறுகளை இதில் சேர்க்கப் போவதில்லை. வெளிப்படுத்தின விசேஷத்தில் `சபை’ என்று அழைக்கப்படுவது தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியைக் கொண்ட கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை மாத்திரம் குறிக்காமல், உண்மையான கிறிஸ்தவர்களையும், பெயர் கிறிஸ்தவர்களையும் கொண்ட பொதுவான சபையைக் குறிக்கின்றது என்று இந்த வியாக்கியானத்தின் பயனாக நாம் அறிந்து கொண்டோம். இஸ்ரவேலர் எல்லாரும் இஸ்ரவேலர் அல்ல; அது போன்று கிறிஸ்தவர்கள் எல்லாரும் கிறிஸ்தவர்கள் அல்ல. அப்படியாயின், சபையானது, வித்தியாசப்பட்ட தன்மைகளைக் கொண்ட ஆவிகளால் இயங்கும் இரண்டு சபைகளைக் கொண்டது என்று நமக்குத் தெளிவானது. உண்மையான சபை பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டும், கள்ளச் சபை அந்திக் கிறிஸ்துவின் ஆவியினால் வழிநடத்தப்பட்டும் வருகின்றன. இவ்விரண்டு சபைகளும் தேவனை அறிவதாகவும், தேவன் அவைகளில் அன்பு கூறுகிறாரென்றும் கூறிக்கொள்கின்றன. இரண்டும் தேவனுடைய வார்த்தைகளை எடுத்துக் கூறுவதாகக் கருதுகின்றன. இரண்டும், சில முக்கியமான சத்தியங்களை விசுவாசித்து சிலவைகளில் வித்தியாச பேதம் காண்பிக்கின்றன. இரண்டு சபையிலுள்ளவர்களும் கிறிஸ்துவின் நாமத்தைச் சூடிக்கொண்டு கிறிஸ்தவர்கள் எனப் பெயர் கொண்டு, கிறிஸ்துவோடு உரிமை பாராட்டுவதால், தேவன் அவர்களை உத்திரவாதமுள்ளவர்களாகக் கருதி, இருசாராரோடும் பேசுகிறார். இவ்விரண்டு திராட்சை செடிகளும் (சபைகளும்) ஒன்றாக, அடுத்தடுத்து வளர்ந்து, முதிர்வடைந்து கடைசி சபையின் காலமுடிவில் அறுவடை செய்யப்படும் என்பதை நாம் அறிந்துகொண்டோம். கள்ளச் சபை ஜெயங்கொண்டு உண்மையான சபையை நிர்மூலமாக்க முடியாது; அவ்விதமாகவே, உண்மையான சபையும் கள்ளச் சபையை இரட்சிப்பின் அனுபவத்துக்குள் கொண்டுவர முடியாது. பரிசுத்த ஆவி கள்ளச் சபையைச் சார்ந்த இரட்சிக்கப்படாதவர்களின் மேலும் விழுந்து அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பிக்கும் என்னும் வியப்புள்ள சத்தியத்தை நாம் அறிந்தோம். யூதாஸ் பிசாசு என்று அழைக்கப்பட்டாலும், பரிசுத்த ஆவியின் ஊழியத்தைச் செய்தான் என்று வேதம் கூறுகிறது. இவைகளை மனதில் கொண்டவர்களாய், ஏழு சபையின் காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களை நாம் தொடர்ச்சியாய் கவனிப்போம். சபையானது பெந்தேகோஸ்தே நாளன்று பிறந்தது. முதலாம் ஆதாம் தேவனுடைய கரத்திலிருந்து ஒரு மணவாட்டியைப் பெற்றான். அவள் சிறிது காலம் கற்புள்ளவளாக ஜீவித்தாள்; அவ்விதமாக, பிந்தின ஆதாம் பெந்தேகோஸ்தேயன்று கற்புள்ள ஒரு மணவாட்டியைப் பெற்றார். அவள் தன்மையாய், கற்புள்ளவளாய் சிறிது காலம் ஜீவித்தாள். `மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத்துணியவில்லை’ (அப் 5.13). `இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்’. (அப் 2.47). இது எவ்வளவு காலம் நீடித்தது என்பதை நாமறியோம். ஒருநாள் ஏவாள் சாத்தானால் சோதிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டதுபோல், சபையும் அந்திக் கிறிஸ்துவின் ஆவிநுழைந்ததனால் கறைபட்டது. `வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக் கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது’ (1 யோவன் 4.3). முதல் சபையின் மணவாட்டியைக் குறித்து இயேசு’ `ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பைவிட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறைஉண்டு. ஆகையால், நீ இன்ன நிலமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக’ (வெளி 2. 4-5) என்று கூறினார். ஆதாம் ஏவளை அறிவதற்கு முன்பே சாத்தான் அவளை அறிந்தான்; அவ்வாறே ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்துக்கு முன்னர் அவன் கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபையை வஞ்சித்தான். வெளி 2.6ல் கூறப்பட்ட நிக்கோலாய் மதஸ்தரின் கிரியைகள் சபைவிழுவதற்குக் காரணமாயிருந்தன. முதல் சபை தேவனுடைய சுத்த வசனத்தை ஏற்றுக் கொள்ளாமல் பின்வாங்கிப் போனது. சபையானது வார்த்தை நிறைவேற தேவன் பேரில் பூரணமாய் சார்ந்திருக்க வேண்டுமென்றும், மனிதனால் அரசாட்சி செய்யப்படக்கூடாது என்றும் தேவனுடைய நிபந்தனையை உதறித் தள்ளிவிட்டு, உலக அரசாங்கத்தைப் போன்று சபை அரசாங்கத்தை நிறுவி மனிதர் சபையின்மேல் அதிகாரஞ் செலுத்த சம்மதித்தது. இதுதான் நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கையாகும். இஸ்ரவேல் ஜனங்கள் செய்வதையே முதல் சபையிலுள்ளவர்கள் செய்தனர். அவர்கள் வார்த்தையையும் ஆவியானவரையும் நிராகரித்து மனித அரசாட்சியை ஏற்படுத்தினர். இதன் காரணமாக, மரணம் சபையினுள் பிரவேசித்தது. ஆனால் ஆவியானவர், முதலாம் சபையின் காலத்தில், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பதாக வாக்களிக்கிறார் (வெளி 2.7) சபை மரணவிருட்சத்தில் (அதாவது ஸ்தாபனங்கள் உண்டாக்கிக் கொண்ட கள்ளச் சபையில்) பங்கு கொண்டது. அது முடிவில் அக்கினிக் கடலில் பங்கடையும். இப்பொழுது ஜீவவிருட்சத்தைச் சுடரொளி பட்டயத்தையுடைய கேரூபின்கள் காவல் காப்பதில்லை. தேவன் ஏதேன் தோட்டத்தை விட்டுப் போனதுபோல், இப்பொழுது சபை நடுவிலிருந்து புறப்பட்டுப் போவதில்லை. அவர் கடைசி சபையின் காலம் வரைக்கும் தம்முடைய சபையின் மத்தியில் இருந்து, எல்லாரையும் அழைக்கிறார். எபேசு சபையின் தூதனுக்குக் கொடுக்கப்பட்ட செய்தி எபேசு பட்டினத்திலிருந்த சபைக்கல்ல; அது எபேசு சபையின் காலத்திற்கு உரியதாகும் என்பதை நீங்கள் அறியவேண்டும். அந்தக் காலத்தில், கோதுமையும் களையும் பற்றிய உவமையில் கூறப்பட்ட வண்ணம், சத்தியமும், தவறும் விதைக்கப்பட்டன. சபையின் காலங்களை, சாகுபடி செய்யும் நிலமாகக் கருதுவோமாயின், அதில் கோதுமையும் களைகளும் காணப்படுகின்றன. கள்ளச் சபை ஸ்தாபன முண்டாக்கிக்கொண்டு, குருக்களாட்சியை ஏற்படுத்தி, வார்த்தையைப் புறக்கணித்து, உண்மையான கிறிஸ்தவனை எதிர்க்கத் தலைப்பட்டது. களைகள் எப்பொழுதும் செடிகளைக் காட்டிலும் செழித்து வளரும். களையாகிய சபை முதலாம் சபையின் காலத்தில் துரிதமாக வளர்ந்தது. அதே சமயத்தில், கோதுமையாகிய சபையும் செழித்தோங்கியது. முதலாம் சபையின் கால முடிவில், நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் கள்ளச் சபையில் தழைத் தோங்கின. இவைகளை உண்மையான சபையிலும் பரப்ப முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக வேதத்திற்கப்பாற்பட்ட கண்காணிப்பாளர் என்னும் பட்டத்தைப் பாலிகார்ப் போன்ற வரும் சூடிக்கொண்டனர். அல்லாமலும், முதலாம் சபை ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டது. விவாகமான பிறகு சில வருஷங்கள் மணவாட்டி மணவாளனுடன் காண்பிக்கும் அன்பிற்கு ஒத்ததாக இந்த ஆதி அன்பு உண்டாயிருந்தது. ஆனால் அந்தச் சபையின் காலத்தில், பூரண அன்பு தணிந்து, தேவன் புறக்கணிக்கப்பட்டார். இயேசு கிறிஸ்து தம்முடைய சபையின் மத்தியிலே உலாவி, தம்முடைய வலது கரத்தில் தூதர்களை ஏந்திக்கொண்டிருப்பதாக வெளி 2.1. விவரிக்கிறது. மணவாட்டி பாவநிலையில் விழுந்து, சபையில் சத்தியமும் தவறும் காணப்பட்டாலும், தேவன் அதைக் கைவிடவில்லை. சபை அவருக்கே உரிமையானது. ரோமர் 14. 7-9, இதை பின்வருமாறு விவரிக்கிறது. `நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம்; நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும், மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். `கிறிஸ்துவும் மரித்தோர் மேலும் ஜீவனுள்ளோர் மேலும் ஆண்டவராயிருக்குப் பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்’. சிலுவையின் மரணத்தினால், அவர் உலகத்திலுள்ள அனைவரையும் கிரயத்துக்கு வாங்கிக் கொண்டார். அவர்கள் அவருடையவர்கள். அவர் மரித்தோர் மேலும் ஜீவனுள்ளோர் மேலும் ஆண்டவராயிருக்கிறார். (இது உரிமையைக் குறிப்பதேயன்றி, உறவைக் குறிப்பதல்ல). ஜீவனையும் மரணத்தையும் கொண்ட அந்தச் சபையின் நடுவில் அவர் உலாவிக் கொண்டிருக்கிறார். முதலாம் சபையின் காலத்தில் நடப்பட்டது. காலங்கள்தோறும் வளர்ந்து, கடைசி சபையின் காலத்தில் முதிர்வடைந்து அறுவடை செய்யப்படும். அவ்வாறே சிமிர்னா சபையின் காலத்தில், சபையின் சரித்திரம் எபேசு சபையிலுண்டா யிருந்ததைக் காட்டிலும் அதிக சம்பவங்களைக் கண்டதாயிருந்தது, அவை பரிசுத்த ஆவியினால் நமக்கு வெளிப்படுகிறது. இந்தச் சபையின் காலத்தில், கள்ளச் சபை உண்மையான சபையின்மேல் கொண்ட வெறுப்பு அதிகப்பட்டது. கள்ளச் சபையிலுள்வர்கள் உண்மையான விசுவாசிகளை விட்டுப் பிரிந்தனர். (வெளி 2.9). அவர்கள் பொய்யர். அவர்கள் யூதராயிராமல் தங்களை யூதரென்று அழைத்துக்கொண்டனர். தேவன் அவர்களை நிர்மூலமாக்கினாரா? இல்லை. `அறுவடையின் காலம் வரை இரண்டையும் வளரவிடுங்கள்’ என்று அவர் கூறுகிறார். `ஆண்டவரேஉம்முடைய ஜனங்களை அவர்கள் கொன்றுபோடுவதால் அவர்களை நீர் நிர்மூலமாக்க வேண்டும்’ என்று கூறினாலும் அவர் `அவர்களை விட்டுவிடுங்கள்; ஆனால் மணவாட்டியே, நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, என்னில் இன்னும் அதிகமாக அன்புகூருவாயாக’ என்று கூறுகிறார். கள்ளச் சபை சாத்தானால் உண்டானது என்பதை நாமறிவோம். அச்சபையிலுள்ளவர்கள் சாத்தானால் கூட்டப்படுகின்றனர். ஆனால் அவர்கள் தேவனுடைய நாமத்தில் கூடி, அவர்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்று பொய் சொல்கின்றனர். அவர்கள் பிரசங்கம் செய்து, போதித்து, ஞானஸ்நானம் கொடுத்து, தேவனை வழிபட்டு, கிறிஸ்து நியமித்த சபை ஒழுங்குகளில் பங்கு கொள்ளுகின்றனர்; என்றாலும், அவர்கள் தேவனால் உண்டானவர்களல்ல, ஆனால் அவர்கள் தேவனைச் சார்ந்தவர்களென்று கூறிக்கொள்வதால், தேவன் அவர்களைக் குற்றப்படுத்துவார். ஒவ்வொரு சபையின் காலத்திலும் அவர் அவர்களைக் கடிந்துகொள்ளுகிறார். அவர்கள் பிலேயாமை நமக்கு நினைப்பூட்டுகின்றனர். பிலேயாம் ஒரு தீர்க்கதரிசியின் ஊழியத்தைச் செய்தான். சுத்த மிருகங்களைப் பலிசெலுத்தி தேவனை அவன் அணுகமுடியும் என்று நன்கு அறிந்திருந்தான். ஆனாலும் அவன் வார்த்தைக்குக் கீழ்ப்படியாத தீர்க்கதரிசியாயிருந்தான். பாலாக்கிடம் அவன் போகக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டிருந்தாலும், அவன் பண ஆசை கொண்டவனாய், செல்வாக்கை வாஞ்சித்து, எப்படியாயினும் பாலாக்கைக் காணமுயன்றான். ஆகையால் அவன் போகத் தேவன் சம்மதித்தார். பிலேயாமின் `இருதய வாஞ்சை’ காரணமாகத் தேவன் அவன் செல்ல அனுமதித்தார், அப்படியாயின் தேவன் அவருடைய சிந்தனையைச் சந்தர்ப்பத்திற்கேற்ப மாற்றிக்கொண்டாரா? அல்ல. பிலேயாம் சென்றாலும், தேவன் அவருடைய சித்தத்தை நிறைவேற்றினார். இஸ்ரவேலர் எவ்வாறாயினும் ஆசீர்வதிக்கப்பட்டனர். தேவனுடைய சித்தத்தைப் பிலேயாம் ரத்து செய்ய முடியாது. என்ன நேரிட்டாலும், தேவன் தம்முடைய சொந்த வழியை நிர்ணயித்திருந்தார். வார்த்தைக்குக் கீழ்ப்படியாததனால், பிலேயாம் ஆசீர்வாதத்தை இழந்தான். இன்றைக்கு இதுதான் சம்பவிக்கிறது. பெண் பிரசங்கிகளும், ஸ்தானபங்களும் கள்ளபோதகங்களும் வேதத்திற்கு மாறாக இன்று தோன்றி, மக்கள் இவைகளை ஏற்றுக்கொண்டு தேவனை வழிபடுகின்றனர். பிலேயாமைப் போன்று அவர்கள் பரிசுத்த ஆவியின் வரங்களைப் பெற்று, தேவன் அவர்களிடம் பேசினதாகக் கூறுகின்றனர். தேவன் அவர்களோடு பேசினார் என்பதை நான் மறுக்கவில்லை. அவர் பிலேயாமோடு இரண்டாம் முறை பேசினதுபோல் இவர்களோடு பேசுகிறார். பிலேயாம் வார்த்தைக்கு மேலாகத் தன் இருதயத்தின் வாஞ்சை நிறைவேற வேண்டும், என்று விரும்பியபோது, தேவன் அதை அவனுக்கு அருளினார்; ஆனாலும் கடைசியில் தன் சொந்த சித்தத்தை அவர் நிறைவேற்றினார். இன்றைக்கும், மக்கள் வார்த்தையைப் புறக்கணித்ததால், தங்கள் இருதயத்தின் வாஞ்சை நிறைவேறத் தேவன் அனுமதிக்கிறார். எவ்வாறாயினும் தேவனுடைய சித்தம் முடிவில் நிறைவேறும். ஆமென், இதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என நம்புகிறேன். மற்றைய சபையின் காலங்களில் நடந்த சம்பவங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள இது உதவுவதல்லாமல், வார்த்தையையும் தேவனுடைய சித்தத்தையும் நிராகரித்த மக்கள் ஆவிக்குரிய வரங்களை வெளிப்படுத்தி, வெளித்தோற்றத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகக் காணப்படும் காரணத் தையும் புரிந்துகொள்ள இது உதவும். இந்தக் கடைசி காலத்தில் செய்தி தெளிவாகக் கொடுக்கப்பட்டு விட்டது. சபையின் காலங்களிலெல்லாம்’ அடிமையானவளிடத்தில் பிறந்தவன் புறம்பே தள்ளப்படும்வரை சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவனைத் துன்பப்படுத்து வான்’ என்னும் பழைய ஏற்பாட்டின் சத்தியம் நிலைநின்றது. சாத்தான் பெயர்க்கிறிஸ்தவர்களின் மூலம் தன்னுடைய வெறுப்பையும் நிந்தையையும் உண்மையான கிறிஸ்தவர்களின் மேல் பொழிந்தான். லவோதிக்கேயா சபையின் கால முடிவில் கள்ளச்சபை தேவனால் வேரோடு பிடுங்கப்படும் வரை, இது அதிகரித்துக் கொண்டே வரும். மூன்றாம் சபையின் காலத்தில் உலகப் பிரகாரமான சபை (கள்ளச் சபை) நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளைப் போதகமாகக் கைக்கொள்ளும் என்று ஆவியானவர் தீர்க்கதரிசனமாக உரைத்தார். வேதப்பிரகாரமாக மூப்பர்கள் சபைகளில் நியமிக்கப்பட்டு, வார்த்தை போதிக்கப்படுவதை இச்சபை நிராகரித்து நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளைப் புகுத்தி, மனிதனுக்கும் தேவனுக்குமிடையே குருக்களாட்சியை ஏற்படுத்தி, சபையோருக்குள்ள உரிமையைக் கைப்பற்றியதால், குருமார்கள் சபையோர்களை ஆளத் தொடங்கினர். இந்தக் கிரியைகள் போதகமாக இச்சபையின் காலத்தில் மாற்றப்பட்டு, தேவனுடைய வார்த்தையாக நிலைநிறுத்தப்பட்டது. இது தேவனுடைய வார்த்தையல்ல என்பது திண்ணம். அது அந்திக்கிறிஸ்துவின் போதகமாகும். மக்களாட்சியை சபை ஏற்படுத்தியதால், அது அரசியலில் ஈடுபட ஆரம்பித்தது, இதை ஒரு கொடிய சக்கரவர்த்தி வரவேற்று, சபை அரசியலையும் (CHURCH POLITICS), ராஜ்ய அரசியலையும் (STATE POLITICS) ஒன்றாக இணைத்து, சாத்தானின் தவறான மார்க்கத்தைக் கைக்கொள்ளும் கள்ளச் சபையை நிலைநாட்டினார். அநேக சக்கரவர்த்திகள் விடுத்த சாசனங்களின் மூலம் கள்ளச் சபை அரசாங்க அதிகாரத்தைப் பெற்று, உண்மையான சபையை நிர்மூலமாக்கி வந்தது. உண்மையான சபையும் நிக்கொலாய் மதஸ்தரின் போதகங்களைச் சிறிதளவு பின்பற்றியது வருந்தத்தக்கது; ஆனால் கள்ளச் சபையைப் போன்று அவர்கள் நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கைகளைப் போதகமாக நிர்மாணிக்கவில்லை. உண்மையான சபையின் கண்காணிகளாய் நியமிக்கப்பட்டவர்கள் தங்கள் சபையின் மேலுள்ள உத்திரவாதத்தைக் காட்டிலும் சற்று அதிகமான உத்திரவாதம் பெற்றவர்களாக எண்ணினர். பவுல் எண்ணியவிதமாய் இவர்கள் இச்சபையின் காலத்தில் அதிகாரம் வகிக்கவில்லை. பவுல் மக்களை எல்லா அதிகாரத்தையுடைய தேவனிடத்தில் வழிநடத்தினான். ஆனால் சபையின் கண்காணிப்பாளர்கள் தேவனுடைய வழிநடத்துதலோடுகூட மனிதனுடைய வழிநடத்துதலையும் நோக்கியிருந்தனர், ஆகையால் உண்மையான சபையும் மனிதனின் வழிநடத்துதலினால் கறைபட்டது. கள்ளச்சபை நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தை நிலைநிறுத்தி, குருக்களாட்சியை ஏற்படுத்தியது. அடுத்தபடியாக அது `சாத்தானின் ஆழத்தை’ அடைந்து பிலேயாமின் போதகத்தைக் கைக்கொண்டது. பிலேயாமின் போதகம் வெளி 2.14ல் கூறப்பட்டிருக்கிறது. மோவாபியரையும் இஸ்ரவேலரையும் ஒன்றுகூட்டுவதன் மூலம் இஸ்ரவேலரை எவ்வாறு வழிதவறச் செய்ய முடியும் என்பதைப் பிலேயாம் பாலாக்குக்குக் கற்பித்தான். இந்தக் கூட்டத்தில் இஸ்ரவேலர் தேவனுடைய வார்த்தைக்கு முரண்பட்ட இரண்டு காரியங்களைச் செய்வர் என்று பிலேயாம் அறிந்திருந்தான். பாலாக் தன் ராஜ்யத்தை இழந்து போகாமலிருக்க, அக்காலத்தில் ஆவிக்குரிய புகழ்பெற்ற பிலேயாமின் உதவியை நாடினான். பிலேயாமின் ஆலோசனை இஸ்ரவேலரை கண்ணியில் வீழ்த்தி அவர்களை நிர்மூலமாக்கியது. அவனுடைய ஆலோசனை இருவகைப்பட்டது. முதலாவது, அவர்கள் ஒன்றுகூட வேண்டும். இரண்டாவதாக, அவர்களிடையே காணப்பட்ட கருத்து வேற்றுமைகளைக் கலந்தாலோசிப்பதன் மூலம் நிவிர்த்தி செய்ய வேண்டும். இதன் விளைவால் ஏற்படும் ஒற்றுமை அதிக காலம் நீடிக்கும். அவர்கள் ஓன்றுகூடுவதை எவ்வாறாயினும் சாதித்துவிட்டால், அதற்குப் பின்பு இஸ்ரவேலர் விருந்தளிப்போரின் வேண்டுகோளுக்கிணங்கி, ஒன்றாக வழிபட்டு, இன்னும் தேவனுக்குப் பிரியமில்லாத அநேக காரியங்களைச் செய்வர். இது பழைய ஏற்பாட்டின் காலத்திலுண்டாயிருந்த தேவனுடைய சபைக்கு மாத்திரம் சம்பவிக்கவில்லை; புதிய ஏற்பாட்டின் காலத்திலிருந்த சபைக்கும் இது சம்பவித்தது. கான்ஸ்டன்டைன் என்னும் சக்கரவர்த்தி பாலாக்கைப் போன்று தன்னுடைய ராஜ்யத்தை ஸ்திரப்படுத்த விரும்பினான். ஆகையால் கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெற எண்ணி, அவன் பெயர் கிறிஸ்தவர்களையும், ரோமாபுரியின் முதல் சபையிலுள்ளவரையும் வரவழைத்தான் அதன் பலனாக கி.பி. 325ல் நிசயா மகாநாடு கூட்டப்பட்டது. கான்ஸ்டன்டைனுடைய அழைப்பிற்கிணங்கி, உண்மை கிறிஸ்தவர்களும், பெயர் கிறிஸ்தவர்களும் இம்மாநாட்டில் ஒன்று கூடினர். உண்மை கிறிஸ்தவர்கள் அந்தக் கூட்டத்திற்குச் செல்லவேண்டிய அவசியம் உண்டாயிருக்கவில்லை. இவ்விருவரையும் ஒன்று படுத்த கான்ஸ்டன்டைன் எவ்வளவாக முயற்சித்த போதிலும், உண்மையான கிறிஸ்தவர்கள் ஒன்று சேர இணங்காமல் வெளிவந்தனர். அந்த ஐக்கியத்தில் சேர சம்மதித்தவர்களுக்கு, கான்ஸ்டன்டைன் அரசாங்க பொக்கிஷத்திலிருந்து ஐசுவரியத்தைக் கொடுத்து, அரசியல் ஆதிக்கத்தைக் கொண்டும் இராணுவ பலத்தைக் கொண்டும் சபையைத் தாங்கினான். ஜனங்கள் விக்கிரகாராதனை யையும் மரித்தவர்களை வழிபடுவதையும் கடைபிடிக்கத் தொடங்கினர், விக்கிரங்களுக்குப் பரிசுத்தவான்களின் பெயர்கள் சூட்டப்பட்டு, அவைகள் ஆலயங்களில் வைக்கப்பட்டன. ஜனங்கள் மரித்தவர்களுக்கும் பரிசுத்தவான் களுக்கும் ஜெபம் ஏறெடுக்கக் கற்பிக்கப்பட்டனர். மனிதனுக்குத் தேவையான உணவாகிய தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாகப் பிரமாணங்களும் கொள்கைகளும், ஆசாரங்களும் கொடுக்கப்பட்டன; அவைகள் கைக்கொள்ளப் படவேண்டுமென்று அரசாங்கமும் வற்புறுத்தியது, அன்றியும் மூன்று கடவுள்கள் உண்டு என்று மக்கள் போதிக்கப்பட்டு, ஒரே உண்மையான தேவனின் மூன்று பட்டப் பெயர்களால் இக்கடவுள்கள் அறியப்பட்டனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானம் புறக்கணிக்கப்பட்டு, இதற்குப் பதிலாக மூன்று பட்டப் பெயர்களைக் கொண்ட அஞ்ஞான ஞானஸ்நானம் கைக்கொள்ளப்பட்டது. உண்மையான விசுவாசிகள் அங்கு சென்றிருக்கக்கூடாது. அவர்கள் ஏற்கனவே பெரும்பான்மையாக சத்தியத்தை இழந்து விட்டிருந்தனர். ஆனால் இதற்குப் பிறகு, தேவத்துவத்தின் உண்மையை அவர்கள் மறந்து, மூன்று பட்டங்களைக் கொண்ட ஞானஸ்நானத்தைக் கைக்கொள்ள ஏதுவுண்டு. இந்த பிலேயாமின் போதகத்தைக் கவனமாய் சிந்தியுங்கள். நேர்மையிழந்த குருமார்கள் மக்களை அவிசுவாசமாகிய பாவத்தில் நடத்தி, அவர்களிடம் ஜனங்களைச் சேர்த்துக் கொள்ள திறம்பட சூழ்ச்சி செய்தனர். குருமார்கள் நெறிதவறி, தங்களுக்குள் அரசியலதிகாரத்தைத் தேடிக்கொண்டதே நிக்கொலாய் மதஸ்தரின் போதகமாகும். அவர்கள் ஏற்படுத்தின பிரமாணங்களையும், ஆசரிப்பு முறைகளையும் கைக்கொள்ளவேண்டும் என்று ஜனங்களை வற்புறுத்தி, அவர்களைத் தங்களோடு சேர்த்துக் கொண்டதே பிலேயாமின் போதகமாகும். ஆம், சபையின் பிரமாணங்களும், கொள்கைகளும் ஜனங்களை ஜீவனற்ற சபையில் ஒன்று சேர்த்து அவர்களை நிர்மூலமாக்கியது. இதுதான் ரோமன், கத்தோலிக்க சபையின் போதகம். அந்தச் சபையிலுள்ளவர்கள் வார்த்தையினால் போஷிக்கப்பட வில்லை. அவர்கள் கிறிஸ்தவ பெயர்களைக் கொண்ட பாபிலோன் அஞ்ஞான வழக்கங்களாகிய விக்கிரகாரா தனையால் போஷிக்கப்பட்டனர். ரோமன் கத்தோலிக்க சபையின் ஆவியும் போதகமும் இன்று ஸ்தாபனங்களாக பிராடெஸ்டென்டுகளினிடையில் காணப்படுகின்றன. நிக்கொலாய் மதஸ்தரின் போதகம், ஸ்தாபனங்கள் ஏற்பட்டு, அவை மனிதனால் நடத்தப்பட வேண்டும் என்பதே. இதன் காரணமாக ஆவியானவர் சபையினின்று தள்ளப்பட்டார். சபையில் பிரமாணங்களைப் புகுத்தி, வார்த்தையைப் புறக்கணிப்பதே பிலேயாமின் போதகம். இந்தநாள் வரைக்கும், தேவனுடைய மக்களில் அநேகர் இந்த ஸ்தாபனத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். தேவன் அவர்களை நோக்கி, `என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்’ என்று கூக்குரலிடுகிறார். அவர்கள் சத்தியத்தை அறியாதவர்களாயிருக்கின்றனர். ஆனால் மணவாட்டி எடுக்கப்படுதல் இந்நேரம் சம்பவிக்குமாயின், அவர்கள் கைவிடப்படுவர். தேவனுடைய நியாயத் தீர்ப்பில் அறியாமையைக் கோரி அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. குருமார்கள் தங்களுக்கென ஐக்கியத்தை உண்டாக்கிக் கொண்டு, வித்தியாசமான பதவிகளை ஏற்பதும், பதவி உயர்வடைவதும் அந்திக்கிறிஸ்து ஆவியின் தம்மைகளை வெளிப்படுத்தும் செயல்களாகும். இதன் மூலம் மனித ஆலோசனை வார்த்தைக்கு மேலாக முக்கியத்துவம் அடைகிறது. ஸ்தாபனங்களைச் சேர்ந்த எந்த மனிதனும் அந்திக்கிறிஸ்துவின் மார்க்கத்தில் பங்கு கொள்ளுகிறான். நான் ஜனங்களை விரோதிப்பதில்லை. மார்க்க ஒழுங்குகளையே நான் எதிர்க்கிறேன் என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன். சபையும் அரசாங்கமும் ஒன்றுபட்ட பின்னர், இருளின் காலங்கள் தோன்றுவதற்கு அவசியமான அனைத்தும் தயாராகிவிட்டன. ஆயிர வருஷ காலமாக சபையானது சாத்தானின் ஆழத்தில் மூழ்கி அந்தகாரமடைந்திருந்தது, ஜனங்கள் நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தையும், பிலேயாமின் போதகத்தையும் கைக்கொண்டு, அரசியல், பொருளாதார ஆதரவைப் பெறும்போது, அவர்கள் யேசபேல் போதகத்தை நோக்கிச் செல்கின்றனர். நான்காம் சபையின் காலத்தைக் குறித்து சிந்திக்கும்போது, யேசபேல் என்பவள் அஸ்தரோத்தின் ஆசாரியனும், சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தியென்று நாம் கூறினோம். ஏத்பாகால் என்பவன் ஒரு கொலைக்காரன் யேசபேல் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபை அரசியல் காரணங்கொண்டு மணந்தாள். அவள் லேவியர்களைக் கொலைசெய்து, அஸ்தரோத்துக்கும் (வீனஸ்), பாகாலுக்கும் (சூரிய தேவன்) ஆலயங்களை எழுப்பி, மக்கள் இத்தெய்வங்களை வழிபட வேண்டுமென்று வற்புறுத்தினாள். அவள் ஒரு போதகத்தை உருவாக்கி, அதைக் கட்டாய முறையில் ஆசாரியர்களைக் கொண்டு மக்களுக்குப் போதித்தாள். இருளின் காலங்களில் பெயர் கிறிஸ்தவ சபை எவ்வாறிருந்தது என்பதை நாம் இப்போது அறியலாம். அவர்கள் தேவனின் நாமத்தையும் தேவத்துவத்தின் பட்டப் பெயர்களையும் ஏற்றுக்கொண்டு, வேதப்பிரகாரமான சிலகொள்கைகளைக் கடைபிடித்தாலும், தேவனுடைய வார்த்தையை அவர்கள் முற்றிலுமாகக் கைவிட்டனர். வேதத்திலிருந்து தெரிந்தெடுத்தவைகளின் அர்த்தத்தை அவர்கள் சௌகரியத்திற்கேற்ப மாற்றி அமைத்தனர். அவர்களின் அத்தியட்சகர்களும் உயர்ந்த பதவியேற்ற குருமார்களும் அநேக கிரந்தங்கள் எழுதினர். போப்புகள் தங்களைப் பிழையற்றவர்கள் என்று கூறிக்கொண்டு, தேவனிடத்திலிருந்து வெளிப் பாட்டைப் பெற்று அதை மக்களுக்கு எடுத்துரைப்பதாகக் கூறினர். அவர்கள் தங்கள் போதகங்களை குருமார்களுக்குப் போதித்தனர்; குருமார்கள் மக்களைப் பயமுறுத்தி இவைகளை விசுவாசிக்கும்படி செய்தனர். கருத்து வேற்றுமை கொண்ட எவரும் கொல்லப்பட்டனர். இல்லையேல் சபையிலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டனர். சபை மக்களின் மேல் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி உண்மையான கிறிஸ்தவர்களை நிர்மூலமாக்க வேண்டுமென்று கருதி, அவர்களின் இரத்தத்தைக் குடித்தது. இவர்களில் பெரும்பாலோர் கொல்லப்பட்ட தால், வார்த்தையும், பரிசுத்த ஆவியின் கிரியைகளும் அழிந்து போகுமென்று ஐயமேற்பட்டது. ஆனால் உண்மையான சபை போராடிப் பிழைத்தது. தேவன் தம்முடைய சிறுமந்தையைப் பாதுகாத்ததன் காரணமாக, ரோம சபை அவர்களின் உடல்களை அழித்தாலும், அவர்களுக்குள்ளிருந்த ஆவியை அழிக்க முடியவில்லை. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் சத்தியம் ஒளி வீசியது. நிக்கொலாய் மதஸ்தரின் போதகமும், பிலேயாமின் போதகமும், யேசபேலின் போதகமும் மூன்று வித்தியாசமான ஆவிகளின் கொள்கைகளைக் கொண்டதல்ல. அவை ஒரே ஆவியின் வித்தியாசமான கிரியைகளாகும். ஸ்தாபனங்கள் உண்டாகக் காரணமாயிருந்த அந்திக்கிறிஸ்துவின் ஆவியின் தன்மைகள் மூன்று வித்தியாசமான கட்டங்களில் காணப்படுகின்றன. குருமார்கள் தங்களைச் சபையோரிடமிருந்து பிரித்துக்கொண்டு குருக்களாட்சியை ஏற்படுத்தியவுடன்,அவர்கள் ஜனங்களை ஸ்தாபனங்களின் மூலம் கட்டுப்படுத்தி, தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக பிரமாணங்களையும், கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ள வற்புறுத்தி, ஆசாரங்களுக்கும் வழிபாட்டின் முறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத்தூண்டி, அவர்களை அடக்கி ஆண்டனர். அந்திக் கிறிஸ்துவின் மார்க்கம் தேவனுடைய வார்த்தையின் மூலம் வல்லமையைப் பெறாமல் தன் சொந்த கள்ளத் தீர்க்கதரிசனங்களால் வல்லமை பெற்று, அதே சமயத்தில் கிறிஸ்துவின் நாமத்தினால் அறியப்பட்டது. சத்தியம் அழிந்துவிடுமோ என்ற நிலை ஏற்பட்டபோது, ஜனங்கள் ரோமன் கத்தோலிக்க சபையின் கேடுபாடான வழக்கங்களை எதிர்க்கத் தொடங்கினர். அந்தச் சபையின் போதகத்தையும் அதன் நடத்தையையும் தேவன் அங்கீகரிக்க முடியாது என்ற எண்ணம் மக்களிடையே தோன்றியது. ஆனால் இந்த எதிர்ப்புகளை ரோம சபை அவமதித்து, அவைகளை நசுக்கிப்போட்டது. அப்பொழுது தேவன் தம்முடைய சுயாதிபத்திய கிருபையினால், சீர்திருத்தம் உண்டாக்க மார்டின் லூதர் என்னும் தூதனை அனுப்பினார். `விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலைக்’ குறித்து லூதர் பிரசங்கித்த போது, உண்மையான சபை முதல் முதலாக அதிகம் செழித்து வளர ஆரம்பித்தது. பெயர் கிறிஸ்துவ சபை அரசாங்க அதிகாரத்தைப் பெற்றிருந்ததால், அரசாங்கம் உண்மையான விசுவாசிகளை எதிர்க்கத் தொடங்கியது. இங்குதான் லூதரும், உண்மையான விசுவாசிகளும் தவறு செய்தனர். உண்மையான சபைக்கு அரசாங்கம் பொருளுதவி செய்ய அவர்கள் சம்மதித்தனர். இதன் விளைவாக, இக்காலத்தில் தேவனுடைய வார்த்தை அதிகமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரசியல் வல்லமையில் நம்பிக்கை கொண்டிருந்ததனால் லூதரைச் சார்ந்தவர்கள் இச்சபையின் கால முடிவில் ஒரு ஸ்தாபனமுண்டாக்கிக் கொண்டனர். லூதரின் காலத்தில், கள்ளச் சபையை விட்டுப் பிரித்து வந்தவர்கள் வேசியின் குமாரத்தியாகிய ஸ்தாபனமாக மாறி, நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தையும், பிலேயாமின் போதகத்தையும் பின்பற்றினர். இவர்களிடையே சச்சரவு அதிகப்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் துன்புறுத்திக் கொல்லவும் துணிந்தனர். இவையனைத்தும் அவர்கள் உண்மையான வித்துக்களல்ல என்பதை நிரூபிக்கின்றன. ஆயினும் ஒவ்வொரு சபையின் காலத்திலிருந்தது போன்று, இக்காலத்திலும் சிலபேர் உண்மையான வித்துக்களாயிருந்தனர். இக்காலத்தில் வார்த்தை சிறிதளவாகிலும் அறியப்பட்டதால் நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். சீர்திருத்தம் இச்சபையின் காலத்தில் தொடங்கியது. ஆனால் சபை இக்காலத்தில் உயிர் பெறவில்லை. அல்லது புதுப்பிக்கப்பட்டு பழைய நிலைக்குத் திருப்பப்படவில்லை. நிசயாவில் புதைக்கப்பட்ட கோதுமை மணியானது. இருளின் காலங்களில் அழுகி, இக்காலத்தில் சத்தியமாகிய ஒரு துளிர் விட்டு, லவோதிக்கேயா சபையின் காலத்தில், இயேசு வருவதற்குச் சற்று முன்பு, கோதுமைவித்து மணவாட்டியாக மாறி களஞ்சியத்தில் சேர்க்கப்படு மென்றும், களைகள் அறுவடை செய்யப்பட்டு அக்கினிக் கடலில் சுட்டெரிக்கப் படும் என்பதையும் இக்காலத்தின் சம்பவங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. ஐந்தாம் சபையின் காலத்தில் தேவனுடைய வார்த்தை அச்சடிக்கப்பட்டு, மக்களிடையே அதிகமாக பரவியது. இதன் பலன் ஆறாம் சபையின் காலத்தில் காணப்பட்டது. இந்தச் சபையின் காலம் கோதுமை செடியின் பட்டுக் குஞ்ச காலம் (TASSEL AGE) என்று நாம் முன்னமே கூறியுள்ளோம். கல்வி இக்காலத்தில் செழித்தோங்கியது. கல்வியறிவு படைத்த அநேகர் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவரைச் சேவித்தனர். சகோதர சிநேகம் இக்காலத்தில் அதிகமாக நிலை பெற்றது. அது திறந்த வாசலின் காலமாயிருந்தது. அதிகமாக நீடித்த கடைசி காலம் இதுவே. இதற்குப் பிறகு தோன்றும் லாவோதிக்கேயா சபையின் காலம் மிகவும் குறுகியதாயிருக்கும். மற்றெல்லாச் சபையின் காலங்களைக் காட்டிலும் ஆறாம் சபையின் காலத்தில் உண்மையான சபை அதிகமாக தழைத்தோங்கியது. கள்ளச் சபையின் செல்வாக்கு சிறிது சிறிதாகக் குறைவுபடத் தொடங்கியது. உண்மையான சபையிலுள்ளோர் சென்றவிடமெல்லாம், தேவன் வெளிச்சத்தையும், ஜீவனையும், சந்தோஷத்தையும் அளித்தார். கள்ளச் சபையின் கொடூரத்தன்மை அம்பலமானது, கள்ளச் சபை செல்வாக்கு பெற்றிருந்த காலங்களில் உண்மையான சபையை அறவே அழிக்க முடியாமற் போனவாறு, உண்மையான சபையும் இச்சபையின் காலத்தில் கள்ளச்சபையை இயேசு கிறிஸ்துவிடம் திருப்ப முடியவில்லை. கள்ளச் சபை பதுங்கியிருந்து, கடைசி சபையின் காலத்தின் கடைசி பாகத்தில், தெரிந்து கொள்ளப்பட்டவர்களைத் தவிர மற்றெல்லாரையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளக்காத்துக் கொண்டிருந்தது. காலங்கள் தோறும் உண்டான தேவனுடைய மகத்தான அசைவுகள் நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கைகளை ஒழிக்காமலிருந்தது வருந்தத்தக்கது. இந்த அசைவுகளின் காரணமாக சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர், அக்கினி அணைந்த பின்னர் ஸ்தாபனங்கள் உண்டாக்கிக் கொண்டு, ஆவிக்குரிய மரணம் எய்தினர். இவர்களெல்லாரும் பெயர் கிறிஸ்தவர்கள்; என்றாலும் ரோமன் கத்தோலிக்க சபையைப் போன்று, இவர்கள் தாங்கள் செய்வதனைத்தும் சரியென்று எண்ணியிருந்தனர். கடைசி காலத்தில் குமாரத்திகள் ரோமாபுரியின் வேசியின் பாதுகாப்பையடைவதற்கென்று சகலமும் இச்சபையின் காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டன. இப்பொழுது நாம் வாழும் கடைசி காலமாகிய லவோதிக்கேயா சபையின் காலத்திற்கு வருவோம். யூதர்கள் பாலஸ்தினாவில் குடியேறியதால், இது கடைசி காலமென்பதை நாமறிவோம். இது அறுவடையின் காலம். ஆனால் அறுவடையாகும் முன்பு, இரண்டு திராட்சை செடிகளும் (சபைகளும்) முதிர்வடைய வேண்டும். லூதரின் காலம் வசந்த காலமாயிருந்தது. வெஸ்லியின் காலம் வளர்ச்சிக்கேற்ற கோடைக் காலமாயிருந்தது. லவோதிக்கேயா சபையின் காலத்தில் அறுவடை தொடங்கி, களைகள் எரிக்கப்படுவதற்கென்று கட்டப்பட்டு, கோதுமை களஞ்சியங்களில் சேர்க்கப்படும். அறுவடை காலத்தில், கோதுமை மணி வேகமாக முதிர்வடைவதால், செடியின் வளர்ச்சி குறைவுபட்டு, கடைசியில் வளர்ச்சி முற்றிலுமாக நின்றுவிடும். அவ்வாறே இக்காலத்தில், கள்ளச் சபையிலுள்ளவர்கள் கம்யூனிஸம் போன்ற கொள்கைகளைத் தழுவுவதால், அதன் வளர்ச்சி குன்றிப் போகின்றது. கள்ளச்சபை மக்களின் மேல் செலுத்தின ஆதிக்கமும் குறைவுபட்டது, அநேகர் இன்றைக்கு வெளிப்புறத் தோற்றத்திற்காகவே ஆலயங்களுக்குச் செல்கின்றனர். அதைப் போன்று உண்மையான சபையும் இப்பொழுது வளருவதில்லை. எழுப்புதல் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும், இரட்சிக்கப்பட்டதன் அறிகுறியாக பீடத்தின் முன்னால் வந்து நிற்பவர்களும், உணர்ச்சி வசத்தால் அவ்வாறு செய்கின்றனரேயன்றி அவர்கள் உண்மையாக இரட்சிக்கப்படவில்லை, அவர்கள் ஆவிக்குரிய காரியங்களுக்குப் பதிலாக உலகப் பிரகாரமான காரியங்களை ஆசிக்கின்றனர், நோவாவும் அவனுடைய குடும்பமும் பேழைக்குள் பிரவேசித்து. தேவன் பேழையின் வாசலைப் பூட்டிய பிறகு, நியாயத் தீர்ப்பைக் கொடுக்க தேவன் ஏழு நாட்கள் தாமதித்தார். அந்த ஏழு நாட்களில் ஒருவனாகிலும் தேவனிடத்தில் திரும்பவில்லை. நாம் வாழும் காலமும் நோவாவின் காலத்தைப் போன்றிருக்கிறது. இது அறுவடையின் காலமாயிருப்பதால், கோதுமையையும் களைகளையும் முதிர்வடையச் செய்ய அநேகர் தோன்ற வேண்டியதாயிருக்கிறது, நேர்மையிழந்த அநேகரின் போதகத்தால் களைகள் வேகம் முதிர்வடைகின்றன. அவர்கள் ஜனங்களை வார்த்தையிலிருந்து அகலச் செய்கின்றனர். கோதுமை மணிகள் முதிர்வடைய, தேவன் தீர்க்கதரிசி - தூதனை அனுப்புகிறார். அவருடைய ஊழியத்தைத் தேவன் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் நிரூபிப்பார். தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் இவரை ஏற்றுக் கொள்வார்கள். முதலாம் சபை பவுலின் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்தது போன்று, இச்சபையும் தேவன் அனுப்பிய இந்தத் தூதனுக்குச் செவி கொடுக்கும், அது வார்த்தையை ஏற்றுக் கொள்வதால் முதிர்வடைந்து, வார்த்தையோடும் விசுவாசத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கும் மகத்தான கிரியைகளைச் செய்யும் மணவாட்டியாகத் திகழும். கள்ளச் சபைகள் ஒன்றுபட்டு, உலக சபைகளின் ஐக்கியம் ஏற்படும், இந்த ஐக்கியம்தான் மிருகத்திற்கென்று உண்டாக்கப்பட்ட சொரூபமாகும். `பின்பு வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையு டையதாயிருந்தது, வலுசர்ப்பத்தைப் போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து. சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது. அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப் பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயம்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ண வேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங் கொடுக்கப்பட்டது, அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள் இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலது கைகளிலாவது, நெற்றிகளிலாவது முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்குச் செய்தது, இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது. அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு’ (வெளி 13. 11-18). அஞ்ஞான ரோமசாம்ராஜ்யம் பட்டயத்தால் விழுந்தது. ஆனால் அது பெயர்க்கிறிஸ்தவ ரோமசபையைச் சேர்ந்து, அஞ்ஞான வழக்கங்களை அச்சபையில் புகுத்தி, புனித ரோமசாம்ராஜ்யமாகத் திகழ்ந்தபோது, சாவுக்கேதுவான அதன் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. இயேசு வந்து அநதச் சபையை அழிக்கும் வரை. அது நீடிக்கும். இப்பொழுது ரோமசபை தனியாக விடப்படவில்லை. அவள் குமாரத்திகள் அவளோடு சேர்ந்துவிட்டனர். உலக சபைகளின் ஐக்கியத்தின் மூலமாக ரோமசபை முழு அதிகாரத்தையும் வகிக்கும். இது உண்மையல்லவென்று சிலர் நினைக்கலாம். ஆனால் சபைகளனைத்தும் இப்பொழுது அரசியலில் ஈடுபட்டு மறைமுகமாக அதிகாரம் செலுத்துகின்றன என்பதை நாமறிவோம். தக்கசமயத்தில் இது அதிகரிக்கும். சபைகளின் ஐக்கியத்தில் ரோமாபுரி வெகு சீக்கிரத்தில் தலைமை வகிக்கும். ஜனங்கள் இதை இப்பொழுது அறியாமலிருக்கிறார்கள். வெளி 17. 3-6ல் மகா பாபிலோன் வேசி மிருகத்தின் மேல் ஏறியிருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. அவள் (ரோமசபை) நான்காவது சாம்ராஜ்யத்தின் மேல் அதிகாரம் செலுத்துகிறாள். உலக சபைகளின் ஐக்கியம் வெகு சீக்கிரம் அவளுடைய ஆதிக்கத்துக்குக் கீழ்ப்படும். அவள் உலகத்திலுள்ள தங்கத்தைத் தன் வசப்படுத்தியிருப்பதால், உலகத்திலுள்ள மக்களனைவரும் உலக சபைகளின் ஐக்கியத்தில் சேரவேண்டும். இந்த மிருகத்தின் முத்திரையைப் பெறாமல் அவர்கள் கொள்ளவும் விற்கவும் முடியாது. உலக சபையின் ஐக்கியத்தின் போதகமாகிய திரித்துவம் போன்ற வேதத்திற்கப் பாற்பட்ட போதகங்களைக் கைக்கொள்வதே மிருகத்தின் முத்திரையைப் பெறுவதாகும். உலக சபைகளின் ஐக்கியம், அதுபெற்ற வல்லமையைக் கொண்டு, உண்மையான மணவாட்டியைத் துன்புறுத்தும். மணவாட்டி பிரசங்கம் செய்வதையும், போதிப்பதையும் இம்மிருகத்தின் சொரூபம் தடைசெய்யும். அவளுடைய போதகர்கள் ஆறுதல்படுத்தாதபடி தடை செய்யப்படுவர். ஆனால் அந்திக் கிறிஸ்துவின் ஆவியின் தன்மையை முழுவதும் பெற்ற ஒரு மனிதன் உலக சபைகளின் ஆதிக்கத்தை வகிக்கும் முன்னர், உண்மையான சபை இவ்வுலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். தேவன் மணவாட்டியை எடுத்துக்கொண்ட பின்னர், ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து நடைபெறும். வித்தியாசப்பட்ட தன்மைகளைக் கொண்ட இரு ஆவிகள் லவோதிக்கேயா சபையின் காலத்தில் விளங்கும் முரண்பட்ட இருசபைகளில் எவ்வாறு இயங்குகின்றன என்பதனை நாம் சிந்திப்போம். லவோதிக்கேயா சபை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமானது. இந்தக் காலத்தின் சபையானது பெந்தேகோஸ்தேவின் காலத்திலிருந்த நிலைக்கு திரும்ப வேண்டுமாதலால், அதற்குத் தேவனுடைய வல்லமை அவசியம். விசுவாசிகள் இதை தங்கள் ஆவிகளில் உணர்ந்து ஆவியின் மழை சொரியதேவனிடம் மன்றாடினர். அவர்களுடைய ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது என்று கூறுமாப்போல், ஜனங்கள் அன்னிய பாஷை பேசி, ஆவிக்குரிய வரங்களைக் கொண்டவர்களாயினர். அநேக காலமாய் காத்திருந்த சபை புதுப்பித்தல் (RESTORATION) இதுவே என்று மக்கள் நம்பினர். ஆனால் அது உண்மையல்ல. ஏனெனில் முன்மாரிக்குப் பிறகு பின்மாரி ஒன்றுண்டு. அது சத்தியத்தைப் போதிக்கும் மழையாக இருந்து, அறுவடைக்கென்று ஆயத்தம் செய்யும். சத்தியத்தைப் போதிக்கும் மழை அப்பொழுது பெய்யாமலிருக்க, அன்னிய பாஷை பேசக் காரணமாயிருந்த ஆவி எவ்வாறு உண்மையாயிருக்க முடியும்? ஜனங்களுக்குச் சத்தியத்தைப் போதிக்க அனுப்பப்படவிருந்த தீர்க்கதரிசி தூதன் அப்பொழுது தோன்றவில்லை. அவருடைய போதகத்தால் பிள்ளைகளின் இருதயங்கள் பெந்தேகோஸ்தே முற்பிதாக்களிடத் திற்குத் திரும்ப வேண்டும். எடுத்துக்கொள்ளப்படுவதற்கென்று சபை புதுப்பிக்கப்படுதல் அப்பொழுது நிகழவில்லை. அநீதியுள்ளவர்களும் அன்னிய பாஷை பேசுதலாகிய ஆவிக்குரிய அனுபவத்தில் பங்கு கொண்டனர். அதுமாத்திரமின்றி பிசாசின் வல்லமை பெற்றிருந்தவர்களும் யாரும் அறியாவண்ணம் கிரியை செய்து கொண்டு வந்தனர். இது உண்மையல்ல என்பதை நிரூபிப்பதற்கு, இவர்கள் தங்களுக்கென ஒரு ஸ்தாபனமுண்டாக்கிக் கொண்டு தங்களுக்கு முன்பிருந்தவர்களைப் போன்று வேதத்திற்கு முரண்பட்ட போதகங்களைக் கைக்கொள்ளத் தொடங்கினர். இயேசு இவ்வுலகத்திலிருந்த போது, யூதாஸும் அவரோடு கூட இருந்தான். இருவரும் வித்தியாசமான ஆவிகளைப் பெற்றிருந்தனர். மரணத்திற்குப் பிறகு, இருவரும் தங்களுக்குரிய ஸ்தலங்களுக்குச் சென்றனர். பின்னர் கிறிஸ்துவின் ஆவி உண்மையான சபையின் மேல் இறங்கியது; யூதாஸின் ஆவி கள்ளச் சபையின்மேல் இறங்கியது. `ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன் அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி. நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதன் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது இரண்டாம் ஜீவனானது. நீ வந்து பார் என்று சொல்லக் கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ள வர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது. நீ வந்து பார் என்று சொல்லக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன்; அதன் மேல் எறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒருபணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்று படி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்ச ரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது. நீ வந்து பார் என்று சொல்லுஞ் சத்தத்தைக கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன் பின் சென்றது. பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது’. (வெளி 6. 1 - 8), யூதாஸின் ஆவி வெள்ளை குதிரையின் மேல் சவாரி செய்பவனாக வந்தது. அந்தக் குதிரை வெண்மை நிறமுள்ளதாயிருந்தது என்பதைக் கவனிக்கவும், யூதாஸ் இயேசுவின் ஊழியத்தைச் செய்தவாறு, இந்த வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்தவனும் தேவனுடைய ஊழியத்தைச் செய்வது போல் காட்சியளிக்கிறான். அவனுக்கு ஒரு கீரிடங் கொடுக்கப்பட்டது. அந்த ஆவி இப்பொழுது நிக்கொலாய் மதஸ்தரின் தலைவனான போப்புக்குள் இருக்கிறது அவர் மூன்று கிரீடங்களைச் சூடியவராய், தேவனைப் போல் அவருடைய ஆலயத்தில் அமர்ந்திருந்து, தன்னைக் கிறிஸ்துவின் பிரதிநிதி என்று கூறிக்கொள்கிறார். கிறிஸ்துவுக்குப் பதிலாக பதவி ஏற்பதாக அவர் எண்ணிக் கொள்வதால், அவரைப் பரிசுத்த ஆவி என்று அவர் அழைத்துக் கொள்வதாக அர்த்தம். ஆம், அவர் பரிசுத்த ஆவியைப் புறக்கணித்து அதற்குப் பதிலாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார், அவருக்குள்ளிருக்கும் யூதாஸின் ஆவி இவ்வித கிரியைகளைச் செய்கின்றது. அவர் ஜெயிக்கிறவராகவும் ஜெயிப்பவராகவும் புறப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. இயேசு அவ்வாறு செய்யவில்லை பிதாவினால் முன் குறிக்கப்பட்டவர்கள் மாத்திரம் இயேசுவிடம் வந்தனர். யூதாஸின் ஆவி இவ்விதம் கிரியைகளை நடப்பித்துக் கொண்டே வந்து, கடைசியில் ஒரு மனிதனில் அந்த ஆவியின் தன்மைகளனைத்தும் காணப்படும் அவன், நாம் முன்பு கூறியவாறு, உலக சபைகளின் ஐக்கியத்தின் தலைமை தாங்குவான். அவன் சேகரித்த தங்கத்தினால் (யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தான்) உலக முழுவதையும் ஆட்கொள்ளுவான். அந்திக் கிறிஸ்துவின் மார்க்கம் எல்லாவற்றையும் சுதந்தரித்து, எல்லாரையும் அடக்கி ஆளும். ஆனால் இயேசு மறுபடியும் வந்து தம்முடைய மகிமையின் பிரசன்னத்தினால் அவர்களை யெல்லாம் நிர்மூலமாக்குவார். அவர்கள் அக்கினிக் கடலில் முடிவடைவார்கள். அப்படியெனில், உண்மையான வித்துக்கு சம்பவிப்பதென்ன? தேவனுடைய பிள்ளைகள் இக்காலத்தில் தூதனிடமிருந்து சத்திய வசனத்தைக் கேட்டு ஆயத்தப்படுவர், அவர்களிடம் பெந்தேகோஸ்தே காலத்திலுண்டாயிருந்த நிறைவு காணப்படும். ஆவியானவர் பெந்தேகோஸ்தே காலத்தின் சத்தியத்திற்கு அவர்களைத் திருப்புவதாக வாக்களிக்கிறார். `சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூறுங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து உங்களுக்கு முன்மாரியையும் பின் மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப் பண்ணுவார். களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும், நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக் கிளிகளும், பச்சைக் கிளிகளும். முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை’. (யோவான் 2. 23- 26) தேவன் விளைவைத் `திரும்ப அளிப்பதாக’ வாக்கு கொடுக்கிறார். லூதரின் காலத்திலும் இந்நூற்றாண்டில் தோன்றிய `பெந்தேகோஸ்தே காலத்திலும்’ அது திரும்ப அளிக்கப்படவில்லை. தேவன் வாக்கு மாறாதவராயிருப்பதால், அவருடைய வார்த்தையை அவர் நிறைவேற்ற வேண்டும். ஆகையால் அவர் சபையை ஆதியிலிருந்த பெந்தேகோஸ்தே காலத்தின் நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். வெட்டுகிளிகளும், பச்சைகிளிகளும், முசுகொட்டைப் பூச்சிகளும், பச்சை புழுக்களும், விளைவைப்பட்சித்துப் போட்டதால் (22ம் வசனம்) அதனைத் திரும்ப அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேற்கூறியவைகள் வளர்ச்சியில் வித்தியாசமான நிலைகளையடைந்த ஒரே பூச்சியாகும். அவ்வாறே அந்திக்கிறிஸ்துவின் ஆவி காலங்கள்தோறும் வித்தியாசமான நிலைகளையடைந்து, ஸ்தாபனங்களையும், ஐக்கியங்களையும், கள்ளபோதகத்தையும் அளித்தது. இப்போது செடியின் வேரும் தண்டும் புதுப்பிக்கப்பட்டு, விளைச்சல் திரும்ப அளிக்கப்படும். தேவன் புதிய ஒரு சபையை நிலைநிறுத்தப் போவதில்லை. அவர் முன்மாதிரியைக் கொண்டு (23ம் வசனம்) ஜனங்களுக்குச் சத்தியத்தைப் போதித்து சபையைப் புதுப்பிப்பார். அதன் பின்பு அறுவடை மழையாகிய பின்மாரி பொழிந்து, எடுத்துக்கொள்ளுதலுக்கேற்ற விசுவாசம் மக்களின் உள்ளத்தில் எழும். இந்த நேரத்தில் மத் 24.24ல் கூறப்பட்டது நிறைவேறிவிட்டது. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக, அந்திக் கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றவர்கள் `இயேசுவின் நாமத்தில்’ தோன்றி, உண்மையான அபிஷேகத்தைப் பெற்றதாகக் கூறிக்கொள்கின்றனர். இவர்கள் தவறான அபிஷேகம் பெற்றவர்கள். தீர்க்கதரிசிகளென்று தங்களை அழைத்துக்கொள்கிற இவர்கள் வார்த்தையை முழுவதுமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? இல்லவே இல்லை. அவர்கள் வார்த்தையிலிருந்து கூட்டவும், குறைக்கவும் செய்கிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் வரங்களைப் பெற்றவர்களென்பதை யாவரும் மறுக்கவில்லை. ஆனால் பிலேயாமைப் போன்று அவர்கள் சொந்த திட்டங்களை வகுத்து, பணம் சேகரிப்பதற்கென முறையீடு செய்து, ஆவிக்குரிய வரங்களை வெளிப்படுத்தி, அதே சமயத்தில் செல்வாக்கும் சம்பாத்தியமும் குறைந்துவிடும் என்ற காரணத்தினால் வார்த்தையை நிராகரிக்கின்றனர். இருந்தாலும் அவர்கள் இரட்சிப்பைக் குறித்தும் பாவத்தினின்று விடுதலையாதலைக் குறித்தும், தேவனுடைய வல்லமையைக் கொண்டு பிரசங்கிக்கின்றனர். யூதாஸைப் போன்று இவர்களுக்கும் கிறிஸ்துவினால் ஊழியம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் தவறான வித்தாயிருப்பதால், தவறான ஆவி அவர்களை அதே சமயத்தில் இயக்குகிறது. அவர்கள் ஊழியத்தில் எடுக்கும் பிரயாசத்திலும், அதில் காண்பிக்கும் வைராக்கியத்திலும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களை மிஞ்சிவிடுSகின்றனர். ஆனால் இவைகளெல்லாம் கிறிஸ்துவினால் உண்டானதல்ல. ஏனெனில் அவர்கள் பெரிய கூட்டங்களை எதிர்பார்த்து, பெரிய திட்டங்களை வகுத்து, திடுக்கிடும் கிரியைகளைச் செய்கின்றனர். அவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி பிரசங்கிக்கின்றனர். அதே சமயத்தில் அற்புதங்களிலும் அடையாளங்களிலும் இவர்களை மிஞ்சும் தீர்க்கதரிசி தூதனை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆம், தவறான ஆவி கடைசி காலங்களில் உண்மையான ஆவியைப் போன்றே காட்சியளிக்கும். வார்த்தையை ஆதாரமாகக் கொண்டே அவைகளின் தன்மைகளை நாம் நிர்ணயிக்க முடியும். அவர்கள் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தாலும், வார்த்தையில் தவறுகிறவர்களாயிருந்ததால், அவர்கள் தேவனாலுண்டானவர்களல்ல. கோதுமை மணி புதைக்கப்பட்டு, அதிலிருந்து தளிர்களும் பட்டு குஞ்சமும், பின்னர் கதிரும் தோன்றியதைக் குறித்து நாம் சிந்தித்தோம். அப்படியாயின், லூதரின் காலத்திலிருந்து லூதரன்கள், `விசுவாசத்தினால் நீதிமானாக்கப் படுத்தலாகிய’ போதனையை மாத்திரம் ஏற்றுக் கொண்டதால், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை என்று நாங்கள் சொல்லுகிறோம் என நீங்கள் நினைக்கலாம். அவ்வாறே வெஸ்லி காலத்திலிருந்த மெதோடிஸ்டுகளும் பரிசுத்த ஆவியைப் பெறவில்லையா என்று சந்தேகிக்க இடமுண்டு. நாங்கள் தனிப்பட்ட நபரையோ அல்லது ஜனங்களையோ குறித்துப் பேசாமல், அவர்கள் வாழ்ந்த காலங்களைக் குறித்துப் பேசுகிறோம். உதாரணமான, லூதர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில், பெந்தோகோஸ்தே நாளில் நிகழ்ந்தது போன்று பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு, சபையானது முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, பழைய நிலைக்குத் திரும்பவில்லை. அவ்வாறே வெஸ்லி, நாக்ஸ், வைட்ஃபீல்ட், ப்ராய்னார்ட், யோனத்தான் எட்வர்ட்ஸ், முல்லர் போன்றவர்கள் பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தனர். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலங்கள், சபை புதுப்பிக்கப்பட்டு. சத்தியத்திற்கு முழுவதும் திரும்பும் காலமாகத் (AGE OF RESTORATION) திகழவில்லை. நாம் வாழும் கடைசி காலத்தைப் போன்று வேறெந்த காலத்திலும் மக்கள் முழுவதுமாக நிலைதவறியதில்லை. ஆனால் கர்த்தருடைய திட்டத்தின்படி, இந்தக் காலத்தில்தான் சபை சத்தியத்திற்கு முழுவதும் திருப்பப்படும். ஆவியானவர் ஒவ்வொரு சபையின் காலத்திலும் கூறின ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்னும் வார்த்தைகளை நாங்களும் கூறி ஏழு சபை காலங்களின் வியாக்கியானத்தை முடிக்கிறோம். தேவ ஆவியானவர் சபைக்காலங்களின் சத்தியத்தைப் போதித்தது மாத்திரமன்றி, அநேகருடைய இருதயங்களில் பேசி, சத்தியத்தை ஏற்றுக் கொள்ளச் செய்தாரென்பதை நான் முற்றிலும் விசுவாசிக்கிறேன். வார்த்தை போதிக்கப்படும் போது ஆடுகள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு அவரைப் பின் செல்கின்றன. ஜனங்கள் என்னைப் பின்பற்றி என் சபையில் சேரவேண்டுமென்ற நோக்கத்தோடு நான் இந்தச் செய்தியை அளிக்கவில்லை. இச்செய்தி தேவனுக்கும் மனிதருக்குமிடையே ஆவிக்குரிய தொடர்பை உண்டாக்கி, அதன் காரணமாக மனிதர்கள் கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டிகளாகி பரிசுத்த ஆவியினால் நிறைந்து. தேவனுடைய வார்த்தையின்படி ஜீவித்தால் நான் திருப்தியடைந்தவனாவேன். எல்லாரும் இக்காலத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, தஙகள் ஜீவியத்தை முழுவதும் அவரிடத்தில் சமர்பிக்க நான் அழைக்கிறேன்; அவ்வாறு செய்ய உங்களோடு மன்றாடுவது மாத்திரமல்ல, இங்ஙனம் செய்யாவிடில் தேவனுடைய நியாய தீர்ப்பு உண்டாகுமென்று உங்களை எச்சரிக்கிறேன். எனக்குள்ள எல்லாவற்றையும் நான் தேவனிடத்தில் சமர்ப்பித்துவிட்டேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக; அவருடைய வருகை உங்கள் இருதயங்களைச் சந்தோஷத்தினால் நிரப்புவதாக...